Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையத்தின் "பல்ஊடக பரப்பு"

Featured Replies

yarlpodcast-t_816.jpg

Podcast Multimedia syndication என்பதை தமிழில் பல்ஊடக பரப்பு எனலாம். இது பல்ஊடக வடிவில் உள்ள தகவல்களை ஒரு கட்டமைப்பான முறையில் பரப்புவது ஆகும். இவற்றின் மூலம் வினைத்திறனான முறையில் நீங்கள் விரும்பும் முக்கியத்துவம் கொடுக்கும் தகவல்களை தாமதம் இன்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

இந்தவகையில் யாழ் இணையத்தில் புதிய பகுதியாக Podcast பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம். எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இவைபற்றிய செய்திகளை வெளியே செல்லவிடாது தடுப்பதிலும் அல்லது திரிபுபடுத்தி பொய்யான செய்திகளை வெளி உலகிற்கு வழங்கி வருகின்றது. வெளிநாட்டு ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் சிறீலங்கா பற்றி வரும் செய்திகளுக்கும், அங்கு நடைபெறும் அல்லது நடைபெற்ற செய்திகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. கொழும்பில் சிறீலங்கா அரசால் வழங்கப்படும் செய்திகளை அங்குள்ள பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு வழங்கி அச்செய்திகளே இங்குள்ள ஊடகங்களில் வெளிவந்து, தாயகத்தில் எம்மக்கள் படுகின்ற துன்பங்கள் மறைக்கப்படுகின்றன.

தாயகத்தில் என்ன நடைபெறுகின்றது என்ற உண்மைத்தன்மையை வெளிக்கொணரவேண்டிய தேவை புலம்பெயர்ந்துள்ள எமக்கு உண்டு. இவைபற்றி திரு. புதுவை இரத்தினதுரை, தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் திரு. வே.பாலகுமார், பேராசிரியர் திரு.சிவத்தம்பி, மறைந்த பத்திரிகையாளர் மாமனிதர் திரு.சிவராம் என்றும் இவர்களைத்தவிர இன்னும் பலர் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.

வெளிநாட்டவர்களுக்கு தகவல்கள் சொல்லமுன்னர் நாம் பலவிடயங்களில் தெளிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் தெளிவு பெற்றாலே மற்றவர்களுக்கு பிரச்சனைகளின் ஆழத்தினை சரியாக விளங்கப்படுத்தலாம். அத்துடன் புலம்பெயர்ந்த சமூகங்களில் வாழும் இரண்டாம் சந்ததி உறவுகள் தாயக விடயங்களில் தெளிவு பெற வேண்டிய அவசியம் உண்டு. இவையெல்லாவற்றிற்கும் எமது இம்முயற்சி பலம் சேர்க்கும் என நம்புகின்றோம்.

அடுத்ததாக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் சில தமிழர்கள் சிறீலங்கா அரசின் நயவஞ்சகச் செய்திகளைக் காவி மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைந்ததுதான் என்றாலும் அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்பதுடன், இங்கு இணைக்கப்படும் விடயங்கள் மூலம் எம்மக்கள் பல தெளிவுகளைப்பெற முடியும். இப்படி பல நோக்கங்களைக் கொண்ட ஒரு முயற்சியே இதுவாகும்.

இங்கே நாம் மிகவும் முக்கியமான ஆய்வுகளையும், செய்திக்கண்ணோட்டங்களையும் மற்றும் இன்னும் பல விடயங்களை ஒலிவடிவில் இணைக்க திட்டமிட்டுள்ளோம். தவிர தாயகத்தில் இருந்து வரும் அவசர செய்திகள், சர்வதேசத்திற்காக வேண்டுகோள்கள் என்பனவும் இணைக்கத்திட்டமிட்டுள்ளோம்.

புலத்தில் உள்ள இயந்திர வாழ்க்கையில் பலராலும் முக்கிய விடயங்களை வாசிக்க நேரமில்லாத நிலைமை உள்ளதால் அவர்களைக் கருத்திற்கொண்டும் இணைக்கும் அனைத்தும் MP3 வடிவில் இணைக்கின்றோம். இதன் மூலம் இணையத்தில் கேட்க முடியாதவர்கள் தரவிறக்கம் செய்து போக்குவரத்தில், வேலைத்தலங்களில் வேறு வேறு சந்தர்ப்பங்களில் நேரம் கிடைக்கும்போது கேட்டு பலவிடயங்களை அறிய முடியும்.

முக்கியமாக வெறும் ஒரு சிலரால் பலவிதமான விடயங்களையும் சேர்க்க முடியாது என்பதால் கள உறுப்பினர்களிடம் இருந்து பின்வரும் விடயங்களில் இருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

1. முக்கியமான விடயங்களை பதிவு செய்து MP3 வடிவில் எதிர்பார்க்கின்றோம்.

