Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துத் திரைப்படப் பாடல்களும் குறிப்புகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

'அனுராகம்'  நல்ல தரமான படம். இனிமையான பாடல்கள் அத்துடன் சிறிராமீன் நடிப்பும் நன்றாக இருந்தது.

 

சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் உள்ளூர் பொருட்களின் தயாரிப்பு அதிகரித்தது மாத்திரம் அல்லாமல் உள்ளூர் கலைகளும் வளர்ச்சி கண்டன. ஈழத்து தமிழ்த் திரைப் படம் திரையிடப்படும் காலங்களில், புதிய தென் இந்திய தமிழ் திரைப் படங்களை வெளியிட மாட்டார்கள்.  ஈழத்து சினிமாவை திரையிட்ட சினிமா அரங்கத்திற்கு அடுத்ததாக வசூலில் அதிகமாக ஓடும் ஒரு தென் இந்திய சினிமாவை திரையிடக் கொடுப்பார்கள்.

 

மனோ கணேசனின் தந்தையார் வி பி கணேசனின் 'புதிய காற்று' வர்த்தக ரீதியாக ஓரளவு வெற்றி  அளித்து ஈழத்துத் திரைக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது. நான் உங்கள் தோழன், கோமாளிகள், வாடைக் க்காற்று, அனுராகம் ஆகிய திரைப் படங்கள் ஓரளவு வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என நினைக்கிறேன்.     

 

ஆம்.. சிறிராம் அல்ல.. சிவராம். பல ஈழத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்கிறார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி பிறேமன் தமிழ்க் கலை மன்றமும் பாரிஸ் கலைஞர்களும் இணைந்து தயாரித்த 'தயவுடன் வாழ் வழிவிடுங்கள்' என்ற முழுநீளத் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இணைந்திருங்கள்.

  • Replies 56
  • Views 11.1k
  • Created
  • Last Reply

சிவராமின் பெயரை தவறுதலாகப் பதிந்து விட்டேன் சோழியன்.

 

நீங்களா யூரியூப் இல் பாடல்களை இணைத்தீர்கள்? நீண்டகாலமாக தேடித் திரிந்தேன். முற்றாக அழிந்து போனதாகக் கூறினார்கள். இதுவரை கிடைத்ததில் மகிழ்ச்சி. அனுராகத்தில் இன்னுமொருஇனிமையான காதல் பாடல் உண்டு என நினைக்கிறேன்.

 

'பொன்மணி’ படத்தில் பரராசசிங்கத்தின்

 'வானில் கலகலவென இருபறவைகள் திரியுது', எனும் இனிமையான பாடலும்,

 

 கே பாலச்சந்திரனின் குரலில்

'நான் உங்கள் தோழன் என் நாளுமே நல்ல நண்பன்

ஏழை மக்களை வாழ வைப்பதே என் வாழ்வின் பொன்னான இலட்சியம்' போன்ற பாடல்களும் பிரபல்யம் ஆக இருந்தன.

  • தொடங்கியவர்

சிவராமின் பெயரை தவறுதலாகப் பதிந்து விட்டேன் சோழியன்.

 

நீங்களா யூரியூப் இல் பாடல்களை இணைத்தீர்கள்? நீண்டகாலமாக தேடித் திரிந்தேன். முற்றாக அழிந்து போனதாகக் கூறினார்கள். இதுவரை கிடைத்ததில் மகிழ்ச்சி. அனுராகத்தில் இன்னுமொருஇனிமையான காதல் பாடல் உண்டு என நினைக்கிறேன்.

 

'பொன்மணி’ படத்தில் பரராசசிங்கத்தின்

 'வானில் கலகலவென இருபறவைகள் திரியுது', எனும் இனிமையான பாடலும்,

 

 கே பாலச்சந்திரனின் குரலில்

'நான் உங்கள் தோழன் என் நாளுமே நல்ல நண்பன்

ஏழை மக்களை வாழ வைப்பதே என் வாழ்வின் பொன்னான இலட்சியம்' போன்ற பாடல்களும் பிரபல்யம் ஆக இருந்தன.

