Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராவணன் இஸ்லாமியனாம்! - முஸ்லீம்களின் புதுப் புரளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

muss.gif

இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வரலாறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நிலையில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த இராவணன் எப்படி சிங்களவனாவான்?

உண்மையில் இஸ்லாம் இந்து, பௌத்த மதங்களுக்கு முற்பட்டது என்பதாலும் முதல் முஸ்லிமும் முதல் மனிதனுமான ஆதம் இலங்கையில்; இறங்கி அவரின் வாரிசுகள் இங்கேயே வாழ்ந்தனர் என்பதனாலேயே ஆதம் வாரிசு என்ற அறபுச்சொல் ஆதிவாசியாக மருவியுள்ளதை காணலாம். அத்துடன் இலங்கை இந்திய எல்லையில் அழிந்து போன பாலத்தை ஆதம் பாலம் என்றே அங்கில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பாலத்தின் வழியாகவே ஆதம் மக்கா சென்று திரும்பினார். சேது பாலம் என தமிழில் அழைக்கப்படும் பெயர் கூட சீது என்ற இறைத்தூதரின் பெயராகும் என்பதை இஸ்லாம் கூறுகிறது.

அதே போல் இராவணன் சம்பந்தப்பட்ட வரலாற்றுக்கதையில் வரும் பெயர்களான ராவணன் என்பது அரசன் என்ற பொருள் கொண்ட ராஇனன் என்பதும் ராமன் என்பது ரஹ்மான் என்பதும் சீதா என்பது சய்யிதா என்பதையும் அனுமான் என்பது நுஃமான் என்பதையும் வாலி என்பது அதே அறபுச்சொல் மூலம் பாவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இந்தப்பெயர்களுக்கும் இந்து, பௌத்த பெயர்களுக்கும் எந்தவொரு நெருக்கத்தையும் நாம் காண முடியாது. மாறாக அறபு மொழிக்கே மிக மிக நெருக்கமாக உள்ளன.

ஆக ராம் மற்றும் ராவணன் வரலாறு என்பது முஸ்லிம்களின் வரலாறாகும். காலப்போக்கில் இந்த வரலாறு திரிபு படுத்தப்பட்டு இந்துக்கள் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வாறு மோசே என்ற மூசாவை பின்தொடர்ந்த முஸ்லிம்கள் அவர் இல்லாத போது காளை மாட்டை வணங்கி இந்துக்காளாக மாறினார்களோ அவ்வாறே இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்களாக, பௌத்தர்களாக மாறியுள்ளனர்.

ஆகவே இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகமாகவே இருந்துள்ளது என்பதை எம்மால் உறுதிபட கூற முடியும் என முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்தார்.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10663:2013-12-20-09-11-26&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

அட... நம்ம, சிவ பக்தன் இராவணேஸ்ரனுக்கு, இவ்வளவு சக்தியா?
அப்ப... இனி, சிங்களவனும், முஸ்லீமும்... தீபாவளி கொண்டாட வேண்டியது தானே...

கிழிஞ்சுது ......... :rolleyes:

போற போக்கில மலையாளிகள்  ஐயப்பனின் அவதாரம் ராவணன்  என்றும்  சாய் பாபா  பக்தர்கள்  பாபாவின் அவதாரம் ராவணன் என்றும் ,மருவத்தூர் பக்தர்கள் அம்மாவின் அவதாரம் ராவணன் என்றும் , குறிப்பா புதிய திருச் சபைகள் (பிலதெல்லியா பெந்துக்கொஸ் ,யோகொவாவின் சாட்சிகள் போன்ற சபைகள் கர்த்தரின் உருவம்மே ராவணன் என்று சொல்லுவார்கள். எப்பிடியோ ராவணன் அனைவருக்கும் சொந்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி = தஹ்மிட் ஷரீப் :D
தமிழ் சூரியன் = தஹ்மிட் சுபியான் :D

இருவரும் முஸ்லிம்களா? :D

தமிழ் சிறி = தஹ்மிட் ஷரீப் :D

தமிழ் சூரியன் = தஹ்மிட் சுபியான் :D

இருவரும் முஸ்லிம்களா? :D

1525160_622509914473021_238230724_n.jpg

அவர் சொல்வதில் தப்பொன்றும் இலை. மதங்கள் நம்பிகை மட்டுமே. கடவுள் கற்பனைக்கு எட்டாதவர். நாங்கள் இராவணன் தமிழ் மதத்தவனனா, இந்துவா  என்று தீர்மானிக்க முடியாமல் இருக்கிறோம். இராவணனை அழிக்க இராமர் வ்ந்த நாளாக தீபாவழியை கொண்டாடுகிறோம். அவர்கள் தங்களின் மனத்திடத்துடன் இராவணன் முகமதியன் என்கிறார்கள்.  

