Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் முறை    'மலை வேம்பு" !!! :D

 

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாலை மரம்

இதற்கு ஆவாரை  என்றும்பெயர் உண்டா..?.

விக்கி பீடியா ஆவரை என்கிறது. எனக்கு சிறுவனாக இருந்த போது சித்த வைத்தியர் ஆவரசு என்று சொல்லித்தந்திருந்தார். இதை ஒரு அம்மன் வருத்தம் வந்த போது குடிப்பதற்காக அறிமுகம் செய்த்திருந்தார்.  இதை வேறு பல சரக்குகளுடன் சேர்த்து அவித்து குடித்தால் வைரசை கொல்லும். இதே போலத்தான் கிழ்க்காய் நெல்லியும் வைரசை கொல்லும் தனமை உள்ளது. அதுவும் அம்மன் வருதங்களில் பயன் படுத்த கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

வண்டுகொல்லிக்கு என்ன ஆங்கிலப் பெயர்

வண்டுகொல்லிக்கு என்ன ஆங்கிலப் பெயர்

Bugs Killer or Flies Killer

 

Tamil Sri என்றும் அழைக்கலாம் ஆக்கும்.  :D

  • தொடங்கியவர்

விக்கி பீடியா ஆவரை என்கிறது. எனக்கு சிறுவனாக இருந்த போது சித்த வைத்தியர் ஆவரசு என்று சொல்லித்தந்திருந்தார். இதை ஒரு அம்மன் வருத்தம் வந்த போது குடிப்பதற்காக அறிமுகம் செய்த்திருந்தார்.  இதை வேறு பல சரக்குகளுடன் சேர்த்து அவித்து குடித்தால் வைரசை கொல்லும். இதே போலத்தான் கிழ்க்காய் நெல்லியும் வைரசை கொல்லும் தனமை உள்ளது. அதுவும் அம்மன் வருதங்களில் பயன் படுத்த கூடியது.

 

இதே விக்கியன்தான் நான் போட்ட ரண்டாவது படத்தையும் வண்டு கொல்லி Candle Bush Senna alata எண்டு சொல்லிறான்  :lol: :lol: :D :D .

இதே விக்கியன்தான் நான் போட்ட ரண்டாவது படத்தையும் வண்டு கொல்லி Candle Bush Senna alata எண்டு சொல்லிறான்  :lol: :lol: :D :D .

நாங்கள் எல்லா தாவரங்களையும் பற்றிதான் விவாதிக்க நேர்தது.என்னுடைய சிறு வயது அனுபவத்தில் அந்த இலைகளை கண்ட மாதிரி இருக்கு. அதனால் எனக்கு நான் நிலாமதி அக்காவின் பதில் தான் கூட சரி போல படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தாவரங்களைக் கூட எம்மால் அறுதியாகக் கூற முடியாமல் இருக்கு. விக்கிபீடியாவினது எல்லாம் சரியாகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு ஆவாரை  என்றும்பெயர் உண்டா..?.

 

ஆவரை எண்டு ஊரிலை சொல்லுவம்.

என்ரை வயதறிய ஆவரை  அரப்பு வைச்சு முழுக்குவம்.....தலைக்கு நல்ல குளிர்ச்சி தரும்........

ஆவரை இலையை உரலிலை இடிக்க சாந்துமாதிரி வரும்.இதைமாதிரி எத்தனையோ விக்கனமில்லாத அரப்புகள் சவுக்காரங்கள் இயற்கை எங்களுக்கு தந்திருக்கு! அந்தக்காலத்திலை சம்போ எல்லாம் இல்லை கண்டியளோ......

உடம்பிலை ஊத்தையுமில்லை...

நாத்தமுமில்லை....கமக்கட்டுக்கு அடிக்க சென்ருமில்லை....எல்லாம் இயற்கை வாசனைதிரவியங்கள் தான்  :D

ஆவரை எண்டு ஊரிலை சொல்லுவம்.

என்ரை வயதறிய ஆவரை  அரப்பு வைச்சு முழுக்குவம்.....தலைக்கு நல்ல குளிர்ச்சி தரும்........

ஆவரை இலையை உரலிலை இடிக்க சாந்துமாதிரி வரும்.இதைமாதிரி எத்தனையோ விக்கனமில்லாத அரப்புகள் சவுக்காரங்கள் இயற்கை எங்களுக்கு தந்திருக்கு! அந்தக்காலத்திலை சம்போ எல்லாம் இல்லை கண்டியளோ......

உடம்பிலை ஊத்தையுமில்லை...

நாத்தமுமில்லை....கமக்கட்டுக்கு அடிக்க சென்ருமில்லை....எல்லாம் இயற்கை வாசனைதிரவியங்கள் தான்  :D

 