 

நான் யூரியூப் இல் இணைக்கவில்லை.  :)

 

பொன்மணி படம் எனக்கு பார்க்கக் கிடைக்கவில்லை. வி.பி.கணேசனின் 'புதியகாற்று', 'நான் உங்கள் தோழன்' ஆகிய படங்கள் பார்த்துள்ளேன். புதியகாற்று திரைப்படத்திலும் கே.பாலச்சந்திரனின் குரலில் 'மே தினம்' பற்றிய பாடல் ஒன்று உண்டு. 90களில் ஜேர்மனியில் வசித்தார். அதன் பிறகு அவரைப்பற்றிய தகவல்களை என்னால் அறிய முடியவில்லை.

 

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை கூறவேண்டும்… 83இற்கு முன்பு தாயகத்தில் திறமையாகச் செயற்பட்ட கலைஞர்களையோ, எழுத்தாளர்களையோ, ஆசிரியர்களையோ புகலிட நாடுகளில் கௌரவிக்கவோ அல்லது பயன்படுத்தவோ தவறிவிட்டோம் என்பதுதான் என்னுடைய கணிப்பீடு.

 

நன்றி. இணைந்திருங்கள்!!  :)

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

‘கோமாளிகள்’ திரைப்படத்தில் இருந்து….  சம்மதமா சொல்லித் தரவா?!

பாடியவர்: V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி

இசை: கண்ணன், நேசம்

 

இளவேனிலே மனவானிலே... (இரண்டு பாடல்களும் ஒரே காணொளியில் உள்ளன.)

பாடியவர்: V.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க

இசை: கண்ணன், நேசம்

 

https://www.youtube.com/watch?v=Ng8YITwsKIk

  • தொடங்கியவர்

‘கோமாளிகள்’ திரைப்படத்தில் இருந்து….  ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்!

பாடியவர்: கமலாம்பாள் சதாசிவம்

வரிகள்: சாது

இசை: கண்ணன், நேசம்

 

http://www.youtube.com/watch?v=VkqRl9GbRQ4

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கல் பாடல்கள்,,சம்மதமா சொல்லிதரவா ,,,நன்றி

  • தொடங்கியவர்

கலக்கல் பாடல்கள்,,சம்மதமா சொல்லிதரவா ,,,நன்றி

 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும். இணைந்திருங்கள்!!  :) 

  • தொடங்கியவர்

பனிமலர்கள்
 

சிங்களத்திரை உலகின் சிறந்த இசை அமைப்பாளர்களில் சரத் தசனாயக்கவும் ஒருவர். ‘அநுராகம்’ தமிழ்த்திரைப்படத்துக்கும் இவரே இசை அமைத்தார். இவர் ‘மிஹிதும்சிஹினி’ என்ற சிங்களப்படத்தைத் தயாரித்தார்.

இப்படத்தை டப் பண்ணி அதற்கு ‘பனிமலர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். அதற்கான தயாரிப்பு நிர்வாகத்தை எஸ்.என். தனரெத்தினம் மேற்கொண்டார்.

இப்படத்தில் விஜயகுமாரணதுங்கவும் மாலினி பொன்சேகாவும் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்களுடன் றோய்டி சில்வா, சுமனா போன்றோரும் நடித்திருந்தார்கள்.

மொழிமாற்றுப் படத்துக்கு வசனம் முக்கியமாகும். அதனைப் பி.எஸ். நாகலிங்கம் எழுதினார்.

தயாரிப்பாளரே இசை அமைப்பாளர் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே போடப்பட்ட மெட்டுகளுக்கு ஈழத்து ரெத்தினம், சண்முகப்பிரியா ஆகியோர் பாட்டெழுதினர். இவர்களின் பாடல்களை முத்தழகு, அருள்தாஸ், சந்திரிகா, கலாவதி ஆகியோர் பாடினர்.

குரல்வளம் மிக்க குறத்தி ஒருத்தியின் கதையே இது. விஜயகுமாரணதுங்கவின் பாத்திரத்துக்குக் கலைஞர் ஆர். திவ்வியராஜன் குரல் கொடுத்தார். மாலினிக்கு ஆமினா பேகமும், சுமனாவுக்கு செல்வம் பெர்னாண்டோவும், றோய்டி சில்வாவுக்குக் கே. சந்திரசேகரனும் குரல் கொடுத்தனர்.

