Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமர் இராஜதந்திர தவற்றை இழைத்துள்ளார்! இந்திய ஊடகங்கள் குற்றச்சாட்டு

Featured Replies

Manmohan-Singhsad.jpg

 

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தின் மூலம் இராஜதந்திர தவற்றை இழைத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

த இந்து, டெகன் ஹெரால்ட், த ரைம்ஸ் ஒப் இந்தியா போன்ற தமது செய்திகளில் இதுகுறித்த செய்தி ஆய்வுக் கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் எதிர்கால புவியியல் சார் இராஜதந்திர நகர்வுகளில் இது ஒரு புத்தசாலித்தனமான தீர்மானமாக இல்லை எனவும் குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் பிராந்தியத்தில் இந்தியான தனது ஆளுமையை மேலும் இழப்பதற்கு வழி ஏற்படலாம் எனவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், இந்தியப் பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளாமையானது அனைவராலும் அவதானிக்கப்படும் ஒரு முக்கிய விடயம் எனவும், இது இலங்கை விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பிரித்தானிய வெளிவிகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமருன், இலங்கையிடம் வலுவான கேள்விகளை முன்வைப்பார் என்றும் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://tamilworldtoday.com/home

போனாலும் ஏசும் வந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா.

யார் எப்படி என்ன ஏசினாலும் பிரதமர் மன்மோகன் சிங் எதுவுமே பேச மட்டார். மனுசன்னுன்ன தங்கமான ஆளுங்க அவர். 

இன்றைய தீர்மானம் "இந்தியாவின் எதிர்கால புவியியல் சார் இராஜதந்திர நகர்வுகளில் இது ஒரு புத்தசாலித்தனமான தீர்மானமாக" இல்லாமைக்கான அடிப்படைகாரணம் அன்று இந்திய தமிழர்கள் விடயத்தை புத்தசாலித்தனமான கையாளாமல் விட்டமை தான். இன்று அந்த நிலையை சீர்செய்ய இந்திய தாட்ககலிமாகவேனும் ராஜதந்திர பின்னடைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். இன்றும் கூட இந்திய தான் எந்த கோட்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்ற செய்தியை இலங்கைக்கு சரியாக சொலியிருக்கிறார்களா என்பது கேள்வி. இங்கு தான் இந்தியாவின் பகிஷ்கரிப்பும் கனடாவின் பகிஷ்கரிப்பும் வேறுபடுகின்றது. இந்திய தனது அணுகுமுறையில் தெளிவிண்மையும் கொள்கையில் இரட்டை முகமும் காட்டிகொண்டிருக்கும் வரையில் அவர்களின் ராஜதந்திரம் சீனாவுக்கு சிம்மாசோப்பனமாக கனவில் தான் வரமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிலங்கா அரசின் இனவெறியும் சட்டமும்:-

===================================

இன்றைய சிரிலங்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், 1956ஆம் ஆண்டு [The Sinhala Only Act (formally the Official Language Act No. 33 of 1956] - சிங்களம் மட்டுமே. அதன் பலன்கள்:-

1) 2009ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டோர் / காணாமல்போனோர் 1,47,679 (ஐ.நா அறிக்கைப்படி)

2) ஈழ மற்றும் இந்திய வம்ச தமிழர்கள் 2ஆம் நிலை மக்களாகவே இன்று வரை நடத்தப்படுகின்றனர்.

3)கடந்த 50 ஆண்டுகளில் சிரிலங்காவில் உயிரிழந்தோர் சுமார் 3 முதல் 5 இலட்சம் தமிழர்கள் மட்டும் இருக்கலாம்.

4) கடந்த 30 ஆண்டுகளில் ஆயுத வழி தமிழீழ சுதந்திரப் போராட்டம் இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளின் துணையுடன் இன்று அடக்கப் பட்டும், அதன் முக்கிய காரணிகள் இன்று வரை அப்படியேதான் இருக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டு மேலே குறிப்பிட்டுள்ள 'சிங்களம் மட்டுமே என்னும் 1956இன் சட்டம்.

5) சர்வதேசம், ஐ.நா உட்பட, சிரிலங்காவின் இந்த 'இனவெறிக் கொள்கையை' எவருமே கண்டிக்கவேயில்லை. சிரிலங்காவும் எந்த ஒரு வாய்ப்பையும் தன் தமிழ் குடிமக்களுக்கு வழங்கவேயில்லை.

