Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறை, சட்டத்தினை கையிலெடுத்தல் மற்றும் என் மகன்: - நிழலி

Featured Replies

இதே பகுதியில் இன்னொரு திரியில் பிரான்ஸில் தமிழ் இளைஞர்கள் சட்டத்தினை கையிலெடுத்த விடயம் தொடர்பாக உரையாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போதுதான் இந்த விடயம் பற்றி எழுதுவம் என்று நினைத்தேன். அத் திரியில் எழுதினால் அது திசைமாறி விடும் என்பதால் புதுத் திரியில் எழுதுகின்றேன்.

 

அண்மையில் என் மகனது பள்ளிக்கூடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு என் மனைவிக்கு வந்தது. மகன் ஏதோ குழப்படி செய்து விட்டான் என்றும் தன்னை வந்து சந்திக்கும் படி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மூன்றாம் வகுப்பு படிக்கும் பெடியன் பெற்றோர்கள் வந்து சந்திக்கும் படி என்ன தவறைச் செய்து இருப்பான், அதுவும் அதிபரே தொலைபேசியில் பேசும் அளவுக்கு என்று யோசனையுடன் மனைவி பாடசாலைக்கு போயிருக்கின்றார் (என் பெற்றோர் நான் ஐந்தாம் வகுப்பில் தான் நான் செய்த குழப்படியால் அதிபரைச் சந்திக்க வேண்டி வந்தது)

 

அங்கு நடந்ததை அதிபர் விவரித்துள்ளார்.

 

மகன் படிக்கும் வகுப்பில் இன்னொரு வாண்டு, மகனுக்கும் அவனது நெருங்கிய நண்பர்கள் இருவருக்கும் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இவர்களது பாடசாலை பையை மிதிப்பது, சப்பாத்தால் உதைப்பது, தூக்கி வெளியில் போடுவது என்று அந்த வாண்டு இவர்களுக்கு ஒரே தொல்லை.

 

பொறுத்துப் பார்த்து விட்டு என் மகனும் கூடவே அவனது இரு நண்பர்களும் (ஒருவர் பெண் பிள்ளை) சேர்ந்து அவனது புத்தகப் பையை தூக்கி ஆண் பிள்ளைகள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் போட்டு விட்டு வந்து இருக்கின்றார்கள். அவனது புத்தக் பை எல்லாம் சிறுநீர்  பட்டு இருக்கு. இப்படி ஒரு ஐடியாவைக் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்தியது (தூக்கிக் கொண்டு போய் போட்டது) என் மகன் என்றும் எனவே அடுத்த நாள் அவருக்குத் தண்டனை கொடுக்க இருப்பதாகவும் அது பற்றிச் சொல்லவே கூப்பிட்டதாகவும் அதிபர் கூறி இருக்கின்றார். அதிபர் விசாரிக்கும் போது மிச்சம் இருந்த இவனது நண்பர்களும் என் மகன் தான் செய்தது என்று கூறியமையால் அவனே குற்றவாளி என்று தீர்மானித்துள்ளனர் - ஆனால் யாரும் நேரடியாக கண்ணால் காணவில்லை.

 

நான் வேலையால் வந்தபின் என் மனைவி நடந்ததைக் கூறினார். நான் மகனிடம் விசாரித்தேன். தான் அப்படிச் செய்யவில்லை என்றும், ஐடியா கொடுத்தது பெண் பிள்ளை தான் என்றும் தான் நல்ல பிள்ளையாக இருந்ததாகவும் சொன்னான். பொதுவாக தாயிடம் வண்டி வண்டியாக பொய்களைச் சொன்னாலும் என்னிடம் எந்தப் பொய்யும் அவன் சொல்வதில்லை (எந்த அப்பன் தான் தன் மகன் பொய் சொல்வான் என்று நம்பினம்..). எதுக்கும் அடுத்த நாள் நான் போய் அதிபரைச் சந்திக்கின்றேன் என்றேன்.