மெவுனா பிலிம்ஸ் ‘பனிமலர்கள்’ 06.01.81 திரையிடப்பட்டது. கொழும்பில் 3 வாரங்களும், யாழ்ப்பாணத்தில் 2 வாரங்களும் ஓடியது. டப் படங்களைப் பொதுவாக ரசிகர்கள் கணக்கெடுக்காதவைப் போலவே பத்திரிகை விமர்சகர்களும் கணக்கெடுக்கவில்லை.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

‘பனி மலர்கள்’ திரைப்படத்தில் இருந்து….  கவலைகள் இல்லை நம்மிடமே..!

பாடியவர்: அருள்தாஸ், சந்திரிகா

 

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=6RSu9RMpLAo

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

‘பனி மலர்கள்’ திரைப்படத்தில் இருந்து….  வீசும் குளிர்காற்றே!

பாடியவர்: V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=LwU-Rfv7sCo

  • தொடங்கியவர்

‘பனி மலர்கள்’ திரைப்படத்தில் இருந்து….  சதா வந்தே சிந்தையில் நீ..!!

பாடியவர்: V.முத்தழகு

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=WmDF1AaiA6Y

  • தொடங்கியவர்

‘பனி மலர்கள்’ திரைப்படத்தில் இருந்து….  வான்மேகமே..!

பாடியவர்: சந்திரிகா

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=mKYsiMohFGM

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கேள்விப்படாத பாட்டுக்கள். இதற்கு முதல் பாடலில் நடிப்பது சிங்களவனா????

ஒரு கலைஞரை "சிங்களவனா" என்று கேட்பது அழகாக இல்லை. "சிங்களவரா" என்று கேட்பதே பண்பு

  • தொடங்கியவர்

இதுவரை கேள்விப்படாத பாட்டுக்கள். இதற்கு முதல் பாடலில் நடிப்பது சிங்களவனா????

 

ஓம்.. ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் கணவர் மறைந்த விஜேயகுமாரணதுங்க.

 

அமரர் கிட்டுவுடனான கைதிகளின் பரிமாற்றத்தின்போது யாழ்ப்பாணம் வந்துள்ளார்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் திரைப்படங்களிலும் புகழ் பெற்ற பாடகி சுஜாத்தா அத்தநாயக்க !

இலங்கை தமிழ்த் திரைப்படங்களிலும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். டவர்ஹோல் யுகத்தின் நாடக நடிகையான விமலகாந்தா கிராமபோன் இசைத் தட்டுகளுக்காக பாடல்கள் பாடியிருக்கிறார். அவரது கணவர் தர்மதாச பெரேரா பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டே நகைச்சுவை நாடகங்களிலும் நடித்தவர். தர்மதாச பெரேரா – விமலகாந்தா தம்பதிகளின் மூன்றாவது மகள்தான் சுஜாதா. சிறுமி சுஜாதாவின் ஆரம்பக் கல்வி களனி வெதமுல்ல மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது. படிக்கும் காலத்திலேயே நன்றாகப் பாடுவார். தனது பதினொராவது வயதில் இலங்கை வானொலியில் பாடத் தொடங்கினார். ‘விசித்திராங்கய’ என்ற நிகழ்ச்சியிலேயே அவரது முதற் பாடல் இடம்பெற்றது. sujata.jpg

 ஒரு பாடகர் தன் தாய் மொழியில் மட்டுமன்றி வேற்று மொழியிலும் சிறந்த பாடகராக விளங்கினார் என்றால் அது அவரது திறமையையே காட்டி நிற்கும். அதனால்தான் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மொஹிதீன் பெக் ருக்மணிதேவி முத்தழகு எஸ். கலாவதி போன்றோர் சிங்களத் திரை உலகில் சிறந்து விளங்கினர். இவர்கள் சிங்களத் திரை உலகில் புகழ்பெற்றது போல் ஒரு சிங்களப் பாடகி இலங்கை தமிழ்த் திரை உலகில் புகழ் பெற்று விளங்கினார். அந்தப் பாடகி தான் சுஜாதா அத்தநாயக்கா. பின்னாளில் ‘சிங்களத் திரை உலகின் கோகிலம்’ என்று புகழ் பெற்றவரும் இவர்தான்.

