Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருபரன் உண்மையில் கடத்தப்பட்டாரா? (ஓர் அலசல்? அலைச்சல்?)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை யார் கடத்தினார்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு யார் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்ற உண்மையை குருபரன் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குருபரனை செவ்வாய்கிழமை கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த போது என்ன நடந்தது யார் யார் குருபரனை சந்தித்தார்கள் என்ற விபரங்களை நிதர்சனம் விரைவில் வெளியிடும்.

http://www.nitharsanam.com/2006/08/31/50617.php

  • Replies 84
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வெளிநாடுகளில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு நீங்கள் எதுவேணுமெண்டாலும் சொல்லலாம். அப்படிச்சொல்லியிருக்கலாம் இப்படிச்சொல்லியிருக்கலாம் என்று நீங்கள் எதை வேணுமெண்டாலும் அளக்கலாம். ஆனால் கொழும்பில் எதுவித பாதுகாப்பும் இல்லாமல் நடமாடுவதில் இவர் போன்றவர்களுக்கு உள்ள சிக்கல் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் குருபரன் போல் மரணத்தின் விளிம்புவரை சென்று வந்தவர்களுக்கு எதிர்கால பாதுகாப்பு குறித்த பயம் இன்னமும் இருக்கத்தான் செய்யும். இங்கே ஒன்று கவனிக்க வேண்டியது.

புளொட் அமைப்பினரின் இணையத்தளம் ஊடாக குருபரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். கடத்தியவர்கள் தனக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காமல் கண்ணியமாக நடந்து கொண்டதாகவும் குருபரன் தெரிவித்துள்ளார்.

குருபரன் அப்படி சொன்னாரோ இல்லையோ என்பது வேறுவிடயம். அனால், குறிப்பாக அந்த அமைப்பின் இணையத்தளத்தில்தான் இவ்வாறான ஒரு செய்தி வந்திருக்கிறது என்றால் அதிலிருந்து என்ன யூகிக்க முடிகிறது? சற்று யோசித்துப்பாருங்கள் உடனே புரியும்.

புலிகள் கடத்தியிருந்தால் இப்ப புலியெதிர்ப்பு தளங்கள் அமைப்புகள் கொழும்பை மய்யமாக வைத்து இயங்கும் சிங்கள ஊடகங்கள் எல்லாம் குருபரன் பண்பாக நடத்தப்பட்டார் பராமரிக்கப்பட்டார் என்று வருணை எழுதுவார்களா? புலிகள் பாம்பு விட்டது கரப்பான் பூச்சி விட்டது கீச்சு கீச்சு காட்டினது என்று எழுதுவது தானே உவர்களின் வழமை.

குடும்பத்தவர்கள் அழுதார்கள் குளறினார்கள் என்று கலர் கலரா படங்கள் போட்டு ஒரு பிடி பிடிச்சிருப்பினம். ஆள ஊடுருவும் படயணியினர் கொழும்பில் சுடுப்பட்ட பொழுதே அதை மனிதாபிமானமாக வருணிப்பார்கள் மனைவி இருக்கு பிள்ளைகள் இருக்கு என்று.

யாருக்கைய்யா படங்காட்டிறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னிலங்கையில் துணிவுடன் செயற்ப்படும் ஒரு துணிவுள்ள ஊடக வியலாளரை அவரது பணியிலிருந்து அகற்ற வைக்க நிதர்சனம் யாரிடம் பணம் வாங்கியதோ? கணனிப்பெட்டிக்கு முன்பிருந்து களவாய் செய்தியை பிரதி செய்வது போல நினைத்து விட்டீர்களோ? களநிலமைகளை துணிவுடன் நின்று சொல்ல கூடிய தென்னிலங்கை தனியார் தமிழ் ஊடகங்களுக்கு சூரியனின் செய்திகளுக்கென்று தனியிடமிருக்கின்றது.

இதற்க்கு காரணம் இணையத்தில் வரும் செய்திகள் அல்ல! அவர்களது செய்தியாளர்களது திறமை அந்த செய்தியாளர்களை நெறிப்படுத்துவது குருபரன். அவரது சேவையை தமிழினம் இழந்தால் சூரியனில் புலி எதிர்ப்பு வாதம் தலை தூக்க நீங்களோ வழி வகுத்தவராவீர்!

முகத்தை மறைத்துக்கொண்டு, எங்களை என்று நீங்கள் சொல்வது போல அல்ல தென்னிலங்கை நிலவரம், நேர நின்று பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். இதே தங்களில் பழைய வரலாறுகளை நாங்கள் தூக்கி பார்த்தால் ரமாராஜனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று நன்றாகவே தெரியும்! புலிப்பாட்டு பொட்டவர்களையும் எமக்கு தெரியும் புலி எதிர்பு செய்பவர்களையும் எமக்கு தெரியும்.

பறவைகள், உங்கள் நிலைப்பாட்டோடு உடன் படுகிறன். குருபரனுக்கு உண்மையில் பங்கு இருக்காவிட்டாலும் அவர் விடுவிக்கப்பட்ட பொழுது நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருப்பார். அதாவது தமது பிரச்சாரத்திற்கு முரணாக சாட்சியம் கூறக்கூடாது என்று. அவர் தனது உயிர் குடும்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அப்படி நடந்து கொள்ளலாம். எனவே நிதர்சனம் சிங்களத்தின் புலியெதிர்ப்புகாரர்களில் பரப்புரையை தோலுரித்து காட்டுவதற்கு குருபரனை இவ்வாறு நிர்ப்பந்தித்து விமர்சிப்பது சரியாக தெரியவில்லை.

சிங்களத்தரப்பு ஊடகங்களினதும் புலியெதிர்ப்பு குழுக்களின் தளங்களும் குருபரன் விடுதலையடைந்த பிறகு அதை விபரிக்க கையாழும் வசன நடைகளும் முன்னுரிமை கொடுத்து விபரிக்கும் விடையங்களும் குருபரனை யார் கடத்தியிருப்பார்கள் என்று தெளிவாக்கிறது. குருபரன் அவரது குடும்பம் இன்னமும் கொழும்பில் இருக்கிறார்கள் என்றதை உணர்ந்து அவரை விமர்சிப்போம்.

சர்வதேச கண்காணிப்பு குழு தலைவரே தனது பணிய முடித்து விட்டுட்டு போகும் போது தான் உண்மை சொல்ல முடியுற கள நிலமை அங்கு என்றதை கவனத்தில் கொள்ளுவம்.

ம்ம்ம்... சும்மா எண்டாலும் மறு பிறப்பு பிறந்து வந்திருக்கும் குருபரனுக்கு மூச்சு விட அகவாசம் கொடுக்க படவேண்டும்....!

கத்தரிக்காய் மலிஞ்சால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும்... வரட்டும் பொறுத்து இருப்பம்...!

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காய் மலிஞ்சால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும்... வரட்டும் பொறுத்து இருப்பம்...!

பொறுத்துப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரது சக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தவோ அல்லது அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கவோ ஒரு நாள் பிந்தியிருந்தால் கூட சிலவேளை அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டிருந்தால் இதே நிதர்சனம் அவரை ***** அழைப்பதிற்கு சிறிதும் பின்நிற்காது.

