Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவும் இலங்கையின் அணுகுமுறையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

samarasinghe-251213-150.jpg

''ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் இம்முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இடம்பிடிக்கின்றமையின் காரணமாக எமக்கு வலுவான நிலைமை மனித உரிமை பேரவையில் காணப்படுகின்றது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்'' - செய்தி

  

 

இலங்கையில் பயனம் செய்தபோது சிங்கள அரச உயர் பணியாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் ராஜதந்திர செயல் நேர்த்தி sofistication எனை ஆசரியப் படுத்தியது. தமிழ் அரசியலைப் பொறுத்து சம்பந்தர் குழுவிடம் மட்டுமே ஓரளவு ராஜதந்திர செயல் நேர்த்தியைக் காணமுடிகிறது. தமிழ் அரசியல் அரங்கில் ராஜதந்திர செயல் நேர்தியை தனது கடைசிக் காலக்கட்டத்தில்  அமரர் அன்ரன் பாசசிங்கம் அவர்கள் வெளிபடுதினார்கள். பேச்சுவார்த்தைக் காலத்தில் அவருடன் பணியாற்றுவதில் மேற்க்கு நாட்டு ராசதந்திரிகள் திருப்தியும் ஆர்வமும் கொண்டிருந்ததை அறிவேன்.. துரதிஸ்ட்டவசமாக இன்று அந்த நிலமை நம் மத்தியில் நீடிக்கவில்லை. 

 

இப்பொழுது சர்வதேச நிலமைகளைக் கையாள இலங்கை ரசதந்திரிகள் தங்கள் செயல் நேர்த்தியை மேலும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.அதிஸ்ட்ட வசமாக சிங்கள இனவாத அரசு இன்னும் முட்டாள்களின் கொட்ட்டகையாக இருக்கிறது.  அரசு மேற்கு நாடுகளின் எதிர்பார்ப்புகலுக்கு விட்டுக்கொடுத்து சிங்கள ராஜதந்திரிகலின் செயல்பாடுகளுக்கு போதிய இடத்தை உருவாக்கவேன்டும் என்கிற கருத்து சிங்கள உயர் மட்டத்தில் நிலவுகிறது. அரசு மேற்க்கு நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து தனது  நிலைபாட்டை செம்மை செய்தால் தமிழர்கள் நமது ராசதந்திரப் பணிகள் மேலும் கடுமையான சவல்களை எதிர் நோக்க நேரிடும். .

 

இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளின் ஆதரவு தமக்கிருப்பதை அவர்கள் பலமாகக் கருதுகிறார்கள்.  தமிழ் கடும்போக்காளர்களும் அவர்களை ஆதரிக்கும் சிங்கள தோழர்களும் அமரிக்கா பிரிட்டன் போன்ற தமிழர் மீது அனுதாபம் காட்டும் நாடுகளுக்கு வெறுப்பேற்றுவார்கள்  இதன்மூலம் சூழ்நிலை மேலும் சாதகமாகும் என்பது அவர்களது உபாயமாக இருக்கிறது. தமிழர் தரப்பு ராஜதந்தரிகள் இந்த விடயங்களை சிந்திக்க வேன்டும்.

 

முள்ளிவாய்க்காலின்பின்னர் மேற்க்கு நாட்டு மற்றும் இந்திய ராஜதந்தரிகள் தமது தமிழர் ஆதரவு நிலையின் ஆதாயம் தங்களுக்கும் தாங்கள் அங்கீகரித்திருக்கும் ஒரே அமைப்பான சம்பந்தர் தலைமைக்கும் மட்டுமே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தாங்கள் விரும்பாத அமைப்புகள் ஆதாயமடையும் சூழல் ஏற்படும்போதெல்லாம் அவர்கள் அடக்கியே வாசித்திருக்கிறார்கள்.

 

சர்வதேச நிலமையை புரிந்துகொண்டு  மேற்க்கு நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களிலேனும்  விமர்சனங்களோடு சம்பந்தர் தலமையை ஆதரிக்க வேண்டிய அரசியல் தற்காலிக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மேற்க்கு நாடுகளையும்  இந்தியாவையும் அனுசரித்துப்போவதையும்  பொஸ்னியா, கொசோவா, தென் சூடான், கிழக்கு தீமோர் போன்ற நாடுகளின் பாதையைத் தெரிவுசெய்வதையும் தவிர  -நமக்கு வேறு பாதைகள் இல்லை. இந்தியாவின் நிலைபாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே விதிவிலக்கான சூழலை ஏற்படுத்தக்கூடும். 

 

தமிழர் நீண்டகால நலன்கருதி சூழலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

 

 ''எப்பவுமே வரப்பிரசாதங்கள்

வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட 
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.

நனைந்த நிலத்தில் 
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.

காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது

கனவுகள்.''