6) இலங்கையின் இந்த இனவெறிக்கொள்கையை கண்டிக்காமல் 13 என்றும் 13+ என்றும் இந்தியா மற்றும் பல நாடுகள் பசப்புகின்றன. 13 களால் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது எதுவுமில்லை.

7) காமன்வெல்த் (CHOGM) - இலங்கையில் நடக்கவிருக்கிறது. இலங்கையின் 1956ஆம் ஆண்டு இனவெறிச் சட்டம் நீக்கப்படுமா? தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? இலங்கையின் இந்த இனவெறிச் சட்டம் நீக்கப்படாமல் - இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் (- பொதுநலவாய நாடுகளின்) கூட்டத்தில் பங்குபெறும் அத்தனை நாடுகளும் 'இலங்கையின் இனவெறிக் கொள்கையையும் அதன் சட்டங்களையும் ஆதரிக்கவே செய்கின்றன. இனவெறிக்கொள்கையை தென்னாப்பிரிக்கா கடைபிடித்தால் - தவறு........ இலங்கை கடைபிடித்தால் சரி..... இதுதான் சர்வதேச.....மற்றும் காமன்வெல்த் நாடுகளின் நிலைப்பாடென்றால், ......... சாமானிய மனிதனுக்கு கிடைக்கவேண்டிய எந்த உரிமையையும் கிடைக்காமல் போராடும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் ??????????????????

மனிதநேயம் எங்கு இருக்கிறது ? Human Rigts, Amnesty...UN where are you ???? ஐ.நா, காமென்வெல்த் - உங்களின் நடவடிகை என்ன?

பிரித்தானிய பிரதமர் கலந்து கொண்டு போர்க்குற்றம் தொடர்பான காத்திரமான கேள்விகளை எழுப்ப உள்ளார் என்ற செய்தியை கேட்ட வட இந்திய பண்டார பத்திரிகைகளுக்கு வயிற்றை கலக்க்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் இராஜதந்திர தவற்றை இழைத்துள்ளார்! 

 

 

சிறீலங்காவை   இழந்துள்ளார்

தமிழகத்தை காப்பாற்றியுள்ளார்

 

இனி

இவர்கள் முடிவெடுக்கணும்

எவர் தேவை என........

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரத் தவறானாலும் உள்ளூர்  அரசியலைச் சமாளிக்க ஓரளவு அரசியல் சரியைச்செய்துள்ளார்.

இந்தியப் பிரதமர் இராஜதந்திர தவற்றை இழைத்துள்ளார்! 

 

 

சிறீலங்காவை   இழந்துள்ளார்

தமிழகத்தை காப்பாற்றியுள்ளார்

 

இனி

இவர்கள் முடிவெடுக்கணும்

எவர் தேவை என........

 

 

 

அதெப்படி அப்பிடி உறுதியா சொல்றிங்க சிறிலங்காவை இழந்துள்ளார் தமிழகத்தை காப்பாற்றியுள்ளார் என்று?

இலங்கையை எப்போதுமே இந்தியா இழந்து விட்டுத்தா?

 

அல்லது தமிழகம்தான் ஆபத்தில் இருந்ததா காப்பாற்ற? 

 

 

 

****கடிசியாக****

யார் இந்த 

"இவர்கள் முடிவெடுக்கணும்

எவர் தேவை என........"

 

நாங்களா?

சிங்கலவர்களா?

ஹிந்தியர்களா?

டக்கிலசா? 

 

 விளங்கவில்லை  அதனால் தான் கேட்டேன்.. 

பிராந்தியத்தில் இந்தியான தனது ஆளுமையை மேலும் இழப்பதற்கு வழி ஏற்படலாம் எனவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்படி இந்த ஊடகங்கள் கூறுவதால் இந்தியா ஏற்கெனவே ஆளுமையை இழந்து விட்டது என்றுதான் பொருள். இனி போனால் என்ன? போகாவிட்டால் என்ன?

நீண்ட இழுபறியான மன்மோகன் சிங்கின் இலங்கை பயணம் ஒரு மன்னிப்புக் கடிதத்துடன் முடிக்கப்பட்டுவிட்டது.  அந்த யானையை விழுத்திய தமிழகம் தனது இலக்கு யானை அல்ல, அதன் பின்னால் தெரியும் மலை என்கிறது. அவர்களின் போராட்டம்  அண்மையில் ஓய சந்தர்ப்பம் ஒன்றும் இருப்பது போல் இப்போது தென்பட இல்லை.

