Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தேசங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நாள்...

Featured Replies

1457493_340531962758250_2147388078_n.jpg

1459774_340532126091567_1915868075_n.jpg

560102_340532022758244_1083536770_n.jpg

1452006_340532112758235_1087772647_n.jpg

1458622_340532162758230_473506009_n.jpg

1455900_340531796091600_400855514_n.jpg

551347_340531729424940_1046840524_n.jpg

1467239_340531592758287_515954497_n.jpg

1395331_340531956091584_1586775367_n.jpg

1459125_340531866091593_656817560_n.jpg

581261_340531872758259_973581475_n.jpg

(facebook)

Edited by துளசி

  • Replies 56
  • Views 3.4k
  • Created
  • Last Reply

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில், மக்களின் போக்குவரத்து நலன்கருதியும், போராளிகள், பொறுப்பாளர்கள் இணைவு கருதியும் இம்முறை இருவேறு மாநிலங்களில், அதாவது வட, தென்மாநிலங்களில் மாவீரர்நாள் வணக்க நிகழ்வுகளை நடாத்தப்போவதாக தெரிவிக்கப்பட்ட பரப்புரைகள், நீர்மேல் எழுதிச் செய்யப்பட்டதாகவே இப்பதிவு தெரிவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் தேசிய நினைவெழுச்சி நாள் 11-27-2013(புதன்கிழமை)

வெகு விரைவில் கூடிய விபரங்களுடன்

  • தொடங்கியவர்

thesiya%20maveerar%20naal%202013.jpg

mandapam.jpg

(facebook)

  • தொடங்கியவர்

Leicester இருந்து LONDON EXCEL செல்வதற்கான இலவச பேரூந்து சேவை விபரம்.
 
1235424_572909742758676_337480464_n.jpg

(facebook)

ஜேர்மனியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஐந்து இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்கின்றது. மூன்று இடங்களில் ஒருங்கிணைப்புக் குழு செய்கிறது. இரண்டு இடங்களில் மக்கள் செய்கிறார்கள்.

இதை விட பல இடங்களில் மக்கள் தாமாகவே சில இடங்களில் கூடி சிறிய அளவில் அஞ்சலி நிகழ்வுகளையும் செய்கிறார்கள்.

சபேசன்

ஆரம்பித்துவிட்டார்........ :(  :(  :(

சபேசன்

ஆரம்பித்துவிட்டார்........ :(  :(  :(

ஆமாம் இவர் இனி தூங்க மாட்டார் ......................இந்த மாவீரர் தினங்கள் சிறப்பாக நடந்து முடியும் வரை கடுமையாக உழைப்பார் .அவ்வளவு அக்கறை ................வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு . :icon_idea:

ஒருங்கிணைப்புக் குழுவால் மூன்று இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்று டிசம்பர் 1இல் நடக்கிறது. டிசம்பர் மாதத்தையும் மாவீரர் மாதமாக அறிவித்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

மாவீரர் தினத்திற்கு போக விரும்பினால் ,கார்த்திகை 27 போங்க , நேரம் கிடைக்காவிட்டால் டிசம்பர் 1 போங்க ...........போக விருப்பம் இல்லாவிட்டால்  வீட்டில் தரிசியுங்க ..அதை விட்டுட்டு ஏனுங்க உங்களுக்கு உந்த வெறி .......

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று புரியவில்லை...

நிகழ்வு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது உண்மையானால்...... இப்படி நடக்க உள்ளது என்ற செய்தியைத் தெரிவிக்கும் ஒருவரை  ஏன் தாக்க முயல்கிறோம்?

ஒருங்கிணைப்புக் குழுவால் மூன்று இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்று டிசம்பர் 1இல் நடக்கிறது. டிசம்பர் மாதத்தையும் மாவீரர் மாதமாக அறிவித்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

சகாரா அக்கா செய்தியை சொல்வது வரவேற்கப்பட வேண்டியது .ஆனால் இதுதான் உதைக்குது 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் நாம் சபேசன் எழுதியதற்காக ஆத்திரப்பட என்ன இருக்கிறது?

