Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடு வாங்க -விற்க .

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்.

வீடு என்பது நாம் குடியிருப்பதற்கு மட்டும் அல்ல பலருக்கு தமது வாழ்நாளில் மிகப்பெரும் முதலீடும் அதுவே ஆகும் .அதைவிட உலகமெங்கும் பலர் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் தான் தமது வருமானத்தை முதலீடு செய்கின்றார்கள் .(திரிஷா தொட்டு ஜோர்ஜ் புஷ் வரை )

 

வீடு விற்பது வாங்குவது பற்றி பலருக்கும் பொதுவான  விடயங்கள் தெரிந்திருக்கும். சற்று விரிவாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் அவற்றை விரிவாக பார்ப்போம் .

 

இவற்றை  இரண்டு பிரிவாக பார்ப்போம் .

 

1. RESIDENTIAL -   வீடு (HOUSE), கொண்டோ (CONDO)

2.COMMERCIAL-   வியாபாரம் (BUSINESS ).

 

இவற்றையும் நீங்கள் -வாங்கலாம் அல்லது விற்கலாம் .(SALE)

                         அல்லது -வாடகைக்கு விடலாம் அல்லது எடுக்கலாம். (LEASE) .

 

முதலில் வீடு வாங்க  /விற்க  சம்பந்தமாக பார்ப்போம் .

வீடு விற்க -நீங்கள் ஒரு AGENT ஐ நாடலாம் அல்லது நீங்களே அதை நேரடியாகவிற்கலாம்.நீங்களே வீட்டை விற்றால் AGENTஇற்கு   கொடுக்கும் கொமிசன் பணம் மிச்சம்.ஆனால் பெரும்பாலானவர்கள் AGENT இடமே  வீட்டை விற்க கொடுக்கின்றார்கள் காரணம் வீடு விற்பதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருப்பதால் தான்

சந்தையில் வீட்டு விலை விபரங்கள் .(MARKET VALUE)

பெரிய அளவில் சந்தைப்படுத்தும் வசதி (MLS ACCESS)

உரிய முறையில் விளம்பரம்(EFFECTIVELY ADVERTISE )

வீ ட்டை காட்சிப்படுத்துதல் (STAGING)

விலையை அதிகம் போட்டு உரிய முறையில் சந்தைப்படுத்தாமல் வீடு விற்காமல் மாதக்கணக்கிற்கு கிடந்தது இழுபட்டால் வீட்டில் ஏதோ பிழைஇருக்கு என்ற எண்ணம் வாங்குபவர்கள மனதில் ஏற்பட்டுவிடும் .

இதற்காகத்தான் பலரும் ஏஜெண்டை நாடுகின்றார்கள் .

ஏஜெண்ட் -விற்பவர் ஒப்பந்தம் செய்தே வீடு விற்க கொடுக்கப்படுகின்றது .(பொதுவாக மூன்று மாதங்கள் ).

எம்மவர்கள் அநேகமாக 3.5% எடுக்கின்றார்கள் .வீடு விற்பவரிடம் இருந்து தான்  கொமிசன் எடுக்கப்படும் (வீடு வாங்குபவர் ஒரு சதமும் எவருக்கும் கொடுக்கதேவையில்லை.)

இந்த 3.5%   கொமிசனில்  1% தான் வீடு விற்கும் ஏஜென்ட் எடுப்பார் . 2.5% கொமிசன் வீடு வாங்கிகொடுக்கும் ஏஜென்டிற்கு  போய்விடும் .உதாரணமாக உங்கள் வீடு $500,000.00 என்று வைத்தால் மொத்த கொமிசன் $17500.00 .(விற்கும் ஏஜன்ட்  $ 5000.00 வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் $12,500.00)..

