Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு போடலாம் ஒட்டு...!?!

Featured Replies

முதல் ஒட்டு, முதல் தேர்தல். உள்ளாட்சியோ, மாநில தேர்தலோ அல்ல நாட்டின் அதிகார மிக்க தலைவரை தேர்ந்தேடுக்கக் கூடிய தேர்தல். இந்தியாவின் சுதந்திரத்தை பெற்று தந்த கட்சி என்ற பெருமைமிக்க கட்சி, சுதந்தர இந்தியாவை முழுக்க ஆண்ட கட்சி, காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை பட்டி தொட்டியேல்லாம் வேர் பரப்பிய காங்கிரஸ் கட்சி தன் இத்துணை கால அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் தோல்வியை இந்த தேர்தலில் எதிர்நோக்கியுள்ளது. நரேந்திர மோடியினது ஆட்சி நிர்வாகத்தினால் கிடைக்கும் ஒட்டுகளை விட காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்ற எண்ணத்தில் கிடைக்கும் ஒட்டுக்களே இந்த முறை பிஜேபியை வெற்றி பெற வைக்கப்போகிறது. காங்கிரஸிற்கு நன்றி கடன்பட்டவர்கள் ஒரு வகையில்.

இந்திரா காந்தி காலம் தொட்டு யாருக்கும் தனிப் பெருன்மான்மை கிடைத்ததில்லை. இந்த தேர்தலும் ஒன்றும் விதி விலக்கல்ல. வட கிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு கேரளா காஷ்மீர் என சில மாநிலங்களில் பிஜேபி இன்றளவும் செல்லாகாசு தான். அப்படியிருக்க தனி பெருன்பான்மை என்பது சாத்தியமில்லா ஒன்று. அமையப் போவது கூட்டணி அரசு, அதில் தமிழகத்தின் பங்கு என்ன? தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சியான தி.மு.க வும் அ.தி.மு.க வும் தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை. இது ஒரு சரித்திர நிகழ்வு. அ.தி.மு.க ஒருபடி மேலே போய் தனித்து நாற்பது தொகுதியிலும் போட்டியிடுகிறது. எம்.ஜி.ஆர் கூட எடுக்காத துணிச்சலான முடிவு. சரி அப்படியே அதிக இடங்கள் கிடைத்தாலும் என்ன பயன்? அமையப் போவதோ மத்திய அரசு அதில் பங்கு கொள்ளப் போவதில்லை. அதிக இடங்கள் கிடைத்தாலும் பிஜேபி நிற்சயம் ஜெயலலிதாவின் ஆதரவை வேண்டி நிற்காது. கடந்த கால கசப்பனுபங்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அ.தி.மு.க வின் தயவில் ஆட்சி அமைப்பதும் புலி வாலை பிடிப்பதும் ஒன்று தான். மத்திய அரசில் அ.தி.மு.க வின் பங்கு என்பது பேராசையினால் காம்ரேட்களை துரத்தி விட்ட போதே நிர்மூலம் ஆக்கப்பட்டு விட்டது.

மத்தியில் ஆட்சி மாற்றம் எற்படுத்தக்கூடிய ஒரு தேசிய கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று எண்ணினால் பிஜேபியின் மதச் சார்பின்மை பல அச்சத்தை தோற்றுவிக்கிறது. எந்த ஒரு பெருன்பான்மையின ஆட்சியின் கீழ் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உணர்கிறார்களோ அதுவே ஒரு நல்ல அரசாங்கம் ஆகும். ராமபிரான் வனவாசம் முடிந்து நல்லாட்சி புரிந்த அயோத்தியில் முன்பு கோவில் இருந்தாக சொல்லப்படும் இடமும், முகலாய அரசு இந்தியாவில் வேறுன்ற காரணமாயிருந்த பாபரின் மசூதி உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் மீண்டும் ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் பிஜேபி அறிவித்திருப்பது இரு பெரும் இனங்களுக்குள் பகையையும், வன்முறையும் ஏற்படுத்த வல்லது. தேசிய கட்சியிரண்டும் நிராகரித்து விடலாம்.

