Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி. 
[Wednesday, 2014-01-15 09:22:17]
News Service
உலகம் எங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் - தமிழ் மக்களுக்கு விடுதலை, நீதி, சுதந்திரம் கிடைக்கும் வரை தமிழர்களின் குரலாக நாம் இருப்போம் என்றும் அதே போல் விடுதலை தேடி நிற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்போம் என்றும், தமிழர் திருநாள் - திருவள்ளுவர் ஆண்டு 2045 யில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர்களுக்கு தேசிய அடையாளத்தை வழங்குவதும், சாதி சமய பேதங்களை கடந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி நிற்பதுவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதுமான தமிழ்ப் புத்தாண்டில், அனைவருடனும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதில் அனைத்துலக தமிழ் மக்கள் அகமகிழ்கின்றது.
 
இயற்கையோடு ,இயைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இயற்கையைப் போற்றுவதும், வழிபடுவதும், நன்றி செலுத்துவதும், எல்லா உயிரினங்களையும் நேசிப்பதும், உலகின் சிறந்த நாகரிகங்களில் ஒன்றைக் கொண்டிருந்த தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளாகும். அது மட்டுமல்லாமல் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் தமிழரின் தனித்துவமான விழாவாகவும் தமிழர் திருநாள் அமைகின்றது.
 
தமிழர்களின் உலகளாவிய உயர்ந்த பரந்த சிந்தனையையும், சமய, சாதி, வர்க்க, பாலின பேதங்களை கடந்து, உலகத்தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து போற்றிக் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற விழாவாக தமிழ்ப்புத்தாண்டு அமைகின்றது. செம்மொழியாகத் தமிழ்மொழி உயர் தனிச்சிறப்போடு தரணியில் செழித்தோங்கி நிற்கையிலும் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் ,இனம், ஆரியக் கலாசார மேலாதிக்கத்தில் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்பதுதான் வேதனையான விடயம். தமிழ் ,இனம் தனக்கே உரியதான தனது பண்பாட்டு, கலாசார விழுமியங்களை மீட்டெடுத்து தனித்துவததோடு திகழ வேண்டும் என்பதே எமது பெருவிருப்பம் ஆகும்.
 
அதே சமயத்தில் உலகமெங்கும் பரவி வாழ்ந்து வரும் தமிழினம் தமக்கிடையில் கலாசார பண்பாட்டுத் தளங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதும் உறவினை வலுப்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமானதாகும். மாபெரும் ,இன அழிப்பை சந்தித்தும், தொடர்தும் இன அழிப்பை எதிர்கொண்டபடியே, தனது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழினம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது இன்றைய அவசரமான அவசியமான வரலாற்றுத் தேவையாகும்.
 
இந்நாளில் உலகத்தமிழர் அனைவரதும் வாழ்வும் வளமும் பொங்கிப் பெருகிடவும், நமது கனவு மெய்ப்படவும் வாழ்த்தி நிற்கின்றோம்.http://seithy.com/breifNews.php?newsID=101444&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம் இணைப்புக்குநன்றி கறுப்பி...! :D

மிகவும் நல்ல செய்தி.

இந்த அமைப்புகளை ஒருங்கமைத்தோருக்கு நன்றி.

ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும் பத்து அமைப்புகள்!

சில அமைப்புகளுக்கு அப்படி ஒரு வேறு அமைப்பு இருப்பதே இதொடுதான் தெரிந்துக்குதோ என்னமோ?

இப்பவாச்சும் என்ட்டாக வேண்டும் என்று தோன்றியதே அதுவே பெரிய விடையம்.

எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் உலகத்தில் ஒரு பலமான இனம், ஒற்றுமை இருந்தால் சிங்களவன் தூசி.

 ஒரே ஒரு ஊரிலே பாடல் வரி தான்  நினைவுவருகின்றது .(ஒன்று கூட உருப்படியில்லை )

ஓம், ஒருத்தரும் பொது பல சேனா, ராவய, போன்று உருப்படியா இல்லை.

எங்களோட யாராவது கூட்டணி வையுங்கோ கட்சி மாதிரி தோல்வி பாதையில் முன்னேறுகிறார்கள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள்

அந்த 20 நாடுகளும் 205 அமைப்புக்களும் எவை, எவை என பட்டியலிட்டால் நாம் தெரிந்து கொள்ள வசதியாய் இருக்குமே.

20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள்

அந்த 20 நாடுகளும் 205 அமைப்புக்களும் எவை, எவை என பட்டியலிட்டால் நாம் தெரிந்து கொள்ள வசதியாய் இருக்குமே.