 

வீட்டில் ஏதும் மறைந்துள்ள பிழைகள் (LATENT DEFECTS ) பிரச்சனைகள் இருந்தால் விற்பவர் அதை முற்கூட்டியே சொல்லி அது வாங்குபவருக்கு(DISCLOSE)  தெரியப்படுத்த வேண்டும் .மறைத்து விற்றால் அதற்கு ஏஜன்ட் பொறுப்பு இல்லை (.உதாரணமாக மழை பெய்தால் ஒழுகுவது ,சுவரில் பெரிய வெடிப்பு இருப்பது ,முன்னர் கஞ்சா வளர்த்தது ,கொலை தற்கொலை ஏதும் இடம்பெற்றது ).

இனி வீட்டை விற்பது ஏஜென்டின் வேலை .

 

 அடுத்து வீடு வாங்குவதை பற்றி பார்ப்போம் .இதில் தான் பலவிடயங்கள் இருக்கு எனவே நாளை பார்ப்பம் . :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா பல பேருக்கு பயன் உள்ளதாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா பல பேருக்கு பயன் உள்ளதாக இருக்கும்

அவர் கனடியன் மோட்கேஜ் பற்றி எழுதுகிறார் லண்டன் வட்டி வீதம் இந்தவருட கோடைகால மக்களின் ஆட்டம் பாட்டங்களுக்கு மத்தியில் நைசாக அதிகரிக்கும் வண்ணம் அரசு அறிவித்தல்கள் bbc யில் வருகிறது அப்படி நடந்தால் நம்மவர்தான் அதிகம் கஸ்டபடுவார்கள்.மற்றும்படி கனடியன் மோட்கேஜ் சிஸ்டம் என்ன மாதிரி இயங்குது என்பதில் ஆர்வமே நல்ல பதிவு அர்யூன் பெரியவர் தொடருங்கள் ஆவலாயிருக்கிறேன்.

  • தொடங்கியவர்

வீடு வாங்குவதுதான் பெரிய விடயம் .இதில்தான் பலரும் தமது வாழ்நாள் சேமிப்பை முதலிடுகின்றார்கள்.

இது அவரவர் சொந்த தனிப்பட்ட விருப்பு .

வீட்டின் விலை            - அவரவர் வருமானம் ,வசதிக்கேற்ப இருப்பது நல்லது .

வீட்டின் அமைவிடம்  - வேலை ,பிள்ளைகளின் பாடசாலை ,போக்குவரத்து .

மேலேயுள்ள  இரண்டும் மிக முக்கியம் .

இதைவிட -

வீட்டின் அமைப்பு(TYPE) -   DETACHED ,SEMI,TOWN,DUPLEX,COTTAGE ETC.

                                STYLE -    BUNGALOW, 2 STORY,3 STORY ,MALTY-LEVEL,BACK SPLIT,ETC.

வயது -                Apx Age  -    NEW,5-10,10-15,15-20 ஐந்து வருட இடைவெளியில் தான் மதிப்பது.

வீட்டின்வயது    Apx Sq ft-    500-5000 எவ்வளவு பெரிதாகவும் இருக்கலாம் .

நிலகீழ்அறை(Basement) -     finished,walk out,separate entrance etc.

இதைவிட உள்கட்டமைப்பில் எத்தனை அறைகள் ,குளிப்பறைகள் ,Heater, A/C,போன்றவையும்

வெளித்தோற்றத்தில் Brick,Concrete,Stone,Stucco-plaster 

கராஜ் அமைப்பு attached,built-in ,carport ,

கார்விடும் இடம் private,mutual.front yard,circular,

காணியின் அளவு ,வீடு எந்த திசை ,எதை பார்க்கின்றது  என்பனவும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .

 

பிடித்த வீடு பார்த்தாச்சு .இனி வாங்குகின்ற அலுவல் -

வங்கி கடன் (Mortgage ) தருவதற்கு கடன் தொகைக்கேற்ற  வருமானமும் (Income) கையிருப்பு பணமும் ( Down payment) வங்கியுடன் ஒழுங்கான நம்பகத்தன்மையும் (Credit) இருக்கவேண்டும் .