 

இந்தியாவை இனவழிப்பு விசாரணை ஒன்றை, பொதுஜன வாக்கெடுப்பொன்றை  மனித உரிமைகள் சபை பிரேரணை மூலம் கொண்டுவரும் படி மாபெரும் போராட்டத்தை மார்ச்சில் அவர்கள் நடத்தி முடிய இந்தியா, சுப்பிரமணிய சாமியை அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் தூது அனுப்பி வைத்து அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையில் போர்க்குற்ற விசாரணையே இல்லாமல் செய்துவிட்டது. அந்த ஏமாற்றம் ஒருபக்கம் இருக்க, பொதுநலவாயத்தின் அடிப்படை  பட்டயத்தையே அவமதித்துவரும் இலங்கையை பொது நலவாயத்திலிருந்து இந்தியா நீக்கி வைக்க பிரேரணைகள் கொண்டுவர வேண்டும் என்று ஒரு வருடத்துக்கும் மேலாக தமிழகத்தார் போராடிவர, தான் அங்கு போக முடியாமல் தேர்தலில் அலுவலாக இருப்பதாக மகிந்தாவுக்கு கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார் மன்மோகன் சிங்.

 

பத்துவருடமாக மீனவர் பிரச்சனைகள் தமிழ் நாட்டில் தொடர்கிறது. 2007லில் இருந்து புதிப்பிக்கப்பட்ட தமிழ் ஈழப்பிரச்சனைகள். 2011 இல் இருத்து திரும்ப ஆரம்பித்த 13ம் திருத்தமும் அதன் அதிகாரங்களுக்குமான இந்தியாவின் கோரிக்கைகள் ஒன்றும் நிறை வேற்றப்படவில்லை. தேர்தல் நடந்த பின், தனது அதிகாரங்களுக்கு வடமாகாண சபை இன்னமும் இந்தியாவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், செல்வாவுடனான சிங்கள ஒப்பந்தங்களை விட மோசமாக மீறப்பட்டுவிட்டது. இவ்வளவும் தமிழ் நாட்டுடன் மட்டும் தொடர்புள்ளவை.  இலங்கையுடன் இந்திய வர்த்தக கம்பனிகள் செய்த வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கையால் மறுதலிக்கப்படுகின்றன. 2006ல் இருந்து சீன ஊடுருவல் இலங்கையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இவை தமிழ்நாடு இந்தியாவில் ஒரு பாகம் என்ற முறையில் எதிர்த்துக் குரல் கொடுக்கும் விடையங்கள். இவற்றில் ஒன்றைக்கூட காரணம் காட்டாமல் மன்மோகன் சிங் தேர்தலைதான் காரணம் காடியிருப்பதாக கடைசியாக வெளிவிடப்பட்ட வெளிவிவகார அமைச்சரின் குறிப்பு சொல்கிறது.

 

தமிழகத்தில் வைத்து காங்கிரஸ் பிரமுகர்கள், மந்திரிகளான சுதர்சன நாச்சியப்பன், நாராயணசாமி போன்றோர் கொடுத்த விளக்கங்களைவிட, விடையத்தை மேலும் சிக்கலாக்க, அல்லது முழு விடயத்தையும் குழப்பி யாரின் எந்தப் பேச்சிலுமே எந்தப் பொருள் இல்லாமல் செய்யவதற்காக, வெளிவிவகார அமைச்சின் மற்றய பாகங்கள் வேறு வெறு விளங்கங்களும் கொடுத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, எந்த இந்தியப் பிரதமரும் இரண்டு பொதுநலவாய தலைவர்கள் மகாநாட்டுக்கு மேல் செல்லவில்லை; ஆனால் மன்மோகன் சிங் ஏற்கனவே இரண்டுக்கு சென்றுவிட்டார் என்பது. தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பால் செல்லவில்லை என்பதை மூடி மறைக்க இவ்வளவு நடிப்பு.