 

 

"இலங்கையில் பயனம் செய்தபோது சிங்கள அரச உயர் பணியாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் ராஜதந்திர செயல் நேர்த்தி sofistication எனை ஆசரியப் படுத்தியது. (சரியான சொல் "sophistication")

இதற்கான ஆதரங்கள் காட்டப்படாமையால் இது மொக்கையாக இருக்கிறது. ஆனால் வெளியே தெரியும் ஆதாரங்கள் இதற்கு எதிரானவை. நான் ஆரம்பம் தொடக்கம் சொல்லிவந்தது போல் குள்ளநரி களவு விடும் குணம் மட்டும் சிங்களவர்களிடம் இருந்தது, இருக்கிறது. உண்மையான ராஜதந்திரம் என்றால் அது அதை பிரயோகிக்கும் தலைவர்களுக்கும், நாட்டுக்கும் பலன் அளிக்க வேண்டும். சிலர் அந்த சொற்பதத்தை சரியாக விளங்காததால் திருட்டுக்குணத்தை, அப்பட்டமான பொய்யை, லஞ்ச ஊழலால் கருமமாற்றுவதையெல்லாம் ராஜதந்திரம் என்று அழைக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் பின்னால் போகிறது. அண்மையில் நடந்த தேர்தலில் மூன்று முறை கட்சி மாறி, தேர்தல் நேரம் அரசுடன் சேர்ந்தவரை சிங்கள மக்கள் சரித்திரம் காணாத பெருபாண்மையுடன் தெரிந்தார்கள். போதை மருத்துவியாபாரத்தில் பிரதமரின் அதிகாரிகள் பிடிபட்டிருக்கிறார்கள். அந்த ஊழல் நிறைந்த பிரதமரின் மகன் என்பதால் மத்திய மாகாணத்தில் அவரும் பெரும்பாண்மை ஈட்டினார். இவை எல்லாம் ஒரு ரப்பர் கம்பனியிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு சிங்கள மகளை சுட்டுத்தள்ளிய அரசின் பாரதூரமான நடத்தையின் பின்னர் சிங்கள மக்களிடம் காணப்படும் விழிப்பின் எதிர்வழ அடையாள்ங்கள்.  DS, SWRD, சிறிமா, JR, பிரேமதாசா, சந்திரிக்கா, மகிந்தாவரைக்கும் வந்தசிங்களத் தலைவர்கள் இறுதியில் தங்கள் நாட்டில் தாங்கள் அமைதியாக வாழ முடியவில்லை. அவர்களால்  நாட்டை முன்னேற்ற முடியவில்லை. போரின் போது 30 நாடுகளை  கதிரகாமர் உதவிக்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் இலங்கையின் இராஜதந்திரம்  இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் முடிந்திருக்கு. இந்த குள்ளநரி விளையாட்டு இன்று அபத்தமாக முடிவடைந்திருக்கிறது. இதை பற்றி யாழில் பல இடங்களில் "கலைமானும், குதிரையும் என்ற பஞ்ச தந்திர கஸ்யைச் சொல்லி விளக்கமளித்திருக்கிறேன். இலங்கை வழமாக மேற்குநாடுகளிடம் மாட்டிவிட்டது. மானம் கெட்டதனமாக, எதிர்க் கட்சி தலைவர் ரணில், ஜெனீவாவில் வரப்போகும் கூட்டத்தொடருக்கான அரசின் ஆயத்தங்களில் விழுந்திருக்கும் ராஜதந்திர ஓட்டைகளை அடைக்க  தனது ராஜதந்திரிகளை பரிந்துரைக்காமல் மகிந்தாவின் நண்பர்களாகிய, தாமரா, தயான் போன்ற்வர்களை பரிந்துரைத்திருந்தார், தயான் பழையவர் ஒன்றும் அதில் புதியதில்லை, தமாரா தமிழர். சிங்களவர் அல்ல. இது சிங்களவகளுக்கே சிங்களத்திடம் புதிய ராஜதந்திரிகளின் வளர்ச்சி இடம்பெறவில்லை என்ற உணர்வு அதிகரித்திருப்பதைத்தான் காட்டுகிறது.  

 

தமிழ் அரசியலைப் பொறுத்து சம்பந்தர் குழுவிடம் மட்டுமே ஓரளவு ராஜதந்திர செயல் நேர்த்தியைக் காணமுடிகிறது.

இந்த வசனம் தமிழ் மக்கள் குருட்டுத்தனமாக சம்பந்தரை தலைவராக்கி வைத்திருக்கிறாகள் என்ற பேரில் இல்லை என்றாக வேண்டும். அதை தமிழ் மக்களுக்கு தெரிந்த படியால்த்தான் பொன்னம்பலம் பதவியால் போனார், செல்வா, பிரபாகரன், சம்பந்தர் மாதிரியானவர்களுக்கே பதவி கிடைத்தது.

 

தமிழ் அரசியல் அரங்கில் ராஜதந்திர செயல் நேர்தியை தனது கடைசிக் காலக்கட்டத்தில்  அமரர் அன்ரன் பாசசிங்கம் அவர்கள் வெளிபடுதினார்கள். பேச்சுவார்த்தைக் காலத்தில் அவருடன் பணியாற்றுவதில் மேற்க்கு நாட்டு ராசதந்திரிகள் திருப்தியும் ஆர்வமும் கொண்டிருந்ததை அறிவேன்.. துரதிஸ்ட்டவசமாக இன்று அந்த நிலமை நம் மத்தியில் நீடிக்கவில்லை.