ஒரு குத்துமதிப்பா எழுதினதுக்கெல்லாம் பட்டியல் கேட்டா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குத்துமதிப்பா எழுதினதுக்கெல்லாம் பட்டியல் கேட்டா?

எனக்குத்தெரிந்து பிரான்சில்

60 க்கு மேற்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.

இயங்குகின்றன.....

எனக்குத்தெரிந்து பிரான்சில்

60 க்கு மேற்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.

இயங்குகின்றன.....

கனடாவில் நூற்றுக்கணக்கான ஈழ தமிழ் அமைப்புகள் இயங்குகின்றன.

பிரான்சிலும் கனடாவிலும் இருக்கும் அமைப்புகளை சேர்த்தாலே 200 மேல வரும் போலகிடக்கு.

பிரான்சிலும் கனடாவிலும் இருக்கும் அமைப்புகளை சேர்த்தாலே 200 மேல வரும் போலகிடக்கு.

எல்லோரும் மேலுள்ள கூட்டுக்குள் இல்லை. அரசியல் அமைப்புகள் மட்டும் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

சிங்களவனுக்கு மட்டுமா பிளட்டூன் டெக்னிக் தெரியும்? ;)

தமிழ் நாட்டில் சாதிக்கொரு சங்கம் என்று பார்த்தாலே ஒரு 1000 வரும்...அவர்களும் எங்கள் விடுதலைக்காக குரல், உயிர் எல்லாம் கொடுப்பவர்கள்

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் சாதிக்கொரு சங்கம் என்று பார்த்தாலே ஒரு 1000 வரும்...அவர்களும் எங்கள் விடுதலைக்காக குரல், உயிர் எல்லாம் கொடுப்பவர்கள்

சிங்களத்திடமிருந்து

இதற்கு என்ன  பதில் வருமோ

அதை நீங்கள் தந்துள்ளீர்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். இந்த முன்மாதிரியை ஏனைய அமைப்புக்களும் பின்பற்றி.. உலகத் தமிழினத்தின் அரசியல்.. பொருண்மிய.. சமூக தளங்களை வலுப்படுத்தக் கூடிய.. ஒரு பொதுக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் சர்வதேசத்தை அணுகுவது இன்னும் நல்ல பலன் அளிக்கும்.

சில பேருக்கு தமிழன்.. ஒற்றுமையாகக் கூடாது. ஆனால் சும்மா ஒற்றுமை ஒற்றுமைன்னு சொல்லிக்கிட்டே அவனை பிளவு படுத்தனுன்னு தான் விருப்பம். அவர்களை திருத்த முடியாது. அவர்கள் அப்படியே அதே கொள்கையோடு..  ஒரு நாள் செத்துப் போயிடுவார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தால்.. எமது எதிர்கால சந்ததி தான் நிர்க்கதியாக நிற்கும். :icon_idea:

இந்த "ஒற்றுமையான சிறி லங்கன்" சங்கத்தை நானும் தேடுறன்.

இவர்களுக்கு சிறி லங்கா கை கொமிசன் அடிதடிகள், சிங்கள பதவி சண்டைகள், ஊழல், திரை மறை விடயங்கள் எல்லாம் தெரிந்தும் ஈழ தமிழ் அமைப்புகள் மீதுசேறு வாரி இறைப்பது தான் தொழில்.

இவர்களால் ஒரு குழு அமைத்து ஒரு செயல் திட்டத்தை நிறைவேற்ற முடியாத கையாலாகதனத்தை ஈழ தமிழ் அமைப்புகள் மீது புரளியா வந்து கொட்டுவார்கள

Edited by விவசாயி விக்

இவர்களால் ஒரு குழு அமைத்து ஒரு செயல் திட்டத்தை நிறைவேற்ற முடியாத கையாலாகதனத்தை ஈழ தமிழ் அமைப்புகள் மீது புரளியா வந்து கொட்டுவார்க

புலத்தில் வட்டுகோட்டைக்கு வாக்குகேட்டு பின் தனிஒரு அவை கட்டினார்கள் அவர்களா 200 அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள் இல்லாவிட்டால் ஊர்சங்கம் பழையமாணவர் சங்கம் இலலாவிட்டால் சிற்றுண்டிவித்து நாட்டைபார்க்கம் சங்கம்

எனவே புலம்பெயர் தமிழமைப்புகள் என்றால் அவைகள் யாவும்
பணத்தை சுற்ரியே வலம் வருபவை. பணம் இல்லாவிடால் அவர்களிற்கு
தமிழர் பிணமாவதையும் பெரிதாக கொள்ளமாட்டார்கள்ஆளுக்காள்

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

தமிழ் நாட்டு உறவுகள் உயிர் எல்லாம் கொடுப்பவர்கள் என்றவுடன் கொடி பிடித்து கோடி அடிப்பவர்களுக்கு குலைப்பன் அடிக்குது .

