Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீண்டத் தீண்டத் துடிப்பவளே... நோண்ட நோண்ட நெருங்குபவளே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீண்டத் தீண்டத் துடிப்பவளே

நோண்ட நோண்ட நெருங்குபவளே

தொடுகை எனும் மந்திரத்தால்

தூரம் எனும் இலக்கை தகர்ப்பவளே..!

அழகு முகம் காட்டி

உடல்தனை வருடத் தருபவளே

சுகிப்பின் களிப்பில்

சூடாகிச் சிணுங்குபவளே..!

அணைப்புத் தப்பினால்

அலங்கோலம் ஆகி நிற்பவளே..!

 

தொடாமல் நானிருக்க

விரதம் கொள்ளத் தூண்டுபவளே

கொண்ட கொள்கை நீளாமல்..

சிணுங்கி அழைத்து

சில்மிசத்தில் சிக்க வைப்பவளே..!

மணிகளை வினாடிகளாக்கி

இனிய பொழுதை

நொடியில் விழுங்குபவளே..

நீ இன்றிய தருணங்கள்

நினைச்சும் பார்க்க முடியல்லையடி..!

 

எட்ட நின்றாலும்

கிட்ட வந்து சட்டைப் பையில்

அடங்கி விடும் அழகினவளே

நீ ..சட்டென்று

தொலைந்து விட்டால்

பதைபதைக்குமே மனசு..!

பெற்ற இடத்தில்

சொல்லாத ரகசியம்

உன்னிடத்தில் சொல்லி வைப்பேன்

கடவுளை விட கண்ணியமாய்

காத்து அருள்புரிபவளே..!

களவாக எனை

உளவுக்கும் காட்டிக் கொடுப்பவளே..!

 

மாத இறுதி என்றால்

வந்திடும் சம்பளத்தில்

பாதி புடுங்குபவளே

காட்(card)டின்றி  போனால்

காட் (heart) இன்றி

போகவும் துணிந்தவளே..

ஆனாலும் நீ

விபச்சாரி அல்ல.

சொந்தம் என்று கொண்டு விட்டால்

ஆயுட்காலம் முடியும் வரை

ஒட்டிவிடும் உன்னதமானவளே..!

நீ.. கள்ளக் காதலியோ

இடைநடுவில் காய்வெட்டும்..

பொய்யான காதலியோ அல்ல..!

 

சிம் என்று சட்டையிட்டால்

அப்ஸ் என்று அழகுகளால்

அடுக்கடுக்காய்

கடை விரிப்பவளே..!

கவர்ச்சியின் நாயகியே - நீ

கண்ணடித்தால்

காளையரென்ன

அகில உலகமே

உன்னில் அடங்குமடி..!

இருந்தும்..

கலியாணம் கட்டு என்று

நச்சரிக்காத நங்கையடி நீ எனக்கு..!

 

சின்னவரோ பெரியவரோ

கவர்ந்திழுக்கும் மந்திரம்

பொதிந்தவளே

இணைய உலகில்

உன் இனிய மொழியால்

இதயங்கள் இணைப்பவளே..

அலைபேசியாய் அலைபவளே

பஞ்சமில்லாத பட்டப்பெயர்கள்

உனதாக்கி..

ஆண்டுக்கு ஒருதடவை என்றாலும்..

அவனியில் நீ

அழகுநடை போடுவாய்

கூட்டமெல்லாம் கியூவில் நின்று

முட்டி மோதுது

உன்னை தொட்டு அணைக்க...!

இருந்தாலும்

நீ எனக்கு சொந்தமானாய்

அமேசனில்

நான் செய்த டேட்ரிங்கை ஏற்றே..!

அன்பான என்

ஐபோனே ... அன்பு முத்தங்கள்...! :)

 

ஆக்கம் நெடுக்ஸ். திகதி:11.12.13

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வரியை வாசித்ததுமே விளங்கிவிட்டது.. :rolleyes: நெடுக்ஸ் ஒரு நாய்க்குட்டியை அல்லது சடப்பொருளைத்தான் பாடியிருப்பார் என்று.. :D உங்கள் ஏக்கங்களை நீங்கள் இவ்வாறு மாற்றிப் பாடுவது உண்மையிலேயே அழகாக உள்ளது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை நெடுக்ஸ். இசை கூறியதுதான் என்னதும் :D

மனசுக்குள்ள இருக்கிற ஏக்கங்கள் எல்லாத்தையும் போன் மூலம் கொட்டியிருக்கிறீங்க என்று நினைக்கின்றேன். :wub::lol:

அதாவது போன் பற்றிய கவிதை மூலம் கொட்டியிருக்கின்றீர்கள் என்று சொல்லவந்தேன். :lol: :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளம் கன்னியை

காளை

அருகில் கண்டால்

விரல்கள் ஒடுங்கும்

கால்கள் நடுங்கும்

இதயம் படபடக்கும்.. !

