Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு 17.12.2013 அன்று.

Featured Replies

பிரான்சில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் அனைத்து மக்களும் கலந்து தமது ஆதரவைத் தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

காலம்: 17.12.2013.
செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00மணி வரை

124, Rue Bagnolet 75020 Paris

Metro : Porte de Bagnolet (Ligne 3)

என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு - 06 52 72 58 67
தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு - பிரான்சு – 06 14 11 46 10

 

(facebook: TCC)

Edited by துளசி

  • Replies 100
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1488197_355744957903617_1431657837_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

வருவேன்..

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பில் எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும்.. பிரான்சில் பாதுகாப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை..!

வருவேன்..

 

சென்று வந்து பகிருங்கள்!!

துளசி நேரில் பேசும் வாய்ப்புக்கிட்டினால் யாழின் கருத்துக்களத்தில் இணைந்திருப்பது அவர்தானா என்பதை உறுதிப்படுத்த மறக்கமாட்டீர்கள்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

 

வருவேன்..

 

விசுகு அவர்களும் மற்றும் அங்கு செல்லக்கூடிய வசதிகொண்ட யாழ்கள உறுப்பினர்களும், நிகழ்வைக் களத்தில் பதிந்துதவுமாறு வேண்டுகிறேன்.
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தியவர்களின் சதிவலைக்குள் அனந்தி எழிலன்

 

http://www.thinakkathir.com/?p=54953

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தியவர்களின் சதிவலைக்குள் அனந்தி எழிலன்

 

http://www.thinakkathir.com/?p=54953

 

ஏன் உங்க பாட்டுக்கு அவங்க ஆடலியா <_<

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் 

அரசியல் செய்யாதீருப்பீர்களாக......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தியவர்களின் சதிவலைக்குள் அனந்தி எழிலன்

 

http://www.thinakkathir.com/?p=54953

 

நீங்கள் தினக்கதிரை நம்பும் ஒருவரா? அல்லது இச்செய்தியில் நாடுகடந்த அரசின் ஈடுபாடு ஏதாவது உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் 

அரசியல் செய்யாதீருப்பீர்களாக......... :(  :(  :(

முந்திரிக் கொட்டைகள் இலவசமாகக் கிடைக்கும்போதும் செய்யக்கூடாதா?... <_<

இங்கு யாருடைய பாட்டுக்கும் ஆட வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை.

அனந்தி அவர்களை வைத்து இங்கு (பரிசில்) நடந்தேறும் அருவருப்பான அரசியலை நினைத்துத்தான கவலை.

அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள நபர்கள் குறித்து விமர்சனம் இருக்கலாம். ஆனால் அது கூட்டமைப்பு எனும் கட்டமைப்பினை பலவீனப்படுத்துவதாக இருக்க கூடாது.

அது அதற்குள் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு மட்டுதல்ல இங்கு விமர்சனம் முன்வைப்பவதர்களுக்கும் பொறுப்புண்டு.

தற்போதுள்ள தாயகச் சூழ்நிலையிலும் அங்குள்ள மக்கள் மனத்தளத்தில் இருந்து கொண்டுதான் எதனையும் நாம் யோசிக்க வேண்டும்.

கருத்துக்கள் பகிர்வது மட்டுமல்ல அரசியற்களத்திலும் பங்காற்றி வருகின்றவன் என்ற வகையில் இதனைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

எமக்கு இப்போது தேவை சமூக-விழிப்பே அன்றி வேறேதும் அல்ல.

___________________

 
கஜேந்திர குமாரின் அமெரிக்க சந்திப்புக்களில் பங்குபற்றியவர்கள் கூறியதாவது,  கஜேந்திரகுமார் தான் மற்றவர்களால் வழிநடடத்தப்பட்டுவிடாமல், தனது பட்டனார் மதிரியே தான் தான் வழி நடத்த வேண்டும் என்ற போதையில் அலைகிறார் என்பதாகும்.  
 
கஜேந்திர குமார், காணிகளை இழந்தோருக்கு, விதைவை பெண்களுக்கு உதவுவது, காணாமல் போனோருக்கு உதவுவது போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை. கூட்டமைப்பு கமருனின் விஜயத்தை தனது பாதையில் வழி நடத்தியிருந்தது. அதில் ஒரு நோக்கம் சாத்வீக போராட்டங்களை அரசு யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பதில்லை என்பதை கமருடன் வரும் செனெல்- 4க்கு மறுக்கப்பட்ட பயண உரிமைகளை வைத்தாகும். அதை குழ்பபி சிலர் தமிழ் மக்களை ஆமி, பொலிஸ் ஒன்றும் செய்வதில்லை ஆனால் அதே நேரம் தமிழ்மக்கள் பொலிஸ் கட்டுப்பாட்டை வழ்மையில் மீறுவதால் தான் அடக்கு முறைகளை ஆமியும் பொலிசும் பாவிக்க வேண்டியிருக்கிறது என்ற செய்தியை வெளிநாட்டு பத்திரிகைக்களுக்கு அனுப்பிவைத்தாகவும் சொல்லப்படுகிறது. இதன் பலனாக மேற்கு நாடுகள் தம்மிடம் பல கட்சிகள் பல எதிர் எதிர் கருத்துக்களை கூறுவதை நிறுத்தும் படியும் கேட்டு இருக்கிறார்கள். இதைதான் யாழில் பத்தியப்பட்டிருக்கும் மாவையின் அவுஸ்திரேலிய பேச்சும் சொல்கிறது.
 
அனந்தி அனுபவமின்யாலனெதிரிகளுக்கு துணை போவது உண்மையாக இருக்கலாம்.