இவர் ஆவரையும் அரப்பும் வைச்சு முழுகுவாராம்.. வயசு போன நேரத்தில மறதி வாறது இயக்கைதான்.. சீயாக்காயும் அரப்பும் வைச்சுத்தான் முழுகுறது…  :D  இந்த ஆவரை இலை இருக்கே.. அதையும் அரைச்சு முழுகுறதுதான்.. எப்ப தெரியுமோ.. சின்ன முத்து.. அக்கி.. கூவைக்கட்டு என்று அம்மை வருத்தம் வந்தால்.. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அதிகாலை.. பழங்கஞ்சி, தயிர், பாசிப்பயறு, ஆவாரை இலை.. இப்படி ஒவொன்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு தினசரி முழுக வார்ப்பார்கள்.  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் ஆவரையும் அரப்பும் வைச்சு முழுகுவாராம்.. வயசு போன நேரத்தில மறதி வாறது இயக்கைதான்.. சீயாக்காயும் அரப்பும் வைச்சுத்தான் முழுகுறது…  :D  இந்த ஆவரை இலை இருக்கே.. அதையும் அரைச்சு முழுகுறதுதான்.. எப்ப தெரியுமோ.. சின்ன முத்து.. அக்கி.. கூவைக்கட்டு என்று அம்மை வருத்தம் வந்தால்.. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அதிகாலை.. பழங்கஞ்சி, தயிர், பாசிப்பயறு, ஆவாரை இலை.. இப்படி ஒவொன்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு தினசரி முழுக வார்ப்பார்கள்.  :o

 

சோழியர்! நான் கிராமத்தவன். ஒருசில விடயங்களிலை என்னோடை வாலாட்டாதேங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீயாக்காய் உடம்புக்கு சரியான சூடு.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆவரம் இலை போலத்தான் கிடக்குது!

 

நெடுந்தீவில், சிறுவர்களாக, இதைக் கல்லால் குத்தித் துவையல் மாதிரிச் செய்து, கழியில் (மழைநீர், கடல் நீருடன் சேருமிடம்) குளித்திருக்கிறேன்! :o

 

இந்த இலைகளை இப்போதும் உபயோகிக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாரை ச் செடி! தேமல், மற்றும் கடிகள் போன்றவற்றுக்கு நல்ல  நிவாரனி!!

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :unsure: :unsure: .

  • தொடங்கியவர்

இதற்கு ஆவாரை  என்றும்பெயர் உண்டா..?.

 

நீங்கள் சொன்ன ஆவாரை இதுதானுங்கோ :D :D .

Ranawara_or_Avaram-_Senna_auriculata_at_

 

http://en.wikipedia.org/wiki/File:Ranawara_or_Avaram-_Senna_auriculata_at_Sindhrot_near_Vadodara,_Gujrat_Pix_044.jpg

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பாலை மரம்

 

வணக்கம் பிள்ளையள்!!! சுமேரியரும் நுணாவும் சரியா சொன்னியள் பாலை மரம் எண்டு . ஆனால் சுமேரியர் முதல் சொன்னதாலை இந்தமுறையும் பரிசு அவாக்குத்தான் போகுது . இந்தப் பாலைப் பழத்திலை மயங்காத ஆக்கள் இருக்க மாட்டினம் . அதுவும் செங்காயை திண்டு போட்டு தொண்டை கட்டி குரல் கேரத் திரியிற அனுபவம் இருக்கே சொல்லி வேலையில்லை  :lol:  :D  .  கிளிநொச்சியிலை  எங்கடை கமத்துக்கு முன்னாலை ஒரு பெரிய பாலை மரம் நிண்டுது . நான் போனால் நான் அதிலைதான் சீவியம் :D .

 

இது சுமேரியருக்கும் நுணாவுக்கும் என்ரை பரிசு

 

SAM_0102.jpg

  • தொடங்கியவர்

15 ஆல மரம் அல்லது வீழ் மரம் (  Indian Banyan , Ficus benghalensis )

 

2zyh.jpg

 

 

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே

 

- வெற்றிவேற்கை

ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட நம் கிராமங்களில் காணலாம்.

ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது.  மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது.    அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.

நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம்.  மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன.  இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும்,  பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது.  பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர்.  அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம்.  ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும்  எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.

இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.  இதன் இலை, பழம், பூ, விழுது, பால்  அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்


- தேரையன் வெண்பா

 

பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்

- அகத்தியர் குணபாடம்

உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.

வெள்ளை படுதல் குணமாக:

வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.  மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள்.  இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

எலும்பு முறிவுக்கு:

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு,  போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும்.  எலும்புகள் பலமாகும்.

வாய்ப்புண் நீங்க:

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும்.  இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

பல் பாதுகாப்பு
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி

என்பது நம் முன்னோர்களின் பழமொழி.  ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும்.  ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும்.  பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்.

 

http://en.wikipedia.org/wiki/Ficus_benghalensis

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே விழுதைக் காணோம் ? எப்படி  ஆழ மரமாகும்.

நாவல் மரமாய் இருக்குமோ ?

விழாதிருந்தால் ஆழமரமாகாதா. விழுதிருந்தால்தான் ஆலமரமா?

 

ஒருவளை இது the Indian Banyan,(Ficus benghalensis) இல்லாமல் Spanish Banyan Tree ஆக இருக்கலாமோ   :D

 

ஏழாவது படம், கோமகன் போட்டிருக்கும் படம்

 

 

https://www.google.com/search?q=Ficus+benghalensis&newwindow=1&safe=active&espv=210&es_sm=122&source=lnms&tbm=isch&sa=X&ei=5hWyUsGBNYujsQTyg4DAAg&ved=0CAkQ_AUoAQ&biw=1280&bih=898

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஐயா மல்லை .................முடியேலை ........... :lol::D  நல்லய்தானே போகுது............... :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய மரம் ஆலமரமானால் , நிலத்தைத்  தொடாவிட்டாலும் கையால் முறித்து பல்லுத் தேய்க்கும் அளவு விழுதுகள் தொங்கும். சரியா ! :)

  • கருத்துக்கள உறவுகள்

அரச மரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.