Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா vs இங்கிலாந்து ஒரு நாள் போட்டி தொடர்

Featured Replies

பின்ச் சதம்: ஆஸி., வெற்றி

 

ஜனவரி 12, 2014.

              மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பின்ச் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

குக் சொதப்பல்:

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (4) சொதப்பல் துவக்கம் அளித்தார். தொடர்ந்துவந்த ஜோ ரூட் (3) ஏமாற்றினார். பெல் (41) ஓரளவு கைகொடுத்தார். மார்கன் (50) அரைசதம் கடந்து வெளியேறினார். பின் வந்த போபாரா கைகொடுக்க, பேலன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

கடைசி நேரத்தில் பட்லர், பிரஸ்னன் அதிரடியாக ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. பட்லர் (34), பிரஸ்னன் (16) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மெக்கே அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

வார்னர் அசத்தல்:

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், வார்னர் ஜோடி அசத்தல் துவக்கம் அளித்தது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த பின்ச், ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் வார்னர் (65) அரைசதம் கடந்து அவுட்டானார். பின் வந்த வாட்சன் ‘டக்’ அவுட்டானார். கிளார்க் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 45.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 270ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெய்லி (17), மேக்ஸ் வெல் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://sports.dinamalar.com/2014/01/1389505268/englandaustraliaonedaycricket.html

 

  • தொடங்கியவர்

இங்கிலாந்திற்கெதிராக அவுஸ்ரேலியாவிற்கு இறுதிநேர வெற்றி


இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களுடனும், 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களுடனும் காணப்பட்டது.

ஆனால் ஒய்ன் மோர்கன், ஜொஸ் பட்லர் இருவரும் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு முன்னிலையை வழங்கினர்.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஒய்ன் மோர்கன் 99 பந்துகளில் 106 ஓட்டங்களையும், இயன் பெல் 84 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 36 பந்துகளில் 49 ஓட்டங்களையும், ரவி போப்பாரா 19 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக கிளென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபோக்னர், நேதன் கோர்ட்டர் நீல் மூவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், மிற்சல் ஜோன்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

301 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

6 ஓட்டங்களுக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களுடனும், 9 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களுடனும் காணப்பட்டது. ஆனால் இறுதி விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களில் 57 ஓட்டங்கள் பகிரப்பட்டு வெற்றி பெறப்பட்டிருந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஜேம்ஸ் ஃபோக்னர் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 69 பந்துகளில் 55 ஓட்டங்களையும், கிளென் மக்ஸ்வெல் 39 பந்துகளில் 54 ஓட்டங்களையும், பிரட் ஹடின் 35 பந்துகளில் 26 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 28 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் ஜோர்டான், ரிம் பிரெஸ்னன், ஜோ றூட் மூவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், போய்ட் றாங்கின், பென் ஸ்ரோக்ஸ், ரவி போப்பாரா மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் ஃபோக்னர் தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில்,  2 போட்டிகளின் நிறைவில் அவுஸ்ரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/97108-2014-01-17-11-30-07.html

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் இறுதிநேரத் தோல்விக்கு என்ன காரணம்..?? வெக்கைதான் காரணம்.. வெக்கை.. :D

இப்போது Highlights பார்த்துக்கொண்டிருக்கின்றேன் .நல்லாத்தான் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கட ஊரில அவங்க தோத்தா அவங்களுக்கு மரியாதையில்லை,அதுதான் விட்டுக்குடுத்திட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கட ஊரில அவங்க தோத்தா அவங்களுக்கு மரியாதையில்லை,அதுதான் விட்டுக்குடுத்திட்டம்

 

அதுக்காக கடைசி ஓவரில் 12 ஓட்டம் தேவை என்ற நிலையில்.. அதனை முதல் 3 பந்துகளிலேயே விட்டுக்குடுத்தது.. பற்றி.. என்னால.. ஒன்றும் சொல்ல முடியல்ல. அந்தப் பெருந்தன்மை இங்கிலாந்துக்கு மட்டுமே வர முடியும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கே இங்கிலாந்து, இந்த முறை தோத்துப்போனது பெரிய கவலையாய்ப் போச்சுது!

 

அதுவும், ஒவ்வொருமுறையும் இங்கிலாந்து தோத்துப்போன பின்னர், கப்டினைப் பேட்டி காணும்போதும், அவரது தளராத தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கும்!

 

அடுத்த முறையாவது இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கே இங்கிலாந்து, இந்த முறை தோத்துப்போனது பெரிய கவலையாய்ப் போச்சுது!

அதுவும், ஒவ்வொருமுறையும் இங்கிலாந்து தோத்துப்போன பின்னர், கப்டினைப் பேட்டி காணும்போதும், அவரது தளராத தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கும்!

அடுத்த முறையாவது இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்!

