Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதிராஜாவின் ஈழப்பயணம்!

Featured Replies

ஈரக் காற்று வீசுகிற நீலாங்கரை இல்லம்!

இந்தியில்'சினிமா' என்தலைப்பிலேயே ஒரு சினிமா இயக்கிக்கொண்டு இருக்கிறார் பாரதிராஜா.

''என்னோட 28 வருஷசினிமா வாழ்க்கையில், இப்படி சாத்விகமாக உட்கார்ந்து ஒரு படம் நான் செய்ததில்லை. 'பதினாறு வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ரெண்டுக்குப் பிறகு, இது நானே எழுதின கதை. ஒரு சினிமா டைரக்டரின் வாழ்க்கையில் நடக்கிற கதை. இதில் நானே நடிச்சிரலாம்னு முதல்ல நினைச்சேன். இது என் சொந்தக் கதைன்னு நினைச்சுடுவாங்க. அது ஒரு பிரச்னை. அதனால்,மனசில் பட்டவர்நானா படேகர். பெரிய ஞானஸ்தன். விதையைப் போட்டால், விருட்சமா வெளிச் சமா வெளியே வருவான். எனக்கே வித்தை காட்டுவான். தெரிஞ்சு கையாண்டால், மகா நடிகன். ரஜினி,கமல், சிவாஜி வரைக்கும்சகஜமா கொண்டுவந்திருக்கேன். இப்போ, தோண்டத் தோண்ட ஊறுகிற மனுஷனா படேகர்!''& கடல் காற்றை ஆழமாகச்சுவா சித்தபடிநிமிர்கிற பாரதிராஜாவின் முகத்தில் ஏராளமான உணர்வலைகள்.

''இதோ கண்ணு முன்னால கிடக்குதே கடல். சுனாமி வந்த கடல். அதுக்கப்புறம் நாம எல்லாரும் கடலைப் புறக்கணிச் சுட்டோமா என்ன? காலம் எல்லாத்தையும் மாத்தும். துயரங்களைக் கண்டு கதறலாம். ஆனா, அடுத்து என்னன்னு யோசிக் கணும். நினைச்சாலே நெஞ்சு கொதிக் குதுங்க. கும்பகோணத்தில்குழந்தைங்க கருகிச் செத்தப்போ துடிச்சோமே, அதே துயரம், அதே கவனம், இலங்கையில் செஞ்சோலையில் குண்டு பட்டு உருக் குலைஞ்ச குழந்தைகளுக்கு ஏன் கிடைக்கலை?

அவனும்நம்மவம்சாவளிதானே? நம்ம ரத்தம்தானே? கோபம், வீரம், ஈரம் எதுவுமேஇல்லாமப்போயிட்டோமா என்ன? இந்த மத்திய அரசும், மாநில அரசும் ஏதாவது செய்ய வேண்டாமா? தீர்மானம் போட்டுட்டுசட்டசபையில் சொந்தச் சண்டைகளை போட்டுக்கிட்டு, எவ்ளோ நாள் இருக்கப்போறோம்?''

''ஈழ மக்களின் துயரங்களில் பங்கு கொள்ள, இருக்கிற சில தடைகள் நீங்கள் அறியாததா?''

''ராஜீவ்காந்தியின்மரணத்தைச் சொல்றீங்களா? அந்த கறுப்புப் பக்கத்தை புரட்டிட்டு போங்க. அது கிரேட் மிஸ்டேக்! அதில் எனக்கு வேற கருத்தே கிடையாது. ஆனா, அதுக்காக இந்த பூமி உள்ளவரை ஒரு இனத்தையே மொத்தமா புறக்கணிக் கறதுதான் தண்டனையா?

மகாத்மா காந்தியைக் கொன் னவங்களையே மன்னிச்ச தேசம்யாஇது.அன்னை இந்திரா மரணத்துக்காக, சீக்கிய சமுதாயத்தையேநாமதடை செஞ்சுட்டோமா என்ன? அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதம மந்திரியா உட்காரவெச்சு அழகு பார்க்கிற இயக்கம்தானே காங்கிரஸ் கட்சி. அது எத்தனை நல்ல பண்பு. நான் சோனியாவை இந்தஒருகாரணத்துக்காக வணங்குறேன்.