 

என் மனசுக்குள் "இதெல்லாம் ஒரு பெரிய தவறா...அதிபர் வரைக்கும் இது போக வேண்டுமா..அப்படி போனாலும் பெற்றோர்களை அழைத்து முறையிடும் அளவுக்கு ஒரு பெரிய தவறா" போன்ற கேள்விகள் எழுந்து கொண்டே வந்தன. அடிபட்டு காயம் வந்து இருந்தால் கூட கொஞ்சம் பெரிய தவறாகக் கருதலாம்.. இது சின்ன விடயம்தானே.. என்று யோசித்துக் கொண்டே படுத்து அடுத்த நாள் காலையில் அதிபரைச் சந்திக்க சென்றேன்

 

அதிபர் என்னிடம் மிச்ச நண்பர்கள் இருவரும் இவனையே குற்றம் சாட்டுவதாலும் boys washroom இற்கு இறுதியாக என் மகன் தான் போனதாக log book இல் இருப்பதாலும் அநேகமாக என் மகன் தான் குற்றம் செய்து இருப்பான் என்று கூறினார்.  தண்டனையாக அன்று முழுதும் இடைவேளை நேரத்தில் விளையாட விடப் போவதில்லை என்றும் ஒரு பாட நேரத்தில் முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

 

நான் இது ஒரு சின்ன தவறுதானே என்று சொல்லும் போது அவர் சொன்ன விடயம் தான் முக்கியமானவை. என் புத்தியில் அறைந்தவை.

 

அவர் சொன்னது இதுதான்.

 

" இவனுடன் படிக்கும் அந்த வாண்டு இவனுக்கும் இவனது நண்பர்களுக்கும் தொடர்ச்சியாக இம்சை கொடுத்து வந்து இருக்கின்றான். எனவே இவர்களே அவனை தண்டிக்க முடிவெடுத்து தண்டித்தும் உள்ளனர், அந்த வாண்டு இவர்களுக்கு தொல்லை கொடுத்தால் அதனை தீர்க்க படிப்படியான  வழிகள் உள்ளன.

முதலில் இது பற்றி வகுப்பு ஆசிரியருக்கு முறையிட்டு இருக்க வேண்டும். அப்படியும் தீர்வு இல்லை என்றால், பெற்றோர்களிடம் இது பற்றி சொல்லி  அவர்கள் மூலம் தீர்வு கண்டு இருக்க வேண்டும். அப்படியும் தீர்வு இல்லை என்றால் நேரடியாக தன்னிடம் (அதிபரிடம்) வந்து முறையிட்டு இருக்க வேண்டும். இவ்வாறான சரியான வழிகளில் தீர்வினை காணாமல், எடுத்த எடுப்பிலேயே தாமே வன்முறையாக தண்டனை கொடுக்க முயன்றது மிகவும் தவறான விடயம். சின்ன வயதில் இப்படியான சின்ன தவறுகளை சரியாக  விளங்கப்படுத்தி மென்மையான தண்டனை கொடுத்தால்தான் அவர்கள் பதின்ம வயதை (Teenage) அடையும் போது தம் பிரச்சனைகளுக்கு வன்முறையற்ற தீர்வுகளை நோக்கிச் செல்வார்கள். இப்ப கண்டும் காணாமல் விட்டால், பின் பதின்ம வயதில் இதே போன்று செய்யும் போது கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்"  என்றார்.

 

நான் மிகவும் நன்றி என்று சொல்லி நடையைக் கட்டினேன். மனசு முழுதும் திருப்தியும் என் அறியாமை பற்றிய நக்கலும் நிரம்பி இருந்தது.

 

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் எனது மகளுக்கும் இப்படித்தான் இன்னொரு குட்டி வாண்டு அலுப்பு குடுத்தது.. புது சட்டை போடக்கூடாது.. புது சப்பாத்து போடம்கூடாது என்று நிபந்தனைகள்..

