Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கை 2 - ஜெயபாலன்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்கனோ திரு எம் பெள்சார் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி

 

தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

இன்று பார்த்தேன்  கவிஞரின் இப்படி ஒரு முயற்சியை .

 

http://eathuvarai.net/?p=4138

 

இதனை தனித்திரியாக பதிவுசெய்தால் மகிழ்வேன்,

  • Replies 72
  • Views 5.5k
  • Created
  • Last Reply

வல்கனோ திரு எம் பெள்சார் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி

 

தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

இன்று பார்த்தேன்  கவிஞரின் இப்படி ஒரு முயற்சியை .

 

http://eathuvarai.net/?p=4138

 

இதனை தனித்திரியாக பதிவுசெய்தால் மகிழ்வேன்,

 

இதே பெளசர் உங்கள் அறிக்கை 1 இல் நான் வைத்த கேள்விகளை சுபேஸ் முகநூலில் பகிர்ந்த போது அதனை வரவேற்று லைக்கும் போட்டு இருந்தார். பெளசர் உங்களை புரிந்து கொண்டதையிட்டு சந்தோசமாக இருந்தது.

 

நன்றி

செயபாலனைப் பற்றிய எனது கணிப்பை கிழே தரும் உரையாடலும் உறுதி செய்கிறது.

 

இது முகநூலில் நடந்த்த ஒரு உரையாடால், இக் கருத்தாடலுக்கும் பொருந்தும் என்ற படியால் இங்கே இடப்படுகிறது.

 

Jaya Palan · 1,971 followers4 hours ago ·

  •  
    FATE OF MY BOOK ON MUSLMS AND TAMIL

    என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.
    தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.
     
    Ramanitharan Kandiah திரு ஜெயபாலன், உமது "கணம் சித்தம்; ஷணம் பித்தம்" குறிப்புகளுக்கு, ||தனிப்பட்ட ஒரு பார்வையாளனாக|| பதிலைத் தர எண்ணுகிறேன். குறைந்த பட்சம் முன்னைய -குறைந்தளவு இரு தடவைகள் போல- செயற்பாடுபோல, பதிலைப் போட்டவுடன் குறிப்பையே கழற்றிக்கொள்ளும் தன்மையை எண்ணும்போது ஏதும் பயனில்லை என்றே தோன்றுகின்றது. வேறொன்றும் வேண்டாம்; நீர் கண்டனக்குரல் கொடுத்த பேஸ்புக் குறிப்பு எங்கே? அங்கே உமக்கு "அது முடக்கப்படவில்லை" என்பதைத் தெளிவுபடுத்தித் தரப்பட்ட விளக்கத்தோடு, உடனேயே காணாமற்போனது ஏன்? இங்கே நீர் உமது அநாவசியமான விளம்பரத்துக்கு, கேட்டு உம் புத்தகத்தை -சூழலின் தேவைகருதி- வாங்கிப் போட்டவர்களிலேயே சுரண்டிக்கொண்டு செய்யும் கூத்தினை இனியும் |தனிப்பட்ட பார்வையாளானாகப்| பொறுக்கமுடியாமலே எழுதவேண்டியிருக்கின்றது. முதலிலே "புத்தகத்தை எழுநா வெளியிடவில்லை" என்று சொன்னீர். அதற்கு வந்த விளக்கத்தோடு ('சரிநிகர்' சிவகுமார் போட்டிருந்தார் என நம்புகிறேன்); அக்குறிப்பு உடனே காணாமற்போய்விட்டது. பின்னால், சயந்தனிலே தனிப்பட அவரேதான் வெளியீட்டுவிழாவினைத் தடுக்கின்றார் என்றவாறு இன்னொரு குறிப்பு (உம் கைதுக்கு முன்னே); அதற்கு புத்தகம் அச்சிட்டதிலிருந்து வந்ததுவரை நடந்த கதை உழன்ற கதை விளக்கமெல்லாம் யாரோ பின்னூட்டியிருந்தார்கள் என நம்புகிறேன். உடனே, அக்குறிப்பும் எதுவித மன்னிப்புக்கோரலுமின்றி மறைந்துவிட்டது. இப்போது, இது. என்னதான் நினைத்துக்கொண்டிருக்கின்றீர்? உமது கைதுக்குப் பின்னால், இன்றைக்கு, நோர்வே பிரஜையும் பஷீர், சொல்கைம் நண்பருமான உமக்கு விடுதலை கிட்டினாலும், இலங்கையிலே உமது புத்தகவெளியீட்டினை யாராவது நடத்தினால், தமிழரோ, முஸ்லீமோ என்ன ஆகுமென்று யோசித்துப்பார்த்தீரா? பார்க்கமாட்டீர்; ஏனென்றால், உமக்கு உம் விளம்பரமே பெரிது. உம் நூலுக்குமுன்னால், சரிநிகரிலே 90களிலே முஸ்லீம்-தமிழர் உறவு தொடர்பாக முஸ்லீம்கள் எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்து மெய்ப்பார்த்து எல்லாம் முடிந்தபின்னால், அவர்களிலே எல்லோரினதும் தொடர்புகளில்லாததாலே பதிப்புரிமை பெறப்படாததாலே தள்ளிப்போடப்பட்டது. என்றைக்காவது, இப்படியான செயற்பாடுகளின் பின்னே குந்தியிருந்து செய்கின்றவர்களின் (தமிழே எழுத்துப்பிழை, இலக்கணவழுவின்றி எழுததெரியாதவர்களின் மொழி திருத்தி, அவர்களின் ஆயிரம் ஆர்ப்பாட்டங்களின்பின்னே தொடர்புபடுத்தி, நூலாக்க வடிவமைத்து, பதிப்பாளர்களின் வாழைப்பழபிசினஸிலே கலையையும் நெறியையும் கொணரச் செயற்பட்டு இருக்கின்றவர்களின் செயற்பாடுகளைப் பற்றியெல்லாம் உங்கள் புத்தகவெளியீடுகளிலேயே கண்டுகொள்ளமாட்டீர்கள் ஆனால், எடுத்தோம் கவிழ்த்தோமென சயந்தனையோ எழுநாவையோ தாக்கமட்டும் ஆகின்றது. பொதுவாக, சார்ந்த அமைப்பின் பொதுக்கருத்துகளையும் ஒருவனின் தனிப்பட்ட கருத்துகளையும் வேறுபடுத்தத் தெரியாத, உசார்மடையர்களைக் கொண்ட இணையத்திலே, தனிப்பட ஒருவன் எப்படியாகத் தாக்கப்படலாமென்று, "தமிழ்மணம்" அமைப்பிலேயிருந்துகொண்டு, சில தன்னலமும் தன்னுயர்ச்சியுமே முக்கியமாகி அரசியல் செய்து இன்றைக்குப் பிரபலமான சில பதிவர்களின் கூட்டுக்கும்பி டவுசர் அவிழ்ப்புகளிலே கண்டிருக்கின்றேன். அதனாலேயே இன்றுவரை எழுநா|சயந்தன் குறித்து நீர் விடும் பரபரப்பு அறிக்கைகளிலே ஒன்றுமே சொல்லாதிருந்தேன். ஆனால், இன்றைக்கு உமது ஆடுகளநடிப்பு இங்கு அதீதமானதாலே இத்தனிப்பட்ட ஆளின் பதில் தவிர்க்கமுடியவில்லை.
     
