Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலை பற்றி  எல்லோ போட்டிருக்கிறீர்கள்

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply

வெற்றிலை பற்றி  எல்லோ போட்டிருக்கிறீர்கள்

 

போகவிட மாட்டியள் போலை இருக்கு.

 

 

"வன பரிபாலன தினைக்கள அதிகாரிகள் அலம்பல் வகை மரங்களான காயான், பன்னல், பாவட்டை, உளுமுந்தை ஆகிய மரங்களை வெட்டுவது காடழிப்பு என குற்றம் சுமத்துகின்றார்கள்."

 

இதில் வரும் அலம்பல் மரம் நமது வழக்கத்தில் இருக்கும் பாவட்டை.

  • கருத்துக்கள உறவுகள்

  கீழே தந்த லிங்க் கைக் கிளிக் பண்ண இதுதான் வருது தம்பி மல்லை :D

தமிழீழ பாவட்டை வேறு மரம். ஆனால் மூலிகை பாவட்டை என்பது ஆடாதோடையாகவே பதில் வருகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/printable/100815_betelnut.shtml

 

bbc_banner_simplified_page.gif

15 ஆகஸ்ட், 2010 - பிரசுர நேரம் 14:47 ஜிஎம்டி

 

வெற்றிலை விவசாயிகள் பாதிப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வெற்றிலை செய்கைக்கு பெயர் பெற்றுள்ள மட்டக்களப்பு களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிலை செய்கையாளர்கள் உள்நாட்டு யுத்தம் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்ட போதிலும் தொடர்ந்தும் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

வெற்றிலைக் கொடி படர விடப்படும் அலம்பல் வகை தடிகளை காட்டில் வெட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நியாய விலைக்கு சந்தைப்படுத்தல் வாய்பின்மை போன்ற காரணங்களினாலலேயே தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

தங்களுடைய மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரை தொழிலான வெற்றிலைச் செய்கை இப்போ தங்களது வாழ்வாதாரமாகி விட்டதாகக் கூறும் 40 வயதான அரசரத்தினம் மனோகரன், மாதமொன்றிற்கு அரசாங்க ஊழியர்கள் சம்பளம் பெறுவதைப் போன்று தங்களால் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபா வரை சம்பாதிக்கமுடியும் என்று கூறுகிறார்.

தங்கள் கிராமத்தைப் பொறுத்த வரை அரசாங்கத்தில் உத்தியோகம் வகித்தாலும் அவர் கூட வெற்றிலைத் தோட்டமொன்றின் உரிமையாளராகத்தான் இருப்பார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

வெற்றிலைச் செய்கையாளர்களைப் பொறுத்த வரை இப்போது எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சினை காடுகளுக்கு சென்று அலம்பல் வகை மரங்களை சட்ட ரீதியாக எடுத்து வர முடியாதா நிலையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்

வன பரிபாலன தினைக்கள அதிகாரிகள் அலம்பல் வகை மரங்களான காயான், பன்னல், பாவட்டை, உளுமுந்தை ஆகிய மரங்களை வெட்டுவது காடழிப்பு என குற்றம் சுமத்துகின்றார்கள்.

இது தொடர்பாக சிவில் அதிகாரிகளின் கவனத்திற்கு தங்களால் பல தடவைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் அவர்களால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் எதுவும் இது வரை நிறைவேற்றப்படவில்லை என தனது கவலையை வெளியிட்டார்.

தங்களுக்கு உரிய சந்தைப்படுத்தல் வாய்ப்பின்மையால் தங்களை விட இடைத் தரகர்களே கூடுதல் லாபம் பெறுவதாக சுட்டிக் காட்டும் 34 வயதான மதன் அரசாங்கம் நெல்லுக்கு உதத்தரவாத விலை நிர்ணயிப்பது போல் வெற்றிலைக்கும் நிர்ணயிக்க வேண்டும் என்கின்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாவட்டை, ஆடாதோடை இரண்டும்  ஒரு மரத்தின் இரு பெயர்கள். சுமே போட்ட படம்தான் நானும் அறிந்த பாவட்டை. தெல்லிப்பளை வீமன்காமத்துக்குப் பக்கத்தில் பளை என்றொரு சிறு கிராமம்  அங்கு  கதிரேசுப்  பரியாரி என்று இருந்தவர். அவர் அப்ப அதிகமான நோய்களுக்கு  ஆடாதோடை கிழக்கை போற வேர் எடுத்து அதன் சாற்றுடன் தேன் கலந்து என்று மருந்துகள் தருவார். அதனால் நானும் கன பாவட்டைகளைப் புலம்பெயர வைத்துள்ளேன்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

idh0.jpg

 

நெல்லி மரம்.

