Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மூளையின் மீள் வடிவமைப்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் மூளையின் மீள் வடிவமைப்பு..!

By Todd Sampson

அண்மையில் கனேடிய தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வியந்த நிகழ்ச்சி இது. கனடாவில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ராட் சாம்ப்சன் தனது மூளையை வீரியப்படுத்தும் மூன்று மாத முயற்சியில் இறங்குகிறார். இதற்காக அவர் நியூரோ விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் பயிற்சிகளும், பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுமே இந்நிகழ்ச்சியின் மூலக்கரு.

உதாரணத்திற்கு, பார்வையாலேயே ஒரு ரிமோட் கன்ட்ரோல் உலங்கு வானூர்தியை பறக்க வைக்க முடியுமா? முடியும் என்கிறது நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள். கண்டதும் ஒருகணம் ஆடித்தான் போனேன். :D

இதை இங்கே இணைப்பதற்குக் காரணம் ஒன்றேதான். நாமெல்லாம் எங்கள் மூளைகளை சில சாதாரண பயிற்சிகளின்மூலம் செம்மைப்படுத்தி மேம்படுத்தலாம்.

Davy-Richardson2-300x225.jpg

டார்ட் எனப்படும் சிறு அம்புகளை எறியும் விளையாட்டைப் பார்த்திருப்பீர்கள்.. சரியாக நடு வட்டத்துக்குள் எறிவதாக வெறும் கற்பனை செய்தே ஒரு மாத காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதை நம்ப முடிகிறதா? முடியும் என செய்தும் காட்டுகிறார்கள். முதலில் வியப்பாக இருந்தாலும், இதை என்னால் ஊகிக்கக்கூடியதாக இருந்தது. மிகப் பெரும் கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன்.. எனக்குத் தெரிந்தவர் யாரென்றால் அது நான் தான். :lol: ஒரு சாதாரண மூளையின் ஒரு ஒரு கன செ.மீ கொள்ளளவுக்குள் உள்ள தொடர்புகளின் எண்ணிக்கை பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாம். அப்படி இருக்கும்போது முடியாதா என்ன.. ஆனாலும் அவற்றைப் பயன்படுத்துவதே சிறப்பு. :D

இப்போது முதல் பாகத்தைக் கண்டு களியுங்கள். நேரமில்லை என ஒதுக்கிவிட வேண்டாம். சந்தேகங்கள் இருந்தால் தீர்த்துவைக்க முயல்கிறேன். இல்லாவிட்டால் களத்தில் உள்ள நெடுக்ஸ், ஜஸ்டின், சீமான் பொன்ற விஞ்ஞானிகளிடம் கேட்டு அறிந்து கொள்வோம். :D

http://www.youtube.com/watch?v=Vv-1e1O056o

(தொடரும்.)

திருத்தப்பட்ட காரணம்: நீக்கப்பட்ட காணொளி இணைப்பு மாற்றப்பட்டு புதிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு இங்க மூளைப்பிரச்சினை போல இருக்கு...

ஒரே ஆராய்ச்சியும்

கணிப்புக்களுமாக்கிடக்கு.......

ஏதோ

விசயம் வெளிவருவதில்  சந்தோசம் தான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கேள்விகள்..

1) V = V + V

மேலே உள்ள சமன்பாடு தீக்குச்சிகளால் எழுதப்பட்டுள்ளது என நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு குச்சியை மட்டும் இடம் மாற்றுவதால் மேலே உள்ள சமன்பாட்டை உண்மையாக்க முடிகிறதா?  :rolleyes:

2) திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி, சனி, ஞாயிறு.

மேலே உள்ள நாட்கள் தவிர்ந்த மூன்று தொடர் நாட்களை உங்களால் கூற முடிகிறதா?  :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் இரண்டு:

புதுமைகளை செய்வது மூளையின் ஒரு பகுதி. அதன் செயற்பாட்டைத் தூண்டுவதன் மூலம் புதியன உருவாக்கப்படலாம். பலகாலம் பழம் தின்று கொட்டை போட்டவர்களால் புதியனவற்றை உருவாக்க முடியாமல் போவதற்கும் காரணம் இதுவே என்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு, புதிய அலைபேசியை உருவாக்கும்படி ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சொன்னால், அது செவ்வக வடிவில் இருக்கும், தொடு திரை இருக்கும் என்றுதான் அனுபவப்பட்ட மூளை சிந்திக்க ஆரம்பிக்கும். புதுமைகளை உருவாக்க அந்த சிறப்புப் பகுதி தூண்டப்படவேண்டும்.

அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார் ராட். நாம் அன்றாடம் செய்யும் சின்னச்சின்ன விடயங்களை மாற்ருவதன் மூலம் மூளையின் செயற்பாட்டைத் தூண்டலாம் என்கிறார்கள். அதாவது வீட்டுக்குப் போகும்போது ஒரே பாதையில் போவதை தவிர்த்தல், வலது கை பழக்கக்காரர் என்றால் இடதுகையால் பல் துலக்குவது போன்றவை.

http://www.youtube.com/watch?v=cC5w6OcZNQQ

(தொடரும்.)

திருத்தப்பட்ட காரணம்: நீக்கப்பட்ட காணொளி இணைப்பு மாற்றப்பட்டு புதிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கேள்விகள்..

1) V = V + V

மேலே உள்ள சமன்பாடு தீக்குச்சிகளால் எழுதப்பட்டுள்ளது என நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு குச்சியை மட்டும் இடம் மாற்றுவதால் மேலே உள்ள சமன்பாட்டை உண்மையாக்க முடிகிறதா?  :rolleyes:

2) திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி, சனி, ஞாயிறு.

மேலே உள்ள நாட்கள் தவிர்ந்த மூன்று தொடர் நாட்களை உங்களால் கூற முடிகிறதா?  :wub:

v = v + v

+ அடையாளத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து v க்கு மேல் வைத்துவிட்டால் அது தலை கீழ் முக்கோணமாக வரும்!

அதாவது 

v = v - 0

 பிரதமை, துதியை, திருதியை   :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v = v + v

+ அடையாளத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து v க்கு மேல் வைத்துவிட்டால் அது தலை கீழ் முக்கோணமாக வரும்!

அதாவது 

v = v - 0

 பிரதமை, துதியை, திருதியை   :icon_idea:

முதல் கேள்விக்கு சற்று வித்தியாசமான சிந்தனைதான் வந்திருக்கு புங்கை.. ஆனாலும் தலைகீழ் முக்கோணம் சுழியம் இல்லையே.. :D மீண்டும் முயற்சியுங்கள்.

இரண்டாவது கேள்விக்கு.. நீங்கள் எழுதியவைக்கு என்ன அர்த்தம்?? :unsure:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கேள்விக்கு சற்று வித்தியாசமான சிந்தனைதான் வந்திருக்கு புங்கை.. ஆனாலும் தலைகீழ் முக்கோணம் சுழியம் இல்லையே.. :D மீண்டும் முயற்சியுங்கள்.

இரண்டாவது கேள்விக்கு.. நீங்கள் எழுதியவைக்கு என்ன அர்த்தம்?? :unsure:

v = v = v

இரண்டாவது கேள்வியில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாள் காட்டியில், அடுத்தடுத்து வரும் நாட்கள்! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v = v = v

இரண்டாவது கேள்வியில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாள் காட்டியில், அடுத்தடுத்து வரும் நாட்கள்! :icon_mrgreen:

புங்கை சொன்னவை சரியான பதில்களா இல்லையா என்பதை இரண்டாவது காணொளியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்..  :huh: 

வாழ்க வளமுடன்  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கேள்விகள்..

1) V = V + V

மேலே உள்ள சமன்பாடு தீக்குச்சிகளால் எழுதப்பட்டுள்ளது என நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு குச்சியை மட்டும் இடம் மாற்றுவதால் மேலே உள்ள சமன்பாட்டை உண்மையாக்க முடிகிறதா?  :rolleyes:

2) திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி, சனி, ஞாயிறு.

மேலே உள்ள நாட்கள் தவிர்ந்த மூன்று தொடர் நாட்களை உங்களால் கூற முடிகிறதா?  :wub:

முதலாவது கேள்விக்கு, புங்கை சொன்ன பதிலே வந்தது! (வீடியோ இரண்டும் இன்னும் பார்க்கவில்லை, இரவு பார்ப்பேன்). இரண்டாவது கேள்வி புரியவேயில்லை, பிறகெப்படி பதிலை யோசிப்பது? :D

Edited by Justin

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கேள்விக்கு, புங்கை சொன்ன பதிலே வந்தது! (வீடியோ இரண்டும் இன்னும் பார்க்கவில்லை, இரவு பார்ப்பேன்). இரண்டாவது கேள்வி புரியவேயில்லை, பிறகெப்படி பதிலை யோசிப்பது? :D

