Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் இருப்பது எங்கே.  அது இங்கே.

 

[gvideo][/gvideo]

 

 

  • Replies 172
  • Views 12.8k
  • Created
  • Last Reply

ஏழைக்கு என்றுமே நீதி இல்லை..

 

உந்த தேவயானிக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் வீடுகள் அற்ற அரச பணியாளர்களுக்கு கட்டப்படும் ஆடம்பர தொகுதியில் இவருக்கும் வீடு ஒதுக்கப்பட்டதாம்.

 

இப்படி எல்லா அரச இயந்திரங்களும் அரசியல்வாதிகளும் மக்களின் வரிப்பணத்தில் திண்டு கொழுத்ததும் இல்லாமல் அவர்களை வைத்து வாட்டி வதைப்பதோடு உழைப்புக்கான கூலியும் கொடுக்க மறுப்பதும்.

 

எதிர் கேள்வி கேட்டால் சிறையில் அடைப்பதும் அராஜக ஆட்சியின் வெளிப்பாடே.

 

நல்லது எது கேட்டது எது என்று பகுத்தறிய முடியாதளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட இனமாக இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது பரிதாப கரமானது.

 

நீதி செய்யப்படுமா அல்லது வளைக்கப்படுமா?

 

அவதானிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?
 

தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை ‘தியாகம்’ செய்து, அவரது உறவினரான 1985-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் அடியொற்றி 1999-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.

2012-ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ 25,000 சம்பளமும், ரூ 5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.

தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அக்டோபர் (2012) மாதம் சங்கீதாவின் சார்பாக தேவயானி அனுப்பிய விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுடன் பேசியிருந்த சம்பளத்துக்கு மாறாக, வீட்டு வேலைகள் செய்வதற்கான மாதச் சம்பளமாக சங்கீதாவுக்கு $4,500 வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 1-ம் தேதி விசா நேர்முகத்துக்கு சென்ற சங்கீதாவிடம் பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிமுறைகளின் படி அமெரிக்காவில் பணி புரிய நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தனிப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அல்லது வேலையாட்களை அமெரிக்கா அழைத்து வருவதற்காக ஏ-3 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்ப நடைமுறையின் போது வேலைக்கு அமர்த்தப்படுபவரை நேர்முகம் கண்டு, அவர் வேலை செய்யவிருக்கும் அமெரிக்க பகுதியில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு போதுமான சம்பளம் அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக பணிக்கு அமர்த்தப்பபடுபவரும், பணிக்கு அமர்த்துபவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், என்ன வேலை செய்யப் போகிறார் (வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல்) என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேலை நேரத்தையும், ஒரு வாரத்துக்கு வேலை செய்யும் கால அளவையும் வரையறுத்திருக்க வேண்டும்.

வீட்டு வேலை செய்பவர்கள் வாரத்துக்கு 35 – 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்துக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்புகள், மருத்துவ விடுப்புகள், விடுமுறை விடுப்புகள் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அமெரிக்க விசா நடைமுறைகளை ஏமாற்றினார் தேவயானி.

வேலைக்கான ஊதியம் அமெரிக்க மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். தங்குமிடம், மருத்துவச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணம், உணவு போன்றவற்றுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படக் கூடாது.

வழக்கமான வேலை நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால் அந்த நேரத்துக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வேலை கொடுப்பவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டுப்படுத்தக் கூடாது. ஊழியரின் பாஸ்போர்ட், பணி ஒப்பந்தம் முதலான எந்த ஆவணத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

இந்த விதிகளின்படி தேவயானி ஒரு பணி ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறார். அதன்படி சங்கீதா வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டும் வேலை செய்வார் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு $9.75 ஊதியம் (நியூயார்க் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம்) வழங்கப்படும் என்றும் விசா நேர்முகத்தில் சொல்லுமாறு தேவயானி சங்கீதாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 6.30 முதல் 8.30 வரை சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 1 மணி வரை என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், ஆண்டு விடுமுறை விடுப்பு நாட்கள் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. ரூ 30,000 சம்பளம் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தேவயானி கூறியிருக்கிறார்.