    Ramanitharan Kandiah 90 இலே நும்புத்தகம் ஒரு மாறுபட்ட, தேவையான பார்வையை முஸ்லீம்-தமிழர் உறவு தொடர்பாகக் கொடுத்த காரணத்தினாலே, உமது குழந்தைத்தனமான கூத்துக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கின்றது. ஒரு காலகட்டத்திலே நம் கவிஞன் என்ற இறுமாப்பினை எனக்குத் தரவைத்த நீர், இன்றைக்கு வெறும் உம்மைச் சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பொய்யையும் புனைசுருட்டையும் எழுப்பும் ஓராளாகப் போன வெறுப்புமட்டுமே எஞ்சி நிற்கின்றேன். ||உமக்கு நான் பட்டதொரு பழைய ஒரு கடப்பாடு எதையும் உமக்கு மாற்றாகப் பகிரங்கத்திலே பேச விடுகிறதில்லை.|| இதற்கும் சம்பந்தப்படாமல், ஏதாவது இங்கு எழுதி, வாசிக்கின்றவர்களை நாணவைத்துவிடுவீர் என்பதையும் அறிவேன். உம்மைச் சிறைப்பிடித்து வைத்திருந்ததற்குக் கண்டனம் தெரிவித்த எல்லோரையும் விட்டுவிட்டு, டெஸோ பாய்ஸுக்கு நன்றி தெரிவித்த ஆளாச்சே நீர்! குதித்து லைக் பண்ணுகின்றவர்களிலே எத்தனைபேர் கொஞ்சமாவது என்ன ஏது என்று இழவு யோசிக்கின்றார்களா தெரியவில்லை உம்மீது என் மதிப்பு உறாக அழிந்துபோனாலுங்கூட, என் நண்பர்களான உமது உடன்பிறப்புகளுக்காக எதையும் பொதுவிலே பேச இனியும் தயங்குவேன். அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாதல்லவா? இக்குறிப்பும் இங்கே அழிந்துபோகலாமென்பதாலே, என் முற்றத்திலும் போட்டுவைக்கிறேன். மீண்டு வந்தது குறித்து மிக்கமகிழ்ச்சி!
     
     

 

முதல் இருந்த திரியை மூடி விட்டீர்கள். இதென்ன மீண்டும் பொயட்  வெளிவந்த விதம் பற்றியே விவாதம் போகுது

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை! இனியாவது பொய் சொல்லாதீங்கோ - வ. ஜ. ச ஜெயபாலனுக்கு பகிரங்கக் கடிதம்

 
VIS.jpg
பேரன்புமிக்க வ.ஜ.ச ஜெயபாலன் அண்ணருக்கு!

அண்ணை!

எனது நண்பர் ஒருவர் சற்றுமுன் தொலைபேசியில ”அண்ணரின் அறிக்கையை வாசித்தாயா” என்று பேச்சை ஆரம்பித்து, இன்றைய (05.12.13) உங்கள் முகப்புத்தக செய்தியை பதிவு / அறிக்கையை அறியத்தந்தார்.

இதுதான் உங்கள் பதிவு / அறிக்கை:

என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.

தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.

இவை நிற்க,

சிலவாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து எழுநா சார்பில் ”டிஸ்கவரி புக்பேலஸ்” என்னும் நிறுவனம் சில புத்தகங்களை அனுப்பியிருந்தது.

அதில் ஒரு புத்தகத்தில் வ.ஐ.ச ஜெயபாலன் என்று இருந்தது. சற்று உற்றுப்பார்த்தேன், சத்தியமாக உங்கள் பெயர்தான் அது. உங்களை நன்கு அறிவேன் என்பதால் புத்தகத்தின் தலைப்பையும் பார்த்தேன். அது இப்படி இருந்தது. ”தோழமையுடன் ஒரு குரல்”  ”முஸ்ஸீம் தேசியமும் தமிழ்-முஸ்ஸீம் உறவுகளும்”

இப்பவும் அந்தப் புத்தகத்தை எனக்கருகில் வைத்திருந்தபடியேதான் இதையும் எழுதுகிறேன். அத்துடன் உங்களின் புத்தகம் நோர்வேயில் உள்ள பலரிடம் உண்டு என்பதையும் அறியத்தருகிறேன்

அண்ணை!  உங்களின் இன்றைய அறிக்கையையும் வாசித்தேன். புத்தகத்தையும் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இந்தப் புத்தகத்தை எழுநா வெளியிட மறுப்பதாக எழுதுகிறீர்கள். ஆனால் என் கண்களுக்கு முன்னால் ஒருவித நீல நிற முன்னட்டையுடன் நீங்கள் கூறும் புத்தத்தை எழுநா வெளியிட்டுள்ளது என்று இருக்கிறது.

அண்ணை! நீங்கள் திரைப்படத்துறையில் இருப்பதால்  என்னிடம் இருப்பது கமரா கொப்பியாக இருக்குமோ என்னும் சந்தேகமும் வருகிறது.

அண்ணை! இதுவும் இந்த இடத்தில் நிற்கட்டும்.