 

ஒருமாததிற்கு முன்னர், தான் இலங்கை போவதா இல்லையா என்று எடுக்க போகும் முடிவில் தமிழகத்தின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று தோழர் தியாகுவின் உண்ணாவிரத போராட்ட நேரம்  மன் மோகன் சிங் கருணாநிதிக்கு ஒரு பகிரங்க தபால் எழுதியிருந்தார். அந்த நேரத்தில் "தேர்தல் வருவதால் தோழர் தியாகுவின் உண்ணவிரத போராட்டத்தில் உபயோகம் ஒன்றும் இல்லை" என்று மன்மோகன் சிங் கருணாநிதிக்கு எழுதவில்லையே.  இதில் தமிழகத்து எதிர்ப்பால் ஈடாடிப் போய்யிருந்த ஜெயந்தி நாரயணன், சிதம்பரம் போன்றோர் தாங்கள் பிரதமரிடம் போகக் கூடாது என்று கோரிக்கைகள் விட்டதாக பகிரங்க மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால் கப்பல்துறை அமைச்சர் வாசனோ இதற்கு எல்லாம் மேலே சென்று, மத்தியை தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க வைக்க முடியாவிட்டால் தமிழகத்து காங்கிரசை பிரித்து தான் தனிய போகவிருப்பத்தாகவும் ஒரு கதை அடிப்பட்டது. அப்பட்டமாக சனலுக்கு சனலாக வட இந்திய TV சனெல்கள், தங்கள் தமிழ் விரோத குரோதத்ததை காட்ட “தமிழகம் மத்தியின் கொள்கைகளை நிர்ணயிக்கிறது, எப்படி மானிலம் ஒன்று பிரதமர் இலங்கை போவதை தீர்மானித்தது” என்று இரவு பகலாக திட்டித்தீர்த்தார்கள். இவற்றை எல்லாம் மூடி மறைத்து இலங்கை தாஜா பண்ண ஒருதபால் எழுதியிருக்கிறது இந்திய அரசு. வெளியே இவ்வளவு திருகு தாளங்களும் நடந்திருப்பதால், மத்திய அரசு இலங்கைக்கு எழுதியிருக்க கூடிய தபால் தாஜாவை மட்டும் தான் கொண்டிருந்த்தா அல்லது 2009ல் நடந்தது போல இன்னொரு திருட்டு தனத்துக்கு சேர்ந்தியங்க கோரிக்கை விடப்பட்டதா என்பது சந்தேக்கப்பட வேண்டியிருக்கிறது.

 

வழமையில் அமைதியான பிரதமர் சிங் " தான் மௌனி" என்ற நிலையில் இருந்து மாறி இந்த விடையத்தில்  "முழு ஊமையாகவே" மாறிவிட்டார். அவர் வாய்திறந்து எதுவும் சொல்லவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் “நாம் சொன்னால் இலங்கை கேட்குதில்லையே, நாமதற்கு என்ன செய்ய முடியும்” என்று கேட்டவர், அதனால் இனி எதையும் இலங்கைக்கு சொல்லப் போகவே விரும்பவில்லை போலிருக்கு. மகிந்த தான் பிரதமரை சந்திக்க ஒரு நேரம் மன்மோகன் சிங்கிடம் கேட்டு கோரிக்கை வைத்தும் இவருக்கும், மகிந்தவிற்கும் இடையில் ஐ.நா.வில் வைத்து ஒரு சந்திப்பை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம், இந்தியா பொதுநலவாயத்துக்கு போக கூடாது என்று தமிழ் நாடு மிரட்டுவதால் என்று கூறினால் அது ஒரு உண்மையான விளக்கமாகுமா? ஐ.நா.வில் மகிந்தாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க கூடாது என்றும் தமிழகத்தில் எதிர்ப்புக்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தனவா? உண்மையில் இன்றைய உறவு நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நூறு பிரச்சனைகள் என்றாகிவிட்டது. இவற்றை அடித்து மிரட்டி அரசியல் பேசும் மகிந்தாவுடன், வழமையில் அமைதியாக பேசும் மன்மோகன் சிங் நேருக்கு நேராகப் பேசி முடிக்க பயப்படுகிறார். இதனாலேயே அவர் மகிந்தாவுக்கு ஐ.நாவில் சந்திக்க இடம்கொடுக்கவில்லை, பொதுநலவாயத்திலும் போய் சந்திக்க விரும்பவில்லை. 