இந்த பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்முகத்திற்கு பிறகு நவம்பர் 14, 2012 அன்று அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.

நவம்பர் 23-ம் தேதி விமான நிலையத்துக்கு போவதற்கு முன்பு சங்கீதாவையும் அவரது கணவர் பிலிப்பையும் தனது வீட்டுக்கு அழைத்த தேவயானி சங்கீதாவை இன்னொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சொல்லியிருக்கிறார். அதன் படி சங்கீதாவுக்கு ரூ 25,000 மாதச் சம்பளமும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், கூடுதல் மணிகளிலும் வேலை செய்வதற்கு ரூ 5,000 ஓவர்டைம் ஊதியமும் வழங்கப்படும். சம்பளமும் ஓவர்டைமும் சேர்த்து ரூ 30,000-ஐ தாண்டக் கூடாது. ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதைத் தவிர்த்து வேலை நேரம், வார வேலை நேர வரம்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், விடுமுறை விடுப்பு நாட்கள் பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’

நவம்பர் 24-ம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா 40 மணி நேர வரம்பை விட பெருமளவு அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். அவருக்கு ஒத்துக் கொண்ட ரூ 30,000-ஐ விட குறைவாகவே சம்பளமே கொடுக்கப்பட்டிருக்கிறது. போகப் போக வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததும் தாங்க முடியாமல் ஆகியிருக்கிறது.

தனது வாராந்திர ஓய்வு நாளில் வெளியில் வேலை செய்யப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார். சங்கீதா. ‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’ என்று அதை தடை செய்திருக்கிறார் தேவயானி. தனக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்க சட்டங்களை மீறி குறைந்த சம்பளம் கொடுக்கலாம், அதிக நேரம் வேலை வாங்கலாம், விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கலாம், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பொய் சொல்லும்படி கற்றுக் கொடுக்கலாம். ஆனால், சங்கீதா ஒரு நாள் வெளியில் வேலை செய்தால் அமெரிக்க சட்டம் மீறப்பட்டு விடும் என்ற அவரது அக்கறை சுயநலமே அன்றி வேறல்ல.

ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8-ம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய பாஸ்போர்ட்டையும் தந்து விடும்படி சங்கீதா கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தேவயானியின் தந்தையான ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கில் இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசிய சங்கீதா, வழக்கறிஞர் அலுவலகத்தை விட்டு போக மறுத்திருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் வெளி வருவதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். பின்னர், அமெரிக்க காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் சங்கீதாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

“அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும்”.

அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. சங்கீதா இந்தியா திரும்பினால் அவர் உடனே கைது செய்யப்படுவார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தேவயானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. நியூயார்க் நகரின் நீதித்துறை தலைவர் பிரீத் பராரா தேவயானியை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். டிசம்பர் 12-ம் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பும் போது, அவரை அமெரிக்க அரசு மார்ஷல்கள் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு கைது செய்த்தாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி கூறியிருக்கிறார்.

நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா

நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா, “தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை. அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்திருக்கின்றனர்.

தமது காரில் அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். அமெரிக்க காவல் துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கர்ஜித்திருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திப்பதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மறுத்திருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அவர்களை பார்க்க மறுத்து விட்டிருக்கின்றனர். இந்திய தூதரகப் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து தான் இந்த நிலையை எடுத்ததாக மோடி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் இந்தியத் தூதர் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, “எங்க ஆள் மேல் கை வைச்சா உங்களுக்கு தருகிற மேட்டுக் குடி சலுகைகளை எல்லாம் பிடுங்கிக் கொள்வோம்” என்று செல்லமாக மிரட்டுகிறார்களாம்.

அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மனைவி/கணவர் முறையான பணி விசா இல்லாமலேயே பள்ளிகளில் பணி புரிவது இது வரை இந்திய அரசுக்கு தெரியாதாம்.

அமெரிக்க குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் தேவயானி கைது செய்யப்பட்டது போலவே, இந்தியாவில் அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

“நூறு டாலரை விட்டெறிந்தால், நம் வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, காலடியில் உத்தரவுக்கு காத்திருக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் கிடைப்பது தெற்கு ஆசியாவின் வரம். ஒரு சுல்தானைப் போல வாழ்வதற்கு உலகில் வேறு எந்த இடத்திலும் சாத்தியமில்லை”.

