Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் ஆணையர் 'விரிவான' விசாரணை நடத்தலாம்

Featured Replies

120228155355_unhrc_session_304x171_reute

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்திற்கு விசாரணை அதிகாரம் கிடைத்தது

 

இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா, வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கையை ஆதரித்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட மற்ற 12 நாடுகளும் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிகொண்டன. ஒதுங்கிக் கொண்ட நாடுகளில் எதியோப்பியா, குவைட், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அடக்கம்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக தீர்மானத்தை முன்வைக்கும் நாடுகள் சார்பில் பேசிய அமெரிக்கா, இலங்கை மீதான விசாரணையை மனித உரிமைகள் உயர் ஆணையர் ஏற்கவேண்டும் என்ற தீர்மானத்தின் கோரிக்கையை முன்மொழிந்தார்.

நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணை

130830131037_pillay_rajapaksa_304x171_pr

மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்

 

'இரண்டு தரப்பினராலும் புரியப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது' என்றார் அமெரிக்கப் பிரதிநிதி.

இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றியும் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியுள்ளது.

இலங்கை இந்தத் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது.

'இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அபாயகரமான முன்னுதாரணமாக அது அமைந்துவிடும். அதாவது இந்த ஆணையத்தின் நடைமுறைகளை மீறி குறுக்கு வழிகளில் தங்களின் வேலைகளை முன்னெடுத்துச் கொள்வதற்கு சில நாடுகளுக்கு வழிகிடைத்துவிடும்' என்றார் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க.

தீர்மானத்தில் பொருத்தமான நிபுணர்கள் தொடர்பில் கூறப்படுகின்ற ஏற்பாடு தெளிவின்றி இருப்பதாக் கூறிய இலங்கைப் பிரதிநிதி, அதன்மூலம் மூன்றாவது தரப்பு சக்திகள் இலங்கையின் விவகாரத்தில் நுழைந்துவிடுவதற்கும் கதவுகள் திறக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பம் முதலே இலங்கைக்காக முன்னின்று குரல் கொடுத்துவந்த பாகிஸ்தான் இன்றும் அந்தப் பணியைச் செய்தது.

'இலங்கை மீது இந்த தீர்மானத்தைக் கொண்டுவருகின்ற நாடுகளின் சொந்த மனித உரிமை விவகாரங்களைப் பார்த்தால் அவர்களுக்கு இலங்கை மீது பொறுப்பு சுமத்த முடியாது. அந்த நாடுகள் இங்கு மற்றவர்களின் பிரச்சனைகளில் நீதிபதிகளாக இருக்க முடியாது' என்றார் பாகிஸ்தானிய பிரதிநிதி.

இந்தியா மௌனம் கலைத்தது

140327163411_india_unhrc_304x171_www.ohc

'அடுத்தவர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் தீர்மானம்'- இந்தியா

 

இம்முறை ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆரம்பம் முதலே காத்துவந்த மெளத்தை இந்தியா இன்று போட்டு உடைத்தது.

'வரம்பு கடந்த அதிகாரத்துடன் கூடிய வெளிநாட்டு விசாரணை பொறிமுறைகளை அமைப்பது என்பது, 2006-இல் இந்த மனித உரிமைகள் ஆணையம் உருவாகக் காரணமாக இருந்த பொதுச் சபை தீர்மானத்தின்படி, பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு என்கின்ற இந்த ஆணையத்தின் தேவையை பிரதிபலிப்பதாக அமையவில்லை. அதனால் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறோம்' என்றார் இந்தியப் பிரதிநிதி.

வாக்கெடுப்பு நிலைக்கு சபை வந்தபோது, இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டது.

ஆனால், ஆணையத்தின் பொதுவான பட்ஜெட்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்க வழிசெய்யப்படும் என்றும் நிதிவிவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் இலங்கை மீதான தீர்மானத்தை தாமதப்படுத்தும் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் வாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்ட்டது.

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு வழிசெய்யக்கூடிய தீர்மானத்தின் 10-வது பந்தியை நீக்க வேண்டும் என்று கோரிய இலங்கைக்கு ஆதரவான கோரிக்கையும் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140327_genevavotefinal.shtml

 

இலங்கைக்க மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

 

John%20kerry_CI.jpg


இலங்கைக்க மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட இதுவே தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மனித உரிமை பேணல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண ஆதரவளிக்க தயார் என்பதே இந்த தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இலங்கை மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்குமாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்குதல்களுக்கு உள்ளானமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைவருக்காகவும் அமெரிக்கா குரல் கொடுக்கும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104842/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிராகரிக்கிறது என்று சொல்லிவிட்டது. இதற்கு என்ன அர்த்தம்? ஒத்துழைப்பு தரமாட்டோம் என்பதுதானே?

விட்டால் தாங்கள் செய்யும் மனித உரிமையையும் தட்டிக்கேக்க மனித உரிமைசபை வரும் எண்டு பயப்பிடுகிறது இந்தியா... சொல்கிறார் இந்திய இணை அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன்... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/03/21fc6a2e_sudarshananachiappandefendsindianstand_140327_sutharshanannaachiyappan_au_bb.mp3

இதை கேட்டு காங்கிரஸ்காறன் மேலை யாருக்கு கோபமே வரவில்லையோ அவர்கள் தான் தன்மானம் மிக்க உண்மை தமிழர்.... !!!

