Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!

காலம் 2013 ஆடி...,

இரவு கரையும் ஈரத்தில்

நந்திக்கடல் ஆழத்தில்

நிலவு கரையும் நாளொன்றில்

அர்த்த இரவொன்று....!

அமைதியாய் ஓடியலைந்த

அலையில் முகம் நனைத்த

அன்றைப் பொழுதின் இனிமை

இதய அறைகளில்...!

காலம் 2009 மேமாதம்....,

காலழைந்த அந்தக்

கன இருளின் திரையூடே

களமாடியகதை சொன்ன தோழியின்

காலடிகள் மீளத் தேடியது நினைவு....!

ஆழத்தொலைந்த அலைகளோடு

என் ஆத்மா நிறைந்த

ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்

ஞாபகம் கண்ணீராய்....!

மீளத்தொலைந்து போனது

கடைசிக் கதைகளும்

காலம் மறைத்த துயர்களும்

பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....!

Isaipiri-copy-600x337.jpg
 
பிரியம் நிறைந்த தோழி

இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர்

படமாய் ஒருநாள்

பலநாள் இரவைத் தின்றது.

பாவத்தின் கையிலிருந்து வழிந்த இரத்தம்

அவள் ப(நி)லத்திலிருந்து எழுந்த

ஓலத்தின் சாட்சியாய்

அவள் நிர்வாணம்....!

பாவங்களைக் கழுவ முடியாத

பொறுப்பிலிருந்து மீள முடியாக் கண்ணீர்

இரவுகளில் அவளே கனவுகளாய்

கண்ணகித் தெய்வத்தின் கடைசிப் பிறவியாய்....!

காலம் 2013...,

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்

மொத்த உருவாய் மீள மீள வந்து

முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ

இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

கருணையை வேண்டிய கண்களால்

அவள் கடைசிக் குரல்

கடற்கரையோரச் சேற்றோடு கரைகிறது

ஒரு கனவு போல் எங்கள் தோழியின்

கடைசிக் கணங்கள்.....!

பழிதீர்க்கும் பகைமை மட்டுமே

மனிதமற்ற மிருகங்கள் மீது

கோபமாய் நெஞ்சு மூட்டும் நெருப்பாய்

இந்த இரவையும் தின்கிறது....!

'அவலத்தைத் தந்தவனுக்கு அதைத்திருப்பிக் கொடு'

அந்தச் சொல்லின் வலிமையே

சத்தமின்றி நிரம்புகிறது

இன்றல்லாது போயினும் என்றோ ஒருநாள்....!!!!!

01.11.2013 (நள்ளிரவு 1.40)

(இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்ட ஒளிநாடாவை சனல்4 வெளியிட்ட நாளில் இப்பகிர்வு பதிவு செய்யப்படுகிறது)

http://mullaimann.blogspot.de/2013/11/blog-post_5.html

(கண்ணகி தெய்வமென இசைப்பிரியாவை ஒப்பிட்டதற்கான காரணம் :- வற்றாப்பளை அம்மன் கோவிலும் நந்திக்கடற்கரையும் வரலாற்றில் பல வீரக்கதைகளைக் கொண்டது. வற்றாப்பளை அம்மனை போராளிகள் கூட நம்பிய கடவுள். அந்தக் கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அநியாயமாக அழிக்கப்பட்டாள். அதற்காகவே கண்ணகை தெய்வத்தின் கடைசிப் பிறவியென குறிப்பிட்டுள்ளேன்.

கற்பு நெறி சார்ந்த அடையாளமான கருத்தில் இல்லை. மற்றும் கண்ணகி என்ற ஒரு பாத்திரத்தின் வடிவமாக இங்கு இசைப்பிரியாவை குறிப்பிடவில்லை.

வற்றாப்பளை திருவிழா காலத்தில் பல போராளி குடும்பங்களின் வீடுகளில் கூட விரதம் மரக்கிற சமையலே இருக்கும். அந்தளவு அவர்களும் கண்ணகையம்மனை மதித்தார்கள்.  நந்திக்கடல் நீரில் விளக்கெரியும் மகிமை மிக்கதாய் சொல்லப்படும் கண்ணகை கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அவலமாய் சிதைக்கப்பட்டாள். வெறும் புராணக்கதையின் கண்ணகியோடு இசைப்பிரியாவை தராசிட்டு நிறுத்துப் பார்க்க வேண்டாம்)

Edited by shanthy

கவிதை ஈழப்பெண்ணின் துயரை கண்ணீருடன் பதிவு செய்கின்றது.