ஏதோ பரபரப்பான செய்தி போடவேண்டும் என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பொறுக்கி, தனது கற்பனை வளத்தையும் அதனுடன் சேர்த்து, அதற்கு வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலை, சீரகம் உப்பென்று எல்லாம் சேர்த்து தாளிப்பது நிதர்சனத்தால் இன்று நேற்றல்ல பலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

*****

அவரது சக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தவோ அல்லது அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கவோ ஒரு நாள் பிந்தியிருந்தால் கூட சிலவேளை அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டிருந்தால் இதே நிதர்சனம் அவரை ***** அழைப்பதிற்கு சிறிதும் பின்நிற்காது.

ஏதோ பரபரப்பான செய்தி போடவேண்டும் என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பொறுக்கி, தனது கற்பனை வளத்தையும் அதனுடன் சேர்த்து, அதற்கு வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலை, சீரகம் உப்பென்று எல்லாம் சேர்த்து தாளிப்பது நிதர்சனத்தால் இன்று நேற்றல்ல பலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

*****

நிதர்சனத்தை குற்றம் சொல்லி பயன் இல்லை....!

வளமையாக கடத்தல்களை இலங்கையில் செய்பவர்களின் பாணியில் இந்த கடத்தல் நாடகம் ஒண்று அரங்கேறியதோ எண்று எண்ணும் வண்ணம் விடுதலையும் இடம் பெற்றது....! கடத்தலாளிகளின் நோக்கம் என்ன எண்று தெரியும்வரை இப்படியான கோணங்களில் பார்வைகளை தவிர்க்க முடியாது....! அவரை சும்மா மிரட்டுவதுக்காகவும் எச்சரிக்கவும்தான் கடத்தல் இடம்பெற்றதாக இருந்தால் அது ஏற்கும் படியாக இல்லை... அவரை மிரட்டுவதுக்காக தங்களை இனம்காட்ட அறிவுள்ள எவரும் முன்வரமாட்டார்கள்.... அனேகமாக அவைரை கொல்வதுக்காக கடத்திவிட்டு பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காக விடுவித்து இரூக்கலாம்.... எல்லாமே ஊகம்தான்....! அவரை வேறு விதங்களில் மிரட்டுவதற்க்கு வளிகளா இல்லை...???

இண்றைய தேதியில் மிகப்பிரபலமானவர்கள் வரிசையில் குருபரனும் வந்து விட்டார்... இனி அவர் மீதான விமர்சனங்கள் வரத்தான் செய்யும்....!

எல்லாவற்றுக்கும் விடை சொல்ல வெண்டியவர் குருபரந்தான்... ஆனால் மிரட்ச்சியில் இருக்கும் அவரை இப்போது துருவுவது நண்றாக இருக்காது.....! பல விமர்சனங்களும் கிழம்பி அவரை மனதளவில் வாட்டப்போவதும் உண்மை....!

உங்களை உதாரணப்படுத்தி பலர் இங்கு பத்திரிகைகள் பற்றியும் அவர்களின் கேள்வி அடிப்படையான ஆராட்ச்சிகள் பற்றியும் விமர்சனங்களை எழுப்ப உள்ளதால் இத்துடன் முடிக்கின்றேன் வணக்கம்..!

சூரியன் எஃப்.எம் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டார்?(ஓர் அலசல்? அலைச்சல்?)

kumarkuruparan.jpg

கொழும்பில் ஒலிபரப்பாகும் பிரபல தனியார் வானொலியான சூரியன் எஃப்.எம்.மின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று (29 ஓகஸ்ட் 2006 செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.

என பர பரப்பான செய்திகள் பரவிய போது

அவரது விடுதலைக்காக வேண்டியவர்களில் நானும் ஒருவன் என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

சனிக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் குருபரன் தொகுத்து வழங்கும் "விழுதுகள்" நிகழ்ச்சியானது கொழும்பில் நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றியதாக இருப்பதாக பத்திரிகைகள் எழுதின..

தவிரவும் காணாமல் போனோரின் பெற்றோர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரது நேர்காணலை அவர் ஒலிபரப்பினார் என்றும் புகழாரம் சூட்டின..

இவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 29.08.2006 க்கு முதல் நாள் அதாவது 2006 ஆகஸ்ட் 28ம் நாள் தனது ஊடகவியளாளர்களான நண்பர்களிடம்

"நான் உண்மையில் கவனமாக இருக்கிறேன். கொழும்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இந்த நாட்கள் மிகவும் சவாலானவை. சிவராமைப் போல் நான் காணாமலோ அல்லது கடத்தியோ கொல்லப்பட்டுவிட்டால் குருபரன் சிறந்த ஆசிரியர் என்பீர்கள். அதைத் தவிர வேறு நடக்கப்போவதில்லை. எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை"

என்று நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு சக ஊடகவியலாளர்களிடம் குருபரன் கூறியுள்ளார்

என்று வேறு பத்திரிகைகளில் வந்தது.

nada.jpg

அடுத்த நாள் அதிகாலை கடத்தப்பட்டதான செய்தி பரவிய போது

குருபரன் காணாமற் போனது தொடர்பாக கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆகஸ்ட 29ம் திகதி பிற்பகல் 12.30க்கு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் அன்று பிற்பகல் 1.30 மணிவரை நடைபெற்றது.

சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் அமைப்பு, ஐக்கிய பத்திரிகையாளர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

கொழும்பு நகரின் பாதுகாப்பு பாரியளவில் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்தது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இவரை மீட்கும் நடவடிக்கையை உடன் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரினர்.

அதன் பின்னர் அடுத்த நாள் 30ம் திகதி புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

அவர் உயிரோடு திரும்பி வந்ததில் அவர் சார்பானவர்கள் போல் நானும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அதன் பின் அவருக்கு என்ன நடந்திருக்கும் என அறியும் அவா என் மனதில் குடி கொண்டதால்

அவரது கடத்தல் பற்றிய செய்திகளை தேடி வாசிக்கவும் கேட்கவும் தலைப்பட்டேன்.

? அவர் யார்?

? அவரது அரசியல் பின்னணி என்ன?

? அவர், அவரைக் கடத்தியவர்களை இனம் காட்ட வேண்டும் என்றும் நான் கேட்க விரும்பவில்லை.

அது அவரது உயிருக்கு உலையாக முடியக் கூடும்?

தமிழ் ஊடகவியளாளர்கள் மாத்திரமல்ல சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்!

என்னை விழி பிதுங்க வைத்தது குருபரன் பீபீசீ தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு அளித்த ஒன்றுக்கொன்று முரண்பாடான செவ்விகளே!

குருபரன் கல்வியறிவில்லாத ஒருவரல்ல.

அத்தோடு அவர் முக்கிய பிரமுகர்களை திக்கு முக்காட வைக்கும் பேட்டிகளை எடுத்து ஒலிபரப்பியவர்.

ஒரு திறன் படைத்த ஊடகவியலாளர்.

எனவேதான் இந்த நிலை எனக்கு ஏற்பட்டது?

அவரது தகுதிகளை மனதில் கொண்டு கீழே அவரது பேட்டியை சற்று அவதானியுங்கள்.

இதுதான் முழுமையான சந்தேசய சிங்கள நிகழ்ச்சியின் பேட்டி

பீபீசீ சந்தேசய சிங்கள சேவை

நேற்று கடத்திச் செல்லப்பட்ட சூரியன் எப்எம் ஒலிபரப்பின் நடராஜா குருபரன் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பேச்சு சுதந்திரமில்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம் இதுவென பிரான்சு தேசத்தை தலைமையாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடக அமைப்பு தெரிவித்திருக்கிறது.

