Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி யுத்தத்தில் இந்திய இராணுவமும் போரிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செவ்வாய், ஏப்ரல் 15, 2014 - 13:49 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு
வன்னி யுத்தத்தில் இந்திய இராணுவமும் போரிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு
case%20file.png
ஈழத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இந்தியாவின் இராணுவத்தினரும் போரிட்டதாக தெரிவித்து, இந்திய உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியோ, அல்லது இந்திய ஜனாதிபதியின் அனுமதியோ இன்றி, இலங்கைக்கு எதிராக திறந்த யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்யாமல், எவ்வாறு இந்திய இராணுவத்தை அங்கு அனுப்ப முடியும் என்று இந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  
டெல்கி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  
 
தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை அதிகள் தொடர்பில் ஆய்வு செய்ததாகவும், இதன் போது, பெரும்பாலானவர்கள், சீக்கியர்களின் தொப்பியை அணிந்த ஒரு இராணுவ கட்டளை அதிகாரி, இந்திய இராணுவத்தை வழிநடத்தியதாக தெரிவித்துள்ளார்.  
 
இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளை இந்திய அரசாங்கம் யாருடைய அனுமதியும் இன்றி, இலங்கைக்கு அனுப்பி போரிட செய்துள்ளமைக்கான அனைத்து ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக தனியான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தமது மக்கள்நலன் வழக்கில் கோரியுள்ளார். 
 
இந்த வழக்கு எதிர்வரும் 17ம் திகதி விசாரணைக்கு வருகிறது. http://www.pathivu.com/news/30585/57//d,article_full.aspx
 
  • கருத்துக்கள உறவுகள்

சரியான நடவடிக்கை.. சார்க் மாநாட்டுக்கு தலைப்பா சிங்குக்கு பாதுகாப்பு என்கிற பெயரில் போன 9000 இராணுவம் ஈழத்தில் என்ன செய்தது என்கின கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

சரியான நடவடிக்கை.. சார்க் மாநாட்டுக்கு தலைப்பா சிங்குக்கு பாதுகாப்பு என்கிற பெயரில் போன 9000 இராணுவம் ஈழத்தில் என்ன செய்தது என்கின கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

 

புலிகள் போரிடுவதை தவிர்த்து இறுதிவரை தற்காப்பு நிலையிலேயே இருந்து இறுதியில் ஆயுதங்களை மௌனித்ததும் அதனால் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

158926350sarath-fonseka(2).jpg

 

இலங்கை யுத்த களத்தில் இந்திய இராணுவமா? 'முழு பொய்' - சரத் பொன்சேகா

 

 

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யுத்த களத்தில் இந்திய இராணுவம் இருந்ததாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இறுதிக் கட்ட யுத்தத்தில் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்திய இராணுவம் யுத்தக் களத்தில் இருந்ததாகத் தெரிவித்து இந்திய உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் ´பிபிசி சந்தேசியா´விற்கு கருத்து வெளியிடுகையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்ற அனுமதி இன்றி வேறு நாட்டுக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவது அரசியல் யாப்பை மீறும் செயல் என டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். 

இலங்கை யுத்தத்தில் இந்திய இராணுவம் பங்கேற்றமைக்கான சாட்சி இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். 

இந்நிலையில், உலகில் உள்ள பல நாடுகளின் ஊடாக தமக்கு தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் சில நாடுகள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இலங்கை யுத்தத்திற்கு இந்தியா இடையூறு ஏற்படுத்தவில்லை என அவர் கூறினார். 

 

http://tamil.adaderana.lk/news.php?nid=55049

இந்திய இராணுவம் போரில் ஈடுபடுத்தப் படவில்லை என்பதுதான் எனது யூகமும்.

இந்திய இராணுவம் போரில் ஈடுபடுத்தப் படவில்லை என்பதுதான் எனது யூகமும்.

இறைவன், இராணுவ தலைமையக அடி நேரம் காயப்பட்ட இந்திய அதிகாரிகளை மறந்துவிட்டீர்களா?

