Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. காரணம் சொன்னார் சிதம்பரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையும் தமிழகத்திற்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரத்தை விட எக்காரணம் கொண்டும் அதை விட கூடுதலான அதிகாரம் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க விடமாட்டார்கள் காரணம் தேவை இல்லாத பல பிரச்சனைகளை அது இந்தியாவில் ஏற்ப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை

இதில் நீங்கள் யாரோடு கூட்டணி வைத்தாலும் தீர்வு ஓன்று தான்

 

அதை யாரப்பா  கவனிக்கிறார்கள்

 

அப்படி இப்படி சொல்லி  வைத்தால்

நாளைக்கு நான் அப்பவே  சொன்னேனே என உரிமை கொண்டாடத்தான்இபலர் இங்கு...

  • Replies 98
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்தரப்பு புதிய கொள்கைகளை வகுத்து புதிய தீர்வுகளுடன் காலத்துக்கு ஏற்ப எம்மை மாற்றி பல்வேறு மட்டங்களுடன் தொடர்புகளை பேணி சில விட்டு கொடுப்புகளை செய்து எம்மை நாமே மீளாய்வுக்கு உற்படுத்தி புதிய ஒரு சக்தியாக உருவாக வேண்டிய காலம் வந்துவிட்டது .....இல்லது தமிழர் பிரச்சனை இன்னும் காலம் காலமாக நீண்டு செல்வதை தான் காண முடியும் அதற்குள் 32 லட்சமாக இலங்கையில் இருக்கும் தமிழினம் 10 லட்சமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை

தமிழகம் அளவிற்கு அதிகாரம் கிடைப்பதற்கே நாம் இன்னும் பல படிகள் ஏற வேண்டும். முதலில் அதுவரையாவது போவோமே என்பதே நான் கூறுவது.

ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். ராகுல்காந்தியின் ஆட்சியில் ஏதோ ஒரு படியை நாம் சிதம்பரத்தின் கையை பிடித்தோ, ராகுல்காந்தியின் கையைப்பிடித்தோ ஏற முடியும் என்பது என்னுடைய கணிப்பு.

மோடியின் ஆட்சிக் காலத்தில் நாம் எந்தப் படியையாவது ஏறக் கூடிய ஒரு வாய்ப்பை என்னால் காண முடியவில்லை. எதிரான விடயங்களையே பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுதைய நிலைமையில் இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் போல தான் தெரிகின்றது நாம் யாரையும் பகைக்காமல் இருக்கிறது தான் இப்போ ஒரே வழி bjp கட்சியில் சுப்புரமணிய சுவாமி இருப்பதால் நிச்சியமாக குழப்பி அடிப்பார் நம்மவர்கள் எல்லோரும் அந்த மனுஷன சாதரணமா நினைக்கிறாங்க ஆனா BJP ஆட்சியில் அவர் எப்பிடியும் ஒரு அமைச்சரா வந்திடுவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகம் அளவிற்கு அதிகாரம் கிடைப்பதற்கே நாம் இன்னும் பல படிகள் ஏற வேண்டும். முதலில் அதுவரையாவது போவோமே என்பதே நான் கூறுவது.

ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். ராகுல்காந்தியின் ஆட்சியில் ஏதோ ஒரு படியை நாம் சிதம்பரத்தின் கையை பிடித்தோ, ராகுல்காந்தியின் கையைப்பிடித்தோ ஏற முடியும் என்பது என்னுடைய கணிப்பு.

மோடியின் ஆட்சிக் காலத்தில் நாம் எந்தப் படியையாவது ஏறக் கூடிய ஒரு வாய்ப்பை என்னால் காண முடியவில்லை. எதிரான விடயங்களையே பார்க்கிறேன்.

 

என்னுடைய கருத்தில் செருக்கு, ஆணவம் போன்றவை எங்கே உள்ளன என்று புரியவில்லை.

 

அருள்! என்னால் காணமுடியவில்லை என்பதை வேறு எப்படி எழுத முடியும் என்று எனக்கு தெரியவில்லை. என்னால்தான் காண முடியவில்லை. உங்களால் காணமுடிந்தால் சொல்லுங்கள், அது பற்றி நாம் விவாதிப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருள்! என்னால் காணமுடியவில்லை என்பதை வேறு எப்படி எழுத முடியும் என்று எனக்கு தெரியவில்லை. என்னால்தான் காண முடியவில்லை. உங்களால் காணமுடிந்தால் சொல்லுங்கள், அது பற்றி நாம் விவாதிப்போம்

 

'உங்களால் காணப்பட முடியாதது' என்ற வசனத்தில்; பிறராலும் காணப்பட முடியாது என்ற பொருள் புதைந்திருப்பதால்!

 

இல்லை, இது தவறான புரிதல். "வாய்ப்பு இல்லை" என்று சொல்வதை விட "வாய்ப்பை என்னால் காண முடியவில்லை" என்று சொல்வதே அடக்கம் மிகுந்தது. முதலாவது தீர்ப்பு சொல்வது, இரண்டாவது தனிப்பட்ட கருத்தை சொல்வது. என்னுடைய கருத்து என்பதையும், மற்றவர்களுக்கு வேறு கருத்து உண்டு என்பதை நான் உணர்கிறேன் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கே, நான் இது போன்ற "என்னால்", "நான்" போன்ற பதங்களை பயன்படுத்துவது உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, உண்மையாகவே சொல்கிறேன். உங்களுக்கு புரிவதற்கு மோடி ஆட்சிக்கு வந்தால் நல்லது. ஆனால் தமிழர்களுக்கு அது நல்லது இல்லையே!