நியானி: ஆதாரமற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அவர்களின் அரசியல் செயற்பாட்டில் அரண்டுபோய் டக்ளசும், அரசுமே உதயன் பத்திரிகைபோல் ஒன்றை வெளியிட்டுப் பல கூத்துக்கள் ஆடியும் எதுவும் செய்யமுடியாது அவமானப்பட்டது. வரும் செய்திகள்மூலமும், ஊரிலுள்ள உறவுகள், நண்பர்கள் மூலமும், அனந்தி பற்றிய அரசியல் செயற்பாடுகள் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. அவரைச் சுற்றியுள்ள சந்தர்பவாதிகளை அவர் இனம் கண்டுகொள்வார் என்ற நம்பிக்கையுள்ளது. பிரான்சில் அவர்பற்றி நேரிடையாகவே அறிந்துகொள்ளும் சந்தர்பமும் உள்ளது. நிகழ்வுகள் நடந்தேறுமுன்னரே முந்திரிக் கொட்டைகள் போல் அவர்பற்றிய விமர்சனங்களை வெளியிட முயல்வது தவிர்கப்படுதல் நல்லது.

அதை அரசு வினோபானந்த குமாரிக்கும் செய்தது. அனந்தி மக்களிடம் இருக்கும் முகப்பழக்கம் வினோபானந்தகுமரிக்கு இல்லாததால் அவர் தெரிவு செய்யப்படவில்லை. சில விடையங்களில் ஐங்கர நேசனும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். 

 

ஆனால் அனஹ்திக்கு தனி மரம் தோப்பாகாது என்பது புரிந்து தன் செயல்பாடுகளை மற்றைய அங்கத்துவர்களுடன் இணைந்து செயல்ப்பட தெரிய வேண்டும்.

 

_____________

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

ஆனந்தி அவர்கள் சம்பந்தன் தரப்பையும், புலம்பெயர் நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு தரப்பையும் சமாளித்தபடி நடுவால் ஓட முயற்சிக்கின்றார். இது நீண்டகாலம் வெற்றியை தராது.

இரு தரப்புக்கும் பாலமாக இருந்து, ஒரு புரிந்துணர்வை உருவாக்குவதற்கு அவர் முயன்றால், அது நன்மை தருவதாக அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அவர்கள் சம்பந்தன் தரப்பையும், புலம்பெயர் நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு தரப்பையும் சமாளித்தபடி நடுவால் ஓட முயற்சிக்கின்றார். இது நீண்டகாலம் வெற்றியை தராது.

இரு தரப்புக்கும் பாலமாக இருந்து, ஒரு புரிந்துணர்வை உருவாக்குவதற்கு அவர் முயன்றால், அது நன்மை தருவதாக அமையும்

 

 

தாயகத்தில் அவருக்கு நிறையயயயயயயயயயயயயயயயய  வேலை இருக்கிறது

அவர்தான் இங்கும் இதைச்செய்யணுமா???

1).ஆனந்தி அவர்கள் சம்பந்தன் தரப்பையும், புலம்பெயர் நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு தரப்பையும் சமாளித்தபடி நடுவால் ஓட முயற்சிக்கின்றார். இது நீண்டகாலம் வெற்றியை தராது.

2).இரு தரப்புக்கும் பாலமாக இருந்து, ஒரு புரிந்துணர்வை உருவாக்குவதற்கு அவர் முயன்றால், அது நன்மை தருவதாக அமையும்

அரசியலில் வெற்றி தோல்வி, சந்தர்ப்பம் பாதி, செயல்ப்பாடு பாதியாகும். இரண்டையும் வெற்றிகரமாக செயல்முறை படுத்தவும் முடியும். இரண்டும் தோல்வியாக சந்தர்பம் சூழ்நிலையால் மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாருடைய பாட்டுக்கும் ஆட வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை.

அனந்தி அவர்களை வைத்து இங்கு (பரிசில்) நடந்தேறும் அருவருப்பான அரசியலை நினைத்துத்தான கவலை.

அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள நபர்கள் குறித்து விமர்சனம் இருக்கலாம். ஆனால் அது கூட்டமைப்பு எனும் கட்டமைப்பினை பலவீனப்படுத்துவதாக இருக்க கூடாது.

அது அதற்குள் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு மட்டுதல்ல இங்கு விமர்சனம் முன்வைப்பவதர்களுக்கும் பொறுப்புண்டு.

தற்போதுள்ள தாயகச் சூழ்நிலையிலும் அங்குள்ள மக்கள் மனத்தளத்தில் இருந்து கொண்டுதான் எதனையும் நாம் யோசிக்க வேண்டும்.

கருத்துக்கள் பகிர்வது மட்டுமல்ல அரசியற்களத்திலும் பங்காற்றி வருகின்றவன் என்ற வகையில் இதனைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

எமக்கு இப்போது தேவை சமூக-விழிப்பே அன்றி வேறேதும் அல்ல.

 

அதென்ன அருவருப்பான அரசியல் என அறியலாமா?

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தியவர்களின் சதிவலைக்குள் அனந்தி எழிலன்

 

http://www.thinakkathir.com/?p=54953

 

எனக்கு இது தொடர்பாக கருத்து கூறுமளவுக்கு அனுபவமில்லை. இருப்பினும் சிலவற்றை கூறுகிறேன். தவறாக இருப்பின் யாராவது ஏன் தவறு என விளங்கப்படுத்துங்கள்.