தன் தந்தையைப் போலவே அப்பாவியாக இருந்ததால் :wub: வரவர பள்ளிக்கூடத்துக்குப் போக சுணங்கியதைக் கண்டுகொண்டோம்.. :huh:

அன்றொருநாள் என் மனைவி பள்ளிக்கூடத்தில் அந்த மற்றப்பிள்ளையைக் கண்டு இவளை தொந்தரவு செய்யவேண்டாம் என்று தன்மையாகக் கூறியுள்ளார்.. இதைக்கண்ட வகுப்பு ஆசிரியை அப்படிச் செய்யக்கூடாது என்று எதுவானாலும் தங்களிடம்தான் சொல்லவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

இப்போது வேறு வகுப்பு என்பதால் பிரச்சினையில்லை.. ஆனாலும் தந்தையும் மகளும் இன்றும் அப்பாவிகள்தான்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை  சட்டதிட்டங்களை  மதிக்கின்றேன்

 

அதற்காக குட்டுப்பட்டுக்கொண்டிருந்தால்

நல்ல பெயரும் இருக்காது :lol:

மூளையும்  வளராது தம்பிமார்

எப்பொழுதுமே எமக்கு தண்டனை கிடைத்ததைவிட

எமக்கு அடித்தவர் தப்பித்து விட்டாரே என்பதே மனது முழுவதுமிருக்கும்

அத்துடன்

எமது குடும்பத்தினரும் ஆமாப்போடுகின்றனரே என்றும் கோபமிருக்கும்

 

எனது மகளுக்கும் இப்படி  ஒருவர் அண்மையில்

பிரச்சினை கொடுத்து வந்தார்

போடும் உடுப்பு

சப்பாத்து

கலர்

அப்பனின் வியாபாரம் (வீதியில் கடலை விற்பது)

...........................

.......................

 

பாடசாலை நடைமுறைகளை  எல்லாம் செய்து பார்த்தாச்சு (மகளின் திருப்தி  மற்றும் அவளது பழக்கவழக்கங்களுக்காக)

எந்த மாற்றமும் இல்லை.

 

அடுத்து

நமது முறை

 

நாலைஞ்சு நண்பர்களுடன் ஒரு இடத்துக்கு   போய் வந்தேன்

மகளுக்கு பாடசாலை முடியும் நேரம்

அதால ஒருக்கா சுத்தி

மகளையும் பாடசாலைக்கு முன்னுக்கு வைத்து ஏற்றிக்கொண்டு வந்தேன்

 

இன்னொரு நாள் மகனுக்கு தொலைபேசி  அடித்தபோது

நண்பர்களுடன் கால்ப்பந்து விளையாடிவிட்டு வந்து கொண்டிருப்பதாக சொன்னான்

தங்கச்சிக்கு பாடசாலை முடியும் நேரம்

அப்படியே  போய்

பாடசாலைக்கு முன்னுக்கு வைத்து அவளை காரில் ஏற்று என்றேன்.

 

2 நாள் செல்ல

மகளிடம்கேட்டேன்

இப்ப எப்படி போகுது  வகுப்பு என.

இப்ப அவர் என்னைக்கண்டால் ஒதுங்குகின்றார்  என்றாள்.

 

(முக்கியமாக  இப்படியொரு விடயம் நடந்தது.  எனது மகளுக்கோ மகனுக்கோ ஏன் நம்ம எதிரிக்கோ :D தெரியாது.)

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

(இப்படிச்செய்தால்

நிழலி  மாதிரி

வெட்கப்படவும் தேவையில்லை

இசை  மாதிரி தன்னுக்குள் அழவும்  தேவையில்லை :icon_idea: )

அப்பனின் வியாபாரம் கடலை விற்பது .

இது ஒன்றே காணும் ஐயா . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனின் வியாபாரம் கடலை விற்பது .

இது ஒன்றே காணும் ஐயா . :icon_mrgreen:

 

பிரான்சில்

விசா கிடைக்காத பெரும்பான்மையான  இந்தியர்கள் வங்காளதேசத்தவர்  மற்றும் அதன் பக்கத்து நாட்டவர்கள்

செய்யும் தொழில் கடலை விற்பது தான்.

அதையே  இங்கு அதே கலரிலுள்ள  எமக்கும் பட்டப்பெயராக வைத்துவிட்டார்கள் :(

Edited by விசுகு

பதிவுக்கு நன்றி நிழலி அண்ணா.