மூன்றாவது தெரிவு இல்லாத நிலையில்தான் நான் ராகுல்காந்தி பற்றி பேசுகிறேன்.அனுபவமும் இல்லாமல், ஒரு துடிப்போடு வரக் கூடிய ராகுல்காந்தி நிச்சயமாக ஒரு இடத்தில் சிறிலங்காவுடன் முட்டுப்படுவார். நாம் புத்திசாலித்தனமாக இருந்தால் போதும்.

 

 

படுமுட்டாள்த்தனமான கருத்து. அனுபவமில்லாதவர் ஆட்சிக்கு வந்தால் சிங்களத்துடன் ஒரு கட்டத்தில் முட்டுப்படுவார் என்றால், 1984 இல் எந்த அனுபவமும் இல்லாத விமான ஓட்டீ, சிங்களத்துடன் முட்டுப்படுவதாக நினைத்து 1987 இல் நடத்தியது மறந்துபோச்சோ? அல்லது சோனியா மட்டும் அரசியல் ஞானியோ ? 1991 இல் நடந்ததை பழிதீர்க்கமட்டுமே பார்த்திருந்து 2009 இல் (சிங்களம் பின்னால் என்னசெய்யும் என்றுகூட யோசிக்காமல்) தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டவர். அவரதும், கொலைசெய்யப்பட்ட ரஜீவின் மகனுமான ராகுல் உங்களைப் பொறுத்தவரை சிங்களத்துடன் முட்டுவார். மோதுவார் அப்படித்தானே?? எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களோ??

 

இதுவரை இந்தியாவில் அனுபவமில்லாமல் ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழர்களுக்குக் கிடைத்ததோ வெறும் அழிவுகள் மட்டும்தான். இன்னொருமுறை அனுபவமில்லாமல் ஒருத்தரைக் கொண்டுவந்து மற்றுமொருமுறை எமக்கு அழிவுகளை ஏற்படுத்தவேண்டாம். 

 

அதுசரி, மோடி வந்தால் தமிழர்க்கு என்ன பிரச்சினை என்பதையும் நீங்களே ஒருமுறை சொன்னால் எங்களுக்கு விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும். 

என்னுடைய கருத்தில் செருக்கு, ஆணவம் போன்றவை எங்கே உள்ளன என்று புரியவில்லை.

அது இருக்கட்டும். விடயத்திற்கு வருகிறேன்.

அரசியல் என்று வந்த பின்பு மானமாவது, மண்ணாங்கட்டியாவது. எங்கள் பயணத்தில் எந்தப் பிசாசுடன் கைகோர்ப்பதிலும் எனக்கு பிரச்சனையில்லை. இலக்கை அடைந்தால் போதும்.

இங்கே உணர்ச்சிக்கு இடம் இல்லை. நலன்தான் முக்கியம். தமிழர் தேசத்தின் நலனுக்காய் உயிரை பலி கொடுத்தவர்களை பார்த்தோம். கேவலம் இந்த மானம்தானே போகிறது. போனால் போகட்டும். ஆனால் இலக்கை அடைந்த பின் போன போன மானம் திரும்ப வரும்.

 

 

முதலில் உங்கள் இலக்கு எதுவென்று சொல்லுங்கள். பிறகு அதை அடைவதுபற்றி யோசிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

1987 ஆம் ஆண்டின் இந்திய ஆக்கிரமிப்பும் அதற்கெதிரான புலிகளின் போராட்டமும் இறுதியில் இந்தியர்களின் கட்டாய வெளியேற்றமும், 1991 இன் ராஜீவ் கொலையும் ஈழத் தமிழர்களையும் காங்கிரஸையும் நிரந்தரப் பகைவர்கள் ஆக்கிவிட்டது. இதை அவர்கள் பலமுறை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியமைத்தாலும்கூட, ராஜீவ் குடும்பத்தினதும், அவர்களின் விசுவாசிகளினது செல்வாக்கும் இல்லாத ஒரு தலமை வரவேண்டும். ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமில்லை. சோனியா தனது இரும்புக்கரத்தை ராகுலின் மூலம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வார். ஆக பகை தொடரத்தான் செய்யும். 

 

மோடி என்னசெய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் மேலே ஒருவர் சொன்னதுபோல வெளிவிவகாரக் கொள்கை என்று வரும்போது கட்சிகளுக்கிடையே அதிக வேறுபாடு இருக்கப்போவதில்லை. மோடிக்கும், ராகுலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், முன்னையவர் வெறும் இந்தியத் தேசியவாதி, பின்னையவர் ஈழத்தமிழரை அழித்த குடும்பத்தைச் சேர்ந்த இந்தியத் தேசியவாதி, அவ்வளவுதான். 

மோடி, ராகுல் இருவரும் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் தமது எல்லைகளை தாண்டி எதுவும் செய்யப் போவது இல்லை. அதில் தெளிவாகவே இருக்கிறேன்.

ஆனால் தமது எல்லைவரையாவது போகக் கூடியவர்கள் யார் என்பதுதான் முக்கியம்.