 

Phyllanthus+acidus+fruit+tree.JPG

  • தொடங்கியவர்

தமிழீழ பாவட்டை வேறு மரம். ஆனால் மூலிகை பாவட்டை என்பது ஆடாதோடையாகவே பதில் வருகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/printable/100815_betelnut.shtml

 

என்னப்பா ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தியளோ :lol: :lol: :D .

 

பாவட்டை, ஆடாதோடை இரண்டும்  ஒரு மரத்தின் இரு பெயர்கள். சுமே போட்ட படம்தான் நானும் அறிந்த பாவட்டை. தெல்லிப்பளை வீமன்காமத்துக்குப் பக்கத்தில் பளை என்றொரு சிறு கிராமம்  அங்கு  கதிரேசுப்  பரியாரி என்று இருந்தவர். அவர் அப்ப அதிகமான நோய்களுக்கு  ஆடாதோடை கிழக்கை போற வேர் எடுத்து அதன் சாற்றுடன் தேன் கலந்து என்று மருந்துகள் தருவார். அதனால் நானும் கன பாவட்டைகளைப் புலம்பெயர வைத்துள்ளேன்!! :D

சுவியர் எரிகிற நெருப்புக்குள் எண்ணையை வார்க்கிறார்.

 

ஒருக்கா வடிவா பார்த்து சொல்லுங்கோ.

 

இந்த ஆடாதோடையும் 

aulr.jpg

 

இந்த பாவட்டையும்

 

GBPIX_photo_110204_zps45fb0353.jpg

 

ஒருமரம் போல்த்தான் காணப்படுகிறதா?

   :unsure:  :rolleyes:  

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை இரு மரங்களும் ஒன்றல்ல ஆனால் நாளை வரை பொறுங்கள் சரியாகக் கண்டு பிடிக்கிறேன்.இணையத்தில் உள்ளது எல்லாமே சரி என்று எடுக்க முடியாது :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு சாப்பிடாத இலை ஆடுதொடா இலை.. :unsure: பாவட்டம் இலையையும் ஆடு சாப்பிடாது என்றால் இரண்டும் ஒன்றுதான்.. :D

  • தொடங்கியவர்

ஆடு சாப்பிடாத இலை ஆடுதொடா இலை.. :unsure: பாவட்டம் இலையையும் ஆடு சாப்பிடாது என்றால் இரண்டும் ஒன்றுதான்.. :D

 

சிங்கம் ஐயா.................. :lol: :lol: :icon_idea: . இங்கை..................... இங்கைதான் நிக்கிறியள் :D :D .

 

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை! நீங்கள்  கீல போட்ட பாவட்டை சரி.

மேல உள்ளது  எதோ காட்டு மரவள்ளிபோல் இருக்கு.சரியாய்த் தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

என் 70 வயதுப் பெரியம்மாவை கேட்டபோது ஆட்டாதோயும் பாவட்டையும் ஒன்று என்றார். இசை கூறியதுபோல் ஆடு தோடா இல்லை தான் அப்படி மருவியிருக்கலாம். நாளை ஊரிலும் கேட்டுவிட்டுத்தான் மல்லைக்கும் கோமகனுக்கும் இருக்கு :lol: 


இணையத்தில் தகவல்களைத் தவறாகப் போட்டுள்ளனர். எனது போட்டோ பக்கற்ரும் சண்டித்தனம் பண்ணுது

  • தொடங்கியவர்

என் 70 வயதுப் பெரியம்மாவை கேட்டபோது ஆட்டாதோயும் பாவட்டையும் ஒன்று என்றார். இசை கூறியதுபோல் ஆடு தோடா இல்லை தான் அப்படி மருவியிருக்கலாம். நாளை ஊரிலும் கேட்டுவிட்டுத்தான் மல்லைக்கும் கோமகனுக்கும் இருக்கு :lol:

இணையத்தில் தகவல்களைத் தவறாகப் போட்டுள்ளனர். எனது போட்டோ பக்கற்ரும் சண்டித்தனம் பண்ணுது

 

இதுக்கேனப்பா இணுவிலுக்கு மினைக்கெட்டு போன் பண்ணுவான்  :o  :o  ??? ஐயா மல்லை தாங்கேலாமல் கிடக்கு ராசா ....... :lol: :lol: :D

 

ஊரிலை இப்ப உந்த மரஞ்செடியளையெல்லாம் அங்கத்தைச் சனம் மறந்து போச்சுதுகள். அங்கை உள்ள சின்னனுகளை கிழுவந்தடியைப் பற்றிக்கேட்டா அப்பிடி எண்டா என்ன எண்டுதுகள். அம்மி ஆட்டுக்குழவியெல்லாம் பெரும்பாலான இடங்களிலை காணக்கிடைக்குதில்லை. ஊரிலை பாவட்டைக்கும் ஆடாதோடைக்கும் வித்தியாசமும் விளக்கமும் கேக்க வெளிக்கிட அங்கை உள்ளதுகள் அது என்னெண்டு கேக்குதுகளோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு 'தீர்வு' இருக்கத்தானே வேணும்!