அதே நேரத்தில், கண்ணகி ஒரு கதாபாத்திரம் மட்டுமே. வெறுமனே கற்பு எனும் கருத்துருவாக்கத்தினை ஆழமாக இறக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கதை பாத்திரம்.  உயிரும், சதையுமாகி எம் முன் ஆடி ஓடி கலைப்பணி செய்து எம் கண் முன்னால் திரிந்து, பின் பேரினவாதத்தினால் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவை வெறும் கதாபாத்திரக் கடவுளுடன் ஒப்பு நோக்குவது மிகத் தவறு.

என் ஒரு பெண்ணின் அவலத்தினை கண்டு கவிதை வடிப்பதுக்கு கூட கற்பு நிலை சார்ந்து தான் தலைப்பிட வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

கற்பு அழிக்கப்பட்டவள்  என்பதாக உங்கள் உவமானம் வருகிறது என நினைக்கின்றேன்.

அந்த சொல்லே யாழில் தடை  செய்யப்பட்ட ஒன்று.

அந்தளவுக்கு அதற்கு யாரும் உடன்படுவது கிடையாது

அது தவிர்த்து

கண்ணகிக்கும் 

எம்முன்  வாழ்ந்த இசைப்பிரியாவுக்கும்

தொடர்புகளை  ஏற்படுத்துவது

வரலாற்றுக்குற்றமாகும்................ :(

பெண்களே

பெண்களை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துவது  இரட்டிப்பு சோதனையாகும் :(  

கவிதைக்கும்  நன்றி  சொல்லமுடியவில்லை :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தன் கோவத்தை அடக்கி கொள்ள முடியாத கண்ணகி...மரம் ..செடி..கொடி களைக் கூட எரித்ததாக படித்திருக்கிறேன்..கண்ணகி தனி ஒரு மனிதருக்காக அதாவது கணவருக்காகத் தான் மதுரையை மரஞ்..செடி..கொடிகளை எரித்திருக்கிறா..அசாதரணமாக படங்களில் வரும் காட்சி போன்று தான் கண்ணகியின் செயல்பாட்டை நினைப்பதுண்டு..
அப்படியான ஒரு பெண்ணோடு ..

எங்கள் பிள்ளை இசைப் பிரியாவை ஒப்பிடாதீர்கள்.இசைப்பிரியா தமிழ் மக்களுக்காகவே உயிரை கொடுத்திருக்கும் பிள்ளை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ஈழப்பெண்ணின் துயரை கண்ணீருடன் பதிவு செய்கின்றது.

அதே நேரத்தில், கண்ணகி ஒரு கதாபாத்திரம் மட்டுமே. வெறுமனே கற்பு எனும் கருத்துருவாக்கத்தினை ஆழமாக இறக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கதை பாத்திரம்.  உயிரும், சதையுமாகி எம் முன் ஆடி ஓடி கலைப்பணி செய்து எம் கண் முன்னால் திரிந்து, பின் பேரினவாதத்தினால் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவை வெறும் கதாபாத்திரக் கடவுளுடன் ஒப்பு நோக்குவது மிகத் தவறு.

என் ஒரு பெண்ணின் அவலத்தினை கண்டு கவிதை வடிப்பதுக்கு கூட கற்பு நிலை சார்ந்து தான் தலைப்பிட வேண்டுமா?

நிழலி,

கற்பின் தத்துவத்தை இலக்கணப்படுத்தியதல்ல கண்ணியென்ற சொல்லின் அர்த்தம். வற்றாப்பளை கண்ணகையம்மனை நம்பியவர்களின் அடையாளமாகவே கண்ணகியென்ற சொல்லை இட்டிருந்தேன். இதனை ஒரு குறிப்பாக இடாமல் போட்டது தவறான புரிதலைத் தந்துள்ளது.

வன்னிமண் நம்பிய வற்றாப்பளையம்மன் வரலாறும் நந்திக்கடலின் வரலாற்றில் மக்களால் நம்பப்படும் நம்பிக்கையையும் நினைத்தே இப்படி தலைப்பிட்டேன்.

கணவனுக்கு நீதி கேட்ட கதாபாத்திரம் கண்ணகியை இங்கு குறிப்பிடவில்லை.நீங்கள் எண்ணும் கற்பு நிலையில் இருந்து எழுதவில்லை. எனது எழுத்தின் தெளிவின்மையே உங்களை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

சாந்தியக்கா

கற்பு அழிக்கப்பட்டவள்  என்பதாக உங்கள் உவமானம் வருகிறது என நினைக்கின்றேன்.