ராகுல்காந்திக்கு எம்மோடு இருந்தை பகைமை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். எமக்கு அவர் குடும்பத்தோடு உள்ள பகைமை முடிந்ததாக நான் சொல்லவில்லை. ஆனால் இனி எம்மோடு உறவைக் கட்டி எழுப்புவதே அவர்களுககும், எமக்கும் நலன் தருவதாக இருக்கும்.

ராஜீவ்காந்தியை எம்மோடு முட்ட வைத்தது சிங்களத்தின் ராஜதந்திரம், எமது தோல்வி, இறுதியில் அழிவு.

இனி அதை தமிழர்கள் செய்யலாம். ராகுல் ஒரு வேளை பிரதமராக வந்தால், தன்னை ஒரு பலமான அதிரடியான பிரதமர் என்று நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். அதை அவர் இலங்கை விவகாரத்தில் கூட செய்யலாம்.

இதில் தமிழ்நாட்டு காங்கிரஸின் வளர்ச்சி என்கின்ற நலனும் உண்டு.

மறுபுறம் மோடிக்கு எமக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற தேவை எதுவும் இல்லை. தன்னைப் போலவே இனப்படுகொலை குற்றச்சாட்டு உள்ள மகிந்தவையே அவர் புரிந்து கொள்வார். அவருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய பலமான தலைவர்களும் தமிழ்நாட்டில் இல்லை. சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள்தன் உண்டு.

இரு தலைவர்களையும் வைத்து சாதக, பாதகங்களை ஆராய்கின்ற போது, என்னால் இந்த முடிவுக்கே வர முடிகிறது. தொடர்ந்து பேசுவோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோடி, ராகுல் இருவரும் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் தமது எல்லைகளை தாண்டி எதுவும் செய்யப் போவது இல்லை. அதில் தெளிவாகவே இருக்கிறேன்.

ஆனால் தமது எல்லைவரையாவது போகக் கூடியவர்கள் யார் என்பதுதான் முக்கியம்.

ராகுல்காந்திக்கு எம்மோடு இருந்தை பகைமை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். எமக்கு அவர் குடும்பத்தோடு உள்ள பகைமை முடிந்ததாக நான் சொல்லவில்லை. ஆனால் இனி எம்மோடு உறவைக் கட்டி எழுப்புவதே அவர்களுககும், எமக்கும் நலன் தருவதாக இருக்கும்.

ராஜீவ்காந்தியை எம்மோடு முட்ட வைத்தது சிங்களத்தின் ராஜதந்திரம், எமது தோல்வி, இறுதியில் அழிவு.

இனி அதை தமிழர்கள் செய்யலாம். ராகுல் ஒரு வேளை பிரதமராக வந்தால், தன்னை ஒரு பலமான அதிரடியான பிரதமர் என்று நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். அதை அவர் இலங்கை விவகாரத்தில் கூட செய்யலாம்.

இதில் தமிழ்நாட்டு காங்கிரஸின் வளர்ச்சி என்கின்ற நலனும் உண்டு.

மறுபுறம் மோடிக்கு எமக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற தேவை எதுவும் இல்லை. தன்னைப் போலவே இனப்படுகொலை குற்றச்சாட்டு உள்ள மகிந்தவையே அவர் புரிந்து கொள்வார். அவருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய பலமான தலைவர்களும் தமிழ்நாட்டில் இல்லை. சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள்தன் உண்டு.

இரு தலைவர்களையும் வைத்து சாதக, பாதகங்களை ஆராய்கின்ற போது, என்னால் இந்த முடிவுக்கே வர முடிகிறது. தொடர்ந்து பேசுவோம்...

 

அ,தி,முகவில் காணமுடியாதனவற்றை தி,மு,கவில் தமிழர்களின் நலன்களாக கண்டு களிக்கின்ற  உங்கள் தூர நோக்கு இங்கும் தி,மு,கவின் நேச நோக்கோ​​​? என்றே எண்ணத் தோன்றுகின்றது!

அந்த முதலையிடம் பயப்பிடாமல் அபயம் போ! ஏன் என்றால் அது ஏற்கனவே ஒருவரை பசியாறிவிட்டது இனி உண்ண அதன் வயிற்றில் இடமில்லை  என்ற நியாயத்தைப் போல் உள்ளது.

முள்ளிவாய்கால் படுகொலைக்கு மூச்சாய் நின்றவன் இனி சாட்சியாவான் என்றால் அதை நம்ப எமக்கு முடியவில்லை! 

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி இந்துத்துவாவில் நம்பிக்கை கொண்டவர் என்பதால் சபேசன் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்..  :D

காரணங்கள் கண்டுபிடிக்கத் தேவையில்லை. அவைகள் இருக்கின்றன.

மோடியின் தமிழ்நாட்டு நண்பர்கள் சோவும், சுப்ரமணியசுவாமியுமே

மோடி தமிழ்நாட்டிற்கு வந்த கிந்தியில் உரையாற்றி வடஇந்திய மேலாண்மையை காட்டி, தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்காத தன்மையை வெளிப்படுத்தினார்.

தன்னை இரும்புமனிதராக காட்ட நிச்சயம் நான்கு முஸ்லீம்களை தூக்கில் போடுவார், இந்த தூக்கில் போடும் அரசியலில் எமது உறவுகளும் சிக்கும் அபாயம் உண்டு.