நேற்றைய தினம் தேசிய மற்றும் சர்வதேச ஊகடகங்களும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களில் இறங்கின.

இன்று விடுதலையான குருபரனை சந்திக்க எல்மோ பர்ணாந்து ( பீபீசீ சந்தேசயவின் இலங்கையின் பிரதான செய்தியாளர்) சென்றார்.

கடத்தப்பட்ட தமக்கு, தம்மை கடத்தியவர்கள் எதுவித தீங்கையும் செய்யவில்லை என சூரியன் எவ்.எம்.வானொலியின் செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் சந்தேசயவிடம் கூறினார்.

இக்குழுவினர் யார் என்பதை தம்மால் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறும் இவர்,

தன்னை கடத்திய வேளை தொடக்கம் தம்மை விடுவிக்கும் வரை ,

தமது கண்களை துணியொன்றால் கட்டியே வைத்திருந்ததாக கூறுகிறார்.

சிங்கள மொழி பேசிய இவர்கள் கைத் துப்பாக்கியைக் காட்டி கடத்தியதாக இவர் மேலும் தெரிவிக்கிறார்.

தன்னை கடத்தியதற்கான காரணம் என்னவென்று தனக்கு புரியாமல் இருப்பதாக அவர் கூறுகிறார்.

குருபரன்: என் பிரச்சனை பயங்கரவாதிகள் பிரச்சனையா?

வேறு ஏதாவது பிரச்சனையா? எனக்குத் தெரியவில்லை.

அவர்கள் அதை கேட்கவுமில்லை.

அவர்களது பேச்சு மாலையில் மாறியது.

அவ்வளவுதான்.

என்னை அவர்கள் ஏன் கடத்தினார்கள்?

வெளியில் உருவான அழுத்தங்களால் என்னை விடுதலை செய்தார்களா?

என் பிரச்சனைகளை தெளிவுபடுத்திக் கொண்ட போது விடுவித்தார்களா?

டவுட் கிளியர் ஆன பின்னர் விடுதலை செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது.

எல்மோ (செய்தியாளர்): சூரியன் எப்எம் ஊடாக ஒலிபரப்பாகும் அரசியல் சார்பான நிகழ்ச்சி காரணமாக

அவரது கடத்தல் நடந்திருக்குமா என அவரிடம் சந்தேசயவுக்காக வினவினேன்?

குருபரன்: எனது நிகழ்சியாலான பாதிப்பா?

அல்லது நான் ஒரு பக்க சார்பானவராக போகிறேனா என..........நான் நினைக்கிறேன்?

தவறான தகவல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த தவறான தகவல்கள் (கிளியர்) குறித்து தெளிவு ஆன பின்னர் என்னை விடுவித்தார்கள்!?

எல்மோ (செய்தியாளர்): தம்மை கடத்தியவர்களை தன்னால் அடையாளம் காண முடியாமலிருப்பதாக அவர் கூறுகிறார்.

குருபரன்: அவர்கள் (சிவிலில்) சாதாரண உடை தரித்து இருந்தார்கள். அதை நான் கண்டேன்.

அதை என்னால் 1-2 நிமிடங்கள்தான் பார்க்க நேரம் கிடைத்தது.

அதன் பின்னர் என் தலையை கவிழ்த்து (மடக்கி) வாகனத்துக்குள் போட்டார்கள்.

அதன் பின் என் கண்களை துணியால் கட்டினார்கள்.

எல்மோ (செய்தியாளர்): தன்னை கடத்தி வைத்திருந்த இடத்தைப் பற்றி எதையும் ஊகிக்க முடியாமலிருந்ததாக கூறும் நடராஜா குருபரன்

நேற்று மாலையில் கடத்தியோர் மென்மையானதொரு நடை முறையை தன் மேல் காட்டியதாக கூறுகிறார்.

குருபரன்: 2 மணி வரை ரிலாக்ஸாக இருந்தார்கள்.

அது வரை வந்து வந்து பேசிவிட்டு போனார்கள்.

2 மணிக்கு வந்து இப்போது நீங்கள் போகலாம் என்று சொன்னார்கள்.

அப்போது பயமாக இருந்தது.

எடுத்த என் பொருட்களை கொடுத்தார்கள்.

வாகனத்தில் நடத்திய விதத்தை வைத்து

என்னை விடுவிப்பார்கள் என்று நினைத்தேன்.

கொகுவல அருகே வந்து முதலிகே மாவத்தையில் இறக்கி விட்டார்கள்.

அங்கே கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து

ஒரு பிளாஸ்டர் ஒட்டி என் பக்கத்தில் நிற்கும் ஒருவர் 2-3 நிமிடங்களுக்குள் அதை பிரிப்பார்

அல்லது நீங்களாகவே ஒட்டிய பிளாஸ்டரை பிரிக்கலாம் என்று சொல்லி விட்டு

குறுக்குத் தெருவிலிருந்து பிரதான பாதைக்கு சென்று போய் விட்டார்கள்.

எல்மோ (செய்தியாளர்): ஆட்டோ ஒன்றில் செல்வதற்கு தனக்கு 200 ரூபாய்கள் தந்ததாகவும் நடராஜா குருபரன் மேலும் கூறினார்.

- இப்படி முடிகிறது அந்த நேர்முகம்.

_________________________________________________________________________

பீபீசி தமிழ் ஓசையின் இவரது செவ்வியில்

குருபரன்: என்னை அழைத்துச் சென்றவர்களில் உயர் நிலையில் இருந்தவர்களில்

என்னை அடுத்த கட்ட தரப்பினரிடம் ஒப்படைத்து விட்டு

வெளியேறிச் சென்று மாலை வேளையிலே வந்தார்கள். என்கிறார்.

-----------------------------------------------------------------------------------

இங்கே இருப்போர் (நீங்கள்) திறமையானவர்கள்

எனவே

இங்கே தெரியும் முரண்பாடுகளையும்

பலவீனமான குறைபாடுகளையும்

உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

பின்னர் என்னுள் உண்டான சந்தேகங்களை முன் வைக்கிறேன்.

நன்றி!

who is prepared to believe without verification is a fool.

- Dr Abraham T. Kovoor

(குறிப்பு: தவறுதலாக பிரதி பண்ணப் போய் என்னால் அழிந்து விட்டது. மன்னிக்கவும். இதை வேறு ஒரு தளத்திலும் எழுதியிருந்தேன்.

அது எனக்கு உதவியாகியது. புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன். நன்றி!)

இவன் எதையே மரக்கின்றான் சித்த எம்மத்துகாரன்

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் என்ன நக்கலா அவரோட நிலைமையில இருந்தால் நிங்கள் சொல்லுவிங்கள் ஆக்கும் யார் உங்கள கடத்தினது என்டு

நல்ல காலம் சிவராமைப் போட்டுத் தள்ளினதும் புலிகள் என்று ஒரு ஆய்வைச் செய்யாமல் விட்டியளே...!