 

நீங்கள் இணைத்துள்ள  செய்தி பற்றி எனக்கு தெரியாவிட்டாலும் அதில் தனியே தமிழ் சங்க கூட்டமைப்பினரின் அறிக்கை தான் உள்ளது. எனவே எதிர்ப்பதாக இருந்தால் நீங்கள் தமிழ் சங்க கூட்டமைப்பினரை தான் எதிர்க்க வேண்டும். இதற்குள் மக்கள் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சம்பந்தப்படுத்த முடியாது. ஆனால் அனந்தி அக்காவுடனான சந்திப்பை மக்கள் பேரவையும் தான் ஒழுங்குபடுத்துகிறது. இது அனந்தி அக்காவாக கேட்டு பெற்றுமிருக்கலாம் தானே? ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கு தான் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அனந்தி அக்கா கூறியிருந்தார்.

 

ஆனால் தமிழ் சங்க கூட்டமைப்பு கூறியதில் தவறிருப்பதாக நான் காணவில்லை. (தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதை தவிர). அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதற்கு அதன் மேலுள்ள விமர்சனமே காரணம். தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்பாக கூறிய விமர்சனங்கள் உண்மை தானே?  என்னை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சில அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உறுப்பினர்களை வெளியேற்றியது தவறு.

 

அத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மேல் வைத்த முக்கிய குற்றச்சாட்டு அவர்கள் புலம்பெயர் தமிழர்களை புறக்கணித்து செயற்படுகிறார்கள் என்பது. அதை கீழே பார்க்கலாம்.

 

 

மே 19க்குப் பின்னரான நிலையில் தாயகத்து மக்களும் புலத்து மக்களும் பங்காளிகளாக ஒன்றிணைந்து, தாயக மக்களுக்கு நிரந்தர அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் நிலையான தீர்வுத் திட்டமொன்றை நோக்கிப் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நிலைமை இவ்வாறு இருக்க புலத்து மக்களின் நல்லெண்ணத்தையும் அவர்களது பலங்களையும் சேர்த்து அவர்களை தாயக மக்களின் விடுதைலைக்கான பங்காளிகளாகக் கருதாமல் ளுஆளு அணியினர் அவர்களைத் திட்டமிட்டு தவிர்ப்பதும் ஒதுக்குவதும் வெளிப்படையான விடயம்.

---------------

---------------

புலத்து மக்களால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்படும் இந்த நேரத்தில், அந்த வியூகத்தைச் சரியாகப் பாவித்து நியாயமான தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர்த்தாமல், தம்மால் மட்டுமே தீர்வைப் பெற்றுவிட முடியுமென்று ளுஆளு அணியினர்; கருதுகின்றனர். அத்துடன் புலத்தில் பெருவாரியான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களுடனான சந்திப்பை தட்டிக் கழித்துத் தவிர்க்கின்றனர். புலத்திலுள்ள சனநாயக மக்கள் கட்டமைப்புக்களோடு ஒரு பொது வேலைத் திட்டத்தை வரைந்து அவரவர் தளங்களில் நின்று வேலை செய்ய வேண்டுமென்று மக்கள் கட்டமைப்புக்களால் ளுஆளு அணியினரிடம் கோரிக்கை விடப்பட்டது. அதனை தட்டிக் கழித்து தங்களது நிகழ்ச்சி நிரலோடு ஒத்துழைக்கும் சிறுகுழுக்கள் மற்றும் தனிநபர்களோடு மட்டும் சந்திப்புக்களை மேற்கொண்டு தாங்கள் புலத்து மக்களின் கருத்துக்களையும் உள்வாங்குவதாக ளுஆளு அணியினர் நாடகமாடி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் ளுஆளு அணியினரை புலத்தின் மக்கள் கட்டமைப்புக்களின் சார்பாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது. தாயகத்தில் பேரழிவைச் சந்தித்துள்ள எமது மக்களின் துயர் துடைப்புப் பணிகளுக்கான ஒரு வலுவான கட்டமைப்பை தாயகத்திலே தமிழத் தேசியக் கூட்டமைப்பினரையே உருவாக்குமாறு கேட்கப்பட்டது. அதற்கான நிதி மற்றும் புலமைசார் பங்களிப்புக்களை வழங்க புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கள்; தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை ஒன்று சேர்ந்து எதிர் நோக்குவோமெனவும் அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாம் தயாராக இருப்பதாகவும் அன்று கூறப்பட்டது. ஆனால் புலத்து கட்டமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட இவ்வாலோசனைகள் சக பாராளுமன்ற உறுப்பினர்களோடு கதைக்கப்படவும் இல்லை. இந்த ஆரோக்கியமான கோரிக்கை தொடர்பான எந்தப் பதிலும் சம்பந்தப்பட்ட மக்கள் கட்டமைப்பினருக்கு ளுஆளு அணியினர் வழங்கவுமில்லை.

பேரழிவைச் சந்தித்துள்ள தாயக மக்களின் துயரினைத் துடைப்பதற்கு தங்களுக்கு இருப்பதாகக் காட்டும் எந்தச் சக்திகளின் ஆதரவையும் பெற்றுக் கொடுக்கும் காத்திரமான வழிமுறைகளை ளுஆளு அணியினர் செய்யவுமில்லை, அதனை ஏற்படுத்தித் தாருங்களென புலம் பெயர் மக்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு செயற்றிறனோடு பணியாற்றவுமில்லை. தமிழ் மக்களின் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்தும் இவர்களால் அந்த மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூடச் சொல்ல முடியவில்லை.

சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சரியாகக் கலந்து பேசாமல், தாயக மக்களின் கருத்தறியாமல், புலத்திலுள்ள மக்கள் கட்டமைப்புக்களோடு சேர்ந்தியங்காமல், அடிமட்ட மக்களோடு உறவு பேணாமல், பேரழிவைச் சந்தித்த மக்களுக்கான துயர் துடைப்புப் பணிகளைச் செய்து கொடுக்காமல், தாயக மக்களின் உண்மையான விடுதலையை உளமார நேசிக்காமல், இலட்சியத்தில் உறுதியானவர்களை ஓரங்கட்டும் இந்தத் தலைமையை ஓரங்கட்டுவோம்.

 

இப்பொழுது அனந்தி அக்கா புலம்பெயர் தமிழர்களை சந்தித்து கதைக்கும் முடிவெடுத்திருப்பதால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தானே?

 

சந்திப்பு நன்மையா தீமையா என்பது பற்றி எதற்காக இப்பொழுதே விமர்சனம் வைக்கிறீர்கள்? தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு அனந்தி அக்காவின் மக்களுடனான சந்திப்பை ஒழுங்கு செய்ய கூடாது என்றால் நாடுகடந்த அரசாங்கம் ஒழுங்குபடுத்தியிருக்கலாமே? நீங்கள் அதை ஏன் செய்யவில்லை? நீங்கள் செய்திருந்தால் இப்பொழுது தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றி கதைக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அவர்கள் சம்பந்தன் தரப்பையும், புலம்பெயர் நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு தரப்பையும் சமாளித்தபடி நடுவால் ஓட முயற்சிக்கின்றார். இது நீண்டகாலம் வெற்றியை தராது.

இரு தரப்புக்கும் பாலமாக இருந்து, ஒரு புரிந்துணர்வை உருவாக்குவதற்கு அவர் முயன்றால், அது நன்மை தருவதாக அமையும்

 

 

அனந்தி இன்னும் யாரையும் சந்திக்க முதல் நடுவால் ஓடுகிறார் என எப்படி சொல்கிறீர்கள்? சந்திக்க முதல் சன்னதம் ஆட ஏன் முயற்சிக்கிறீர்கள்??

கூட்டமைப்பு, கமருடன்னான பயணத்தை ஆர்ப்பாட்ட ஊர்வலம் கலக்காமல் எற்ப்படு செய்தாக கேள்விப்படிகிறேன். இதில் கஜேந்திர குமார் தனது ஆரப்பாட்டத்தை துளைத்திருந்தார். இது திட்டமிட்டப்பட்ட படி கமருனின் பயணம் ந்டை பெறாமல் இருக்க செய்த முயற்சியாக கூறப்படுகிறது. கஜேந்திர குமார் விதைவைகள் பற்றியோ, காணிப்பறிப்பு பற்றியோ, இராணுவத்தை வெளியேற்றுவது பற்றியோ எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. சம்பந்தருக்கு எதிராக மக்களை தூண்டுவதாக நினத்து கமருனின் பாதுக்காப்பை பலவீனப்படுத்தியதால் பயணம் திட்டமிட்ட எல்லா இடத்திற்கும் போக முடியவில்லை என்பது குறைப்பாடு. மேற்கு நாடுகள் எல்லோரையும் ஒரு கருதுடன் பேசும்படி கூறியிருக்கிறார்கள். இதை நான் மூன்றாவது தடவையாக எழுதுகிறேன். மாவை இது பற்றி அவுஸ்திரேலியாவில் தமிழ் லீடருக்கு கொடுத்த பேட்டி மிக மிக முக்கியம். ப்லம் பெயர் மக்கள் தமக்கு எல்லாம் புரிந்துவிட்டதாக நினைத்து படு குழியில் குத்திக்க கூடாது. எல்லோரும் ஒரு குரலில் மார்சில் ஒரே ஒரு கோரிக்கைகையை வைக்காவிட்டால் இதில் புலம் பெயர் மக்கள் 1948ல் G.G. பொன்னம்பல தமிழ் மக்களுக்கு செய்தை தாயக மக்களுக்கு செய்ததாகிவிடும். எவரினதும் சர்வதேசத்துடன் ஒத்துளையாமை, அமெரிக்க விரோத போக்குகள் மார்ச்சின் முன்னர் நின்றுவிட வேண்டும். கமருன் போன்றவர்கள் வரும் போது அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை அமைதியாக் சென்று பார்ப்பத்தற்காக் ஆரப்பட்டங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். 

 

அனந்தி தனது உயிரை பணயம் வைத்து கஜேந்திர குமார் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியது அன்று வரவேற்கபட்ட அளவுக்கு, விடையங்கள் வெளியான போது அவ்வளவு வரவேற்பை அடையவில்லை.  இதை நான் மேலே சொல்லியிருந்தும் அதை நீங்கள் படிக்க ஆரவம் காட்டவில்லை.

 

மற்றைய சிலவற்றை கிண்டுவத்தால் மட்டும் நான் யாழில் அவற்றை விவாதிக்க முனவரருப்போவத்தில்லை என்று விசுகருக்கு எழுதியுள்ளேன். நீங்களும் கிண்ட ஆரம்பிக்க முன்னர் அதையும் படிக்கவில்லை.