தீவிரவாதத்தை இந்தியாவின் பிரச்சனை என்று காட்டி, தன்னை மக்களின் பாதுகாவலனாக முன்நிறுத்துவார்

தீவிரவாதத்தை வென்ற ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பனாக மாறுவார்

வெளிநாட்டு அழுத்தங்கள் இருவரையும் மேலும் இணைக்கும்

இனப்படுகொலை செய்த மோடி, ராஜபக்ஸவை நன்கு புரிந்து கொண்டு அவருக்கு பாதுகாப்பாக விளங்குவார்.

இப்படி நிறைய காரணங்கள் இருக்கின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

தாளத்தை மாற்றும் ப.சி...

 

http://www.youtube.com/watch?v=hkT-Kz3YFhs

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=F2TQEGdyc_w

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து நாங்களும் இந்தியா என்னமோ செய்யப்போகிறது அது எங்களுக்கு சாதகமாக இருக்கப்போகிறது என்று நினைத்துகொண்டு இருக்க ஒவ்வொருமுறையும் சிங்களவனுக்கு சாதகமாகவே இந்தியாவின் முடிவுகள் இருக்கும், இந்த முறையும் வழமைபோல சிதம்பரம் சொல்லுவதையும் நம்பி இருப்பம் . 

ப.சிதம்பரம் பொய் சொல்கிறார். தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததே இந்தியாதான். இதில் தாம் எதிர்பார்த்த மாதிரி கடுமையாக இல்லை என்று ஒரு ஆகாசப் புளுகை செய்கிறார்.

ஆனால் என்ன செய்வது? "இனப் படுகொலை", "வடக்கு கிழக்கு இணைப்பு" என்பவற்றை வார்த்தைகளிலாவது உச்சரித்தாரே என்று ஆறுதல் அடையலாம். ஆனால் இவ்வளவுக்கு கூட பாஜகவின் சக்தி மிக்க தலைவர்கள் பேச மாட்டார்கள் என்பதும், அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை என்பதும்தான் இதில் முக்கிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

1)ஒரு வேளை திமுகவும் பாஜகட்சியும் கூட்டணி வைக்க, அதிமுக காங்கிரஸ் கூட்டணி வைத்தால் யாருக்கு ஆதரவு குடுக்கவேண்டும் சபேசன்? 2)மோடி தமிழகத்தில் இருக்கும் ஒரு கட்சியின் ஆதரவினால்(அதாவது பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால்) பிரதமராக வந்தால்

தெளிவா சொல்லுங்கோ நாங்கள் இப்ப யாருடைய காலை பிடிக்கவேணும்? 

  • கருத்துக்கள உறவுகள்

ப.சிதம்பரம் பொய் சொல்கிறார். தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததே இந்தியாதான். இதில் தாம் எதிர்பார்த்த மாதிரி கடுமையாக இல்லை என்று ஒரு ஆகாசப் புளுகை செய்கிறார்.

ஆனால் என்ன செய்வது? "இனப் படுகொலை", "வடக்கு கிழக்கு இணைப்பு" என்பவற்றை வார்த்தைகளிலாவது உச்சரித்தாரே என்று ஆறுதல் அடையலாம். ஆனால் இவ்வளவுக்கு கூட பாஜகவின் சக்தி மிக்க தலைவர்கள் பேச மாட்டார்கள் என்பதும், அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை என்பதும்தான் இதில் முக்கிய விடயம்.

 

எங்களின் நிலமை வெறும் வார்த்தை ஜாலங்களில் ஆறுதலடைவதைத்தவிர வேறு வழியில்லை என்று நினைக்க மிகவும் கவலையாக இருக்கிறது. 

 

சபேசன், இதில் உண்மை என்னவென்றால், சோனியா தலமையிலான காங்கிரஸ் கட்சிதான் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முழுக் காரணமும் என்பது இந்தியர்களுக்குத் தெரியும். குறிப்பாக தமிழ்நாட்டில் இது தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் தனது கட்சியின் சரிந்துவரும் செல்வாக்கை சரிக்கட்டுவதற்கு சிதம்பரம் போன்றவர்களை அனுப்பி சில வார்த்தை ஜாலங்களை கசியவிடுகிறது காங்கிரஸ் தலமை. அதில் ஒரு படிதான் இந்த இனப்படுகொலை, வடக்குக் கிழக்கு இணைப்பு என்ப்தெல்லாம். பொதுமக்கள் , ராணுவத்தினர், புலிகள் என  65000 பேர் கொல்லப்பட்டதாக இவர் சொல்வது கொல்லப்பட்ட பொதுமக்கள் தொகையினை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடும் வேலையென்றுதான் எனக்குப் படுகிறது. இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மட்டுமே 40,000 இலிருந்து 70,000 என்று சர்வதேசம் மதிப்பிட்டிருக்கிறது. அதேவேளை, முன்னால் முல்லைத்தீவு, கிளிநொச்சி அரச அதிபர்களின் கணக்கெடுப்புப்படி 2008 இல் யுத்தம் ஆரம்பித்தப்பொது வன்னியில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தம் 2009 இல் முடிவுற்றபோது ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டும், சரணடைந்தும் அகப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான வித்தியாசம் 156,000 என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கை இந்திய கடற்படைகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்த வன்னிக் கடலினூடாக தப்பி இந்தியாவுக்குச் சென்ற தமிழர்களின் எண்ணிக்கை சில ஆயிரம் என்று வைத்துக்கொண்டாலும் கூட,இந்த 156,000 என்கிற எண்ணிக்கை மீதியாகவே இருக்கிறது. நீங்கள் சிலவேளை இந்த எண்ணிக்கையை மன்னார் ஆயர் மேற்கோள்காட்டி பல இடங்களில் பேசிவருவதைக் கேட்டிருக்கலாம். ஆக, சிதம்பரத்தின் இந்த கசியல் எண்ணிக்கை என்னைப்பொறுத்தவரை ஒரு பூசி மெழுகல் என்பதோடு, அவருடைய இனக்கொலை கருத்துக்களும், வடக்குக் கிழக்கு இணைப்பும் டமேஜ் கன்ரோல் (Damage Control) ஆகத்தான் இருக்க முடியுமே தவிர உண்மையான தீர்வொன்றுக்கான அடித்தளமாக இருக்க முடியாது. சிதம்பரம் கூடத் தான் ஒரு தமிழராக இருப்பதால்த்தான் இதைச் சொல்கிறார். இவரே ஒரு வட இந்தியராக இருந்தால் இதுகூட இவரது வாயால் வரப்போவதில்லை. 

