Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுமாறனை திட்டமிட்டு 27 ஆம் திகதி வரை அதாவது மாவீரர் தினம் வரை உள்ளே போட்டிருகின்றார்கள்

அவருடைய வயது உடல்நிலை ஆகியவற்றைக்கூட பொருட்படுத்தாதது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

Posted

நெடுமாறனை திட்டமிட்டு 27 ஆம் திகதி வரை அதாவது மாவீரர் தினம் வரை உள்ளே போட்டிருகின்றார்கள்

அவருடைய வயது உடல்நிலை ஆகியவற்றைக்கூட பொருட்படுத்தாதது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

பாஸ் உலகத்திலேயே கொடிய அரக்கர்கள் இந்திய மத்தியும் ,சிறிலங்காவும் ..............அதற்கு வக்காளத்தும் ,யாழ்ராவும் பாட பல அரக்க தேவதைகள் ...........இங்கே உலாவருகிறார்கள் ..............ஆடை இன்றி :D ..............இவர்கள் வருவது எமக்கு மட்டும்தான் தெரிகிறது .அவர்களுக்கு தெரியவில்லையே என்று கவலைப்படுவதும் நாங்களே ........

Posted

உடனே கையெழுத்திடுங்கள் = பரப்புங்கள்
நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்...

 

Dr.J.Jayalalitha , Tamilnadu Cheif Minister : Please stop the destruction of Mullivaikkal Monument http://www.change.org/petitions/dr-j-jayalalitha-tamilnadu-cheif-minister-please-stop-the-destruction-of-mullivaikkal-monument

 

(facebook)

Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுமாறனை திட்டமிட்டு 27 ஆம் திகதி வரை அதாவது மாவீரர் தினம் வரை உள்ளே போட்டிருகின்றார்கள்

அவருடைய வயது உடல்நிலை ஆகியவற்றைக்கூட பொருட்படுத்தாதது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

ஒரு தவறும் செய்யாத அந்த வயது போன ஜயாவுக்கு இரண்டு கிழமை ஜெயில்....இந்தியா தான் உண்மையான ஜனநாயக்க நாடு...... 

Posted

1456804_656474827708068_1750114564_n.jpg

 

தோழர்களே நேற்று கொளத்தூர் மணி அண்ணன் கைது இன்று நெடுமாறன் அய்யா கைது, நாளை வைகோ ஐயாவும், சீமான் அண்ணனும் கைது செய்யப்படலாம்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கான ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே, நம் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதையெல்லாம் நாம் பிறகு பேசி தீர்த்துக்கொள்வோம், இல்லை பிறகு மோதிக்கொள்வோம்,

ஆனால் இன்றைய உடனடித்தேவை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய கட்சிகளை துடைத்தெறிவது தான்.

எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும், சீமான் அண்ணன் அவர் ஏற்கனவே மதிமுக தனித்து நின்றால் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லியுள்ளது போல் இந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை குறைந்தபட்சம் இந்த அணி மூன்றாவது இடமாவது பெறும், இதே கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ அது நாமாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்காக இந்த தேர்தல் கூட்டணி அமைய வேண்டும்.

 

(facebook)

Posted


உடனே கையெழுத்திடுங்கள் = பரப்புங்கள்
நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்...

 

Dr.J.Jayalalitha , Tamilnadu Cheif Minister : Please stop the destruction of Mullivaikkal Monument http://www.change.org/petitions/dr-j-jayalalitha-tamilnadu-cheif-minister-please-stop-the-destruction-of-mullivaikkal-monument

 

தமிழ்நாட்டு முதலவர் தமிழர் தானே அவருக்கு ஏன் ஆங்கிலத்தில் கடிதம் தமிழில் எழுதி போடுங்கோ நானும் கையெழுத்து போடுறன் துளசி .

Posted

தமிழ்நாட்டு முதலவர் தமிழர் தானே அவருக்கு ஏன் ஆங்கிலத்தில் கடிதம் தமிழில் எழுதி போடுங்கோ நானும் கையெழுத்து போடுறன் துளசி .

 

இந்த petition ஐ தயார் செய்தவர் Kanata, Canada இல் உள்ளதாக இருக்கிறது.

 

எனவே கனேடிய நண்பர்களுக்கும் விளங்கினால் அவர்களும் கையொப்பமிடுவார்கள் என நினைத்தும் இருக்கலாம். எனவே கையொப்பமிடுங்கள். :D

 

Posted

அவசர செய்தி...!!!

முள்ளிவாய்க்கால் முற்றத்தை முழுவதுமாக இடிக்க ஜெயலலிதா அரசு முடிவுசெய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஐயா வைகோ, அண்ணன் சீமான் உட்பட 700 பேரை காவல்துறை அடைத்து வைத்துள்ளது. அவர்கள் வெளியே சென்றால் பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி விடுவார்கள் என்ற அச்சத்தால் அவர்கள் அனைவரையும் காவல்துறை கண்காணித்து வருகிறது.

தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக கோவிலை அய்யா பழநெடுமாறன் கட்டி கொடுத்ததோடு இல்லாமல் அதற்காக இன்று சிறையிலும் இருக்கிறார்.

