Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டிற்கு நிதியுதவி செய்யும் ஐரோப்பிய தமிழ் நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் அரசு

அந்த மக்களுக்கு கிடைக்கும் சோற்றை  தட்டிவிடும் எந்த காரியங்களிலும் நான்  ஈடுபடமாட்டேன்.

தொலைத்தொடர்பு  வழியாக

பொருளாதார வழியாக

கல்வி  சார்ந்து தாயக  மக்கள் வளரணும் முதலில்.

உண்மையைச் சொல்ல வேண்டும் விசுகர்... உங்களுடையை சொந்த வியாபாரத்தில் லைக்காவும் முக்கிய பங்கு வகிக்குது என்பது உண்மைதானே. மற்றவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுக்கவும் கோடாலிக் காம்பு பட்டம் கொடுக்கவும் விழுந்தடிக்கும் விசுகு ஐயா நீங்கள் லைக்காவுக்காக வக்காளத்து வாங்குவது சொந்த வியாபார விடயம் என்பதால் தானே?. தேவையில்லாமல் உங்கள் சொந்த விடயங்களை இழுக்கிறன் என்று கோபிக்க வேண்டாம், உங்கள் பதிலில் உங்கள் சொந்த விடயங்களையும் எழுதியிருக்கின்றீர்கள் என்றபடியாலதான் நானும் கேட்கின்றன்.

  • Replies 69
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்கு, பாலியல் தொழிலை நிறுத்த வேண்டும் என்று போராடினால், சபேசனின் எதிர்வாதம் என்னவாக இருக்கும்? :rolleyes:

"இருக்கும் கோடிக்கணக்கான பாலியல் தொழிலாளர்களுக்கு முதல்ல வேலை குடுங்க.." :D

பங்காளி! இந்த மூளையை ஒரு "சிப்" இல போட்டு ஒரே ஒரு நாளைக்கு எனக்குக் கடன் தர முடியுமா? :D

உண்மையைச் சொல்ல வேண்டும் விசுகர்... உங்களுடையை சொந்த வியாபாரத்தில் லைக்காவும் முக்கிய பங்கு வகிக்குது என்பது உண்மைதானே. மற்றவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுக்கவும் கோடாலிக் காம்பு பட்டம் கொடுக்கவும் விழுந்தடிக்கும் விசுகு ஐயா நீங்கள் லைக்காவுக்காக வக்காளத்து வாங்குவது சொந்த வியாபார விடயம் என்பதால் தானே?. தேவையில்லாமல் உங்கள் சொந்த விடயங்களை இழுக்கிறன் என்று கோபிக்க வேண்டாம், உங்கள் பதிலில் உங்கள் சொந்த விடயங்களையும் எழுதியிருக்கின்றீர்கள் என்றபடியாலதான் நானும் கேட்கின்றன்.

விசுகர், என்ன இது? உண்மையா? எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு என்பது உண்மை போல இருக்கே?

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளி! இந்த மூளையை ஒரு "சிப்" இல போட்டு ஒரே ஒரு நாளைக்கு எனக்குக் கடன் தர முடியுமா? :D

பிறகு வாற ஆடு மாடெல்லாம் பாய் கடைக்கு போகும்.. பரவாயில்லையா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க ஒன்றும் எட்ட முடியாத  உயரத்துக்கு  போகேல்ல. 

மொபைல் ஓட்டம்  கவின்டாலும் என்டு தான் பல இடங்களில் வியாபாரங்களை திறக்கினம்.

அதுதான் லக்காபிளைட்.  அது சிரிலன்கன் ஏர்லன்ஸ் ன் உற்ற நண்பன் என்டு தான் விளம்பரம் கொடிக்கினம்.  அந்த பிளைட் ஒன்டுக்கு தான் ஏஜென்டா  கொம்பனி நடாத்துகினம்.

இதெல்லாம் நாட்டில பாதிக்க பட்ட மக்களுக்கு செய்கிற சேவை தானுங்கோ.

இவர்களது ட்ராவல் வெப்சைட் LycaFly-யில் கொழும்புக்கு லண்டனில் இருந்து போக மலிவான எயார்லைன் ஸ்ரீலங்கன் அல்ல.

கட்விக்கில் இருந்து டேர்க்கிஷ் எயார்லைன்ஸ் டிக்கட்டை மிக மலிவாக விற்கிறார்கள். ஹீத்ரோவில் இருந்து ஓமான் எயார். அதற்கு அடுத்தபடியாகதான் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ். அதன் அர்த்தம் என்னவென்றால், இவர்களிடம் ஸ்ரீலங்கனின் கொன்சொலிடேஷன் பிரிஃபேர்ட் ரேட் இல்லை.