 

உங்களின் கருத்தை படுமுட்டாள்த்தனமானது என்று எழுதியதற்காக வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சி என்பது இந்துக்கள் என்கிற அடிப்படையில் தமிழருக்கு அனுதாபம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம் இருந்துவந்தது. இதை இடைக்கிடையே அக்கட்சியின் உயர் தலைவர்கள் அல்லாமல் இடைமட்டத் தலமைகள் அவ்வப்போது சொல்லியும் காட்டியிருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக அக்கட்சியின் உயர் தலைவர்களான சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் இலங்கை அரசோடு நட்பாகப் போகவே விரும்புகின்றனர். இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அங்கே எந்தக் கட்சி வந்தாலும் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்பதுதான் எனது எண்ணம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொல்வதையெல்லாம் நாம் உண்மையென்று நம்பினால் அது எமது தவறு. வாஜ்பாயி காலத்தில் எமக்கு ஆதரவான அரசொன்று இருந்தது, பாதுகாப்பு அமைச்சரான தமிழர்களின் அனுதாபி ஜார்ஜ் பெர்னான்டஸ் இருந்தார் என்றெல்லாம் நம்பியிருந்தோம். ஆனால் அதே காலத்தில்த்தான் சொல்லப்படாத காரணங்களுக்காக புலிகளின் யாழ் நோக்கிய படையெடுப்பு தடுக்கப்பட்டது. பாக்கிஸ்த்தானின் பல்குழல் பீரங்கிகள் இலங்கையால் வாங்கும் வரை யுத்தம் தேக்க நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் சாவகச்சேரி ஆக்கிரமிப்போடு புலிகளிடமிருந்த யுத்தத்தின் மீதான செல்வாக்குச் சிறிது சிறிதாக குறைந்து முகமாலையோடு நின்றுவிட்டது. 

 

இன்று மோடி வருவார் என்று எதிர்பார்க்கிறோம். இவர் வந்து என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். காங்கிரஸ் தோற்கவேண்டும் என்கிற எமது மனோபாவம் இதற்கான காரணமாக இருக்கலாம். 

 

காங்கிரஸ் வெளிப்படையாகவே ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பட்டை எடுத்து இதுவரை இரு பாரிய இனப்படுகொலைகளுக்குக் காரணமான கட்சி. தனது பரம எதிரியான விடுதலைப் புலிகளை அழித்ததோடு அதன் வக்கிரம் குறைந்துவிட்டதென்று சொல்வதற்கு இதுவரை எந்த சான்றுகளும் எமக்குக் கிடைக்கவில்லை. 2009 இன் பின்னரான இந்திய வெளியுறவுக்கொள்கையின் வெளிப்பாடே இதற்குப் போதிய காரணமாகிறது. சர்வதேசத்தில் இலங்கைக்கெதிரான அழுத்தத்தை இந்தியா தானே முன்னின்று எவ்வாறு தடுத்து நிறுத்தியது என்பதைப் பார்க்கும்போது இது எமக்குப் புரியும். வெறுமனே ஐ.நா வில் இலங்கைகெதிரான தீர்மானத்துக்கு (இத்தீர்மானம் இந்தியாவினால் உயிர்நாடி பிடுங்கப்பட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) ஆதரவு கொடுத்ததெல்லாம் உளநாட்டில் அழுத்தத்தைக் குறைக்கவும், சர்வதேசத்தில் நல்லபிள்ளை என்ற பெயரை வாங்கவும் மட்டுமே. இது மீனுக்குத் தலையையும், பாம்பிற்கு வாலையும் காட்டும் காங்கிரஸின் ரெட்டை வேடம்.

 

அதேபோல சுப்புரமணிய சுவாமியையும், சோவையும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி சேர்த்திருப்பது நிச்சயம் தமிழர்க்குச் சார்பானதாக இருக்கப்போவதில்லை. காங்கிரஸுக்குத் தமிழரான சிதம்பரம் எப்படி இருந்தாரோ அதேபோல பாரதீய ஜனதாவுக்கு சோவும், சுனா. மானா சுவாமியும் இருக்கப்போகிரார்கள். இதில் ஒரே வித்தியாசம் சிதம்பரம் உதட்டளவிலேனும் தமிழருக்காக இரங்குவதாகக் காட்டுகிறார். ஆனால் சுனா மானா சுவாமியும், சோவும் ஆதிகாலம் தொட்டெ தமிழருக்கெதிராகவும் சிங்களத்துக்கு  ஆதராகவும் விஷம் கக்கி வருபவர்கள். 

