Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்விளையாட்டு - கண்டுபிடியுங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இலகுவாகத் தந்த பின்னும் என்ன தயக்கம்????

 

தாய்மொழி அறிவதில் அத்தனை ஆர்வம். ம் ......

  • Replies 145
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இலகுவாகத் தந்த பின்னும் என்ன தயக்கம்????

 

தாய்மொழி அறிவதில் அத்தனை ஆர்வம். ம் ......

பழைய விதிகளின்படி பல அறியாத புதிய சொற்களை அறிய முடிந்தது. இப்போது நீங்கள் நினைத்த ஒரு குறிப்பிட்ட சொற்களை மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்

 

தமிழ் அறிவுள்ளவர்கள் எல்லோரும் பாவங்கள் :D  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருதடவை விதியைத் தளர்த்துகிறேன். முயன்றவர் மீண்டும் முயலலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   ம _ _ _ _ ர்

     மதியுரைஞர்

 

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  கா _ _ _ _ _ _ _ல்

     கண்காட்சிசெய்தல்

 

3. தயார் படுத்துதல்.   அ _ _ _ _ _ _ ல்

     அழகுபடுத்தல்

 

4. மிகப் பழைய காலம்.   தொ _ _ _ _ _ _ ம்

     தொன்மையானகாலம்

 

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அ _ _ _ _ ம்

எனக்குத் தெரிந்தவரையில் இதற்குரிய தூயதமிழ்ச் சொல் "தேவை" என்பதாகும். அத்திவாரம் (அஸ்திபாரம்) என்பதும் வடசொல்தான்.

 

 

அடித்தளம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமே அனைத்தையும் சரியாகக் கூறாததால் சரியான விடைகளை நானே கூறியுள்ளேன்.

 

 

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   மதியுரைஞர்

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  காட்சிப்படுத்துதல்

3. தயார் படுத்துதல்.   அணியம்செய்தல்

4. மிகப் பழைய காலம்.   தொல்பழங்காலம்

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அகத்தியம்

 

 

 

 

இதற்காவது யாராவது சரியாகக் கூறுகிறீர்களா பார்க்கலாம்.

 

1. ஒன்றைப்பற்றி வர்ணித்தல்  வ _ _ ணை

2. வாசனைப் பொருட்கள்.  க _ _ _ _ _ _ ள்

3. ஒரு தோல் வாத்தியத்தின் பெயர்  த _ _ மை

4. வானில் பயணம் செய்வது    வி _ _ _  து

5. தண்ணீரில் வாழ்வன  நீ _ _ _ _ ள்

 

1. ஒன்றைப்பற்றி வர்ணித்தல்  வ _ _ ணை

2. வாசனைப் பொருட்கள்.  க _ _ _ _ _ _ ள்

3. ஒரு தோல் வாத்தியத்தின் பெயர்  த _ _ மை

4. வானில் பயணம் செய்வது    வி _ _ _  து

5. தண்ணீரில் வாழ்வன  நீ _ _ _ _ ள்

 

1. வர்ணனை

2. கத்தூரிமஞ்சள்

3. தண்ணுமை

4. விண்ணூர்து

5. நீர்வாழிகள்

 

1. வர்ணனை

2. கத்தூரிமஞ்சள்

3. தண்ணுமை

4. விண்ணூர்து

5. நீர்வாழிகள்

 

 

4. விண்ணூர்து அல்ல விண்ணூந்து

5. நீர்வாழிகள் (அ) நீருயிரிகள் - நீர்வாழிகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனை என்பதில் "னை" தானே இறுதிச்சொல்.. "ணை" என்று கொடுக்கப்பட்டிருக்கே.. கேள்வியில்?! :rolleyes:

 

அதுபோல கத்தூரி மஞ்சள் என்பது கஸ்தூரி மஞ்சளின் தமிழ்ப்படுத்திய வடிவம் என நினைக்கிறேன்.. ஸ் வந்தாலே அநேகமாக வடமொழியாக இருக்கும்.. :D

வர்ணனை என்பதில் "னை" தானே இறுதிச்சொல்.. "ணை" என்று கொடுக்கப்பட்டிருக்கே.. கேள்வியில்?! :rolleyes:

 