1954 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ‘வெற்றிகர ஊர்வலம்’ என்ற சிங்களப் போட்டி நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சுஜாதாவுக்கு முதலாவது பரிசு கிடைத்தது. தன்னால் சிறந்த பாடகியாக உயர முடியும் என்று அவர் அப்பொழுதே நினைத்துக் கொண்டாராம். 1950 ஆம் ஆண்டு எஸ். எம். நாயகம் ‘சொஹெயுறோ’ (சகோதரர்கள்) என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். சுஜாதாவின் குரல் இனிமையால் கவரப்பட்ட நாயகம்இ அவருக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளிக்க விரும்பினார். அந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஆர். முத்துசாமி. எஸ். எம். நாயகத்தின் அறிமுகத்தாலும் முத்துசாமியின் ஆதரவாலும் சுஜாதாவுக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆர். முத்துசாமியின் ஆர்மோனியப் பெட்டியில் இருந்து பறந்த இசைக் குயில்களில் சுஜாதாவும் ஒருவர். சிங்களத் திரை உலகின் இசைத்துறை சுஜாதாவை இருகரம் நீட்டி வரவேற்றது. அவருக்கு இனிமையான குரல் வளம் இருந்தது. தனித்துவமான பாணி இருந்தது. இவையெல்லாம் அவரை சிங்களச் சினிமாவின் இசையரசி ஆக்கியது. ‘சிந்தக மஹிம்’ (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தில் ஆர். முத்துசாமியுடன் சேர்ந்து பாடிய ‘மிஹிற யாமே’ என்ற பாடல் இன்றுவரை ஒலிக்கும் பிரபல பாடலாக விளங்குகிறது. இப்பாடலை இப்பொழுதும் எம். மோகன்ராஜ் மேடைகளில் பாடி வருகிறார். அரச சங்கீதக் கலாநிலையத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்த சுஜாதாவுக்கு 1961 ஆம் ஆண்டு சங்கீத விசாரத (இசை விற்பன்னர்) என்ற பட்டம் கிடைத்தது.

அதன் பின்பு சித்தார் கருவி இசைத்தலுக்கும் விற்பன்னர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விசாரத பட்டம் மொஹிடீன் பெக்இ அமரதேவா ஆகிய சில இசைக் கலைஞர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா அவுஸ்திரேலியா இத்தாலி இந்தியா பங்களாதேஷ் குவைத் நேபாளம் என்று பல்வேறு நாடுகளிலும் இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அங்கெல்லாம் இவர் சிங்களம் ஹிந்தி மொழிகளில் மட்டுமன்றி தமிழிலும் பாடியிருக்கிறார்.

சிங்களத் திரை உலகின் முதலாவது பெண் இசையமைப்பாளர் என்ற புகழும் சுஜாதாவுக்குக் கிடைக்கிறது. ஹரியட்டஹசி (சரிக்குச்சரி) என்ற படத்துக்கு இசையமைத்ததன் மூலம் அந்தப் புகழை அவர் பெற்றார். அக்காலத்தில் நவரத்ன அத்தநாயக்க என்பவர் பல சிங்களப் படங்களுக்கு இசையமைத்து வந்தார். அவரது இசையமைப்புக்கு சுஜாதா தன் குரலால் உயிரூட்டினார். அந்த இசையமைப்பாளர் இந்தப் பாடகியைக் காதலிக்கத் தொடங்கினார். 1967 ஆம் ஆண்டு இந்தப் பாடகி திருமதி சுஜாதா அத்தநாயக்க ஆனார்.

சுஜாதாவின் இனிய குரல் இலங்கை தமிழிசையின் பக்கமும் கேட்கத் தொடங்கியது. அவர் சிங்களத்திலும் தமிழிலும் ஹிந்தியிலும் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இலங்கை வானொலியில் தமிழ் மெல்லிசைப் பாடகியாகவும் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் தமிழ் உச்சரிப்பில் சிறிது தவறுகள் விட்டாலும் பின்பு சரியாகி விட்டது. 1971 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் தமிழ் இசைக் கலைஞர் தெரிவில் சிரேஷ்ட தரத்தில் தெரிவானார். 1956 ஆம் ஆண்டு எஸ். எம். நாயகம் தயாரித்த ‘சொஹெயுறோ’ (சகோதரங்கள்) என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாப் பாடகியாக அறிமுகமானார். இதுவரை தமிழ் சிங்கள படங்களில் முன்னூற்று ஐம்பது சினிமாப் பாடல்களுக்கு மேல் பாடி விட்டார். தமிழ்இ சிங்களம் தவிர உருது வங்காளம் நேபாளம் மராட்டி ஆகிய மொழிகளிலும் பாடக் கூடிய வல்லமை உள்ளவர். தமிழில் சினிமா மெல்லிசை பாடல்கள் என்று இருபத்தைந்து பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 1961 ஆம் ஆண்டு அரச நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து வாய்ப்பாட்டிலும் சித்தார் வாத்திய கருவியிலும் பயிற்சி பெற்று இசைப் பட்டதாரி ஆனார். இசையமைப்பாளர்களில் ஆர். முத்துசாமியையும் எம். கே. றொக்சாமியையும் தனக்குப் பிடிக்கும் என்கிறார் இவர்.

பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ஸ்வரம் என்ற தலைப்பில் தமிழ் இசைக் கச்சேரியொன்றை நடத்தித் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். மருதானை டவர் மண்டபத்தில் ‘இளம்பிறை கீதங்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமிய இசைக் கச்சேரி ஒன்றை நடத்தி இஸ்லாமிய இதயங்களின் நன்மதிப்பையும் பெற்றார். இவரது தொழில் கூட இசையுடன் கூடியதாகவே அமைந்திருந்தது.

ஆசிரிய கலாசாலையில் இசை விரிவுரையாளராகக் கடமையாற்றிய சுஜாதா அத்துறை சார்ந்த உயர் பதவிகளிலும் கடமையாற்றினார். சுஜாதா பின்னணி பாடிய படங்கள் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேல். இவற்றுள் தமிழ் படங்கள் பத்தொன்பதும் அடங்கும். கிட்டத்தட்ட நூறு ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளார். பல சி.டி.க்களையும் வெளியிட்டுள்ளார். சுஜாதா அத்தநாயக்காவின் தாயாரும் சகோதரியும் எஸ். துரைசிங்கம் தயாரித்த ‘திவ்வியப் பிரேமய’ படத்தில் நடிப்பதற்காக இந்தியா சென்றனர். சிறுமியான சுஜாதாவும் அவர்களுடன் சென்றார். சென்றவர்கள் சென்னையில் ஒரு வருட காலம் தங்க வேண்டி வந்தது.

அதனால் சிறுமி சுஜாதா தமிழை நன்றாகப் பேசப் பழகிக் கொண்டார். இந்தப் பழக்கம்தான் அவர் பின்னாளில் தமிழ்ப் படங்களில் இலகுவாகப் பின்னணி பாட வழி சமைத்தது எனலாம். சுஜாதா அத்தநாயக்க இலங்கையில் உருவான பல தமிழ்ப் படங்களில் பின்னணி பாடினார். ‘கோமாளிகள்’ படத்தில் அவரது பாடல் இடம்பெற்றது. அதில் அவர் முத்தழகுவுடன் சேர்ந்து ‘ஹம்மிங்’ மட்டும் இசைத்தார். ‘தென்றலும் புயலும்’ படத்தில் சுஜாதா தனித்துப் பாடிய ‘இயற்கை மகள் எழுதும் கவிதையிலே’ என்ற பாடல் புகழ் பெற்றது. ‘இரத்தத்தின் இரத்தமே’ படத்தில் றொக்சாமியின் இசையமைப்பில் பாடிய ‘தேவதை உன்னை தேடுகிறேன்’ என்ற பாடல் இந்தியாவிலும் புகழ் பெற்றது. இந்தப் பாடலுக்கு தென்னிந்திய நடிகை ராதிகா வாயசைத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்புமிக்க இலங்கையின் இந்தக் கோகிலம் இப்போது தன் கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். 

http://www.alaikal.com/news/?p=8393

  • கருத்துக்கள உறவுகள்

 

குத்துவிளக்கு திரைப்படத்துக்காக மண்ணின் மணத்தை விளக்கும் பாடல் ஒன்றுக்கான கருவை திரு. துரைராஜா நினைத்து வைத்திருந்தார். இவரது கருத்தை வைத்து ஈழத்து ரெத்தினம் அழகான பாடல் ஒன்றை எழுதினார். இப்பாடல் பலராலும் பாராட்டப்பட்டது.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அழுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

  • தொடங்கியவர்

'குத்துவிளக்கு' திரைப்படத்தில் 'ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே' என்னும் பாடலைப் பாடியவர் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் M.A.குலசீலநாதன் ஆவார்.

 

Kulaseelanathan3.jpgஎம் ஏ. குலசீலநாதன் (இறப்பு: மே 202004) ஈழத்தின் மூத்த கருநாடக இசைக் கலைஞர். வானொலிக் கலைஞர். சங்கீத பூஷணம். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஈழத்து மெல்லிசை என்னும் ஒரு இசை வடிவத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் இவருக்கும் பெரும் பங்கு உண்டு.