தமிழ் உணர்வாளர்களே போராட்டத்தை உடனடியாக தொடருங்கள்.

இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

(facebook)

Posted

 

விடுதலைப்புலிகள் கட்டமைப்புடன் ஆட்சி நடத்தியபோது எதிக்கருத்து வைத்தவர்கள்......
 
2009 ல் நடந்த இன அழிப்பிற்கு பின்னரும் தங்களை மாற்றவில்லை.....இன்றும் மாறவில்லை.

 

 

ஏனென்றால் அவர்கள் உண்மையில் எதிர்த்தது விடுதலைப்புலிகளை அல்ல. தமிழனம் கெளரவமாக வாழ்வதை அவர்கள் எதிர்த்து எதிர் கருத்து வைத்தார்கள். விடுதலை புலிகளை எதிர்த்திருந்தால் புலிகளின் வீழ்ச்சியுடன் ஓய்ந்திருப்பார்கள். இன்னமும் தமிழன் வாழ்வதால் அவர்களும் ஓயவில்லை. தாங்கள் ஓய்ந்து விட்டால் கெளரவமான அரசியல் தீர்வை தமிழர்கள் அடைந்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்களே்.

Posted

சீமான் சவாரி செய்கிறார் என்ற போது வருந்தாத நீங்கள் அசைலம் என்றதும் ஓடி வந்து ஒப்பாரி வைக்கிற நிலையில்.. ஒற்றுமை.. புரிந்துணர்வு எப்படி வரும். சீமான் அவரின் குடும்பத்திற்காகவா உழைக்கிறார். தன் இனம் என்று தானே பாடுபடுறார். அதை சவாரி என்று வரையறுத்தால்.. தாயக மக்களின் சாவிலும் வலியிலும் கிடைக்கும்.. அசைலத்தை என்னென்று வரையறுப்பது என்று தான் கேட்டோம். அந்த நியாயத்திற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..???! இல்ல  ஒற்றுமை.. ஒருமைப்பாடு.. தான் உண்மையான விருப்பம் என்றால்.. எல்லோரினதும் செயற்பாடுகளை எல்லாரும் நீதி நியாயம் நேர்மை.. இருந்தால் மதிக்கனும்.. அதைவிட்டிட்டு.. ஒற்றுமையை எப்படி உருவாக்கிறது..???! 

 

கருத்துக்குள் கற்பனையை திணிக்கக் கூடாது!!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவர் இடிப்புக்கு கூடி அழும் தலைவர்கள் எல்லாம் ஏன் கூட்டணியை உருவாக்கலாம் தானே அது என்ன தேர்தல் வந்தா ஆளுக்கு ஒரு திசையில் போற பழக்கம் .!

காசு ...பணம் ...துட்டு ..மணி மணி ..!

 

இந்திய தமிழக அரசியல் முறைமை தெரியாவிட்டால் ...
தமிழில் விக்கிபிடீயாவில் இருக்கு பொய் வாசியுங்கள் 
 
தமிழர்களின் உரிமையும் உணர்வும் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணிலேயே சிதைக்க பட்டிருக்கு. மற்றவர்கள் அதை பற்றி பேசுகிறார்கள் 
இந்த்த திரியில் என்றாலும் உங்கள் புசத்தலையும் புராணங்களையும் புரந்தல்ல்லி வையுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்காமல் பாருங்கோ காது குளிருது.... :D அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்கமல் பாருங்கோ காது குறிருது.... :D அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......

 

5:20´வது நிமிடத்தில், அந்த உறவு ஒரு சில நிமிடங்களே... பேசினாலும்... அவ்வளவும் முத்துக்கள்.

விஜய தரணியை... வர்ணிக்க, இதனை விட அழகிய வார்த்தைகள்.... தமிழில் இல்லை.

விஜய தரணி... ரொம்ப ரென்சனாகிட்டாங்க... :D  :lol:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5:20´வது நிமிடத்தில், அந்த உறவு ஒரு சில நிமிடங்களே... பேசினாலும்... அவ்வளவும் முத்துக்கள்.

விஜய தரணியை... வர்ணிக்க, இதனை விட அழகிய வார்த்தைகள்.... தமிழில் இல்லை.

விஜய தரணி... ரொம்ப ரென்சனாகிட்டாங்க... :D  :lol:  :rolleyes:

 

விஜய தரணி அவாவின் கட்ச்சி ஆக்களே அவாவை மிடியா முன்னால் வைச்சு அசிங்கப் படுத்தினவை...உண்மை சொல்ல அவாக்கு பத்தி கொண்டு வந்து விட்டது ஹா ஹா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்இடிப்பின் போது நிகழ்ந்த காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான எனக்கும் என்னோடு தாக்குதலுக்கு உள்ளான தம்பி கரிகாலனுக்கும் ஆறுதலை நல்கிய அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள்.

நான் இப்போது நலமாக இருக்கிறேன். அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 85 பேர் தடுப்புக்காவலில் 14 நாட்கள் தண்டனையில் திருச்சி சிறைச்சாலையில் உள்ளனர். அவர்களை பிணையில் எடுப்பது பற்றியும் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றிய முன்னெடுப்பிலும் இருக்கிறோம்.