எம்மவர் பலருக்கு பெரும் பிரச்சனையே இந்த மொட்கேஜ் எடுக்கும் விடயம் தான் .ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருக்கும் .

HOUSE PRICE      -     $ 500,00.00

DOWN PAYMENT  -     $100,000.00(20%)

INTEREST RATE   -     2.75%

AMORTIZATION      -    25 YEARS

இப்படி ஒரு வீடு வாங்க வங்கி எதிர்பார்க்கும் வருட வருமானம் $80,000.00

மாத மொட்கேஜ் செலுத்தவேண்டியத் தொகை ஏறக்குறைய        $   1500.00 

 

இதில் ஒவ்வொரு விடயத்தையும் விபரமாக பார்ப்போம்.  (நேரம் கிடைக்கும் போது )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் பயன் தரும் விடயம்.
இதுதான் எனக்கு அர்ஜுனில் பிடித்தவிடயம்.
அரசியல், போராட்டங்களை தவிர்த்து இன்னுமொரு வித்தியாசமான தரவுகளில் பலவிடயங்களை எம்முடன் பகிர்பவர்.
  • கருத்துக்கள உறவுகள்
நல்லொதொரு முயற்சி .....அடிப்படை விடயங்கள் ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இதில் எப்படி செய்தால் ....
வட்டி வீதத்தை குறைக்கலாம் 
கட்டு காசை குறைக்கலாம் 
குறைவான இன்சுரன்சை எங்கே பெறலாம் 
 
போன்ற விடயங்களில் கொஞ்சம் விரிவாக கவனம் செலுத்தி தொடர்ந்தால்  பலருக்கு பயன் கூடியதாக இருக்கும்.
 
வீடு இல்லாது வாடகை வீட்டில் இருந்தால் என்ன லாபம்?
வாடகை கட்டாது சொந்தமாக வீடு வாங்கினால் என்ன லாபம்?
 
அனுபவத்தில் எது நல்லது என்று நாமும் எமது அனுபவங்களை அப்கிர்ந்து கொள்ளலாமா?
 
மேலே நீங்கள் ஏறக்குறைய என்றுதான் போட்டு இருக்கின்றீர்கள் ..... இருப்பினும்.
$1000,000.00 டவுன் பேமென்ட் போட்டால் மிகுதி 4000,000.00 இற்கும் 2.5 வீத வட்டிபடி  மத கட்டுகாசு  
25*12=300 மாதங்களுக்கு  $1794.41 ஆகும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிற்சலாந்திலும் வீடு வாங்க விற்க தற்போதை வட்டீ எதிர்கால வட்டி போன்றவைகளில் உங்கள் அனுபவங்களை பகிருங்கள் இங்குள்ளவர்களும் பயன்பெறலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கனடியன் மோட்கேஜ் பற்றி எழுதுகிறார் லண்டன் வட்டி வீதம் இந்தவருட கோடைகால மக்களின் ஆட்டம் பாட்டங்களுக்கு மத்தியில் நைசாக அதிகரிக்கும் வண்ணம் அரசு அறிவித்தல்கள் bbc யில் வருகிறது அப்படி நடந்தால் நம்மவர்தான் அதிகம் கஸ்டபடுவார்கள்.மற்றும்படி கனடியன் மோட்கேஜ் சிஸ்டம் என்ன மாதிரி இயங்குது என்பதில் ஆர்வமே நல்ல பதிவு அர்யூன் பெரியவர் தொடருங்கள் ஆவலாயிருக்கிறேன்.

 

கவுன்சில் காசில.. கவுன்சில் வீட்டில இருந்தால்.. உந்தக் கவலை இல்லாமல்... எழுதிறதை எல்லாம் காயா ரசிக்கலாம் தானே. எவனோ.. வரி கட்ட.. அதில வாழுறது தானே.. வாழ்க்கை. :lol::D

  • தொடங்கியவர்

வங்கியில் நேரடியாக நாங்கள் போய் மொட்கேஜ் எடுப்பதற்கு தேவையான விடயங்களை தான்  எழுதிஇருந்தேன் .