சபேசன் மட்டுமல்ல பலரும் இப்படியான கருத்தைச் சொல்வார்கள் காரணம் அப்படியாக நிகழ்வுகள் தான்தோன்றித்தனமாக அமைக்கப்படும்போது நிச்சயமாக இப்படியான கருத்துகள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் கோபப்படவேண்டியது கருத்துச் சொல்பவனிடம் அல்ல இக்கருத்துருவாக்கம் வருவதற்கு வழி சமைப்பவர்களிடம்.....

நான் டிசம்பர் மாதக் கதை சொல்வதற்கு முதலேயே உங்கள் தாக்குதல் தொடங்கி விட்டது. சரி, போகட்டும்.

நான் இம்முறை ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் மாவீரர் நாளுக்கு செல்கின்ற யோசனையில் இருக்கிறேன்.

  • தொடங்கியவர்

ஒருங்கிணைப்புக் குழுவால் மூன்று இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்று டிசம்பர் 1இல் நடக்கிறது. டிசம்பர் மாதத்தையும் மாவீரர் மாதமாக அறிவித்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

ஆதாரத்தை இணையுங்கள்.

தமிழ் சூரியன் நாம் சபேசன் எழுதியதற்காக ஆத்திரப்பட என்ன இருக்கிறது?

சபேசன் மட்டுமல்ல பலரும் இப்படியான கருத்தைச் சொல்வார்கள் காரணம் அப்படியாக நிகழ்வுகள் தான்தோன்றித்தனமாக அமைக்கப்படும்போது நிச்சயமாக இப்படியான கருத்துகள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் கோபப்படவேண்டியது கருத்துச் சொல்பவனிடம் அல்ல இக்கருத்துருவாக்கம் வருவதற்கு வழி சமைப்பவர்களிடம்.....

அக்கா இதில் என்ன தான் தோன்றித்தனம் என்றுதான் எனக்கு விளங்கவில்லை தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் கூட புலம்பெயர் நாடுகளில் ,நான் வாழும் நாட்டில் கூட கார்த்திகை 27 அல்லாமல் அதற்கு பிற்பட்ட காலங்களில் ,சில சௌகரிகம் கருதி மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது .................இதை அன்று மையத்திலே ,களத்திலே நின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்ட விடயம் ..............

  • தொடங்கியவர்

நான் இம்முறை ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் மாவீரர் நாளுக்கு செல்கின்ற யோசனையில் இருக்கிறேன்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு தான் மூன்று இடங்களில் வைக்கிறது என்றீர்கள். பின்னர் ஒருங்கிணைப்பு குழு நடத்தும் மாவீரர் தினத்துக்கு தான் செல்கிறீர்கள் என குறிப்பிடுகிறீர்கள். உங்களுக்கே இது முரணாக தெரியவில்லையா?

இப்பொழுது உங்கள் கருத்துகளை நீக்கும்படி நிர்வாகத்துக்கு கூறுகிறேன். ஆதாரம் இருந்தால் பின்னர் அதை நேரடியாக இணையுங்கள்.

நன்றி.

துளசி! நான் ஆதாரத்தை இணைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? "ஒரு தென்றல் புயலாகி வருதே" என்பது போன்று புறப்பட்டு நீதி கேட்பீர்களா? பேசாமல் தொடர்ந்தும் ஒருங்கிணைப்புக் குழுவின் நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்களை இங்கே இணைத்து உங்கள் பணியை செய்யுங்கள்!