மன்னிக்கவும் உங்கள் விருப்பம் நிறைவேறாது,புங்கை

அதுக்கு இங்கிலாந்து விளையாட வேணும் புங்கை அண்ணே :D

  • கருத்துக்கள உறவுகள்

இஷான்ட் ஷர்மாவை அழித்த ஃபோக்னர்,

 

http://www.youtube.com/watch?v=wMyYlaikBbY

  • தொடங்கியவர்

ஆஸ்திரலியா அடுத்த போட்டியிலும் வெற்றியை நோக்கி :DScreenshot24_zps56e0d4b8.png

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Screenshot26_zpsc88d05fe.png

 

 

அவுஸ்திரேலியா மீண்டும் வெற்றி 3வது ஒரு நாள் போட்டியிலும்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் போச்சு. எனி மூட்டையை கட்ட வேண்டியான். இங்கிலாந்து.. உந்த வயதான வீரர்களை இளம் வீரர்களால் நிரப்ப வழிபார்க்கனும். இன்றேல்.. இது தொடர்கதையாகும். :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க பாஸ் இதெல்லாம் எங்களுக்கு புதுசா என்ன,பிள்ளைப் பூச்சிகளை இப்படி அடிக்கும் அவுசுக்கு எனது பலத்த கண்டனங்கள்

  • தொடங்கியவர்

இங்கிலாந்திற்கெதிராக அவுஸ்ரேலியாவிற்குத் தொடர் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்குபற்றிவரும் இங்கிலாந்து அணி அந்தத் தொடரை இழந்துள்ளது. 3வது போட்டியில் தோல்வியடைந்தே அவ்வணி இத்தொடரை இழந்துள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.

சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்ட அவ்வணி 8.4 ஓவர்களில் முதலாவது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களைக் குவித்ததோடு, 2 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால் அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்திருந்தது. இறுதி 8 பந்துகளில் 18 ஓட்டங்கள் குவிக்கப்பட்டு, அவ்வணி 243 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஒய்ன் மோர்கன் 58 பந்துகளில் 54 ஓட்டங்களையும், ரிம் பிரெஸ்னன் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும், அலஸ்ரெயர் குக் 36 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக நேதன் கோர்ட்டர் நீல் 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ்ஃபோக்னர், டானியல் கிறிஸ்ரியன் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷேவியர் டொகேர்ட்டி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

244 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 2வது விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களையும், 3வது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களையும், 4வது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 72 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக டேவிட் வோணர் 70 பந்துகளில் 71 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 89 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும், பிரட் ஹடின் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 28 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் ஜோர்டான், பென் ஸ்ரோக்ஸ், ரவி போப்பாரா மூவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக டேவிட் வோணர் தெரிவுசெய்யப்பட்டார்

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/97320-2014-01-19-14-17-06.html

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு முதல் வெற்றி : பின்ச் சதம் வீண்
 

 

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்சின் சதம் வீணானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரை 3–0 என ஏற்கனவே கைப்பற்றியது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் உள்ளிட்ட சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பை பெய்லி ஏற்றார். இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

குக் ஆறுதல்:

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (44), பெல் (55) ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த, ஸ்டோக்ஸ் (70) அரைசதம் அடித்து அவுட்டானார். பேலன்ஸ் (18) நிலைக்கவில்லை. போபாரா (3) ஏமாற்றினார். மார்கன் (33) ஓரளவு கைகொடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடியில் மிரட்டய பட்லர், 4 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 71 ரன்கள் விளாச, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்தது.

மார்ஷ் ஏமாற்றம்:

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு மார்ஷ் (15) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த வேட் (23), பெய்லி (11) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் (108) ஒருநாள் அரங்கில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார்.

தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் (26), கிறிஸ்டியன் (23) மட்டும் ஓரளவு கைகொடுத்தனர். பின்வரிசை வீரர்களான பால்க்னர் (2), ஜான்சன் (6) ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 47.4 ஓவரில் 259 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/01/1390547200/australiateamenglandcricket.html

  • கருத்துக்கள உறவுகள்

5 வது ஒரு நாள் தொடர் போட்டியில் மீண்டும் இங்கிலாந்து தோல்வி .

(Australia 217-9 beat England 212 (49.4 overs) by five runs)

http://www.bbc.co.uk/sport/0/cricket/25901440

Edited by Ahasthiyan

  • தொடங்கியவர்

கடைசி ஓவரில் ஆஸி., வெற்றி:

 

இங்கிலாந்து ஏமாற்றம்அடிலெய்டு: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 

 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.முதல் நான்கு போட்டியின் முடிவில், ஆஸ்திரேலிய அணி, தொடரை 3–1 என ஏற்கனவே கைப்பற்றியது. ஐந்தாவது மற்றுக கடைசி போட்டி அடிலெய்டில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

பெய்லி அரை சதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (7), வாட்சன் (0) ஏமாற்றினர். கிளார்க்கும் 8 ரன்களில் கைவிட்டார். பெய்லி, மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ஷ் (36) ஓரளவு கைகொடுத்தார். மேக்ஸ்வெல் (22) ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார். அரை சதம் கடந்து பெய்லி (56) வெளியேறினார். பிராட் வேகத்தில் வேட் 31 ரன்களில் அவுட்டானார். ஜோர்டன் பந்துவீச்சில் பால்க்னர் (27), கவுல்டர் (15) பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கே (1), தோகர்டி (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. இயான் பெல் (14), ஸ்டோக்ஸ் (0) நிலைக்கவில்லை. கேப்டன் குக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரூட் அரை சதம் எட்டினார். இவர் 55 ரன்களில் வெளியேறினார். மார்கன் 39 ரன்களுக்கு பால்க்னர் பந்தில் அவுட்டானார். பட்லர் (5), பிரஸ்னன் (13), பிராட் (7) நிலைக்கவில்லை.