2. பத்திரிகைகளில் வரும் மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரைகளை ஒலிவடிவில் தெளிவாக வாசித்து தரக்கூடியவர்கள் அவைகளைப் பதிந்து தருதல்

3. ஆங்கிலத்தில் பங்களிக்க விரும்புபவர்களும் வரவேற்கப்படுகின்றார்கள்.

முக்கியமாக ஒலிவடிவில் தருபவர்கள் அவை எங்கிருந்து பெறப்பட்டது போன்ற விபரங்களை அறியத்தருதல் வேண்டும். எழுத்துவடிவில் வந்த ஆக்கங்களை ஒலிவடிவாக்கித் தருபவர்கள் எங்கிருந்து பெறப்பட்டது, வெளிவந்த காலம் போன்ற விபரங்களைத் தரல் வேண்டும். ஒலிவடிவாக்கி தருபவர் விரும்பினால் தன்பெயரைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். விரும்படிவில் தவிர்த்தும் கொள்ளலாம்.

இதனை நாம் ஒரு குழு முயற்சியாகவே செய்கின்றோம். அத்துடன் இது யாழ் இணையத்தின் ஒரு பகுதியாகவே இயங்கும் என்றாலும் யாழ் இணையத்தின் பழுவைக்குறைப்பதற்காக eelamist.com என்பதிலேயே இயங்கும்.

10 MB ற்கு குறைவான உங்கள் பதிவுகளை yms@yarl.com என்ற முகவரியிற்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம். அதற்கு மேற்பட்டவற்றினை http://www.yousendit.com/ அல்லது இது போன்ற வேறு தளங்களில் இணைத்து விபரங்களை அனுப்பி வைக்கவும்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள முகவரிகளை உங்கள் rss reader இல் இணைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் தளத்திற்கு வராமலே புதிய விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்து கேட்டுக்கொள்ளவே அல்லது தரவிறக்கம்செய்து கொள்ளவோ முடியும்.

இவை அனைத்துக்கும் பல்ஊடக பரப்பு ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கும். தொடர்புக்கான முகவரி: yms@yarl.com

இது தொடர்பாக உங்கள் ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள். அத்துடன் இதுபற்றி உங்களுக்குத் தெரிந்த பலருக்கும் அறியச் செய்யுங்கள்.

நன்றி

நிர்வாகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் ஒரு நல்ல முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டதுபோல் இங்கு நேரமின்மையால் வாசிப்பது குறைந்துவிட்டது. அதனால் நீங்கள் செய்யப்போகும் முயற்சி வெற்றிபெறும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

நீங்கள் உறுப்பினர்களிடமிருந்து ஒலிவடிவில் எதிர்பார்ப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை வழங்குபவர்கள் பெயரை அவர்கள் விரும்பாவிட்டால் அதை பாவிக்கமால் விடுவதுதான் சிறந்தது யாவரும் புனைபெயரில் வருபவர்கள் தங்களை காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள். களத்துக்கு மட்டும் யார் இணைக்கின்றார்கள் என்று தெரிந்தால் போதும்.

உறுப்பினர்கள் தாங்களாக இணைக்காமல் அவர்கள் அதை தரவேற்றம் செய்து அதன் இணைப்பை உங்களுக்கு அனுப்பி அதை நீங்கள் பரிசோதித்து அதன்பின் களமட்டுறுத்துனர்கள் இணைப்பதுதான் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் வம்பர்கள் தங்கள் காரியங்களை சுலபமாக சாதித்துவிடுவார்கள்.

உங்கள் முயற்சியில் இந்த அணிலும் தன் பங்களிப்பை செய்யும் என்ற

நம்பிக்கையுடன் வியாசன்

நல்லதொரு முயற்ச்சி என்னாலான உதவிகளையும் பங்களிப்பையும் செய்வேன்...!

மிகத் தெளிவான நல்ல முயற்சி வியாசனின் கருத்தையும் உள்வாங்குவது இன்னும் நன்மையை வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி வெற்றியுடன் நடைபெற வாழ்த்துக்கள்.

நல்ல முயற்சி. இம்முயற்சி சிறப்புடன் வெற்றி பெற எனது வாழ்த்துக்களும் எனது பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும்.