ஜெயாவின் துரோக நிலையை விரைவில் விளக்கமாக எழுதுகிறேன்...

தனக்கு தானே ஆப்பு வைத்துகொண்ட ஜெயாவிற்கு கோடான கோடி நன்றிகள்...

 

செந்தில்நாதன் சேகுவேரா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக்குள் கற்பனையை திணிக்கக் கூடாது!!  :icon_idea:

 

அப்படின்னா நீங்க எல்லாருமே கற்பனையா தான் பேசிக்கிட்டு இருக்கீங்களா. சாரி.. அதில கருத்து வைச்சது தப்புத் தான்.  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்காமல் பாருங்கோ காது குளிருது.... :D அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......

என்ன நீதி.. சட்டம்.. சாதாரண ஒரு நடிகை.. இத்தனை கோடி சொத்துக்களை சுருட்டினது.. சட்டத்துக்குள்ளாகவா..??! கொடநாடு.. சென்னை.. போயஸ்காடின்னு.. நிலங்களை அபகரிச்சிருப்பது எல்லாம் சட்டத்துக்குள்ளாவா..??! ஏன் தலைவர் ராஜீவ் காந்திக்கு நினைவு சின்னம் உள்ள சிறீபெரும் புத்தூர் காணி ஆரோடு.. அவரோட பாட்டினதா.. தாத்தானடாதா..????!  எங்க இருக்கு நீதி.. விபச்சாரம் இல்லை என்று சொல்லிக்கிற சட்டம் இருக்கிற இடத்தில தானே விபச்சாரிகளை வைச்சிருக்கீங்க.. தமிழ்நாட்டில. யாரு அதை செய்யுறாங்க. சினிமாக்காரங்க தானே. செல்வி போட்டுக்கிற.. ஜெயலலிதா சுத்தமான பொண்ணு.. உந்த விஜயதாரணி சுத்தமான பொண்ணுன்னு.. மெடிக்கல் சாட்டிப்பிக்கட் காட்டுங்க பார்க்கலாம். பச்சைத் தமிழன்.. பச்சையாச் சொன்னாலும்.. அது தான் உண்மை.. நீதி..! அதை பெரிய புத்தகம் புத்தகமா படிச்ச நீதிபதி கூட இப்படி நேர சொல்ல முடியாது. அந்தளவுக்கு தான் சட்டம் உள்ளது. சட்டம் நீதி நியாயம் பார்க்காது.. கெளரவம்.. பார்க்கும். ஆனால்.. அவன் தமிழன் அப்பட்டாமாகவே சொல்லிட்டான்..!!! அவன் பொதுமகன். அவன் உண்மையைச் சொன்ன பொதுமகன். அவனை தண்டிக்க கூடாது.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5.20 தில் நானும் கேட்டேன் அந்தக்கருத்தில் எந்தத் தவறையும் நான் அறியவில்லை. தேவ அடியார்கள் என்றால் அவர்கள் தேவர்களின் அருளைப் பெற்றவர்கள் அது பெருமைதானே. தேவடியார்களுக்கு பிறப்பதற்கு எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்தப்பெண் விசயதாரனிக்கு ஏன் இத்தனை கோபம் வரவேண்டும்???.

Posted

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிக்கை

அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இலட்சக்ணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார்கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.

தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரÞ தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது.

இந்தியா செய்த பண உதவியால், மேலும் ஆறு அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து, இராஜபக்சே அரசு, ஆயுதங்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பெற்று, தமிழர்களை அழிக்கப் பயன்படுத்தியது. இதனால், விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் கொடுந் துயரமாக, முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், 1,47,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியாதான் காரணம் என்று; இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்றும் மகிந்த ராஜபக்சே திமிரோடு சொன்னான்.

விடுதலைப்புலிகள் கட்டி எழுப்பிய மாவீரர் துயிலகங்கள், போரில் மடிந்த புலிகளின் கல்லறைகள் அனைத்தையும் இராஜபக்சே இடித்துத் தரை மட்டமாக்கினான். நெஞ்சை நடுங்கச் செய்யும் இந்தப் பேரழிவை, உலகத்துக்கு உணர்த்தவும், தாய்த் தமிழகத்தில் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்த தியாகிகளை நினைñட்டவும், தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அண்ணா தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள் ளுபடி செய்யப்பட்டது.

இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகÞட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன.

2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர். கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர்.

அப்போது முற்றத்தின் குடிலில் படுத்து இருந்த பழ.நெடுமாறன், ‘எதற்காக இடிக்கின்றீர்கள்?’ என்று காவல்துறையைக் கேட்டபோது, ‘வருவாய்த் துறை அதிகாரிகள்தான் இடிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்’ என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்தனர்.

தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறன் அவர்களையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

2011 ஆகÞட் மாதம் பூங்காவுக்குக் கொடுத்த அனுமதியை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரத்துச் செய்துவிட்டதாக, மோசடியாக இப்பொழுது ஒரு கோப்பை அரசு தயாரித்து உள்ளது. அப்படிச் செய்து இருந்தால், அதை பழ. நெடுமாறனுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும். முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது.