வங்கியை நாடாமல் மொட்கேஜ் ஏஜன்ட் யாரையும் அணிகினால் அவர் உங்கள்  வருமானம் ,கிரடிட் ஸ்கோர் ,நீங்கள் போடும் முதல் இது மூன்றையும் வைத்து சரியான இடத்தில் (வங்கி ,கிரடிட் யுனியன் ,தனிப்பட்ட நிறுவனங்கள்  )  மொட்கேஜை எடுத்துதருவார்.இதில் உள்ள சூட்சுமங்கள் சுத்துமாத்துகள் பற்றி பின்னர் பார்க்கலாம் .

 

நீங்கள் போடும் முதல் .(DOWN PAYMENT).

நான் மேலே போட்ட கணக்கையே உதாரணத்திற்கு கொண்டுபோகின்றேன் .

HOUSE PRICE      -     $ 500,00.00

DOWN PAYMENT  -     $100,000.00(20%)

INTEREST RATE   -     2.75%

AMORTIZATION      -    25 YEARS

நீங்கள் 20% DOWN PAYMENT போடும் போது மொட்கேஜ் எடுப்பதும் சுலபம் .(ஒரு பெரிய தொகை வங்கியின் பிடிப்பில் இருக்கு ). அதைவிட மொட்கேஜ் இன்சுரன்சும் எடுக்க தேவையில்லை .அதைவிட குறைவாக பணம் போடும்போது மொட்கேஜ் இன்சூரன்ஸ் எடுக்கவேண்டிவரும் .CANADA MORTGAGE AND HOUSING CORPORATION (CMHC) நிர்ணயிக்கின்றது .

 DOWN                   5%              10%              15%           20%

                           $25,000      $50,000          $75,000      $100,000

 

MORT.INS           $13,000       $9,000           $7500         $0.

 

MORT.AMOUNT   $488,00      $459,000       $432,500   $400,000.

 

இன்சூரன்ஸ் பணத்தை உங்களை கட்ட சொல்லாமல் அதை மொட்கேஜ் தொகையுடன் சேர்த்துவிடுவார்கள்.

 

கிரெடிட் ஸ்கோர் (CREDIT SCORE)

300-900.

இந்த நம்பர்களுக்கிடையில் உங்கள் ஸ்கோர் என்ன என்பதுதான் உங்கள் கடன் பெறும் தகமையை நிர்ணயிக்கின்றது . நம்பர் அதிகம் தான் உங்கள் கடன் பெரும் தகமை நன்று .இது கடந்த காலதில் நீங்கள் எடுத்த கடன்களை திருப்பி கட்டிய ஒழுங்கை வைத்து நிர்ணயிக்கப்படும் .

 

கடன் கட்டும் காலம் (AMORTIZATION)

நீங்கள்  மொட்கேஜை கட்டப்போகும் காலத்தின் அளவு .பொதுவாக 25 வருடங்கள் தான் பலரும் எடுப்பது ,நீங்கள் விரும்பினால் எந்த எண்ணிக்கையிலும் எடுக்கலாம் (1-30). வருடங்கள் குறைய குறைய கட்டும் காசு கூடும்.

25 YEARS     - $1800

20 YEARS      -$2165

15 YEARS      -$2700

10 YEARS      -$3800

 

உங்கள் கட்டுபணத்தை கட்டும் காலக்கிரமத்தை பொறுத்தும் கடன் கட்டி முடிக்கும் காலம் நிர்ணயிக்கப்படும்

 

spacer.gif   spacer.gif   spacer.gif
 Payment spacer.gif              Monthly  $1,842.05     SAVING  - $0.00  

                       Semi-monthly  $921.03        SAVING  - $452.09.

                             Bi-weekly   $850.18        SAVING $1,305.98.

