Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு புத்தர்சிலைகள்! - அஸ்கிரிய பீடாதிபதி திறந்து வைத்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இப்பிளவின் விளைவாக மகாயான பௌத்த பிரிவின் நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டு தேரவாதமே உண்மையான பௌத்தம் எனும் முடிவு திணிக்கப்பட்டது
நூல்களை எரிப்பதில் சிங்களவர்கள் சிங்கங்கள் போல கிடக்கு....நன்றிகள் இணைப்புக்கு
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் அண்ணே எங்கட நல்லை ஆதீனத்தை கொண்டு அம்பாந்தோட்டையில் இரண்டு பிள்ளையார் சிலை வைக்க கூடாது. :icon_idea:

 

அப்போ தான் அவங்களுக்கும் விளங்கும் அண்ணே எங்கட வலி.  

 

(கிட்ட வாங்கோ காதுக்குள்ளே ஒரு ரகசியம் சொல்லுறன்.. பேசாமல் பிள்ளையாரையும் புத்தரையும் சிண்டு முடிச்சு விட்டம் என்றால் அவை பாத்து கொள்ளுவினம் மிச்சத்தை..) என்ன நான் சொல்லுறது. :lol:  :lol:  :icon_idea:

நூல்களை எரிப்பதில் சிங்களவர்கள் சிங்கங்கள் போல கிடக்கு....நன்றிகள் இணைப்புக்கு

கனடா வந்தும் நூலகம் எரித்த மாமேதைகளை என்ன செய்வது :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

கனடா வந்தும் புத்த 3 வயசு குழந்தை பிடிப்பு மொட்டை பிக்குகள் தமது விகாரையை காப்புறுதி மோசடிக்கு கொழுத்தினார்கள்.

பின் கள்ள மோசடி பிடிபட்டு கனடிய பத்திரிகைகளில் வந்து சிறி லங்கன் மானம் கப்பல் ஏறியது.

லண்டன் சிறி லங்கன் பிக்கு தலைவர் சிங்கள குழந்தைகளை பாலியல் வன்புணர்ந்து பிபிசி செய்தியில் வந்து சிறி லங்கன் மானத்தை திரும்பவும் கப்பலேற்றினர்.

புத்த பிக்குகள் கள்ள விளையாட்டில் மாமேதைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவங்கட நிலைமையும் ஜோசிச்சு பார்க்க வேணும் விவசாயி விக்.

பாவம் அவங்களும் தான் என்ன செய்வாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையுரானின் தெளிவான விளக்கத்துக்கு நன்றி. பல ஆண்டுகளுக்கு முதல் ஒரு மகாயான சிங்கள பிக்கு இலங்கைக்கு வந்து மகாயான பௌத்தத்தை பரப்ப முற்பட்ட போது அது தடை செய்ய பட்டது நினைவுக்கு வருகிறது. 

 

இலங்கையில் யாழ்பாணம் தவிர்ந்த எந்தப் பகுதியிலும் எந்த மத தலங்கள் அமைப்பதிலும் பொதுமக்கள் எதிர்ப்பதில்லை. சில தீவிர சிங்கள அமைப்புகள் எதிர்ப்பது உண்டு. ஆனால் யாழ்ப்பாணத்தில் புத்த மத தலங்களுக்கு தமிழர்களின் பொதுவான அமைப்புகளே எதிர்ப்பது ஏன். மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே எதிர்ப்பது ஏன். சகிப்பு தன்மையே யாழ்ப்பாணத்தவருக்கு இல்லாமல் போவதற்கு வரலாற்று காரணம் என்ன. புலம் பெயர்நத நாட்டில் கூட அவர்களால் வெள்ளையர்களை தவிர மற்றவர்களை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஏதாவது வரலாற்று காரணம் உண்டோ. அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற முடியாதோ.

இலங்கையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த எந்த பகுதியிலும் மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது.  இது வே 1915 ல் கண்டியில் ஆரம்பித்து முஸ்லீம்களும் சிங்களவரும் ஒருவரை ஒருவர் கொன்ற கதை. முஸ்லீம்கள்கள் தங்கள் பள்ளிவாசல் முன்னால் ஊர்வலம் போக கூடாது என்று தடுத்தார்கள். அது இரவு 1ம்ணிக்கு பிறகு போக ஏற்பாடுசெய்த பிறகு முஸ்லீம்கள் ஆங்கிலேயரின் பக்க சார்ப்பை வைத்து சிங்களவரை அடித்து நொறுக்கினார்கள். முஸ்லீம்களும் சிங்களவர்களும் இந்த ஊர்வலத்தில் இறுக்கமாக இருந்தமையின் காரணம் இரண்டு மதத்தலைவர்கள். எகிப்திலிருந்து தீவிரவாதியாக கணிக்கப்பட்டு துரத்தப்பட்ட சித்திலெப்பை கண்டியில் தனது பிரிவினை வாதங்களை ஆரம்பித்திருந்தார். இன்று பல சிங்களவர்களால் வெறுக்கப்படும் அநாகரிக தர்மபால மகாவம்சத்தை தூசி தட்டி போத்திருந்தார். இந்த இரண்டாலும் சிங்கள்வர்கள் தங்கள் நாடில் தாங்கள் ஊர்வலம் போவோம் என்றும், முஸ்லீம்கள் வெள்ளைகளால் அடக்கப்பட்ட சிங்களவரகள் தங்களின் மசூதிக்கு முன்னால் வரக்கூடாது என்ரும் நிலைப்பாடு எடுத்தார்கள்.