வீட்டு வேலை செய்யும் பெண்

இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தினரின் புகழுரை இது. வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, குழந்தையை பார்த்துக் கொண்டு, மிஞ்சியிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, கொடுத்த இடத்தில் தூங்கிக் கொண்டு வீட்டோடு வேலை செய்யும் பெண் என்பது இந்திய நடுத்தர வர்க்கத்தின், குறிப்பாக வட இந்தியர்களின் கனவு வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி. ஓய்வு நேரம், வார இறுதி, வருடாந்திர விடுமுறை என்பதெல்லாம் தேவைப்படாத உழைக்கும் செக்கு மாடுகள் போல பயன்படுத்தப்படும் வர்க்கம் அது.

சம்பளத்தைக் கூட மொத்தமாக பின்னர் கொடுத்தால் போதும். பண்டிகை, திருமணம் என்று வரும் போது ஒரு புடவை வாங்கிக் கொடுத்து அடிமையை மகிழ்விப்பதோடு ஆண்டைகளின் கடமை முடிந்து விடுகிறது. “குறைந்த பட்சம், இங்கே நல்ல சாப்பாடாவது கிடைக்கிறது. கிராமத்தில் இருந்தா அரைப் பட்டினியாக இருந்து கஷ்டப் படக் கூடியவங்களுக்கு இது சொர்க்கம்” என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறவர்கள் நவீன இந்தியாவின் இந்த நவீன ஆண்டைகள்.

இந்த நவீன ஆண்டைகளின் பிரதிநிதிதான் இந்திய தூதரக அதிகாரி தேவயானி. வட இந்திய ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் அறிக்கைகளிலும், இணையத்திலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிலையங்களிலும் தேவயானிக்காக வெளிப்படும் தேசப்பற்றை இந்த பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது ‘தேச’த்தில் சங்கீதாக்களுக்கு உரிமை இல்லை.

கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக சங்கீதாவை தண்டிப்பது, அவரது கணவரையும் குழந்தையையும் கைது செய்வது, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பது தேவயானிகளின் பிறப்புரிமை.

சங்கீதாவின் சார்பில் அமெரிக்க நீதித் துறை தேவயானியை கைது செய்வது இந்திய தேசப் பெருமைக்கு கொடுக்கப்பட்ட அடி. தேவயானி மீதான வழக்கின் முக்கிய சாட்சிகளான சங்கீதா குடும்பத்துக்கு அமெரிக்கா விசா வழங்கி அமெரிக்காவில் புகலிடம் கொடுப்பது இந்திய தேசத்துக்கு எதிரான நடவடிக்கை. இப்படியெல்லாம் பொங்குகிறார்கள் இந்திய தேசபக்தர்கள்.

மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது பிரச்சனையில்லை.

ஆனால் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்த்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று அமெரிக்கா மிரட்டிய போதும், வால்மார்ட்டை திறந்தே ஆக வேண்டுமென்று கொலை மிரட்டல் விட்ட போதும் அதை தலைமேல் ஏற்றுக் கொண்டு அனுமதித்ததும் இந்த தேசபக்தர்களின் தேசபக்திக்கு ஒரு சான்று. இவையெல்லாம் நாட்டின் இறையாண்மை, சுயமரியாதை, ஆக்ரமிப்பை எதிர்ப்பதாக இவர்களுக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லை.

அமெரிக்க உளவுத் துறை மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது குறித்த ஆதாரங்களை ஸ்னோடன் வெளியிட்ட போது, இந்த தேச பக்தர்கள் வாலை சொருகிக் கொண்டார்கள். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காத்தா என்ன என்று அசடு வழிய அடிமைத்தனத்தை நியாயப்படுத்தினார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் போதும், கைது செய்து அழைத்துச் செல்லும் போதும் இவர்களின் தேசபக்தி காணாமல் போயிருந்தது. இன்னும் சிங்கப்பூரில் கைது செய்யப்படும் இந்திய தொழிலாளிகள், வளைகுடா நாடுகளில் வதைபடும் இந்தியர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் இந்திய அரசோ இல்லை, இந்த தேசபக்தர்களோ மூச்சு கூட விடுவதில்லை.