அதுபோல கத்தூரி மஞ்சள் என்பது கஸ்தூரி மஞ்சளின் தமிழ்ப்படுத்திய வடிவம் என நினைக்கிறேன்.. ஸ் வந்தாலே அநேகமாக வடமொழியாக இருக்கும்.. :D

 

வர்ணணை எனபதற்கு பதில் வர்ணனை என்று வந்துவிட்டது. அழிச்சு எழுதலாமா?? கத்தூரிமஞ்சளின் வடமொழி வடிவம் கஸ்தூரி மஞ்சள் என்று சொல்லலாம்தானே ?? :)

 

தப்புக்கு ஏத்தமாதிரி குறைச்சுகிட்டு கொஞ்சம் பாத்து போடுங்க சுமேரியர் ... :)

4. விண்ணூர்து அல்ல விண்ணூந்து

5. நீர்வாழிகள் (அ) நீருயிரிகள் - நீர்வாழிகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்

 

வானூர்தி போல் விண்ணூர்து என்று எழுதினேன். விண்ணூர்து  எனபதில் ஏதேனும் பிழை உள்ளதா?

 

இதைப் பார்க்க இருக்கிற தமிழே போயிடும் போலை இருக்கு. முடிவு ஒரு மொழியும் .........................


கீறிட்ட இடத்தை நிரப்புங்கோ பார்க்கலாம்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்க்க இருக்கிற தமிழே போயிடும் போலை இருக்கு. முடிவு ஒரு மொழியும் ..தமிழ்போல் ..இனிதாய்  .......இல்லை..............

கீறிட்ட இடத்தை நிரப்புங்கோ பார்க்கலாம்  :D

 

முடிவு ஒரு மொழியும் ..தமிழ்போல் ..இனிதாய்  .......இல்லை..............சரிதானே அலை :lol:

 

1. வர்ணனை

2. கத்தூரிமஞ்சள்

3. தண்ணுமை

4. விண்ணூர்து

5. நீர்வாழிகள்

 

 

ஆதித்தியன் உங்கள் விடையில் மூன்றாவது மட்டும் சரியான விடை. பச்சை ஒண்டுதானே அதில என்னத்தைக் கழிச்சு எதைத் தாறது????

 

 

 

4. விண்ணூர்து அல்ல விண்ணூந்து

5. நீர்வாழிகள் (அ) நீருயிரிகள் - நீர்வாழிகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்

 

நான்காவது விடையில் நீங்கள் கொஞ்சம் நெருங்கி வந்துள்ளீர்கள் தமிழ் வேந்தன் :D

 

வர்ணனை என்பதில் "னை" தானே இறுதிச்சொல்.. "ணை" என்று கொடுக்கப்பட்டிருக்கே.. கேள்வியில்?! :rolleyes:

 

அதுபோல கத்தூரி மஞ்சள் என்பது கஸ்தூரி மஞ்சளின் தமிழ்ப்படுத்திய வடிவம் என நினைக்கிறேன்.. ஸ் வந்தாலே அநேகமாக வடமொழியாக இருக்கும்.. :D

 

முயற்சி செய்து பாருங்கோ இசை.

 

ஆதித்தியன் உங்கள் விடையில் மூன்றாவது மட்டும் சரியான விடை.

 

விடை பொருத்தமானது இல்லை என்று நிராகரிக்கிறீர்களா. ஆம் எனில்  ஏன்??  இல்லை வடமொழி கலந்துள்ளது என்று நிராகரிக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்தினால் எல்லோரும் தெரிந்து கொள்வற்கும் அடுத்தமுறை சரியாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடை பொருத்தமானது இல்லை என்று நிராகரிக்கிறீர்களா. ஆம் எனில்  ஏன்??  இல்லை வடமொழி கலந்துள்ளது என்று நிராகரிக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்தினால் எல்லோரும் தெரிந்து கொள்வற்கும் அடுத்தமுறை சரியாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும் .

 

வர்ணனை என்பது வடமொழி. கஸ்தூரி மஞ்சள் வாசனைப் பொருள் அல்ல. விண்ணூர்து, நீர்வாழிகள் என்று ஒரு தமிழ்ப் பெயர்கள்  உள்ளனவா ???

 

ஒன்பது மணிவரை மீண்டும் யாரும் முயலலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகள் ஆதித்த இளம்பிறையன், இசைக்கலைஞன், தமிழ் வேந்தன், புங்கையூரன்  ஆகிய உறவுகளே நன்றி.