 

யாழ்ப்பாண மாவட்டம்அராலியில் பிறந்த குலசீலநாதனின் தாய்மாமன் கீசகன் கந்தையா அவர்கள் ஒரு நாட்டுக்கூத்துஅண்ணாவியார். அவரின் உந்துதலினால் இவர் தனது ஆறாவது வயதிலேயே இசைத்துறையில் ஈடுபடத் தொடங்கி விட்டார். அராலியிலே லட்சுமி நாராயணன் ஐயர் என்பவரிடம் இசைக்கலை பயின்று, இசைத்துறைப் பட்டப் படிப்பை தமிழ்நாடுசென்னைஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சங்கீத பூஷணம் ஆனார்.

இவர் இசையரசு எம். தண்டபாணி தேசிகரிடமும், சிவசுப்பிரமணியம், ரி. கே. ரங்காச்சாரியார், மைலம் வைச்சிரவேலு முதலியார் போன்றோரிடமும் கர்நாடக இசையைப் பயின்றுள்ளார். மேலும் இராகஆலாபனை முறைகளையும், தாளபேதங்களையும் ஜனரஞ்சகமாக ரசனையூட்டும் விதத்தில் கச்சேரிகள் பாடுவதற்கு ஏற்றவாறு தான் கற்ற சங்கீதக் கலையை விருத்திப்படுத்திக் கொள்ள பாலமுரளி கிருஷ்ணாவிடமும் விசேடமாக கர்நாடக சங்கீதக் கலையைப் பயின்றுள்ளார்.

இவரது இசைக்கச்சேரிகள் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் நடைபெற்றுள்ளன.

 

இவரின் இசைத்திறனை அறிந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகள் இவரை அங்கு அழைத்து இசைக்கச்சேரிகளுக்கு இடமளித்தார்கள். தொடர்ந்த காலத்தில் இவரை அங்கு பணியாளராக நியமித்தார்கள். மெல்லிசைத் தயாரிப்பாளராகப் பணியைத் தொடங்கிய இவர் இசைக்கட்டுப்பாட்டாளர் பதவி வரை உயர்ந்தார்.

இசைபிருந்தா என்ற மெல்லிசைப் பிரவாகத்தில் எஸ். கே. பரராஜசிங்கம்வி. முத்தழகுஎஸ். கலாவதிஅருந்ததி சிறீரங்கநாதன், ரா. ஜெயலஷ்மி, சுபத்திரா, சந்திரமோகன், அம்பிகா தாமோதரம்கௌரீஸ்வரி ராஜப்பன் போன்ற பல கலைஞர்களை இவர் ஈடுபடுத்தினார்.

பேராசிரியர்கள் க. கைலாசபதிகா. சிவத்தம்பி போனறோருடன் இணைந்து இசைச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகளை ஆய்வுக்குரிய வகையில் தயாரித்தார்.

ஈழத்தின் குத்துவிளக்கு படத்திற்காக "ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே" என்ற பாடலையும் பாடியுள்ளார்.

இவர் பாரிஸ் நகரில் புகலிடவாழ்வில் ...முகத்தார் வீடு, இன்னுமொருபெண் ஆகிய சின்னத்திரைகளிலும் தன் குரல் வளத்தை நிரூபித்துள்ளார்.

 

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே / பாடல் இணைப்புக்கு நன்றி நுணாவிலான்.  :) 

 

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

‘ஏமாளிகள்’
ராம்தாஸின் இரண்டாவது படம்
 

‘கோமாளிகள்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மரிக்கார் எஸ். ராம்தாஸ்’ வெளியிட்ட படம்தான் ‘ஏமாளிகள்’. இலங்கைத் தமிழ்ப் படங்கள் அதிகமாக வெளிவந்த ஆண்டான 1978இல் வெளியான 5வது தமிழ்ப்படம்.

நகைச்சுவையைப்பொறுத்தவரை, எஸ். ராம்தாஸ் குழுவினருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. சிரிப்பின் மூலம் ரசிகர்களை வெல்லலாம் என்ற எண்ணம் ராம்தாஸுக்கு வந்துவிட்டது. ஏ.ஏ.எம். மவுஜுத் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.