அந்த சொல்லே யாழில் தடை  செய்யப்பட்ட ஒன்று.

அந்தளவுக்கு அதற்கு யாரும் உடன்படுவது கிடையாது

அது தவிர்த்து

கண்ணகிக்கும் 

எம்முன்  வாழ்ந்த இசைப்பிரியாவுக்கும்

தொடர்புகளை  ஏற்படுத்துவது

வரலாற்றுக்குற்றமாகும்................ :(

பெண்களே

பெண்களை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துவது  இரட்டிப்பு சோதனையாகும் :(  

கவிதைக்கும்  நன்றி  சொல்லமுடியவில்லை :(

மேலே நிழலியின் கருத்துக்கு இட்ட பதிலையே உங்களுக்கும் யாயினிக்கும் தருகிறேன்.

கற்பு என்ற சொல்லை எங்கும் எனது எழுத்துக்களில் எழுதியதில்லை இதுவரையில். கற்பென்ற சொல்லை எங்கள் இதிகாசங்கள் தொடக்கம் இக்காலம் வரையான வரையறைகளுக்குள் எனக்கு உடன்பாடில்லை. கற்பளிப்பு என்ற சொல்கூட எனது எழுத்துக்களில் ஒரு போதும் இருந்ததில்லை. இதனை வாசித்தால் புரியும். நீங்கள் தவறான புரிதலில் கண்ணகி பற்றியும் கற்பு பற்றியும் சொல்லியிருக்கிறீங்கள்.

நிழலி,

கற்பின் தத்துவத்தை இலக்கணப்படுத்தியதல்ல கண்ணியென்ற சொல்லின் அர்த்தம். வற்றாப்பளை கண்ணகையம்மனை நம்பியவர்களின் அடையாளமாகவே கண்ணகியென்ற சொல்லை இட்டிருந்தேன். இதனை ஒரு குறிப்பாக இடாமல் போட்டது தவறான புரிதலைத் தந்துள்ளது.

வன்னிமண் நம்பிய வற்றாப்பளையம்மன் வரலாறும் நந்திக்கடலின் வரலாற்றில் மக்களால் நம்பப்படும் நம்பிக்கையையும் நினைத்தே இப்படி தலைப்பிட்டேன்.

கணவனுக்கு நீதி கேட்ட கதாபாத்திரம் கண்ணகியை இங்கு குறிப்பிடவில்லை.நீங்கள் எண்ணும் கற்பு நிலையில் இருந்து எழுதவில்லை. எனது எழுத்தின் தெளிவின்மையே உங்களை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

விளக்கத்துக்கு நன்றி சாந்தி.

கண்ணகி என்ற பெயர் கொடுக்கும் அர்த்தம், கற்பு பற்றிய வலிந்த எண்ணத்தினை  கடந்து என்றுமே செல்லாது என்று நினைக்கின்றேன். அந்த சொல்லை கடவுள் முன் போட்டலோ அல்லது எந்தப் பெண்ணின் முன் போட்டாலோ அது வலியுறுத்தும் கோட்பாடு சார்ந்து பார்க்கப்பட்டுத் தான் அடுத்த அர்த்தங்களை தேடும். அது சொல்ல வந்த கருத்தினை திசை திருப்பி விடும் (கற்பு சார்பான கருத்து அல்லாதவிடத்தும்)

தலைப்பில் செய்யும் சில மாற்றங்கள் உங்கள் கவிதையை இன்னும் பலருக்கு புரிய வைக்கும் என நினைக்கின்றேன். இது என் கருத்து மட்டுமே.

Edited by நிழலி
இன்னும் எழுத

நன்றிகள் நிழலி உங்கள் கருத்துக்கு. உங்கள் எண்ணப்படி தலைப்பில் மாற்றத்தை செய்கிறேன். கண்ணகி கதையில் எனக்கு என்றும் உடன்பாடில்லை. நான் வற்றாப்பளை கண்ணகையம்மன் மீதான போராளிகள் பொதுமக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எழுதினேன். கவிதையின் கீழ் உங்கள் கருத்தின் பின்னர் அடிக்குறிப்பு இட்டுள்ளேன்.

நன்றி  சாந்தியக்கா

படைப்பாளிகளுக்கு  என்று இருக்கும் 

கறுவத்திலிருந்தும் இறங்கி  முன்னுதாரணமாகியுள்ளீர்கள்

நன்றி

நன்றி....

