Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நாள்...

Featured Replies

  • தொடங்கியவர்

இல்லை, நீங்கள் ஆதாரம் கிடைத்ததும் அதை இங்கு இணையுங்கள். அதுவரைக்கும் உங்கள் கருத்துகளின் உண்மை தன்மை தெரியாததால் மக்களை குழப்பாமல் அதை நீக்கும்படி நிர்வாகத்துக்கு கூறுகிறேன்.

நன்றி.

  • Replies 56
  • Views 3.4k
  • Created
  • Last Reply

இடங்களும் திகதிகளும் தந்திருக்கிறேன். நீங்கள் நேரடியாக ஒருங்கிணைப்புக் குழுவிடம் கேட்டு உறுதிப்படுத்தலாம்.

இன்று நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் சொன்னார், "ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மாற்றங்களுக்கு தயாராகத்தான் இருக்கிறார்கள், சில அடிப்பொடிகள்தான் துள்ளிக்கொண்டிருக்கிறார்கள்"... இங்கும் அது தெரிகிறது.

உறுதியாக தெரிந்த ஒரு தகவலை இடமும் திகதியும் குறிப்பிட்டு தந்த பின்பு கூட நீக்கு, வெட்டு என்று.. என்ன அராஜகம் இது?

  • தொடங்கியவர்

நான் இணைத்தவை அனைத்தும் விபரங்களுடன் இருக்கிறது. ஆனால் நீங்கள் இணைத்தவை நம்பக தன்மை அற்று இருக்கிறது. அதற்காக நீங்கள் சொன்னால் பொய்யாக இருக்கும் என நான் கூறவில்லை.

நீங்கள் வழமையாகவே மாவீரர் தினம் பற்றி குழப்புபவர். இந்த மாதமும் ஒரு திரி ஆரம்பித்தீர்கள். அதனால் தான் ஆதாரமற்று உங்கள் கருத்தை நம்ப முடியவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர் தினம் அமைய வேண்டும் என போன வருடம் நீங்கள் கூறினீர்கள். ஆனால் நான் மாவீரர் தினத்தை வெவ்வேறாக நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. வெவ்வேறாக நடத்தினால் என்ன செய்ய முடியும். விரும்பியவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்லட்டும் என்று போன வருடமே கூறியிருந்தேன்.

எனவே இப்பொழுதும் வெவ்வேறாக நடத்தினால் நான் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் தேவையில்லாத குழப்பங்களுக்கு வழிவகுக்காமல் சரியான தகவலுடன் இணைக்க வேண்டும் என்பதையே கேட்கிறேன்.

நீங்கள் "குழப்பம்" என்று எதை சொல்கிறீர்கள்? குழப்பத்தில் "தேவையான குழப்பம்", "தேவையில்லாத குழுப்பம்" என்று கூட இரண்டு வகை இருக்கிறதா?

எதை மக்களிடம் சொல்லலாம்? எதை சொல்லக்கூடாது என்று தீர்மானிக்கின்ற இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா? இப்பொழுது சொல்லக்கூடாது, நாளைக்கு சொல்லலாம் என்று நீங்கள் நினைக்கின்ற விடயத்தை, இன்றைக்கே சொல்வதனால் நான் குழப்பம் செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

நாளைக்கு சொல்லப் போவதை இன்றைக்கு மறைப்பதுதான் குழப்பம் என்று கருதுபவர்களும் இருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • தொடங்கியவர்

நீங்கள் தான் இந்த வருடம் ஜேர்மனில் 4 இடங்களில் மாவீரர் தினம் நடைபெறுகிறது என முன்னர் குறிப்பிட்டீர்கள். பின்னர் அனைவரும் ஒன்றாக நடத்துகிறார்களாம் என ஒரு திரி திறந்தீர்கள். இப்பொழுது திரும்ப 5 இடங்களில் மாவீரர் தினம் என்கிறீர்கள். இங்கு நீங்கள் தான் குழப்புகிறீர்கள். தயவு செய்து எது உண்மை என சரியாக தெரிந்தபின்னர் யாழில் அது பற்றி ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள்.

அதை சுட்டிக்காட்டினால் உடனே எதை சொல்ல வேண்டும் என நான் தான் தீர்மானிக்கிறேன் என்று நினைப்பதாக கூறுகிறீர்கள். என்னவோ செய்யுங்கள். உங்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இத்துடன் உங்களுக்கு பதிலளிப்பதை நிறுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா வழமை போல கச்சேரியை ஆரம்பிச்சு விட்டார்...துளசி இது ஒன்றும் அவருக்கு புதிது அல்ல...நீங்கள் அவருக்கு பதில் எழுதி நேரத்தை வீன் ஆக்காதைங்கோ......

Edited by பையன்26

இல்லை துளசி! அதாவது சென்ற முறை போன்று தலைமைச்செயலகம், ஒருங்கிணைப்புக்குழு என்று இந்த முறை இரண்டாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஐரோப்பாவில் நடைபெறவில்லை. அது பற்றியே ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். (அதிலும் இன்னும் ஒரு தரப்பு பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.)