Edited by தமிழினி

  • தொடங்கியவர்

பின்னூட்டம் இட்டவர்களுக்கும் 'லைக்' கியவர்களுக்கும் நன்றி.

 

ஆனாலும், இசை தன்னை அப்பாவி என்று சொல்வதை ஒருவர் கூட மறுக்கவில்லை என்பதையிட்டு கண்ணீர் வருது... :D

  • கருத்துக்கள உறவுகள்

பின்னூட்டம் இட்டவர்களுக்கும் 'லைக்' கியவர்களுக்கும் நன்றி.

ஆனாலும், இசை தன்னை அப்பாவி என்று சொல்வதை ஒருவர் கூட மறுக்கவில்லை என்பதையிட்டு கண்ணீர் வருது... :D

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.. :D நன்றி கள உறவுகள்..! :huh::D

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.. :D நன்றி கள உறவுகள்..! :huh::D

 

ஹா ஹா .....இசையண்ணா, யாழ் உறவுகள் உங்களை பப்பா மரத்தில ஏறவிடுனம்....எதற்கும் கவனம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு  முன் நடந்தது..........................

 

ஒரு மாணவன் கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர் .தனது  சித்தி வீட்டுக்காரர் தாய் நாடு  சென்ற சமயம்,  வெள்ளை இன  நண்பன் ( சேர்ந்து பள்ளி செல் பவர்  )  யன்னல் வழியாக புகுந்து  லப் டாப் திருடும் போது கையும் களவுமாக இவன் பிடித்து விட் டான் .  உடன் இவர்  தனது  இன்னொரு சித்தியின் மகனை போன்  பண்ணி அழைத்து  அவரின்   துணையுடன்  வெள்ளை பெடியனை கயிறால் கட்டி வைத்தான். இப்படிஎங்களுடன் கூடப் பழகி  இப்படி செய்து விட் டாயே என திட்டினார்கள். பின் அவன் கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கேட்டதும் விடுவித்து விட்டனர்

.

அவன் சென்று இவர்கள் தன்னை துன்புறுத்தியதாக  போலிஸில் சொல்லி விட் டான் பொலிசார் வந்து .விசாரணையில் என்ன கயிற்றால் கட்டி வைத்தாய்? .. ஏன் தங்களுக்கு அறிவிகக்வில்லை  என  பல கேள்விகள்.  பத்தொன்பது வயதான் மாணவன்  மறியலில்  வைக்க பட்டான். குடும்பத்தினர் பெரும் சோகம்.  பின் இரு வருடங்களால்  தாயின் உடல் நிலையை காரணம் காட்டி அவனது சகோதரிகள் லாயர்  மூலம் வாதாடி விடுவித்தனர் .. ஆனால் மீண்டும்  அப்போது   பதினாறு வயதாய்  இருந்த  சித்தியின் மகன் இப்போது பதினெட்டுவயதாகி விட்டது மீண்டும் கைது செய்து  மறியலில்.......  சட்டத்தை கையில் எடுப்பதால் வரும் வினை .....

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவின் அந்த சம்பவத்தையே நாங்கள் சொல்ல விழைவது. கள்ளன் வந்தால் 911 தொலைபேசி எடுக்கலாம்.. :unsure: இல்லாவிட்டால் நீ எடுப்பதை எடு.. ஆனால் என்னை விட்டிடு என்று சொல்லலாம்..  :D இல்லாவிட்டால் விட்டைவிட்டு ஓடிப்போய் அயலவர் வீட்டில் இருந்து 911 அழைப்பை மேற்கொள்ளலாம். :blink:

மாறாக திருடன் கத்தியை வைத்து மிரட்டினால் தற்காப்பு நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.. அதுகூட‌ நீதிமன்றத்தில் நிறுவப்படல் வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குள்ளும் ஒரு திருடன் வந்துள்ளான். கீழ்த்தளத்தில் ஒரு பெண் மட்டும் இருந்துள்ளர்.. சத்தம் கேட்டு அவர் மேலே வந்தபோது திருடனைக் கண்டுவிட்டார். :o திருடன் sorry சொல்லிவிட்டு நடந்து வெளியே போனானாம்.. :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவின் அந்த சம்பவத்தையே நாங்கள் சொல்ல விழைவது. கள்ளன் வந்தால் 911 தொலைபேசி எடுக்கலாம்.. :unsure: இல்லாவிட்டால் நீ எடுப்பதை எடு.. ஆனால் என்னை விட்டிடு என்று சொல்லலாம்..  :D இல்லாவிட்டால் விட்டைவிட்டு ஓடிப்போய் அயலவர் வீட்டில் இருந்து 911 அழைப்பை மேற்கொள்ளலாம். :blink:

மாறாக திருடன் கத்தியை வைத்து மிரட்டினால் தற்காப்பு நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.. அதுகூட‌ நீதிமன்றத்தில் நிறுவப்படல் வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குள்ளும் ஒரு திருடன் வந்துள்ளான். கீழ்த்தளத்தில் ஒரு பெண் மட்டும் இருந்துள்ளர்.. சத்தம் கேட்டு அவர் மேலே வந்தபோது திருடனைக் கண்டுவிட்டார். :o திருடன் sorry சொல்லிவிட்டு நடந்து வெளியே போனானாம்.. :lol:

 

 

சில  வருடங்களுக்கு முன்

லா சப்பலில் ஒரு திருட்டு நடந்தது

துப்பாக்கி முனையில்

பல லட்சம் ஈரோக்களை  எடுத்துக்கொண்டு ஓடிய  கள்ளர்களை பொதுமக்கள் கூடி மறித்தனர்

ஒருவர் பிடிபட்டார்.

நாலு சாத்து சாத்த

தான் தப்புவதற்காக காவல்துறையிலேயே  கையை  வைக்கிறீர்களா என காவல்த்துறை  காட்டைக்காட்டினார்.

அதற்கு பிறகு தான் சனியனே  பிடித்தது  அவருக்கு.

அடிக்கப்பயந்த மக்கள்

கயிறு எடுத்து மரத்துடன் கட்டினர்

அங்கு நின்ற  இரு இளைஞர்கள் மட்டும்  (முன்னாள் போராளிகள்)

அருகில் வந்து அடித்து ஒரு கையையும் காலையும் முறித்துவிட்டு தலைமறையாகி  விட்டனர்.

(அவர்கள் சொல்லிச்சென்றது இவரை காவல்த்துறை காப்பாற்றிவிடும்.  தண்டனை  எதுவும் தரமாட்டார்கள் என்று)

 

அதே   போல்  காவல்த்துறை  வந்து 

யார் இவரில் கை வைத்தது

அந்த உரிமை எவருக்குமில்லை

என்று பேசி  அவரைப்பாதுகாப்பாக கொண்டு செல்ல முயன்றதே தவிர

அவர் களவெடுத்ததை  ஏற்கவோ அதை விசாரிக்கவோ இல்லை.

காவல்த்துறை  அவரைக்கொண்டு போனதும்

ஊர்வலமாக 500 பேர் வரை காவல்த்துறை  அலுவலகத்தை முற்றுகையிட்டபோது

பத்திரிகைக்காறர்களும்  தொலைக்காட்சிகளும் வந்தன

அதைத்தொடர்ந்து

அமைச்சரும் வரவேண்டியதாயிற்று

அவரது உறுதிமொழியின்படி விலகிச்சென்றோம்

இதுவரை என்ன  தண்டனை என்று தெரியவில்லை.

இதைக்கணித்து 

அந்த இடத்திலேயே  தண்டனை வழங்கியதே இன்றும் அந்த இளையர்களை  நினைக்கவைக்கிறது.

தொடர்ந்து நடந்து வந்த கொள்ளைகள் அன்றுடன் நின்றுவிட்டன.....