‘கோமாளிகள்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். இராமநாதனையே இப்படத்தினையும் இயக்கத் தெரிவுசெய்தார்கள். கமறா ஜே.ஜே. ஜோகராஜா. இது இவருக்கு இரண்டாவது தமிழ்ப்படம்.

‘கண்ணன்-நேசம் இசை அமைத்தார்கள். கலாவதி, ஜோசப் ராஜேந்திரன், ஸ்ரனி, சிவானந்தன் ஆகியோர் பின்னணி பாடினார்கள். இதுவும் ‘ராம்தாஸ்’ ஏற்கனவே எழுதி ஒளிபரப்பிய வானொலி நாடகமே. ராம்தாஸே திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை வசனம் எழுதினார். உதவி டைரக்ஷன், தயாரிப்பு மேற்பார்வை போன்றவற்றை அவரே பொறுப்பேற்றார்.

‘கோமாளிகள்’ திரைப்படத்தில் சில்லையூர் செல்வராஜன் - கமலினி செல்வராஜன் ஆகியோர் அறிமுகமானது போல், இப்படத்திலும் புதிய ஜோடி அறிமுகமாகியது.

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் அறிமுகமாகி பெயர் பெற்றவர் என். சிவராம். சிங்களப் படங்கள் பலவற்றில் நடித்துவிட்டு ‘மஞ்சள் குங்குமம்’, ‘தென்றலும் புயலும்’ படங்களில் நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிப் புகழ்பெற்றவர் ஹெலன் குமாரி. இவர்கள் இருவருமே இப்படத்தில் புது ஜோடியாக அறிமுகமானார்கள்.

‘மீனவப்பெண்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஜலஷ்மி இப்படத்தில் ‘செல்லமணியாக’ நடித்தார்.

மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலிசெல்வசேகரன் ஆகியோருடன் கே.ஏ. ஜவாஹர், டொன்பொஸ்கோ, இரா. பத்மநாதன், ஜேசுரட்ணம், விக்டர், ஈஸ்வரன், ஏபிரஹாம், ஆர். ரீ. ராஜா, செழியன் வயணவப்பெருமாள், மணிமேகலை, ஜெயதேவி, செல்வம் பெர்னாண்டோ, ருவினா, சுட்டி போன்றோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

ஒலிப்பதிவு சென் ஜோன்ஸ் படத்தொகுப்பு எம்.எஸ். அலிமான்.

‘கோமாளிகள்’ போல் இப்படத்திற்கு அதிக விளம்பரம் கிடைக்கவில்லை. ஆனாலும் சில மாதங்களுக்குள் படம் வளர்ந்துவிட்டது.

‘பாக்கீர் பிலிம்ஸ்’ ஏமாளிகள் 06.10.1978இல் இலங்கையில் ஏழு ஊர்களில் திரையிடப்பட்டது.

பாடல்களை ஈழத்து இரத்தினமும், பவுசில் அமீரும் இயற்றி இருக்கிறார்கள். கண்ணன்-நேசம் இசை அமைந்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ‘கோமாளிகள்’ போல் சிறந்து விளங்கவில்லை. ‘வான் நிலவு தோரணம்’ என்று ஜோசப் ராஜேந்திரனும், கலாவதியும் பாடும்பாடல் இனிமையாக இருக்கிறது. ஸ்ரெனி சிவானந்தன் பாடும், ‘வா இந்தப் பக்கம்’ என்ற பாடலுக்கு இசை அமைப்பாளர்களில் ஒருவரான நேசம் தியாகராஜா வாயசைத்தவாறு நடனமாடியுள்ளார்.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

‘ஏமாளிகள்’ திரைப்படத்தில் இருந்து….  கனியிதழ் அசைவினில் ராகம்..!

பாடியவர்: V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி

வரிகள்: பவுசுல் அமீர்

 

இசை: கண்ணன், நேசம்

http://www.youtube.com/watch?v=zQt8jEKJQFA

 

  • தொடங்கியவர்

நன்றி

 

உங்களுக்கும்!!!