தலைமைச்செயலகம் செய்ய இருந்த மாவீரர் நாள் நிகழ்வையும் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பெடுத்ததை அடுத்தே, இந்த அதிகரித்த மாவீரர் நிகழ்வுகள், மற்றும் திகதி மாற்றங்கள்.

இரண்டிலும் சேர விரும்பாத மக்கள் இரண்டு இடங்களில் தாமாக செய்கிறார்கள். ஒருங்கிணைப்புக் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளைப் பொறுத்து, இது அதிகரிக்கும் அல்லது இல்லாமல் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

thesiya%20ninaiveluchchi%20naal.jpg

நன்றி நுனாவிலான் .நான் இந்த இணைப்பை இணைக்க இருந்தேன் ..என்னை தங்கை துளசி முந்திவிட்டார் ........இப்போ நீங்களும் இணைத்து விட்டீர்கள் ..இன்று மாவீரர்க்கான இசை பயிற்சிக்கு சென்று விட்டு பூரண உள திருப்தியோடு இந்த பக்கத்தை பார்வையிட வந்தேன் ....மனம் இன்னும் உற்சாகம் கொண்டது ....................................இம்முறையும் எம் தாயக கீதங்களை இந்த களத்தில் பதிவு செய்வேன் .

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

1982ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ஆம் நாள் 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் என்ற வீரன் தலைவரின் மடியில் உயிர்துறந்தான். அந்த நாளை 1989ம் ஆண்டு மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உலகமெங்கும், முதன் முதலாக தமிழர் வாழும் நாடுகளில் நினைவுகூரப்பட்டது. உலகநாடுகளில் விடுமுறை நாட்களின் வசதிக்கேற்ப நினைவுகூரப்பட்ட மாவீரர் நாளானது, 2006ம் ஆண்டளவில் கார்த்திகை மாதம் 27 ஆம் நாள் வரும் நாளன்றே எங்கும் நினைவுகூர அறிவுறுத்தப்பட்டது.

 

யேர்மனியில் மாவீரர் நாள் நினைவுகூரத் தொடங்கியதுமுதல் வடமாநிலத்தில் மட்டுமே அதற்கான மண்டபம் ஒழுங்குசெய்யப்பட்டு நினைவுகூரப்பட்டது. ஆயினும் Muenchen நகரிலும் Ravensburg நகரிலும் வாழ்ந்த தமிழர்கள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவேறிய பின்னர் வந்த வாரங்களில் ஒரு நாளில், அங்குள்ள மாவீரர் குடும்ப உறவுகள் இணைந்து அவர்கள் இரத்த உறவான மாவீரர்களின் திருவுருவப் படங்களை வைத்து சுடரேற்றி வணங்கிவருவது தொடர்ந்துவரும் ஒரு நிகழ்வாகும்.

 

தற்போது யேர்மனியில், மக்களின் போக்குவரத்து நலன்கருதியும், போராளிகள், பொறுப்பாளர்கள் இணைவு கருதியும், இருவேறு மாநிலங்களில், அதாவது வட, தென்மாநிலங்களில் மாவீரர்நாள் வணக்க நிகழ்வுகளை நடாத்தப்போவதாக பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் பின்வாங்கப்பட்டுள்ளது.

துளசி இணைப்பார் என்று எதிர்பார்த்தேன். அவருக்கு நிறைய வேலை போல் தெரிகிறது. அதனால் நானே இணைத்திருக்கிறேன். என்னுடைய ஆய்வுகள், எதிர்வுகூறல்கள் தவறாகப் போகலாம். ஆனால் ஒரு பொய்யான செய்தியை இங்கே தர வேண்டிய அவசியல் எனக்கு இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் போதும்.

  • தொடங்கியவர்

அண்ணா, இப்பொழுதும் முகநூலில் பார்த்தேன். யாரும் இதை பகிரவில்லை. நீங்கள் தான் இணைத்துள்ளீர்கள். பார்க்கலாம்.

இதை நானே தயாரித்தேன் என்று நீங்கள் சொல்லாதவரை சந்தோசம்

  • தொடங்கியவர்

 

1452006_340532112758235_1087772647_n.jpg

 

 

(facebook)

 

இந்த பதிவு பற்றிய விபரங்கள்,

 

எம்தேச விடியலுக்காய் உயிரீய்ந்த மாவீரத் தெய்வங்களை உள்ளுணர்வோடு வணங்கும் நாள் மாவீரர் நாள். இந்த புனித நாளில், யேர்மனியில் வதியும் மாவீரர்களுடைய நெருங்கிய உறவுகளாகிய, தாய், தகப்பன், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, பிள்ளைகளை உறவுகளாக கொண்டு, அவர்களுக்குரிய மாவீரத் திருவுருவப் படங்களை வைத்து வணக்க நிகழ்வுகளை நிகழ்த்துவதில் யேர்மனி மாவீரர் பணியகம் செயற்பட்டு வருகின்றது. அத்தோடு அனைத்து மாவீரத்தெய்வங்களையும் வணங்கும் முகமாக பொது ஈகச்சுடரேற்றி நமது உணர்வு வணக்கத்தை செலுத்துவது எமது வீரவணக்கமாகும்.