காணொளியைப் பார்த்துவிடுங்கள்.. பதிலை இங்கே பதிய வேண்டாம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் மூன்று:

இந்த மூன்றாவது பாகத்தில், மனதை (மூளையை) கட்டுப்படுத்துவதன்மூலம் தண்ணீருக்கடியில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியே வர பயிற்சிகளை மேற்கொள்கிறார் ராட். நீரில் உடனடியாக மூழ்குவதற்கு காரணமானவை பதற்றம், பயம் முதலியன என்பதை அறிவோம். அதனால் மனக்கட்டுப்பாட்டை வளர்ப்பதன் மூலம் நீரின் அடியில் சில நிமிடங்கள் தக்குப்பிடிக்கலாம்.

அடுத்ததாக நான் ஏற்கனவே குறிப்பிட்ட சிறு அம்பு எறிதல், தானியங்கி உலங்கு வானூர்தி மற்றும் கார்களை மனதால் கட்டுப்படுத்தி செயற்படுத்துவது என்பனவற்றைச் செய்து காட்டுகிறார்கள்.

http://www.youtube.com/watch?v=NwEmgTP6BUg

(முற்றும்.)

திருத்தப்பட்ட காரணம்: நீக்கப்பட்ட காணொளி இணைப்பு மாற்றப்பட்டு புதிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
நான் முதல் காணெளியில் கொஞ்சம் தான் பார்த்தேன்.இன்னும் முழுமையாக பார்க்கவில்லை.எனக்கு ஒரு சந்தேகம்[இந்த திரியில் எழுதவே பயமாயிருக்குது மூளை இல்லாவள் என்று சொல்லி விடுவார்கள் என்று தான் :lol: ]
 
நான் உண்மையில் அழகில்லாதவளாக இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்த்து நான் அழகாய் இருக்கிறேன் என சொன்னால் நான் அழகாகி விடுவேனா?...என்ட மனசை சமாதானப்படுத்த மூளையை சாதகமான நிலையில் வைத்திருக்க[தமிழில் சொன்னால் கற்பனைக்கு] உதவும்.ஆனால் உண்மை என்ன என்று என்னை சுத்தி இருப்பவருக்குத் தெரியும் தானே :)
 
அதே மாதிரி உடற்பயிற்சி செய்யாமல் கண்டதையும் சாப்பிட்டு கொண்டு நான் மெலிகிறன் என்று என்னைப் பார்த்து நானே கேட்டால் நான் மெலியப் போறனா என்ன? அதற்கு மூளையை விட உடற் பயிற்சி தானே முக்கியம் :D
 
கட்டிலில் படுத்துக் கொண்டு இனி மேல் நான் டொக்டராய் வர வேண்டும் என்று கனவு கண்டால் பலிக்கவா போகுது  <_<
 
இசையோ அல்லது வேறு யாரவதோ விளக்கத்தை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
 
முதற்கண் மூன்று காணொளிகளையும் காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :D

அடுத்ததாக, மூளைப்பயிற்சியின் மூலம் புறத்தோற்றம் மாறப்போவதில்லை.. வளரும் பருவத்தில் ஏதாவது நடக்கலாம். ஆனால் வளர்ந்துவிட்ட பிறகு சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் முக்கியமான ஒரு விடயத்தை சாதிக்கலாம்.. அதாவது சாதகமான எண்ணங்களை கற்பனையில் வளர்த்துக்கொள்ளும்போது, உங்களைச் சுற்றிய ஒரு சாதகமான எண்ண அலை தோன்றிவிடுகிறது (power of positive thinking). இது உங்கள் அருகில் உள்ளவர்களை நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்க வைக்கலாம். :wub:

உடற்பயிற்சி செய்யாமல் மெலிய முடியுமா? இதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம்.

இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு எனது உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு படுக்கைக்குப் போகும்போது மூட்டுவலி வருவது வழக்கம். மனதில் அந்த வலி குறைவதுபோல் தீர்க்கமாக யோசித்து பரீட்சித்துப் பார்த்தாராம். வலி குறைவது போல் இருந்ததாம். நானும் முயன்று பார்த்தேன். (எனக்கும் அடிக்கடி வரும்.) குணமடைவதுபோல் இருந்தது. :huh:

இதற்கான விளக்கம் சாதாரணமானது என நினைக்கிறேன். கழுத்தில் புதிதாக சங்கிலி போட்டால் ஓரிரு நாட்களுக்கு தடக்குப்படுவதுபோல் இருக்கும். பிறகு பழகிவிடும். உண்மையில் எமது நரம்புகள் சங்கிலி தடக்குப்படுவதை தொடர்ந்து மூளைக்கு அறிவித்துக்கொண்டே இருக்கும். ஆனால் மூளை அந்த சமிக்கையை புறந்தள்ள ஆரம்பிப்பதால் கழுத்தில் சங்கிலி போட்டிருப்பது எமக்கு மறந்திருக்கும். இதைப்போன்றதொன்றே கால் வலியை இல்லாமல் செய்வதும் என நினைக்கிறேன். :unsure:

நான் ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பி கண்ணாடியைப் பார்த்து "ரதி நீ ரொம்ப அழகியடி என்டு சொல்லலாம்". :lol: இப்படி சொல்வதால் நான் அழகியாகப் போறேனா என்ன் :D என்ன தெரிஞ்சாக்களிட்டப் போய் சொன்னால் அவை நினைப்பினம் எனக்கு விசர் என்று   :rolleyes:
 
பதிலுக்கு நன்றி இசை காணெளி பார்த்திட்டு மிச்ச சந்தேகத்தை பிறகு கேட்கிறேன்.    
  • கருத்துக்கள உறவுகள்

மூளைப் பயிற்சி உண்மையில்ல்.. நல்லது பயன்மிக்கது. யாழ் இந்துவில் படிக்கும் போது.. ஆசிரியர்கள் மூளைப் பயிற்சிக்கு வழி சொல்லித் தந்தார்கள். குறிப்பாக ஞாபக சக்தியை.. நினைவு படுத்தலை.. மனதில் பதிப்பதை ஊக்குவிக்க. அவை உயிரியலில்.. இரசாயனவியலில்..மருத்துவத்தில்.. நிறைய மனப்பாடம் செய்ய உதவியதோடு.. இன்று வரையும் படித்ததை மறக்காமல்.. இருக்கவும் செய்கிறது.

இன்னொன்றையும் சொல்லித் தந்தார்கள்.. எதனை மனப்பாடம் செய்யும் முன்.. ஒரு ஆராய்ந்தல் செய்யனுன்னு. ஏன்.. எதுக்கு.. எப்படி.. என்று. அப்படி விளக்கத்தோடு மனப்பாடம் செய்தால்..அல்லது சுயமாகவே... விளங்கிப் படித்தால்.. அது நீண்ட காலம்.. மூளையில் பதிந்திருப்பதை அனுபவ ரீதியில் கண்டிருக்கிறேன். நிறையக் கைகொடுத்தும் உள்ளது.

எங்கள் மூளையை நாங்கள் தான் வடிவமைக்கனும். இதில் எனக்கும் 100% உடன்பாடு உள்ளது.

ஊரில் ஆண்டு 8.. தமிழ் பாட நூலில்.. மனமே உடலை ஆட்சி செய்கிறது என்ற ஒரு பாடம் இருந்தது. அது பலருக்கு விளங்காத பாடமாக இருந்தது. ஆனாலும்.. கொஞ்சம் உளவியல் சார்ந்த நல்ல ஒரு பாடமாக.. மாணவர்கள் கற்பதை.. எப்படி நினைவாற்றலாக.. மாற்றி.. தம்மை ஆள வைக்க செய்ய முடியும் என்பதற்கான வழிகாட்டியாக இருந்தது.

அதில்.. ஒரு வயதானவர்.. வருத்தம் என்று.. வைத்தியரிடம் போவார். அவருக்கு உண்மையில் வருத்தம் எதுவுமில்லை. வயதாகிவிட்டதே என்ற பயமே வருத்தம். மருத்துவரும்.. அவர் மனதை திருப்திப்படுத்த சில மாத்திரைகளை கொடுத்து அனுப்புவார். அவர் மீண்டும் வைத்தியரிடம் வரும் போது.. இப்ப முன்னதை விட நல்லா இருக்கென்று சொல்வாராம். ஆனால் வைத்திய கொடுத்து அனுப்பியவை மாத்திரைகள் அல்ல. வெறும் இனிப்புகள்..! மாத்தரை போன்று தயாரிக்கப்பட்டவை.  ஆக.. எண்ணமே தான் அங்கு உடலை ஆட்சி செய்துள்ளது. அந்த வகையில் எமது மூளை புத்துணர்ச்சியோடு இருப்பின் உடலும் கூடிய.. ஆரோக்கியமாக இருக்கும்.