காலச்சக்கரத்தை ஒரு சில மாதங்களுக்கு முன்னான பகுதிக்கு பின்நோக்கி மெதுவாகச் சுளற்றுங்கள்.

நீங்கள் போர்க்குற்றவாளிகளின் / பேரினவாதிகளின் சிறைசென்று மீளுமுன், இந்தியாவில் இருந்தபடியே ”யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் ஒரு புத்தகவிழாவில், எனது புத்தகமான ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதை குறிப்பிட்ட ஒரு நபர் தடுக்கிறார்” என்று ”அறிக்கை”விட்டீர்களே, அது நினைவிருக்கிறதா?

அதிக அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுபவரல்லவா நீங்கள். சிலவேளைகளில் மறந்திருக்கும். அதுதான் நினைவூட்டுகிறேன்.

மேற்குறிப்பிட்ட அந்த அறிக்கைக்கு பதிலளித்த சரிநிகர் சிவகுமார்  உங்களின் கருத்து பிழையானது என்று அவர் தந்திருந்த பதிலினைத்தொடர்ந்து நீங்கள் அப்பதிவினை முகப்புத்தகத்தில் இருந்து நீக்கியிருந்ததையும் உங்களுக்கு இவ்விடத்தில் நினைவூட்டவிரும்புகிறேன்.

அன்று நீங்கள் முகப்புத்தகத்தில் கூறியது பச்சைப் பொய் என்பதை பலரைப்போல் நானும் அறிந்திருந்தேன். உங்கள் ”அறிக்கையின்”  உண்மையை அறிந்த பலரும் கண்டனம் அல்லது மறுப்பு தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவும் இவ்விடத்தில் நிற்கட்டும்.

அடியேனும் எழுநாவினூடாக ஒரு புத்தகத்தினை சென்ற வருடம் வெளியிட்டிருந்தேன். எனவே  ஒரு புத்தகத்தை அவர்கள் வெளியிடமுன், வெளியிட்டபின் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதுபற்றியும், அவர்கள் எந்தளவுக்கு தொடர்புகளை பேணுவார்கள் என்பது பற்றியும் நானும் மிக மிக நன்கு அறிவேன்.

இதுதவிர, புத்தகம் வெளிவந்ததும் ”டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினர் எழுத்தாளர்களுக்கு புத்தகங்களை அனுப்பிவைப்பார்கள் என்பதையும் நான்மிக நன்கு அறிவேன். உங்களுக்கும் அவர்கள் புத்தகத்தை அனுப்பியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் நீங்கள் இப் புத்தகத்தை சிலரிடம் காட்டியிருக்கிறீர்கள் என்று அறியவும் கிடைத்தது. எனவே புத்தகம் உங்களை வந்தடைந்திருக்கிறது.

இதுவும் இவ்விடத்தில் நிற்கட்டும்.

உங்களிடம் சில கேள்விகளை கேட்கவிருக்கிறேன்.

கேள்வி 1:

இவ்விடத்தில் கேள்வியினை கேட்க முதல் உங்கள் முகப்புத்தக அறிக்கையில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.

தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.

அண்ணை! உங்கள் ”தோழமையுடன் ஒரு குரல்” என்னும் புத்தகத்தை எழுநா  ”பாதுகாப்பு காரணங்களைக்காட்டி வெளியிட மறுத்திருக்கிறது என்று நீங்கள் இன்று (05.12.13) கூறுகிறீர்கள் அல்லவா? ஆக இன்றைய தினம்வரையில் அப்புத்தகம் இன்னும் வெளிவரவில்லை என்பதுதானே உங்கள் கருத்து.

அப்படியாயின் சில காலங்களுக்குமுன் நீங்கள் ”யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் ஒரு புத்தகவிழாவில் எனது புத்தகமான ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதை குறிப்பிட்ட ஒரு நபர் தடுக்கிறார்” என்று அறிக்கைவிட்டதற்கான காரணம் என்ன?

உங்கள்  அறிக்கையின்படி, இன்றுவரையில் வெளிவராத அந்தப் புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த எழுநாவின் புத்தக அறிமுகவிழாவில் அறிமுகப்படுத்துவதை ஒருவர் தடுத்தார் என்று நீங்கள் எப்படி‌க் கூறலாம்? வெளிவராத புத்தகத்தை யாரேனும் அறிமுகம் செய்வார்களா?

கேள்வி புரியும் என்று நினைக்கிறேன். (உங்களுக்கா புரியாது)

கேள்வி 2:

அப் புத்தகம் அன்று வெளிவந்திருந்தது என்றால் இன்றைய (05.12.13) அறிக்கையை நீங்கள் வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 3:

நெடுநாட்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே”  நீஙகள் இந்த கண்டனக் குரலைக் கொடுத்தபோது சரிநிகர் சிவகுமார் அதற்கு நெத்தியடியாக தந்த பதிலின்பின், நீங்கள் உங்களின கண்டனத்தை முகப்புத்தகத்தில் இருந்தே அழித்திருந்ததை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஆக உங்களுக்கு சிவகுமாரின் பதில் உண்மையை விளக்கியிருக்கிறது. எனவே அதை அழித்தீர்கள். ஆனால் இன்று மீண்டும் அதேமாதிரியான கண்டனத்தை வெளியிடுகிறிர்கள்.

கேள்வி 4

எழுநா உங்களின் புத்தகத்தை வெளியிடும் முயற்சியை கைவிட்டுள்ளது என்கிறீர்களே. அதற்கான ஆதாரத்தை நீங்கள் முன்வைத்திருக்வேண்டுமல்லவா?

அண்ணை! மேற்கூறியவற்றைப் கோர்த்துப்பார்க்கும்போது நீங்கள் வெளியிட்ட அறிக்கைகள் எவ்வளவு மலிந்த, கீழ்த்தரமான எண்ணங்களை உள்ளடக்கியவை என்பதை நான் கூறவேண்டியதில்லை. உங்களின் பிரபல்பயம், அனுதாபம் தேடும் ஆடுகளங்களுக்கு சமூகத்தினையும், சமுகத்தில் இயங்கும் இலாபநோக்கற்ற நிறுவனங்ளையும், அங்கு இயங்கும் மனிதர்களையும் பாவிக்காதீர்கள்.