இந்த புனிதவேளையில் மாவீரர் குடும்பத்தினராகிய தங்களை, மாவீரத்தெய்வங்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி வணங்க மேன்மையுடன் அழைக்கின்றோம். அத்துடன் 27.11.2013 அன்று மாவீரர்நாள் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாவீரர் குடும்பத்தினருக்கான கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகட்கு:

MV büro

Styrumerstr 28

46045 Oberhausen

கைத்தொலைபேசி இல.: 0176 55403556

 

ஆதாரம் (வாகை tv) : https://www.facebook.com/photo.php?fbid=443801709072425&set=pb.100003277999527.-2207520000.1385060395.&type=3&src=https%3A%2F%2Fscontent-a-mad.xx.fbcdn.net%2Fhphotos-prn2%2F1381667_443801709072425_1504457223_n.jpg&size=600%2C849

ஆதாரம் (TCC france) : https://www.facebook.com/photo.php?fbid=340532112758235&set=pb.100004043479795.-2207520000.1385059286.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-f-a.akamaihd.net%2Fhphotos-ak-prn2%2F1401448_340532112758235_1087772647_o.jpg&smallsrc=https%3A%2F%2Fscontent-b-mad.xx.fbcdn.net%2Fhphotos-prn2%2F1452006_340532112758235_1087772647_n.jpg&size=1000%2C1414

 

நடைபெறும் இடம்:

 

Helmut Körnig Halle,

strobellallee 42,   

44139 Dortmund

 

(facebook)

Edited by துளசி

ஆமாம், டோட்முண்டிலிலும் நடக்கிறது. டோட்முண்டில்தான் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் நாள் பெரிய அளவில் நடக்கும்.

அதே வேளை நான் சொன்ன மற்றைய இடங்களிலும் நடக்கிறது. நான் இணைத்த படத்தில் இருக்கின்ற மாவீரர் நாள் நிகழ்வு முதலில் நவ 27இல் தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களால் நடாத்தப்பட இருந்தது. தற்பொழுது நடக்கின்ற ஒற்றுமை முயற்சிகளின் பயனாக, இந்த நிகழ்வையும் ஒருங்கிணைப்புக் குழுவே பொறுப்பெடுத்துக் கொண்டு, நிகழ்வை பிற்போட்டு டிசம்பர் 1இல் செய்கிறார்கள்.

சபேசன் நீங்கள் இணைத்த லிங்கை அழுத்த எதோ ஆன்லைன் இல் இமேஜ் செய்வது போல ஒரு தரவு வருகிறது .யேர்மன் மொழியில் உள்ளது ..தெளிவு படுத்த முடியுமா .நன்றி.

தமிழ்சூரியன்! இதுவும் imageshuck போன்ற ஒரு தளம்தான். இங்கே பதியத் தேவையில்லை. மிக இலகுவானது.

நீங்கள் உங்கள் படங்களை இதன் மூலமும் இணைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

ஒருங்கிணைப்புக்குழுவை கருவறுக்க  உழைக்கும்   தாங்கள்

அவர்களது நிகழ்வுக்கு  போகப்போவதாக எழுதியிருந்தீர்கள்

இந்த மன  மாற்றத்துக்கு காரணம் என்ன?

அல்லது சூழ்ச்சியா???

  • தொடங்கியவர்

998808_585083661563792_1800757733_n.jpg

 

(facebook)

இப்பொழுது நடக்கின்ற ஒற்றுமை முயற்சிகள், அது சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை வரவேற்பதன் அடையாளமாகவே நான் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் நாள் நிகழ்வுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறேன்.

எனக்கு தனிப்பட்டரீதியில் நம்பிக்கை இல்லைத்தான். ஆயினும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை ஆதரிக்க தயங்கமாட்டோம் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

  • தொடங்கியவர்

ஜெர்மனில் இல் நடைபெறவுள்ள மாவீரர் தினம்

Helmut Körnig Halle,
strobellallee 42
44139 Dortmund

என்ற முகவரியில் 27.11.2013 அன்று 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

(facebook)

 

பி.கு: மேலுள்ள எனது பதிவில் இடவிபரம் குறிக்கப்படாததால் இதை மேலேயும் இணைத்துள்ளேன்.

Edited by துளசி

பிரான்சில் ஏந்தினை ஒன்றா இரண்டா துளசி அறிய தரவும் .

துளசி ஒருங்கிணைப்புக் குழுவின் முகநூல் மூலம்தான் மாவீரர் நாள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்கிறார். ஆகவே வேறு மாவீரர் நாள் நடந்தால், அது பற்றி அவர் அறிய வாய்ப்பில்லை. சாத்திரி போன்ற யாரையாவது கேட்டுப் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.