                                Weekly   $425.09        SAVING  - $1,512.55 

          Accelerated Bi-weekly  $921.03         SAVING - $18,778.50 

             Accelerated Weekly  $460.52         SAVING  - $18,972.90  spacer.gif

 

மேலே உள்ள அட்டவணையை பார்த்தால் தெரியும் எவ்வாறு நாங்கள் காசு கட்டும் விதத்தை தீர்மானிக்கலாம் என்று .

மாதம் ஒருமுறை கட்டுவதற்கும் விரைவாக கிழமைக்கு கட்டுவதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் .

 

எந்த தகுதியில் வட்டியை எடுப்பது பற்றி பின்னர் . :rolleyes:

 

 

Edited by arjun

  • தொடங்கியவர்

மேட்கேஜ் எடுக்கும் போது அதற்காக நாம் கட்டும் வட்டி பற்றி பார்ப்போம் .

வட்டிவீதம் (Interest Rate) இரண்டு விதத்தில் இருக்கு .

Variable Rate .

இது Bank Of Canada இன் வட்டி வீதத்திற்கு மாற்றத்திற்கு ஏற்ற படிமாறிக்கொண்டு இருக்கும் .(கூடி குறையும் )

 

Fixed Rate.

இதற்கும் Bank Of Canada வட்டி வீத மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை .அரசியல் பொருளாதார நிலைகளை வைத்து வங்கிகளே வட்டி வீதத்தை தீர்மானிக்கும் .பெரும்பாலானவர்கள் இந்த நிரந்தர வட்டியை எடுப்பதற்கு காரணம் வங்கிக்கு கட்டும் மோட்கேஜ்  இன் தொகை மாறாமல் இருக்கும் .

வட்டி வீதத்தை எடுக்கும் காலமும்  (term) இரண்டு விதமாக இருக்கு .

Closed Term

6 மாதம் முதல் பத்து வருடங்கள் வரை ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்துடன் மூடிவிடுவது .வட்டி வீதம் குறைவாக இருக்கும் போது நீங்கள் ஐந்து வருடங்களுக்கு உங்கள் மோட்கேஜை குளோஸ் பண்ணிவிட்டால் வட்டிவீதம் கூடினாலும் உங்கள் வட்டி மாறாது .ஆனால் அந்த ஐந்து வருடங்களுக்கு நீங்கள் மோட்கேஜை முறிக்க வெளிக்கிட்டால் அதற்கு வங்கிக்கு அபராதம் செலுத்தவேண்டிவரும். (பொதுவாக மூன்று மாத வட்டி  ) பெரியதொகையாக  உங்களுக்கு பணம் ஏதும் வந்தாலும் மோட்கேஜை கட்டி முடிக்க முடியாது .

 

Open Term.

இதற்கு எதுவித விதிகளும் இல்லை .கையில் பணம் வரும் போது விரும்பிய தொகையை மோட்கேஜில் கட்டி முதலை குறைக்கலாம்.

 

இன்றைய வட்டி வீதங்கள் .

 


Special Offers 2 Year Closed Term Fixed Mortgage***
2.79%5
5 Year Closed Term Fixed Mortgage ***
3.49%6
10 Year Closed Term Fixed Mortgage***
4.39%7
 
 
Special Offer to Switch Your Mortgage
 

Variable Rate Mortgages Scotia Ultimate Variable Rate Mortgage**
2.60%2
Scotia Flex Value Mortgage-Closed 5 Year Term**
3.10%3
Scotia Flex Value Mortgage-Open 5 Year Term**
3.80%4
 

 

Edited by arjun

  • தொடங்கியவர்

இந்த மொட்கேஜ் கணக்கு வழக்குகளை இத்துடன் நிறுத்திவிட்டு வீடு வாங்க தேவையான முக்கிய விடயங்களை நாளைக்கு பார்ப்போம் .

வீடு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.