இனங்களுகளுக்கிடையில் ஒற்றுமையை பேசுகிறீர்கள்.  முதலில் உங்கள் எழுத்துடனும், உண்மையுடனும், மனதுடனும் ஒற்றுமையாயிருங்கள்.

அண்ணை! உங்களின் நேர்மையற்ற ஆடுகளங்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். பெரியமனிதர் என்று வைத்திருந்த அத்தனை மரியாதையையும் அழித்துக்கொண்‌டிருக்கிறீர்கள். உங்களை அறிந்தவர்கள் முன் நகைக்கிடமாகியிருக்கிறீர்கள்.

அண்ணை! சாதாரணமாக பகிரங்கமாக குற்றம் சுமத்துபவன் நான் அல்லன். அது அநாகரீகமானது என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் அளவுக்கதிகமாக  எல்லைகளை மீறியிருக்கிறீர்கள். எத்தனை எத்தனை பொய்களை அள்ளி அள்ளி வீசியிருக்கிறீர்கள். இப்போது சமூக அமைப்புக்களையும் கேவலப்படுத்துகிறீர்கள். எனவே நானும் எனது எல்லைகளை மீறவேண்டியிருக்கிறது.

உங்களைப்போல் பிரபல்யத்துக்காக சமூகப்போராளியாகும் மனிதர்களாலேயே எம் சமூகம் இப்படி இருக்கிறது. உங்களைப்போன்றவர்களுக்கும் ஜால்ராக்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதுதான் கசப்பான யதார்த்தம்.

உங்களின்  சிறைமீண்ட அறிக்கைக்கு கருத்து தெரிவித்தபோது நாம் இது பற்றிப் நேரில்பேசுவோம் என்ற தொனியில் எழுதியிருந்தீர்கள்.  மறு கணம் என்னை நீங்கள் உங்கள் முகப்புத்தகத்தில் இருந்து தடைசெய்திருந்தீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் ஊடகச்சுதந்திரம்பற்றிப் பேசினீர்கள்.

அன்று உங்களுக்கு கூறிய பதிலையே நான் இன்றும் கூறுகிறேன். ”வாருங்கள் எங்கும் எதிலும் பேசிக்கொள்ளலாம்”

முடிந்தால் பதில்தாருங்கள்.

தயவு செய்து ஒரு வேண்டுகோள்!

தமிழ்த் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் நேரங்களில் எதுவும் நடக்கலாம் என்பது போல எனது முகப்புத்தத்தை ”யாரோ hack செய்திட்டாங்கள்” அது, நான் எழுதாத பதிவு / அறிக்கை என்று சொல்லிவிடாதீர்கள், முகப்புத்தகம் தாங்காது.

தோ‌ழமையுடன்

சஞ்சயன்

 

http://visaran.blogspot.com.au/2013/12/blog-post_5.html

ஏன் எல்லாரும் இவரின் மேல் ஏறி கும்மியடிகிறார்கள்??

தமிழரின் மேல் வந்தவன் போனவன் எல்லாம் அடிக்கிறான்... இவரும் அடித்தால் என்ன?

 

இவரில் நிறைய பேருக்கு கடுப்பு இருக்கு என்று மட்டும் தெரிகிறது....

 

இவரின் கொள்கை எல்லாசமூகதோடும் சேர்ந்து இயங்குவதென்றால்..அவர் அதன்படி நடந்தால் மற்றவர்கெல்லாம் கடுப்பு ஏன்?

அவரை பிடிக்கவில்லை என்றால்...அவருக்கு கருத்து சொல்லாமல் இருக்கலாம் தானே...

 

தலைவர் "என்ன" சொன்னாலும் "சரி"..மற்றவன் சொன்னா பிழையா? நல்ல தமிழ்தேசியம்.....

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாரும் இவரின் மேல் ஏறி கும்மியடிகிறார்கள்??

தமிழரின் மேல் வந்தவன் போனவன் எல்லாம் அடிக்கிறான்... இவரும் அடித்தால் என்ன?

 

இவரில் நிறைய பேருக்கு கடுப்பு இருக்கு என்று மட்டும் தெரிகிறது....

 

இவரின் கொள்கை எல்லாசமூகதோடும் சேர்ந்து இயங்குவதென்றால்..அவர் அதன்படி நடந்தால் மற்றவர்கெல்லாம் கடுப்பு ஏன்?

அவரை பிடிக்கவில்லை என்றால்...அவருக்கு கருத்து சொல்லாமல் இருக்கலாம் தானே...

 

தலைவர் "என்ன" சொன்னாலும் "சரி"..மற்றவன் சொன்னா பிழையா? நல்ல தமிழ்தேசியம்.....

இந்த திருமுருகன் ஏன் தீக்குளிக்க கூடாது?

யாரவது அப்பாவிகள் தான் ஒரே தீகுளிகிரார்கள்

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

நீங்கள் மட்டும் 'திருமுருகனைத்' தீக்குளிக்கச் சொல்லலாமாக்கும்!

 

பிடிக்கவில்லையெனில், கருத்துச் சொல்லாமல் விலகிப்போயிருக்கலாம் தானே! :o

 

நீங்களென்ன 'குருக்களோ' ? :icon_mrgreen:

பிடிக்கவில்லையெனில், கருத்துச் சொல்லாமல் விலகிப்போயிருக்கலாம் தானே! :o

 

சம்பளம் கிடைக்காதவர்கள் விலகலாம் என்பதுதான் அவர் கருதுவது போலிருக்கு. 

 

இந்த திருமுருகன் ஏன் தீக்குளிக்க கூடாது?

யாரவது அப்பாவிகள் தான் ஒரே தீகுளிகிரார்கள்

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

நீங்கள் மட்டும் 'திருமுருகனைத்' தீக்குளிக்கச் சொல்லலாமாக்கும்!

 

பிடிக்கவில்லையெனில், கருத்துச் சொல்லாமல் விலகிப்போயிருக்கலாம் தானே! :o

 

நீங்களென்ன 'குருக்களோ' ? :icon_mrgreen:

 

 

நீங்கள் சொல்வது மிக சரி...

