Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்தை, வீட்டில் சந்தித்தார் நரேந்திர மோடி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13-rajini-modi-600-jpg.jpg

 

நடிகர் ரஜினிகாந்தை, வீட்டில் சந்தித்தார் நரேந்திர மோடி!!

 

சென்னை: சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

 

காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை.

 

தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார்.

 

கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானத்தில் சென்னை வந்தார் மோடி. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நரேந்திர மோடி சென்றார். அவரை ரஜினிகாந்த் தமது குடும்பத்தினருடன் வரவேற்றார்.

 

இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மோடிக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந் ஆதரவு கொடுத்த எவரும்  தேர்த்தலில் வென்றதாக சரித்திரம் இல்லையாம். வரலாற்றை புரட்டி பார்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந் ஆதரவு கொடுத்த எவரும்  தேர்த்தலில் வென்றதாக சரித்திரம் இல்லையாம். வரலாற்றை புரட்டி பார்க்கவும்.

 

ஐயையோ....

அப்ப மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா... :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ....

அப்ப மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா... :o  :lol:

 

 

தமிழ் நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=oDWXLGtqVjE

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி தமிழகத் தேர்தலில்.. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று ரஜனி கருத்துச் சொல்லி.. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதில் சிறிய பங்களிப்புச் செய்திருந்தாரே..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந்த்...இவர் ஒரு நடிகன் மட்டுமே. மற்றும் படி இவர் எதுக்குமே லாயக்கு இல்லாதவர்.மற்றவர்களின் உழைப்பால் வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் எனும் பெயரால் வந்த புகழ் பணம் உயர்வு அனைத்தையும் வைத்து இவரை ஒரு பெரிய மனிதனாக்குகின்றார்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
மோடி பவர்ஃபுல் லீடர்: சந்திப்புக்கு பின்னர் ரஜினி புகழாரம்!

 

 

modi-Rajini.jpgபா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை  நேற்று (13-04014) அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் ஒரு சக்திவாய்ந்த தலைவர்  (‘ பவர்ஃபுல் லீடர்’  ) என்று ரஜினி புகழாரம் சூட்டினார். 

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். அவர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அப்பொழுது வீட்டிற்கு வந்த மோடிக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்தித்ததாக பாஜகவினர் கூறினர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,  ” ‘மோடி பவர்ஃபுல் லீடர்’. நான் அவர் நலம் விரும்பி, அவர் எனது நலம் விரும்பி. இது நட்பு ரீதியான சந்திப்பு…அரசியல் இல்லை…’ என்று கூறினார்

 தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மோடி தன்னை சந்தித்ததை நினைவு கூர்ந்த ரஜினி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மோடியை தனது இல்லத்திற்கு வந்து தேநீர் அருந்துமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதனையேற்று மோடி இன்று தனது இல்லத்திற்கு வந்ததாகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் மேலும் தெரிவித்தார்.

செய்திமூலம் : விகடன்

ரஜனிகாந்த்...இவர் ஒரு நடிகன் மட்டுமே. மற்றும் படி இவர் எதுக்குமே லாயக்கு இல்லாதவர்.மற்றவர்களின் உழைப்பால் வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் எனும் பெயரால் வந்த புகழ் பணம் உயர்வு அனைத்தையும் வைத்து இவரை ஒரு பெரிய மனிதனாக்குகின்றார்கள்.  :)

 

இவ்வளவு பெரியாட்கள் சந்தித்தும் அதை வைத்து பிழைக்கதெரியாதவர் ரஜனி என்று சொல்லலாமா?

 

விஜயகாந்த் ரஜனியின் இடத்திலிருந்திருந்தால் எப்போதோ தமிழ்நாட்டின் முதல்வராகியிருந்திருப்பார்...அதன் பிறகு என்ன செய்திருப்பார் என்பது இப்போ தெரிகிறது தானே.....விஜய்/TR முடிந்து அடுத்த facebook கமேடியனாகி விட்டார்.......அது தான் ரஜனிக்கும் நடந்திருக்கும்..