இப்போலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள், தினம் தினம் சாகிறான். உயிரைக் காப்பாத்திக்க பிள்ளைகுட்டியோடஇந்த பூமிமுழுக்க ஓடித் தவிக்கிறான். அவனுக்கு உதவ அரசும் வரணும். நமக்கு நல்ல மனசும் வரணும்!''

''இலங்கைக்கு நீங்கள் போய் வந்ததாக ஒரு தகவல். தமிழ் ஈழத்தை நேரடியாகப் பார்த்துவந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

''தமிழ், தமிழன்னு நாமெல்லாம் சொல்லிட்டுத் திரியுறோமே, நானெல் லாம் தமிழன்தானான்னு எனக்கு குற்ற உணர்ச்சியே வந்திருச்சு. 'போர்'னா என்னன்னு தமிழ்நாட்டில் ரெண்டு மூணு தலைமுறைக்குத் தெரியாது. ஆனா, யுத்தம், சத்தம் ரத்தம்னு ஒரு வாழ்க்கை. கை இழந்து, கால் இழந்து, பார்வை பறிபோய், குடும்பம், வீடு, பிள்ளை குட்டின்னு பறி கொடுத்தும் நம்பிக்கையோட நடமாடுறாங்க. காந்தியோட கனவுதேசம் மாதிரி நாட்டை வெச்சிருக்காங்க. தமிழ் ஈழத்தில் ஒரு குடிகாரனைப் பார்க்க முடியாது, பிச்சைக்காரன் இல்லைங்க.திருடன்இல்லை. நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியாபெண் நடமாடமுடியும்யாஅந்த மண்ணில்.

வீர மரணம் எய்திய புலிகளின் கல்லறைகளைப் பார்த்தேன். 'நாங்க புதைக்கப்படலை.விதைக்கப்பட் டிருக்கோம்'னு புரட்சி பேசுற இடுகாடு. அவங்ககிட்டே இழக் கிறதுக்கு இனி எதுவுமேஇல்லை.வாழவாவது விடலாம்ல?''

''புலித் தலைவர் பிரபாகரனையும் சந்தித்தீர்களா?''

''ஆமா! கம்பீரமா அந்த உண்மையைச் சொல்றேன். நான் கிளிநொச்சிக்குள் நுழைந்ததுமே, 'தலைவர் உங்களைச் சந்திக்கவிருப் பத்துடன் சம்மதித்திருக் கிறார்'னு தகவல் சொன் னாங்க. அந்த மகோன்னத வேளைக்காகக் காத்தி ருந்தேன்.

எங்கெங்கேயோ அழைச் சுட்டுப்போறாங்க. திடீர் திடீர்னு திசை மாறுகிற பயணங்கள்.மூணாவது முறைபோகும்போது, வழியில் தமிழ்ச்செல்வனைப் பார்த்தேன். என்னை ரொம்ப ரசிக்கிற மனுஷன். சிரிக்கச் சிரிக்கப் பேசினார்.

அதுக்கப்புறம்தான் நிஜப் பயணம். வண்டி போய் இறங்கின இடத்தில் சிரிச்ச முகமா, கூப்பின கையுடன் நின்றிருந்தார் பிரபாகரன்.ராணுவச் சீருடையில், சிங்கம் மாதிரி இருந்தார். ஹா, என் எதிரில் இந்த யுகத்தின், இந்த இனத்தின் ஒரே நம்பிக்கை நிக்கிறார். அப்போ எனக்குள்ள உண்டான சிலிர்ப்பு, பரவசத்தையெல்லாம் விவரிக்கத் தெரியலை. சட்டுன்னு அப்பிடியே அவரை இறுக்கிக் கட்டிக்கிட்டேன். அவரும் என்னை அணைச்சுக்கிட்டார். என் கண்ணுல தண்ணி முட்டிக்கிச்சு. பேச்சே வரலை. அவர் பக்கத்தில் யாரையும் அவ்வளவு நெருக்கத்தில் அனுமதிக்க மாட்டாங்களாம். ஆனா, எனக்குத் தந்த மரியாதை, அவங்க நம்ம மேல வெச்சிருக்கிற அன்பின் அடையாளம்!

புது ரத்தம் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு. 'உங்கஉருவத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப்பார்க் கிறேன்'னு சொன்னேன். 'எனக்கு வழிகாட்டியே அவர்தான்!'னு சிரிச்சார்.