 

நான் சொன்னது இங்கே யாழில் அவரை தொடர்ந்து தாக்குபவர்களை...

 

நான் சொல்வது திருமுருகனுக்கு கேட்க்கபோவதில்லை...

 

வாழ்க தமிழ்தேசியம் :)

 

சம்பளம் கிடைக்காதவர்கள் விலகலாம் என்பதுதான் அவர் கருதுவது போலிருக்கு. 

 

சீமான், திருமுருகனுகெல்லாம் நல்ல வருமானம் போல....

 

அண்ணன் சீமான் வாழ்க....

 

சீமான், திருமுருகனுகெல்லாம் நல்ல வருமானம் போல....

 

அண்ணன் சீமான் வாழ்க....

அவர்கள் யாழில் வந்து யாருக்கெதிராகவாவது  ஏறிக்குதித்த நாள் எனக்கு ஞாபகம் இல்லை. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகரியும் எனது தோழமையுடன் ஒரு குரலும்.

 

 கோமாளியுமான  சஞ்சயனின் கோபத்தை நான் புரிந்துகொள்கிறேன். இலங்கையில் பாதுகாப்புச் சூழல் நிலவுவதாக அவர்கள் ஏற்படுத்திய மாயையை என் கைது சிதறடித்ததுபற்றிய அவரதும் அவரது நண்பர்ர்களதும் கவலைக்கு நான் என்ன செய்வது? இதுபற்றி அவர்கள் அரசிடம்தான் கேட்க்கவேன்டும். நான் சஞ்சயனின் உளறல்களைப்  பொருட்படுத்தி  இந்த பதிலை நான் எழுதவில்லை. யாழ்கள உறவுகளுக்கு என் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இந்த பதில் எழுதப்படுகிறது.

 

நிகரியால் எனது புத்தகம் தோழமையுடன் ஒரு குரல் அச்சானபின்னர் டிஸ்கவரி புத்தகநிலையத்துக்கு விற்பனைக்கு வந்தது. ஆனால் அவர்கள் திடீரென என்புத்தகத்தை விற்பதை நிறுத்திவிட்டார்கள். கேட்டதற்க்கு நிகரியால் தோழமையுடன் ஒருகுரல்  விற்பனை தடுக்கப்படுள்ளதாக டிஸ்கவரி புக் பலஸ் எனக்கு தெரிவித்தது.தஆனால் குறிப்பிட்ட ஒருநபர் புத்தக வெளியீட்டுக்கு தடையாக இருப்பதாக அக்கறையுள்ள முஸ்லிம் நண்பர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் கண்டித்தபோது எழுநா நண்பர் ஒருவர் எழுத்துப்பிழை திருத்தவே புத்தக விற்பனை தடுக்கப்பட்டதாக சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். பின்னர் யாழ்ப்பாணத்தில் எழுநா புத்தகங்களோடு தோழமையோடு ஒரு குரல்  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது... அங்கும் தோழ்மையோடு ஒருகுரல் வெளியிடப்படப்போவதில்லை என தாங்கள் அறிவதாக எனது முஸ்லிம் நண்பர்கள் சிலர் எனக்கு எழுதினார்கள்.  அதுதொடர்பாக நான் கண்டித்தபோது நிகரி எனது புத்தகம் கிழக்கில் வெளியிடப் படுமென சொன்னார்கள்..

இப்போ எனது புத்தகத்தை வெளியிடுவது பாதுகாப்பு பிரச்சினை என்கிறார்கள்.

 

 
நிகரிக்கு என் கைதுக்கு முன்னிருந்தே எனது புத்தகம் பற்றி சிக்கல் இருந்துள்ளது. அது ஏன் என்பது பற்றி அவர்கள் காரணம் கூறவில்லை . இப்போது எனது புத்தக வெளியீடு பாதுகாப்பு பிரச்சினை என்கிறார்கள். அதற்க்கு புத்தகத்தின் உள்ளடக்கத்தில் ஆதாரம் இல்லை. என் கைதுக்கு முன்னம் அவர்கள் எனது புத்தகத்தை வெளியிடத் தயங்கியதற்க்கு என்ன காரனம் என்பதும் தெரியவில்லை.

 

எனது புத்தகம் தமிழ் முஸ்லிம் உறவு பற்றியே பேசுகிறது. இதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ள பகுதிகள் இல்லை.இதனை வெளியிட முஸ்லிம் நண்பர்கள் தயங்குவதாக சொல்வதை நம்பமுடியவில்லை.ஆனல் நிகரிக்கு அதுபற்றி அச்சம் இருந்தால் அளவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளட்டும். புத்தக வெளியீட்டை என் தமிழ் முஸ்லிம் நண்பர்கள் ஊடாக நானே ஏற்பாடு செய்கிறேன். 

 

 

எனது புத்தகத்தை வெளியிட முஸ்லிம் நண்பர்கள் முன்வந்திருக்கிறார்கள். நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நிகரிக்கு தட்டச்சு செலவு அச்சுக்கு போன 100 புத்தக செலவுகளை நான் கொடுத்துவிடுகிறேன்.மற்றப்படி நிகரியின் பாதுகாப்புக்குக் குந்தகம் விழைவிக்கும் நோக்கம் எனக்கில்லை. அதே சமயம் தமிழ் முஸ்லிம் யஉறவு தொடர்பான எனது தவம் தோழமையுடன் ஒரு குரல். அதற்காக நான் எதிர்கொண்ட ஆபத்துக்களும் கண்டனங்களும் எண்னிலடங்காது. தோழமையுடன் ஒரு குரல் புத்தகத்தை நான் கைவிட முடியாது. .

 

யாழ் விரும்பினால் யாழில் என் புத்தகத்தை பகுதி பகுதியாக வெளியிடுவேன்.

 

நிகரிக்கு  என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மை டியர் அண்ணோய்!

உங்களின் கையால் பட்டம்சூட்டப்பெற்றதையிட்டு பெருமயைடையும் அதேவேளை கனக்க கேள்விகேட்டால் உங்களுக்கு ஒரே குழப்பமாய் இருப்பதால், ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறேன்.