தமிழ்சூரியன்! ஆரம்பத்தில் அனைத்து நாடுகளிலும் வசதிக்கு ஏற்றபடி திகதியை கருத்தில் கொள்ளாது, வார இறுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்யப்பட்டன. பின் நாட்டில் இருந்து வந்த உத்தரவை அடுத்து (2003 என்று நினைக்கிறேன்) நவம்பர் 27ஆம் திகதியே அனைத்து நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது உங்களுக்கு நன்கு தெரியும்.

இத்தாலிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. நேரம் மாறுபடுவதால் அவுஸ்ரேலியாவிலும் ஒரு நாள் கழித்து நடத்தப்பட்டது. மற்றைய நாடுகள் தலைமையின் உத்தரவின்படி நவம்பர் 27இலேயே நிகழ்வுகளை செய்தன.

இது யேர்மனியில் நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள். நான் டோட்முண்டிற்கு போகிறேன். அதுதான் எனக்கு அருகில் உள்ளது.

Ravensburg - 24.11

Dortmund - 27.11

Berlin -27.11

Muenchen - 30.11

Stuttgart - 01.12

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

நான் இதில் மேலே இணைத்தவை அனைத்தும் ஒருங்கிணைப்பு குழுவினர் share பண்ணியது தான். வெவ்வேறு இடங்களில் நடப்பதாக இருந்தால் அவர்கள் அதையும் share பண்ணியிருப்பார்கள். இதுவரைக்கும் share பண்ணவில்லை என்பதால் தான் கேட்கிறேன். உங்களை ஆதாரத்துடன் இணைக்கும்படி.

இதில் நீங்கள் குறிப்பிட்டவற்றுக்கு ஆதாரம் தாருங்கள். நான் குறிப்பிட்டவற்றுக்கு ஆதாரம் தேவைப்பட்டால் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் முகநூல் இணைப்பு எடுத்து தர முடியும்.

இதில் Dortmund, Muenchen, Stuttgart என்கின்ற 3 இடங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக் குழுவினுடையது. நான் முதலில் மக்களால் நடத்தப்படுகின்ற ஏதாவது ஒரு நிகழ்வுக்கு போவோம் என்று நினைத்தேன்.

ஆனால் மக்கள் தொலைதூரம் பயணம் செய்யாது அருகில் செல்வது போன்று பல இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்யப்பட வேண்டும் என்று நானே சொல்லிக் கொண்டு, எதற்கு தொலைதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது நடக்கின்ற, அல்லது நடக்கும் என்று வாக்குறுதி தரப்பட்ட விடயங்களை வரவேற்பதன் அடையாளமாகவும் டோட்முண்ட் போவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

துளசி! நான் ஆதாரத்தை இணைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? "ஒரு தென்றல் புயலாகி வருதே" என்பது போன்று புறப்பட்டு நீதி கேட்பீர்களா? பேசாமல் தொடர்ந்தும் ஒருங்கிணைப்புக் குழுவின் நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்களை இங்கே இணைத்து உங்கள் பணியை செய்யுங்கள்!

தமிழ்சூரியன்! ஆரம்பத்தில் அனைத்து நாடுகளிலும் வசதிக்கு ஏற்றபடி திகதியை கருத்தில் கொள்ளாது, வார இறுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்யப்பட்டன. பின் நாட்டில் இருந்து வந்த உத்தரவை அடுத்து (2003 என்று நினைக்கிறேன்) நவம்பர் 27ஆம் திகதியே அனைத்து நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது உங்களுக்கு நன்கு தெரியும்.

இத்தாலிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. நேரம் மாறுபடுவதால் அவுஸ்ரேலியாவிலும் ஒரு நாள் கழித்து நடத்தப்பட்டது. மற்றைய நாடுகள் தலைமையின் உத்தரவின்படி நவம்பர் 27இலேயே நிகழ்வுகளை செய்தன.

இது யேர்மனியில் நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள். நான் டோட்முண்டிற்கு போகிறேன். அதுதான் எனக்கு அருகில் உள்ளது.