அவர்பேசுறதைக்கேட்க ஆரம்பிச்சா, மனசுக்குள்ள மரியாதை இன்னும் கூடிட்டே போகுது. 'எங்க ளுக்காக ஈழத் தமிழ் வாழ்க்கையை ஒரு படமாக எடுத்துத் தர வேண்டும், செய்வீர்களா?ன்னுகேட்டார். 'பேருக்கும், பணத்துக்கும், புகழுக்கும் நிறையச் செய்துட்டேன். என் வாழ்க் கைக்கு அர்த்தம் தேடிக்கவாவது நிச்சயம் செய்யறேன்'னு சொன்னேன். அந்த நிமிஷமே என் மனசுக்குள்ள ஏறின சத்தியம் அது.

'மணிரத்னம்படத்தில்ஒரு மோசமானஅரசியல்வாதியா நீங்க நடிச்சிருக்கக் கூடாது'ன்னு சொன்னார். 'கன்னத்தில் முத்த மிட்டால்' படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு சிங்களவனா ஊடுருவுவது மாதிரி, நிஜத்தில் முடியாதுன்னார். 'நான் உங்களைஇவ்ளோபக்கத்தில் பார்த்துட்டேன்.இந்தஉலகம், இந்த வாழ்க்கை எனக்கு இப்போ புரியுது. அதுமாதிரி மணிரத்னம் பார்த்திருந்தா, அப்படிச் செய்திருக்க மாட்டார். மணிரத்னம் மதிக்கப்பட வேண்டிய அற்புதமான கலைஞன்'னு எடுத்துச் சொன்னேன்.

மூணு மணி நேரப் பேச்சு. தளப திகளை அறிமுகம் செஞ்சுவெக் கிறார். கடல் புலிகள் தலைவர் சூசை, பொட்டு அம்மான்,தமிழ்ச் செல்வன்னு எல்லாரும் இருக்காங்க. சூசையைக் கூப்பிட்டு, 'அண்ணனைக் கடல் பயணத்துக்கு கூட்டிட்டுப் போ!'ன்னு சொன்னார் பிரபா. ஆனா, அன்னிக்குக் கடுமையான மழை. அதனால போக முடியலை. எனக்கு 'கூழ் விருந்து' கொடுத்தாங்க. அது அங்கே அன்பு உபசரிப்பு. நண்டு, மீனுன்னு என்னென்னவோ போட்டுத் தந்தாங்க. அமிர்தம்னு சொல் வாங்களே, அதுதான்!

'உலகத்தில் ஏழு அதிசயத்தையும் பார்த்துட்டேன். நீங்க எட்டாவது அதிசயம்; யாருக்கும் எட்டாத அதி சயம்'னு சொன்னதும் சிரிச்சவர், 'ஈழத் தமிழர்களுக்காக, எனக்காக படம்செய்வீர்கள்தானே?'ன்னு மறுபடியும் கேட்டார்.

'என் காலம் முடியுறதுக்குள்ள செஞ்சுட்டுத்தான் போவேன்'னு சொல்லிட்டுத்தான் புறப்பட்டு வந்தேன்!'' என்கிறார் அழுத்தமாக!

(நன்றி : ஆனந்த விகடன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் காணும் படத்தில் இவர் பிராகரனுடன் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் இது கிராபிக் என்று சொல்கிறார்கள். இதை மாற்று ஊடகமொன்றும் பிரபாகரனுடன் பாலசிங்கம் அவர்கள் இருக்கும் படத்தை வெளியிட்டு அதே மாதிரி படத்தில் பலசிங்கத்திற்கு பதிலாக பாரதிராயா இருக்கிறார். இதில் எது உண்மை?

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் காணும் படத்தில் இவர் பிராகரனுடன் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் இது கிராபிக் என்று சொல்கிறார்கள். இதை மாற்று ஊடகமொன்றும் பிரபாகரனுடன் பாலசிங்கம் அவர்கள் இருக்கும் படத்தை வெளியிட்டு அதே மாதிரி படத்தில் பலசிங்கத்திற்கு பதிலாக பாரதிராயா இருக்கிறார். இதில் எது உண்மை?

அருமையான தேடல். தொடருங்கள் தங்கள் பணியை

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. படம் உண்மையானது என நினைக்கின்றேன். ஏற்கனவே அவ்வாற படம் வந்து, தினக்குரல் இணையத்திலும் பாரதிராஜா சென்று வந்த நேரம் பேட்டியைப் போட்டிருந்தது.