 

ரஜனி  தான் அரசியலுக்கு வந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை என்று உணர்ந்து சாதரணமாகவே இருப்போம் என்று முடிவேடுதிருக்கக்கூடாது? இல்லை என்றால்..MGR, கருணாநிதி, JJ மாதிரியிருந்தால் தான் அரசியல் நடத்தலாம்...

 

ரஜனியின் மகள்களை பார்க்கவில்லையா? அவர்களே ரஜனியின் புகழை வைத்து பணம் பண்ண பார்க்கிறதை....மற்றவர்களும் அதற்காகவே வருகிறார்கள் என்பதும் ரஜனிக்கு விளங்காதா?

தன்னால் எது முடியும்..முடியாது...இந்தியா/தமிழ்நாடு அரசியல் செய்வது என்ன என்பது விளங்கியபடியால் ஒதுங்கி இருக்கிறார் என்று தான் எடுக்க வேண்டும்...

 

ரஜனி படங்களின் நடிப்பதையும் விட்டுவிட்டால்....சாகும் வரை மரியாதையாக இருக்கலாம்..அல்லது மகள்களால் கேவலப்பட நேரிடலாம்....

கொச்சடையான்..கோவிந்தாவாக போல் தெரிகிறது.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

விடயங்களை பார்க்கும் வகையில், பெரும்பான்மையான மக்களின் பார்வை ஒன்றிருக்கும், அதே விடயத்தை வேறு கோணத்தில் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனித்து வித்தியாசமாக பார்க்கும் சிலரும் உண்டு.

நாந்தானின் பார்வை அப்படித்தான் தெரிகிறது. :)

 

ஒருவேளை இதுதான் 'மாற்றுக்கருத்தோ'...? :o

பெரும்பான்மை கருத்துகளால்..இலங்கை, இந்தியாவில் ஒரு பிரயோசினமும் இல்லை...உள்ளதையும் கெடுகின்றோம்.....அதால் வந்த வயதெரிச்சலால் தான்..கொஞ்சம் வேறு கோணத்தில் சிந்திதால் என்ன என்று தான் (நிறைய தருணங்களில் அது எனக்கு உதவியாகவே இருந்திருக்கிறது....உ+ம்: வேலை இடங்களில் எங்களது வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை தீர்த்தத்திலும்...அவர்களின் நம்பிக்கையை வலுப்படுதியதிலும்....சொந்த பிரச்சனைகளை கூடியளவு தீர்த்தத்திலும்....

நான் பெரும்பான்மையுடன் சார்ந்தே இருப்பேன்..அனால் அவர்களின் முட்டாள் தனத்துக்கு ஒரு முள்ளாக....வேலையிலும் அப்படிதான் வீட்டிலும் அப்படிதான்... :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

விடயங்களை பார்க்கும் வகையில், பெரும்பான்மையான மக்களின் பார்வை ஒன்றிருக்கும், அதே விடயத்தை வேறு கோணத்தில் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனித்து வித்தியாசமாக பார்க்கும் சிலரும் உண்டு.

நாந்தானின் பார்வை அப்படித்தான் தெரிகிறது. :)

ஒருவேளை இதுதான் 'மாற்றுக்கருத்தோ'...? :o

சும்மா இருக்கிற மூ.தேவிக்கு பட்டுக்குஞ்சரம் கட்டி பறக்கவிடாதீங்க சார்
  • கருத்துக்கள உறவுகள்

.... ஒரு முள்ளாக....வேலையிலும் அப்படிதான் வீட்டிலும் அப்படிதான்... :)

 

vil-boude.gif

 

சும்மா இருக்கிற மூ.தேவிக்கு பட்டுக்குஞ்சரம் கட்டி பறக்கவிடாதீங்க சார்

 

innocent.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந் ஆதரவு கொடுத்த எவரும்  தேர்த்தலில் வென்றதாக சரித்திரம் இல்லையாம். வரலாற்றை புரட்டி பார்க்கவும்.