சிறி லங்கா ஜெனோசைட் அதிகாரிகள் பொய் சொன்னாலும் காயப்பட்ட இந்திய அதிகாரிகளின் பெயர்கள் வந்தது.

மரபு போருக்கு கட்டளை அதிகாரிகள் முக்கியம். கொங்கிரஸ் குடும்பம் 300 இந்திய அதிகாரிகளை அனுப்பியது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் போரில் ஈடுபடுத்தப் படவில்லை என்பதுதான் எனது யூகமும்.

 

 

எதை வைத்து அப்படி யூகித்தீர்கள். இந்திய அதிகாரிகளும் போர்க்களத்தில் இருந்த படங்களைப் பார்த்தோமே. வவுனியாவில் இந்திய ராடரை இயக்கியவர்கள் இந்திய விமானப்படை வீரர்கள்தான் என்பதும், புலிகளின் தாக்குதலில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதும் நினவிலிருக்கிறதா?? 

 

சரி, இவை எல்லாவற்றையும் விடுங்கள். 1987 இல் இலங்கைக்கு வந்த சீனப்படையா?? 

 

பிறகு, எந்த அடிப்படையில் இந்தியப்படை இலங்கைக்கு வராது என்று சத்தியம் செய்கிறீர்கள்? நேற்று கேணல் ஹரிகரன் வழங்கிய செவ்வியைப் படித்துப் பாருங்கள். அதில் இந்தியப்படையை அனுப்புவதில் எந்த தவறும் இல்லை. பிரதமருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று சர்ட்டிபிக்கேட் கொடுத்திருக்கிறாரே??? 

 

"என்று தணியுமிந்த இந்திய மோகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ??"

இறுதி யுத்தம் பற்றித்தான் இங்கு கதைக்கின்றார்கள் (அது கூட சிலருக்கு விளங்கவில்லை )

 

வேறு எந்த நாட்டு போர்வீரர்களும் நேரடியாக பங்குபெறவில்லை என்பது உலகறிந்த உண்மை .

 

எங்கட ஆட்களின்ரை கதை தெரியும் தானே ?

உலகில் மூன்றாவது பெரிய இராணுவத்தை துரத்தினாங்கள்,

இருபத்திஐந்து நாடுகள் சேர்ந்து அடித்தது ஆனா படியால் தான் தோற்றனாங்கள் .

தலைவர் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் கொழும்பு எரிந்திருக்கும் .

பொதுமக்கள் இழப்பை தவிர்க்கத்தான் ஆயுதங்களை மௌனித்தனாங்கள் .(நடேசன் ,இளந்திரையன் பேட்டிகள் நாங்கள் மறக்கவில்லை )

ஈழமுரசு இன்னமும் எழுதிக்கொண்டிருக்கு எம்மவர் இன்னமும் வாசித்து புளகாங்கிதம் அடைகின்றார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் போரில் ஈடுபடுத்தப் படவில்லை என்பதுதான் எனது யூகமும்.

 

இந்த வழக்கிலும் சந்தேகம் இருக்கிறது. இந்த வழக்கு ஈழ இன அழிப்பில்.. சர்வதேச விசாரணை ஒன்று வரவுள்ள நிலையில்... இந்திய இராணுப் பங்களிப்பை மறுக்கச் செய்ய.. அதன் மூலம்.. இந்தியாவை காப்பாற்ற போடப்பட்ட ஒன்றோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் அத்தகைய ஒரு எச்சரிக்கையோடு இந்த வழக்கின் பெறுபேறுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

2009 வன்னி இறுதிப் போரில் இந்தியாவின் பங்களிப்பு நேரடியாகவே இருந்தது. இந்தியப் படை அதிகாரிகள் உட்பட  7 நாட்டு படை அதிகாரிகள் களத்திற்கு விசயம் செய்து சிக்கலான கள நிலமையை தகர்ப்பது எப்படி என்று சிங்களத்துக்கு நேரடி ஆலோசனை வழங்கினர். இன்றேல்.. இதே பொன்சேகா முன்னர் ஒத்துக் கொண்ட படி.. கிளிநொச்சிக்குள் நுழைய முதலே சிங்களப் படைகள் ஓட நேரிட்டிருக்கும்.