கடைசியில் தோல்வி:

கடைசி ஓவரில், இங்கிலாந்து வெற்றிக்கு 6 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. இதன் முதல் பந்தில் ரன்கள் இல்லை. இரண்டாவது, மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தில் டிரட்வெல் (0) அவுட்டாக, இங்கிலாந்து அணி 49.4 ஓவரில், 212 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி தொடரை 4–1 என வென்றது. ஆட்ட நாயகன் விருதை பால்க்னர் தட்டிச் சென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/01/1390715220/clarkeaustralia.html

 

  • தொடங்கியவர்

பின்ச் அரை சதம்: ஆஸி., வெற்றி
ஜனவரி 29, 2014.


ஹோபர்ட்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் ஆரோன் பின்ச் அரை சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹோபர்ட்டில் இன்று நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

பின்ச் அரை சதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், ஒயிட் ஜோடி துவக்கம் அளித்தது. டென்பர்க் வீசிய போட்டியின் 2வது ஓவரில் ஒயிட் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். பிராட் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் பின்ச், தன்பங்கிற்கு ஒரு இமாலய சிக்சர் அடித்தார். தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய பின்ச் (52), ஒயிட் (75)  இருவரும் அரைசதம் கடந்து வெளியேறினர்.  பின் வந்த மேக்ஸ்வெல் (20) , பெய்லி (14)  நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் லியான் அதிரடியாக ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது. லியான் (37), கிறிஸ்டியன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

சொதப்பல் துவக்கம்:

இங்கிலாந்து அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் ஹேல்ஸ் (22), ரைட் (9) அவுட்டானர். லம்ப் (9), மார்கன் (4) சொற்ப ரன்களில் கிளம்பினர். பட்லர் (20), ரூட் (32) ஓரளவு கைகொடுத்தனர். பிரஸ்னன் (11), பிராட் (13), டெர்ன்பர்க் (5) நிலைக்கவில்லை. அதிரடி காட்டிய போபரா அரை சதம் எட்டினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போபரா (65), பிரிக்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/01/1390985444/australiaenglandt20.html

  • தொடங்கியவர்

இங்கிலாந்திற்கெதிராக அவுஸ்திரேலியாவிற்கு இலகு வெற்றி

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2014

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

வேகமான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது. இறுதி நேரத்தில் ஓட்டங்கள் பெறப்பட்ட போதிலும், சிறந்த ஓட்டங்களைப் பெற அவ்வணி தடுமாறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜொஸ் பட்லர் 27 பந்துகளில் 22 ஓட்டங்களையும், மைக்கல் லம்ப், ஜோ றூட், ரிம் பிரெஸ்னன், ஸ்ருவேர்ட் ப்ரோட் (ஆட்டமிழக்காமல்) ஆகியோர் தலா 18 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜொஸ் ஹேஷல்வூட் 4 விக்கெட்டுக்களையும், நேதன் கோர்ட்டர் நைல், ஜேம்ஸ் முவ்றிஹெட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி சார்பாக, 3வது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 78 ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோர்ஜ் பெய்லி 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும், கமரன் வைட் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ரிம் பிரெஸ்னன், ஜேம்ஸ் ட்ரெட்வெல் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஜோஷ் ஹேஷல்வூட் தெரிவானார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகளின் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98640-2014-01-31-13-02-34.html

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu-image.jpg

"ஏய்.. கங்காரு பசங்களா.. லண்டனுக்கு வாங்கடா.. வச்சிக்கிறன்.." :D

  • தொடங்கியவர்

vadivelu-image.jpg

"ஏய்.. கங்காரு பசங்களா.. லண்டனுக்கு வாங்கடா.. வச்சிக்கிறன்.." :D

 

72859_804087296272198_59007728_n_zps9828

:o

 

  • தொடங்கியவர்

20- 20 தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
திங்கட்கிழமை, 03 பெப்ரவரி 2014 10:44

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 20-20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற ரீதியில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது. அவுஸ்திரேயாவில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான 20-20 கிரிக்கெட் போட்டியில் 84 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஜோர்ஜ் பெய்லி 49 ஓட்டங்களையும், கமரூன் வைட் 41 ஓட்டங்களையும், பென் கட்டிங் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் ஒய்ன் மோர்கன் 34 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக நேதன் கொட்லேர் நைல், கிலென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் மூர்ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியினதும், தொடரினதும் நாயகனாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவு செய்யப்பட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98856-20-20----.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.