இனி தமிழருக்கு அதிக நன்மை பயக்கக்கூடிய மாநில கட்சி எதாவது ஒன்றிற்கே ஒட்டு போடுவது உகந்ததாக தோன்றுகிறது.

கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள முடிக்கவே இன்னும் இரண்டு ஆண்டுகள் சரியாக இருக்கும் அம்மாவிற்கு. பால், பேருந்து, மின், பத்திரப் பதிவு கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்திதைத் தவிர வெகுஜன மக்களுக்கு நலன் நல்கும் எந்தவொரு திட்டத்தையும் அறிவித்த பாடில்லை. திமுக கடந்த பதிமூன்று வருடங்களில் மத்தியில் அங்கம் வகித்துவிட்டு கடைசியில் கழன்று கொண்ட கட்சி. இந்த பதிமூன்று வருடங்களில் தமிழர் வாழ்வு தடம் புரண்டு போனதற்கு முக்கிய காரண கர்த்தா இவர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த முறை நாட்டின் ஜோக்கர் என்றால் விஜயகாந்த் தமிழகத்தின் ஜோக்கர். தனதும், தன் கட்சியினதும் வளமான எதிர்காலத்தை சூனியமாக்கிய பெருமை அவரையே சாரும். பாமக சாதிய வெறியர்கள். தொல்.திருமாவளவன் தலித் ஒட்டுக்களை கொள்ளையிடும் கொள்கை மறந்த நவின அம்பேத்கர். காம்ரேட்கள் கம்யூனிச சிந்தனை மறந்த காலவதியான புரட்சியாளர்கள்.

தமிழ் இனத்தின் மீது எப்போதெல்லாம் தாக்குதல் நடை பெறுகிறதோ அப்போதெல்லாம் முதல் குரல் கொடுத்து போராட்டத்தை துவங்குபவர் வைகோ வாகத்தான் இருக்கும். முல்லைப் பெரியாறு, சிறுவானி நீர் பெற போரட்டம், ஸ்டெர்லைட் ஆலையை மூட போரட்டம், கெயில் எரிவாயுக் குழாய் எதிப்பு போரட்டம், சாஞ்சி வரை சென்று ராஜபக்சேவை எதிர்த்து போரட்டம், மது விலக்கு நடை பயணங்கள், தமிழர் எதிரான திரை படங்கள் தடை செய்ய போரட்டம், ஈழப் படுகொலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், விடுதலைப் புலிகள் மிதான தடை நீக்க சட்ட போரட்டம் என போரட்டமே வாழ்க்கையாக கொண்ட அரசியல்வாதி. எல்லாவற்றிக்கும் மேலாய் தூக்குக் கயிறை எதிர் நோக்கியிருந்த மூன்று தழிழரின் உயிர்காத்து தனித்து நிற்கும் வைகோவிற்கு ஒட்டை போட்டு விட நினைத்தால் இந்த தொகுதியில் மதிமுக போட்டியிடவில்லை. பாஜகா கூட்டணியில் போட்டியிடுவது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ஒருவர்.

ஒரே கன்பூசியன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ் ஆப் இன்டியா...!

இப்போது நீங்களே சொல்லுங்கள் யாருக்கு போடலாம் ஒட்டு...? ^__^

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில்...

  • காங்கிரஸ் கட்சிக்குப் போடவே முடியாது. வைக்கவேண்டியது முற்றுப்புள்ளி ஒன்றுதான். :icon_idea:
  • பாஜகவுக்குப் போடலாம் என்றால், கர்நாடகாவில் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், காவிரியில் தண்ணீர் தர மறுத்ததே.. இவர்களுக்கு எதற்கு உங்கள் வாக்கு? :wub:
  • திமுக வின் ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் பசுமையாக நினைவில் நிற்கவேண்டுமே.. ஊழல் பேர்வழிகளை ஆதரிக்க வேண்டுமா? ஈழத்தில் படுகொலை நடந்தபோது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தபடி மத்திய அரசைக் காப்பாற்றிக் கொடுத்த உதயசூரியனுக்கா உங்கள் வாக்கு?
  • அதிமுக மட்டும் என்ன சுத்தமான கட்சியா? அவர்களது ஆட்சியும் சுத்தமான ஆட்சிதானா? இல்லையே! சொத்துக்குவிப்பு ஊழலில் ஈடுபட்டவர்கள்தானே ஜெயலலிதாவும், அவரின் சுற்றமும்?
  • விஜயகாந்தின் தேமுதிகவின் கொள்கைகள் என்ன? குடித்துவிட்டு எதேச்சாதிகாரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டால் என்ன கதி என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
  • பொதுவுடமைக் கட்சிகள் பரவாயில்லை. ஆனால் அவர்களை ஆதரிப்பதால் திமுக போன்ற கட்சிகள் வென்றுவிட வாய்ப்பு உண்டு. வாக்குகள் சிதைந்துவிடும்.