இந்த அராஜகத்தைக் கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீÞ தடைகளை உடைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, ‘இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன். பழ. நெடுமாறனையும், உணர்வாளர்களையும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புகிறார்கள் என்று அறிந்தபிறகு, அங்கிருந்து புறப்பட்டேன்.

ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. Running with hare; hunting with the hound.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 சனிக்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கு ஏற்க அழைக்கிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
14.11.2013 மறுமலர்ச்சி தி.மு.க.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1471278_10153456022100198_861710575_n.jp


விகடன் இப்படித் திட்டியுள்ளதே. இதுக்கு...???! 


1425632_1422144541336328_1529909764_n.jp


சீமான்..... சாதித்தவற்றுள் இந்த உணர்வூட்டல் தான் முக்கியமானது. அதனை புகலிடத்தில் உள்ள எம்மவர் கூட செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர் விடுதலை கழகம்- நேற்று நடத்திய போராட்டத்தின ஒரு பகுதி...முற்றத்தை இடித்தமைக்கு அரசை எதிர்த்து அம்பத்தூரில் சாலை மறியல் நடைபெற்றது..

 

 

dcji.jpg

 
 
Posted

முள்ளிவாய்க்காலோடு கருணாநிதி கருவறுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு ஜெயலலிதாவை வேரறுப்போம்.

-மாணவர்கள் சபதம்.