இது "தலைவர் பிரபாகனுக்கு விளக்கம் குறைவு. அவரும் குடுட்டுத்தனமாக அன்ரன் பாலசிங்கத்தை வைத்திருந்தார்" என்றாக்குகிறது. அதை தெரிந்துதான் தலைவர் பால்சிங்கத்தை அதில் அமர்த்தியிருந்தார். அது மட்டுமல்ல ஒரு ஆயுத போராட்ட அமைப்பு பால்சிங்கம் மாதிரியான சமாதான பேச்சாளியை பேச்சுவார்த்தையில் போடுவது மிக ஆச்சரியமான செயலும் கூட. போராட்டம் தோற்ற காரணம் பேச்சுவார்த்தையில் அதீத ஆர்வம் காட்டியதாலா என்ற கேள்விக்கு பதில் காண பிற்காலம் இது உதவும்.  

இப்பொழுது சர்வதேச நிலமைகளைக் கையாள இலங்கை ரசதந்திரிகள் தங்கள் செயல் நேர்த்தியை மேலும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எதை வைத்துக்கொண்டு இது சொல்லப்படுகிறது என்றதை விவரித்தால் நல்லது. ஆனால் உள்ளக பிரச்சனைகளால் ரஜிவ, தயான், சரத் என் சில்வாக்கள், பொன்சேக்காக்கள் பதவி இழந்து, சவேந்திர சில்வா போன்ற ஆமிகள் மட்டும்தான் பதவிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மந்திரி சபையில் இணைக்கப்பட்டவர்கள் ஒரு பிரஜோசனமும் இல்லாதவ்ர்கள். மேலும் உள்வாங்கப்பட்ட முஸ்லீம்கள் கக்கீமை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க செய்யப்பட்டவே. 

 

அதிஸ்ட்ட வசமாக சிங்கள இனவாத அரசு இன்னும் முட்டாள்களின் கொட்ட்டகையாக இருக்கிறது.  அரசு மேற்கு நாடுகளின் எதிர்பார்ப்புகலுக்கு விட்டுக்கொடுத்து சிங்கள ராஜதந்திரிகலின் செயல்பாடுகளுக்கு போதிய இடத்தை உருவாக்கவேன்டும் என்கிற கருத்து சிங்கள உயர் மட்டத்தில் நிலவுகிறது. அரசு மேற்க்கு நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து தனது  நிலைபாட்டை செம்மை செய்தால் தமிழர்கள் நமது ராசதந்திரப் பணிகள் மேலும் கடுமையான சவல்களை எதிர் நோக்க நேரிடும். .

கிறிஸ் நொறிஸ் அப்பட்டமான பொய்களை சொல்வதால் பிருத்தானியா, இலங்கையின் முதல் எதிரியாக மாறியிருக்கிறது. கிறிஸ் நொறிஸ் புதிய சுத்துமாத்து உயர் அதிகாரிகளின் மிக நல்ல உதாரணம். இவர் மீதில் பாரிய நம்பிக்கை சிங்கள் மக்களால் வைக்கப்படுகிறது. மகிந்தாவின் அராஜரீக அரசியல் நடவடிக்கையை நியாப்படுத்தும் இவரின் அடிமை சேவகத்தை சிங்கள் பத்திரிகைகள் வெகுவாக சிலாகித்திருந்தன. இவற்றை புதிய இராஜதந்திர வளர்சியாக சிலர் கருதுகிறார்களோ தெரிய்வில்லை.போருக்கு கதிர்காமர் சர்வதேசத்தை அழைத்துவந்து முடிய அதன் பின்னர் பாரிய ராஜதந்திர தோல்விகளால் வெளிநாடுகளை சந்திக்க விரும்பாத சிங்கள மக்கள் சர்வதேச தலையீடு இன்றி இலங்கைக்குள் இனப்பிரச்சனைகளை தீர்த்துவிட வேண்டுமென்ற புதிய கோசத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதை கண்டு தமிழ் மக்கள் எதற்கு எச்சரிகையாக வேண்டும் என்பது புரியவில்லை. விளக்கம் தந்தால் நல்லது

இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளின் ஆதரவு தமக்கிருப்பதை அவர்கள் பலமாகக் கருதுகிறார்கள்.  தமிழ் கடும்போக்காளர்களும் அவர்களை ஆதரிக்கும் சிங்கள தோழர்களும் அமரிக்கா பிரிட்டன் போன்ற தமிழர் மீது அனுதாபம் காட்டும் நாடுகளுக்கு வெறுப்பேற்றுவார்கள்  இதன்மூலம் சூழ்நிலை மேலும் சாதகமாகும் என்பது அவர்களது உபாயமாக இருக்கிறது. தமிழர் தரப்பு ராஜதந்தரிகள் இந்த விடயங்களை சிந்திக்க வேன்டும்.

