Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜில்லா- விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
-எஸ் ஷங்கர் 
 
Rating: 3.0/5 
 
நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் 
 
இசை - டி இமான் 
 
ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு 
 
தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி
 
இயக்கம் - ஆர்டி நேசன் 
 
ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. 
 
மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன். 
 
11-jilla-movie-review4-600.jpg
(ஜில்லா படங்கள்) 
 
அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் பார்த்த பிறகு, காக்கிச் சட்டை என்றாலே மகா வெறுப்பு.. எந்த அளவு தெரியுமா, தான் விழுந்து விழுந்து காதலிப்பவள் ஒரு போலீஸ் என்று தெரிந்ததும், அவளைக் கைகழுவும் அளவுக்கு. 
 
ஆனால் சூழ்நிலை, விஜய்யை காக்கிச் சட்டை போட வைக்கிறது. தன் அப்பாவுக்கு சாதகமான போலீசாக ஜாலியாக சுற்றும் விஜய், ஒரு கோர விபத்தைப் பார்த்த பிறகு அப்பாவின் தாதாயிசத்தை அடியோடு ஒழிக்க முடிவு கட்டுகிறார். மோகன்லாலுக்கும் விஜய்க்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கிறது... அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். 
 
பல லாஜிக் ஓட்டைகளில் சிக்கித் தவிக்கும் இந்தப் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுபவர்கள் இருவர்.. ஒருவர் விஜய். அடுத்தவர், சந்தேகமென்ன.. மோகன்லால்தான். இந்த இருவரையும் பார்ப்பதற்காக மட்டும்தான் கடைசி வரை இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. 
 
11-jilla-poste34-600-jpg.jpg
அதிலும் விஜய்... அல்டிமேட். இந்தப் படத்தில் தன் உடல் மொழியை மொத்தமாக மாற்றியிருக்கிறார் (ஆனால் அந்த வசன உச்சரிப்பு, சொதப்பிபைய்ங்!). சுழன்று சுழன்று அடிக்கும் அந்த சண்டைக் காட்சி, கற்பூரம் மாதிரி அடுத்து நடப்பதை யூகித்து வியூகம் வகுக்கும் மின்னல் வேகம்... என மாஸ் ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் சர்வ சாதாரணமாய் செய்கிறார். 
 
அந்த கண்டாங்கி கண்டாங்கி பாடலில் விஜய் மனசை அள்ளுகிறார்... ஷங்கர் ஸ்டைல் பிரமாண்டம், அழகு... காஜலும், அந்த அட்டகாச லொகேஷனும் கூடத்தான்! சினிமாக்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸுக்கெல்லாம் அர்த்தம் தெரியணும்னா... இந்தப் பாட்டைப் பார்க்கலாம்! 
 
மோகன் லால் கம்பீரமாக வருகிறார். மகனோடு விளையாடும் காட்சியிலும் சரி, மோதும் காட்சியிலும் சரி... மகா இயல்பு. ஆனால் இந்த மாபெரும் கலைஞனை, ஏதோ கோயில் யானையைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டி முடக்கிவிட்டது போலத்தான் காட்சிகள் அமைந்துள்ளன. சும்மா சும்மா அவர் உறுமிக் கொண்டே இருந்தால் போதுமா... அவர் பலத்தை, புத்திசாலித்தனத்தைக் காட்டும் காட்சி, அட்லீஸ்ட் ஒன்றாவது வேண்டாமா? 
 
11-jilla232-600-jpg.jpg
இவருக்கு என்ன சிக்கலென்றாலும், அதைத் தீர்க்க விஜய் மட்டும்தான் வரவேண்டியிருக்கிறது. இது மோகன்லால் பாத்திரத்தை டம்மியாக்குகிறதே! 
 
துப்பாக்கிக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல். கண்டாங்கி கண்டாங்கி பாடல், அந்த என்சிசி கேம்ப், அப்புறம் இரண்டு 'பேக் டு பேக்' மசாஜ் காட்சிகளில் மட்டும் மனசில் நிற்கிறார். மற்ற காட்சிகளில் முகத்தில் ஒரு முதிர்ச்சி.. அவரை விட விஜய் இளமையாகத் தெரிகிறார்! 
 