Ravensburg - 24.11

Dortmund - 27.11

Berlin -27.11

Muenchen - 30.11

Stuttgart - 01.12

சபேசன் பதிலுக்கு நன்றிகள் .
 
நாட்டில் இருந்து கட்டாயம் 27 தான் செய்யுங்கள் என்று கூறியதாக,உத்தரவிட்டதாக  நான் அறியவில்லை ,சிலவேளைகளில் நீங்கள் அறிந்திருக்கலாம் .ஆனால் கூடியளவு அந்த திகதியில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியதாகத்தான் அறிந்தேன் .....அதன்பின்னும்   பெல்ஜிஜம் நெதர்லாந்து போன்ற நாடுகளில் திகதி மாறி அனுஸ்டிக்கப்பட்டது .மீண்டும் நன்றிகள் .
  • தொடங்கியவர்

இதில் Dortmund, Muenchen, Stuttgart என்கின்ற 3 இடங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக் குழுவினுடையது. நான் முதலில் மக்களால் நடத்தப்படுகின்ற ஏதாவது ஒரு நிகழ்வுக்கு போவோம் என்று நினைத்தேன்.

ஆனால் மக்கள் தொலைதூரம் பயணம் செய்யாது அருகில் செல்வது போன்று பல இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்யப்பட வேண்டும் என்று நானே சொல்லிக் கொண்டு, எதற்கு தொலைதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது நடக்கின்ற, அல்லது நடக்கும் என்று வாக்குறுதி தரப்பட்ட விடயங்களை வரவேற்பதன் அடையாளமாகவும் டோட்முண்ட் போவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர் அல்ல. எனவே நீங்கள் கருத்து கூறுவதை விடுத்து ஆதாரத்தை இணையுங்கள்.

அவர்கள் பலவாறாக நடத்தினால் அதை நானும் வரவேற்பவள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் Dortmund, Muenchen, Stuttgart என்கின்ற 3 இடங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக் குழுவினுடையது. நான் முதலில் மக்களால் நடத்தப்படுகின்ற ஏதாவது ஒரு நிகழ்வுக்கு போவோம் என்று நினைத்தேன்.

ஆனால் மக்கள் தொலைதூரம் பயணம் செய்யாது அருகில் செல்வது போன்று பல இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்யப்பட வேண்டும் என்று நானே சொல்லிக் கொண்டு, எதற்கு தொலைதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது நடக்கின்ற, அல்லது நடக்கும் என்று வாக்குறுதி தரப்பட்ட விடயங்களை வரவேற்பதன் அடையாளமாகவும் டோட்முண்ட் போவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சபேசன் நான் நினைக்கிறேன் இது  துளசியால் திறக்கப்பட்டிருக்கும் மாவீரர் நாள் பற்றிய அறிவித்தல்களை இணைக்கும் திரியாக இருக்கிறது இங்கு அவர் இணைத்தவை எல்லாம் அவற்றுக்கான முழுமையான தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நீங்கள் இணைத்த செய்தியையும் முழுமைத்தன்மையுடன் இணைத்தால் உங்கள் செய்தியின் உண்மைத்தன்மை தெளிவாக இருக்கும்.

துளசி! மற்றைய இரண்டு நிகழ்வுகளுக்குமான துண்டுப்பிரசுரங்கள் இன்னும் தயாராகவில்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. மூன்று இடத்திலும் ஒரே நாளில் செய்யக்கூடிய வலு இருந்தும், வேறு வேறு நாட்களில் செய்யப்படுவதற்கு என்ன காரணமோ, அதே காரணமாகத்தான் இன்னும் துண்டுப்பிரசுரம் வெளியிடப்படவில்லை.

வெளியிடப்பட்டதும் அதை இங்கே நான்... மன்னிக்கவும் நீங்களே இணைப்பீர்கள்தானே! எனக்கு எதற்கு சிரமம்? உங்கள் பணிக்கு நன்றியும் வாழ்த்தும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.