அவர்களை பொறுத்தளவில் சிவனொளிபாதம் தங்களின் கடவுளின் காலடி என்று நம்புகிறார்கள். எனவே இராவணன் தங்களின் கடவுள் என்று நம்பினால் அதில் தப்போ கேடோ ஒன்றும் இல்லை. முல்லீம்கள் இலங்கையின் குடிமக்கள் அல்ல என்று பொது பல சேனா நடந்துகொள்ளும் பொது கக்கீம் மாதிரி கூலிப்பட்டாளங்கள் தலையை மணலுக்குள் புதைக்கின்றன. இவ்ர் பலதடவை பதில் சொல்லியிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

கலோ... மல்லை.
திருக்கோணேஸ்வரம் தெரியுமா.... அதில் இராவவணன் வெட்டு உள்ளது.
அங்கு சமய குரவர்களால்... பாடப் பட்ட தலம், எதாவது தெரியுமா?
இப்போ.. அங்கு, பிரமாண்ட புத்த விகாரை இருப்பது தெரியுமா?
நீங்க, நெடுக.... சம்பந்தனுக்கு, சவுக்காரம் போட வேண்டாம். :)

நான் இப்பத்தான் தொழுகைக்கு போட்டு வீட்டு வாந்தனான். என்னை சம்பந்தர் என்ன நேரம் தொழுகைக்கு போறவரோதெரியாது.  :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி!

 

அப்ப மண்டோதரி பேகம், என்ன மதம்? :D

 

இராவணனது 'சுண்ணத்துச் சடங்கு' பற்றிக் கட்டாயம் கம்பன் பாடியிருப்பானே! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மௌலவி இந்தபட்டிமன்றத்தை கனதரம் பார்த்து கெட்டுப்போனார்...

 

http://www.youtube.com/watch?v=k5YskT0STAY

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி!

 

அப்ப மண்டோதரி பேகம், என்ன மதம்? :D

 

இராவணனது 'சுண்ணத்துச் சடங்கு' பற்றிக் கட்டாயம் கம்பன் பாடியிருப்பானே! :o

 

இராவணனக்கு 10தலை ஆகவே........அதுவும்.... :D

இந்த ஆள் புரட்சிகரமாக பேசவல்லவர்.

 

தொப்பி, பர்தா அணிந்த புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறல்
Written by Tamil   //  December 15, 2013   //
green eyes red green eyes muslim hijab arab 2544x1680 wallpaper_www.wallpaperfo.com_88

புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் பர்தா போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.

மேற்படி ஆளடையாள அட்டை சம்பந்தமான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் பகிரங்க இடங்களில் தலை மூடியிருப்பது சமயச் சட்டமாக இருப்பதுடன் அவர்களின் கலாச்சாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் பகிரங்கமாக எடுக்கப்படும் ஆளடையாள அட்டை எந்தவொரு கலாச்சாரத்தையும் பிரதி பலிக்கக்கூடாது என்பதன் மூலம் முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதுடன் முஸ்லிம் மக்களை கருவறுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சட்டங்களை கொண்டு வருகிறார்கள் என்றே நாம் பார்க்கிறோம்.

அதே போல் நமது நாட்டில் உள்ள சகல மத குருமார்களும் தமது மத கலாச்சார ஆடைகளை அணிந்தே ஆளடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கிறார்கள். இந்த வகையில் மௌலவிமார் தொப்பி போட முடியாத நிலையிலும் அதேபோல் கிறிஸ்தவ பாதிரிமார், மற்றும் இந்து சாமிகள் தமது சமயத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிய முடியாதவாறும் தடுக்கப்படுகிறது.

அதேவேளை பௌத்த குருமார் நிச்சயம் தமது சமய முறைப்படி புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவர் என்பதை உறுதியாக எம்மால் கூற முடியும். ஏனெனில் அவர்கள் ஆளடையாள அட்டை புகைப்படத்துக்காக என முடி வளர்க்கவோ அல்லது டோப்பா போடவோ மாட்டார்கள்.

அத்துடன் கோட்டை அணிந்து புகைப்படம் எடுத்தலை ஆட்பதிவு திணைக்களம் அனுமதிக்குமா என்றும் கேட்கிறோம். அதனை அனுமதித்தால் ஆங்கில கலாச்சாரத்துக்கு இடமளிக்கும் இந்த அரசாங்கம், தமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரங்களை மறுக்கின்றது என்றே ஆகிவிடும். அதே போல் தலை திறந்து புகைப்படம் எடுப்பது கூட சிங்கள, தமிழ் கலாச்சாரம் என்பதால் அதனையும் தடை செய்ய வேண்டும். இப்படி பார்த்தால் ஆண்களும் பெண்களும் தலையை மொட்டையடித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுப்பதன் மூலம்தான் எவரது கலாச்சாரத்தையும் பிரதிபலிக்காத வகையில் புகைப்படம் அமையும். இதனைத்தான் இந்த அரசாங்கம் எதிர் பார்க்கிறதா?

ஆக, எந்தவொரு மனிதனும் தனது சமய கலாச்சார ஆடைகளை அணிவதற்கு மனித உரிமை சாசனம் இடமளித்துள்ளது. இதற்கிணங்க ஆளடையாள அட்டையிலும் தமது சுய விருப்பத்தினாலான ஆடைகளை அணிய இடமளிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

 

மூலம்

தமிழ் ஸ்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.