சரி இப்போ ஒரு சின்னப் பயிற்சி.. கீழே உள்ள எழுத்துருவை பாருங்கள்...

1185675_10151886937412944_1425537071_n.j

உங்களிடம் நல்ல சிந்தனை மட்டும் இருந்தால்... நல்லதாக ஒன்று தெரியும். கெட்டது இருந்தால் கெட்டதாக ஒன்று தெரியும்.

சரி.. எனி விடையைச் சொல்லுங்கள்.... :):lol:

Love

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூல் (Cool) என்று தெரியுது..

Love

எங்கை இருக்காங்கன்னே தெரியல.. :huh: திடுதிப்பின்னு வராங்கய்யா.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் நல்லவை.. கெட்டவை என்று.. பதில் கடைசில சொல்லுறம். முயற்சியுங்க உறவுகளே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 Good & Evil !

எனக்குக் கடைசி வரையும்  'Evil'  தெரியவேயில்லை! :o

நெடுக்கு இரண்டு வார்த்தை என்ற படியால், கட்டாயம் இரண்டு வார்த்தை இருக்குமென்று, தற்செயலாக வீட்டுக்கு வந்த மச்சானிடம் கேட்டேன்!

அவர் தான் சொன்னார், 'Evil" என்ற வார்த்தையும் உள்ளது என்று! :D

  • கருத்துக்கள உறவுகள்

Good,Evil

எதுக்கும் மச்சானிட்ட இருந்து கொஞ்சம் எட்டியே நில்லுங்கோ.. :lol: 

ஆனால் எனக்கு Good தெரியவேயில்லை.. :unsure: ஈவில் இப்ப தெரியுது.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனை இருந்தால்.. Good உம்

கெட்ட சிந்தனை இருந்தால்.. Evil உம் முதல் தெரியும்.

குறுக்கால போற சிந்தனை இருந்தால்.. Cool தெரியும்.. காதல் கண்றாவின்னு பின்னாடி பார்க்கிற.. சிந்தனை இருந்தால்.. Love தெரியும். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு Evil தான் முதலில் தெரிந்தது அப்ப நான் என்ன கெட்ட குணம் கொண்டவளா  :huh: அதன் பின்னர் ood தெரிந்தது Good ஆக இருக்கலாம் என நினைத்தேன் :lol:
 
நெடுக்கரை நான் மேலே எழுதிய சந்தேகத்திற்கு தகுந்த பதிலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
மூளையை ஒரு நிலைப்படுத்தி படித்த பலர் பரீட்சையில் பெயிலாவது ஏன்? அதைத் தவிர‌ தனிய மூளையை மட்டும் பயன்படுத்தி அதாவது உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் நான் மெலியோனும் என்டால் மெலிவேனா? அல்லது அழகாய் வர வேண்டும் என்டால் வருவேனா? ...பதிலைச் சொல்லவும் நெடுக்கர் :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளையில் 3 முக்கிய விடயங்கள் தாக்கம் செய்கின்றன.

ஒன்று தனிமனிதனின் பிறப்புரிமை.. இரண்டாவது.. மூளை இரசாயனம்.. 3வது சுற்றுச்சூழல்.

இதில் உடல் அழகு என்பது.. பிறப்புரிமை மற்றும்.. சூழல் சார்ந்தது. மூளை சார்ந்தது அல்ல. ஆனால் முகத்தசைகள் சார்ந்த.. முகப் பொலிவு.. மகிழ்ச்சி.. சோகம்.. போன்ற குணாம்சங்களின் வெளிப்பாட்டில் மூளை செல்வாக்குச் செய்கிறது. மூளைப் பயிற்சி கொண்டு.. முகத்தை.. மனதை அழகுபடுத்தலாம்.. அடக்கலாம்.. ஆழலாம். அதற்காக உருவத்தை மாற்றித்தா என்றால் அது முடியாது. காரணம்.. பிறப்புரிமையை மாற்றும் ஆற்றல் மூளைக்கு கிடையாது.

இதுக்கு இந்தளவு விளக்கமே போதும்.. இதற்கு மேல் விளக்கி அது விளங்க இன்னும் விளக்க.. நமக்கு சரிவராது. இதுதான் சோட் அண்ட் சுவீட். :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.