அதே காளை..

போனைக் கண்டால்..

விரல்கள் தடவும்

கால்கள் துள்ளிக் குதிக்கும்

இதயம் உல்லாச ஊஞ்சலாடும்...

அதுவும்...

அதே கன்னியோடு

தூர இருந்து

கடலை போடத்தான்..!

கிட்ட இருந்தால்

திட்டும் என்ற பயம்..

எட்ட இருந்தால்

திட்டினால் என்ன என்ற திமிர்..! :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாலும் லைக்காலும்.. கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

பெரீய ஆம்பிளை சிங்கம் நெடுக்கின்  தொடுகை ரசனை கூட பெண்ணாய் உருவகப்படுத்தித்தான் கவிதை படி(டை)க்க முடிகிறது. ஏன் தம்பி பெண்ணைவிட்டுவிட்டு ஒரு இளைஞனாக ஏன் உங்கள் ஐபோனை காதலிக்க அல்லது கவிதையாக்க கூடாது ?

பி.கு :- தம்பி இப்பவே சொல்லீட்டன் எனக்கு சுருக்கமா பதில் எழுதினா போதும் நீளமாய் பெரிசா எழுதினா என்னாலை பதில் எழுதேலாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரீய ஆம்பிளை சிங்கம் நெடுக்கின்  தொடுகை ரசனை கூட பெண்ணாய் உருவகப்படுத்தித்தான் கவிதை படி(டை)க்க முடிகிறது. ஏன் தம்பி பெண்ணைவிட்டுவிட்டு ஒரு இளைஞனாக ஏன் உங்கள் ஐபோனை காதலிக்க அல்லது கவிதையாக்க கூடாது ?

பி.கு :- தம்பி இப்பவே சொல்லீட்டன் எனக்கு சுருக்கமா பதில் எழுதினா போதும் நீளமாய் பெரிசா எழுதினா என்னாலை பதில் எழுதேலாது.

 

நான் இயற்கையில் எல்லாத்தையும் காதலிக்கிறன். அந்த வகையில்.. இயற்கையின் படைப்பான பெண்ணையும் காதலிக்கிறன். அதேபோல்.. மனிதனின் அற்புதமான படைப்புக்களையும் காதலிக்கிறன். அந்த வகையில் போனை காதலிக்கிறன்.

 

ஐபோனை நான் ஏன் பெண்ணாக கருதிறன் என்றால்... அதுக்கும் மனிதப் பெண்ணிற்கும் சில உருவ ஒற்றுமைகள் உள்ளது. அதை நீட்டி எழுதப் போனா பிரச்சனை ஆயிடும்.

 

அதற்கு சாட்சியா.. இந்த விளம்பரத்தை படியுங்கோ. இது ஆண் - பெண் பால் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பரீதியான தொழில் ஒத்த பார்வை. :):lol:

 

Male to Female Dock Extender for iPod and iPhone

 

$%28KGrHqJ,%21qwFEy4H%21tgfBRiyJKBnZQ~~6

http://www.amazon.com/30-pin-Male-Female-Extender-iPhone/dp/B004BAC2B0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dual-dock-ipod.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உருவ ஒற்றுமைகள் இருக்கட்டும் தம்பி. உயிர்களிடத்தில் உங்கள் அன்பும் காதலும் சரி ஆனால் பெண்ணை ஒப்பிடாமல் நீங்கள் ஐபோனை ஒரு இளைஞனாக கவிதை தாங்கோ. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி.. நான் அதனை நண்பனாகப் பார்க்கவில்லை. காதலியாகப் பார்க்கிறேன். என்னிடம் போய் நண்பனாகப் பார் என்று எப்படி கவிதை வடிக்க கேட்கலாம்..! வராத கற்பனையை வாவா என்று வரவழைக்க முடியாது. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சரி நீங்கள் பெண்ணாகி ஐபோனை காதலனாக கவிதை வடித்துப் பாருங்கோ கட்டாயம் வெற்றியளிக்கும் உங்கள் காதல். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா??? :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாள் காணத கண்ணனை காதலான வரிஞ்சு பாடிய காதல் பாடல் காலம் இது.... திருவெண்பா.. திருவெம்பாவை..! நாங்க ஐபோனை கண்ணால் கண்டு காதலியாக வர்ணிச்சு கற்பனை பண்ணிப் பாடினால்.. அது எப்படி சரவணனுக்கு கொடுமையாக அமைகிறது..????!  சொல்லு சரவணா.. உனக்கு என்ன பிரச்சனை..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கிற காலங்களில, மானிலும், மீனிலும், தேனிலும் பெண்களின் துள்ளல் நடையையும், அவர்களின் கண்களின் வளைவுகளையும், அவர்களின் குரலின் இனிமையையும் தேடிய நினைவுகள் இன்னும் நினைவிருக்கின்றன!