இலங்கைக்கு கியூபா அல்ஜீரியா, ரூஸியா எப்போதும் உதவி வருகின்றன என்பது உண்மைக்கு பிறம்பான வசன்ம். இதை சமரசிங்கா சொல்லிப்போட்டார் என்றதால், நாம் செய்யும் அரசியல் ஆராச்சியாக திரும்ப சொல்லத்தேவை ஒன்றும் இல்லை. இந்த நாடுகள் எப்போதுமே உதவில்லை என்பதுதான் உண்மை. இவைகள் தமது அமெரிக்காவுக்கான போரில் மோடையா இலங்கையை பகடைகளாக வைக்கின்றன. இதில் இலங்கை நன்மை அடையாவிட்டாலும் அவர்கள் இலங்கையை வைத்து சில நன்மையை அடைவார்கள். அந்த தன் தலையில் மண் அள்ளிபோடும் அழிவுக்கு சிங்கள்ம் போகும் போது தமிழர் அதில் ஆழமாக சிந்திக்க எதுவும் இல்லை. போரில் இலங்கையை வெல்ல வைத்த அமெரிக்காவும், இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக திருப்பப்பட்டுவிட்டன. இது தமிழரின் இராஜதந்திர முன்னேற்றம்.  (வடகொறியா ஊடாக)புலிகளுக்கும், இலங்கைக்கும் ஆயுதம் விற்ற சீனா, இலங்கை போரில் வென்றவுடன் இலங்கையை மடக்கி பிடித்துவிட்டது. இதிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க கதிர்காமர் போன்ற இராஜதந்திரி ஒருவருக்கு கூட இலகுவாக இருக்கப்போவதில்லை. அதே நேரம் புலிகள் வென்றிருந்தால் சீனா புலிகளையும் அரவணைத்திருக்கும். நிச்சயமாக இந்தியாவின் கையில் அல்லது அமெரிக்காவின் கையில் புலிகளின் தமிழ் ஈழம் விழுவதை சீனா கைகட்டி நின்று பார்க்காது. அதை சமாளிக்கத்தான் தமிழர் ராஜதந்திரமாக வருங்காலத்தில் நடந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலின்பின்னர் மேற்க்கு நாட்டு மற்றும் இந்திய ராஜதந்தரிகள் தமது தமிழர் ஆதரவு நிலையின் ஆதாயம் தங்களுக்கும் தாங்கள் அங்கீகரித்திருக்கும் ஒரே அமைப்பான சம்பந்தர் தலைமைக்கும் மட்டுமே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தாங்கள் விரும்பாத அமைப்புகள் ஆதாயமடையும் சூழல் ஏற்படும்போதெல்லாம் அவர்கள் அடக்கியே வாசித்திருக்கிறார்கள். சர்வதேச நிலமையை புரிந்துகொண்டு  மேற்க்கு நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களிலேனும்  விமர்சனங்களோடு சம்பந்தர் தலமையை ஆதரிக்க வேண்டிய அரசியல் தற்காலிக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மாவை அவுஸ்திரேலியாவில் தமிழ் லீடருக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதன் அரசியல் முக்கியத்துவம் பற்றி பலதடவை நான் யாழில் எழுதிவிட்டேன். வடக்கில் பாரிய வெற்றியை கூட்டமைப்பு ஈட்டியிருந்தாலும், மேற்குநாடுகள் கூட்டமைப்பு ஒன்றை சொல்வதால் அதை அங்கீகரிக்க விரும்பவில்லை. 6ம் திருத்தம் இல்லாத நேரம் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறை வேற்றுபட்டத்தாக அவர்கள் உணர்கிறார்கள். சம்பந்தர் குழு தவிர்ந்த மற்றய கூட்டமைப்பு அங்கத்தவர்களும், தமிழ் அமைப்புக்களும் அதைத்தான் ஆதரிக்கின்றனர். அதனால் மேற்கு நாடுகள் தமிழ் மக்கள் எற்காத இந்தியாவால் திணிக்கப்பட்ட இன்னொரு  13ம் திருத்தம் ஒன்றை திணிக்க  சம்பந்தர் குழுவை பயன் படுத்துகிறார்கள் என்பதில் உண்மை எதுவும் இல்லை. எனவே முழு தமிழ் அமைப்புக்களும் தங்களிடம் ஒன்றாக வந்து பேச வேணும் என்றிருக்கிறார்கள்.  சிலர் சம்பந்தர் குழுவை பப்பா மரத்தில் ஏற்றுகிறார்கள் என்பதால் சம்பந்தர் தலைமை மற்றவர்களை உதறத்தயாரக இல்லை. அப்படி உதறுவது அவர்களுக்கு மேற்கு நாடுகளிடம் அவநமபிக்கை தரும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதுதான் மாவை எல்லோரையும் ஒரு பொருளில் பேச கேட்ட காரணம். இதனால் முன்னரை விட குமார், நாடுகடந்த அரசு, BTF, GTF போன்ற்வர்களின் குரல் இனி ஓங்கி ஒலிக்கப்போகிறது. அவர்களின் சொல்லை சம்பந்தர், சுமந்திரன் எற்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. 