Joe Britto
(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கூழாவடி, உருத்திரபுரம்(!?)           ==========================     21.3.2006  
    • செத்து…செத்து…விளையாட இது என்ன தமிழ் நகைச்சுவை படமா?🤣 இது கட்சி யாப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்தது. 1. இராஜினாமா செய்ததன் பின் - அதை மத்திய குழு அல்லது வேறு எவரும் ஏற்பபின்பே அது செல்லும் - என யாப்பு கூறின், அவ்வாறு நடக்க முன் மாவை ராஜைனாமாவை வாபஸ் பெறலாம். 2. அப்படி இல்லாமல் ராஜினாமா செய்யாலே - அந்த நொடி முதல் அது செல்லும் என யாப்பு கூறின். வாபஸ் வாங்க முடியாது. 3. நடக்கும் இழுபறியை பார்த்தால் - யாப்பு இதில் எதுவும் கூறாமல் silent ஆக உள்ளது போல் உள்ளது. அதுதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம். செல்வா, அமிர், பெரிய பெரிய சட்டத் தூண்கள், சுமன் எல்லாரினதும் யாப்பு எழுதும் இலட்சணம் இதுதான்🤣.
    • விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது. 2000 ஆம் ஆண்டு காலம் மல்லாவி மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதி உயர்தரக் கல்விக்காக எம்மை வரவேற்ற போது, கண்ணாடி போட்ட அந்த மெலிந்த உருவத்தை ஆங்கில ஆசிரியையாக நான் சந்தித்தேன். நான் தான் உங்களுடைய ஆங்கில ஆசிரியை எனது பெயர் திருமதி. பாலசுந்தரம் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அன்று முதல், எமது ஆங்கில அறிவின் மேம்படுத்தலுக்காக உழைத்த அவரை இன்றுவரை எம்மால் மறக்க முடியாததைப் போலவே எம் தமிழீழ தேசமும் மறக்க முடியாத ஒரு மாவீரத்தை பெற்ற வீரத்தாயாக அவர் இருப்பதும் நியம். எமக்கெல்லாம் ஆங்கில ஆசானாக ஒன்றிவிட்ட எம் ஆசிரியை வினோதரன் என்ற மருத்துவப் போராளியைப் பெற்றெடுத்த வீரத்தாய் என்ற உன்னதம் மிக்க மதிப்புக்குரியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. யார் இந்த வினோதரன்? தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கத்தில் நிச்சயமாக எழுதப்பட வேண்டிய ஒரு பக்கம் மேஜர் வினோதரன். 14.10.1977 ஆம் ஆண்டு, திரு/ திருமதி பாலசுந்தரம் பவளரட்னம் தம்பதியரின் வீர மகனாக வந்துதித்த, ஆண் மகவு தான் அஜந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட வினோதன். தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாக்கம் பெற்ற அப்பொழுதுகளில் வீரப்புதல்வனாக வந்த தனது மகனுக்கு எமது ஆசான் பல் கலைகளையும், நெறி பிறளாத நேரிய எண்ணங்களையும் ஊட்டியது மட்டுமல்லாது, தமிழீழத் தாகத்தையும் ஊட்டி வளர்த்திருந்தார். அதனாலோ என்னவோ தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்று இருந்த இரண்டாம் ஈழப்போரின் காலம் ஒன்றில் ஒன்றில் அஜந்தன் வினோதரனாக மாறிப் போனார். அன்றைய சிங்கள அரச தலைவராக இருந்த சந்திரிக்கா அம்மையாரும், அவரது மாமனான ரத்வத்தையும் இணைந்து செய்த கொடூரமான இனவழிப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இருந்தது சூரியக்கதிர் நடவடிக்கை. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அதனூடாக தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழீழத் தேசியத் தலைவனையும் முடக்கி விட முடியும் என்ற நம்பிக்கையோடு எடுக்கப்பட்ட சூரியக்கதிர் நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தான் புலியாகப் போனார் வினோதரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையையும், அதன் உண்மை நிலைப்பாட்டையும், அதற்குத்தான் எந்த நிலையில் பங்கு தர முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் உணர்ந்தவராக 1995. 07. 26 தமிழீழ விடுதலைப்புலிகளின் பாசறை புகுந்தார் வினோதரன். அடிப்படைப் பயிற்சிகளை முடித்த போராளிகளை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அல்லது படையணிகளுக்கும் பணிக்காக பிரித்தெடுக்கப்படும் பொழுது வினோதரன் விசேட வேவுப்பிரிவுப் பொறுப்பாளர் மூத்த தளபதி ஜெயம் அவர்களால் பொறுப்பெடுக்கப் படுகிறார். அவரது ஆங்கில மொழிப்புலமை மற்றும் கல்வி கற்றலில் இருந்த ஈடுபாடு அதோடு பாடசாலைக் கல்விக் காலத்தில் அவரது பள்ளியின் சேவைக் கழகத்தில் இருந்து செயலாற்றிய உச்ச சேவைகள் என்பவை படையணிக்குரிய மருத்துவத் தேவையை நிறைவேற்றக் கூடிய மருத்துவப் போராளியாக பொறுப்பாளருக்கு இனங்காட்டியது. அதனால் விசேட வேவுப் பிரிவுக்குரிய மருத்துவப் போராளியாக அவரை உருவாகுமாறு பொறுப்பாளர் கொடுத்த பணிப்புக்கமைய அப் பணியைச் சீராக செய்து முடிக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் மருத்துவர்களான மேஜர் சுசில் , வாமன், தணிகை போன்ற தமிழீழ மருதுவக்கல்லூரியின் மருத்துவர்களாலும் மூத்த மருத்துவர்களாலும் தென்மராச்சிக் கோட்டத்தின் மட்டுவில் பகுதியில் இயங்கிய