 

ஈழப் போரின் இறுதியில்..

 

1. இந்தியா நேரடியாக இராணுவ தொழில்நுட்ப வல்லுனர்களை இயக்கியது. மிக் விமானங்களை வழங்கியது. ஓட்டிகளை வழங்கியது. கடல் கண்காணிப்பு கப்பல்களை வழங்கியது. வீரர்களை வழங்கியது. பிற விமானக் கண்காணிப்பு சாதனங்களையும் வழங்கியது.

 

2. இந்தியா யுத்த வலயத்துக்கு அப்பால்.. பல மைல்களுக்கு அப்பால்.. பாதைத் தொடர்புகள் இல்லாத நிலையில்.. திருமலையில்) ஒரு சிறிய மருத்துவ முகாமை நிறுவி.. யுத்த வலயத்தில் மக்கள் இறக்க வழி சமைத்துக் கொடுத்தது. இந்தியாவின் இந்தச் செயல் சர்வதேசச் செஞ்சிலுவை.. மற்றும் ஐநா கோரிக்கைகளை கோத்தபாய வெகு இலகுவாக நிராகரிக்க முடிந்ததோடு.. யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களை அப்புறப்படுத்தும் பணியைக் கூட செய்ய முடியாத சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது. இது இந்தியா செய்த பெரும் கயமை. அநியாயம்.

 

3. யுத்தத்தின் மிக இறுதிக் கட்டத்தில்.. இந்திய ரோ.. கண்காணிப்பு விமானங்களை வன்னியில் பறக்கவிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.. இஸ்ரோ தனது செய்மதிகளூடாக வன்னியை 24/7 கண்காணித்து தகவல் வழங்கிக் கொண்டிருந்தது. இதன் கீழ் தான் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இராணுவத் தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளை முற்றாக அதன் தலைமைத்துவத்தோடு அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. பொது மக்கள் இழப்புக்கள் சர்வசாதாரணமாக மறைக்கப்பட்டன.

 

4. யுத்த நிறுத்தமே செய்யாமல்.. யுத்த நிறுத்த அறிவிப்பை செய்து.. உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி.. தமிழ் மக்களை இராணுவ அழிவுக்குள் இட்டுச் சென்றது இந்தியா.

 

5. சார்க் மாநாட்டோடு.. இந்திய இராணுவ வீரர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு.. கொழும்பின்... மாநாட்டின் பாதுகாப்பு கருதி.. போர்க்களத்தில் இருந்து சிங்களப் படைகள் நகர்த்தப்படுவதை இந்தியா கவனமாக இருந்து தடுத்துக் கொண்டதோடு முன்னாள் இந்திய இராணுவ பாதுகாப்புத்துறை ஆலோசகர்கள் அடிக்கடி சிறீலங்காவிற்கு விஜயம் செய்து தேவையான ஆலோசனைகளை வழக்கிக் கொண்டும் இருந்தனர். சிறீலங்கா அதிகாரிகளும்.. டெல்லிக்குப் பறந்தபடி இருந்தனர். பொன்சேகா மட்டும்.. 10 தரம் பறந்திருப்பார். இப்ப ஏன் அசையாமல் கிடக்கிறார் என்று பதில் சொல்வாரா..??!

 

6. பாக்குநீரிணையில்.. இந்திய கடலோரப்படையும் சிறீலங்கா கடற்படையும் கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு.. ஆழ் கடலில்.. இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்தி போர்க்களத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்களையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்தும் சுட்டும் சிறீலங்கா கடற்படை அவர்களைக் கைது செய்ய உதவியது. (முன்னர் ஆழ் கடலில்.. புலிகளின் வழங்கல் கப்பல்கள் அழிக்கப்பட இந்தியா கடற்படை நேரடியாகவும் அமெரிக்கா தகவல் பரிமாற்றம் மூலமும் சிறீலங்காவிற்கு உதவி இருந்தன.) இது குறித்த சாட்சியம் அண்மையில்.. வவுனியா நீதிமன்றிலும் மக்களால் வழங்கப்பட்டிருந்தது.