 

புலம் பெயர்ந்தவன், போனிலும் தேடுகிறான் என்னும் போது, எவ்வளவு தூரத்துக்குப் போன் முன்னேறிவிட்டது என எண்ணுகையில் பெருமையால் நெஞ்சு விம்முகின்றது!

 

அதுவும் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட கட்டைப் பிரமச்சாரி, தேடுகின்றான் எனும் போது, பிரமனுக்கு, ஓய்வுக்காலம் நெருங்கிவிட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது!

 

ஊடல், கூடல், தழுவல், அனுங்கல், சிணுங்கல் என்ற மனுசன் சில்வியோ பரிஸ்கோனிக்கே, பாடம் படிப்பிப்பான் போல கிடக்கு! :icon_idea: 

 

கவிதையை, அணு அணுவாக அனுபவித்து ரசித்தேன்,நெடுக்குத் தம்பி! :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடல், கூடல், தழுவல், அனுங்கல், சிணுங்கல் என்ற மனுசன் சில்வியோ பரிஸ்கோனிக்கே, பாடம் படிப்பிப்பான் போல கிடக்கு! :icon_idea:

 

 

நீங்க ஒருவர் தான் வரிகளில் உள்ள நவரசத்தையும் அள்ளிப்பருக முனைந்திருக்கிறீர்கள். இருந்தாலும் ஒரு பிரமச்சாரிக்கு.. இது எப்படி தெரியும் என்று நினைக்கிறது..??! சம்சாரியை விட.. பிரமச்சாரிதான்.. உலகை பல வகையிலும் ஆராயும் நேரத்தைக் கொண்டிருக்கிறான் என்ற உண்மைக்கு அப்பால் உள்ளது.

 

சம்சாரிக்கு வீட்டுக்கு உழைச்சுப் போடவே நேரம் சரியாகிடும். அவனுக்கு இருக்கிற களைப்புக்கு கற்பனை எங்க வாறது..??! எப்ப வாழ்க்கை வெறுத்து ஒதுங்கிக்கிறானோ.. அப்ப வரலாம். நம்ம முட்டாசுக் கவிஞன் பாரதி போல..! அவன் கவிஞனான பிறகு குருவிகளின் பசியைக் கவனிச்சான்.. செல்லம்மாவின் பசியைக் கவனிக்கல்ல..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருவ ஒற்றுமைகள் இருக்கட்டும் தம்பி. உயிர்களிடத்தில் உங்கள் அன்பும் காதலும் சரி ஆனால் பெண்ணை ஒப்பிடாமல் நீங்கள் ஐபோனை ஒரு இளைஞனாக கவிதை தாங்கோ. :lol:

 

என் அண்ணனை ஒரு Gay என்று நிறுவமுற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol::icon_mrgreen::icon_idea:

பயபுள்ளை எம்புட்டு ஆசைய வச்சிட்டு அலைஞ்சிட்டு இருக்கான். :wub: பாவம் ஐபோன்... :rolleyes::lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி நீங்கள் பெண்ணாகி ஐபோனை காதலனாக கவிதை வடித்துப் பாருங்கோ கட்டாயம் வெற்றியளிக்கும் உங்கள் காதல். :lol:

 

அதனை நாங்க இல்ல நீங்க தான் செய்யனும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் அண்ணனை ஒரு Gay என்று நிறுவமுற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol::icon_mrgreen::icon_idea:

பயபுள்ளை எம்புட்டு ஆசைய வச்சிட்டு அலைஞ்சிட்டு இருக்கான். :wub: பாவம் ஐபோன்... :rolleyes::icon_idea:

 

வை திஸ் கொலைவெறி..???! :lol:

 

அவங்க ரோட்டுப் போட்டா.. நீங்க சமன்பாடோ போடுவீங்க போல இருக்கே பாஸ்.  :lol:  சாந்தி அக்கா போல எத்தினை நி(த)றுதலைகளை கண்டிருப்பம். இதெல்லாம் யு யு பி. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வை திஸ் கொலைவெறி..???! :lol:

 