தொடர்க  தம் பணி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! இது தலைப்பு.....இதை விட்டுட்டு சும்மா கிடக்கிற கண்ணகியைக் கூப்பிட்டால் என்ன செய்யிறது..உண்மையாக மற்றவர்கள் எழுதிவிட்டார்கள். நானும் எழுதனும் என்ற ஆதங்கத்தில் எழுதுவதில்லை..அப்படியானவளும் அல்ல..அண்மைய காலங்களில் முடிந்தவரைக்கு என் பாட்டுக்கு திரிகிறனான்.புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..தலைப்பில் தடுமாறுகிறோம் என்று புரிந்து கொண்டு செயல்பட்டதற்கு நன்றியக்கா.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிச் செல்லம் நான் எழுதிய அர்த்தம் புராணக்கதைப் பாத்திரம் கண்ணகியை இல்லை. கோவிக்காதையணை ராசாத்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! இது தலைப்பு.....இதை விட்டுட்டு சும்மா கிடக்கிற கண்ணகியைக் கூப்பிட்டால் என்ன செய்யிறது..

உண்மையாக மற்றவர்கள் எழுதிவிட்டார்கள். நானும் எழுதனும் என்ற ஆதங்கத்தில் எழுதுவதில்லை..அப்படியானவளும் அல்ல..அண்மைய காலங்களில் முடிந்தவரைக்கு என் பாட்டுக்கு திரிகிறனான்.புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..

இது கருத்துக்களம்

சரி

பிழை என்பதை எழுதும் களம்

நீங்கள் தாராளமாக எழுதலாம்

அது எவருக்கும் பிடிக்கணும்

பிடிக்காமல் இருக்கணும் என்ற  எந்த வரையறையும் இல்லை.

உங்கள் மனதுக்குப்பட்டதை

உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் பிள்ளாய்

எழுதிவிட்டு

இவ்வாறு அடிக்கடி எழுதுகின்றீர்கள்

அதை தவிர்த்துவிடுங்கள்

இவ்வாறு  எழுதுவதால்

தங்கள் கருத்த தானாகவே வலு  இழந்து விடுகிறது......

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்களின் வெளிப்பாடாகி விடிந்திருக்கின்றது, கவிதை! 

எல்லோருடைய மனதிலும் ஒரே விதமான தாக்கங்களை ஏற்படுத்த, இசைப்பிரியாவினால் மட்டும் முடிந்திருக்கின்றது!

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துவிட நினைத்த எம்மைப்போல ஒரு சாதாரணமானவள் என்பது காரணமாக இருக்கலாம்!

ஒரு இயக்கத்தை, நம்பிப்போனவள், நிராதரவாக விடப்பட்டு, அநியாயமாகக் கொல்லப்பட்டமை காரணமாக இருக்கலாம்! எங்கள் எல்லோர் மனதிலும், உள்ள 'குற்றவுணர்வின்' வெளிப்படையான சின்னமாக, இசைப்பிரியாவை, எமது 'ஆழ்மனது' நினைப்பதன் காரணமாக இருக்கலாம்!

நான் இசைப்பிரியாவை, முள்ளி வாய்க்காலில் புதைந்து போன, எல்லாப் பெண்களினதும் 'அடையாளச் சின்னமாகவே' பார்க்கவிரும்புகின்றேன்!

அதையே தான், 'கெலம் மக்கரே' சொல்ல விழைவதும்!  

உங்கள் வரிகள், மிகவும் அழகாக எடுத்தியம்புக்கின்றன, சாந்தி!

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்
மொத்த உருவாய் மீள மீள வந்து
முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ
இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

கண்ணகியைப் பற்றி, எனக்கு ஒரு அபிப்பிராயம் இல்லை!

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற அடிமைத் தத்துவத்தின் பிரதிநிதி அவள்! 

கணவனைக் கூடையில் வைத்துச் சுமந்து சென்ற 'நளாயினி' யின் கதையைப்போன்றதே அவளது கதை!

அத்துடன், இந்திர விழா போன்ற வைதீக விழாக்களையும், முதன் முதலாக , வேதத்தின் 'அருவருப்பான' சுலோகங்களுடனான 'வைதீகத் திருமணத்தையும்' நடத்தி வைத்தது 'சிலப்பதிகாரமே"!

இன்று நம்பியார், சிவசங்கர் மேனன் போன்ற மலையாளிகள் (சேர நாட்டவர்) எமக்கு செய்யும் அநியாயங்களுக்கு, நியாயம் கற்பித்துக் கொடுப்பதும், இந்தச் சிலப்பதிகாரமே!