நல்ல முயற்சி மோகன் அண்ணா. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமான இம்முயற்சி வெற்றிபெற்றே தீரும். சிந்தித்து செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வெற்றி எமக்குப் பலனே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி திருவினையாக்கும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதார்த்தமான செய்தியை அறிந்து கொள்வதென்பது முயற்கொம்புக்கு ஒப்பானதாகவே உள்ளது, அந்த வகையில் தாங்கள் எடுக்கும் முயற்சி காத்திரமாக இருக்குமென நம்புகின்றேன், யாழ்.களத்தில் நடுநிலைச் செய்தியை அறிய தாங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சிகள்!

வியாசன் அண்ணா சொன்னது போன்று நேரடி இணைப்பைத் தவிர்ப்பது நல்லது. சில புல்லுருவிகள் வேலையைக் காட்ட வெளிக்கிட்டு விட்டிருவார்கள்!

தமிழில், ஆங்கிலத்தில் மட்டும் நின்று விடாமல், பல மொழிகளிலும் செய்ய வேண்டும். செய்ய முடியும். இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலிருந்து வருவதால், அவ்வாறன செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.

சுய ஆக்கங்களையும் ஒலிப்பதிவில் தருவதற்கு அனுமதிக்கின்றீர்களா என்பதையும், அறிந்து கொள்ள விரும்புகின்றேன்!

நல்ல முயற்சி நான் என் பங்களிப்பை வழங்குவேன்

அன்புடன்

ஈழவன்

வம்பர்கள் புவிறிஸ் கொழுத்தலாம் என்று எங்கை மோகன் எழுதியிருக்கிறார். மின்னஞ்சலில் அனுப்புங்கோ அல்லது பெரிய கோவைகளை yousendit போன்ற பொதுவாக பகிரும் தளங்கள் மூலம் அனுப்பும்படி தானே கேக்கிறார்.

நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை பதியாமல் எழுதலாம் போலுள்ளது.

நான் Klipfolio மென்பொருள் மூலம் RSS அய் subscribe பண்ணினனான். வேலை செய்யுது மற்றவர்கள் என்னென்ன மென்பெருட்களாலை முயற்சித்தீர்கள்?

வரவேற்க வேண்டிய ஒரு முயற்சி தான்..!

இருந்தாலும்...நாம் அவதானித்த சிலவற்றை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்..

அரச ஊடகச் செய்தி என்பதற்கு உலகெங்கும் உள்ள செய்தி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்குந்தான். அதை நாம் நமக்குள்ளே பரப்புவதை நிறுத்தினாலும் மக்களைச் சென்றடைய பல வழிகள் உண்டு..! அப்படி மறைப்பது கூட ஒரு பக்கச் சார்பாக விடயங்களை அறிந்து கொண்டு எமது பக்கத்தில் மட்டும் நியாயம் இருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டுக்குள் இருந்து கொண்டு மறுபக்கச் செய்திகளின் தாக்கத்தை உணராமல்..அதன் பரப்புரை வலுவையும் பரவலையும் உணராமல்.... தங்கள் செய்திகளில் குறித்த அரச பரப்புரைகளில் உள்ள போலித் தன்மைகளை சான்றுகளுடன் இனங்காட்டாமால் சர்வதேச ஊடகங்களில் எமது நியாயங்களுக்கு நியாயமான இடத்தை எதிர்பாக்க முடியாது..!

உதாரணத்துக்கு செஞ்சோலைகள் மீதான குண்டு வீச்சின் போது உயிரிழப்பு எண்ணிக்கைகளை வெளியிடுவதில் காட்டிய ஆர்வத்தை குறித்த பள்ளிச் சிறுமிகள் ஏன் ஒன்று கூட்டப்பட்டனர் என்ற தகவலை தமிழர் செய்தி ஊடகங்கள் உடனடியாக செய்தோடு செய்தியாக சரியான ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருக்கவில்லை. இதை இங்கு கூறக் காரணம்..விடுதலைப் புலிகளே இளையோர் பயிற்சிப் பாசறைகளென்று சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்கும் படங்களை தமிழ் ஊடகங்கள் மூலம் காலத்துக்குகாலம் வெளியிட்டு வந்திருந்தனர்...! அவற்றை எதிரி தனக்கான பிரச்சாரத்துக்கு உபயோகிக்கக் கூடிய வாய்பையும் வழங்கி இருந்தனர்...! அது மட்டுமன்றி உயிரிழந்த சிறுமிகள் எண்ணிக்கை குறித்து தமிழ் ஊடகங்களே மாறுபாடான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்க சர்வதேச ஊடகங்கள்... அரசை விடுத்து..புலிகளை விடுத்து... சர்வதேச தொண்டர் பிரதிநிதிகளையும்.. கண்காணிப்புக் குழுவையும் நாடி ஓடின..எது உண்மை என்று அறிய...!