மேற்க்கு நாடுகளையும்  இந்தியாவையும் அனுசரித்துப்போவதையும்  பொஸ்னியா, கொசோவா, தென் சூடான், கிழக்கு தீமோர் போன்ற நாடுகளின் பாதையைத் தெரிவுசெய்வதையும் தவிர  -நமக்கு வேறு பாதைகள் இல்லை. இந்தியாவின் நிலைபாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே விதிவிலக்கான சூழலை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியா தனது கடைசி இராம பாணமான வட மாகாணத்தேர்தலை நடத்தியதோடு கொழுத்திய வாணக்கட்டை ஆகிவிட்டது. இனி அமெரிக்க முயற்சிகள் மட்டும்தான் இருக்கு. வெளிநாட்டு அமைப்புகள் இதை துல்லியமாக புரிந்து வைத்திருக்கின்றன. விரைவில் அவர்கள் சில முயற்சிகளில் இறங்குவார்கள். அது அவர்களுக்கும், கூட்டமைபுக்கும் வட்டுகோட்டை தீர்மானம் மூலம் பல்ம் போட்டதாக முடியும். அது அமெரிக்காவின் முயற்சிகளை வெளிப்படையாக அங்கீகரிப்பதும் ஆகும். அதன் பின்னர் விக்கினேஸ்வரனை தெரியவைப்பதற்காக தயாரிக்கப்பட்ட கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனம் இயற்கை மரணம் எய்த தமிழ் மக்களால்  தனிக்க விடப்படும். 

தமிழர் நீண்டகால நலன்கருதி சூழலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை சொன்னதுபோல பொய் புரட்டுக்கள் இராசதந்திரம் என்பதற்குள் அடங்காது.. credibility இல்லாதுபோனால் தொடர்ச்சியாக அத்தகைய தந்திரங்கள் பலிக்காது..

இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுவதற்கு முதலில் தயக்கம் காட்டிய அமெரிக்காவுக்கு ஜப்பானின் வலிந்த தாக்குதல் கொள்கை மாற்றம் செய்ய வழிவகுத்துக் கொடுத்தது. ஆனால் பின்னணியில் சேர்ச்சிலின் செயற்பாடுகள் அட்லாண்டிக் கடலைக் கடந்தும் போர் செய்ய அமெரிக்காவை இழுத்துவந்தது.. இதற்காக சேர்ச்சில் செய்தது பொய், புரட்டு அல்ல.. மாறாக பிரித்தானியாவின் உலக ஆளுமையை விட்டுக்கொடுக்க முன்வந்தார்.. சொன்னதையும் செய்து காட்டினார்.. அமெரிக்கா உலக வல்லரசு ஆனது. ஆனால் இன்றுவரை பிரித்தானிய - அமெரிகக உறவுகள் நல்ல நிலையிலேயே உள்ளது. இது ஒரு இராசதந்திர வெற்றி.

சிங்களவர்கள் தந்திரம் நிறைந்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. துள்ளிக்கொண்டு நின்ற இராஜீவ்காந்தி இலங்கையின் இறையாண்மையை மதிக்காமல் யாழ் மாவட்டத்தில் உணவுப்பொதிகளைப் போட வைத்தார் (தற்கால காங்கிரசார் மறந்துபோன விடயம்) ... பிறகு இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு மிரட்டியே ஒத்துக்கொள்ள வைத்தார்.. ஆனால் வந்தவருக்கு துப்பாக்கிக் கட்டையால் அடி போட்டார்கள். பிரேமதாசவை விட்டு கலகம் பண்ணினார்கள்.

இன்று 13 ஆம் திருத்தம் மட்டுமே அதன் எச்சமாக உள்ளது.. இந்திய - இலங்கை உறவு சீராக இல்லை. இது தந்திர வெற்றி.. ஆனால் இராசதந்திர தோல்வி.

Edited by இசைக்கலைஞன்

தமிழில் இராஜதந்திரம் பலருக்கு தந்திரத்துடன் இணைந்த சொல்லாகப் படுகிறது. தந்திரம் வழமையில் எற்கப்படாத கீழ்தரமான அணுகுமுறை. இதிலிருந்து பிறக்கும் இராஜதந்திரம் அரசியலில் செய்யப்படும் தந்திரமாக சிலர் மொழி பெயர்த்து பாவிக்கிறார்கள்.

 

ஆனால் "diplomatic" என்பது இராஜதந்திர என்றும்

                "statesmanship" என்பது  இராஜதந்திரம் என்றும் மொழிபெயர்க்கிறது கூகிள். 

 

இரண்டிலுமே தமிழ்த் "தந்திரம்" என்ற சொல் வரவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் என்னக்கு ஆரோகியமான அரசியல் விவாதத்துக்கான வெளி இல்லை.

 

பொங்குதமிழ் போன்ற இணையதளங்களுக்கு எழுதுங்கள் என பலர் வற்புறுதியபோதும்  பழக்க தோசத்தாலும் பல நூறு ஆரோக்கியமான  யாழ்குடும்பதினருடன் உள்ள தொடர்பை பராமரிக்க விருபுவதாலும் தொடர்ந்து எழுதி வந்தேன்.

.

நான் என்னை தமிழ் எழுதாளர் கவிஞர்களின் தலைவரென்று கூவித் திரிகிற போலியல்ல. என் பலமனென் பலகீனம் உலகத் தமிழ்க் கலை உலகில் என்னுடைய இடம் எல்லாம் எனக்கு தெரியும்.