பாரதப் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறித்த இவர்களது ஆவேசம் சத்தீஸ்கரில் சோனி சோரி என்ற பழங்குடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது பிறப்பு உறுப்பிலும், ஆசன வாயிலும் கற்களை சொருகப்பட்ட போது அவர்களது பூஜை அறைகளுக்குள் பதுங்கி இருந்திருக்கிறது.

எனவே தேசபக்தியிலும் கூட வர்க்கம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தேவயானிக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல் மேட்டுக்குடியின் நலனை முன்வைத்து மட்டும் பேசுகிறது. அதனால்தான் இங்கே சங்கீதா வில்லியாக உருவாக்கப்படுகிறார். ஒன்று மட்டும் புரிகிறது, இவர்களது இந்தியாவிலும், தேசபக்தியிலும் உழைக்கும் இந்திய மக்களுக்கு இடமில்லை.

தேவயானிக்கு ஆதரவாக ஏகப்பட்ட லா பாயிண்டுகளை எடுத்து அடுக்குகிறார்கள். அதில் ஒன்று அவர் தலித் என்பது. மாயாவதி அப்படித்தான் அமெரிக்காவை கண்டித்திருக்கிறார். ஐஏஎஸ் அப்பாவுக்கு பிறந்து டாக்டர் படிப்பு படித்து, ஐஎஃப்எஸ் முடித்து துணைத் தூதராக வேலை செய்யும் தேவயாணி வாழ்வில் தலித் என்ற ஏழை சாதியின் அடையாளம் எங்கே இருக்கிறது? இல்லை ஒரு சாதாரண தலித்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்ன? தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.

அடுத்து தேவயானிக்கு வியன்னா உடன்படிக்கையின் படி தூதராக கருதப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க கூடாது என்கிறார்கள். தூதரக நடவடிக்கைகள் மட்டுமே வியன்னா உடன்படிக்கையில் வரும். இங்கே தேவயானி செய்திருப்பது சட்டத்தை ஏமாற்றுவது, ஒரு தொழிலாளரை சுரண்டுவது ஆகிய கிரிமினல் குற்றங்களாகும். தூதரகத்தில் வேலை செய்யும் ஒருவன் பாலியல் வன்முறையோ இல்லை கொலையோ செய்து விட்டால் அவனுக்கு விலக்கு உண்டு என்று வாதிட முடியுமா என்ன?

அடுத்து கைவிலங்கு, நிர்வாண சோதனை என்று மானம் போய்விட்டதாக பேசுகிறார்கள். இந்தியாவில் கூட போலிசால் கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன்னர் காவல் நிலைய லாக்கப்பில் வெறுமனே ஜட்டியுடன்தான் தங்க வைக்கப்படுவார். காரணம் அந்த நபர் இதர உடைகளை வைத்து தற்கொலைக்கு முயலக் கூடாது என்பதுதான். இப்படித்தான் அமெரிக்காவில் கைவிலங்கும், உடை களைந்த சோதனையும் போடுகிறார்கள். இதில் என்ன தவறு?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசின் கோரிக்கை என்ன? நீங்கள் கொள்ளையடிக்க எங்கள் நாட்டை உங்களுக்கு திறந்து விடுகிறோம், ஆனால் எங்கள் அதிகாரிகளை கொஞ்சம் மதிப்போடு நடத்துங்கள் என்பதே. இதைத்தாண்டி இந்திய அரசுக்கோ இல்லை மேட்டுக் குடிக்கோ துளியளவும் தேசபக்தியோ இல்லை சுயமரியாதையோ கிடையவே கிடையாது.

இதனால் அமெரிக்கா ஏதோ தொழிலாளருக்கு முழு உரிமை அளிக்கும் நாடு என்று கருது முடியாது. முதலாளிகளின் நலன்களுக்காக அவர்களும் பல்வேறு சட்டவிரோத குடியேற்றங்களையும், வேலை நிலையங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். மேலும் சட்டப்படியே ஒரு தொழிலாளரை சுரண்ட முடியும் என்பதற்கு வால்மார்ட் உள்ளிட்டு பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் நடத்தும் போராட்டச் செய்திகளை பார்க்கலாம்.