ரியல் எஸ்டேட் அறிக்கையின் படி டொராண்டோவில் வீடுகளின் விலை ஜனவரியில்  9% கூடி இருக்கின்றது .ஆனால் விற்கவோ வாங்கவோ மார்கெட்டில் வீடுகளின் அளவு மிக குறைவாகவே இருக்கு .

சில வருடங்களின் முன் ஒருவர் வீடு வாங்கிதரகேட்டால் ,

எந்த இடம்( C1,E4)  விலை ($300,00-$350,000) ,எத்தனை அறைகள் (4) ,வயது (5-10)  என்று அவர்களுக்கு தேவையானதை சிஸ்டத்தில் போட்டால் 100-150 வரை வீடுகள் விற்க இருக்கும் .இப்போ  20-30 தான் இருக்கு . :o

 

  • தொடங்கியவர்

வீடு விற்பவர் -வாங்குபவர் இருவரும்,

வீட்டு விலை ,வீடு கைமாறும் திகதி இரண்டையும்  ஏற்றுகொள்ளும் பட்சத்தில் ஐந்து அல்லது பத்து வீத டிபோசிட்டுடன் (DEPOSIT)  ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் .

ஒப்பந்தத்தில் பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிபந்தனைகள்  (CONDITIONS) வைத்துத்தான் கையெழுத்திடுவார்கள்.

 

1.ஐந்து நாட்களுக்குள் வீடு வாங்குபவர் வீடு வாங்குவதற்கு தேவையான பணத்தை ஒழுங்கு செய்திடல் வேண்டும் .

 

2.ஐந்து நாட்களுக்குள் வீடு வாங்குபவர் வீட்டை பரிசோதித்து (INSPECTION) பார்த்துக்கொள்ளலாம் .

 

3.பத்து நாட்களுக்குள் விற்பவர் வீட்டின் காணியின் அளவை (SURVEY) காணியின் அளவிற்காக நகரசபையில் இருந்து எடுத்துகொடுக்கவேண்டும் .

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றபடாதவிடத்து ஒப்பந்தம் செல்லாது .

வீடு வாங்கும் போது  இன்ஸ்பெக்சன் செய்வது அவசியம் (கட்டாயம் அல்ல ).பார்க்க புதிதாக அழகாக இருக்கு என்று விடக்கூடாது. அதில் துறைசார் நிபுணத்துவம் தேவை .(பொதுவாக புது வீடுகளுக்கு பத்து வருட உத்தரவாதம் கொடுப்பார்கள் ).

கட்டிடத்தில் வெடிப்புகள் ,ஒழுக்குகள் ,ஈரலிப்பு ,கூரை நிலபரம் ,HEATING,COOLING,WATER TANK என்பவற்றையே பெரிதாக பார்ப்பார்கள் .(கஞ்சா வளர்த்த வீடாக இருந்தால் ELECTRICAL PANEL கீழ் உள்ள சுவர் உடைத்து கரண்ட எடுத்த அடையாளம் ,அல்லது சுவர்களில் வெளிர் மஞ்சள் படிவுகள் இருக்கும் . )

 

வீடு விற்று செல்பவர் தனது உடமைகள்  எல்லாவற்றையும் எடுத்து செல்வார் (கட்டில்,அலுமாரி,மேசை,டி வி போன்றவை ) ஆனால் வீட்டுடன் இணைந்த பொருட்கள் இருவகையாக பிரிக்கப்படும் .பின்னர் ஏதும் பிரச்சனை ஏற்படாத வகையில் அவை ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதப்படவேண்டும்.

FRIDGE,STOVE,WASHER,DRYER,DISH WASHER,CENTRAL VACUUM CLEANER ,DRAPERY,ALL ELECTRICAL LIGHT FIXTURES,  இப்படியானவை வீட்டுடனேயே இருக்கவேண்டும் .மிக விலை கூடிய பெறுமதியானவை ஏதும் விற்பவர்கள் எடுத்து செல்லவிரும்பினால் கட்டாயம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருக்கவேண்டும் .