களத்தில் சரியான தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கக் கூடிய நிலை இருந்தும் ஆதாரங்கள் கூட இருந்தும் செய்திகளை சரிவர ஒரு கட்டுக்கோப்போடு வெளியிட்டு..செய்தி மீதான நம்பகத்தன்மையை எம்மால் தக்க வைக்க முடியவில்லை..!

காரணம்..என்ன...???! நாம் எதிரிக்கு எதிராக குறித்த சம்பவம் தொடர்பில் பிரச்சாரம் செய்ய எடுத்த முயற்சிக்கும் செலவழித்த நேரத்துக்கும் இடையில் செய்தியின் உண்மைத் தன்மையை ஆதாரங்களோடு சர்வதேசத்தின் முன்கொண்டு வர முயலவில்லை...! கண்காணிப்புக்குழுவை அழைத்து சம்பவம் தொடர்பில் இடங்களைக் காண்பித்த போது.உயிரிழந்த சிறுமிகளின் எண்ணிக்கை தொடர்பில் சான்றுகளை சமர்ப்பித்து இருக்கலாம்..! ஆனால் நடந்தது என்ன.. தமிழ் ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன..55 க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலி என்று..ஆனால் கண்காணிப்புக்குழு சொல்கிறது சர்வதேச ஊடகங்களுக்கு தாங்கள் 19 உடல்களை மட்டுமே வைத்தியசாலையில் கண்டதென்று...! இந்த முரண்பாட்டை பிபிசி..ரொயிடர் போன்ற சர்வதேச ஊடகங்கள் உடனடியாக சுட்டிக்காட்டத் தவறவில்லை...! அதுவே அரசின் பிரசாரத்துக்கும் சம்பவம் தொடர்பில் அரசு..ஒழிப்பு மறைப்புக்களை செய்யவும் அதை உண்மை என்று சாதிக்கவும் சந்தர்ப்பம் ஒன்றை மேலதிகமாக அரசுக்கு வழங்கிக் கொண்டிருந்தது...!

பத்தாக்குறைக்கு புலிகள் தாங்களே வெளியிட்ட இளையோர் கிராமிய பயிற்சித் திட்டப் படங்களை அரச சார்பு ஊடகங்கள் வெளியிட்டு... உண்மைகளை மறைக்க சான்று தேடிக் கொண்டிருந்தன. நமது ஊடகங்கள்..அவை குறித்து கையாலாகாமல்..இருக்க..யுனிசெப்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி வெற்றியுடன் நடைபெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • 2 weeks later...

மோகன் ஒரு நல்ல முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள். :lol: முயற்சி வெற்றியுடன் நடைபெற வாழ்த்துக்கள்

தற்பொழுது ஜரோப்பாவில் உள்ளவர்கள் தமிழ் ஒளி இணையத்தின் நிகழச்சிகளின் ஒலிவடிவத்தை போட உதவுவது மாதிரி அவுஸ்ரேலியாவில் உள்ளவர்கள் சிகரத்தில வாற தரமான நிகழ்சிகளின் ஒலி வடிவத்தை கொடுத்து உதவலாமே? அது போல கனடாவில இருக்கிறவை TVI நிகழச்சிகளில் தரமானவை.

அத்தோடு கனடாவின் CBC அல்லது அவுஸ்ரேலியாவின் ABC அல்லது வேறு எந்த நாடுகளின் உள்ளூர் முன்னணி ஊடகங்களில் எமது போராட்டம் இலங்கைப் பிரச்சனை என்று வந்தவற்றை பதிந்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மொழிபெயர்ப்புகள் குறிப்புகளை வேறு யாராவது செய்து கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூரா செய்தி அனுப்பிடுவோம்.

உங்கள் முயற்சி நன்று

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi

  • 4 months later...

பாராட்டுகள்

முயற்சி வெற்றிய்யடையட்டும்.

'கருவிகள்" இன் கருத்தையும் கவனத்ல் கொள்வது நல்லது.

  • 1 year later...

மோகன் அண்னா அருமையான ஓர் முயற்சி என்னாலான உதவிகளை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். எந்நேரத்திலும் என்னைத் தொடர்புகொள்ளலாம் மோகன் அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியவில்லை இது பற்றி நாம் வேறு இனையங்களில் வாசிக்கும் செய்திகளை([உ+ம்] தமிழ்நெட்)எம் மக்களின் அவலங்கள் பற்றி நாங்கள் யாழில் MP3 வடிவில் இனைக்க வேண்டுமா?

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் தமிழுக்கு நீங்கள் ஆற்றும் சேவை மிக பெரியது

நன்றி

வாழ்த்துக்கள்

ஜான்சிராணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.