சூரிக்கு படம் முழுக்க வரும் காமெடியன் வேடம். ஆனால் அடிக்கடி முன்பக்கத்தில் அடிவாங்கி, வாயில் புகைவிடும் பரிதாப கேரக்டர். அவரது வேலையையும் விஜய்யே செய்துவிடுவதால், இவர் சும்மா வந்து போக வேண்டியுள்ளது. 
 
பூர்ணிமா பாக்யராஜ், இறுதிவரை ஒரு நல்ல அம்மாவாக வருகிறார். பெறாத மகன் என்றாலும் கடைசி வரை மாறாத பாசம் காட்டி மனதில் பதிகிறார். அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு பூர்ணிமா என்ற 'நல்ல அம்மாவை' தொடர்ந்து திரையில் பார்த்து நெகிழலாம். 
 
இப்படி ரசிக்கும்படியான காட்சிகள், திறமையான கலைஞர்களின் பங்களிப்பு இருந்தாலும்... மோசமான ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது ஜில்லா. 
 
 
11-jilla-movie-review3-600.jpg
ஒரு நேர்மையான கமிஷனர்... அவர் கையை நடுரோட்டில் வெட்டுகிறார் ரவுடியான விஜய். அவரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவரோ, ஜாலியாக போலீஸ் ஆகிறார். யாரை வெட்டினாரோ அவர் மூலம் பதவி உயர்வே பெறுகிறார்! 
 
ஒரே நேரத்தில் தந்தையைப் பறிகொடுத்த விஜய்யும் சம்பத்தும் மோகன்லால் வீட்டில் வளர்கிறார்கள். இளமையில் ஒரே வயதுக்காரர்களாய் இருக்கும் இவர்கள் வளர்ந்த பிறகு, சம்பத்துக்கு மட்டும் அவ்வளவு வயசாகிவிடுவது எப்படி என்று புரியவில்லை. 
 
என்னதான் மோசமான தாதாவாக இருந்தாலும், பெற்ற மகனை (மகன்) ஏவி நகரம் முழுக்க வன்முறையைத் தூண்டை வைப்பாரா.. அதுவும் அத்தனை சேனல்களிலும் பப்பரப்பே என படமெடுத்து வெளியிடும் அளவுக்கு? 
 
அடுத்தடுத்து இரண்டு டூயட்டுகள். அதில் ஒன்று ரசிக்க வைத்தாலும், அடுத்த பாடலில் (எப்ப மாமா ட்ரீட்), நடனத்தில் இணையற்ற விஜய்யை கேவலமாக, ஏதோ உடற்பயிற்சி செய்ய வைப்பது போல், ஆட வைத்து கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர் நேசன். அதை மன்னிக்கவே முடியாது! 
 
11-jilla-movie-review5-600.jpg
3 மணி நேரம் படத்தை இழுப்பது இன்னொரு கொடுமை. இந்தப் படத்தை இரண்டே கால் மணி நேரத்துக்குள் சுருக்கியிருக்க முடியும். எடிட்டர் டான் மேக்ஸ் தூங்கிவிட்டார் போலிருக்கிறது. 
 
ஆர்கேவை வீணடித்திருக்கிறார்கள். அவரை வைத்து இன்னும் சுவாரஸ்யமான இரு காட்சிகளை வைத்திருக்கலாம், தனக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு எப்பேர்ப்பட்ட மகத்தானதென்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருந்தால்! 
 
விஜய்யின் தம்பி, தங்கையாக வரும் மகத், நிவேதிதா இருவரும் விஜய்க்கு ஆகாதவர்களைப் போல காட்டிவிட்டு, திடீரென்று இருவருக்கும் அவர் மீது பாசம் பொங்குவது எடுபடவில்லை. 
 
கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. அந்த நெடுஞ்சாலைக் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது. கண்டாங்கி கண்டாங்கி பாடலில் வண்ணமயம். இமானின் இசையும் அந்தப் பாட்டில்தான் ஓஹோ. மற்றவற்றில் பெரிதாக ஒன்றுமில்லை. 
 