உங்களின் முகப்புத்தகத்தில் யாழ்ப்பாணத்தில் உங்களின் தோழமையுடன் ஒரு குரல் புத்தகத்தை அறிமுகம் செய்ய மறுக்கிறார்கள் என்று எழுதியது உண்மையா இல்லையா?

பதில் ஆம் அல்லது இல்லை என்றிருக்கவேண்டும் கவிஞரே!

என்மீதான தடையை நீங்கள் அகற்றினால் முகப்புத்தகத்திலும் உரையாட நான் தயார்.  சிலவேளைகள் அரச ஆதரவாளருடன் நீங்கள் இரகசியமாகத்தான் உரையாடுவீர்களோ தெரியாது.


தோழமையுடன்
அரசு ஆதரவாளர்களரும் கோமாளியும் என உங்களால் பாராட்டப்பட்ட
சஞ்சயன்

Edited by சஞ்சயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மை டியர் அண்ணோய்!

முகப்புத்தகத்தில நீங்கள் நேற்று எழுதிய விடயத்தை வழமைபோல அழிச்சிட்டு ஒளிந்துவிட்டீர்களாமே. 

வெரி பாட். அண்ணை.

ஆனாலும் நீங்கள் எழுதியதை உங்களுக்காக நான் கொப்பி எடுத்து வைத்திருக்கிறேன்
அண்ணை! ஆவணப்படுத்தலின் அவசியம் இப்ப விளங்கியிருக்கும் என்ன?

 

எழுதினதில கள்ளமில்லாட்டி அழிச்சிருப்பீங்களா என்ன...

 

தோழமையுடன்
அரசு ஆதரவாளர்களரும் கோமாளியும் என உங்களால் பாராட்டப்பட்ட
சஞ்சயன்

Edited by சஞ்சயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி எழுநாவுடன் பேச எதுவுமில்லை. கவுரவமாக விலகிக் கொள்ளுவோம்.

 

சிவகுமார் எனது தோழன் அவர் உண்மையாகவே இந்த புத்தகத்தை கொண்டுவர விரும்பினார். எழுநாவில் நெடுங்காலமாக என்மீது பகை வளர்த்துவரும் ரமணீதரன் போன்றவர்கள் இருப்பது தெரிந்திருந்தால் எழுநாமூலம் என் புத்தகத்தை வெளியிட முன்வந்திருக்கமாட்டேன். புத்தகத்துக்கு தடங்கல் ஆரம்பித்தபோது என் நண்பர்கள் சயந்தனை சுட்டிக்காட்டினார்கள். ஆனால் எழுநாவில் என்னுடன் நெடுங்காலமாகவே பகமைகொண்டிருக்கும் ரமணீதரன் அங்கம் வகிப்பது தெரிந்தபோது எனக்கு உண்மைகள் புலனாக ஆரம்பித்தது.

என்கைதுக்குபின் உள்ள பாதுகாப்புச் சூளல் இப்போது சுட்டிக் காட்டப்படுவதால் தொடர்ந்து விவாதிபதில் அர்த்தமில்லை. ஒருவரது அல்லது ஒரு நிறுவனத்தினது பாதுகாப்பு பற்றிய அச்சத்தை நான் ஒருபோதும் அலட்சியப் படுத்த மாட்டேன். நாம் விலகிகொள்வோம். தட்டச்சு செலவுகளையும் ஏனைய செலவுகலையும் நான் தந்துவிடுகிறேன். பாதுகாப்பு சிக்கல் பற்றி கவலைப் படாதவர்கள் என் புத்தகத்தை வெளியிடட்டுக்கும்.

மிக சிறந்த அரசியல் வாதியாக இருந்த SJV ஒரு புல்லின் இதழைக்கூட புடுங்க்காமல்த்தான் போனார். பல துறைகளில் திறமை காடிய தலைவரும் எதும் செய்து முடிக்கவில்லை. தொடர்ந்த 65 வருட கால அர்ப்பணங்களால் இன்று சூழ்நிலையில் காணப்படும் மெல்லிய நெகிழ்வை வைத்து தாங்கள் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் வாங்கியத்தாக காட்ட விழைந்தால் எப்படி?

 

எத்தனையோ ஆயிரம் உயிர்களை அர்ப்பணித்துத்தான் இந்த நெகிழ்வைப் பெற்றோம் என்பதை உணர்ந்து கொள்ள் முடியாத இதயங்கள் இரும்பால் தன்னும் ஆக்கப்படவில்லை. அவை எந்தவகை இதயங்களாவும் இல்லை. அவையே இல்லை என்பதுதான் உண்மை. :(

 

தயவு செய்து கிடைக்கும் இந்த இடைவெளியில் தமிழ் மக்கள் தங்கள் அவலங்களை உலகுக்கு சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். தமிழ்ர்கள் கெட்ட்வர்கள். அவர்கள் முஸ்லீம்களை என்றுமே துன்புறுத்த போவதில்லை. முஸ்லீம் தமிழ் பிரச்சனைகளை மனித நேயத்துடன் அணுக நல்ல நேரம் தீர்வு கிடைத்த பின்புதான் ஆகும். அதற்கு முதல் அவ்சரப்படுபவர்கள் ஜின்னாவின் கிழ்க்கு பாகிஸ்த்தான் , மேற்கு பாகிஸ்த்தான் உருவாக்குகிறார்கள். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் இந்த திரியில் பதில் எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்.

செயபாலன் படத்தில் மட்டும் நடிப்பது, படைப்பில் மட்டும் பொய் சொல்வது என்பனவற்றில் மட்டும் நடிப்பதையும் பொய் சொல்வதையும் செய்தீர்கள் எனில் ,உங்களுக்கு இருக்கும்  கவிஞர் என்னும் ஒரு பேரை யாவது உங்கள் வாழ்நாளில் காப்பாற்றிக் கொள்ள முடியும். தயவு செய்து நான் முன்னர் சொன்னதை செய்தீர்கள் எனில் உங்களுக்கும் நல்லது, தமிழ் மக்களுக்கும் நல்லது.  நன்றி,வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏன் எல்லாரும் இவரின் மேல் ஏறி கும்மியடிகிறார்கள்??

தமிழரின் மேல் வந்தவன் போனவன் எல்லாம் அடிக்கிறான்... இவரும் அடித்தால் என்ன?