LycaFly, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு மட்டும் ஏஜன்ட் என்று நேசனுக்கு யார் சொன்னார்களோ, தெரியவில்லை.

Edited by sabesan36

1-  நீங்கள் பலருடனும் லண்டனில் தொடர்பில்  உள்ளவர்.  உங்களது கருத்தை  ஏற்கின்றேன். அதேநேரம் அவர்களுடன் பேசுங்கள் என்றும் கேட்கின்றேன்.

எனது எதிர்ப்பை  வைக்கும் போது அதை நிச்சயம் ஒரு குழுமமாக வைப்பேன்.  அதற்கு ஆதாரங்கள் போதாது.

2- இவர்களது அரசியல் நடவடிக்கைகள் பற்றியே  எனது எதிர்ப்பு.  மக்கள்   சேவை  பற்றியல்ல.

இந்த கருத்தை வாசிக்கும் போது முரளிதரனின் அரசியலுக்கு தான் எதிர்ப்பு, அவருக்கோ அவரது விளையாட்டுக்கோ அல்ல என்று சொல்வது போல் உள்ளது. :)

இதற்கு மேல் என்ன ஆதாரம் தேவை? :unsure: சட்டு புட்டென்று lyca க்கு உங்கள் எதிர்ப்பை வையுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்ல வேண்டும் விசுகர்... உங்களுடையை சொந்த வியாபாரத்தில் லைக்காவும் முக்கிய பங்கு வகிக்குது என்பது உண்மைதானே. மற்றவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுக்கவும் கோடாலிக் காம்பு பட்டம் கொடுக்கவும் விழுந்தடிக்கும் விசுகு ஐயா நீங்கள் லைக்காவுக்காக வக்காளத்து வாங்குவது சொந்த வியாபார விடயம் என்பதால் தானே?. தேவையில்லாமல் உங்கள் சொந்த விடயங்களை இழுக்கிறன் என்று கோபிக்க வேண்டாம், உங்கள் பதிலில் உங்கள் சொந்த விடயங்களையும் எழுதியிருக்கின்றீர்கள் என்றபடியாலதான் நானும் கேட்கின்றன்.

முதலில்  வணக்கம் வைரவன்

கன காலத்துக்குப்பின்???

காட்  வியாபாரத்துக்குள்  நானில்லை

பலமுறை  இங்கு எழுதியது தான்

நேர்மையற்ற

மக்களை  ஏமாற்றும் தொழில் அது.

ஆனால் இங்கு பேசப்படுவது

அவர்களது தாயகவிடயம்

மில்லியன் கணக்காக செய்து கொண்டிருப்பதாக  சொல்கிறார்கள்

அவர்களை பகையாக்குமுன்

அவை  பற்றிய  உண்மைகளை  வெளிக்கொண்டு வாருங்கள்  என்பதே எனது வேண்டுகோள்.

மற்றும்படி

இவர்கள் எவரது சிம் காட்டுகளையும் நான் பாவிப்பதில்லை

அதை  உதாசீழுனப்படுத்த.

ஆனால் அவர்களை  எனக்குத்தெரியும்

அதேபோல்

லிபரா

ஒர்தெல்.....

எல்லோரையும் தெரியும்

என்னைப்பொறுத்தவரை

வியாபாரரீதியாக

எல்லோரும் ஒன்றுதான்.

தாயகம் சார்ந்து?????

தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை வாசிக்கும் போது முரளிதரனின் அரசியலுக்கு தான் எதிர்ப்பு, அவருக்கோ அவரது விளையாட்டுக்கோ அல்ல என்று சொல்வது போல் உள்ளது. :)

இதற்கு மேல் என்ன ஆதாரம் தேவை? :unsure:சட்டு புட்டென்று lyca க்கு உங்கள் எதிர்ப்பை வையுங்கள். :rolleyes:

வணக்கம் துளசி

தனிப்பட்ட  விசுகு சார்ந்தது என்றால்

வெட்டொன்று துண்டு இரண்டு என உடனே எதிர்ப்பை  வைத்துவிடலாம்

ஆனால் இது தாயக  மக்கள் சார்ந்தது

மாதத்துக்கு ஒரு 100  ஈரோக்களையே  ஒதுக்கமுடியாது நானிருக்க

பல மில்லியன்களை  தாயகத்துக்காக  கொடுக்கும் ஒரு நிறுவனத்தை தூக்கிவீசுவது சரியா???