இவர்களால் ஒரு குழு அமைத்து ஒரு செயல் திட்டத்தை நிறைவேற்ற முடியாத கையாலாகதனத்தை ஈழ தமிழ் அமைப்புகள் மீது புரளியா வந்து கொட்டுவார்க

புலத்தில் வட்டுகோட்டைக்கு வாக்குகேட்டு பின் தனிஒரு அவை கட்டினார்கள் அவர்களா 200 அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள் இல்லாவிட்டால் ஊர்சங்கம் பழையமாணவர் சங்கம் இலலாவிட்டால் சிற்றுண்டிவித்து நாட்டைபார்க்கம் சங்கம்

எனவே புலம்பெயர் தமிழமைப்புகள் என்றால் அவைகள் யாவும்

பணத்தை சுற்ரியே வலம் வருபவை. பணம் இல்லாவிடால் அவர்களிற்கு

தமிழர் பிணமாவதையும் பெரிதாக கொள்ளமாட்டார்கள்ஆளுக்காள்

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

காசிலாமல் ஒரு சங்கம் இருந்தா அது நிச்சயம் சந்நியாசிகள் சங்கமாத்தான் இருக்கும்.

சங்கமென்றால் பணம் தேவை, ஊரில அரச அடியாட்களாகவும் ஓட்டுக்குளுவாகவும் இருக்கலாம்.

ஆட்களை கடத்தி கப்பம் பெறலாம். 

புலத்தில் உள்ளாகள் அப்படி இல்லையே அதனால் தான் பணத்தை சேர்க்கிறார்கள்.

இதுகூட தெரியாதா? 

சிறி லங்கா சனியாசி பிக்குகள் எல்லாம் புல்லட் ப்ரூப் பென்சில் வலம் வருவதற்கு மூன்று வயசு குழந்தைகளை பிடித்து பிச்சை,பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தி காசு பார்க்கிறார்கள்.

சிறி லங்காவில் கண்டவன் எல்லாம் இலட்சம் கோடி பார்க்கிறான். இப்பவும் ஒரு கோடி ரூபா ஊழலில் உழல்கிறார்கள்.

இவர்களின் குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டால் மாறிவிடுவார்கள்.

ஈழத்து கோயில்களில் திருவிழாசரி கச்சேரி தமிழ்பிரசங்கங்கள் ஆகட்டும் தங்கள் வருமானத்தில் தான் செலவு செய்கிறார்கள் ஊரான் வீட்டு பணத்தில் அல்ல சன்னியாசிமடம் ஒருதனிமனிதனின் உழைப்பில் தான் இயங்கின அங்கே தங்கள் பணத்தை செலவு செய்து தான் பிரபல்யம் ஆகினார்கள் தமிழ் கடசியும் அப்படிதான் சொந்த காணிவித்தும் நடத்தினர்
இங்கே பிரபல்யம் ஆகில் குழுவாகி உண்மையை விழுங்கி மற்றவர்களுக்காக மனசாட்சிக்கு விரோதமாக செயற்படவேண்டும் உண்மை பேசினால் நான் பிக்குவின் ஆல் இந்தியாவின் ஆல் எனி இந்த தொழில்நுட்ப அறிவியல் புரட்சியில் இந்தபருப்புக்கள் அவியாது மக்களே சுடுநீருக்கும் தெரியும் உண்மைவிழுங்கிகள்  என்று.

Edited by bismar

அண்ணா, ஊர் திருவிழாவிற்கு உண்டியல் குலுக்கி குழுவா வருகிறார்கள். மற்றும் வெளிநாட்டு காரரிடமும் காசு ஒவ்வொரு திருவிழாவிற்கும் வாங்குகிறார்கள்.

கோயில் என்ன லட்டு விற்கும் தொழிற்சாலையா வருமானம் ஈட்ட?

Edited by விவசாயி விக்

அண்ணா, ஊர் திருவிழாவிற்கு உண்டியல் குலுக்கி குழுவா வருகிறார்கள். மற்றும் வெளிநாட்டு காரரிடமும் காசு ஒவ்வொரு திருவிழாவிற்கும் வாங்குகிறார்கள்.

கோயில் என்ன லட்டு விற்கும் தொழிற்சாலையா வருமானம் ஈட்ட?

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைபாக்கு பற்றி பேசுறாங்க.

அர்ச்சனை, தெட்சணை, உண்டியல் வருமானம் எல்லாம் கோயிலின் உழைத்த பணமாம்?

:D  :D  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.