கொழும்பில இருக்கப் பயந்து அகதியா ஓடி வந்திட்டு இருக்கினம். அவங்கள் எவ்வளவோ அழுத்தங்களுக்கு மத்தியில..அங்க செய்தியாளர்களா செயற்படுறாங்கள். ஒருவேளை நிதர்சனம் நடத்திறவைக்கும் குருபரனுக்கும் தனிப்பட்ட பிரச்சனையோ தெரியல்ல. இப்ப தனிப்பட்ட பிரச்சனைகள் தானே பொதுப்பிரச்சனைகளாக சித்தரிக்கப்பட்டு..இணையத்தின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கருத்தை முதலில் வைத்தது நிதர்சனம், அதற்க்கு மூலகாரணம் அவர் முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் என்பது. ஆனாலும் அந்நத அனுகுமுறையில் நாம் இவர்களை பார்க்க முடியாது, சிவராம் முதல் பல ஊடகவியலாளர்கள், மாற்று இயக்கத்திலிருந்து ஊடகத்துக்கு வந்தவர்கள், அவர்கள் கொண்ட கொள்ளைக்காய், ஊடகத்தில் குரல்கொடுப்பவர்கள், அவர்களால் மட்டுமே ஊடக துறைக்குள் நிலைத்திருக்க முடிகின்றது, ஐ.பி.சியின் பல செய்தியாளர்கள் கூடு மாற்று அமைப்புக்களிலிருந்து விலகியவர்கள், அவர்களுக்கு மட்டுமே உயிர் மீது பயமின்றி உண்மையை உண்மையாய் சொல்ல கூடிய தைரியமிருக்கின்றது. போர் கடுமையாக, நடைபெற்ற வேளையில் கூட அன்னை பூபதியை பற்றி அன்னையர் தினத்தில் பேசவும், தமிழர்களின் விடுதலைபற்றி, புத்தாண்டு வாழ்தில் பேசவும் விளைந்தது சூரியனின் செய்திப்பிரிவு. அதே போல பல செய்திகளை முதலில் வெளியிட்டதால் சிறிலங்கா படைப்புலனாய்வுப்பிரிவின் கண்ணுக்குள் வீழ்ந்ததும் இச் செய்திப்பிரிவே. சூரியனின் விழுதுகள், சூரியபார்வைகள் போன்றவை திறம்பட அவரால் தொகுத்து வழங்கப்பட்டவை. எல்லோருடைய கருத்துக்களையும் வானாலைக்கு எடுத்துச் செல்கின்ற துணிவு அவருக்கு இருந்தது. தவறை தவறு என்று சுட்டிக்காட்டும் மனதைரியமும் அவரிடமிருந்தது. அவருக்கு பின்னால் பலர் பக்க பலமாக இருந்தாலும், இவரே சகல நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பானவராக, அந் நிகழ்ச்சிகளில் பாதிக்கப்படுபவராக இருந்தார். தமிழ் மக்கள் மனதில் குறிப்பாக கொழும்பு வாழ் மலையக,கொழும்பு வாழ் தமிழ் மக்களை கவர்ந்திழுந்திருக்கிறது சூரியன். அவர்களது சகோதர நிறுவனமான ஹிரு எப்.எம், தமிழ் மக்களுக்கு அதரவான, மக்கள் விடுதலை முண்ணனியிலிருந்து பிரிந்து சென்றவர்களது. சூரியன் அவர்களோடு கைககோத்தே செயற்ப்பட்டு வருகின்றது.

எனவே, இவரது விடுதலையை வெறும் நாடகமாக பார்ப்பது முட்டாள் தனம், இக்கடத்தலின் பின்னணியில், சிங்கள இனவாதிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களது எண்ணங்கள் நிறைவேறாமைக்கு ஹிரு குழுவினர் கரணமாக இருக்கலாம் (உதரணமாக, கொழும்பில் நடைபெற்ற, ஒரு சமாதனத்திற்காக, இன நல்லினக்க நிகழ்வில், ஜே.வி.பி, சிஹால உறுமய போன்ற குண்டர்கள் அடிவாங்கி ஓடியமை) ஹிரு குழுவினர், ஒதுங்கியிருக்கின்றனரே அன்றி, அவர்களும் எதையும் கைவிடவில்லை. மக்கள் விடுதலை முண்ணனியின் கொள்கைகள் மாற்றத்தால், அவர்கள் பிரிந்தார்கள். அதாவது அவர்கள் இனவாத வேடம் பூண்டதால் அவர்கள் அவர்களிடமிருந்து பிரிந்தனர். எனவே, அவர்களால் கூட இவரின் விடுதலை சாத்தியப்பட்டிருக்கலாம்.

இதே தமிழ் ஒட்டுக்குழுக்கள் சம்பந்தப்பட்டிருப்பின், அது நேரடி இராணுவ கட்டளைகள் என்றாலும் அரசியல் தலைமையின் உத்தரவின் படியே நடைபெற்றிருக்கும், இருப்பினும், தற்போது சிறிலங்கா அரசுக்கு சர்வதேச ரீதியில் ஏற்ப்பட்டிருக்கும் ஒரு பாரிய நெருக்குவாரத்தில், நேற்று ஒரு ஊடக வியலாளர் கொல்லப்பட்டிருப்பின் அதன் விளைவுகள் கூட எதிர்பார்த்ததை விட மோசதாகி சிங்க அரசின் கழுத்தை இறுக்கியிருக்கலாம். அந்த காரணங்களுக்காக அவர் விடுதலை செய்யப்ட்டிருக்கலாம். அதுவும் இல்லை, வேறு ஆட்கள் கடத்தியிருந்தால், நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவித்திருக்கலாம்.

எது எப்படியோ, விடுவித்தவர்களது பிரதான, நிபந்தனை தம்மை இனம்காட்ட வேண்டாம் என்பதாகவே இருக்கும். அப்படி இனம் காட்டப்படும் பட்சத்தில் அவர் குடும்பத்துக்கோ, அவருக்கோ ஆபத்து வர வாய்ப்புள்ளது.

அஜீவன் அவர்கள் சொன்னது போல, அவர்கள் இரண்டு ஊடகங்களில் குழுப்பியமைக்கும் அதே காரணமாக இருக்கலாம். ஒரு திறமையான ஊடகவியலாளர் என்ற வகையில் தன் மீது எழும் கேள்விகளை சமாளிக்க இப்படியோரு குழுப்பத்தை அவர் ஏற்ப்படுத்தியிருக்கலாம். அதற்கான காரணம், கடத்தியவர்கள் யார் என்பதை விட, இவர் திட்டமா? என்ற கேள்வி நிதர்சனத்தை போன்ற அதிபுத்தி படைத்தவர்களால் எழப்பப்படும் போது கடத்தியவர்கள் தொடர்பான கேள்வி மறைந்து விடும். இந்த குற்றச்சாட்டை விட உயிர் பெரிதல்லவா?

நான் மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன், கள நிலமை அறியாத அறிவிலிகளே! அகன்று விடுங்கள் ஊடக வியலாளர் என்ற போர்வைக்குள்ளிருந்து! கணினிப்பெட்டிக்குள்ளிருந்த

அஜீவன் அண்ணாவின் சந்தேசிய பேட்டியை தமிழில் தந்ததுக்கு நண்றிகள்...!

அதில் முக்கிய முரன்பாடாக தெரிவது நல்ல முறையில் நடத்தியது அல்ல.... அவர்களில் உயர் நிலையில் இருந்தவர்கள் அடுத்த நிலையில் இருந்தவர்கள் எண்று பிரித்து பார்க்கும் அவகாசமும் மனத்தெளிவும் குருபரனிடம் இருந்திருக்கிறது....! அப்படியானால் அவர்கள் எந்த தரமான அதிகாரிகள் வேலை செய்யும் பாணியை வைத்து அவர்கள் பாதாளக்குழுக்கள் இல்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கலாம்...! அது அவருக்கு தெரிந்தே உள்ளது...!