 

 

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு, கமருடன்னான பயணத்தை ஆர்ப்பாட்ட ஊர்வலம் கலக்காமல் எற்ப்படு செய்தாக கேள்விப்படிகிறேன். இதில் கஜேந்திர குமார் தனது ஆரப்பாட்டத்தை துளைத்திருந்தார். இது திட்டமிட்டப்பட்ட படி கமருனின் பயணம் ந்டை பெறாமல் இருக்க செய்த முயற்சியாக கூறப்படுகிறது. கஜேந்திர குமார் விதைவைகள் பற்றியோ, காணிப்பறிப்பு பற்றியோ, இராணுவத்தை வெளியேற்றுவது பற்றியோ எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. சம்பந்தருக்கு எதிராக மக்களை தூண்டுவதாக நினத்து கமருனின் பாதுக்காப்பை பலவீனப்படுத்தியதால் பயணம் திட்டமிட்ட எல்லா இடத்திற்கும் போக முடியவில்லை என்பது குறைப்பாடு. மேற்கு நாடுகள் எல்லோரையும் ஒரு கருதுடன் பேசும்படி கூறியிருக்கிறார்கள். இதை நான் மூன்றாவது தடவையாக எழுதுகிறேன். மாவை இது பற்றி அவுஸ்திரேலியாவில் தமிழ் லீடருக்கு கொடுத்த பேட்டி மிக மிக முக்கியம். ப்லம் பெயர் மக்கள் தமக்கு எல்லாம் புரிந்துவிட்டதாக நினைத்து படு குழியில் குத்திக்க கூடாது. எல்லோரும் ஒரு குரலில் மார்சில் ஒரே ஒரு கோரிக்கைகையை வைக்காவிட்டால் இதில் புலம் பெயர் மக்கள் 1948ல் G.G. பொன்னம்பல தமிழ் மக்களுக்கு செய்தை தாயக மக்களுக்கு செய்ததாகிவிடும். எவரினதும் சர்வதேசத்துடன் ஒத்துளையாமை, அமெரிக்க விரோத போக்குகள் மார்ச்சின் முன்னர் நின்றுவிட வேண்டும். கமருன் போன்றவர்கள் வரும் போது அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை அமைதியாக் சென்று பார்ப்பத்தற்காக் ஆரப்பட்டங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். 

 

அனந்தி தனது உயிரை பணயம் வைத்து கஜேந்திர குமார் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியது அன்று வரவேற்கபட்ட அளவுக்கு, விடையங்கள் வெளியான போது அவ்வளவு வரவேற்பை அடையவில்லை.  இதை நான் மேலே சொல்லியிருந்தும் அதை நீங்கள் படிக்க ஆரவம் காட்டவில்லை.

 

மற்றைய சிலவற்றை கிண்டுவத்தால் மட்டும் நான் யாழில் அவற்றை விவாதிக்க முனவரருப்போவத்தில்லை என்று விசுகருக்கு எழுதியுள்ளேன். நீங்களும் கிண்ட ஆரம்பிக்க முன்னர் அதையும் படிக்கவில்லை.

 

நான் மேலே படித்து விட்டு தான் எழுதினேன். என்னை பொறுத்தவரை நான் அரசியலில் அவ்வளவு தெளிந்தவள் கிடையாது. எனக்கு விளங்காததையே கேட்டேன். அதை கிண்டுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய?

 

நீங்கள் தனியே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராக தான் கருத்து வைக்கிறீர்களா அல்லது கஜேந்திரன் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியையே துரோகி என கூறுகிறீர்களா என புரியவில்லை.

 

காணி சுவிகரிப்புக்கு எதிராக ஏற்கனவே தெல்லிப்பளையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

 

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121866&hl

 

Edited by துளசி

தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் நிராகரிக்க வேண்டுமா?