 

இவரில் நிறைய பேருக்கு கடுப்பு இருக்கு என்று மட்டும் தெரிகிறது....

 

இவரின் கொள்கை எல்லாசமூகதோடும் சேர்ந்து இயங்குவதென்றால்..அவர் அதன்படி நடந்தால் மற்றவர்கெல்லாம் கடுப்பு ஏன்?

அவரை பிடிக்கவில்லை என்றால்...அவருக்கு கருத்து சொல்லாமல் இருக்கலாம் தானே...

 

தலைவர் "என்ன" சொன்னாலும் "சரி"..மற்றவன் சொன்னா பிழையா? நல்ல தமிழ்தேசியம்.....

 

உங்களுக்கு மட்டும், தமிழ்த்தேசியம், தலைவர் என்றால் என்ன பிரச்சனை? எல்லாத் தலைப்பிலும் அதை வைத்துத் தான் கருத்து எழுதுகின்றீர்கள்? இவரின் பிரச்சனைக்குள் தமிழ்தேசியம் ஏன் வருகின்றது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதி பதில்

அரசு என்மீது தொடுத்த தாக்குதல்களைவிட விடுதலையின்பின்னர் சிலர் தொடுக்கிற தாக்குதல்கள் மோசமாக உள்ளது.
அவர்களுக்கு மாறி மாறி பதில்சொல்லும்போது நானும் தர்மத்தில் இருந்து தவறி தர்கத்துக்குள் விழுந்துவிட நேர்கிறது. பனையால் விழுந்த என்மீது சஞ்சயன் போன்றோர் ஓயாமல் தொடுத்த தாக்குதல்களால் சினப்பட்டு  ^^மறைமுக அரசு ஆதரவாளர்களரும் கோமாளியுமான சஞ்சயன்^^ என்று எழுதியமைக்கு வருந்துகிறேன்.
தர்மம் தவறிய தருக்கங்களுக்குள் நுழைய சம்மதமில்லை. இனி என்மீதான அவதூறுகளுக்கு பதில்சொல்லுவதை நிறுத்திக்கொள்ள தீமானித்திருக்கிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

 

இறுதி பதில்

அரசு என்மீது தொடுத்த தாக்குதல்களைவிட விடுதலையின்பின்னர் சிலர் தொடுக்கிற தாக்குதல்கள் மோசமாக உள்ளது.
அவர்களுக்கு மாறி மாறி பதில்சொல்லும்போது நானும் தர்மத்தில் இருந்து தவறி தர்கத்துக்குள் விழுந்துவிட நேர்கிறது. பனையால் விழுந்த என்மீது சஞ்சயன் போன்றோர் ஓயாமல் தொடுத்த தாக்குதல்களால் சினப்பட்டு  ^^மறைமுக அரசு ஆதரவாளர்களரும் கோமாளியுமான சஞ்சயன்^^ என்று எழுதியமைக்கு வருந்துகிறேன்.
தர்மம் தவறிய தருக்கங்களுக்குள் நுழைய சம்மதமில்லை. இனி என்மீதான அவதூறுகளுக்கு பதில்சொல்லுவதை நிறுத்திக்கொள்ள தீமானித்திருக்கிறேன். 

 

 

 

தோழரே

பலமுறை  சொன்னேன்

கொஞ்ச  நாளைக்கு எழுதாமல் விலகியிருங்கள்

தற்பொழுது எதை எழுதினாலும்...................??

 

உங்கள் மரியாதையையும்

தமிழரின் சொத்தையும்

நீங்களே குறைத்துக்கொள்கின்றீர்கள்

குறைத்துவிட்டீர்கள்................. :(  :(  :( 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை! மீண்டும் முருக்கைமரத்தில் ஏறாதீங்கோ - வ. ஜ. ச ஜெயபாலனுக்கு இரண்டாவது பகிரங்கக் கடிதம்

 
jeyabalan.jpg
அண்ணைக்கு  இன்னுமாரு வணக்கம்!

உங்களின் முகப்புத்தக நண்பர்கள் எதிர்பார்த்தது போலவும் நான் எதிர்பார்த்தது போலவும் நீங்கள் இம்முறையும் உங்களின் அறிக்கைகளை கோழைபோன்று அழித்துவிட்டீர்கள். 

 
உங்களின் புழுகுமூட்டைகளுக்கு காட்டமான பதில்கள் மற்றும் உங்களை திணறவைத்த, பதில்சொல்ல முடியாத கேள்விகளை கேட்கும்போது உங்களின் தாக்குதல் அறிக்கைகளை அழித்துவிட்டு சமரசக் கரங்களை உங்களுக்கு சாதகமான முறையில் ”இனி பேச ஒன்றும் இல்லை, கொளரவமாக விலகிக்கொள்வோம்” என்று அறிக்கைவிட்டிருக்கிறீர்கள்.

நான் கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களால் பதில்சொல்ல முடியவில்லையே. பிறகு எப்படி நாம் கொளரவமாக விலகிக்கொள்வது?

இத்துடன் உங்கள் ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகத்தை எழுநா வெளியிட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரமாக புகைப்படத்தினையும் இணைத்திருக்கிறேன். விரும்பினால் பார்த்துக்கொள்ளுங்கள்.

JayaBalan+Book.jpg

JayaBalan+Book+-1.jpgஇதை இவ்விடத்தில் நிறுத்திக்கொண்டு, அடுத்த விடயத்துக்குப் போவோம்.

இன்று யாழ் இணையத்தில் இருந்த உங்களின்  பதிவில் இருந்த வசனங்களை இங்கு தருகிறேன்

//பனையால் விழுந்த என்மீது சஞ்சயன் போன்றோர் ஓயாமல் தொடுத்த தாக்குதல்களால் சினப்பட்டு  ^^மறைமுக அரசு ஆதரவாளர்களரும் கோமாளியுமான சஞ்சயன்^^ என்று எழுதியமைக்கு வருந்துகிறேன்.//

 

அண்ணை! யாரவது ஒரு பெருமரியாதைக்குரிய ஒரு மனிதர் நீங்கள் கூறியதை எனக்குக் கூறியிருந்தால் நான் மனவருத்தப்பட்டிருப்பேன். கூறியது நீங்கள்தானே. எனவே மனவருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கவலைப்படாதீர்கள். Take it easy அண்ண‌ை.