 

இவ்வாறு தெற்கில் மதவெறியில் ஒருவரை ஒருவர் கொலை வெறியில் அழித்துக்கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் மட்டும் அதே நேரம் பலர் அமெரிக்க மிசனின் கிருஸ்தவத்தில் சேர்ந்து கல்வியில் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.  இதன் பலனாக கல்வி, வியாபரத்தில் தமிழர் முன்னேறி இலங்கையில் சகல பகுதிகளிலும் தொழில் செய்து வந்தார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு இடத்தை Colonize பண்ணி முன்னேற முயல்வதில்லை. வெள்ளைகள் எழுதிவைத்த சரித்திரத்தின் படி தமிழருக்கு தங்கள் இடத்திற்கு திரும்ப வேண்டும் என்ற நினைவு எப்போதும் இருக்கும். இதானால் இலங்கை முழுவதும் பரந்து இருந்தாலும் தனியத்தனைய இருந்த தமிழர்கள் 1958  ல் இலகுவாக தீக்கிரையாக்கபட்டார்கள். முஸ்லீம்கள் இடத்தை colonize பண்ணி குடியேறுவத்தால் இயணகலவரங்களின் போது இலகுவாக தாக முடிவத்தில்லை. இதானால் சிங்கள் இயடங்களில் கூட அவர்களால் M.Pக்களாக வர முடிகிறது. பிடித்த இடத்தை இறுக்கமாக ஆழும் கூணம் அவர்களுக்கு இருப்பத்தால் சிங்களவர்களால் தைழர்களை 1958ல் துரத்தியது போல் துரத்த முடிவதில்லை. இதனால் இன்றைய BBS இராவண பல போன்ற அமைப்புக்கள் தோன்றின. கலால் எதிர்ப்பு, இந்துக்களே கூட கேட்காத பசுவதை எதிர்ப்புக்கெல்லாம் பொதுமக்களின் ஆதரவுக்கும் இதுவே காரணம்.   முஸ்லீம் பௌத்த துவேசத்தின் அண்மைக்கால உச்ச கட்டம் அமைச்சர் அசிரபும், சோம கிமி தேரரும் தொலைக்காடசியில் போட்டுக்கொண்ட குஸ்தி. இது 1915 பின்னரான புத்த முஸ்லீம் வக்குப்புவாத அதிவரக்கல்லாக போடப்பட்டிருக்கிறது. சிங்களவர்கள் இதை தங்களுக்கு நேரந்த அவமானமாக கொள்ள்வத்தால் அதற்கு சமன் காண அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பார்கள். இதனால் BBS, இராவண பலய, கெல உறுமையா போல பல இன்னும் தோன்ற இருக்கு. அதாவது புதிய முஸ்லீம் சிங்கள நெருப்புக்கொழுத்தல்களை இப்போ டக்கிவைத்திருப்பது ஜெனீவா. அதில் இந்த முறை கக்கீம் செய்த்தகல்லுக்குத்தால் இனிமேல் அரசர் கக்கீமின் உதவியை ஜெனீவாவுக்கு கேட்கமாட்டார். இந்த முறையே பௌசித்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரச்சரம் செய்யச் சென்றார். இது ஒருவரை ஒருவர் அழிக்கும் நிகழ்சிகள் மத்தாபுக்கள் போல வெடிப்பத்தை கெதிப்படுத்த போகிறது.   

 

1948ல் தமிரை மலைநாட்டால் துரத்தவேண்டும் என்ற முயற்சி DS ஆல் கொண்டுவரப்பட்டது. இது பாதிதான் வெற்றி அழித்தது. பண்டாரநாயக்கவும் JRம் இலங்கை முழுவதும் தமிழர் வாழலாம் என்றதால் அல்ல சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்தவர்கள். இலங்கையில் வேறு எந்த மதமும், யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக, இருக்க கூடாது என்பதுதான் மகாவம்சம்த்தின் அடிப்படை. 1958 ல் நடந்த கலவரத்தில் பண்டாரநாயக்காவின் காடைகள் சைவ கோவில்களையும் குருமாரையும் தேடி அழித்த விதம் ராசி வித்தாச்சி என்ற சிங்களவரால் வடிவாக சொல்லப்படிருக்கிறது. 