15திசெ

tna052013.jpg?w=650அண்மைக்காலமாக புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் அதற்கான மாற்று அமைப்பு ஒன்றை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதை காண்கிறோம்.
தமிழ்தேசிய கூட்டடைப்பு தலைமை தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் துரோகம் செய்கிறதென்றும் கூறி அதற்கான சில ஆதாரங்களையும் இவர்கள் முன் வைக்கின்றனர்.
ஆனால் இவர்கள் ஒரு அடிப்படை உண்மையை கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர்.
அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பென்பது ஒரு முற்போக்கான புரட்சிகர அமைப்பு அல்ல என்பதையும் அதன் தலைமை என்பது தமிழ் அதிகார வர்க்க சிந்தனை மரபைக்கொண்ட கையேந்தி அரசியல் பாரம்பரியத்தில் வந்தது என்பதையும் இவர்கள் கவனத்தில் கொள்ள மறந்து விடுகின்றனர்.
இலங்கைத் தீவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்று பாரம்பரியத்தையும் தங்களுக்கான மரபுவழி தாயகத்தைக் கொண்டிருக்கும் தமிழீழ மக்களுடைய இறைமையை குழிதோண்டி புதைத்த பௌத்த சிங்கள பேரனவாதிகளுக்கு அடிமைபடுத்திய பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சிமுறையை ‘ஆஹா ஒகோ இதுவல்லவோ சிறந்த அட்சிமுறை’ என்று போற்றி; புகழ்ந்த அதை வலும் பெறச் செய்ய பாடுபட்ட பாரம்பரியத்தை உடையவர்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையாகும் 
tna.jpg?w=540இதில் சம்பந்தன் மாவை சுமந்திரன் என்று தனிப்பட்ட நபர்களை நான் குறிப்பிடவில்லை.
இவர்கள் அந்த அதிகார அமைப்பின் பிரதிநிதிகள்.இவர்கள் போனால் இன்னும் சிலர் வருவார்கள்.விக்னேஷ;வரன் வந்ததைப் போல.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கையில் அதிகாரமும் பலமும் இருந்தவரை பம்மிக்கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கம் முள்ளிவாய்க்காலின் பின்னர் மீண்டும் முன்நிலைக்கு வந்து
ஈழத்தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை பற்றி பேசிய தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக நின்ற பலரை ஓரங்கட்டியதும் பலரை அவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறும் சூழ்நியை உருவாக்கியதும் தற்செயலாக நடந்த ஒன்றல்ல.இவை நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட செயற்பாடுகளாகும்.
இந்த அதிகார வர்க்கம் இன்றைக்கும் பிளவு படாத இலங்கை என்ற ஒற்றையாட்சி அமைப்புக்குள் அதிகாரபரவலாக்கல் மூலம் தீர்வு என்று சொல்வதையும் அது தான் நடைமுறைச் சாத்தியமானது என்று தாங்கள் சொல்வதை நியாயப்படுத்துவதையும் நாங்கள் பார்க்கிறோம்
உயரிய நாடாளுமன்ற ஜனநாயக மரபு மற்றும் கல்வியறிவு அடிப்படை பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கொண்ட தமது நாட்டிலேயே பல்கலாச்சார ஒருங்கிணைவு பல்தேசிய ஒருங்கிணைவு என்பது தோற்றுப் போய் விட்டதாக இன்று ஒப்புக்கொள்ளும் பிரித்தானியா ஐக்கிய இராட்சியத்தில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் முடிவை தற்போது எடுத்திருப்பதையிட்டு கையறு நிலையில் புலம்பிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இதே பிரித்தானிய (காலனிய) அரசு மதவாதமும் இனவாதமும் கல்வியறிவின்மையும் சமச்சீரற்ற பொருளாதார கட்டமைப்பையும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வான சமூகக் கட்டமைப்பையும் கொண்ட இலங்கைத் தீவில்அறிமுகப்படுத்திய வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சிமுறையின் தோல்விதான் 1958,77,83 இனக்கலவரங்களும் இவை எல்லாவற்றுக்கும் மேலான முள்ளிவாய்க்கால் பேரவலமுமாகும்.
இந்த ஒற்றையாட்சி நாடாளுமன்ற அமைப்புமுறை என்பது தமிழர்களை சிங்கள அதிகாரவர்க்க அரசுக்கு ஜனநாயகத்தின் பேரால்; அடிமைப்படுத்தும் ஒரு பொறி என்பது இந்த தமிழ் அதிகார வர்க்க அரசியல் தலைவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று எழுந்தமானமாக கூறிவிடமுடியாது.
அதிகாரவர்க்க நலன் சாhந்த ஆங்கில வழிச் சிந்தனையும் அதன்பால்;பட்ட ஏகாதிபத்திய சார்பு நிலையும் இவர்களை தமிழ் மொழி தமிழ் இனம் தமிழ் நிலம் தமிழர்களுடைய வரலாற்றின் நீட்சி அதனடிப்படையில் தமிழர்களுடைய பிரதேசத்தில் அவர்கள் ஒரு தனித்தேசிய இனமாக வாழ்வதற்கு அவர்களுக்கிருந்த இறைமைபற்றியும் தமிழர்கள் சுயநிர்ய உரிமையுள்ள ஒரு இனம் என்பது பற்றியும் தமிழ் சிந்தனைத் தளத்தில் இருந்து சிந்திக்கவிடாமல் தடுத்தது.

1958 இனக்கலவரம் நடந்த பின்பாவது அரசு என்ற அடக்குமுறைக் கருவி பற்றியும் அந்த அடக்குமுறைக்கருவியை சிங்கள அதிகார வர்க்கம் ஒரு துப்பாக்கி வேட்டைக் கூட தீர்க்காமல் கைபற்றியுள்ளது பற்றியும் அந்த அரசு சிங்கள பௌத்த பேரினவாத அரசாக தன்னை மறுநிர்மாணம் செய்துகொள்ள ஆரம்பித்திருப்பது பற்றியும் இவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.இந்த அரச இயந்திரத்திரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது எதிர்காலத்தில் தமிழ் மக்களை மிகப்பெரிய அடிமைத்தனத்துக்குள் தள்ளும் என்பதையாவது இவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் திரும்பத் திரும்ப தமிழ் மக்களை முட்டாள்களாக்கப் பார்த்தார்கள்.
எந்த அரச இயந்திரம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை திணித்ததோ, எந்த அரச இயந்திரம் வன்முறையாளர்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு தமிழ் மக்களின் உடமைகளை சூறையாடி உயிர்களை பறித்து அவர்கள் ஏதிலிகளாக்கியதோ அந்த இனவாத அரச இயந்திரத்திடம் நியாயம் கேட்கும் அகிம்சைப் போராட்டத்தை இவர்கள் நடத்தினார்கள்.
கொலைகாரனிடம் அவன்செய்த கொலைக்கு பிராயசித்தம் கேட்கும் இந்த நடவடிக்கையை இவர்கள் அகிம்சை வழியிலான உரிமைப் போர் என்று வெட்கமின்றி பிரகடனப்படுத்தவும் செய்தார்கள்.
இந்த நிலையில் கூட இவர்கள் இந்த சிங்கள மேலாதிக்க அரச இயந்திரத்தை பகிரங்கமாக நிராகரித்துவிட்டு தமிழ் மக்களின் இழந்த இறைமையை மீட்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க முன்வரவில்லை.
பிரித்தானிய எஜமான் திணித்துவிட்டுப் போன அந்த பல்தேசிய பல்கலாச்சார நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் தான் இவர்கள் தீர்வைத் தேடி ஓடினார்கள்.

