Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் பிள்ளையள் !!! "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை"  எண்டு சொல்லுவங்கள் . எங்கடை பரியரிமாரின்ரை கைகண்ட  மருந்து இஞ்சி தான் கண்டியளோ . அதாலை முதல் சொன்ன சுமேரியருக்கு பரிசை குடுப்பம் ( வெருட்டினதாலை மட்டும் நான் இதை குடுக்கேலை சொல்லிபோட்டன் :lol: :lol: :D ) .
 

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

18 ஈரப்பலா மரம் அல்லது ஆசினிப் பலா மரம் (  breadfruit or Artocarpus incisa )

 

zu1v.jpg

 

ஈரப்பலா மரம் அல்லது ஆசினிப் பலா மரம்  (Artocarpus incisa) பலா இனத்தை சார்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE

 

http://en.wikipedia.org/wiki/Artocarpus_incisa

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரப்பலா மரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யால்வாலி  சாப்பிடப் போட்டுது. இப்ப வராது என்று எமலாந்திக்கொண்டு இருந்திட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

நனைந்த பலா !  (என்னத்துக்கு பாத்தெழுதுவான்).

நனைந்த பலா !  (என்னத்துக்கு பாத்தெழுதுவான்).

 

அப்ப இது ஒரு "காயாத" பலா என்கிறீர்களா? அதுதான் சாப்பிட்டால் மலடாவினம் என்ற ஐதீகம் இருக்கோ? :D

  • தொடங்கியவர்

ஈரப்பலா மரம்

 

வணக்கம் பிள்ளையள் !! வலு சிம்பிளாய் மரத்தை கண்டு பிடிச்சுப் போட்டியள் . முதல் ஆளாய் சொன்ன வாலிக்கு இந்தமுறை பரிசு கண்டியளோ :D :D .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

19 இரம்பை செடி ( pandan leaves or Pandanus amaryllifolius )

 

dnx3.jpg

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Pandanus_amaryllifolius

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தாழை மரம்

  • தொடங்கியவர்

ரம்பை   :D

 

 

நீங்கள் எங்கையோ நிக்கிறியள் :o :o உதில்லை சொல்லிப்போட்டன் :lol: :lol: .

 

indiralohathil-na-azhagappan-367.jpg

  • தொடங்கியவர்

ரம்பை   :D

 

யோசினை வேறை எண்டாலும் :wub: ஆள்  சமையலுக்கு பாவிக்கிற  ரம்பை இலையிலை தான் நிண்டுது :lol: . வாழ்த்துக்கள் புங்கையூரான் :) .

 

  • தொடங்கியவர்

20 கறுவா ,இலவங்கப்பட்டை மரம். ( Cinnamon  or Cinnamomum )

 

v69i.jpg

 

 

இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon) என்பது சின்னமாமம் வேரம் அல்லது சி. சேலானிக்கம் (சின்னமாமம் வேரம் என்பதற்கு சி. சேலானிக்கம் என்று பொருள்) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது லாரசீயே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் ஆரம்ப உற்பத்தி இலங்கையாக இருப்பதுடன், அதிகமாக விளையும் இடமும் இலங்கையாக இருக்கிறது. இந்த கறிமசால் பொருள் (கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்) மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது அடிக்கடி இதற்கு ஒத்த வேறு இனத் தாவரங்களான காசியா மற்றும் சின்னமாமம் பர்மான்னி போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. இந்த கறிமசால் பொருட்களும் இலவங்கப்பட்டை என்றே அழைக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை, Yeast இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது.

இலவங்கப்பட்டையானது மரத்தை இரண்டு வருடங்களுக்கு வளரவிட்டு அதன்பிறகு அதை கிளைநறுக்கி பட்டை செழிக்க செய்யப்படுகிறது. அடுத்த வருடம், சுமார் பன்னிரண்டு துளிர்கள் வேர்களிலிருந்து எழும்புகின்றன. இந்த துளிர்களிலிருந்து அவைகளின் பட்டைகள் நீக்கப்பட்டு காயவைக்கப்படுகின்றன. மெல்லிய (0.5 மிமீ) உள்பட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; வெளிப்புற மரப்பகுதி நீக்கப்பட்டு, ஒரு மீட்டர்-நீள இலவங்கப்பட்டை துண்டுகள் காய்ந்து சுருள்களாகின்றன (“குவில்கள்”); ஒவ்வொரு காய்ந்த குவிலும் எண்ணற்ற துளிர்களிலிருந்து உண்டான பல பட்டைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த குவில்கள் விற்பனைக்காக 5-10 செமீ நீளமுள்ளவைகளாக வெட்டப்படுகின்றன.

 

இலவங்கப்பட்டை பண்டைய காலங்களிலிருந்து இலங்கையில் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மரம் வர்த்தகரீதியில் தென்னிந்தியாவின் கேரளா, வங்க தேசம் (பங்க்ளாதேஷ்), ஜாவா, சுமத்ரா, மேற்கிந்திய தீவுகள், பிரேஸில், வியட்னாம், மடகாஸ்கர், சான்ஸிபார் மற்றும் எகிப்திலும் வேளாண்மை செய்யப்படுகிறது. இலங்கையின் இலவங்கப்பட்டை மிகவும் மெல்லிய வழுவழுப்பான பட்டையைக் கொண்டுள்ளது. அதின் நிறம் இளஞ்சிவப்பும் பழுப்பு நிறமும் கலந்ததாகவும் மிகவும் வாசனையான நறுமணமுள்ளதாகவும் காணப்படுகிறது.