 

7. யுத்த காலத்திலும் அப்புறமும்.. இந்திய மண்ணில் சிங்களப் படைகளுக்கு பயிற்சியும்.. போதனைகளும் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

 

8. இது எல்லாத்திற்கும் மேலாக சர்வதேச மனிதாபிமான நடைமுறைகள் யுத்த களத்தை வந்தடைய முடியாதபடி.. ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து சிங்கள இராணுவம்.. இந்த யுத்தத்தை தானும்.. இந்தியாவும் விரும்பும் வடிவில் முடிக்க அன்று உதவிய இந்தியா அதை இன்று வரை தொடர்ந்தும் வருகிறது.

 

இப்படிப்பட்ட இந்தியா.. இராணுவத்தை அனுப்பி இருக்காது என்று எதனை வைச்சு ஊகிக்கிறீர்கள் இறைவன்..????! :icon_idea::rolleyes:

 

India offers joint air-defence exercise to Sri Lanka

[TamilNet, Thursday, 20 December 2007, 16:46 GMT]

The top-level visiting Indian defence delegation to Sri Lanka to review the ongoing bilateral defence cooperation has offered assistance in the form of "joint air-defence exercises" to face any threats posed by the aerial capability of the Tigers, according to highly placed sources in Colombo. Indian Defence Secretary Vijay Singh who called on Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapaksa in Colombo early this week has made the offer. The delegation arrived in Colombo last Sunday and left the island Wednesday after meeting with the Commanders of the Sri Lankan Army, Air Force and Navy.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24050

 

------------------

 

Happy, but not content: Sarath Fonseka on Indian military help

 

[TamilNet, Tuesday, 04 March 2008, 17:50 GMT]

 

Sri Lanka Army Chief Lt. Gen. Sarath Fonseka, who is on a six-day official visit to India, on Tuesday admitted that both the countries enjoyed a sound military relationship according to reports in the Indian media.

 

"Militarily we have very good relationships for long time and we hope to continue relationships that we are having right now. We are very happy with that," he told mediapersons after inspecting a Guard of Honour at the Indian Defence Ministry headquarters. "The relations between both countries are good at the political level but need to be increased at the military level," he said having met his Indian counterpart Gen. Deepak Kapoor on Tuesday afternoon.

 

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24856

 

---------------------------

 

SLAF personnel being trained in Tamil Nadu

 

[TamilNet, Tuesday, 03 February 2009, 18:13 GMT]

 

Eight pilots of the Sri Lankan Air Force (SLAF) are presently undergoing training at the Indian Air Force base at Thaamparam (Tambaram) near Chennai in Tamil Nadu, highly placed sources told TamilNet. News of this training spread like wildfire when the Sri Lankan Airforce personnel were taken Monday to the Chealaiyoor (Selaiyur) police-station for visa verification purposes. "People of Tamil Nadu need no further proof that this war of decimating Tamils in Sri Lanka is being undertaken at India's insistence and instructions. This confirms our fears that Indian troops have also been sent to fight there," a veteran Tamil activist told TamilNet.

 

SLAF_in_TamilNadu_76200_445.jpg

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28282

 

--------------------------

 

Tamil activists besiege Tanjore Air Force base.

 

[TamilNet, Saturday, 31 January 2009, 13:44 GMT]

 

More than a 1000 Tamil activists belonging to various political organizations and social movements laid siege to the Tanjore Air Force base Saturday morning violating prohibitive orders. The activists led by Periyar Dravidar Kazhagam President Kolathur T.S.Mani and Thamil Desiya Pothuvudamai Katchi (Tamil National Communist Party) General Secretary P. Maniarasan were protesting against the air-force base at Thanjavur being used by the Indian Army to supply lethal and non-lethal weaponry to Sri Lanka in its genocidal war on the Tamils.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28234

 

Tamil Nadu activists attack Indian Army trucks

 

[TamilNet, Saturday, 02 May 2009, 18:06 GMT]

 

Activists belonging to the pro-Tamil nationalist Periyar Dravidar Kazhagam (PDK) attacked a convoy of military trucks of the Indian Army allegedly transporting weapons to Sri Lanka. Five trucks were damaged in the attack. Mortar shells were found in the trucks, sources in Chennai said.