இறுதியாக பொருளாதார ரீதியாக இந்தியாவை கொள்ளையடிக்கும் அமெரிக்காவை இப்படி வெத்து வேட்டு பிரச்சினைகளுக்காக எதிர்ப்பது போல ஒரு வடிகால் இருக்கட்டும் என்று ஆண்டையும் அடிமையும் பேசி வைத்து செய்கிறார்களோ தெரியவில்லை.

எது எப்படியோ தேவயானி கைதுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் சங்கீதா குடும்பத்தினரை அச்சறுத்தும் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி

வினவு – செழியன்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் புரட்சிகரமான எதிர்ப்புகள் எல்லாம் ஓய்ந்துவிட்டனவா?? :rolleyes: சத்தத்தைக் காணேல்ல??! :unsure:

நுணா பதிந்திருக்கும் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் இடது கரை கட்டுரையில் சோனி சோரி என்ற பெண்ணுக்கு நடந்த அவலம் என் மனதை உறுத்தியது. இடது வழம் என்பத்தால் அவர்கள் பிடிக்கும் போது புளியம் கொப்பாகத்தான் பிடிப்பார்கள் என்பதால் அந்த பெண்ணின் கதையை தேட முனைந்தேன்.  சில சொற்களை பயன் படுத்த வேண்டியிருந்தது. பல உண்மைகள் நூற்றுக்ககணக்காக வெளிவந்தது. முதிர்ந்தவர்கள் என்ற முறையில் இந்திய ஏழைகளுக்கு காந்தி தேடி வைத்துவிட்டு போயிருக்கும் இந்த பாரிய நரக தேசத்தை பற்றி நீங்கள் எல்லோரும் தேடி படித்துகொள்ள வேண்டும். அப்படித் தேடினால்த்தான் ஏன் இந்தியா என்ற நரகம் உடனடியாக வெள்ளையர் ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என்பது புரியும்.

 

லிங்கராம் என்ற ஊடகவிலார் இடது சாரிகளுக்கான சில சாட்சியங்களை ஆவணப்படுத்தியத்தால் இந்த பெண்ணு நடந்ததை பாருங்கள. பல மணித்தியாலங்கள் தேடிய பின்னர் திரும்பி வந்து அதையும் வினவுவில் கண்டேன்.: 

http://www.vinavu.com/2013/08/26/injustice-to-soni-sori/

 

 

தேவயானி வழக்கு புதிய தூதர் ஜெயசங்கர் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

 

1388142325.jpg

 

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர் இன்று அமெரிக்க உயர் அதிகாரிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இந்திய துணைதூதர் தேவயானி கோப்ரகடே கைதுக்கு இந்தியாவின் கடும் எதிர்ப்பு பற்றி அவர்களிடம் தெரிவித்தார்.

புதிய தூதராக பொறுப்பேற்பதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் ஒப்படைத்த பின்னர் முதல் பணியாக, அமெரிக்க அரசியல் விவகாரத் துறை துணைச்செயலர் வெண்டி ஷெர்மேனை சந்தித்த ஜெயசங்கர் தேவயானி விவகாரத்தை வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்கா தேவயானி கோப்ரகடேவின் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியாதாக தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான எந்தவித  அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.

 

http://newsalai.com/details/world-news-12-27-2013-Devyani-Khobragade-case-New-envoy-S-Jaishankar-meets-top-US-officials-.html#sthash.puotwntg.dpbs

இந்தியாவில் மனச்சாட்சியிள்ள மனிதர்கள் இரண்டு தலைமுறைக்கு முன்பு இருந்தார்கள்.

இப்போ இருப்பவர்களிடம் அது இல்லை. அந்த மக்களை... சுயநலம் பிடித்த அரசியல் வாதிகள் பழுதாக்கி விட்டார்கள் என்பதே உண்மை.

 

மண்ணாங்கட்டி!