இது ஆராயப்படணும்

முன்பு என்றால் சம்பந்தப்பட்ட  இடங்களில் சொல்வார்கள்

இன்று............???

பிறேம்  சிவகாமியின் உரையைக்கேளுங்கள்

அவர் சொல்லும் திட்டங்கள் உண்மையில் தாயகத்தில்  செயல்ப்படுத்தப்படுகிறதா???

அதனால்

மக்கள்

மாணவர்கள்

வலுவிழந்தோர்.......

பலனடைகிறார்களா???

என்பதை அறிவோம் முதலில்.

அவை  உண்மையில்லை  எனில்

நேரடியாகவோ

தொலைபேசியூடாகவோ எமது மறுப்பைத்தெரிவிக்கமுடியும்.

அதுவரை

மாவீரர் வாரம் கடைப்பிடிக்கும் இந்த நேரத்தில்

அவர்களுக்கு கிடைக்கும் சோற்றை  தட்டிவிடாதிருப்போம்.

உதவி செய்வதும் ,செய்யாமல் விடுவது   அவர்களது செயற்பாடு.  ஆனால் இரட்டை வேடம்  தான் எல்லாரையும் உறுத்துகிறது,  சாப்பாட்டையும் கொடுத்து  சாக மருந்தையும் கொடுப்பது போல் தான் உள்ளது லைக்காவின் நிலைப்பாடு. சிங்களவனோடு  வியாபார கூட்டு , முதலீடு.  இங்கால சாப்பாட்டுக்கு  காசு   இந்தா பிடியுங்கோ. எங்களை விமர்சிக்காதீங்கோ. வியாபாரத்தை  கெடுத்து போடாதீங்க்.

இருக்கலாம்

ஆனால் இது முரளிதரனுடன் எடுத்துக்கொண்ட படத்தினால் பெரிதாக்கப்பட்டுள்ளதா???

முரளியின்   விசர்க்கதைக்குள் இவர்களும் மாட்டிக்கொண்டார்களா??

பார்க்கலாம்

இவர்களின் சில தலைகள்  எனது ஊரைச்சேர்ந்தவர்கள்

சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருக்கின்றேன்

பார்க்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உண்மையில் சில கருத்துக்கள் அதிர்சியளிக்கின்றன.

லைக்கா மேல் வேண்டுமென்றே யாரோ பொய்யான குற்றச்சாட்டை வைத்தது போல் எழுதுவதால் அவர்களின் இந்த செயலை நியாயப்படுத்த முடியாது. குற்றச்சாட்டிற்கு இதற்கு மேலும் ஆதாரம் கேட்பது வேடிக்கையானது. அதுவும் வாடிக்கையாளர்களை லைக்காவுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கச்சொல்வது இன்னும் வேடிக்கை. இத்தனைக்கு பின்னரும் லைக்கா இந்த குற்றச்சாட்டுக்களிற்கு முறையான ஒரு பதிலை அறிவிக்கவில்லை. 

பிறேம் அவர்களின் குரலை பதிலாக எடுப்பது நகைச்சுவையாக உள்ளது. குற்றச்சாட்டுக்களிற்கு திருப்தியான பதிலை வழங்காமல் தம்மை யாரோ வேண்டுமென்றே துரோகியாக்க முயல்கிறார்கள் என்ற பாணியில் பதிலளித்து தம்மீது ஒரு அனுதாபத்தை தேடமுயல்வது தான் இவர்களின் பதிலா? இந்த வியடத்தை பிரித்தானிய பிரதமரே தனிப்பட்டமுறையில் கையாளும் போதே இதன் விபரீதம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் லைக்கா இன்னமும் சிறுபிள்ளையாக நடித்துககொண்டிருக்கின்றது.

அவர்கள் சிங்களவனுடன் என்ன வேண்டுமென்றாலும் செய்துவிட்டு போகட்டும். அதனை நேரடியாகவே செய்யலாம். இப்படி குறுக்குவழியில் ஒரு நிறுவனத்தின் மூலம் செய்து தமிழர்களை முட்டாள்களாக நினைக்க வேண்டாம். எதிரி என்றால் எதிரியாக இருந்துவிட்டு போகட்டும். இரட்டை வேடம் எதறகு?

வெளிநாடுகளில் பல தமிழர்களிற்கு வேலை போய்விடும் என்று இங்கு கவலை வேறு. காலக்கொடுமை! 