  • தொடங்கியவர்

‘அவள் ஒரு ஜீவநதி’
எழுத்தாளர் தயாரித்த படம்

மலையகத்தில் பிறந்த ஓர் இளைஞனுக்குச் சிறுவயது முதலே எழுதுவதில் தனிப்பிரியம். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை, சமயக்கட்டுரை என்று பலவற்றை எழுதி வந்தான். நாடகம் எழுதி அதில் நடித்தும் வந்தான். மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் படிக்கும்போதே இவன் எழுதி நடித்த பல மேடை நாடகங்களுக்குப் பல்வேறு பரிசுகள் கிடைத்தன.

இவன் எழுதிய முதல் நாடகம் ‘தீர்ப்பு’ ஆகும். முதலில் நடித்த நர்கம் ‘பலேபுரடியூஷர்’ என்பதாகும். பின்னாளில் கொழும்புக்கு வந்து 20க்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றினான். அக்காலத்தில் இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைக்கதையாக்கப் போட்டியிலும் இவன் எழுதிய ‘சுற்றும்சுடர்’ என்ற பிரதிக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது.

சில நண்பர்களின் உதவியுடன் தமிழ்த் திரைப்படமொன்றையும் தயாரித்தான். அந்த இளைஞன் தான் ‘மாத்தளை கார்த்திகேசு’ அவர் தயாரித்த படத்தின் பெயர் தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.

டீன்குமார், விஜயராஜா, கே.எஸ். பாலச்சந்திரன், எம்.ஏகாம்பரம், ஆர். சிதம்பரம், கந்தையா, சீதாராமன், ஸ்ரீதர் மோகன்குமார் போன்றோர் நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள். பரீனாலை, அனுஷா, சந்திரதேவி, சந்திரகலா போன்றோரும் நடிகைகளானார்கள்.

படத்தை இயக்கும் பொறுப்பை ஜே.பி. றொபேர்ட்டும், ஜோ. மைக்கலும் இணையாக ஏற்றுக்கொண்டார்கள்.

1961ஆம் ஆண்டில் அரசாங்க இசையாசிரியராக நியமனம் பெற்றவர் எம்.எஸ். செல்வராஜா. இவர் பல சிங்களப் படங்களுக்கு இசை அமைத்தார். 1971ஆம் ஆண்டுமுதல் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் மெல்லிசைப் பாடல்களுக்கு இசை அமைத்துவந்தார்.

ஈழத்து ரெத்தினம், மௌனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களை வீ. முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ்.வீ.ஆர். கணபதிப்பிள்ளை, ஜோசப் ராஜேந்திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினர்.

பலவித கஷ்டங்களின் மத்தியில் கீதாலயா மூவீஸ் ‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படம் 17.10.1980இல் 6 ஊர்களில் திரையிடப்பட்டது.

மலையகத்தில் தோட்ட உரிமையாளர் ஒருவருக்கு ஒரே மகள். அவள் தன் அத்தானைக் காதலிக்கிறாள். அது ஒருதலைக் காதலாகும். ஆனால், அத்தானோ தனக்கு இரத்ததானம் செய்த ஒருத்தியை விரும்பி மணந்துகொள்கிறான். தன் அத்தானால் கைவிடப்பட்ட பெண், பழிச்சொல்லுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொள்ள முனைகிறாள். அச்சமயம் அவளைக் காமுகர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் எழுத்தாளன். அவளுடன் தாம்பத்திய உறவில்லாது வெறும் சதிபதியாக வாழ்கிறான் எழுத்தாளன். கடைசியில் எழுத்தாளன் கொலை செய்யப்படுகிறான். அதனால், அவள் துறவறம் பூணுகிறாள். அவள்தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.

எழுத்தாளர் மாத்தளை கார்த்திகேசுவின் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்தான் இது.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படத்தில் இருந்து….  மாத்தளையில் மாசி மாதம் திருவிழா..!

பாடியவர்: கலாவதி சின்னச்சாமி

வரிகள்: மாத்தளை கார்த்திகேசு

இசை: M.S.செல்வராஜா

 

http://www.youtube.com/watch?v=F-ZrsGU3aTs

 
  • தொடங்கியவர்

‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படத்தில் இருந்து….  இந்த உலகை ஆளப் போகும்..!

பாடியவர்: ஜோசேப் ராஜேந்திரன்

வரிகள்: மௌனகுரு

இசை: M.S.செல்வராஜா

 

http://www.youtube.com/watch?v=A_1IOjFQTvk

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவள்தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.........................

 

பாடலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான பகிர்வுக்கு நன்றி . பாதுகாக்க பட வேண்டிய கலைப் பொக்கிஷங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.