 

96 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு(அதிமுக) எதிராகக்குரல் கொடுத்தார். திமுகவுக்கு வாக்களிக்கச் சொன்னார். அத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழகத்தை பாதுகாக்க இதுதான் இறுதி வாய்ப்பு
 
நாளை  தேர்தல்.  தமிழகத்தின்  எதிர்காலத்தை  நிர்ணயம் செய்யப் போகின்ற  தேர்தல். ஆரவாரம் இல்லாமல்  பிரச்சாரம் முடிந்துள்ளது. 
ஆனால்  ஆரோக்கியமாக  அமைந்ததா  என்று பார்த்தால்  இல்லை என்றே  வருத்தமாக  சொல்ல வேண்டியுள்ளது.  மக்கள் பிரச்சினைகள் குறித்து, ஒரு அரசின் கொள்கைகள்  எப்படி இருக்க வேண்டும்  என்று விவாதிக்க வேண்டிய  பிரச்சாரத்தை  தரம் கெட்ட தனி நபர் தாக்குதலாக ஆளும் கட்சி மாற்றி விட்டது. 
 
யதார்த்தமான நகைச்சுவை நடிகராக அனைவராலும் ரசிக்கப்பட்ட 
வடிவேலுவின் விஜயகாந்த் மீதான ரசக்குறைவான பேச்சுக்களே   திமுக  முக்கியமாக முன்னிறுத்தியது  என்பது அதன் வீழ்ச்சியைக் காண்பிக்கிறது.  அதிமுக மட்டும் நடிகர்களை பயன்படுத்தவில்லையா 
என்று சிலர் வேகமாக பின்னூட்டங்களில் பாயலாம். ஜெயா டிவி 
ஜெயா புராணம்தான்  பாடியதே  தவிர  கலைஞர் டிவி, சன் டிவி  
வடிவேலு, குஷ்பூ  வை முன்னுறுத்தியது போல நடிகர்களை அதிகம் 
காண்பிக்கவில்லை. 
 
சரி விஷயத்திற்கு வருவோம். 
 
ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி ஏராளமாக முன்னரே எழுதியுள்ளோம். 
ஊழலில் சிகரம் தொட்டது மட்டுமல்ல, அது பற்றிய விமர்சனங்களை 
ஜாதியைச்சொல்லி  திசை  திருப்ப  பார்த்த ஆட்சி. ஒரு அமைச்சர் 
சிறைக்கு சென்ற பிறகும், மனைவியையும் துணைவியின் மகளையும்
மத்திய புலனாய்வுத் துறை  விசாரித்த பிறகும் முழுப் பூசணி அல்ல பூசணித் தோட்டத்தையே ஒரு கவளம் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். 
 
தொலைக்காட்சி கொடுததால்  குடும்பத்திற்கு வருமானம், 
காப்பீட்டுத் திட்டம் என்றால் குடும்பத்திற்கு வருமானம், 
அரிசி வழங்கினால்  கடத்தல் மூலம் வருமானம், 
குடும்பத்தில் அனைவருக்கும் பதவி, 
அதனால் அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு,
முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை என்றால் 
முதலாளிகளுக்கு ஆதரவாக, 
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் மோதல் என்றால்
ஆதிக்க சக்திகளின் பக்கமாகவே 
ஆரவார முழக்கங்கள் அரைகுறையாக நின்று போனாலும் அதைப் 
பற்றி சிறிதும் கவலை கொள்ளாத 
 
அரசாக மட்டுமே திமுக அரசு இருந்தது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள இயலாத அரசு, சுய நலமா, மக்கள் நலமா என்றால் சுய நலம் மட்டுமே 
மேலோங்கிய ஒரு அரசு. 
 
இவர்கள் மீண்டும் வந்தால்  இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக்  கருதி  இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள். 
இவரின் பிரம்மாணடமான குடும்பத்தினரைத் தவிர தமிழகத்தில் 
வேறு யாரும் எந்த தொழிலும் செய்ய முடியாது. 
 
அன்று 1996 ல்  ரஜனிகாந்த் சொன்னதைத்தான் சொல்ல வேண்டியுள்ளது. 
 
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை  அந்த ஆண்டவனே  வந்தாலும் காப்பாற்ற 
முடியாது. 
 
மறவாதீர்! நம் ஒரு துளி மை மூலம் இவர்கள் 
அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.