 

இராமாயண காலத்தில் இருந்தே இந்தியாவில் மனசாட்சியுள்ள மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னுமா இருக்கு  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணாங்கட்டி!

 

இராமாயண காலத்தில் இருந்தே இந்தியாவில் மனசாட்சியுள்ள மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றே இல்லை.

உண்மைதான் சூறாவளி,

 

அது இருந்தால் கண்ணீர் துளிபோல உலக வரைபடத்தில் காட்சிதரும் இலங்கையில் இத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்குமா ...................????  :(

இந்த திரி இன்னுமா இருக்கு  :(

இன்னும் ஒரு சில பக்கங்கள் செல்லும் என்று நம்புகிறேன் பாஸ்  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரி இன்னுமா இருக்கு  :(

 

 நான் முந்தியொருக்கால் சன்னதி அடியார் மடத்திலை இருக்கிற சாமியை பாத்து கேட்ட ஞாபகம் வருது... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி விவகாரத்தில் இந்தியாவின் பதிலடியால் அமெரிக்கா அதிர்ச்சி! 

 

 

Devyani-301213-150.jpg

இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இந்திய அரசின் பதில் நடவடிக்கையால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. வேறுவழியின்றி தேவயானி வழக்கில் நடந்த தவறுகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் இப்போது மறுஆய்வு நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத் துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மறுஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மூன்று துறை அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் தேவயானி வழக்கை கையாண்டதில் பல்வேறு தவறுகள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

  

ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறைக்க வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கருதுகிறது. மேலும் இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருவதால் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்கா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தேவயானி கோப்ரகடே வழக்கால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதை பென்டகன் விரும்பவில்லை.

தேவயானியை கைது செய்தது தவறு என்பதை இந்திய அரசு ஆணித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அமெரிக்காவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளது. விசா விண்ணப்பத்தில் தேவயானியின் மாத ஊதியமான 4500 அமெரிக்க டாலரை அமெரிக்க போலீஸார் பணிப்பெண் சங்கீதாவுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட ஊதியம் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவுக்கான துணைத் தூதராக தேவயானி இருந்தபோது, ஐ.நா. சபைக்கான இந்திய தூதரக ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார்.

வியன்னா ஒப்பந்தத்தின்படி ஐ.நா. தூதரை கைது செய்யவோ, அவரது உடைமைகளை பறிமுதல் செய்ய வோ கூடாது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அப்பட்டமாக மீறியுள்ளது. தூதர் என்றும் பாராமல் பொது இடத்தில் அவரை கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது, போதை அடிமைகளுடன் ஒரே அறையில் அடைத்தது உள்ளிட்ட விவகாரங்களை இந்தியா கண்டனத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை களுக்குப் பதிலடியாக டெல்லியில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளையும் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் சில நாள்களுக்கு முன்பு அந்த நாட்டின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியத் தூதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அதே மரியாதைதான் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களுக்கும் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியதாகத் தெரிகிறது.

ஆரம்பம் முதலே தேவயானி கைது விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வழக்கத்துக்கு மாறாக மிகக் கடுமையாக இருப்பதால் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியாவின் ஆக்ரோஷ செயல்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தாலும் அதன் விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100287&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. :D

மகாபாரத காலம் தொட்டு அமேரிக்கா இப்படித்தான் நடந்து வருகின்றது . :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னது போல் அமெரிக்க மக்கள் இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சி நிலத்துக்கு கீழ் ஒளிந்து இருக்கிறார்கள். :icon_mrgreen:

பேச்சு வார்த்தை என்று வரும் போது அமெரிக்கர் கட்டாயம் விட்டுக்கொடுப்பார்கள். தமிழ் நாட்டில் கைப்பற்றப் பட்ட கப்பல் வழக்கு இருப்பதால் ஆள் பரிமாற்றம் முயல்வார்கள். 

 

ஆனால் தமிழ் ஊடகங்கள் இருப்பவன் சரி இல்லாதாதால் "தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இந்திய அரசின் பதில் நடவடிக்கையால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது." இப்படி எல்லாம் சிரைத்து முட்டாள்கள் ஆக்குகிறார்கள். 