ஆனால், தலைவாவோடு ஒப்பிடுகையில் 100 சதவீதம் பார்க்கலாம் ரக படமே. பொங்கல் லீவில் வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பதை விட அல்லது மொக்கையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு, இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் (இப்போது 10 நிமிட காட்சிகளை தூக்கிவிட்டார்களாம்)!
 
 
 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தமிழரசு...!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விமர்சனம் இணைப்பிக்கு நன்றி. நானும் நேற்று திரை அரங்கு நிறைந்த இரவு காட்சி high wycombe திரை அரங்கில் பார்த்தேன். நல்ல ஒலி, ஒளி பதிவு. தமிழ் சினிமா தொழில் நுட்பம் நன்றாக வளர்கின்றது. வரவேற்க படவேண்டும். காஸ் சிலிண்டர் தொழிற்சாலை வெடித்து சிதறுவது கொடூரம், நன்றாக படம் மாக்கி உள்ளார்கள். மோகன்லால் ரோடில் இறக்கி விடப்படும் சாலை நல்ல காட்சி அமைப்பு. ஒரு கட்டத்தில் மோகன்லாலின் முக தசை மட்டும் ஆடும், சிவாஜியை நினவூடுகிறார். விஜய்க்கு நகைசுவை கலந்த கதாநாயகன் வேடம்.

போலீஸ் கதை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாது. போலீஸ் ஆனால் போலீஸ் உடுப்பு போட மாட்டார் விஜய் .......

  • கருத்துக்கள உறவுகள்

அடிதடி படம் பார்க்கும் தமிழர்களுக்குப் பொறுமை அதிகம் என்று நினைப்பதுண்டு.. :unsure: உங்களுக்கும் அதிகமா அகஸ்தியன்? :mellow::D

  • கருத்துக்கள உறவுகள்

இசை கலைஞன், எனது மகன்மார் இருவரும் ஜில்லா பார்க்க வேண்டும் என்று ரெண்டு மாதத்திக்கு முன்பே கேட்டு விட்டார்கள். நானும் ஆமா போட்டுவிட்டென். அன்றில் இருந்து countdown ஆரம்பித்து விட்டது. கடந்த 24 வருடங்களில் நான் லண்டன் திரைகளில் மொத்தமாக ஒரு 10 இற்கு உட்பட்ட படங்களே பார்த்திருக்கின்றேன். சத்திரியனில் ஆரம்பித்து ஹே ராமில் முடித்தேன். இப்போ பிள்ளைகள் தமிழ் படம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மறுபடியும் சிங்கம்தில் தொடங்கி தலைவா, ஜில்லா.

நான் கூட கதை அம்சம் கொண்ட படங்களைத்தான் பார்ப்பேன், சமீபத்தில் பார்த்தது தங்க மீன்கள். தலைமுறைகள் நல்ல படம் என்று கேள்வி பட்டிருக்கின்றேன்.

என்ரை குனாதிசங்களில் ஒன்றை கண்டு பிடித்ததுக்கு நன்றி. இருக்கோ இல்லையோ என்றது கேள்வி. வேலையில் கேட்டா நல்ல பொறுமைசாலி என்பார்கள் ஆனால் வீட்டில் கொஞ்சம் குறைவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜில்லா பார்க்க நானும் இன்று பிள்ளைகளுடன் போகலாம் என்று சொல்லி இருக்கின்றேன். பிள்ளைகளும் ஓடி .... ஓடி வீட்டை துப்பரவு செய்கின்றார்கள் வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் முடித்துவிட்டதாக சொல்கின்றார்கள் இப்பொழுது அம்மாவின் அனுமதிக்காக காத்திருக்கின்றார்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்

ஜில்லா சீடியும் வீரம் சீடியும் இங்கு சவுத்கரோவில் ஒரு சீடி 50p க்கு விற்கிறார்கள் வீரம் கிளியர் கொப்பியாய் இருக்கு அஜித்துக்கு எதிரிகள் கூடவாக்கும் இனி பார்பதற்க்கு நேரம் ஒதுக்கனும்.