தமிழர்கள் சிங்களவர்களுக்கு சமானமாக சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை இவர்கள் கேட்கவில்லை.சிங்கள மேலாதிக்க நாடளுமன்ற முறைமையின் கீழ் ஒட்டுண்ணிகளாக ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய கூட்டாட்சி முறையைத்தான் இவர்கள் கேட்டார்கள்.

சிங்களவர்களுக்கு இலங்கைத் தீவில் தங்களுடைய அரசை தாங்களே உருவாக்குவதற்கு எந்தளவுக்கு அருகதையும் உரிமையும் இருந்ததோ அதைவிட மேலான அருகதையும் உரிமையும் தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை சட்ட ரீதியாக நிrupiத்து இலங்கை நாடாளுமன்றம் என்ற அந்த சிங்கள மேலாதிக்க அமைப்பை தூக்கி எறிய ஏன் இவர்களால் முடியவில்லை?

1915ல் முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சனை நடந்த போது போக்குவரத்து வசதிகள் குறைவான முதலாம் உலகப்போர் நடைபெற்ற ஆபத்தான காலப்பகுதியில் லண்டனுக்குச் சென்று பிரித்தானிய அரசிடம் சிங்களவர்களுக்காக பேசிய இவர்களால் 1958 ல் எந்த நெருக்கடிகளும் இல்லாத போக்குவரத்து வசதிகள் சுலபமாகிப் போன ஒரு காலகட்டத்தில் லண்டனுக்கு சென்று நீங்கள் எங்கள் மீது திணித்த ஆட்சிமுறைதான் எங்கள் மக்களின் அழிக்கிறது.எங்களை அடிமைப்படுத்துகிறது. எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட எங்களது இறைமையை எங்களுக்கு திருப்பித்தாருங்கள் என்று இவர்கள் கேட்டிருக்கவேண்டும்.காலிமுகத் திடலிலே செய்த சத்தியாகிரகப் போராட்டத்தை இவர்கள் லண்டனில் செய்திருக்க வேண்டும்.ஏன் செய்வில்லை?
பாரிஸ்டர் கியூசி என்று மிகப் பெரிய சட்டமேதைகளாக திகழ்ந்த இவர்களால் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்பதற்கு பிரித்தானிய அரசுடன் பேரம் பேச என் முடியவில்லை?

இத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடை இவர்கள் செய்தது தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியல் அல்ல!தங்களது அதிகாரத்தை தக்க வைப்பதற்கான பிழைப்புவாத அரசியலையே இவர்கள் செய்தார்கள்.

குறிப்பாக சொல்வதானால் பிரித்தானியர்கள் அறிமுகப்படுத்திய வெஸ்ட் மினிஸ்ட்டர் ஆட்சிமுறை இலங்கைக்கு ஏற்புடையது அல்ல என்றோ இலங்கை தேசியம் என்பது தவறான ஒரு கோட்பாடு என்றோ இவர்கள் ஒருபோதும் ஆணித்தரமாக எடுத்து சொல்லவில்லை.அது ஒரு உன்னதமான அமைப்பு வடிவம் என்றும் இந்த அமைப்பு வடிவத்தை பலப்படுத்துவதன் மூலமே தங்களுக்கான அதிகாரத்தை தக்கவைக்க முடியும் என்றும் இவர்கள் நம்பினார்கள்.அதை நம்பும்படி தமிழ் மக்களையும் கோரினார்கள்
ஒருவகையில் பௌத்த சிங்கள பேரினவாதத்தை தங்களது அரசியல் இருப்புக்கான அடிப்படை கொள்கையாக கடைப்பிடித்த சிங்கள அதிகார வர்க்கத்துக்கும், அதற்கு எதிரான தமிழ் எதிர்ப்பியக்கத்தை நடத்திய தமிழ் அதிகாரவர்க்கத்துக்கும் இடையில் அடிப்படையில் ஒரு ஒற்றமை இருந்தது.அதாவது இரண்டு பகுதியினருமே மக்கள் நலன் சார்ந்த அரசியலை புறந்தள்ளி உணர்ச்சி அரசியலை அல்லது சுலோக அரசியலை முதன்மைப்படுத்தினார்கள்.