அடிப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கற்கையை முடித்து, ஒரு மருத்துவப் போராளியாக உருவாகி இருந்த வினோதரன் விசேட வேவுப்பிரிவின் மருத்துவப் போராளியாக பணிசெய்யத் தொடங்கியது மட்டுமல்லாது, குறுகிய நாட்களிலையே அப்படையணியின் மருத்துவப் பொறுப்பாளனாகவும் தன்னை வளர்த்துக் கொள்கிறார். மற்றைய படையணிகளைப் போல் இருக்க முடியாது விசேட வேவுப் பிரிவுப் போராளிகளின் பணிகள். ஏனெனில் ஒரு சண்டைக்கான தயார்ப்படுத்தல்கள் நடக்கும் பொழுது அல்லது எதிரியின் நகர்வுகளைக் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது, அதற்கான வேவுத்தகவல்களைத் திரட்டுவதற்காக எதிரியின் முகாமுக்குள் உள்நுழையும் வேவுப்புலிகள் சிறு சிறு அணிகளாகவே உள்நுழைவார்கள். படையணியின் போராளிகள் தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருடைய பணியை மற்றவர் அறிந்திருக்காது இருப்பினும் அல்லது இரகசியம் காக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஏனையவர்களின் தகவல்கள் பகிரப்படாது இருப்பினும் அனைவரும் பணிக்காக நிலையெடுத்திருக்கும் அத்தனை முகாம்களுக்கும் தனி ஒருவராக வினோதரன் சுற்றிச் சுழல வேண்டியதும் அவர்களுக்கான மருத்துவக்காப்பை உடனுடனையே வழங்க வேண்டியதுமான பெரும் பொறுப்பைச் சுமந்திருந்தார். வேவுக்காக எதிரியின் பகுதிக்குள் நுழையும் போராளிகளின் உடல்நலத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உள்நுழையும் போராளிகள், எதிரிகளின் பலமான எதிர்ப்புக்களையும் தாண்டி பனி, மழை, வெய்யில் என்று அனைத்து இயற்கையின் ஆபத்துக்களையும் சந்தித்தே வருவார்கள். இவ்வியற்கையின் நியதிகள் அவர்களுக்கு காச்சல், இருமல், சளி போன்ற சாதாரண நோய்களை உருவாக்கி விடும். இந்த நோய்கள் எதிரியின் பிரதேசத்துக்குள் உள்நுழையும் போது, போராளிகளுக்கு ஆபத்தை தரக்கூடியதான நோய்களாக மாறிவிடும். அதனால் அனைத்துப் போராளிகளுக்கும் தடுப்பு மருந்துகள் தொடக்கம் அவர்களுக்கான அடிப்படை மருத்துவ ஆலோசனைகள், மற்றும் அடிப்படை பருத்துவப் பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கண்காணித்துக் கொடுக்க வேண்டிய பெரும் கடப்பாடு வினோதரனுக்கு இருந்தது. வேவு நடவடிக்கைக்காக உள்நுழையும் அணியினருக்கு பெரும்பாலும் முட்கள் கிழித்தும் தொட்டாவாடி செடியின் கீறல்களும் விசப்பூச்சிகள் , பாம்பு போன்றவற்றினால் ஏற்படும் விசத்தாக்குதல்களும் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த நிலையில், தனக்கு ஏற்படும் சந்தேகங்களை போராளி மருத்துவர்களாக இருந்தவர்களிடம் சென்று தீர்த்துக் கொள்வதும், ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாள முடியும் என்பதற்கான தீர்வுகளைப் பெறுவதும் வினோதரனின் வழக்கம். அவ்வாறு வினோதரனுக்கு மருத்துவ ரீதியாக எழுந்த பிரச்சனைகளைக்கான தீர்வுகளை வழங்கும் போது கற்பூரத்தில் தீப் பற்றுவதைப் போல விடயங்களை கற்றுக் கொள்ளும் திறன் இருந்தது. அதனால் வேவுப் பிரிவுப் போராளிகள் மருத்துவக் காப்பை நிறைவாக பெற்றார்கள். மருத்துவப் போராளியாக முன்பு வினோதரனின் அணி செய்த வேவு நடவடிக்கை ஒன்றில் தலைப்பகுதியில் விழுப்புண் அடைந்த வினோதரன் அக் காயத்தைப் பற்றி சிறிதும் அக்கறை படுபவர் அல்ல. தன்னை விட தன் போராளிகளின் மருத்துவத் தேவையை உணர்ந்து பணியாற்றிய ஒரு வேங்கைப் புலி. அவரது தாய் தன் மாணவர்களை எவ்வாறு அரவணைத்துக் கற்பித்துக் கொண்டாரோ அதை விட அதிகமான தாய்மை உணர்வோடு போராளிகளுக்கான மருத்துவராக வினோதரன் இயங்கினார். அவரது பணி தமிழீழத்தின் அநேகமான களங்கள் எங்கும் விரிந்தே இருந்தது. தென் தமிழீழம் தொட்டு வட தமிழீழம் வரை அவரது பணி போராளிகளுக்கு கிடைத்தே இருந்தது. அவரும் சளைக்காது போராளிகளுக்காக மருத்துவக்காப்பை சரியாக கொடுத்தார். இவ்வாறு விசேட வேவுப் போராளிகளை தன் சேய் போல பார்த்துப் பார்த்து மருத்துவப்பணியாற்றிய வினோதரனை, அங்கிருந்து விடுகை கொடுத்து லெப்கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி தனது மருத்துவப் பொறுப்பாளராக உள்வாங்கிக் கொள்கிறது. அப்போதைய தளபதியாக இருந்த கேணல் பானு, வினோதரனின் செயற்பாடுகளை கண்டு நெகிழ்ந்தது நியம். எதாவது தவறுகள் செய்து அதை தளபதி சுட்டிக் காட்டும் பொழுது தவறை உணர்ந்து அழுதுவிடும் வினோதரன் அடுத்த தடவை அத்தவறை செய்யவும் மாட்டார் பணியில் இன்னும் அதீத கவனத்துடனும் சிரத்தையுடனும் செயற்படுவார். குட்டிசிறி மோட்டார் படையணியின் போராளிகளுக்கு மருத்துவப் பொறுப்பாளனாக கடமையாற்றிய அதே நேரம் தானும் சண்டைக்குப் போகவேண்டும் என்று அடிக்கடி தளபதியை நச்சரிக்கும் அவரை அவரது மருத்துப் பணியின் முக்கியத்துவத்தையும் மருத்துவப் போராளிகளின் இருப்பின் தேவையையும் உணர்த்துவதன் மூலம் சாந்தமடைய