 

நான் எதை எழுதினாலும் கோணல் புதியுடன் குறிவைத்து தாக்கும் மல்லையூரான் போன்றவர்களுடன் என் பொன்னான நேரத்தை இனியும் செலவிட முடியாது. நல்லவர்கள் பலர் ஊமையாக இருக்கிரார்கள்.இருந்தும் பெரும்பாலான யாழ்கள நண்பர்களின்மீதிருந்த அபிமானத்தால்தான் நான் யாழ்க் களத்தில் தொடர்ந்திருந்தேன்.

 

அண்மையில் எனக்கு நிகழ்ந்த துன்பத்திலும் பலர் வக்கிரமாக மகிழ்ந்தனர். அதே நேரம் நல்ல மனம்கொண்ட யாழ்க்கள நண்பர்கள் பொதுவாக இங்குவந்து தட்டிக்கேட்பது குறைவு.

யாழ்கள நிர்வாகத்துக்கு,,

எப்படி யாழ்கள உறுப்பினர் நிலையை மீழபெறுவது Unsuscraibe  என தெரியவில்லை. தயவுடன் என்பெயரை நீக்கிவிடுங்கள். அங்கத்துவமிருந்தால் பழக்க தோசத்தில் மீண்டும் மீண்டும் எழுத நேருது. தயவு செய்து என் உறுப்புரிமையை நீக்கிவிடுங்கள்.

 

Edited by poet

பிரச்சனை உள்ள தமிழர் எதையாவது செய்து பிரச்சனையை தீர்த்தேயாக வேண்டும்.புத்திசாலித்தனமாக இருந்தாலும் மொக்குக் கூட்டமாக இருந்தாலும் :D  வெற்றியும் தோல்வியும் வந்துதான் ஆகும்.

 

வெள்ளைகாறன் ராசா மாதிரி கதிரையில் இருத்தி கோமளிகள் கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டு போனவர்கள். செய்ய தகாதவற்றையெல்லாம் செய்ததால் இந்தியா நாடு முழுவதையுமே பிடிக்க என்று படை எடுத்து வந்தது. அதிலிருந்து புலிகள் ஒரு தடவை காப்பாற்றிவிட்டார்கள்(அது அவர்களுக்கும் இந்தியாவிடம் இருந்து தப்ப வேண்டிய சூழ்நிலையால்). அதன் பின்னரும் மாட்டியதால் அல்லவா இன்று ஜெனிவா போய் என்ன சொல்ல என்று திரு திரு என்று விழிக்க வேண்டிய நிலையில் தங்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.  மற்றய கரையில் சீனாவிடம் நிறை கடனின் மாட்டியிருக்கிறார்கள். அது 1956ல் கொறியாவுக்கு சமனாக தமிழரால் வைத்திருந்த பொருளாதாரத்தை கெடுத்து செய்து வைத்திருக்கும் முன்னேற்றம். 

Edited by மல்லையூரான்

 

நான் எதை எழுதினாலும் கோணல் புதியுடன் குறிவைத்து தாக்கும் மல்லையூரானின் ன் போன்றவர்கள்ளுடன் என் பொன்னான நேரத்தை இனியும் செலவிட முடியாது.

 

இது போலிக்குற்றச்சாட்டு. ஆதாரப்படுத்த முடியாவற்றை எழுதும் போது ஆதரங்களை கேட்டவுடன் பதில் இல்லாத்தால் இப்படி  சொல்லப்படுகிறது.

 

நல்லவர்கள் பபலர் ஊமையாக இருக்கிரார்கள்.

 

யாழில் நல்லவர்கள் கூடாதவர்கள் இருப்பதாக பட்டம் வைத்து  எழுதுவது கீழ்தரமானது அது ஒருகாரணம் யாரும் பதில் அளிக்க வராமை. எல்லோருமே சமமான கருத்தாளர்கள். ஒருவர் எழுதுவதை நல்லவர்கள் என்று தம்மை சிலர் அழைத்துகொண்டு வந்து பொய்கள் புனைகளால் தாங்கிபிடிக்க குழுகள் அமைக்க தூண்டுவது யாழின் களவிதிக்கு எதிரானது.  இருந்தும் பலரை பெயர் சொல்லி  காப்பாற்றிக் கொடுக்க உதவிக்கு பலமுறை அழைத்தும் கருத்துக்களில் இருக்கும் ஓட்டைகளால் அவர்கள் ஊமைகளாக இருக்க வேண்டி இருக்கு.

 

Edited by மல்லையூரான்

யாழில் என்னக்கு ஆரோகியமான அரசியல் விவாதத்துக்கான வெளி இல்லை.

பொங்குதமிழ் போன்ற இணையதளங்களுக்கு எழுதுங்கள் என பலர் வற்புறுதியபோதும்  பழக்க தோசத்தாலும் பல நூறு ஆரோக்கியமான  யாழ்குடும்பதினருடன் உள்ள தொடர்பை பராமரிக்க விருபுவதாலும் தொடர்ந்து எழுதி வந்தேன்.

.

நான் என்னை தமிழ் எழுதாளர் கவிஞர்கள் தலைவரென்று கூவித் திரிகிற போலியல்ல. என் பலம் பல்கீனம் உலகத் தமிழ்க் கலை உலகில் என்னிடம் எனக்கு தெரியும்.