உண்மையில் கடத்தியவர்கள் யார் என்பதை குருபரன் நன்கு அறிந்து உள்ளார்... அதனால்த்தான் வெளியில் போனவர்கள் திரும்பி வந்து மீண்டும் இணைந்ததையும்.... அது காலை மாலை என்பது எல்லாம் தெளிவாக கூறும் அளவுக்கு இருக்கின்றது...!

இதோடு கண்களை கட்டி இருந்தாலும் பேசியவர்களின் பேச்சு முறைகளை வைத்து அவரால் கண்டு பிடிக்க முடிந்து இருந்தது எண்று அவர் சொல்ல முடியும்.... அப்படியானால் கடத்தியவர்கள் குருபரனுக்கு முன்னால் இருந்து அளவளாவி இருப்பார்கள்.... உயர்தர அதிகாரி கட்டாயம் கீழே வேலை செய்பவரை பெயர் சொல்லி அழைத்துதான் இருப்பார்( அல்லது பதவி நிலையை) அப்படியானால் அவர்கள் எந்த நிலை அதிகாரிகள்.... சிங்களத்தில் பேசியவர்கள் உண்மை சிங்களவரா...??? அல்லது தமிழரா எண்றெல்லாம் சொல்லி இருக்க முடியும்....! அதோடு சிங்களம் பேசியவர்களின் பேச்சு வளக்கை வைத்தும் சொல்லி இருக்கலாம் தான்...! யாரெவர் என்பதை சொல்ல முடிய வில்லை என்பது உண்மையில் உண்மையாக இருக்காது...!

குருபரன் தன் கண்களை கட்டினார்கள் என்பதோடு காதையும் கட்டி (அடைத்து) இருந்தார்கள் எண்று சொல்லி இருந்தால் நண்றாக இருந்திருக்கும்....!

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளனின் மனநிலை எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்ற சிந்தனை எள்ளளவுமின்றி அவரைத் தரக்குறைவாக விமர்சிப்பது வேதனையான விடயம். கடத்தப்படும் வரை அவர் வானொலியில் அவராற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டியவர்கள் அவரிடமிருந்து பரபரப்பான தகவல்கள் கிடைத்து அதை வைத்தே தமது தளங்களில் பரபரப்பாகச் செய்திகள் போடலாம் என காத்திருந்த சிலருக்கு ஏமாற்றம் கிடைத்ததால் அவரையும் அவரது குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சித்தார்கள். இப்படியான செயல்களால் அந்த ஊடகவியலாளனின் எதிர்காலச் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படச் செய்து விடப் போகின்றார்கள்.

கொழும்பில் ஒலிபரப்பாகும் பிரபல தனியார் வானொலியான சூரியன் எஃப்.எம்.மின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று (29 ஓகஸ்ட் 2006 செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.

kumarkuruparan.jpg

என பர பரப்பான செய்திகள்!!!!!!!!!!

இவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 29.08.2006 க்கு முதல் நாள் அதாவது 2006 ஆகஸ்ட் 28ம் நாள் தனது ஊடகவியளாளர்களான நண்பர்களிடம்

"நான் உண்மையில் கவனமாக இருக்கிறேன். கொழும்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இந்த நாட்கள் மிகவும் சவாலானவை. சிவராமைப் போல் நான் காணாமலோ அல்லது கடத்தியோ கொல்லப்பட்டுவிட்டால் குருபரன் சிறந்த ஆசிரியர் என்பீர்கள். அதைத் தவிர வேறு நடக்கப்போவதில்லை. எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை"

என்று திங்கட்கிழமை நள்ளிரவு சக ஊடகவியலாளர்களிடம் குருபரன் கூறியுள்ளார்

என்று பத்திரிகைகளில் வந்த முதல் கருத்துதான் என்னை ஆரம்பத்தில் சற்று சிந்திக்க வைத்தது.

:!: இவர் ஏன் இதை அன்று சொன்னார்?

:!: கடத்தப்படப் போகிறார் என்று இவருக்கு ஏற்கனவே தெரியுமா?

இவை மனதில் உதித்த முதல் கேள்விகள்?

யார் எங்கு இருந்தாலும்

எவர் எதைச் சொன்னாலும்

கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டும் என்ற

கருத்து நமக்குள் இருக்குமானால்

இலங்கை அரசு சொல்லும் அனைத்தையும் நாமும் கண்ணை மூடிக் கொண்டு நம்பியே ஆக வேண்டும்.

அவர்களது பொய்யான தகவல்களைக் கூட நாம் பொய் என்று சொல்லக் கூடாது.

காரணம் ஒரு அரசை நிர்வகிக்க எவ்வளவு சால்களுக்கு முகம் கொடுத்து பயங்கரவாதிகளைதான் அவர்கள் குண்டு போட்டு சாகடிக்கிறார்கள் என்பதையும் நாம் பேசாமல் முட்டாள் தனமாக ஏற்றே ஆக வேண்டும்?

தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான்.

குருபரன் செய்யும் சேவையை நினைத்து

அவர் சார்பாக பேசுவதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

இருந்தாலும் நம்மில் பலர் செய்த தவறுகளை

ஏற்று அவற்றை மறைத்து

அவர்களுக்கு சார்பாக ஆரம்பத்தில் பேசியவர்கள் அவர்களையே

பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்த

கதைகள் ஏராளம்.

எனவே நியாயத்துக்கு தலை வணங்கும் அதே சமயம்

பலருக்கு வழிகாட்ட வேண்டிவர்கள் நேர்மை தவறக் கூடாது

என்பதையே இங்கு சொல்ல விரும்புகிறேன்.

இவர்களைப் போன்றவர்களை நம்பியே

நாங்கள் பலதை மனம் திறந்து அவர்களோடு பேசுகிறோம்.

அவர்கள் வானோலி - தொலைக்காட்சி- பத்திரிகை அல்லது எழுத்துக்களில்

எழுதுபவற்றை நம்புகிறோம்.

இவர்களையே நம்பியிருக்கும் போது

இவர்களே சிறுபிள்ளைத் தனமாக நடந்தால்

நாம் யாரை நம்புவது?

இதுவே எனது மனதில் எழும் கேள்வி?

உங்களுக்கு நடந்த ஒரு நிகழ்வை மனம் திறந்து பேச தயங்கும் நீங்கள்

மற்றவர்களை துருவித் துருவி கேள்விகள் கேட்டு

உங்கள் வானோலியில் ஒலிபரப்பும் போது அவர்களுக்கும்

அதே போன்ற ஆபத்து வரும் என்று உணர முடியவில்லையா?

உங்களுக்காக பலர் கோட்டை முன் கோசம் போட்டார்கள்!

நீங்கள் வானோலியில் கேள்வி கேட்டு

விபரம் புரியாது உளறி பாதிப்படைந்த

அப்பாவிகளுக்காக

யாரும் கோசம் போட மாட்டார்கள்?

காரணம்

அவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண அப்பாவிகள்!

இனி விடயத்துக்கு வருவோம்.

nada.jpg

29.08.2006 அதிகாலை குருபரன் கடத்தப்பட்டதான செய்தி பரவிய போது கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்............உலகை ஒரு முறை கலக்கியது.

அதன் பின்னர் அடுத்த நாள் 30ம் திகதி புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார்.

என்னை விழி பிதுங்க வைத்தது குருபரன் பீபீசீ தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு அளித்த ஒன்றுக்கொன்று முரண்பாடான செவ்விகளே!