  • தொடங்கியவர்

திருடப்பட்ட பல இலட்சம் யூரோக்களுக்கு என்ன நடந்தது விசுகு அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்

அரைவாசியை  மற்றவர் கொண்டு   ஓடிவிட்டார்

 

(அது ஒரு காட் வியாபாரக்கடை என்பதால்

பணம் சம்பந்தமாக கொஞ்சம்  இவர்களும் அமுக்கி  வாசித்தார்கள்.)

 

அவர்கள் கடைக்குள் புகுந்ததிலிருந்து

போகும் வரை

கமெராவில் பதிவாகியிருந்தது.

அதை காவல்த்துறைக்கு கொடுக்காது பத்திரிகைக்காரரிடம்   கொடுத்தோம்.

அதனால் தான் கொஞ்சமாவது  கவனித்தார்கள்.

 

 

 

 

திருடன் sorry சொல்லிவிட்டு நடந்து வெளியே போனானாம்.. :lol:

 

முடியல.... :lol: இப்படி நல்ல திருடர்களும் கனடாவில இருக்கினமோ :)

  • கருத்துக்கள உறவுகள்

முடியல.... :lol: இப்படி நல்ல திருடர்களும் கனடாவில இருக்கினமோ :)

இளவயது வெள்ளையனாம்.. கஞ்சா, பீடி வாங்க காசுக்கு வந்திருப்பான்.. :lol:

அரைவாசியை  மற்றவர் கொண்டு   ஓடிவிட்டார்

 

(அது ஒரு காட் வியாபாரக்கடை என்பதால்

பணம் சம்பந்தமாக கொஞ்சம்  இவர்களும் அமுக்கி  வாசித்தார்கள்.)

 

அவர்கள் கடைக்குள் புகுந்ததிலிருந்து

போகும் வரை

கமெராவில் பதிவாகியிருந்தது.

அதை காவல்த்துறைக்கு கொடுக்காது பத்திரிகைக்காரரிடம்   கொடுத்தோம்.

அதனால் தான் கொஞ்சமாவது  கவனித்தார்கள்.

விசுகு அண்ணா.. இதுக்கென்றுதான் காப்புறுதி வைத்திருக்கிறார்கள்.. வீட்டில் நகை, பணம் களவுபோனால் $6000 வரைக்கும் காப்புறுதியில் இருந்து எடுக்கலாம்.. அதற்கு மேலும் ந்கை பணத்தை வைத்திருந்தால் அது அசாதாரணமான விடயமாக எடுத்துக்கொண்டு மேலதிக பணம் தரமாட்டார்கள்..

அதுபோல வியாபாரத்துக்கென்றும் காப்புறுதிகள் உண்டு.. அதை எடுத்து வைத்துக்கொண்டு வியாபாரத்தை நடத்தினால் எந்த சிக்கலும் இல்லை.

(அடுத்த பதில் என்ன வரப்போகுது என்று ஏற்கனவே தெரியும்.. :D)

  • கருத்துக்கள உறவுகள்

பலர் தங்களது பிள்ளைகளுக்கு ஏற்பட்ட‌ அனுபவங்களை, பகிர்வதைப் பார்க்க...
தமது பிள்ளைகளின் வாழ்க்கையில், எவ்வளவு அவதானமாக இருக்க வேண்டும் என்பதை.. உணர்த்துகின்றது.
சிறிய‌ வ‌குப்பில், பாட‌ம் எடுக்கும் ஆசிரிய‌ர், அதிப‌ர் போன்றோர்... மிகுந்த‌ க‌ல்வி அறிய‌றிவு ம‌ட்டும‌ல்லாது, எதிர்கால‌ ச‌மூக‌ ந‌ல‌னினும் அக்க‌றை உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌து மிக‌ முக்கிய‌ம்.
 

பிரான்ஸ் முன்னாள் போராளிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது போலிருக்கு .

பிரான்ஸ் கோத்தாவிடம் தான் இனி உதவிக்கு போக வேணும். :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்

லா சப்பலில் ஒரு திருட்டு நடந்தது

துப்பாக்கி முனையில்

பல லட்சம் ஈரோக்களை எடுத்துக்கொண்டு ஓடிய கள்ளர்களை பொதுமக்கள் கூடி மறித்தனர்

ஒருவர் பிடிபட்டார்.