சிலவேளை இந்த தேவயாணி கைதே அந்த கப்பலை இந்தியா தடுத்து வைத்திருப்பதால் தானோவும் தெரியாது...அந்த கப்பல் விடயம் இன்னும் இரகசியமாக இருக்கு....

தேவயானி நிர்வாணமாக்கப்படும் காணொளியை அமெரிக்க போலீஸ் வெளியிட்டுள்ளதாக கூறி இந்திய ஊடகங்களால் வெளியிடப்பட்ட வீடியோ போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

(முகநூல்)

 

 

 

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அப்படியே தேவயானி என கூறி பொய்யாக இந்திய ஊடகங்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்தன.

 

Kalpesh Ghosalkar
The woman in the video is Hope Steffey, and it happened in Stark County, Ohio in 2008. They darkened the video a little bit to make her look Indian.

Edited by nunavilan

Devyani Khobragade case: Pakistan backs India in row over diplomat's arrest
 

devyani_new_diplomat_pti2_360x270.jpg

 

New Delhi Pakistan today sided with India in the row over the treatment meted out to senior diplomat Devyani Khobragade in the US and said such treatment should not be meted to any official of another country.

"In the entire world, there is only one way... there is a long history to this... the respect for Vienna Convention... the Vienna Convention ought to be respected in letter and spirit by everbody," Pakistan High Commissioner Salman Bashir said on the sidelines of an event when asked about his reaction to the issue.

Ms Khobragade, a 39-year-old 1999 batch IFS officer, was arrested in New York on December 12 on charges of making false declarations in a visa application for her domestic help Sangeeta Richard and subjected to strip and cavity searches.

This had sparked an outrage in India and resulted in the government hitting back with a set of reprisal measures, enforcing strict "reciprocity" and withdrawal of extra privileges to US diplomats in India.

Former Pakistan Foreign Secretary Shaharyar M Khan said this kind of treatment should not be meted out to diplomats.

"This kind of treatment with diplomats should not happen. It is written clearly in Vienna convention - both for diplomatic and consular conduct... Under it, one cannot arrest any diplomat, especially if that diplomat has said that he or she has immunity... Every country has signed it..." Mr Khan said.

 

http://www.ndtv.com/article/india/devyani-khobragade-case-pakistan-backs-india-in-row-over-diplomat-s-arrest-467754

Former Pakistan Foreign Secretary Shaharyar M Khan said this kind of treatment should not be meted out to diplomats.??????

தேவயானி விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு

By dn, புது தில்லி
First Published : 07 January 2014 02:20 AM IST

அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் தில்லியில் நடைபெற்ற விழாவின்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், " தேவயானியை அமெரிக்கா நடத்திய விதம் வேறு எந்த நாட்டு அதிகாரிக்கும் நடக்கக் கூடாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் வியன்னா மாநாட்டு தீர்மானத்தின்படி தூதரக அதிகாரிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்'' என்றார்.

முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஷார்யார் எம். கான் கூறுகையில், "தூதரக அதிகாரியை அமெரிக்கா இந்த அளவுக்கு மோசமாக நடத்தியிருக்கக் கூடாது. வியன்னா மாநாட்டு தீர்மானத்தில் எந்த ஒரு தூதரக அதிகாரியையும் கைது செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன'' என்றார்.
 

http://www.dinamani.com/india/2014/01/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/article1986879.ece

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-Diplomat.jpg

விசா முறைகேடு விசாரணையை தள்ளி வைக்க கோரிய தேவ்யானியின் மனுவுக்கு பிரீத் பராரா எதிர்ப்பு

 

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்திய துணை தூதரக அதிகாரியாக இருந்த தேவ்யானி கோப்ரகடே விசா முறைகேடு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.  அவர் தன்னிடம் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்டு என்ற பணிப்பெண்ணுக்கு சம்பளம் அளித்தது தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்ததால் அது தொடர்பாக மற்றொரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை அமெரிக்காவுடனான நட்புறவு வழக்கம்போல் இருக்காது என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், தேவ்யானியின் வக்கீல் டேனியல் அர்சாக் நியூயார்க் நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், அமெரிக்க அரசு முதல் கட்ட விசாரணை மேற்கொள்ளும் வரை விசா முறைகேடு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  தற்போது, இந்த வழக்கு ஜனவரி 13ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.  வழக்கை 30 நாட்கள் நீட்டித்து அதாவது பிப்ரவரி 12ந்தேதிக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடும்படி அமெரிக்க மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி சாரா நெட்பர்னிடம் அவர் கேட்டு கொண்டு இருந்தார்.