குருபரன் கல்வியறிவில்லாத ஒருவரல்ல.

அத்தோடு அவர் முக்கிய பிரமுகர்களை திக்கு முக்காட வைக்கும் பேட்டிகளை எடுத்து ஒலிபரப்பியவர்.

ஒரு திறன் படைத்த ஊடகவியலாளர்.

எனவேதான் இந்த நிலை எனக்கு ஏற்பட்டது?

அவரது தகுதிகளை மனதில் கொண்டு கீழே அவரது பேட்டியையும் கோடிட்டுள்ள பகுதிகளையும் சற்று கவனமாக அவதானியுங்கள்.

இதுதான் முழுமையான சந்தேசய சிங்கள நிகழ்ச்சியின் பேட்டி

பீபீசீ சந்தேசய சிங்கள சேவை

நேற்று கடத்திச் செல்லப்பட்ட சூரியன் எப்எம் ஒலிபரப்பின் நடராஜா குருபரன் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பேச்சு சுதந்திரமில்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம் இதுவென பிரான்சு தேசத்தை தலைமையாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடக அமைப்பு தெரிவித்திருக்கிறது.

நேற்றைய தினம் தேசிய மற்றும் சர்வதேச ஊகடகங்களும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களில் இறங்கின.

இன்று விடுதலையான குருபரனை சந்திக்க எல்மோ பர்ணாந்து ( பீபீசீ சந்தேசயவின் இலங்கையின் பிரதான செய்தியாளர்) சென்றார்.

கடத்தப்பட்ட தமக்கு, தம்மை கடத்தியவர்கள் எதுவித தீங்கையும் செய்யவில்லை என சூரியன் எவ்.எம்.வானொலியின் செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் சந்தேசயவிடம் கூறினார்.

இக்குழுவினர் யார் என்பதை தம்மால் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறும் இவர்

தன்னை கடத்திய வேளை தொடக்கம் தம்மை விடுவிக்கும் வரை தமது கண்களை துணியொன்றால் கட்டியே வைத்திருந்ததாக கூறுகிறார்.

சிங்கள மொழி பேசிய இவர்கள் கைத் துப்பாக்கியைக் காட்டி கடத்தியதாக இவர் மேலும் தெரிவிக்கிறார்.

தன்னை கடத்தியதற்கான காரணம் என்னவென்று தனக்கு புரியாமல் இருப்பதாக அவர் கூறுகிறார்.

குருபரன்: என் பிரச்சனை பயங்கரவாதிகள் பிரச்சனையா?

வேறு ஏதாவது பிரச்சனையா? எனக்குத் தெரியவில்லை.

அவர்கள் அதை கேட்கவுமில்லை.

அவர்களது பேச்சு மாலையில் மாறியது.

அவ்வளவுதான்.

என்னை அவர்கள் ஏன் கடத்தினார்கள்?

வெளியில் உருவான அழுத்தங்களால் என்னை விடுதலை செய்தார்களா?

என் பிரச்சனைகளை தெளிவுபடுத்திக் கொண்ட போது விடுவித்தார்களா?

டவுட் கிளியர் ஆன பின்னர் விடுதலை செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது.

எல்மோ:Dசெய்தியாளர்) சூரியன் எப்எம் ஊடாக ஒலிபரப்பாகும் அரசியல் சார்பான நிகழ்ச்சி காரணமாக அவரது கடத்தல் நடந்திருக்குமா என அவரிடம் சந்தேசயவுக்காக வினவினேன்?

குருபரன்: எனது நிகழ்சியாலான பாதிப்பா?

அல்லது நான் ஒரு பக்க சார்பானவராக போகிறேனா என..........நான் நினைக்கிறேன்?

தவறான தகவல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த தவறான தகவல்கள் (கிளியர்)குறித்து தெளிவு ஆன பின்னர் என்னை விடுவித்தார்கள்!?

எல்மோ:Dசெய்தியாளர்) தம்மை கடத்தியவர்களை தன்னால் அடையாளம் காண முடியாமலிருப்பதாக அவர் கூறுகிறார்.

குருபரன்: அவர்கள் (சிவிலில்) சாதாரண உடை தரித்து இருந்தார்கள். அதை நான் கண்டேன்.

அதை என்னால் 1-2 நிமிடங்கள்தான் பார்க்க நேரம் கிடைத்தது.

அதன் பின்னர் என் தலையை கவிழ்த்து (மடக்கி) வாகனத்துக்குள் போட்டார்கள்.

அதன் பின் என் கண்களை துணியால் கட்டினார்கள்.

எல்மோ:Dசெய்தியாளர்) தன்னை கடத்தி வைத்திருந்த இடத்தைப் பற்றி எதையும் ஊகிக்க முடியாமலிருந்ததாக கூறும் நடராஜா குருபரன்

நேற்று மாலையில் கடத்தியோர் மென்மையானதொரு நடை முறையை தன் மேல் காட்டியதாக கூறுகிறார்.

குருபரன்: 2 மணி வரை ரிலாக்ஸாக இருந்தார்கள்.

அது வரை வந்து வந்து பேசிவிட்டு போனார்கள்.

2 மணிக்கு வந்து இப்போது நீங்கள் போகலாம் என்று சொன்னார்கள்.

அப்போது பயமாக இருந்தது.

எடுத்த என் பொருட்களை கொடுத்தார்கள்.

வாகனத்தில் நடத்திய விதத்தை வைத்து

என்னை விடுவிப்பார்கள் என்று நினைத்தேன்.

கொகுவல அருகே வந்து முதலிகே மாவத்தையில் இறக்கி விட்டார்கள்.

அங்கே கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து

ஒரு பிளாஸ்டர் ஒட்டி என் பக்கத்தில் நிற்கும் ஒருவர் 2-3 நிமிடங்களுக்குள் அதை பிரிப்பார் அல்லது நீங்களாகவே ஒட்டிய பிளாஸ்டரை பிரிக்கலாம் என்று சொல்லி விட்டு

குறுக்குத் தெருவிலிருந்து பிரதான பாதைக்கு சென்று போய் விட்டார்கள்.

எல்மோ: ஆட்டோ ஒன்றில் செல்வதற்கு தனக்கு 200 ரூபாய்கள் தந்ததாகவும் நடராஜா குருபரன் மேலும் கூறினார்.

- இப்படி முடிகிறது அந்த நேர்முகம்.

_________________________________________________________________________

பீபீசி தமிழ் ஓசையின் இவரது செவ்வியில்

குருபரன்: என்னை அழைத்துச் சென்றவர்களில் உயர் நிலையில் இருந்தவர்களில்

என்னை அடுத்த கட்ட தரப்பினரிடம் ஒப்படைத்து விட்டு

வெளியேறிச் சென்று மாலை வேளையிலே வந்தார்கள்.

Investigation.jpg

இதோ சந்தேகங்கள் உருவாகும் அவரது வார்த்தைகள்

இக்குழுவினரை யார் என்று தம்மால் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறும் இவர்

தன்னை கடத்திய வேளை தொடக்கம் தம்மை விடுவிக்கும் வரை தமது கண்களை துணியொன்றால் கட்டியே வைத்திருந்ததாக கூறுகிறார்.

குருபரன்: அவர்கள் (சிவிலில்) சாதாரண உடை தரித்து இருந்தார்கள். அதை நான் கண்டேன்.