லைக்காவை எதிர்ப்பதன் மூலம் அங்கே பலரிற்கு சோறு கிடைக்காமல் போய்விடும் என்றால் எமது பிரச்சனை சோற்றுக்கு மாரடிக்கும் போராட்டமா? உரிமைக்கு போராடும் இனமா? என் இனத்தை அழித்தவனுடன் கை கோர்த்துவிட்டு எனக்கு சோறு தந்து அதனை சரிகட்டலாம்.இது தானே இங்கே வாதம்? இந்த நடைமுறை காலம் காலமாக எம்மை ஆண்டவர்கள் முதல் இன்றைய வலலரசுகள் வரை கையாள்வது தான். எனக்கு ஒன்றை தந்து இரண்டை என்னிடமிருந்து எடுத்துகொள்வார்கள். 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், என்ன இது? உண்மையா? எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு என்பது உண்மை போல இருக்கே?

நீங்களுமா  என்னில்  சந்தேகப்படுகின்றீர்கள்???

முடியல.............. :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உண்மையில் சில கருத்துக்கள் அதிர்சியளிக்கின்றன.

லைக்காவை எதிர்ப்பதன் மூலம் அங்கே பலரிற்கு சோறு கிடைக்காமல் போய்விடும் என்றால் எமது பிரச்சனை சோற்றுக்கு மாரடிக்கும் போராட்டமா? உரிமைக்கு போராடும் இனமா? என் இனத்தை அழித்தவனுடன் கை கோர்த்துவிட்டு எனக்கு சோறு தந்து அதனை சரிகட்டலாம்.இது தானே இங்கே வாதம்? இந்த நடைமுறை காலம் காலமாக எம்மை ஆண்டவர்கள் முதல் இன்றைய வலலரசுகள் வரை கையாள்வது தான். எனக்கு ஒன்றை தந்து இரண்டை என்னிடமிருந்து எடுத்துகொள்வார்கள். 

ஐயா

கொள்கையளவில்  உங்களோடு தான்  நிற்கின்றேன்

ஆனால் பிறப்பிலிருந்தே

சோறு போடுபவரை நிந்தித்து பழக்கமில்லை

இது எனது தனிப்பட்ட கொள்கை

அது 

நேசக்கரமாக இருந்தாலும்

கேபியாக இருந்தாலும்

எமது மக்களுக்கு ஏதாவது செய்தால்

அதற்கு நன்றி  சொல்வது எனது செயல்.

நீங்களோ

மற்றவர்களோ

லைக்காவை  ஒதுக்குங்கள்

அது உங்களது முடிவு.

அதற்கு நிச்சயம் எனது எதிர்ப்பு இருக்காது.

அதேநேரம்

லைக்கா குழுமத்தைக்காணும் போது நிச்சயம்

உங்களது முடிவு பற்றி  அவர்களுக்கு எச்சரிப்பேன்.

அவர்களது சிறீலங்காவுடனான தொடர்பு பற்றி  ஆளமாக விசாரிப்பேன்.

அதில் எனக்கு உடன்பாடில்லாதுவிட்டால்

அவர்களுக்கு சொல்லிவிட்டே

நானும் என்னைச்சார்ந்தவர்களும் அவர்களை ஒதுக்குவோம்.

இது நிச்சயம்.

நன்றி.

அண்ணை அத்தோட ராஜபக்சாவையும் ஒருக்கா எச்சரித்து விடுங்கோ :icon_mrgreen: ,

லைகா விடம் வந்த இவ்வளவு காசும் "முதலிட"  :huh:  கொடுத்த காசோ தெரியாது....

2009 க்கு முன் எல்லா "Business"இலும் பங்கு கேட்டவையும் இருந்தவை..

இன்றும்/என்றும் இலங்கையில் முதலிட வேண்டுமென்றால் "எல்லாருக்கும்" அளக்க தான் வேணும்...

இது ஒரு பெரிய பிரச்சனையா :lol:

இங்கு யாரோ லைகா வுக்கு ஆப்பு வைக்கோணும் என்ற வெறியில் இருப்பதாக தெரிகிறது...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா குழுமத்தைக்காணும் போது நிச்சயம்

உங்களது முடிவு பற்றி  அவர்களுக்கு எச்சரிப்பேன்.

அவர்களது சிறீலங்காவுடனான தொடர்பு பற்றி  ஆளமாக விசாரிப்பேன்.