 

மேலும் இந்த முடிவை கூட அவர் தான் தனது விருப்பத்தின் பெயரில் எடுக்கவில்லை. இது "காங்கிரசின் மேலிடம்" என்பதால் மட்டும் எடுக்கப்பட்டது. பிரதமர் சிங்கின் இடம் பஞ்சவாடி மட்டுமே. காங்கிரசின் மேலிடம் பஞ்சவாடியில் இல்லை. ஆனால் அவர் தனக்கு வரக்கூடிய சிக்கல்களை தவிர்க்க, காங்கிரசின் மேலிடம் மட்டும் தனியாக அந்த முடிவை எடுத்து அவரிடம் அறிவித்த போது அவரும் மகிழ்சியுடன் ஏற்றுக்கொண்டடார். உண்மையான ஒரு ஆராச்சி ஒன்று செய்து பார்த்தால் பிரதமரை இலங்கை போகாமல் தடுத்தது தமிழ் நாடல்ல; காங்கிரசின் மேலிடம் மட்டும்தான் என்பது புரியும்.

 

காங்கிரசின் மேலிடம் இதுவரையில் அடித்த கொள்ளைகளில் இருந்து தப்ப அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டியது இப்போது மிக மிக  அவசியமாக மாறியிருக்கிறது. இதில் கருணாநிதியின் கூட்டையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக சிதம்பரம் போன்றோர் கருணாநிதியிடம் பேசிவிட்டு காங்கிரசின் மேலிடத்தம்மாவுக்கு கொடுத்த ஆலோசனைதான் பொதுநலவாயம் போகாமல் நழுவுவது என்று எழுத்த முடிவு. அதனால்த்தான் மேலிடத்தம்மா மன்மோகன் சிங்கிடம் இலங்கை போக வேண்டாம் என்று கூறியது. அதாவது மன்மோகன் சிங்கை தேர்தலுக்காக இலங்கை போகவிடாமல் தடுத்தது காங்கிரஸ் மேலிடமே அல்லாமல் மன்மோகன் சிங் டெல்கித் தேர்தாலால் அல்ல இலங்கை போகாமல் விட்டது. ஒன்பது அம்ச கோரிக்கைகளுடன் உண்ணவிரதமிருந்த தோழர் தியாகுவை எழுப்பிய காங்கிரஸ் இறுதியில் அவரின் ஒன்பது அம்சத்தில் எதையும் செய்ததாக இல்லாமல் இருப்பதற்காவே இலங்கையை தட்டிக்கேட்கும் ஒரு நிபந்தனையும் இணைக்காமல், போகாமல் தவிர்க்க அழுத்தமாக இருந்த காரணங்கள் ஒன்றையும் சுட்டாமல் தபால் ஒன்றை எழுதியது காங்கிரசின் மேலிடம்.

இந்த நிலையில், தமிழ் நாடு தாங்கள் கேட்டவை,  இந்தியா பாகிஸ்த்தானை, தென்ஆபிரிக்காவை நிறுத்தியது போல இலங்கையை பொதுநலவாயத்தால் நிறுத்துவிக்க வேண்டும் என்பது அல்லாமல் சிங்கின் தேர்தல் சாட்டால் பொதுநலவாயத்தை தவிர்ப்பதல்ல எங்கிறது. எனவே இந்த இரண்டாவது ஏமாற்றத்தால் தமிழ் நாட்டில் பொது நலவாயம் முடிவடைந்தாலும் போராட்டங்கள் முடிவடையாது. இது வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகள், மத்திய தேர்தல் என்றெல்லாம் தொடர போகிறது.

 

மானிலம் கல்வியால், பொருளாதாரத்தால் அண்ணா, பெரியார் காலத்தை விட எங்கோ வந்துவிட்டது. தேவைகள் புதிதாக எழுந்துவிட்டது. ஈழ பிரச்சனையும், மாநிலத்தை அடக்கி வைத்துகொண்டு கொள்ளை அடிக்கும் காங்கிரசின், திராவிட கட்சிகளின் கூட்டுச் சதி  அரசியலும், மானிலத்தில் பாரிய அரசியல் விளிப்பை கொண்டுவந்திருக்கின்றன. இன்று மாநிலத்தில் போராட்டங்களில் இறங்கியிருப்பவர்கள், தமிழீழ ஆதரவு மாணவர்கள் அல்ல, தமிழக அரசியல் வாதிகள் அல்ல, திராவிடர்கள் அல்ல, தாலித்துக்கள் அல்ல இந்துக்கள் அல்ல முஸ்லீமகள் அல்ல, கிறிஸ்தவர்கள் அல்ல, பெண்கள் அல்ல, அரவாணிகள் அல்ல, தொழிலாளர்கள் அல்ல மத்திய வகுப்பல்ல, படித்தவர்கள் அல்ல, பாமரர்கள் அல்ல. முழு மானிலம் இப்போது தீயை சுவாசிக்கிறது. இந்திய அரசியலில் அது தனக்கு உரிமையான இடத்தை கேட்கிறது.

