Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிப்பிள்ளையின் நாய் கூட எம்மை விசாரிக்க முடியாது திட்டவட்டமாகக் கூறுகின்றார்; அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lop.jpg

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளகச் செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை.  நவிப்பிள்ளை அம்மையார் மட்டு மல்ல, அவரது நாய் கூட இலங்கைக்கு வந்து விசாரணை செய்ய அனுமதிக்க மாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

 
பதுளையில் நேற்று நடந்த வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: ""தற்போது ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏன் நாம் அதனை எதிர்க்கின்றோம்?. எமக்கென்று மகத்துவம் உள்ளது. நாட்டில் உள்ள உள்ளக விவகாரங்களில் வெளித் தரப்பினர் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.
 
எமது வீட்டில் பிரச்சினை இருந்தால் நாம்தான் அதற்குத் தீர்வு காண வேண்டும். எமது நாட்டில் பிரச்சினை இருந்தால் நாம் தான் அதற்கும் தீர்வு காண வேண்டும். அதன் காரணமாகவே ஜனாதிபதியும் எமது அரசும் சர்வதேச சதிகளுக்கு எதிராக அந்தப் பிரேரணைக்கு எதிராக ஜெனிவாவில் போராடினோம்.
 
பிள்ளை அம்மையார் அல்ல, அவரது நாய் கூட இலங்கைக்கு வந்து விசாரணை செய்வதற்கு நாம் இடமளிக்கோம் என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­, நாட்டின் சுயாதீனத் தன்மை, இறைமை மற்றும் மகத்துவத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் அபிமானத்தைப் பாதுகாப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒருவராவார். என்று தெரிவித்துள்ளார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=508672839007775942

நாய்களை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.

மகா நாய்யக்கர்களை தொழுபவர்கள் ஆயிற்றே

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி விழுந்து கும்பிட்டேனும் அல்லது இப்படி அறிக்கை விட்டேனும் பிரதமர் பதவியை எடுக்கலாம் என சிறிபால பகல் கனவு காண்கிறார். பதவிகள் எல்லாம் மகிந்த குடும்பத்துக்குள் தான் என்பதை சிறிபாலா எப்போ உணாப்போகிறார்?

 

Nimal%20Sripala_CI.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் போல ஆட்கள் அமைச்சில் இருக்கும் வரை நபிபிள்ளையின் நாய் கூட இலங்கை வர யோசிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ்.. கருணா மாதிரி கூப்பிட முதலே வாலைச் சுருட்டிக்கொண்டு.. மகிந்த காலில விழுந்து நக்கிற நாய்கள் என்று நினைச்சுக் கொண்டார் போல. இது நவிப்பிள்ளை வீட்டு நாய்.. அதுக்கு கொஞ்சம் என்றாலும்.. மானம்.. ரோசம் இருக்கும். நிச்சயம் அது சிறீலங்காப் பக்கமே வராது. ஆனால் விசாரணை வரும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கிளஸ்.. கருணா மாதிரி கூப்பிட முதலே வாலைச் சுருட்டிக்கொண்டு.. மகிந்த காலில விழுந்து நக்கிற நாய்கள் என்று நினைச்சுக் கொண்டார் போல. இது நவிப்பிள்ளை வீட்டு நாய்.. அதுக்கு கொஞ்சம் என்றாலும்.. மானம்.. ரோசம் இருக்கும். நிச்சயம் அது சிறீலங்காப் பக்கமே வராது. ஆனால் விசாரணை வரும். :)

விசாரணைகளும் நீர்த்துப் போகுமோ தெரியாது.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, இது ஏதோ சிறிலங்காவை கேட்டுத்தான் விசாரணை என்பது போல் அவனும் கதைக்கிறான், நாங்களும் கருத்து எழுதிறம், இது அவன் விரும்பைனாலும், விரும்பா விட்டாலும் நடக்கும், தண்டனை வழங்கப்படும், இறுதியில் தமிழ் ஈழம் மலரும், ச்லொபடான் மிலொசவிக்கையும், ரடவான் கரஜிக்கையும்,ரட்கொ மிலாடிக்கயும், நாசிகளையும் என்ன அவர்களது அனுமதி பெற்றோ விசாரித்தவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.