 

இதுவரை யாரும் சரியான விடைகளைக் கூறாதது மனவருத்தம் தருகிறது.

 

1. ஒன்றைப்பற்றி வர்ணித்தல்   வண்ணணை

2. வாசனைப் பொருட்கள்.   கமழ்வுப்பொருள்

3. ஒரு தோல் வாத்தியத்தின் பெயர்   தண்ணுமை

4. வானில் பயணம் செய்வது    விண்ணுந்து

5. தண்ணீரில் வாழ்வன   நீருயிரிகள்

 

சரி உறவுகளே இதற்கு யார் கூறுகிறீர்கள் என்று பார்க்கலாம்.

 

1. செடி, கொடி, மரங்களை இப்படி அழைப்பர்  நி _ _ _ ணை

2. நெல் விளையும் நிலத்தை இப்படிக் கூறுவர்  ப _ _ _ _ ள்

3. தோற்கருவிகளை இப்படி அழைப்பர் மு _ _ _ ள்

4. பலகாரங்களை இப்படி அழைப்பர் சி _ _ _ _ _ ள்

5. தங்க வளையலை இப்படிக் கூறலாம் பொ _ _ டி                         

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணை என் கண்ணணைவன் குன்ற மேந்தி

ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்

பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

 

பதவுரை

 

மாவீனை வாய் பிளந்து உகந்த மாலை

-

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்

வேலை வண்ணணை

-

கடல்போன்ற வடிவையுடையவனாய்

ஏன் கண்ணணை

-

என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’

அன்று

-

(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக்காலத்திலே

வல் குன்றம் ஏந்தி

-

வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி

ஆவினை உய்யக் கொண்ட

-

பசுக்களைக் காப்பாற்றியருளின

ஆயர்  ஏற்றை

-

இடையர்  தலைவனாய்

அமரர்கள் தம் தலைவனை

-

நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,

அத்தமிழின் இன்பம் பாவினை

-

அழகிய தமிழ்ப்பாஷையாலாகிய ஆநந்தமயமான அருளிச்செயல் போல் யோக்கியனாய்

அ வடமொழியை

-

அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்

பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து

-

ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே

அரவு அணையில் பள்ளிகொள்ளும்,

கோவினை

-

ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை

நா உற

-

நாக்குத் தடிக்கும்படி

வழுத்தி

-

துதித்து

என் தன் கைகள்

-

என்னுடைய கைகளானவை

கொய் மலர் தூய்

-

(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி

கூப்பும் நாள் என்று கொல்

-

அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ளவந்த கேசியென்னு மசுரனைக் கொன்று தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும், கடலைக் கண்டாற் போலே வடிவைக்கண்டபோதே தாபத்ரயமும் தீரும்படியிருப்பவனும், அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும் பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து  ‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம் என்றைக்கு  வாய்க்குமோ என்கிறார். எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.

(பற்றற்றார்கள் பயிலரங்கம்) “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் புதிய சொல்லை கண்டுபிடிக்கவில்லை நுணா. புலம் பெயர் தேசத்தில் வாழும் மாணவர்கள் கற்கவென தனித் தமிழுக்காய் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்காக இந்தியாவிலிருந்து சுப திண்ணப்பன், அறிவரசன் போன்ற இந்திய பல்கலைக்கழக அறிஞர்கள் கூடித் தெளிந்த சொல்லே இது. இது ஒருசொல் பல பொருளாகவும் இருக்கலாம்.

 

இது எந்தத் தொகுதியுள் வரும் பாடல். விளக்க உரையை யாரும் எப்படியும் எழுதலாம்.

பிள்ளைகளே சொல்லுங்கோ பார்க்கலாம், மெசொபொத்தேமியா சுமேரியர் என்ன மொழிப் பெயர்? 

 

சரி உறவுகளே இதற்கு யார் கூறுகிறீர்கள் என்று பார்க்கலாம்.