பாரதிராஜா சென்று வந்திருக்கிறார் ஆனால் அந்த படம் கணிணிக்கலவை செய்தது

பாரதிராஜா சென்று வந்திருக்கிறார் ஆனால் அந்த படம் கணிணிக்கலவை செய்தது
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
  • கருத்துக்கள உறவுகள்

கீழ் காணும் படத்தில் இவர் பிராகரனுடன் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் இது கிராபிக் என்று சொல்கிறார்கள். இதை மாற்று ஊடகமொன்றும் பிரபாகரனுடன் பாலசிங்கம் அவர்கள் இருக்கும் படத்தை வெளியிட்டு அதே மாதிரி படத்தில் பலசிங்கத்திற்கு பதிலாக பாரதிராயா இருக்கிறார். இதில் எது உண்மை?

இந்த விடயம் மாறுபடுமானால் வடிவேலு சாரின் போஸ்டர் மேல் என்ன விழும் தெரியுந்தானே வெள்ளை ஷேட் எல்லாம் அதோ கதிதான்

  • தொடங்கியவர்

வடிவேலு சொன்ன படம் எங்கே? என்னால் பார்க்க முடியவில்லை.... தனிமடலிலாவது அனுப்பவும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

praba_original.jpg

praba-1.jpg

அதனை நானும் பார்த்தனான் ஆனால் அந்த இணையத்தில் நிதர்சனம் இணையம் வெளியிட்டதாய் எழுதினார்கள் ஆனால் இது ஆனந்த விகடன் வெளியிட்டது அந்த பக்கத்தை இந்த இணப்பில் தரவிரக்கம் செய்யலாம் http://www.megaupload.com/?d=QJY4XR22

http://www.megaupload.com/?d=QJY4XR22

அன்புடன்

ஈழவன்

லக்கி என்ன சுப்பிரமணி சுவாமிட்டை குடுக்கிற பிளானோ படத்தை? :wink: :(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரே குழப்பமாக இருக்குது :roll:

லக்கி என்ன சுப்பிரமணி சுவாமிட்டை குடுக்கிற பிளானோ படத்தை? :wink: :(
:lol::D:D:D:D:D:D:D:D நல்ல அரசியல் கொமடியன் அவர் :D:D:D:D

தமிழ்நாதம் போட்டிருந்த இணைப்பு...!

http://www.tamilnaatham.com/pdf_files/braj..._2006_09_01.pdf

ஆனந்த விகடனை இணையத்தில் படிக்கிறவைக்காக..

http://www.vikatan.com/av/2006/sep/10092006/av0203.asp

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

br0enlargeul1.jpg

br1enlargeod5.jpg

br2enlargeun5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கு நன்றி விஸ்ணு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது சந்தேகம் தீர்ந்தது! தீர்த்து வைத்தவருக்கு 1000 பொற்காசுகள் பரிசாக வழங்குமாறு கட்டையிலிடுகிறேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு சார் பொற்காசு எல்லாம் கொடுப்பது அந்தக்காலம் 1000 பவுண் கொடுக்க சொன்னால் சரியா இருக்கும்

விஷ்ணு, படங்களிற்க்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்ணு அருமையான படம். நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜாவின் ஈழப்பயணம் எந்த வகையில் முக்கியம் வாய்ந்தது என யாராவது விளக்குவேர்களா?

படங்களுக்கு - நன்றி .....

ஆமா விஸ்ணு எங்கே போனிங்களாம்?

ஆளையே காணம்! 8)

பாரதிராஜாவின் ஈழப்பயணம் எந்த வகையில் முக்கியம் வாய்ந்தது என யாராவது விளக்குவேர்களா?

எப்பிடி விளக்கலாம் - மத்தவங்கன்னு எதிர்பார்க்கிறீங்க?

பயணம் செய்தது அவர்- அதற்குரிய ஒழுங்குகளை செய்ததும் - இங்க யாரும் இல்ல .......

அப்புறம் எப்பிடீங்களாம்? 8)

இந்த விடயம் மாறுபடுமானால் வடிவேலு சாரின் போஸ்டர் மேல் என்ன விழும் தெரியுந்தானே வெள்ளை ஷேட் எல்லாம் அதோ கதிதான்

:):lol::D:lol:

லக்கிலுக் விஷ்ணு இணைப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.