சிங்களவன் எதிர் தமிழன் அல்லது தமிழன் எதிர் சிங்களவன் என்ற இந்த உணர்ச்சி அரசியல் அல்லது சுலோக அரசியல் இலங்கை நாடாளுமன்றத்துக்கான ஆசனங்களை பெறுவதற்கான போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரண்டு பகுதியினருக்கும் கைகொடுத்தது.அரசியல் அரங்கத்திலும் தேர்தல் மேடைகளிலும் இவர்கள் எதிரிகள் போல் வெளிக்காட்டிக் கொண்டாலும் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்ற பின்னர் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்வதற்காக கைகோர்த்துக் கொண்டார்கள்.
இந்தக் கைகோர்த்தலை நியாயப் படுத்துவதற்காக சிங்களக் கட்சிகளுடன் ஆட்சிமைப்பதற்காக பேரம் பேசுவதன் மூலம் தமிழர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்லாம் என்றொரு மாயத் தோற்றத்தை இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் எற்படுத்தியிருந்தார்கள்
இதே நிலைமை தான் இன்று ஆட்கள் மாறிய போதும் தொடர்கிறது.
இன்றைக்கு முள்ளிவாயக்காலில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு பௌத்த சிங்கள பேரினவாத இராணுவ நுகத்தடியில் கட்டுண்டு நசுக்கப்படும் நிலையில் எங்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் தான் இருக்கின்றன.(ஒரு போரில் தோற்றப் போன எல்லோருக்கும் பொதுவான தெரிவுகள் தான் இவை)
1.சமரச அரசியல்
2;.சரணாகதி அரசில்
ஒரு போராட்டம் எதிர்பாராத விதமாக தோற்றுப்போகிற போது பேராடும் தரப்பு எதிர்ப்பு அரசியலை தற்காலிக ஒய்வு நிலைக்கு கொண்டு வருவதும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய இயங்கு தளத்தில் இருக்கக் கூடிய மிதவாத சக்திகளின் சமரச அரசியலை அனுமதிப்பதும் உலகின் பல்வேறு விடுதலைப் பேராட்டகளங்களிலே நடந்திருக்கிறது.
அதேநேரம் ஒரு போராட்டத்தை ஒடுக்கி வெற்றிகொள்ளும் அடக்குமுறையாளர்கள் எப்போதும் தம்மிடம் சரணடைந்த அல்லது விலை போன பேரிடும் தரப்பினர் சிலரை திரை மறைவில் முன்நிறுத்தி தீவிர எதிர்ப்பரசியல் ஒன்றை உருவாக்கப் போவதான மாயத் தோற்றம் ஒன்றை ஏற்படுத்துவர்கள்
விளக்கில் சென்று விழும் விட்டில் பூச்சிகளைப் போல இந்த மாய எதிர்ப்பரசியலை நம்பி தங்களை இனங்காட்ட முற்படும் உண்மையான போராளிகளை ஆக்கிரப்பாளர்கள் இனங்கண்டு அழித்தொழிப்பார்கள்.
இவ்வாறான தந்திரோபாயம் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் மலேசியா இந்தோனிசியா எல்சல்வடோர் சிலி முதலான பல்வேறு நாடுகளில் ஆக்கிரமிப்பாளர்களால் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
நமது விடுதலைப் போராட்டத்திலும் கேபி கருணா பிள்ளையான டக்ளஸ் முதலானவர்களை வைத்து சரணாகதி அரசியலை ஊக்குவிக்கும் சிறீலங்கா அரசு திரைமறையில் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவை தடுப்பதற்கும் உண்மையான எதிர்ப்பரசியல் உயர் வீச்சுடன் எதிர்காலத்தில் உருவாகமல் தடுப்பதற்கும் தானே போலி எதிர்பரசியல் உன்றை உருவாக்கி நகர்த்தி வருகிறது.
கேபி என்ற சரணாகதி அரசியல் வாதியை குற்றம்சாட்டவது போலவும் தீவிரமான சிறீலங்கா எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர்கள் போலவும் இந்த எதிர்ப்பு அரசியல் சக்திகளை காட்டிக்கொள்ள வைத்ததன் மூலம்; தியாகி எதிர் துரோகி அரசியல் தளத்தை உருவாக்கி அதன் மூலம் புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் புலம்பெயர்நாடுகளுக்கு தப்பி வந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டது.முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் மக்களை கிளர்ந்தெழச் செய்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் இனத்தையும் தியாகி எதிர் துரோகி என்று பிளவு படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.
மறுபுறத்தில் சர்வதேச அழுத்தத்தை திசை திருப்புவதற்காக சிறீலங்கா அரசாங்ககம் சமரச அரசியலுக்கு ஊக்கமளிப்பது போலவும் நல்லிணக்கத்துக்கான வாய்ப்பை கொடுத்திருப்பதாகவும் காட்டிக்கொள்வதற்காக வட மாகாணசபை தேர்தலை நடத்தியது.
இந்த தேர்தலில் நமது மக்கள் சமரச அரசிலுக்கு ஊடாக எதிப்பரசிலுக்கான தமது பற்றுதியை வெளிப்படுத்தினார்கள்.
இந்த தேர்தல் மூலம் நமக்கு ஒரு முதலமைச்சர் கிடைத்திருக்கிறார்.ஒரு நிர்வாக அலகின் அதிகாரம் நமது கைக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்வதை விட உண்பதற்கும் குடிப்பதற்கும் மட்டும் வாயை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த எமக்கு அரசியல் பேசுவதற்கான ஒரு களம் கிடைத்திருக்கிறது என்பதே முக்கியமானதாகும்.
viki.jpeg?w=440இந்த களத்திலே அரசியல் பேசும் முதலமைச்சர் விக்னேசுவரனையோ சம்பந்தனையோ சுமந்திரனையே மாவை சேனாதிராசாவை நாங்கள் துரோகிகள் காட்டிக்கொடுப்பவர்கள் என்று வசைபாடினால் எம்மைவிட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
ஏனென்றால் அவர்கள் இணக்க அரசில்வாதிகள் அவர்களுக்கு தெரிந்த தெல்லாம் சமரச அரசியல் மட்டும் தான்.இந்தியா எங்களது உரிமைகளை பெற்றத்தரும்.உலகநாடுகள் எல்லாம் எம்பக்கம்.மகிந்தவிடமிருந்த நாங்கள் எமது உரிமைகளை பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொள்ளுவோம் என்று தான் அவர்களுக்கு சொல்லத் தெரியும்.
எனவே இந்த இணைக்க அரசியல் வாதிகளுக்கு ஊடாக அவர்களது இயங்கு தளத்தை அடிப்படையாக வைத்து நாம் எமது எதிர்ப்பரசியலை எப்படி முன்நகர்த்துவது எப்படி என்பதையிட்டுத்தான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு எப்படி துரோகிப்பட்டம் என்று சிந்திக்க கூடாது.
கடந்தகால தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு நிகழ்காலம் பற்றிய அவதானம் மிகமிக முக்கிய மானதாகும்

 
 

 

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.