வீடு வாங்குபவர்கள் LAND TRANSFER TAX கட்ட வேண்டும் .

டொராண்டோ நகரத்திற்குள் வசிப்பவர்கள் நகரம் ,மாகாணம் இரண்டிற்கும் வரி கட்டவேண்டும் .டொராண்டோவை விட்டு வெளியே ஒன்டாரியோவில் வசிப்பவர்கள் மாகாண வரியை மட்டும் கட்டினால் காணும் .

$500,000 வீட்டிற்கு டொராண்டோவில் இருப்பவர்கள் $ 6475+$5725 = $12200

                                   டொராண்டோவிற்கு வெளியே இருப்பவர்கள்   $6475 உம் கட்டவேண்டும் .

LAND TRANSFER TAX  கணிக்கும் முறை .

Toronto Municiple Land Transfer Tax (MLTT)

Up to and including $55,000.00 X 0.5% of total property value
From $55,000.01 to $400,000.00 X 1% of total property value
Over $400,000.00 X 2% of total property value

Ontario Provincial Land Transfer Tax (PLTT)

Up to $55,000 X 0.5% of total property value
From $55,000 to $250,000 X 1% of total property value
From $250,000 to $400,000 X 1.5% of total property value
From $400,000 up X 2% of total property value
The City of Toronto levies an additional LTT on Toronto real estate in addition to the provincial rate.

 

கடந்த காலங்களில் வீட்டின் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை நாளை பார்க்கலாம் . :icon_mrgreen:

                                                     

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். எல்லோருக்கும் பயன் தரும் விடயம்.

  • 4 weeks later...

 

வீட்டில் ஏதும் மறைந்துள்ள பிழைகள் (LATENT DEFECTS ) பிரச்சனைகள் இருந்தால் விற்பவர் அதை முற்கூட்டியே சொல்லி அது வாங்குபவருக்கு(DISCLOSE)  தெரியப்படுத்த வேண்டும் .மறைத்து விற்றால் அதற்கு ஏஜன்ட் பொறுப்பு இல்லை (.உதாரணமாக மழை பெய்தால் ஒழுகுவது ,சுவரில் பெரிய வெடிப்பு இருப்பது ,முன்னர் கஞ்சா வளர்த்தது ,கொலை தற்கொலை ஏதும் இடம்பெற்றது ).

இனி வீட்டை விற்பது ஏஜென்டின் வேலை .

 

 

 

 

கொலை, தற்கொலை இடம்பெற்ற வீடா என்று அறிவதற்கு வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கா? வீட்டை விற்பவர் அந்த விடயங்களை சொல்லாமல் விடலாம் தானே.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொலை, தற்கொலை இடம்பெற்ற வீடா என்று அறிவதற்கு வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கா? வீட்டை விற்பவர் அந்த விடயங்களை சொல்லாமல் விடலாம் தானே.

 

இது ஒரு முக்கியமான கேள்வி.
 
இந்த விடயம், தரகுப் பணத்தில் குறியாக இருக்கும்எஸ்டேட் முகவர் சொல்ல போவதில்லை. அவருக்கு தெரிந்தும் இருக்காது. 
 
சட்ட ரீதியான கட்டாயமும் இல்லை.
 
லண்டனில் எனக்குத் தெரிந்து ஒரு வெள்ளை கணவர் கடன் தொல்லை தாளாது தனது மனைவி, 4 பிள்ளைகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
 
அதே வீட்டை ஒரு தமிழர் வாங்கிய பின்னர் குடும்பத்துடன் குடி பெயர்ந்த பின்னர் தான் பிரச்னை புரிந்தது.
 
விரைவாக வேறு வீடு பார்த்து,  சில அகதிகளுக்கு அந்த வாடகைக்கு விட்டு  பின்னர் நல்ல விலைக்கு வித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.