 

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29248

 

---------------------------------

 

India imparts secret training to SLA

 

[TamilNet, Monday, 11 February 2008, 08:25 GMT]

 

According to a report in the 'Times of India', a high-level team from the Sri Lanka Army (SLA) and Sri Lanka Military Intelligence Corps (MIC) were "brought stealthily into Pune five days ago for advanced intelligence training at Indian Army's various high-security institutions." The team is expected to be briefed on advanced electronic warfare, command, control, communications and computer intelligence at the Military Intelligence Training School and Depot (MITSD), the only institution of the Indian Army which imparts training in all aspects of intelligence.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24619

 

இப்படி நிறையச் செய்திகள் உள்ளன.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வன்னி யுத்த வலயத்தில் பிரசன்னமாகி இருந்த சில இந்திய அதிகாரிகளின் புகைப்படங்கள் இவை..

 

6123447797_d9275a3389_z.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்.. இந்தியா இராணுவ ரீதியில் சிறீலங்கா போரில் வெல்ல உதவியதாக வை.கோ போன்ற தலைவர்களும் ஜஸ்வன் சிங்கா போன்ற முன்னாள் இந்திய அமைச்சர்களும் குற்றம் சுமத்தி வந்துள்ளனர். தங்களிடம் இவை தொடர்பான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறி வந்துள்ளனர். :icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை யுத்தத்தில் இந்திய இராணும் பங்கேற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்த மனு விசாரணைக்கு..
17 ஏப்ரல் 2014
 
2ஆம் இணைப்பு:-
 
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் மேற்கொண்ட யுத்தத்தின் போது, இந்திய இராணுவமும் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
சீக்கியர் ஒருவரின் தலைமையில் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்திய படையினர் களமுனையில் போராடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இது தொடர்பிலான நேரில் கண்ட சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், சில இந்திய படைவீரர்கள் மோதல்களின் போது காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ராம் சங்கர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
 
இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் இரகசியமான முறையில் இலங்கை யுத்தத்தில் இந்திய படையினர் பங்கேற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
பாதுகாப்பு, வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சுக்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்திய படையினர் இலங்கை யுத்தத்தில் பங்கேற்றமைக்கு சர்வதேச ரீதியான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
 
இந்த மனு மீதான விசாரணைகளை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 
 இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இந்திய படையினருக்கு காயம் ஏற்பட்டது:-
 
15-04-2014  - 14:10
 
இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்திய படையினருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
2009ம் ஆண்டில் இலங்கைப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது, இந்திய படையினர் பங்கேற்றனர் எனக் குறிப்பிடப்படுகிறது.
 
இந்திய படையினர் இலங்கை யுத்தத்தில் பங்கேற்றதாக இந்திய நிதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
இலங்கை யுத்தத்தில் பங்கேற்ற இந்திய படையினருக்கு சிக்கியர் ஒருவர் தலைமை தாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்திய படையினர் யுத்தத்தில் பங்கேற்றமைக்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
பாராளுமன்றம் அல்லது ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்திய படையினரை வேறும் நாடுகளின் யுத்தத்தில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
இந்த சட்டவிரோத யுத்தத்தின் பின்னணியில் செயற்பட்டிருந்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம் சங்கர் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சட்டவிரோதமான முறையில் இலங்கை யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய படையினர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பங்கேற்றதாக சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் பல தடவைகள் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நோக்கத்திற்கு அன்றி வேறும் நோக்கங்களுக்கு படையினரை பயன்படுத்துவது இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பாதுகாப்பு அமைச்சு வெளிவிவகார அமைச்சு, உள்விவகார அமைச்சு மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எனது ஊகம் என்பது இங்தியப் படைகள் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து களத்தில் போரிடவில்லை என்பதுதான். மற்றும்படி 20 க்கும் மேற்பட்ட நாடுகள் சிறிலங்காவிற்கு புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு உதவிகள் புரிந்தன என்பது வெளிப்படையான உண்மை. அதை மறுப்பதற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.