 

1. செடி, கொடி, மரங்களை இப்படி அழைப்பர்  நி _ _ _ ணை

2. நெல் விளையும் நிலத்தை இப்படிக் கூறுவர்  ப _ _ _ _ ள்

3. தோற்கருவிகளை இப்படி அழைப்பர் மு _ _ _ ள்

4. பலகாரங்களை இப்படி அழைப்பர் சி _ _ _ _ _ ள்

5. தங்க வளையலை இப்படிக் கூறலாம் பொ _ _ டி                         

 

 
 
 
2. படப்பைகள் (அ) பரப்புகள் 
    (.கா) - "காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
     நெல்விளை கழனி அம்பர் கிழவோன்(புறநானூறு)"
 
3. முழவுகள் 
 
4. சிற்றுணவுகள் (அ) சிற்றுண்டிகள் 
 
5. பொன்தொடி 
    "பொன் தொடிக்கு இறத்தல் இல்லை - புலம்பு கொண்டு அழேற்க! (சீவக சிந்தாமணி)"
 
 
இந்த முறை தவறுவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..

 

 
 
 
2. படப்பைகள் (அ) பரப்புகள் 
    (.கா) - "காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
     நெல்விளை கழனி அம்பர் கிழவோன்(புறநானூறு)"
 
3. முழவுகள் 
 
4. சிற்றுணவுகள் (அ) சிற்றுண்டிகள் 
 
5. பொன்தொடி 
    "பொன் தொடிக்கு இறத்தல் இல்லை - புலம்பு கொண்டு அழேற்க! (சீவக சிந்தாமணி)"
 
 
இந்த முறை தவறுவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..

 

 

5. சரியான சொல். ஆனால், இலக்கணப்படி பொற்றொடி(பொன்+தொடி) என்றல்லவா வரவேண்டும்.

 

Edited by தமிழ்வேந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகளுக்கு நன்றி.

சரியான விடைகளை எழுதி பச்சை வெல்கிறார் ஆதித்யஇளம்பிறையன். அவருக்கு வாழ்த்துக்கள்.

 

இளம்பிறையன் சரியாகப் பொற்றொடி எனப் புணர்த்தி எழுதவில்லையாயினும் சரியான விடையை எழுதியதால் அந்த விடையைச் சரியென்று கொள்வோம்  தமிழ் வேந்தன்.

 

சரி இவற்றுக்கு யார் சரியான சொற்களை முதலில் எழுதுகிறீர்கள் பார்க்கலாம்.

 

1. குற்றங்களைப் போக்குதல் என்பதற்குரிய தமிழ்ச் சொல்  க _ _ ல்

2. ஒன்றை மேலோங்கச் செய்தல்  மே _ _ _ _ _ _ ல்

3. வசனம் என்பதின்  தமிழ்ச்சொல் சொ _ _ _ ம்

4. ஒரு வினாடி நேர அளவையை இப்படிக் கூறலாம் நொ _ _ _ _ து

5. நிலத்தைத் தோண்டுவதை இப்படிச் சொல்வர்  க _ _ _ ல்


பிள்ளைகளே சொல்லுங்கோ பார்க்கலாம், மெசொபொத்தேமியா சுமேரியர் என்ன மொழிப் பெயர்? 

 

கிரேக்கப் பெயர் அலை. ஆனால் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடமும் அவர்களின் இனப்பெயரும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

1) களைதல் :unsure:

2)மேவுறச்செய்தல்

3) சொல்வனம் :blink:

4) நொடிப்பொழுது

5) கடத்தல் (மணலைத் தோண்டி கடத்துவதால்.. :lol: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி இசை. 1, 4 ஆகியவற்றின் விடைகள் மாத்திரம் சரியானவை. மீண்டும் முயன்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2) மேம்பாடுசெய்தல்??

1. குற்றங்களைப் போக்குதல் என்பதற்குரிய தமிழ்ச் சொல்  க _ _ ல்

2. ஒன்றை மேலோங்கச் செய்தல்  மே _ _ _ _ _ _ ல்

3. வசனம் என்பதின்  தமிழ்ச்சொல் சொ _ _ _ ம்

4. ஒரு வினாடி நேர அளவையை இப்படிக் கூறலாம் நொ _ _ _ _ து

5. நிலத்தைத் தோண்டுவதை இப்படிச் சொல்வர்  க _ _ _ ல்

 

களைதல்

மேன்மைபடுத்தல்

சொற்பதம்

நொடிப்பொழுது

கலகம்

  • கருத்துக்கள உறவுகள்

1. களைதல்
2. மேம்படுத்துதல்
3. சொல்வளம்
4. நொடிப்பொழுது
5. கல்லுதல்

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.