வைப்பார் தளபதி. இந்த நிலையில் அரச பெண் பணியாளர் ஒருவருடன் தனது மணவாழ்வைத் தொடங்கிய வினோதரன் அந்த மகிழ்நிலையின் பெறுபேறாக ஆண் மகவு ஒன்றின் தந்தை ஆகிய மகிழ்வான பொழுதுகளையும் தன்னகத்தே கொண்டார். ஆனாலும் அக்காலத்தில் மூத்த தளபதி கேணல் பானு அவர்கள், தென் தமிழீழத்துக்கு பணி ஒன்றுக்காக புறப்பட்ட போது அவரின் அணிக்கான மருத்துவப் பொறுப்பாளனாகவும், தென்தமிழீழத்தில் நிலை கொண்டருந்த மோட்டார்ப் படையணியின் மருத்துவனாகவும் மட்டக்களப்பை நோக்கி புறப்பட்டார். பிறந்து சில மாதங்களே ஆகிய நிலையில் தன் குழந்தையையும், மனைவியையும் விட்டுப் பிரிந்து மட்டக்களப்புச் சென்றவருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன் உறவுகளின் நிலை அடுத்தநிலையில் தான் இருந்திருக்கின்றது என்பது வெளிப்படையானது. அங்கே போராளிகளுக்கான மருத்துவத் தேவைகளை மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமங்களுக்கும் பயணப்படும் போதெல்லாம் அம் மக்களின் மருத்துவத் தேவைகளையும் நிறைவேற்றுவதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்துக் கொண்டார். மக்கள் படும் துன்பங்களை பார்த்து சகிக்க முடியாது வாய் விட்டுக் கதறி அழும் வினோதரனால் அம்மக்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி, வருந்துகின்ற தனது மனதுக்கு மருந்திட்டார். அடிக்கடி தளபதியிடம், “எங்கட மக்களுக்கு மருத்துவப் பணி செய்யக்கூடியதாக நான் இன்னும் படிக்க வேணும். தியாகதீபம் திலீபன் மருத்துவமனையை இங்கே நிறுவி அதன் மருத்துவராக நான் பணியாற்ற வேண்டும்” என்று கூறிக் கொண்டிருக்கும் வினோதரனைத் தளபதி பானு அவர்கள் சில நாள்கள் நகர்வின் பின், வன்னிக்குப் புறப்படுமாறு பணிக்கிறார். மட்டக்களப்பில் பணியாற்றிக் பொண்டிருந்த வினோதரன் வடதமிழீழத்துக்கு தியாகதீபம் திலீபன் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவப் போராளிகளின் கற்கைநெறிக்காக மட்டக்களப்பிலிருந்து வந்து சேர்கிறார். மக்களுடன் பணியாற்றும் மருத்துவப் போராளிகள் இவர்கள் என்பதால், அக் கற்கைநெறியும் அதற்கேற்பவே மூத்த மருத்துவர்களால் திட்டமிடப்பட்டிருந்தது. தனித்து தனிநபர் மருத்துவம் மட்டுமன்றி, விசக்கடி மருத்துவம், மகப்பேற்று மருத்துவம் என்று பலவற்றை கற்றார் வினோதரன். அது மட்டுமல்லாது, மருத்துவ அரசியலையும் கற்றுத் தேர்ந்தார். எனக்குத் தெரிய உலகளவில் நோக்கினால் தமிழீழ அரசு மட்டுமே மருத்துவர்கள் கட்டாயமாக அரசியல் தெளிவுள்ளவர்களாக மக்களுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற விடயத்தில் நம்பிக்கையாக இருந்தது. ஏனெனில், இவர்கள் மக்களோடு இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்களாக இருந்ததால், மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் இணைந்து நிற்பதற்குத் தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். அதுவும் தியாக தீபம் திலீபன் மருத்துவப் போராளிகள் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் பணியாற்றுவதால் அநேகமாக பாமரமக்களோடு பழக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். அதனால், மருத்துவ அறிவை மட்டும் வைத்து மக்களிடம் சென்றால் அவர்கள் போராளிகளை வேற்றாளர்களாக பார்க்கும் சந்தர்ப்பம் இருப்பதோடு, மக்களுடன் நல்லுறவைப் பேண முடியாதவர்களாகவும் இருக்கும். அதனால் மக்களோடு நெருங்கி இருப்பதற்கு சகல ஆளுமைகளும் உள்ளவர்களாக அவர்கள் உருவாக வேண்டி இருந்தது. உதாரணமாக, சிறு பிள்ளைகள் கல்வியில் சந்தேகம் கேட்டாலோ, பெரியவர்களுக்கு குடும்பங்களில் சிறு சிறு பிணக்குகள் வந்தாலோ அவற்றுக்கான தீர்வுகளை இவர்களே வழங்க வேண்டி இருந்தது. அவ்வாறு வழங்கும் போது அவர்களுக்கு போராளி மருத்துவர்கள் மீது நம்பிக்கையும், நெருக்கமும் உண்டாகும் என்பதில் எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. அதனால் முழுமையாக மக்களுக்கான மருத்துவர்களாக அவர்கள் தயாராக வேண்டி இருந்தது. அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவாகி போராளிகள் பணிகளுக்காக அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில் இயங்கிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட போது, வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசத்தின் நைனாமடுப் பகுதியில் இயங்கிய மருத்துவமனையை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். அங்கே தன் மருத்துவசேவையை அம்மக்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாது, அம்மக்களின் நல்ல சகோதரனாக, பிள்ளையாக, ஆசிரியனாக மருத்துவனாக என்று அனைத்தாயும் மாறிப்போய் கைராசிக்காற பரியாரியார் என்ற மக்களின் நல்ல மதிப்பை பெற்றார். இவ்வாறாக இயங்கிய