 

நான் எதை எழுதினாலும் கோணல் புதியுடன் குறிவைத்து தாக்கும் மல்லையூரானின் ன் போன்றவர்கள்ளுடன் என் பொன்னான நேரத்தை இனியும் செலவிட முடியாது. நல்லவர்கள் பபலர் ஊமையாக இருக்கிரார்கள்.இருந்தும் பெரும்பாலான யாழ்கள நண்பர்களின்மீதிருந்த பஅபிமானத்தால்தான் நான் யாழ்க் களத்தில் தொடர்ந்திருந்தேன்.

 

அண்மையில் எனக்கு நிகழ்ந்த துன்பத்திலும் பலர் வக்கிரமாக மகிழ்ந்தனர்னதே நேரம் நல்ல மனம்கொண்ட யாழ்க்கள நண்பர்கள் பொதுவாக இங்குவந்து தட்டிகெட்பது குறைவு.

யாழ்கள நிர்வாகத்துக்கு,,

எப்படி யாழ்கள உறுப்பினர் நிலையை மீழபெறுவது Unsuscraibe பண்ணுவது என தெரியவில்லை. தயவுடன் என்பெயரை நீக்கிவிடுங்கள். அங்கத்துவமிருந்தால் பழக்க தோசத்தில் மீண்டும் மீண்டும் எழுத நேருது. தயவு செய்து என் உறுப்புரிமையை நீக்கிவிடுங்கள்.

 

கவிஞர் ஐயா,

 

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். மல்லை அண்ணா பல நல்ல கருத்துகளை எழுதுபவர். அவர் எழுதுவது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் ஆதாரத்துடன் அதற்கு பதிலளியுங்கள். யாழில் கருத்து மோதல்கள் ஏற்படுவது வழமை. அதற்காக அந்நபர்களை பகையாளியாக பார்க்க முடியாது.

 

மல்லை அண்ணா தாக்குதல் நடத்துகிறார் என கருதினால் இசை அண்ணாவும் இந்த திரியில் எதிர் கருத்து வைத்துள்ளார் தானே. எனவே உங்கள் கருத்தில் ஏதும் பிழை உள்ளதா என பாருங்கள்.

விமர்சனங்களை கண்டு துவண்டு போனால் நிலைக்க முடியாது.

உங்கள் முடிவை மாற்றி மீளவும் எழுதுங்கள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

எனதருமைக்கள  உறவுகளே............

என்னால் முடியாத  விடயம் ஒன்று

எவரும் மனம் வெதும்புவதை பார்த்துக்கொண்டிருப்பது.

 

இங்கு சரி  பிழை  சொல்லவரவில்லை

ஆனால்

தோழர் அவர்கள் எமது பெரும் சொத்து  என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுண்டு.

எனக்கும் அவரது அரசியல் நிலை  மற்றும் கருத்துக்கள்  சார்ந்து

விமர்சனங்கள் உண்டு.

 

அத்துடன்  யாழின் சொத்துக்கூட...

இங்கு படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால்

அவரது பெயர் தான் முதலாவதாக இருக்கும்.

அப்படியான ஒருவர்

இங்கிருந்து மனம் வெதும்பி  வெறியேறுவதை பார்த்திருக்கப்போகின்றோமா?????????? :(  :(  :(

யாழில் என்னக்கு ஆரோகியமான அரசியல் விவாதத்துக்கான வெளி இல்லை.

பொங்குதமிழ் போன்ற இணையதளங்களுக்கு எழுதுங்கள் என பலர் வற்புறுதியபோதும்  பழக்க தோசத்தாலும் பல நூறு ஆரோக்கியமான  யாழ்குடும்பதினருடன் உள்ள தொடர்பை பராமரிக்க விருபுவதாலும் தொடர்ந்து எழுதி வந்தேன்.

.

நான் என்னை தமிழ் எழுதாளர் கவிஞர்கள் தலைவரென்று கூவித் திரிகிற போலியல்ல. என் பலம் பல்கீனம் உலகத் தமிழ்க் கலை உலகில் என்னிடம் எனக்கு தெரியும்.

 

நான் எதை எழுதினாலும் கோணல் புதியுடன் குறிவைத்து தாக்கும் மல்லையூரானின் ன் போன்றவர்கள்ளுடன் என் பொன்னான நேரத்தை இனியும் செலவிட முடியாது. நல்லவர்கள் பபலர் ஊமையாக இருக்கிரார்கள்.இருந்தும் பெரும்பாலான யாழ்கள நண்பர்களின்மீதிருந்த பஅபிமானத்தால்தான் நான் யாழ்க் களத்தில் தொடர்ந்திருந்தேன்.

 

அண்மையில் எனக்கு நிகழ்ந்த துன்பத்திலும் பலர் வக்கிரமாக மகிழ்ந்தனர்னதே நேரம் நல்ல மனம்கொண்ட யாழ்க்கள நண்பர்கள் பொதுவாக இங்குவந்து தட்டிகெட்பது குறைவு.