அதில் எனக்கு உடன்பாடில்லாதுவிட்டால்

அவர்களுக்கு சொல்லிவிட்டே

நானும் என்னைச்சார்ந்தவர்களும் அவர்களை ஒதுக்குவோம்.

இது நிச்சயம்.

நன்றி.

வியாபாரம் என்று வந்துவிட்டால் லாபம் நட்டத்தைத்தான் பார்ப்பார்கள். ஒருத்தர் ஒதுக்கினால் இன்னொருவர் உழைக்க வழி கிடைக்கும்! எச்சரிக்கைகளுக்குப் பயந்து லைக்காக்காரர் தமிழ்த் தேசியத்திற்குக் குரல் கொடுக்கப்போவதுமில்லை, இலங்கையரசோடு சேர்ந்து இயங்காமல் விடப் போவதுமில்லை. முன்னர் யாழ் இணையத்தில் வந்த செய்தி ஒன்றின்படி லைக்காக்காரர் வடமாகாணத்தில் பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுக்கப் போவதாக இருந்தது. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அப்படி ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் மகிந்தவுடன் சேர்ந்துதான் செய்யலாம்!

இன்று வியாபாரத்துக்கு சாமான் வாங்கும் இடத்துக்கு  தெரிந்தவர் வந்தார். சும்மா கேட்டேன் என்ன லைக்கா காரர் இப்படியாம் என்டு

அவர் சொன்னார்  கடைக்கு விளம்பரம் ஓட்ட லைக்கா காரர் வந்தவையாம் அவைக்கு சொல்லி இருக்காம் இனி கொன்டே மகிந்த வீட்டு சுவிரில  ஒட்டுங்கோ  இங்க ஒட்ட வேண்டாம் எண்டு சொல்லி  போட்டாராம்.

சொல்லி போட்டு சென்னார்   எல்லாம் அங்க கொண்டு போய் முதலீடட்டும் பிறகு அவன் புலியின்ர காசு என்டு   எல்லாத்தையிம் பிடுங்கி கொண்டு விட்டுடுவான் என்றார்.

எல்லாருக்கும் லைக்கா பிரச்சனை தெரியும்,  என்ன சிம்பிளா எல்லாரும் கள்ளர் என்ற ஒரு வசன்த்தோட முடிக்கினம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!

ஒரு பேப்பரின் 207 வது இதழ் வார இறுதியில் வெளியானது. அதன் பிரதிகள் பெருமளவில் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று கிழக்கு, மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகையின் பிரதிகளை குறித்த ஒரு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த இரண்டு பேர் தொகையாக எடுத்துச் சென்றதாக எங்களிடம் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாரம் வெளியான ‘ஒரு பேப்பர்’ இல் கீழக்காணும் தலைப்பிலான கட்டுரையை பிரசுரித்திருந்தோம்.

‘மலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்’

இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டமைக்கும் பத்திரிகையை மக்கள் பார்வையிடாமல் தடுக்கும் செயலுக்கும் தொடர்புள்ளதாக நாம் உறுதியாக நம்புகிறோம்.

கருத்துச் சுதந்திரத்தினை அச்சுறுத்தும் இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

ஒரு பேப்பர் ஆசிரியர் குழு

http://www.orupaper.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-207-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமாய் கிடைக்கும் ஒரு பேப்பரை காசு குடுத்து வாங்கி டம் பன்றாங்கள் பேப்பர் வேண்ட வந்த ஆந்திர uk மாணவனுக்கு (பகுதி நேரமாய் லைக்காவில் வேலை ) தமிழ் கதைக்க தெரியும் படிக்க தெரியாது நம்ம தமிழ் கடைக்காரரும் மற்றைய ஓசி பேப்பரையும் சேர்த்து வித்துவிட்டார்கள் காற்றுள்ள போதே காசு பார்த்துள்ளனர் பேப்பரை எடுக்க விடாதேங்கோ என்று போன் வர  "அன்னேய் உங்கடை பேப்பர் எங்கடை கடையிலை ஒரு நாளுக்கு மேல் இருப்பதில்லை அவை இன்டைக்கு வந்து ஏமாந்திட்டினம்" முதல் நாளே பேரம் முடிந்து விட்டது என்டாலும் ஒரு பேப்பர்க்கு மவுஸு கூடித்தான் உள்ளது அது சரி யுனிவெர்சல் விளம்பரம் ஒரு பேப்பர் தொடர்ந்து போடுமோ?  ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே என்ற கதை மாதிரி கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா எட்டமுடியாத உயரத்திற்கு சென்றுவிட்டது .வெறும் வியாபாரிகளாக மட்டும் இருக்காமல் நாட்டில் பாதிக்கப்பட மக்களுக்கு பல உதவிகள் செய்துவருகின்றார் .