அதை என்னால் 1-2 நிமிடங்கள்தான் பார்க்க நேரம் கிடைத்தது.

அதன் பின்னர் என் தலையை கவிழ்த்து (மடக்கி) வாகனத்துக்குள் போட்டார்கள்.

அதன் பின் என் கண்களை துணியால் கட்டினார்கள்.

தம்மை கடத்தும் போது தம்மால் 1 அல்லது 2 நிமிடங்கள் மட்டுமே கடத்தியவர்களை பார்க்க முடிந்தது.

அதன் பின்னர் அதாவது அவரை விடுவிக்கும் வரை

அவரது கண்கள் கட்டப்பட்டே இருந்தது என்கிறார்.

அதை அவரது வார்த்தைகளால் பேட்டியில் சொல்கிறார்.

அப்படியான ஒருவர் அதாவது அவரால் எதையும் பார்க்க முடியாது.

அது இரவா பகலா என்பதைக் கூட நிர்ணியிக்க முடியாமல்தான் இருக்க வேண்டும்.

அப்படிப் பட்டவர் நேரம் 2 மணி என்பதை எப்படித் தெரிந்து கொண்டார்?

அது போலவே கடத்தல்காரர்களின்

தகுதிகளை உயர் நிலையில் இருந்தவர்கள் என்பதை

அவர் எப்படிக் கணித்தார்?

கண் கட்டப்பட்டிருப்பவர் கொகுவல அருகே வந்து முதலிகே மாவத்தையில் விட்டதாக எப்படி அறிந்தார்.

அவர் டேவிட் கொபர்பீல்ட் போல் சாகசம் செய்யலாமே?

உலக சாதனை படைக்க முடியுமே :P

அவரை விடுவிக்கும் வரை அவரது துணி கண்களில் கட்டப்பட்டே இருந்திருப்பதாக அவரே சொல்கிறார்.

அதன் பின் கூட பிளாஸ்டர் ஒன்று ஒட்டியதாக

அதாவது தானாக களட்டிக் கொள்ளக் கூடிய விதத்தில்

ஒட்டி விட்டதற்கான கதையொன்று சொல்கிறார்.

அதை விட அவரை விட்டுச் சென்ற வாகனம் அந்த குறுக்குப் பாதையிலிருந்து

பிரதான பாதைக்கு போனதாக வேறு சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் தளம் நடத்துபவர்கள் சொகுசாக இருந்து கொண்டு பிற இணையத்தள செய்திகளை கொப்பியடித்து போட்டுக் கொண்டு தனித்துவமாக தாமும் ஏதும் போட வேண்டும் என்பதற்காக சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையினை கிளறிக்கொண்டு இருக்கின்றது.

உண்மையில் குருபரன் தொடர்பில் நிதர்சனத்தின் ஆய்வுக்கட்டுரை பாரதூரமானதும் கண்டிக்கத்தக்கதுமான செயல் ஆகும்.

இன்று கொழும்பில் கருணா குழுவினால் பெருமளவிலான தமிழ் வர்த்தகர்கள் பணப்பறிப்புக்காக கடத்தப்பட்டுள்ளனர். இதில் பலர் பணம் கொடுத்தும் விடுவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் நிதர்சனம் தளம் தனது புலனாய்வு (!?) செய்திகளை அல்லது கட்டுரையை வெளியிட்டதா?

குருபரன் ஒவ்வொரு ஊடகத்துக்கு கொடுத்த செவ்வியானது முரண்பாடாக இருக்கலாம். அது ஒவ்வொரு ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் கேட்கும் கேள்விகளைப் பொறுத்து பதில் வித்தியாசப்படலாம்.

உண்மையில் குருபரன் விடுவிக்கப்பட்டதும் சூரியன் வானொலி நிலையத்தார் அவரை வைத்து ஊடக மாநாடு நடத்தியிருந்தால் இத்தகைய குழப்பங்கள் வந்திருக்காது.

நிதர்சனம் தளத்துக்கு இவர் விடயத்தில் மட்டுமல்ல பல விடயத்தில் சந்தேகங்கள் வந்துதான் இருக்கின்றன. அது நியாயமான சந்தேகமா என்பதுதான் இங்கே கேள்வி.

குருபரன் தன்னைக்கடத்தியவர்கள் யார், தனக்கு என்ன நேர்ந்தது என்று வெளிப்படையாகக் கூறினால் நாளை அவர் வீதியில் இறங்கினால் அவருக்கு சூடு விழாது என்று குருபரனை குற்றம் கூறுபவர்கள் உறுதிப்படுத்துவார்களா?

அவருக்கும் மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசை இராதா? அவரும் மனிதர்தானே? எதற்காக அவர் பற்றி நாம் இல்லாத, பொல்லாதவற்றை விவாதிப்பான்?

இங்கே விவாதித்துக் கொண்டிருக்கும் அன்பு நண்பர்களே!

சிறிது நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அங்கே உள்ள ஊடகவியலாளர்கள் முள்ளின் மேல் நடக்கின்றார்கள். நாம் சொகுசு கதிரையில் இருந்து கொண்டு அங்கே உள்ள ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உரையாடுவது, உண்மையாக களத்திலிருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களை பாதிக்கச் செய்யும்.

எத்தனையோ ஊடகவியலாளர்கள் பலத்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

பிற தளங்கள் பணம் கொடுத்து பெறும் செய்திகளை சுகமாக கொப்பியடித்துப் போடும் நிதர்சனத்தின் ஆய்வை இதில் போட்டு நாமே எமது நேரத்தை வீணடித்திருக்கின்றோம் என்பதுதான் இங்கே உண்மை.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளனின் மனநிலை எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்ற சிந்தனை எள்ளளவுமின்றி அவரைத் தரக்குறைவாக விமர்சிப்பது வேதனையான விடயம். கடத்தப்படும் வரை அவர் வானொலியில் அவராற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டியவர்கள் அவரிடமிருந்து பரபரப்பான தகவல்கள் கிடைத்து அதை வைத்தே தமது தளங்களில் பரபரப்பாகச் செய்திகள் போடலாம் என காத்திருந்த சிலருக்கு ஏமாற்றம் கிடைத்ததால் அவரையும் அவரது குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சித்தார்கள். இப்படியான செயல்களால் அந்த ஊடகவியலாளனின் எதிர்காலச் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படச் செய்து விடப் போகின்றார்கள்.

சரியாச் சொன்னீங்கள் வசம்பு. அண்மையில் பலஸ்தீனப்பகுதியில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட அமெரிக்க பொக்ஸ் செய்திநிறுவனச் செய்தியாளர்களை பேட்டி கண்ட போது கூட அவர்கள்..கடத்தியவர்கள் பற்றி எதுவும் கூறாமல்..பலஸ்தீனப் பகுதிக்கு அமெரிக்க ஊடகவியலாளர்கள் எந்த வித அச்சமும் இன்றி சென்று பணியாற்றலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். பேட்டியாளர்கள் குடைந்து குடைந்து கடத்தியவர்கள் பற்றியும் கடத்திய நோக்கம் பற்றியும் கேட்க கேட்க..இவர்கள் இருவரும் அவற்றிற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்டனர்.