2006ன் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற இதழின்படி, இலங்கை உலகத்தின் இலவங்கப்பட்டையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்வதாகவும், இதை தொடர்ந்து சீனா, இந்தியா, வியட்னாம் ஆகியவை உற்பத்தி செய்வதாகவும் அறிவித்தது.[15] FAOவின்படி, இலவங்கப்பட்டையின் காசியா வகையின் உலக உற்பத்தியில் 40% இந்தொனேஷியாவில் உற்பத்தியாவதாக அறிவிக்கப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE

http://en.wikipedia.org/wiki/Cinnamon

Edited by கோமகன்

இதன் பெயர் சிங்கள மரம்.120px-Cinnamomum_verum_003.JPGCinnamomum zeylanicum


1280px-Cinnamon_%E0%B4%95%E0%B4%B1%E0%B5


சின்னமோமம் சிலனிக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இலவங்கப்பட்டை மரம்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுவாப் பட்டை மரம்.

  • கருத்துக்கள உறவுகள்

செம்பருத்தி.  (பின்னுக்கு பார்த்தெழுதியெ பழக்கமாயிட்டுது  ஒரு 35 மார்க் ஆவது போடுங்கோ  கோ ).  :D

செம்பருத்தி.  (பின்னுக்கு பார்த்தெழுதியெ பழக்கமாயிட்டுது  ஒரு 35 மார்க் ஆவது போடுங்கோ  கோ ).  :D

நான் முழு மார்க்கும் தந்திருக்கிறேன். இருதள படங்களில் முன்னுக்கு, பின்னுக்கு என்று இல்லை. எல்லாமே ஒரே தூரத்தில்தான் இருக்கும். :D

  • தொடங்கியவர்

இதன் பெயர் சிங்கள மரம்.120px-Cinnamomum_verum_003.JPGCinnamomum zeylanicum

1280px-Cinnamon_%E0%B4%95%E0%B4%B1%E0%B5

சின்னமோமம் சிலனிக்கம்

 

என்ன மல்லையர் சின்ன மோளம் சிலிக்கன் எண்டு கொண்டு நிக்கிறியள் :wub: :wub: இடம் மாறி வந்துட்டியளோ :lol::D .

 

நீங்கள் படத்தை(MAP) மாறி மாறி போடுறியள்.

பொடியல் போறம் இடம் தெரியாமல் தடுமாறினாங்கள். 

 

அதுதான் போக வேண்டிய இடம் சிலனிக்கம் என்று சொல்லிக்கொடுத்திருக்கு. :D

 

பாரதியாரின் சிங்கள மரம் சிலனிக்கத்தில் தான் என்பதை விஞ்ஞானிகளும் ஏற்றுத்தான் இருக்கிறாகள்.  :o

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சினமன் கார்டின் என்பது கறுவாக் காட்டுப் பகுதிதானே !!சமீபத்திலும்  இலங்கையில்  கறுவா சம்பந்தமான விவரணப் படம் ஒன்று பார்த்தேன்.

நன்றி மல்லை,  தோளோடு தோள் கொடுத்ததற்கு !! :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படத்தை(MAP) மாறி மாறி போடுறியள்.

பொடியல் போறம் இடம் தெரியாமல் தடுமாறினாங்கள். 

 

அதுதான் போக வேண்டிய இடம் சிலனிக்கம் என்று சொல்லிக்கொடுத்திருக்கு. :D

 

பாரதியாரின் சிங்கள மரம் சிலனிக்கத்தில் தான் என்பதை விஞ்ஞானிகளும் ஏற்றுத்தான் இருக்கிறாகள்.  :o

 

கைக்கெட்டியது வாய்க்கெட்டேல்ல எண்டு உதைத்தான் சொல்லுறது. :D

 

  • தொடங்கியவர்

இலவங்கப்பட்டை மரம்.

 

வணக்கம் பிள்ளையள் !!!  மினக்கெட்ட எல்லாருக்கும் நன்றி . புங்கையர் பின்னாலை பூக்கண்டுகளை பாத்திட்டு ஏதோ பூக்கண்டாக்கும் எண்டு நினைச்சார் :icon_mrgreen: . அங்காலை ஒருத்தர் உயிரியல் பேரை தந்து போட்டு சின்னமோளம் சிலிக்கன் எண்டார் ( இது தான் வாயை குடுத்து பொல்லடி வாங்கிறது எண்டிறது )  :lol:  :D  .  இவர் எடுத்துக்குடுக்க நுணா வந்து பரிசை தட்டி போட்டார்  :)  .

  • தொடங்கியவர்

21 ஆனை நெருஞ்சி அல்லது பெரு நெருஞ்சி ( Pedalium murex )

 

nc08.jpg

 

 

இது பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் :  http://en.wikipedia.org/wiki/Pedalium_murex

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.