நாலு சாத்து சாத்த

தான் தப்புவதற்காக காவல்துறையிலேயே கையை வைக்கிறீர்களா என காவல்த்துறை காட்டைக்காட்டினார்.

அதற்கு பிறகு தான் சனியனே பிடித்தது அவருக்கு.

அடிக்கப்பயந்த மக்கள்

கயிறு எடுத்து மரத்துடன் கட்டினர்

அங்கு நின்ற இரு இளைஞர்கள் மட்டும் (முன்னாள் போராளிகள்)

அருகில் வந்து அடித்து ஒரு கையையும் காலையும் முறித்துவிட்டு தலைமறையாகி விட்டனர்.

(அவர்கள் சொல்லிச்சென்றது இவரை காவல்த்துறை காப்பாற்றிவிடும். தண்டனை எதுவும் தரமாட்டார்கள் என்று)

அதே போல் காவல்த்துறை வந்து

யார் இவரில் கை வைத்தது

அந்த உரிமை எவருக்குமில்லை

என்று பேசி அவரைப்பாதுகாப்பாக கொண்டு செல்ல முயன்றதே தவிர

அவர் களவெடுத்ததை ஏற்கவோ அதை விசாரிக்கவோ இல்லை.

காவல்த்துறை அவரைக்கொண்டு போனதும்

ஊர்வலமாக 500 பேர் வரை காவல்த்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டபோது

பத்திரிகைக்காறர்களும் தொலைக்காட்சிகளும் வந்தன

அதைத்தொடர்ந்து

அமைச்சரும் வரவேண்டியதாயிற்று

அவரது உறுதிமொழியின்படி விலகிச்சென்றோம்

இதுவரை என்ன தண்டனை என்று தெரியவில்லை.

இதைக்கணித்து

அந்த இடத்திலேயே தண்டனை வழங்கியதே இன்றும் அந்த இளையர்களை நினைக்கவைக்கிறது.

தொடர்ந்து நடந்து வந்த கொள்ளைகள் அன்றுடன் நின்றுவிட்டன.....

உங்கட பிரான்ஸ் இந்தியாவ விட கேவலமா இருக்கு எப்புடி.....?

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் முன்னாள் போராளிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது போலிருக்கு .

பிரான்ஸ் கோத்தாவிடம் தான் இனி உதவிக்கு போக வேணும். :icon_mrgreen:

 

உங்கட அரசியல் அறிவும், நீங்களும்...

வர்கின்ற‌ ஸ்ரீலங்கா மீதான, போர் குற்றச் சாட்டில்...

மகிந்தவும், கோத்தாவும் கழி தின்னப் போகின்றார்கள்.

இல்லாவிட்டால்... நான் மொட்டை அடிக்கின்றேன்.

நீங்க அடிப்பீங்களா, சாலஞ்ச்... அர்ஜூன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் முன்னாள் போராளிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது போலிருக்கு .

பிரான்ஸ் கோத்தாவிடம் தான் இனி உதவிக்கு போக வேணும். :icon_mrgreen:

 

 

ஐயா

உங்களை  நீங்கள் அடிக்கடி நிரூபிக்கின்றீர்கள்

 

மக்கள் மேல் பாசம் வைத்து போராடப்போனவனுக்கும்

சோறு  மற்றும் பெண்விடயங்களுக்காக போராடப்போன உங்களுக்கும் வித்தியாசம் இருக்கு

மக்கள் மேல் அன்பு கொண்டவன்

இது போன்ற  அக்கிரமங்களைக்கண்டால்  கிளர்ந்தெழுவான்

அவன் தான் உண்மையான போராளி....