 

போகப் போகத்தன் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ப.சிதம்பரம் பொய் சொல்கிறார். தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததே இந்தியாதான். இதில் தாம் எதிர்பார்த்த மாதிரி கடுமையாக இல்லை என்று ஒரு ஆகாசப் புளுகை செய்கிறார்.

ஆனால் என்ன செய்வது? "இனப் படுகொலை", "வடக்கு கிழக்கு இணைப்பு" என்பவற்றை வார்த்தைகளிலாவது உச்சரித்தாரே என்று ஆறுதல் அடையலாம். ஆனால் இவ்வளவுக்கு கூட பாஜகவின் சக்தி மிக்க தலைவர்கள் பேச மாட்டார்கள் என்பதும், அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை என்பதும்தான் இதில் முக்கிய விடயம்.

 

ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பில் ஏற்றதும் தமிழகத்தில் கல்வி கற்ற இலங்கை மாணவர்களுக்கு தமிழகத்துப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான நுளைவினை இரத்துச் செய்தார். இதனால் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழ் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டார்கள். இதே போல தமிழகத்தில் தங்கியிருந்த ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார். கலைஞர் ஆட்சி வந்ததும் மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. 2008ல் போரின் போது மக்கள் கொல்லப்படுவது என்று சொன்ன ஜெயலலிதா 2009க்கு பிறகு சட்டசபையில் ஈழத்தமிழர்கள் சார்பான தீர்மானங்களை எடுத்தார்.(இத்தனைக்கும் அவரின் ஆலோசகர் சோ). முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கும் போது ஆட்சியில் இருந்தவர் கலைஞர். ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலும் இருந்தவர். அக்கூட்டணிக்கு அவர் நெருக்கடி கொடுத்திருக்கலாம். தமிழக உணர்வாளார்களை கைது செய்து சிறையில் அடைந்தார். முத்துக்குமாரின் இறப்பின் போது எழுந்த மாணவர்களின் எழுச்சியினை முடக்க காலவறையின்றி பல்கலைக்கழகங்களை மூடியவர் கலைஞர். 2009க்கு முதல் வேறு ஒரு நிலைப்பாட்டினை உடைய ஜெயலலிதா அவர்கள் 2009க்கு பின்பு விருப்பமில்லாவிட்டாலும் தமிழகத்து எழுச்சியினால் ஈழத்தமிழர்களுக்கு சார்பான சில செயற்பாட்டுக்களை செய்தார்(இடையிடையே சில எதிரான செயற்பாடுகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறார். மோடி என்ன செய்வார் என்பது இனித்தான் தெரியும். சிலவேளை தமிழகத்தில் காங்கிரசில் செல்வாக்கினை முற்று முழுதாக இல்லாமல் செய்ய சில நடவடிக்கைகளைச் செய்யலாம். மீண்டும் தேர்தல் வரப் போகிறது. சிதம்பரம், ஞானதேசிகன் , ஜெயந்தி நடராகா உட்பட பலர் இனி ஈழத்தமிழர்கள் சார்பாக கருத்துக்கள் வெளியிடுவினம். ஆனால் நடைமுறைப்படுத்துவினமா என்பது கேள்விக்குறி.

இதுவரையில்  "இந்திய பாதுகாப்பு கொள்கை" என்று யாழில் வெளிவந்த வியூக கட்டுரைகள் மூக்கை தொட்டு கிளிச்சாத்திரம் சொன்னது போன்றது.  அது போலத்தான் இந்த கதைகளும்.  இந்த வியூக சாத்திரங்களின் ஒரு வசனம் விளங்கப் படுத்தப்படுவது கிடையாது. இது எனது "நம்பிக்கை" என்று மொட்டையாக முடிக்கப்படுகின்றன. "இந்திய பாதுகாப்பு கொள்கை" என்ற பொய் பிரச்சாரத்தின் அடித்தளம் பழிவாங்கல், புரை யோடிப்போன மலையாளத்து லஞ்சங்களுக்கான பாதுகாப்பு மட்டுமாக இருந்ததால் இன்று காங்கிரஸ் மகிந்தாவின் காலில் விழ நேர்ந்திருக்கிறது. 22ம் தொடரில் பிரேரணையை நீர்த்த்துப்போக செய்த காங்கிரஸ் 25ம் தொடரில் ஐ.நா பிரேரணையை அடியோடு இல்லாதொழிக்க 13ம் திருத்தத்தில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்களை இல்லாது செய்ய விக்கினேஸ்வரனின் காலை பிடிக்க தயாராகுகிறார்கள். 