புலம் பெயர்ந்தவர்கள் மகிந்தாவை உள்ளுக்க போட்டு நாடு பிடிக்க மட்டும் காத்திருந்தால் நாட்டில் ஒரு தமிழனும் மிஞ்சமாட்டான் .

உங்களை மாற்றுகருத்து அறிவிஜீவி என நினைத்தது பிழையா போச்சே லைக்கா வரி ஏய்புக்களை சட்ட ரீதியாக செய்து தப்பிக் கொண்டிருக்கும் நிறுவனம் உழைக்கும் நாட்டில் நட்டக்கணக்கு காட்டிக்கொண்டிருக்கும் நிறுவனம் எவ்வாறு மில்லியன்கணக்கில் இலங்கைக்கு உதவி செய்கின்றது ? இதுதான் கேள்வி வேனுமென்றால் uk கொம்பனிகவுஸின் இணையத்தில் லைக்காவின் வருடாந்த கணக்கறிக்கையை  சரியாக பார்க்கவும்(யாரும் பார்கலாம் சிறிய தொகையுடன்) 

இப்படி தில்லுமுல்லு எத்தினை நாளுக்கு நீடிக்கும் ? ஏற்கனவே t-mobile டன் பிடுங்கு பாடு அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்து விட்டு அவர்களுடைய அதிகபடியான யுனிற்களை உபயோகித்து விட்டு இதில் மில்லியன்கணக்கான பணம் t-mobilக்கு செலுத்த வேண்டி இருபினும் சட்டரீதியாக ரைட்ஓப் பன்னியுள்ளார்கள் அதிலிருந்து அவர்களும் இவர்களை விழுத்துவதற்க்கு கொடுக்கு கட்டினபடி அலைகிறார்கள் அதன் உச்ச கட்டமே லைக்கா +க்கு t-mobile பண அறவீடு செய்யதொடங்கியது.

அடுத்து இவர்கள் uk யின் முதன்மை கவரேஜ் 02 பிரதான வழங்குனராக இருப்பதால் ஒப்பந்தபடி இவர்களுக்கு அடுத்த படியாக உங்கள் நாட்டில் உள்ள public mobile canada போன்றவர்களை துரத்தியடிக்கின்றார்கள் எப்படிபார்த்தாலும் லைக்கா தன்னை மாத்தி கொள்ளாவிட்டால் அதே உயரம் படு பாதளத்தில் இந்த இடத்தில் அமெரிக்க கோடீஸ்வரர் ராஜரெட்ணம் நினைவில் வந்து போவது தவிர்க்க முடியாதுள்ளது. 

ஒரு கம்பனி நட்டத்தில் போனால் அது வருமான வரி கட்டத்தேவை இல்லை. அது வருமான வரி கட்டாமலிருப்பத்தற்காக எந்த அரச நிறுவனமும் கம்பனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு நிபந்தனை போட முடியாது. 

நட்டத்தில் ஓடும் ஒரு கமபனி நன்கொடைகள் கொடுக்க கூடாது என்றில்லை. காட்டப்பட்ட நட்டம் வருமான வரிக்கான நட்டமாக மட்டும் கூட இருக்கலாம். இப்படி இரண்டு வகை கணக்குகள்  பல வளரும் கம்பனிகளில் சட்டப்படியானது. அதாவது உள்ளெ புத்தகங்களில்  தில்லு முல்லுகள் இல்லாதது.

நட்டத்தில் ஓடும் கம்பனியிலிருந்து நன்கொடை கொடுப்பது முதலாளிகளின் முட்டாள்த்தனம் கூட அல்ல. ஆனால் நிதி நீர்மை இல்லாத கம்பனிகள் கையில் இருக்கும் காசை கவனமாக கையாளும் போது நன்கொடை கொடுப்பதை தவிர்ப்பார்கள்.

ஆனால் பல நன் கொடைகள் இறால் போட்டு சுறாப்பிடிக்கும் முயற்சிகளாகவும், நேர்மையான சமூக சேவையாக இல்லாதிருப்பத்தாலும், நன் கொடை கொடுப்புகளை எத்தகைய கம்பனிகளின் கணக்கு புத்தகத்தில் கண்டாலும் ஆச்சரியமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.