தவிர,  இன்றைய உங்களின் பின்வாங்கல் அறிக்கையில் பனையால் விழுந்த உங்களை நான் ஓயாமல் தாக்கினேன் என்றிருக்கிறீர்கள் அல்லவா. அண்ணை! சத்தியாமாக உங்களுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி நினைவுதப்புகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நான் எங்கே, எப்போது, எப்படி உங்களை ஓயாமல் தாக்கினேன் என்பதை சற்று விளக்கமாக, ஆதாரங்களுடன் கூறமுடியுமா?

ஒரு உண்மை தெரியுமா அண்ணை! உங்களின் ‌கைதுபற்றி, உங்களை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்த நோர்வேஜிய நண்பரிடம் யார் சொன்னது என்று அவரிடமே கேட்டுப்பாருங்கள்.

உங்களுடன் தொலைபேசியில் உரையாடி,  அவருக்கு  தொடர்ந்தும் உங்களின் நிலமைபற்றி தினமும் அறிவித்தது யார் என்று கேளுங்கள். இதை உங்களின் பாரியாரும் அறிவார்.

இலங்கையில் உள்ள நோர்வேஜிய தூதுவருக்கு செய்தியை அறிவித்தவர் யார் என்பதையும் கேட்டுப்பாருங்கள். அதன் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்றும் கேட்டுப்பாருங்கள்.

நோர்வேயில் உள்ள சில முக்கிய தமிழர்கள் மூலம் நீங்கள் வாய்கிழியக் கிழியக் பாராட்டும் உங்கள் நண்பர் ஏரிக் சூல்ஹைம் அவர்களுக்கு செய்தி அனுப்பியது யார் என்றும் விசாரியுங்கள்.

நீங்கள் நோர்வே வந்திறங்கியபோது உங்களின் தமிழ் நண்பர்கள் யாராவது அங்கிருந்தார்களா? உங்களின் பாரியாரும், அந்த நோர்வேஜிய நண்பரும், நானும் தான் அங்கிருந்தோம். இதை உங்களால் மறுக்கமுடியுமா?

இவ்வளவும் கவிஞன் ஜெயபாலன் மீது இருந்த மரியாதையின் காரணமாகவே செய்யப்பட்டது. உங்களின் திருகுதாளங்கள், சில்மிசங்கள் என்பவற்றை ஊரே அறியும். இருப்பினும் உங்கள் கவிதைமேல் ஒரு மரியாதை இருந்தது. உங்களிடமும் மரியாதை இருந்தது.

ஆனால் இப்போது உங்களைப்பற்றி ஒருவித மரியாதையான எண்ணமும் இல்லை. உங்களுடன் அறிமுகமானதையிட்டும் வெட்கப்படுகிறேன்.

நீங்கள் ஒரு போலியான சமூகப்போராளி என்பதை நீங்களே உங்கள் அறிக்கைகள் மூலம் உலகத்துக்கே எடுத்துக்கூறியிருக்கிறீர்கள்.

உங்களைப்போன்ற பிரபல்யம் மீது தீராக் காமம் கொணடவர்கள் எங்கள் சமூகத்தின் சாபங்கள்.

தேவை ஏற்படின் மட்டக்களப்பில் இருகைகளையும் இழந்த ஒரு போராளிக்கு நோர்வே அரசின் உதவியுடன் கைகளைபூட்டித்தருகிறேன் என்று நீங்கள் பிலிம் காட்டியதைப்பற்றியும் நாம் பொதுவெளியில் பேசிக்கொள்வோம்.

உங்கள் வில்லத்தனங்களை திரைப்படத்துறையுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் எங்கள் சமூகத்தை உங்களின் வில்லத்தனத்திற்கு ஆடுகளமாக்காதீர்கள்.

நன்றி

தோழமையுடன்

சஞ்சயன்

 

உங்களுக்கு மட்டும், தமிழ்த்தேசியம், தலைவர் என்றால் என்ன பிரச்சனை? எல்லாத் தலைப்பிலும் அதை வைத்துத் தான் கருத்து எழுதுகின்றீர்கள்? இவரின் பிரச்சனைக்குள் தமிழ்தேசியம் ஏன் வருகின்றது.....

 

இங்கு நான் பார்த்த அளவில் தலைவர்/புலிகள் அவர்களது கருத்துகள் ஒரு பக்கமாகவும், அதற்கு புறம்பாக யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்களை "குறை" தமிழர்களாகவும் பார்க்க படுகிறது..like Left wing and right wing....two camps..... "தமிழ் தேசியம்" & "துரோகிகள்| camps ஆகவே தான்...

இங்கு பார்த்தல் தலைவரின் camp இந்த Poet ஐ போட்டு தாக்குகிறார்கள்..... அதை தான் பார்க்க சகிக்கவில்லை

நான் எங்கே, எப்போது, எப்படி உங்களை ஓயாமல் தாக்கினேன் என்பதை சற்று விளக்கமாக, ஆதாரங்களுடன் கூறமுடியுமா?

 

நீங்கள் நோர்வே வந்திறங்கியபோது உங்களின் தமிழ் நண்பர்கள் யாராவது அங்கிருந்தார்களா? உங்களின் பாரியாரும், அந்த நோர்வேஜிய நண்பரும், நானும் தான் அங்கிருந்தோம். இதை உங்களால் மறுக்கமுடியுமா?

 

 

சஞ்சயனின் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. 

 

விமான நிலையம் வரைக்கும் போய் குடும்பத்துடன் தான் காதிருந்ததாக சஞ்சயன் எழுதுகிறார். எங்களில் எத்தனையோ பேருக்கு அப்படி ஒரு ஆதரவான உதவிசெய்து தர தக்க சொந்தமாக பிறந்த அண்ணன் தம்பி இல்லை. இப்படி ஒரு உதவி செய்த நணபர் ஒருவர் தனது ஆதங்கத்தை எழுதினால் எதோ சினிப்பாட்டு வரிகள் மாதிரி என்ன எனமோ எழுதி காப்பாற்றிவிட பார்க்கிறார்கள். 

 

இவர்கள் மனிதர்கள் தானா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.