 

இந்தப்படத்தில ஆடாதோடை மரம், பூவுடன் இருக்கின்றது!

 

உங்கள் 'பாவட்டைப்பூவை' ஆராவது போடுங்கள்!

 

அத்துடன் ஆடாதொடையின் தண்டுகளுள் 'மொழிகள்' போல முடிச்சுக்களும் இருக்கும்! 

 

இது பொதுவாகக் கறையான் புத்துக்களின் மேலேயே அதிகமாகக் காணப்படும்!

 

270486_459443190780801_1550747923_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு 'தீர்வு' இருக்கத்தானே வேணும்!

 

இந்தப்படத்தில ஆடாதோடை மரம், பூவுடன் இருக்கின்றது!

 

உங்கள் 'பாவட்டைப்பூவை' ஆராவது போடுங்கள்!

 

அத்துடன் ஆடாதொடையின் தண்டுகளுள் 'மொழிகள்' போல முடிச்சுக்களும் இருக்கும்! 

 

இது பொதுவாகக் கறையான் புத்துக்களின் மேலேயே அதிகமாகக் காணப்படும்!

 

270486_459443190780801_1550747923_n.jpg

 

ஐயோ புங்கை இதுதான் ஆடாதோடை என்னும் பாவட்டை. ஆனால் கோமகன்  பாவட்டை என்று போட்ட படம் இது இல்லை.

 

dce595_zps8ffebfa9.jpg

 

Malabar-Chestnut_zps8a4a9383.jpg

 

Chestnuts_roasted_zps476ac01f.jpg

 

220px-Roastedchestnuts_zps78795a77.jpg

 

images_zps248647cd.jpeg

 

index_zpsdef7cea1.jpeg

 

malabar-chestnut-4747_zps6cae83e0.jpeg

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்

நெல்லிமரம் அரைநெல்லி மரம் எண்டு சொல்லுறவை.

 

 

வணக்கம் பிள்ளையள் !!! எல்லாரும் கலகலப்பாய் மறுமொழி தந்திருக்கிறியள் . உங்களுக்கு நான் என்ன செய்யப் போறன் :unsure: :unsure: ??  இந்த முறை மயூரன் சரியாய் மறுமொழி தந்ததாலை அவருக்குதான் பரிசு கண்டியளோ :D :D .

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இந்தப் படத்தைப் போட்டுத்தான் பாவட்டை என்று எழுதியது. இதில் போட்ட படங்கள் அனைத்தையும் இணுவிலுக்கு மெயில் செய்து, மாமி இதைப் பார்த்து இந்த மரம் எங்கள் நாட்டில் இல்லை என்று கூறிவிட்டார். பிரடேனியாவில் படிக்கும் என் மருமகன் இதை பல்கலைக் கழகத்தில் காட்டி அவர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை சிங்களவர்கள் உட்பட. இணையத்தில் தவறாகப் பாவட்டை என்று போட்டுள்ளனர். :rolleyes:

  • தொடங்கியவர்

09 ஆடாதோடை ,பாவட்டை அல்லது வாசை  ( Malabar nut or Justicia adhatoda )

 

 

GBPIX_photo_110204_zps45fb0353.jpg

 

ஆடாதோடை ஒரு மருத்துவ மூலிகையாகும். இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது.

இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, வேர் என்பன மருத்துவ குணமிக்கவை இதன் சுவை கைப்புதன்மையாக இருக்கும் இதன் மருத்துவ குணங்களாக சளியை அகற்றும் நுண்புழு கொல்லியாக செயல்படும் சிறுநீரைப் பெருக்கும் வலியை நீக்கும் இந்த மரத்தின் முக்கிய வேதிப் பொருட்களாக வாசிசின் , வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின் , வைட்டமின் சி , கேலக்டோஸ் போன்றன காணப்படுகின்றன .இந்த மூலிகையினால்  இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றைகே கட்டுப் படுத்தலாம் .

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்

கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின

மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்

அகத்துநோய் போக்கு மறி.”

(அகத்தியர் குணவாகடம்)

இந்த மூலிகையைப் பின்வருமாறு பயன்படுத்தினால் ,

சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.

இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க

ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க

இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.

இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்

கொடுக்க இருமல் தீரும்.

இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.

இந்தச் செடியை பாவட்டை அல்லது வாசை என்றும் அழைப்பார்கள் .

 

http://en.wikipedia.org/wiki/Justicia_adhatoda

 

அனேகரின் வேண்டுகோளுக்கு அமைய பாவட்டை மரத்தில் மாற்றம் செய்துள்ளேன் . தவறுக்கு வருந்துகின்றேன் .

ஐயோ புங்கை இதுதான் ஆடாதோடை என்னும் பாவட்டை. ஆனால் கோமகன்  பாவட்டை என்று போட்ட படம் இது இல்லை.

 

dce595_zps8ffebfa9.jpg

 

 

 

Chestnuts_roasted_zps476ac01f.jpg

 

220px-Roastedchestnuts_zps78795a77.jpg

 

சுமோ அக்கா நான் நினைக்கிறன் இந்த மரம் தாயகத்தில் இல்லை. குறிப்பாக ஐரோப்பியநாடுகளில்தான் பெரும்பாண்மையாக காணப்படுகின்றது. நீங்கள் இணைத்திருக்கும் படங்களில் உள்ள விதைகளைப்பார்க்கும் போது சுவிசில் இதனை Marroni மரோனி என்று சொல்லுறவை. உந்த விதைக்கும் அந்த மரத்துக்கும் சம்பந்தமில்லை.

 

  • தொடங்கியவர்

12 ஆமணக்கு ,castor oil plant, Ricinus communis

 

gx3i.jpg

 

 

ஆமணக்கு ,வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.

விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.
எண்ணெய் வித்துக்கள் பலவகைகளில் காணப்படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.
ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.

பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
சிற்றாமணக்கு
பேராமணக்கு

செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.

ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும். இதனை ஒரு சிறிய மரம் என்றே கூறலாம். பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும். இதன் தண்டுப் பகுதியில் வெள்ளையான வண்ணத்தினைப் போன்ற மாவு படிந்து காணப்படுகின்றன.
இதன் இலைகள் நீண்ட காம்புகளையுடையதாக இருக்கின்றது. இந்தக் காம்பின் அடியில் சுரப்பியும், கை வடிவத்தில் பிளவுபட்ட மடலும், அதில் பல் விளிம்பு பற்களும் காணப்படுகின்றன. ஆண், பெண் வகைகளில் இரு விதமான மலர்கள் இதில் காணப்படுகின்றன. ஆண் மலரில் மகரந்தத்தூள்கள் பல கற்றைகளாகவும், பெண் மலரில் சூல்பை மூன்று அறைகளையும் கொண்டு இருக்கின்றது. இதன் கனிகள் கோள வடிவத்தில் வெடிகனியாகக் காணப்படும். முட்கள் நிறைந்து இருக்கும். இதன் விதைகள் முட்டை வடிவத்தில் அடர்ந்த சாம்பல் நிறக்கோடுகளையும், புள்ளிகளையும் கொண்டது. இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து பொருளாதாரப் பலன்களும் உள்ளன. இதில மலர்கள் ஆண்டு முழுவதிலும் பூக்கின்றன.

ஆமணக்குச் செடியிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயில் ரிஸினோலிக், ஐஸோரிஸினோலிக், ஸ்டியரிக், டைஹைட்ராக்ஸி ஸிடியரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கி இருக்கின்றன. இதன் விதைகளில் லைபேஸ், ரிசினைன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதன் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ரிசினைன் அல்கலாய்டுகள் இருக்கின்றன.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

 

http://en.wikipedia.org/wiki/Ricinus_communis

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமணக்கு மரம்


castor oil plant

ஆமணக்குச் செடி

  • கருத்துக்கள உறவுகள்

ஆமணக்கஞ்செடி

காட்டாமணக்குச் செடி.

 

காட்டமணக்கில்  தண்டு, இலைகளில், சிவப்பு, ஊதா நிறங்கள் கலந்திருக்கும். இலையை ஒடித்தால் பால் வழியும். நச்சுத்தன்மையானது.

 

இதை யாழ்ப்பாணத்தில் ஆமணக்கு என்றும், காட்டாமணக்கு என்றும் அறியப்பட்டிருக்கும். இதன் விதை எண்ணை வடிக்க பாவிப்பதில்லை. 

 

அது எப்படி வெள்ளரசுக்கு வெள்ளை சேர்த்தால் பிழை. நெல்லிக்கு அரை நெல்லி சேர்க்க வேண்டும்?


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.