அவங்க ரோட்டுப் போட்டா.. நீங்க சமன்பாடோ போடுவீங்க போல இருக்கே பாஸ்.  :lol:  சாந்தி அக்கா போல எத்தினை நி(த)றுதலைகளை கண்டிருப்பம். இதெல்லாம் யு யு பி. :D

 

எல்லாம் ஒரு அக்கறை தான் அண்ணாச்சி. :rolleyes:

 

ஒரு பாகிஸ்தான் பெட்டைய நெடுக்ஸ் அண்ணா (வச்சிருக்கார்) லவ் பண்ணுறார் (கிரி பட - வடிவேல் ஸ்டைலில் வாசிக்கவும்)  என்று சொன்னதை நான் நம்பேல்லை, ஐபோனை மட்டும் தான் ஃபீல் பண்ணி சொல்லுறிங்கள் என்று நம்புறேன் ! நம்புறேன் !! நம்புறேன் !!! :rolleyes::lol::icon_idea:

 

(ஒருத்தரை கரை சேர்க்க எவ்வளவு பாடுபடவேண்டி இருக்கு :o )

 

 

பி.கு : ஒரு வேளை கோவிப்பாரோ ??? :o  சும்மா தமாசு .. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் வரைக்கும் போய்ட்டா எங்கட கதை..???! இன்னும் எங்கெங்க போகப் போகுதோ..??! பார்ப்பம்.. எந்த எல்லை வரைக்கும் போகுதென்னு. :lol::D


அது சரி வைச்சிருக்கிறார் என்றால்.. வைச்சிருக்கிறது என்ன பொருளா.. பண்டமா..??! சரக்கு என்று வாங்க. சொன்னாலும் சொல்லுவாங்க. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் வரைக்கும் போய்ட்டா எங்கட கதை..???! இன்னும் எங்கெங்க போகப் போகுதோ..??! பார்ப்பம்.. எந்த எல்லை வரைக்கும் போகுதென்னு. :lol::D

அது சரி வைச்சிருக்கிறார் என்றால்.. வைச்சிருக்கிறது என்ன பொருளா.. பண்டமா..??! சரக்கு என்று வாங்க. சொன்னாலும் சொல்லுவாங்க. :lol:

 

எதுக்கு அவசரப்படுறியள்? அங்காலை ஈரான், ஈராக் எல்லாம் இருக்கெல்லே .. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் அண்ணனை ஒரு Gay என்று நிறுவமுற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol::icon_mrgreen::icon_idea:

பயபுள்ளை எம்புட்டு ஆசைய வச்சிட்டு அலைஞ்சிட்டு இருக்கான். :wub: பாவம் ஐபோன்... :rolleyes::lol::icon_idea:

 

தம்பி நானும் கண்டிக்கிறேன். :lol: பயபுள்ள ஒரு ஐபோனில இப்பிடியெல்லாம் கற்பனை பண்ணி காதலிச்சு :icon_idea:

 

அதனை நாங்க இல்ல நீங்க தான் செய்யனும். :lol:

 

நம்மட்டை இருக்கிற ஐபோனில்லை தம்பி மைபோன். நமக்கு இந்த போனிலையெல்லாம் காதல் வராது.

 

வை திஸ் கொலைவெறி..???!

 

அவங்க ரோட்டுப் போட்டா.. நீங்க சமன்பாடோ போடுவீங்க போல இருக்கே பாஸ்.    சாந்தி அக்கா போல எத்தினை நி(த)றுதலைகளை கண்டிருப்பம். இதெல்லாம் யு யு பி.

இனியென்ற செய்யிறது விழுந்தும் மண் ஒட்டாத நெடுக்ஸ் ஆயிற்றே ? சரி சரி நாங்க நம்பீட்டம்.

எதுக்கு அவசரப்படுறியள்? அங்காலை ஈரான், ஈராக் எல்லாம் இருக்கெல்லே ..

ஏனப்பா அங்கையெல்லாம் போறியள் தம்பி? கழுத்தை வெட்டீடுவாங்களப்பு.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன்.. பூவைக் காதலிப்பான்.. போனைக் காதலிப்பான்.. ஏன் ஒரு பூவையைக் கூடக் காதலிப்பான். ஒரு  ஆன்ரிக்கு ஏன் அதுங்க எல்லாம்.(பொண்ணு வயசுக்கு வந்திட்டா அதுட அம்மாவை என்னென்று சொல்லுவாங்க ஆன்ரின்னு தானே...!)  :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோட இதெல்லாத்தையும் முடிச்சிடுவம். தொடர்ந்தா.. அப்புறம் ரெம்ப டமேச் சாகிடும்.. இமேச்சு..! சொல்லிப்புட்டம். :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.