 


ஜில்லா பார்க்க நானும் இன்று பிள்ளைகளுடன் போகலாம் என்று சொல்லி இருக்கின்றேன். பிள்ளைகளும் ஓடி .... ஓடி வீட்டை துப்பரவு செய்கின்றார்கள் வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் முடித்துவிட்டதாக சொல்கின்றார்கள் இப்பொழுது அம்மாவின் அனுமதிக்காக காத்திருக்கின்றார்கள்.... 

வீட்டுக்கு வீடு வாசல்படி தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ்ப்படங்கள் எதுவும் இப்போது பார்ப்பதில்லை. இறுதியாக கணினியில் இரசித்துப் பார்த்த படம் சிவா என்கிற நடிகர் நடித்த சிரிப்புப் படம் ஒன்று. சந்தானமும் நடித்திருப்பார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ்ப்படங்கள் எதுவும் இப்போது பார்ப்பதில்லை. இறுதியாக கணினியில் இரசித்துப் பார்த்த படம் சிவா என்கிற நடிகர் நடித்த சிரிப்புப் படம் ஒன்று. சந்தானமும் நடித்திருப்பார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.

இசைக்கலைஞன் பார்த்தபடம் 'சொன்னால் புரியாது'  படம் என்று நான் நினைக்கின்றேன். :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜில்லா சீடியும் வீரம் சீடியும் இங்கு சவுத்கரோவில் ஒரு சீடி 50p க்கு விற்கிறார்கள் வீரம் கிளியர் கொப்பியாய் இருக்கு அஜித்துக்கு எதிரிகள் கூடவாக்கும் இனி பார்பதற்க்கு நேரம் ஒதுக்கனும்.

 

வீட்டுக்கு வீடு வாசல்படி தமிழரசு.

ஒ .., பெருமாள் உங்கள் வீட்டிலுமா ? 
நான் இருக்கும் இடத்தில் சீடிகள் இப்போது ஒருவரும் விற்பதில்லை  சீடியில் படம் பார்க்கவேண்டுமானால் ஈஸ்ட் ஹாமில்தான் சென்று வாங்கவேண்டும்.   :)     
  • கருத்துக்கள உறவுகள்

ஜில்லா பார்க்க நானும் இன்று பிள்ளைகளுடன் போகலாம் என்று சொல்லி இருக்கின்றேன். பிள்ளைகளும் ஓடி .... ஓடி வீட்டை துப்பரவு செய்கின்றார்கள் வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் முடித்துவிட்டதாக சொல்கின்றார்கள் இப்பொழுது அம்மாவின் அனுமதிக்காக காத்திருக்கின்றார்கள்.... 

வெற்றியுடன் சென்று பார்த்து வர வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியுடன் சென்று பார்த்து வர வாழ்த்துக்கள்

நன்றி அஹஸ்தியன்,
படத்தை முன்பே பார்த்துவிட்டு படக்கதையை சொல்பவர்கள் உண்டு அப்படி யாரும் எங்களின் பக்கத்து இருக்கைகளில் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு செல்கின்றேன். :D    
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் விஜய் இரசிகர்கள் போல, யாருமே அஜீத்தின் வீரம் பற்றி எழுதிகினம் இல்லை .... :D    

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் பார்த்தபடம் 'சொன்னால் புரியாது'  படம் என்று நான் நினைக்கின்றேன். :D  

இதுவும் நல்லாயிருக்கும்போலை இருக்கு.. :D ஆனால் நான் சொன்னபடம் இது இல்லை என நினைக்கிறேன்.. சந்தானம் சிரிப்பு வில்லன் மாதிரி பாதியில் இருந்து வருவார்.. அண்ணன் தம்பிகளில் ஒருவராக இந்த சிவா வருவார்.. சாப்பாட்டு கடை நடத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒ .., பெருமாள் உங்கள் வீட்டிலுமா ? 
நான் இருக்கும் இடத்தில் சீடிகள் இப்போது ஒருவரும் விற்பதில்லை  சீடியில் படம் பார்க்கவேண்டுமானால் ஈஸ்ட் ஹாமில்தான் சென்று வாங்கவேண்டும்.   :)     

 

 ஈஸ்ட் ஹாமில் நல்ல கிளியர் கொப்பிகள் கிடைக்கும் அந்த ஏரியா தென்னிந்தியர்கள் கூட ஆனால் அவர்கள் பார்ப்பது கள்ள சீடிக்கள் தான் இன்று மாத்திரம் 3000சிடிக்கள் விலைப்படும் நாங்கள் கள்ள சீடியும் வேண்டி தியேட்டரிலும் பணத்தை கொட்டுவம் இதன் மூலம் ஊரிலை மாடு மேச்சதுகள் பெரும் முதலாளியாய் மாறி மகிந்தவுடன் போய் படமெடுத்து கொண்டாடுங்கள்.