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி வீட்டில் இன்னொரு நெடுக்காலபோவனை உருவாக்கி விட்டாள்.. அவரது மகனின் நண்பி. ஐடியாவும் கொடுத்து.. எனிமியின் புத்தகப்பையை நாஸ்தி பண்ணினதும் இல்லாமல்... நிழலியின் அப்பாவி மகனை மாட்டியும் விட்டிட்டாள். எனி அவன்.. பொண்ணுங்கள நம்புவானா..???! :D:lol:



 

நான் வேலையால் வந்தபின் என் மனைவி நடந்ததைக் கூறினார். நான் மகனிடம் விசாரித்தேன். தான் அப்படிச் செய்யவில்லை என்றும், ஐடியா கொடுத்தது பெண் பிள்ளை தான் என்றும் தான் நல்ல பிள்ளையாக இருந்ததாகவும் சொன்னான். பொதுவாக தாயிடம் வண்டி வண்டியாக பொய்களைச் சொன்னாலும் என்னிடம் எந்தப் பொய்யும் அவன் சொல்வதில்லை (எந்த அப்பன் தான் தன் மகன் பொய் சொல்வான் என்று நம்பினம்..). எதுக்கும் அடுத்த நாள் நான் போய் அதிபரைச் சந்திக்கின்றேன் என்றேன்.

 


நன்றி

 


 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை நான் ஒரு கந்தோருக்கு முன் இருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு  போனேன். எனது காருடன் அந்தப் பார்க்கிங் முடியுது. பின்னால் மஞ்சள் கோடு. பார்க் பண்ணக் கூடாது.நான் மீன்டும் கார் எடுக்க வந்தால் அந்த மஞ்சள் கோட்டில் ஒருகார் என் காருடன் மிக நெருக்கமாய்  நிக்குது. முன்காரும் கிட்டவாய் நிக்குது.  நான் காரை இயக்கி இருமுறை கோர்ன் அடித்தேன் யாரையும் காணவில்லை. நான் யோசிக்கேல்ல, பின்னுக்கு விட்டவர் பிழைதானெ என்டு லைட்டாய் என்ட காரால அதைக் கொஞ்சம் அரக்கி எடுக்க முயர்சித்தேன். தாலியைக் கட்டுவாள் எங்கேயொ நின்டு ஓடிவந்து அரத்,அரத் (நிறுத்து, நிறுத்து) என்டாள். நானும் இறங்கி வந்து பார்த்தால் அந்தக் காரின் பவர் சிறிது உரஞ்சுப் பட்டிட்டுது.

 

நான்: உங்களில தான் பிழை ,அதில கார் விடக் கூடாது, நீங்கள் அதில் காரைவிட்டதுடன் நெருக்கமாயும் விட்டிட்டீங்கள் என்றேன்.

அழகான அரக்கி: நோ, நோ நீ இடிச்சது பிழை எழுதித்  தா என்கிறாள்.

இப்படியே நீயா, நானா என்று இழுபட அவ்வழியே பொலிஸ் வந்துது.( அது ரவுன் என்பதால் அடிக்கடி பொலிஸ் ரோந்து இருக்கும், நிச்சயமாய் அழகிக்கும் , அவர்கள் வருகைக்கும் சம்பந்தமில்லை, அதுக்கு நான் காரன்டி.)

 

உடனெ நான் என்னில தப்பில்லத்தானே, பொலிசை மறித்து  (வானத்தால போன சனியனை ஏணிவச்சு இறக்கினமாதிரி) பிரச்சினையைச் சொன்னேன். கூடவே அடிக்கடி இவ இதில கார் நிப்பாட்டக் கூடாது என்பதையும் மென்சன் பண்ணினேன்.

பொலிஸ்:  இடித்தது யார்.

நான்:  நாந்தான். அவ அதில...

பொலிஸ்: அதைப் பார்க்கிறது எங்கட வேலை, இப்ப நீங்கள் இடிச்சதுக்கு எழுதிக் கொடுங்கோ!

அரக்கி : கொடுப்புக்குள் சிரிக்கிறாள்...!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா நீங்கள் இடிக்கிறதுக்குப் பதிலா இரண்டு வேலைகளுள் ஒன்றை செய்திருக்கலாம்.. :unsure:

1) காவல்துறையை அழைப்பது.

2) ஃபிரான்ஸ் இளையோரை கூப்பிடுவது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.