யாழ்கள நிர்வாகத்துக்கு,,

எப்படி யாழ்கள உறுப்பினர் நிலையை மீழபெறுவது Unsuscraibe பண்ணுவது என தெரியவில்லை. தயவுடன் என்பெயரை நீக்கிவிடுங்கள். அங்கத்துவமிருந்தால் பழக்க தோசத்தில் மீண்டும் மீண்டும் எழுத நேருது. தயவு செய்து என் உறுப்புரிமையை நீக்கிவிடுங்கள்.

 

தங்கள் கருத்தில் உள்ள சிலவற்றையேனும் நானும் அனுபவித்ததினால், உங்களது ஆதங்கம் புரிகிறது! மீண்டும் எங்காவது சந்திப்போம்! வணக்கம்!!

அதே இங்க வரும்போது பல கனவுடன் தான் அனைவரும் வருகிறார்கள் ஆனால் ஒரு சிலரின் செயல்பாடுகளால் ஒட்டு மொத்த யாழும் பாதிப்பை அனுபவித்து வருகிறது என்பது மெய் இங்கு ஆமா போடுவர் வாழ்வார் மற்றவர் எல்லாம் மனம் நொந்து போவர் .

 

நீங்க எப்படி நிக்கிறிங்க என்று நினைக்கலாம் நமக்கு அதுவே பழகிட்டு பாருங்கோ :D


கவிஞர் ஐயா,

 

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். மல்லை அண்ணா பல நல்ல கருத்துகளை எழுதுபவர். அவர் எழுதுவது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் ஆதாரத்துடன் அதற்கு பதிலளியுங்கள். யாழில் கருத்து மோதல்கள் ஏற்படுவது வழமை. அதற்காக அந்நபர்களை பகையாளியாக பார்க்க முடியாது.

 

மல்லை அண்ணா தாக்குதல் நடத்துகிறார் என கருதினால் இசை அண்ணாவும் இந்த திரியில் எதிர் கருத்து வைத்துள்ளார் தானே. எனவே உங்கள் கருத்தில் ஏதும் பிழை உள்ளதா என பாருங்கள்.

விமர்சனங்களை கண்டு துவண்டு போனால் நிலைக்க முடியாது.

உங்கள் முடிவை மாற்றி மீளவும் எழுதுங்கள். :)

 

இசையை கோர்த்து விட்ட துளசிக்கு வாழ்த்துக்கள் :D

 

இசையை கோர்த்து விட்ட துளசிக்கு வாழ்த்துக்கள் :D

 

அவருக்கு எதிராக எழுதினார் என்றா கூறினேன்? அவர் கருத்துக்கு எதிர்கருத்து வைத்துள்ளார் என்றே கூறினேன். ஒருவர் கருத்தில் உடன்பாடில்லாவிட்டால் கருத்துக்கு எதிர்கருத்து வைப்பது யாழில் சகஜம் தானே?

நீங்கள் தான் இப்ப நான் எழுதியதற்கு தவறான அர்த்தம் கற்பிக்க முயல்கிறீர்கள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மல்லையூரான் என்னத்தை எழுதிவிட்டார் என்று கவிஞர் கோபப்படுகிறார் என்று தெரியவில்லை.. :unsure: வேறு திரிகளில் இடம்பெற்ற தர்க்கங்களின் அடிப்படையில என்றால் அவற்றை அந்த அந்த திரிகளிலேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.. :blink: மாறாக, திரிக்குத் திரி காவித்திரிந்தால் பயந்து பயந்துதான் கருத்தெழுதவேணும்.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் திரியில் என்ன விவாதம் நடக்குது என வாசிக்கவில்லை ஆனால் பொயட் என்ன எழுதினாலும் அதற்கு எதிராக எழுதுவதே மல்லையூரானின் வழக்கம் என்பதை எல்லாத் திரிகளிலும் அவதானித்து உள்ளேன்

பொயட்டில் தான் பிழை ,என்னைப்போல மல்லை எழுதுவதை வாசிக்காமல் விடலாம் தானே ?

நான் வாசிக்காமல் விட்டதற்கு காரணம் உண்மையில் அவர் எழுதுவது எனக்கு விளங்குவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அட எனக்குதான் அந்தாளின்ற விளங்கிதில்லை என்றால் நிறைய பேருக்கு இதே பிரச்சினையா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்குள் மூளை இருக்கு என்று நினைப்பவர்களுக்கு உண்மையில் எதுவும் விளங்காது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்குள் மூளை இருக்கு என்று நினைப்பவர்களுக்கு உண்மையில் எதுவும் விளங்காது :lol:

ம்ம்ம் :icon_idea:

Edited by விசுகு

சிங்களவனால் தப்பிக்க வழி இல்லை, இந்தியாவில் மலையாளி காங்கரஸின் பலம் நல்லா குறைந்து விட்டது, அவர்களால் இந்திய அரசியலை தமது கையில்வைத்திருக்கும் சக்தி இல்லை, அதே போல் அவர்களுக்கு தேவையான முழுமையான உதவி வழங்க அமெரிக்காவில் அடிபடைவாதி இந்தியாவுக்கு அடிமையாக இருந்த புஷ் அரசாங்கம் இல்லை, மோட்டு சிங்களவன் தான் எதோ தான் வென்றதாக நினைத்துக்கொண்டு இருக்கிறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.