காலத்தில் தான் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு வந்த ஆழிப்பேரலை சுனாமி என்று பெயரெடுத்து எங்கள் தமிழீழக்கடலெங்கும் சீறி சீற்றமெடுத்துத் தாண்டவமாடி ஓய்ந்த போது, கடற்கரையில் சிதைந்து போய்க்கிடந்த அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிறுவவும், அவர்களுக்கு ஏற்பட்ட உடல்காயங்களில் இருந்து மீண்டெழவும், நோய்த்தடுப்புக்களை வழங்கி அவர்களிடம் பரவி பேரழிவுத் தரவல்ல தொற்றுநோய்களில் இருந்து காக்கவும், இந்தப் பேரவலத்தில் இருந்து மீழ முடியாது தவித்துக் கொண்டிருந்த அம்மக்களின் மனங்களை ஆற்றுகைப்படுத்தவும் என்று இரவையும், பகலையும் தனதாக்கி ஓய்வின்றி உழைத்தார் வினோதரன். வடமராச்சி கிழக்கின் கரையோரக் கிராமங்களான ஆழியவளை, வத்திராயன், மருதங்கேணி, தொடங்கி முல்லைத்தீவின் கரையோரக்கிராமங்கள் வரை இருந்த இடைத்தங்கல் முகாம்கள் அனைத்திலும் தனது பணியை செய்து மக்களைக் காத்த வினோதரனுக்கு மீண்டும் தியாகதீபம் திலீபன் மருத்துவமனை ஒன்றில் பணி காத்திருந்தது. மன்னார் மாவட்டத்தின் மிக பின்தங்கிய கிராமம் என்று கருதக்கூடிய வகையில் இருந்த முள்ளிக்குளம் கிராமத்தில் தியாகதீபம் மருத்துவமனையில் சேவை மையம் ஒன்று நிறுவப்பட்டு அதன் சிறப்பு மருத்துவராக வினோதரன் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இக்கிராமம் அடிக்கடி இராணுவத்தாக்குதல்களால் இன்னல்களை அனுபவிக்கும் கிராமம். அடிக்கடி இராணுவம் முன்னேறி நிலத்தை பிடிக்க முயலும் பிரதேசம். அடிப்படை மருத்துவ வசதிகள் எதுவும் அற்ற கிராமம். அங்கே பெரும்பாலும் எழும் பிரச்சனைகள் மகப்பேறு, விசக்கடி, யானைத் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் தான். ஆனால் அங்கே இவற்றுக்கு சரியான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. ஆனால் அம்மக்களில் ஒரு வயதான தாய் அங்கே மருத்துவிச்சியாக இருந்து அவர்களுக்கான மகப்பேற்றை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை மீறிய சில பிரச்சனைகள் எழுந்து மக்களை இன்னல்களுக்குட்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது வினோதரன் தான் கற்றுத் தேர்ந்த மருத்துவ அறிவை அம்மக்களுக்காக பயன்படுத்தினார். அம் மக்களோடு மக்களாக பயணித்தார். தன்னால் ஒரு நோயாளருக்கு எழும் பிரச்சனைகளுக்காக தீர்வுகாண இயலாத சூழ்நிலை எழுந்தால், உடனடியாக அருகில் இயங்கி வந்த அரச மருத்துவமனைக்கு அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைத்தார். இப்போது அம் மக்களுக்கு இன்னல்கள் வந்ததில்லை. சாவு வீதமும் நோயாளர் வீதமும் குறைந்திருந்தது. வினோதரன் அங்கே பணியேற்ற பின்பு அம்மக்களுக்கான மருத்துவ வசதிகளில் பெரும் இடர்கள் வந்ததில்லை. அவர்களுக்கான மருத்துவ தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டன. இரவு பகல் எதுவுமற்று அம்மக்களுக்கு அம்மக்களோடு ஒருவனாக நின்று பணியாற்றினார் என் ஆசிரியை பெற்றெடுத்த வீரமகன். ஆனாலும் அப்பணி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. வெடி மருந்துக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். அக் கூற்றை மெய்ப்பிப்பது போல 06.03.2007 அன்று ஒரு வெடிபொருள் தவறுதலாக வெடித்தது. அவ் வெடிபொருளுக்கு எங்களின் வினோதரன் ஒரு மருத்துவன் என்பது தெரியவே இல்லை. அவன் இம்மக்களுக்கு இன்னும் பல காலங்கள் தேவை என்பது தெரியவே இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் இம்மருத்துவரின் பணி முக்கியம் என்பது தெரியவே இல்லை. அதனால அவ்வெடிபொருள் தவறுதலாக வெடித்து வினோதரனின் உயிரைப் பறித்தெடுக்கிறது. தான் நேசித்த மக்களுக்கு தனது மருத்துவப் பணியால் சேவை வழங்க வேண்டும், மருத்துவதேவை உள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை இல்லாது ஓர் உயிர் கூட வீணாக பறிக்கப்படக் கூடாதென்று கனவு கண்ட மருத்துவப் போராளி தவறுதலாக நடந்த வெடிவிபத்தில் தன் உயிரை ஆகுதி ஆக்கி தமிழீழ மண்ணின் மார்புக்குள் விதையாக தூங்குகின்றான். இருப்பினும் பெரியமடுப் பகுதியில் இயங்கிய மன்னார் களமுனைக்குரிய இராணுவ மருத்துவமனை “மேஜர் வினோதரன் நினைவு இராணுவ மருத்துவமனை” என்று நிமிர்ந்து நின்றது. வினோதரன் வீழ்ந்து போகவில்லை விதையாக மண்ணில் விதைக்கப்பட்டார். இறுதி வரை தான் நேசித்த மருத்துவ சேவை ஊடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை நிறைத்து நின்றார். விதையாகியும் முளையாகி மருத்துவமனையாக நிலைத்திருந்தார்… எழுதியது: இ.இ.கவிமகன் நாள்.27.11.2021 தகவல்: மருத்துவர் தணிகை, மருத்துவப்போராளி வண்ணன் மற்றும் மேஜர் வினோதரனின் தங்கை.
    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனை  ஐயங்குளம், துணுக்காய்  2006  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.