 

விடுதலை போர் ஆரம்பித்த பின்னர் யாபழ்ப்பாணத்திலும்  மற்றும் இடங்களில்லும் இடிக்கபட்ட கோவில்கள் 2700 மேலானவை. இன்று ஐ நாவில் அமெரிக்காவால் நிரூபண்மாக சமர்பிக்கப்பட்ட உண்மை தெற்கில் புத்தத்தை தவிர எந்த மததையும் மக்கள் ஏற்றுகொள்கிறார்கள் இல்லை என்பதும், அதை அரசு வேண்டுமென்றே அதை விட்டுப்பார்கிறது என்றும் கூறியிருப்பத்தாகும். இதில் கசன் அலி சிங்கள்வர்கள் தெற்கில் முஸ்லீம் மதத்தை பின்ன்பற்ற தடுக்கிறார்கள் என்று கொடுத்த அறிக்கையால் அரசு மு.காவையே வெளியேற்ற முயல்கிறது.

 

புத்தைதை அறியாத சிலர் இங்கே திரும்ப திரும்ப வந்து புத்ததை பற்றி படிப்பிக்கிறார்கள். புத்தர் கிருஸ்ணனின் அவதாரம்.  இதில் புராண நம்பிக்கைகேற்ப அவரை 9தாவது 15 தாவது 23 றாவது அவதாரமென்பார்கள். புத்த தத்துவங்கள் பிராமணருடன் நடந்த விவாதங்கள் என்ற போர்வையில் ஆரம்பித்தே எழுதப்பட்டிருக்கு. புத்தத்தின் அடிபடைகளான, இருவினை, கர்மம், மறுபிறவி, இந்திரன் முதலான தேவர்கள் எல்லாமே இந்துமதத்திலிருந்து மெல்ல மெல்லமாகா 300 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து புத்தம் என்ற மதம் ஆக்கப்பட்ட போது சேர்த்துக்கொள்ளப்பட்டவையே. அணமையில் CTயில் இலங்கையின் மகாவம்ச புத்தர்கள் புத்தரே கடவுள் இல்லை என்று பின்னரும்  இன்னமும் இந்து கடவுள்களை வணகிவருகிறார்கள் என்ற கேள்விக்கு விளக்கங்கள்  அளிக்கப்பட்டன.  புத்த்ரை கிருஸ்ணாக புத்தரிடம் உபதேசம் கேட்க வந்த இந்துக்கள் நம்பினார்கள். அந்த நேரம் புத்தரும் இந்துவாக இருந்தே அந்த இந்துக்களுக்கு போத்தித்தார். மேலும் கண்ணகியை சேரன் கடவுளாக்க கல்லெடுக்க துணைக்கு போனவன் அவனின் இலங்கை நண்பானா சேனன் என்பவன். அவ்னேதான் இலங்கைக்கு கண்ணகி வழிபாட்டை கொண்டும் வந்தவன்.  ஆப்பிறுக்க மினக்கெட்டு வந்து தங்களை தாங்கள் முட்டாள்கள் ஆக்க முயலும் சிலருக்கு புத்தத்தில் பாதிக்கு மேல் இந்துமதம் என்பது புரியாது.  

 

தேரவாதம், புத்தரின்(கடவுள்)  நிலையைஎல்லோரும் அடையலாம் என்று கூறினாலும், அடிப்படை இந்து மதத்தில் இருந்த கடவுள்கள் இன்றும் புத்தத்தில்  இருக்கிறார்கள். இது CTல் கொடுத்த விளக்கம், . இதனால் புத்த மததினருக்கு கடவுளே இல்லை, தாங்கள் எல்லோரும் புத்தரின் நிலையை அடையலாம் என்ற தத்துவத்தை மனத்தால் ஏற்க முடிவதில்லை. வெளியே ஒப்புக்காக கட்டுண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மனசாந்திக்கு, பாதுகாப்பு உணர்வுக்கு கடவுள் தேவைப்படுகிறார். இதனால் மகாநாமவின் கோரிக்கையை கேட்டு இலங்கை முழுவதையும் புத்தமாக்க வேண்டும் என்று முயன்றாலும், தங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திகொள்ள தமது ஆரம்பகால கடவுள்களான கிருஸ்னனையும் முருகனையும், கண்ணகியையும் வழிபடுகிறார்கள்.  இந்திய இனங்களுக்கு வெளியே பௌத்தர்கள், இந்து கடவுகளை புத்தருக்கு மேலான கடவுளாக கொள்வதில்லை. அவர்களுக்கு கடவுள் இல்லை. அதே போல இந்திய இன புத்தர்கள் அல்லாவையோ, கிறீஸ்த்தவ கடவுளையோ கடவுளாக ஏற்பதும் இல்லை. இதனால் அவர்கள் எல்லாக் கடவுள்களையும் வணங்குகிறார்கள் என்பதும் அறியாமை. புத்தம் தோன்றிய இனமான இந்திய இனத்துக்கு இந்து கடவுள் இருக்கிறாரகள். புத்த தத்துவத்தை கடன் வாங்கி இந்தியாவிலிருந்து எடுத்து சென்றவர்களுக்கு கடவுள் இல்லை. அந்த தத்துவங்கள் மட்டும்தான் இருக்கு. இதனாலேயே இன்று தெற்கில் இலங்கை சரித்திரம் காணதா மத கலவரம் ஒன்று உருவாகுவதற்கான முகில் கூட்டங்கள் சேரத்தொடங்கியிருக்கிறது.  இதில் பெரிய அழிவை சந்திக்க போவது இஸ்லாம். ஒரளவு கிறீஸ்த்தவம். 