இதுவும் நல்லாயிருக்கும்போலை இருக்கு.. :D ஆனால் நான் சொன்னபடம் இது இல்லை என நினைக்கிறேன்.. சந்தானம் சிரிப்பு வில்லன் மாதிரி பாதியில் இருந்து வருவார்.. அண்ணன் தம்பிகளில் ஒருவராக இந்த சிவா வருவார்.. சாப்பாட்டு கடை நடத்துவார்கள்.

 

அது கலகலப்பு....

 

இந்தப் பாடல் செமையாக இருக்கும்...

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் விஜய் இரசிகர்கள் போல, யாருமே அஜீத்தின் வீரம் பற்றி எழுதிகினம் இல்லை .... :D    

சின்னனுகளுக்கு விஜயைதானே பிடிச்சிருக்கு அஜித்தை விரும்பும் சிறுசுகளை இதுவரை என் கண்ணில் தட்டு படவில்லை வீடியோ கடைகாரர்கள் பெரும்பாலும் அஜித்தின் பக்கம் இருப்பார்கள்  .

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. கலகலப்புதான்.. தமிழ்ப்படங்களில் இது பரவாயில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிள்ளைகளுக்கு குடுத்த வாக்கை காப்பாத்தவேணும் .பொங்கல் கழிச்சுத்தான் போகணும்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பக்கத்திலும் ஒரு கேரளாகாரர் இருந்தார்.
மோகன்லாலை பற்றி பெருமையாக சொன்னார். இடையில் இதில் யார் வில்லன் என்று கேட்டார், நான் தெரியாது என்றேன், சிறிது நேரத்தில் மோகன்லால்தான் என்றார். ம் ம் என்றேன் . too many songs என்றார். விஜயின் படங்களுக்கு என் பையன்கள் வந்ததே ஆட்டமும் பாட்டும் களை கட்டும் என்பதால். இறுதியில் நல்ல படம் என்று விடை பெற்றார்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று

வீரம் பார்த்தேன் (கணணியில்)

 

இடைவேளை வரை கொஞ்சம் அலுப்படித்தது

பின்னர்

பிரச்சினை இவருக்கல்ல  என்றவுடன் சூடு பிடித்தது

ஆனாலும்

ஒரே மாதிரியான எல்லா நடிகர்கள் நடிகைகளுடைய  நடிப்பு அலுபபுத்தந்தது

40/100  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நானும் குடும்பசகிதமாக சென்று O2 Sky Superscreen னில் ஜில்லா பார்த்தோம் பிள்ளைகளுக்கு பிடித்திருந்தது எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை .... நான் மிகவும் குறைந்தளவு சினிமா படங்கள்தான் பார்த்து இருக்கின்றேன் நான் பார்த்த திரையரங்குகளில் O2 Sky Superscreen இந்த திரையரங்க்கம்தாம் மிகவும் அருமையாக இருந்தது  

 

என்னைப்பொறுத்தளவில் 100/35 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பார்த்தீங்கள் ஜீல்லாவை ஆனால் முதற்காட்சியில் வரும் எங்கள் அபிமானத்திற்க்குரிய கவிஞர் ஜயா நடித்திருக்கின்றார் அதனை பற்றி சொல்லவே இல்ல......

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பார்த்தீங்கள் ஜீல்லாவை ஆனால் முதற்காட்சியில் வரும் எங்கள் அபிமானத்திற்க்குரிய கவிஞர் ஜயா நடித்திருக்கின்றார் அதனை பற்றி சொல்லவே இல்ல......

ஆம் ஆம் அங்கும் தானே அறுத்துகொள்கிறார் :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.