Edited by தயா

விட்டால் தாங்கள் செய்யும் மனித உரிமையையும் தட்டிக்கேக்க மனித உரிமைசபை வரும் எண்டு பயப்பிடுகிறது இந்தியா... சொல்கிறார் இந்திய இணை அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன்... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/03/21fc6a2e_sudarshananachiappandefendsindianstand_140327_sutharshanannaachiyappan_au_bb.mp3

இதை கேட்டு காங்கிரஸ்காறன் மேலை யாருக்கு கோபமே வரவில்லையோ அவர்கள் தான் தன்மானம் மிக்க உண்மை தமிழர்.... !!!

காஸ்மீருக்கும் இப்படி ஒரு நிலை வரும

சிரிலங்கனை போல்  இந்தியனும் அங்கு அநியாயம் செய்கிறான்

இலங்கை நிராகரிக்கிறது என்று சொல்லிவிட்டது. இதற்கு என்ன அர்த்தம்? ஒத்துழைப்பு தரமாட்டோம் என்பதுதானே?

 

ஆமாம். ஒத்துழைப்பு தரமாட்டார்கள். அதுவே நல்ல விடயம். அதுவே ஐநா அமைதிப்படை அங்கு வருவதற்கு வழி சமைக்கும். விசாரணைகள் மேலும் இறுகும் போது சிங்களவன் ஒரு இனக்கலவரத்தை தொடங்குவதற்கும் சாத்தியமுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் தாங்கள் செய்யும் மனித உரிமையையும் தட்டிக்கேக்க மனித உரிமைசபை வரும் எண்டு பயப்பிடுகிறது இந்தியா... சொல்கிறார் இந்திய இணை அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன்... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/03/21fc6a2e_sudarshananachiappandefendsindianstand_140327_sutharshanannaachiyappan_au_bb.mp3

இதை கேட்டு காங்கிரஸ்காறன் மேலை யாருக்கு கோபமே வரவில்லையோ அவர்கள் தான் தன்மானம் மிக்க உண்மை தமிழர்.... !!!

 

 

வாயில் நல்லா வருது. 

 

மூதேவி, இவனெல்லாம் ஒரு தமிழனா?? மத்தியில் ஆட்சியிலிருக்கும் இத்தாலி எருமையைக் காப்பதற்காக அப்பட்டமாக பொய்கூறும் இவனையெல்லாம் தமிழ்நாட்டில் இன்னும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்ல.

 

போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல்கள் பற்றிப் பேசவேண்டாம், மக்களின் அன்றாடப் பிரச்சினை பற்றி மட்டுமே பேசுங்கள் என்று முதலைக் கண்ணீர் விடும் இந்த அற்பப் பதர், மக்களின் அன்றாட வாழ்வு மேம்பாட்டிற்காக இதுவரை தான் தாங்கிககொண்டு நிற்கும் இத்தாலிய எருமையின் அரசு என்ன செய்ததென்பதைச் சொல்வானா?? முற்றான இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்ளும், அடக்குமுறைக்குள்ளும் வாழும் மக்களின் துன்பங்களைத் துடைக்க இந்த நாய் இதுவரை என்ன செய்தது.

 

இறந்தவர்கள் பற்றிப் பேசவேண்டாம், வாழ்வோரை வாழவிடுங்கள் என்று கூக்குரலிடும் இந்தப் பிறப்பு அங்கே மக்களி இன்றுவரை துன்புறுத்தி, திட்டமிட்ட ஒரு இனக்கொலையை தொடர்ந்தும் நடத்திவரும் பயங்கரவாத அரசை நியாயப்படுத்துகிறானேயன்றி நடந்த அக்கிரமங்களை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு முடிந்தளவிற்குக் கண்ணியமாக எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

கோபப்பட்டு ஆக போவது ஒன்றுமில்லை ,அண்ணாதுரை ,கருணாநிதி ,எம் ஜி ஆர் ,ஜெயலலிதா எல்லோருக்கும் அது தெரியும் டெல்கியின் கீழ் தான் தாம் என்று ,எம்மவர் இது எதுவும் விளங்காமல் எடுத்ததற்கும் ஆ ஊ என்பது .

 

தமிழ் நாட்டு காங்கிரஸ் நிலைமை பற்றி ஒரு அருமையான கட்டுரை ஆ .விகடனில் வந்திருக்கு .கட்டுரையின் கடைசி வசனம் இது

 

"டெல்கி ஆபிசில் இரண்டு வகை சென்ட் பாட்டில்கள் இருக்கும் /கருணாநிதியுடன் கூட்டு என்றால் அவருக்கு பிடித்த சென்ட் கொடுப்பார்கள் .ஜெயலிதாவுடன் கூட்டு என்றால் அவருக்கு பிடித்த சென்ட் கொடுப்பார்கள் .தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் டெல்கி போவது சென்ட் பாட்டில் வாங்கத்தான் "

இது புரியாமல் தமிழ் நாட்டு ,இந்திய அரசியல் இல்லை .

ஆமாம். ஒத்துழைப்பு தரமாட்டார்கள். அதுவே நல்ல விடயம். அதுவே ஐநா அமைதிப்படை அங்கு வருவதற்கு வழி சமைக்கும். விசாரணைகள் மேலும் இறுகும் போது சிங்களவன் ஒரு இனக்கலவரத்தை தொடங்குவதற்கும் சாத்தியமுண்டு. 

 

இலங்கைக்கு ஐ.நா படைகள் வர அறிகுறி இல்லை... தேவை என்றால் NATO  படைகள் வரலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு மிகத் தெளிவான செய்தி எப்பொழுதோ சொல்லப்பட்டுவிட்டது,

 

'சுதந்திரம் வேண்டும்' என விரும்பினால் இந்தியாவை மீறித்தான் ஈழத் தமிழர்கள் வேறு பொறிமுறைகளில் ராசதந்திரத்தோடு பெறவேண்டும். பொந்தியா எப்பொழுதும் முட்டுக்கட்டை போடத்தான் செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.