நீங்கள் அவங்கட நிலைமையும் ஜோசிச்சு பார்க்க வேணும் விவசாயி விக்.

பாவம் அவங்களும் தான் என்ன செய்வாங்கள்..

முதல்வன் உங்களுக்கு தெரிகிறது. :)

ஆனால் சிறி லங்கன் மெத்த படித்த மா பேதைகளுக்கு விளங்கவில்லையே?!

இன்றும் சிங்களவனின் மினி வான்களில் சைவ கடவுள்கள் அணிவகுத்து இருக்கின்றார்களா? நான் இலங்கையில் இருந்த பொழுது கண்டது...இப்போது எப்படி?

இன்றும் சிங்களவனின் மினி வான்களில் சைவ கடவுள்கள் அணிவகுத்து இருக்கின்றார்களா? நான் இலங்கையில் இருந்த பொழுது கண்டது...இப்போது எப்படி?

அவர்கள் சிங்களவர் அல்லர். மூன்று தலைமுறைக்கு முன் தமிழர்கள்.

சிங்களவன் யால,எல காடுகளை உருவாக்கி தெருதொடர்பை அறுத்த போது இணங்கியவர்கள்.

புத்தசிலை வைக்கவிட்டவர்கள். இன்று சிங்களவராகி சொந்த இனத்தை அழிக்க உதவிறார்கள் மாபேதைகள்.

அதுதான் கண்டி ராஜ ராடல சிங்களவர் கீழ்நாட்டு புது சிங்களவரை கீழ் நாட்டு பட்டிகள் என்று நக்கலடிப்பார்கள்.

...இதனாலேயே இன்று தெற்கில் இலங்கை சரித்திரம் காணதா மத கலவரம் ஒன்று உருவாகுவதற்கான முகில் கூட்டங்கள் சேரத்தொடங்கியிருக்கிறது.  இதில் பெரிய அழிவை சந்திக்க போவது இஸ்லாம். ஒரளவு கிறீஸ்த்தவம்.

1915 கலவரத்தில் கூட 86 மசூதிகள் தாக்கப் பட்ட அதேவேளை 17 கிறீஸ்தவ ஆலயங்கள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. சிங்கள பெளத்தர்கள் மத்தியில் அந்தக் காலத்திலேயே சிறுபான்மையினருக்கெதிரான உணர்வுகளுடன் கூடவே கிறீஸ்தவர்களுக்கெதிரான கருத்துக்களும் அனகாரிக தர்மபால போன்றவர்களால் விதைக்கப் பட்டிருந்தன. அதிலும் காலனிய எதிர்ப்பு என்பது கூட கிறிஸ்தவ எதிர்ப்பு என்ற தவறான வழிநடத்தலில் திசை திருப்பப் பட்டிருந்தது.

இன்று, "பெளத்த பின்லாடன்" அஷின் விராத்துவிடமிருந்து (Ashin Wirathu) பிறந்த நாள் பரிசைப் பெற்றுக் கொள்கிறார் ஞானசார தேரர். மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப் பட்ட மிகப் பெரியளவிலான இனவழிப்பும் அதைத் தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களுக்கும் பின்னால் இந்த விராத்து தேரரே கருத்தியல் பலத்தை வழங்கி வருகிறார். சிறுபான்மையினருக்கெதிராக இலங்கையில் இனிவரும் காலங்களில் வரப்போகும் ஆபத்துகளுக்கான சமிக்ஞைகளாகவே இவை தென்படுகின்றன.

Gnanasara-and-Wirathu.jpg

மியன்மாரிலிருந்து துரத்தப் படும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷ் அரசினாலும் தஞ்சம் மறுக்கப் பட்டு திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

http://www.youtube.com/watch?v=PPiDzXOZhWI

http://www.youtube.com/watch?v=jJKJbQYb0gw

Edited by Alternative

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.