ஆனால், 30 நாட்கள் கால அவகாசம் என்பதற்கு அவசியமில்லை என்று இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க வக்கீலான பிரீத் பராரா நியூயார்க் நகர நீதிபதியிடம் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  அர்சாக்கின் மனுவை தொடர்ந்து, பராரா நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க அரசு கால அவகாசம் எதுவும் கோரவில்லை.  ஜனவரி 13ந்தேதிக்கு முதற்கட்ட விசாரணை தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் தேவ்யானி மற்றும் தனது அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் விவாதங்களுக்காகவே ஆகும்.

எனவே, மேலும் 30 நாட்கள் நீட்டிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டியதில்லை என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதிக்கு கடிதத்தில் கூறியுள்ளார்.  இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பது தொடர்பான மனு மீதான விவாதங்கள் அமெரிக்க அரசு விசாரணை நடத்திய பின்னரும் தொடரும் என்று பிரீத் பராரா குறிப்பிட்டுள்ளார்.
 

http://www.dailythanthi.com/2014-01-07-Preet-Bharara-opposes-Indian-diplomat-Devyani-Khobragade-plea-modify

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தேவயானியின் தந்தை தலைமையில் போராட்டம்

 

மும்பை,

மும்பையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தேவயானியின் தந்தை தலைமையில் போராட்டம் நடந்தது.

மெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, கடந்த மாதம் 12–ந்தேதி பணிப்பெண் சங்கீதாவின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக இந்தியா–அமெரிக்கா இடையே தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவயானியின் தந்தை தலைமையில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது.

அமெரிக்க அதிகாரிகள் சட்ட விரோதமாக தேவையானி கைது செய்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை என்று தேவயானியின் தந்தை கோப்ரகடே தெரிவித்துள்ளார்.
 

http://www.dailythanthi.com/2014-01-07-Devyani-s-father-leads-protest-outside-US-consulate

யு.எஸ். தூதரக கிளப்பை மூட உத்தரவு- போக்குவரத்து விதிகளை மதிக்கவும் உத்தரவு

 

டெல்லி: தேவ்யானி கோப்கரடே விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி மற்றும் எரிச்சல் தரும் வகையிலான அடுத்த கட்ட நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள கிளப்பை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி வரை இதற்கு டைம் தரப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை அமெரிக்க தூதகரம் மற்றும் அதன் அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இன்னொரு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும் அமெரிக்க தூதரகத்தில் எந்தவிதமான வணிக ரீதியிலான நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இருக்கக் கூடாது என்றும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளின் கார்கள் இனிமேல் உள்ளூர் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸார், இனிமேல் இவர்களின் கார்களுக்கு விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை என்றும் அனைத்து மாநில கா்வல்துறைக்கும் மத்திய அரசு உத்தரவு அனுப்பியுள்ளதாம்.

 

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஒரு கிளப் உள்ளது. அங்கு பார், நீச்சல் குளம், அழகு நிலையம், ஹோட்டல், பெளலிங் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் கோர்ட் ஆகியவை உள்ளன. இங்கு வெளியாட்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே வர்த்தக ரீதியிலான இந்த பயன்பாட்டை அனுமதிக்க முடியாது. எனவே கிளப்பை மூடுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஏற்கனவே தேவ்யானி கைதுக்குப் பின்னர் சின்னச் சின்னதாக பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்க தூதரகங்களுக்கு இந்தியா கொடுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். அதில் இப்போது இந்த உத்தரவுகளும் புதிதாக சேர்ந்துள்ளன.

http://tamil.oneindia.in/news/india/devyani-khobragade-case-us-embassy-asked-shut-its-club-follow-traffic-191025.html
 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.