 

மோடன் காலில் பிரணடதை தொட்டு மணந்தால் ஒட்டிக்கொண்டு வரும் அழுக்குக்கு சரியான மூளையாக இருக்கிறதே, அது மோடனை நன்றாக ஆடுகிறதே என்பது வியூக விளக்கம். ஆனால் மோடனுக்கு மட்டும்  மூளை இல்லை என்பது அவதானிப்பில் இருந்து வரும் கருத்து. ரவீஜ்காந்தி நேவியிடம் அடி வாங்கியது. சிங்கள கோமாளித்தனம் மட்டுமே. அதில் எந்த ராஜதந்திரமாவது இருக்கிறது என்று நினைப்பது படு அப்பாவித்தனம். (கமருன் யாழ்பாணம் போன போது பொலிசுகளுக்கு தோட்டா இல்லாத துவக்கு கூட இலங்கை அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை என்பது கமருனின் அரசியல் ராஜதந்திர மிடுக்கு) தமிழ் நாட்டுக்கு எதிராக நடந்துவிட்டு பாதுகாப்பில்லாமல் தமிழ் நாட்டுக்கு ரஜீவ் வந்தது சிங்கள ராஜததிரம் அல்ல. சுவிசில் நடத்தின ஆயுத கொள்ளையில் மாட்டியது சிங்கள ராஜதந்திரம் அல்ல. மோடன் பெரிய கத்தியை வைத்துகொண்டு பலரை காயப்படுத்தி தனக்கும் அழிவை தேடியதை யாருடையதாவது ராஜதந்திரமாக் வருனிப்பது அரசியலை ஆராய முடியாமை. சிங்கள ராஜதந்திரம் எங்கும் பீறிட்டு இங்கே ஒழுகுகிறது என்பது படப்பாயக்கதை.

 

யாருக்காவது ஐ.நாவை முன்னால் போகவிடாமல் தடுக்க வேண்டுமாயின் காங்கிரஸ் பதிவிக்கு வர வேண்டும். இதில் JR ஆல் மொட்டையடிக்கப்பட்டு தன் வாழ்வையே முடித்துக்கொள்ளும் அரசியல் செய்த ரஜீவின் ராஜதந்திரத்தைவிட, மேசை துடைத்த சோனியா கோத்தாவிடம் போர்க்குற்றத்திற்கு மாட்டியிருக்கும்  இராஜந்திரதை விட ராகுலின் இராஜதந்திரம் இழபமானதாகிவிடலாம் என்பது வியூக வழி வரும் நம்பிகையின் பால்ப்பட்ட மூக்கு சாத்திரம். அரசியல் கிரகநிலைகளை அது ஆராயவில்லை. ஐ.நாவில் காங்கிரசின் பெயர் இழுபடாமல் இருக்க வேண்டுமாயின் 2014 தேர்தலில் காங்கிரஸ் திரும்ப வந்து ஐ.பிரேரணையை தடுக்க வேண்டும். அடுத்த ஐ.நா பிரேரணையில் இலங்கையை காப்பறுவதற்காக இந்திய கொடுத்த வாக்குறுத்திக்கு இலங்கை நடத்திய ஏமாற்றுத் தேர்தல்தான் வடமாகாணத்தேர்தல் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது காங்கிரஸ் திரும்ப வந்த்து தமிழ் மக்களுக்கான இலங்கை-இந்திய சதிகள் தொடர வேண்டுமாயின் காங்கிரஸ் திரும்ப வர வேண்டும். மற்ற்வர்களுக்கு இனி காங்கிரஸ் வரக்கூடாது.

 

மோடி பயப்படாமல் முஸ்ளிம்களை தாக்குவார் என்பது சிலருக்கு கவலையாக இருக்கலாம். இது கக்கீம் போன்றவர்கள் சல்மான் குதிர்திஸ் மீது போடும் அழுத்ங்களின் பலனை இல்லாமல் செய்யலாம் என்பது சிலரின் பயமாக இருக்கலாம். மேலும் காங்கிரஸ்  மாதிரி புத்தபள்ளிகள் கட்ட மோடி இந்தியாவில் காணிகள் கொடுக்க மாட்டர் எனப்தும் சிலரின் பயமாக இருக்கலாம். மோடி எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு காங்கிரஸ் அனுப்பிவைக்கும் அடிமை தபால்களை அனுப்ப போவதில்லை என்பது இவர்களின் தெளிவான விளக்கம். இதனால் தாங்கள் மோடியை கண்டு பயப்படுவதை, எந்த அரசியல் ஆதரங்களும் இல்லாமல் 'நம்புகிறேன்" என்று கிளிச்சாத்திரம் வைத்து மூடி மறைக்கிறார்கள். பாகிஸ்த்தான் வாலாட்டிய போது வாஜ்பாய் கொடுத்த அடியால்த்தான் பாகிஸ்தான் அடங்கியிருந்தது. பல பாஜக அங்கத்தவர்கள், காங்கிரசு மீது இலங்கை, பாகிஸ்த்தான் காட்டும் சேட்டைகளுக்கு மருந்தாக இதைதான் பலதடவை சொன்னார்கள். அதாவது இலங்கை அடங்காமல் நடந்தால் பாஜகவின் பாதை என்னவாக இருக்கும் என்பது யாழில் கிளிச்சாத்திரம் சொல்லுபவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் பீதி.