 

இதை சிலர் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் என்கிறார்கள். சிலர் ஈழப்பிரச்சனை எங்கிறார்கள். மலையாள மீனவர்களை சுட்ட இத்தலியர்களை கைது செய்யும் இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுக்காக்கவில்லை; அதுதான் என்கிறார்கள். சிலர் திராவிட கட்சிகளின் சுயநல அரசியல் மாநிலத்தை அலுத்து போக வைத்துவிட்டது அதுதான் எங்கிறார்கள். ஆனால் மாநிலத்தில் தோன்றியிருக்கும் அராபிய வசந்தத்தை குடும்ப, கொள்ளை அரசியலில் இறகியிருக்கும் மத்தி காண முடியாமல் கோமாவில் இருக்கிறது. தமிழ் நாட்டின் அழுத்தத்தால் கைவிட்ட பயணத்துக்கான விளக்கக் கடிதத்தில் தமிழ் நாட்டின் கோரிக்கைகள் ஒன்றைத்தானும் மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்கட்டவில்லை. மந்தை தனமாக தமிழ் மக்களின் உணர்வுகளை மித்தித்துக்கொண்டு, அவர்களின் ஆசைகளை, அபிலாசைகளை புறம் தள்ளி வெறும் மன்னிப்புக்கடிதம் மட்டும் அனுப்பியிருக்கிறது மத்தி. அதாவது தான் இலங்கையிடம் தோற்று அதன் காலடியில் விழுந்தாலும் தமிழ் நாட்டிடமிருந்து தனக்கு வந்த அழுத்ததை ஏற்று தமிழர்களின் உணர்வை மதித்து ஒரு முறையான தபால் எழுதுவதை தனக்கு கௌரவ குறைவாக பார்க்கிறது மத்திய அரசு. இதை இனி மானிலம் ஏற்காது. இதனால் அங்கு போராட்டம் குறுகிய காலத்திற்குள் நிறுத்த முடியாதவாறு தொடரப் போகிறது.

Edited by மல்லையூரான்

prasad-kariyawasam.jpg

 

யுத்தக் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி இந்தியா மாநாட்டைப் புறக்கணிக்கவில்லை - பிரசாத் காரியவசம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏன் சிறிலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை என்பதற்கான உண்மையான காரணத்தை புரிந்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அழுத்தத்தினால் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளாலும், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டுமே பிரதமர் மன்மோகன் சிங் இந்த விஜயத்தை ரத்து செய்தார்.

இதனை தவிர, சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களுக்காகவோ, மனித உரிமைகளின் நிலவரங்களுக்காகவோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற நீடித்த உறவில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/28223/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

1- அதெப்படி அப்பிடி உறுதியா சொல்றிங்க சிறிலங்காவை இழந்துள்ளார் தமிழகத்தை காப்பாற்றியுள்ளார் என்று?

இலங்கையை எப்போதுமே இந்தியா இழந்து விட்டுத்தா?

 

அல்லது தமிழகம்தான் ஆபத்தில் இருந்ததா காப்பாற்ற? 

 

 

 

****கடிசியாக****

2-யார் இந்த 

"இவர்கள் முடிவெடுக்கணும்

எவர் தேவை என........"

 

நாங்களா?

சிங்கலவர்களா?

ஹிந்தியர்களா?

டக்கிலசா? 

 

 விளங்கவில்லை  அதனால் தான் கேட்டேன்.. 

1- தமிழகம் தொடர்ந்து சொல்லி  வருகிறது

    சிங்களம் நட்பு நாடு என்றால்

    தமிழகம் என்ன என்று???

   அந்தவகையில்  இந்த தீர்மானம் மூலம் தமிழகம் பக்கம் நிற்கின்றீர்கள் என்றே  எழுதினேன்

   அது உண்மையா  நடிப்பா  என்று காலம் தான் சொல்லணும்.

 

2- தமிழகம் தவிர்ந்த மாநிலங்கள்

   மன்கோகன்சிங்  சிறீலங்காவைப்பகைத்து தவறு செய்துவிட்டார் என முழங்கினால்

  அவர்கள் தமிழகத்தை கை கழுவ முடிவு எடுத்துவிட்டார்களா?

என்பதே கேள்வியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விட்டதா, காரியவாசகம் சார்..? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.