சிறீலங்கா போன்ற ஒரு நாட்டில் களத்தில் நிற்கும் ஒரு ஊடகவியலாளனின் பணி என்பது மிகவும் சிரமமானது. கட்டுநாயகா தாக்குதலின் போது தாக்குதல் ஓயமுன்னரே தலத்துக்குச் சென்ற ஊடவியலாளர்களில் குருபரனும் ஒருவர். விமானப்படையினரின் பலத்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தாக்குதல் குறித்த செய்திகளை சூரியன் மூலம் மக்களுக்குத் தந்து கொண்டிருந்தவர்.

நிதர்சனம் போல..கண்ணால் காணாத உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஆதாரமின்றி..மறைந்திருந்து லண்டனில் பதுங்கி இருந்து கொண்டு தரவில்லை..அவர்..! செய்தியாளனுக்குரிய துணிவுடன் இயங்கும் அர்ப்பணிப்புள்ள செய்தியாளனாகவே குருபரன் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்துள்ளார்..! அதைத்தான் மக்கள் நோக்குவார்கள். அவரின் பின்னணி பற்றி அல்ல..! அவர் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த ஒரு செய்தியாளன்..அதுவும் சிங்கள மண்ணிலிருந்து கொண்டு..! :idea:

யாருக்கும் சார்பாக அல்லது எதிராக பேச வரவில்லை.

பொய்யான செய்திகள் அனைத்து செய்தித் தளங்களிலும் வருகிறது.

அல்லது எடிட் செய்து போடப்படுகிறது.

அது பற்றி அதைச் செய்வோருக்குத் தெரியும்?

சொல்லுங்கள் என்று கேட்டால் நிச்சயம் சொல்ல முடியும்!

எல்லோரும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு

நான் சொல்வதைக் கேள் எதிர்த்துப் பேசாதே என்று சொல்ல

யாருக்கும் உரிமையில்லை.

சரியானதை தேர்வு செய்ய மக்களுக்குத் தெரியும்.

ஒருவன் அடுத்தவன் வீட்டுக் கோழியைத் திருடும் போது (இப்போது அவன் திருடனில்லை)

பாவம் அவன் பசியால் திருடுகிறான் என்று விட்டு விட்டு

என் வீட்டுக் கோழியைத் திருடும் போது (இப்போதான் அவன் திருடன்)

பழசையும் அவிழ்த்துவிட்டு பிராயச்சித்தம் செய்து பயனில்லை.

அந்த திருட்டை ஆரம்பத்திலேயே கண்டித்து

திருத்தி இருந்தால் என் வீட்டு கோழியும் திருட்டு போகாது.

அடுத்தவன் கோழியும் திருட்டு போகாது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நான் இங்கு இச்செய்தியை இணைத்தது, சில வருடங்களுக்கு முன் (யுத்த நிறுத்த ஆரம்ப காலம்) கொழும்பு சென்றிருந்த போது சூரியன் எப்.எம் இற்கும் என் நண்பருடன் சென்றிருந்தேன். என் நண்பர் அங்கு அப்போது பணிபுரிந்தார். அன்றே அவர் குருபரனைப் பற்றி சில தகவல்களை கூறினார். பின் ஒருநாள் லண்டனில் எனக்கு தெரிந்த முன்னால் *** உறுப்பினரும்( என்னுடன் இங்கு படித்தவர், பெயரை வெளியிட விரும்பவில்லை) சில ஆச்சரியப்படத்தக்க தகவல்களைக் கூறினார். இவர்கள் கூறியவற்றின்படி .......

* குருபரன் முன்னால் மட்டுமல்ல இன்னால் *** உறுப்பினரும்.

* குருபரந்தான் இன்றும் ஒட்டுக்குழு ***டின் இணையத்தளத்தை நடாத்துகிறார்.

* குருபரன் சில வருடங்களுக்கு முன்னம் லண்டன் வந்தால் லண்டனில் இயங்கும் தேசவிரோத வானொலியை நடாத்தும் கும்பல்களுடந்தான் தங்கி நிற்பவர் (இங்கு யாழ்களத்தில் சுவிஸிலிருந்து எழுதும் ஒரு நபருக்கும் இந்த உண்மை தெரியும்). தங்கி நிற்பவர் மட்டுமல்ல நெருங்கிய தொடர்பாம்.

* எல்லாவற்றிம் பார்க்க அண்மையில் நடந்த ஒரு முக்கிய *******ளரின் கொலைக்கு பின்னால் இவர்(** செய்யவல்ல) செய்த செயல்கள்!! ****களை காப்பாற்ற இவர் ஆற்றிய பங்கு பாரியதாம்!!!

...... கற்பனைகளுக்கு அப்பால் உண்மைகள் என்று ஒன்றுள்ளது. வெளிவந்தே தீரும்!!

***** - சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

* குருபரன் சில வருடங்களுக்கு முன்னம் லண்டன் வந்தால் லண்டனில் இயங்கும் தேசவிரோத வானொலியை நடாத்தும் கும்பல்களுடந்தான் தங்கி நிற்பவர் (இங்கு யாழ்களத்தில் சுவிஸிலிருந்து எழுதும் ஒரு நபருக்கும் இந்த உண்மை தெரியும்). தங்கி நிற்பவர் மட்டுமல்ல நெருங்கிய தொடர்பாம்.

b]

சத்தியமா அது நான் இல்லை!!! :lol::lol:

ம் இப்பிடித்தான் மந்தி ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் லண்டன் வந்து போனார். குருபரனும் வெகுவிரைவில் லண்டன் வருவார். ஆனால் இந்த முறை வந்தால் அனேகமாக ஐபீசியுடன் தான் ஒட்டுவார். சூரியனிலை வேலை செய்த ஒரு பையன் முதல் இங்கு வந்து அவரை பிரித்தானியா திருப்பி அனுப்பி விட்டது.

மற்றது குரு இஞ்சை நிக்கேக்கை நல்லா எல்லாம் விசாரிச்சிட்டு தான் போனவாரம். பள்ளிக்கூடங்கள், மற்றது வீட்டு வசதி ஆனேகமாக அவர் மிடில்ஸெக்ஸ் பகுதியிலை தான் தங்குவார். எல்லாம் மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வரும். மற்றப்படி அவரை கடத்தியதற்கு நான் மிகவும் வன்மையான எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

தப்பி வந்த குருவுக்கு எனது வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் யாராவது கடத்துங்கப்பா! நானும் பெரிய ஆள் ஆகனும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம் இப்பிடித்தான் மந்தி ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் லண்டன் வந்து போனார். குருபரனும் வெகுவிரைவில் லண்டன் வருவார். ஆனால் இந்த முறை வந்தால் அனேகமாக ஐபீசியுடன் தான் ஒட்டுவார். சூரியனிலை வேலை செய்த ஒரு பையன் முதல் இங்கு வந்து அவரை பிரித்தானியா திருப்பி அனுப்பி விட்டது.

மற்றது குரு இஞ்சை நிக்கேக்கை நல்லா எல்லாம் விசாரிச்சிட்டு தான் போனவாரம். பள்ளிக்கூடங்கள், மற்றது வீட்டு வசதி ஆனேகமாக அவர் மிடில்ஸெக்ஸ் பகுதியிலை தான் தங்குவார். எல்லாம் மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வரும். மற்றப்படி அவரை கடத்தியதற்கு நான் மிகவும் வன்மையான எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

தப்பி வந்த குருவுக்கு எனது வாழ்த்துகள்.

இப்படியோ சங்கதி அப்ப நானும் என்னுடைய கண்டணத்தை தெரிவிக்கிறேன் லண்டனுக்கு வந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக கருத்து கூறாமல் இருந்தால் சரி......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.