 

பாஜகவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்த உறவும் இது வரையில் இருப்பதாக செய்திகள் வெளிவரவில்லை. பொன்சேக்காவை தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செய்த முயற்சிகள் வெளிப்படை. பாஜக இது வரையில் இங்கையின் தமிழ்- சிங்கள அரசியலில் தலையிடவில்லை. தாங்கள் தலையிட போவதில்லை என்று பலதடைகள் சொல்லிவிட்டார்கள். இதன் பின்னார் இனி வரும் "நம்பிக்கை ஆய்வுகள்" எல்லாம் ஆருடம் மட்டும்த்தான். அவை அரசியல் ஆதாரங்களை தொடாதவை. காங்கிரஸ் வரும் ஐ.நா. பிரேரணைக்கு போகாமல் இருந்தால் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வருவதை தடுக்க ஒரு வழியும் இல்லை. எனவே காங்கிரஸ் போய்ச்சேர வேண்டும்.

 

கோத்தா இந்தியா மீது போர்க்குற்றத்தை கூறி பலதவைகள் கை நீட்டிவிட்டார். முல்லைதீவின் கண் காண் சாட்சியங்கள் காங்கிரசின் போர்க்கப்பல்கள் குண்டு வீசியதற்கு ஆதரங்களாக இருக்கிறார்கள். ஐ.நா. முன்னால் சென்று போர்க்குற்றம் பற்றி காங்கிரஸ் மீது விசாரிக்கும் போது, இலங்கை ஆமியும் கோத்தாவும், தாய்மீதான ஒவ்வொரு ஆதாரத்தையும் வெளியிடுவதை  பதவிக்கு வரப்போகும் ராகுல், வரவேற்பார் என்றும் அதற்கு தமிழர்கள் சரியாக காய் நகர்த்த வேண்டும் என்பதும் சாத்திரத்தில் கூட வர முடியாத வசனங்கள்.  உண்மையில் அப்படி தமிழ்ர்கள் காய் ங்கர்த்தலாம் என்பது கற்பனயே.

 

கருணாநிதி  ஐந்து வருடங்களாக 33 தொகுதிகள் வைத்திருந்த போது காங்கிரசில் ஒரு மாற்றமும் செய்ய முடியாமல் 2009 ஏப்பிரல் தேரதல் வரைக்கும் சோனியாவின் காலை நக்கினார். அதன் பின்னர் முசோலினி அம்மையார் மு.கா. கவனிக்காமல் முழுவதாக முடிக்கும் படி கட்டளை போட்டார்.  இந்த கருணாநிதியை காட்டி ஆள் பிடிக்கும் அரசியல் ஆய்வாளர்கள், ஒரு தொகுதியில் தானும் வெல்லப் போவதில்லாத சோ வும், போக இடம் இல்லாமல் போனபின்னர் பாஜகவில் ஒட்டிய  சு.சா வன்னாவும் மோடியின் அரசாங்கத்தை நடத்த போவதாக படப்பாயம் அடிக்கிறார்கள்.  இது ஆரூடமா அல்லது வியூகமா தெரியாது. ஆனால் மோடி இந்த மொட்டைகளை வைத்து கொள்ளை அடிக்கும் அரசியல் செய்துதான் குஜராத் இன்று அப்படி முன்னேறியிருக்கு, பாஜக வுக்கு காங்கிரசை தோற்கடிக்க ஒரு பலம் வந்திருக்கு என்பதும், முசோலினி அம்மா இவர்களை ஒதுக்கி வைத்து விட்டு நாணய அரசியல் செய்துதான் இந்தியா பொருளாதாரம் சரிய தொடங்கி காங்கிரசின் பதவி போக போகிறது என்பதுவுமா இவர்களின் விளக்கம்.  ஆனால் எந்த அவதானம் குறைந்த ஒருவரும் கூட, கடந்த ஐ.நா பிரேரணை நேரம் உயிருடன் இருந்திருந்தால், பிரேரணையை குழப்ப முசோலினி அம்மா மட்டும்தான் சு.சா.வன்னாவை பயன் படுத்தினார் என்ற உண்மையை அறிந்திருப்பார்கள். பா.ஜ.க. சேர்ந்து ஆறுமாதமாக முதலே, சு.சா.வன்னாவை அடக்கி வாசிக்கும்படி ஆலோசனை கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துவிட்டன. இதனால் தாங்கள் எப்படி ஐ.நா பிரேரணையை குழப்ப சு.சா.வன்னாவை பயன் படுத்தினார்களோ அதையும் விட மோசமாக மோடி பயன் படுத்த போவதாக் மிரட்டி அலுவல் கொண்டு போக போகிறார்கள். (அடுப்பு நெருப்பிலை அலுவலாக இருக்கும் தாய் குழந்தை எழுந்து அழுதால் "ஓநாய் வர போகிறது, கண்ணை மூடு" என்று சொல்லி கண்ணை மூடவைத்துவிட்டு தாலாட்டுப்பாடி பிள்ளை தூங்க வைத்துவிட்டு தன் அலுவலில் ஒடி விடுவாள். அது போல் இருக்கிறது இந்த சு.சா.வன்னா என்ற ஓநாய்க் கதை)

 

மோடி வர வேண்டும். பாஜகவின் தலையிடாக் கொள்கை வர வேண்டும். ஐ.நா. பிரேரணை முன்னால் போக வேண்டும்.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, இந்தக்கட்டுரை உங்களின் ஆக்கமா?? எழுதப்பட்ட விதம் பலவிடயங்களக் கூறுவதுபோலத் தோன்றினாலும், என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முடிவில், என்னதான் சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை. பாரதீய ஜனதா வரவேண்டும் என்கிறார்களா? அல்லது கிண்டலடிக்கிறார்களா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.