தமிழர்களைப் 'பாண்டி' என்று இவர்கள் அழைப்பது கூட, சிலப்பதிகாரத்திலிருந்து வந்திருக்கவும் கூடும்! (இது புங்கையின் அனுமானம் மட்டுமே!) :o  

  • கருத்துக்கள உறவுகள்

"ஆழத்தொலைந்த அலைகளோடு
என் ஆத்மா நிறைந்த
ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்
ஞாபகம் கண்ணீராய்....!"

இசைப்பிரியாவின் இறுதி மூச்சுடன்
பல ஆயிரம் உயிர்களின் மூச்சுக்கள்
வெளிவரவேண்டும்
கண்ணீரால் வரைந்த கவிதைக்குப்
பலன் கூடப் பயணிப்போம் ஒன்றாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thursday, December 9, 2010

உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு

isaipriya.PNG
அக்கிரமம் இறுதியில்
பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம்
அதற்கு நீயும் விலக்கில்லாமல்
ஆழ்கடல் நுனிமட்டும்
அலைகிறதுன் ஆத்ம ஓலம்……

கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும்
கதைசொல்லும் பொன்முகமும்
பூவினும் இனியதாய்
பொலிந்த உன் பெண்மையும்
நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்……

நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ
சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை
அலங்கோலமாய் அணுவணுவாய்
படம்பிடித்து மகிழும் காட்சியாய்
நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம்
நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது……

தீயெரித்த கண்ணகியின் கோபத்தை
கதைகளில் தான் படித்தோம்.
ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை
சமகாலத்தில் தானே கற்றோம்.
ஆயினும் ஊமைகளாய்…..!

சாமிகளாய் நம்பிய சரித்திரங்கள் யாவையும்
சாவிட்டு முடித்துச் சாம்பரும் கரைத்துச்
சாவின் மீதுலவும் பூதங்களாய்
பயம்தருகின்ற பொழுதுகளில் உழலுகிறோம்.

சுடலைகளாய் நீழ்கிற தெருக்களில்
கண்ணகைகளாய் எழவும் முடியவில்லை
கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை
கொப்பளிக்கும் கோபத்தை துயரத்தை
இப்படித்தான் கொட்ட முடிகிறது.

தங்கையே !
நீ தமிழுக்கும் தமிழனத்துக்கும் கிடைத்த
சொத்துக்களில் ஒரு முத்து.
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
உன்போல் ஆயிரமாயிரம்
தங்கைகளை அக்காக்களை
தின்னக் கொடுத்துவிட்டு நாங்கள் தின்கிறோம்
உடுக்கிறோம் உழைக்கிறோம்
உயிர்வாழ்கிறோம் இது துரோகம்தான்.
ஆனாலும் உயிர்வாழ்கிறோம்.

யாரும் யாருக்காகவும் உரிமைகோர முடியாத
பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட
சடங்களாயான எங்கள்
சமகாலவிதியை இப்படித்தான்
ஏற்றுக்கொள்கிறோம்.

பாளங்கள் பிழந்து
வடிந்தொழுகும் சுமைகள்
உன்மீதிறங்கி உன்னைக்
குலைத்துச் சிதைத்துச்
சொன்ன சேதி……!!! :icon_idea:

08.12.10 (கொடுமையாய் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் நினைவாக இப்பதிவு. இசைப்பிரியா ஒரு கலைஞராக வாழ்ந்து காத்திரம் மிகுந்த படைப்புகளையும் தந்து எங்கள் காலத்தில் வாழ்ந்த போராளி. அவள் நிர்வாணப்படுத்தப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்)

http://mullaimann.blogspot.de/2010/12/blog-post.html

இக்கவிதை 3வருடம் முதல் எழுதியது 2010இல் இப்போது மீள இணைத்துள்ளேன்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்கள் என் எழுத்துகள் இன்னும் தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகளைப்போல நெஞ்சக்கூட்டறைக்குள் குருட்டுத்தனமாக மோதுகின்றன. வெளிவரத் தெரியாமல்...... :(

சகாரா எழுதி முடித்தாயிற்று ஆனாலும் எரியும் நெருப்பாய் மனசு....இன்னும் ஓயாத கடலலைகளின் அதிர்வாய்....

நீங்களும் எழுதிவிடுங்கோ ஓராயிரம் பேரலைகளின் குரலின் பதிவு என்றோ ஒருநாள் பிரளயமாகட்டும்:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.