ஆக, எந்தக் கட்சியும் நல்ல கட்சி இல்லை (நல்லகண்ணு அவர்களின் கட்சி தவிர்ந்து.) ஆனால், இந்தத் தேர்தலில் வாக்குச்சீட்டை துருப்புச் சீட்டாகக் கருதி மூலோபாய சிந்தனையுடன் (Strategic thinking) வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. :huh:

அந்த வகையில், அகில இந்திய அளவில் தமிழகத்தின் செல்வாக்கை உயர்த்த வேண்டியது அவசியம். அதற்கு இரண்டு தேரிவுகள் மட்டுமே உள்ளன.

1) திமுக

2) அதிமுக

சென்ற முறை திமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது தமிழகத்தின் செல்வாக்கை எந்த அளவுக்கு உயர்த்திவிட்டது என்பது நாமறிந்த ஒன்று. நீரா ராடியா, ராசா, கனிமொழி 2G ஸ்பெக்ட்ரம், சிபிஐ போன்ற சொற்கள் அகில இந்திய அளவில் பேசப்பட்டு தமிழகம் ஒருவித செல்வாக்கைப் பெற்றுக்கொண்டது.. :D ஆனால் தமிழர்களுக்கு தேவை அத்தகைய செல்வாக்கு அல்ல. மாறாக, கொள்கைகளில் மாற்றம் செய்யும் அளவுக்கு ஒரு செல்வாக்கு. அதுதான் காலத்தின் தேவை.

அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகள். கணிசமானவை. அந்தப் பலத்தினை அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது. :D மத்தியில் ஆட்சி அதிகாரம்.. அதில் தமிழர்களின் சொல்லும் அம்பலம் ஏறவேண்டும். அம்மாவின் கட்சியும் ஊழல் கட்சிதானே?? நீங்கள் கேட்கலாம். ஆனால் உடல் உபாதைக்கு நீங்கள் குடிக்கிற மருந்து எப்படி கசப்பானதோ, அதுபோல.. நாவில் கசந்தாலும், பொது நன்மை கருதி அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டிய வரலாற்றுக் கடமை ஒன்று தமிழர்களுக்கு உள்ளது. தமிழனின் எதிரியும், துரோகியும் தமிழகத்தில் அரசியல் பலம் பெற முடியாது என்கிற செய்திதான் அது.

தேர்தலுக்குப் பின் அம்மா தடம் மாறலாம். ஆனால் 2016 இலும் ஒரு தேர்தல் வரப்போகிறது என்பதை அவர் தெரிந்தே வைத்துள்ளார். தடம் மாறுபவர்களுக்கு அந்தத் தேர்தலில் ஒரு நல்ல படிப்பினையை வழங்கிவிடுங்கள். எல்லோரும் வழிக்கு வருவார்கள். ஆனால் இந்தத் தேர்தலில் ஏற்கனவே தடம் மாறிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் திமுகவை தண்டிக்கும் வகையில் வாக்களியுங்கள். :icon_idea: அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அக்கட்சியை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் உறவுகளே..! :D

770cae3e-a7cc-4401-9009-0ccea262b6fe_S_s

நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

10258531_623679451044541_769985264137360

தண்டி யாத்திரையின் போது,
சிந்திய இரத்தத் துளிகள்....!
ஜூலியன் வாலாவில்,
சிற்றாறாகி ஓடியது!

வெள்ளையனை,
வீட்டுக்கு அனுப்பிய,
வெற்றிக் கொண்டாட்டம்,
கலைந்து போக முன்னே....!

உள்ளூர் அரசியல்வாதி,
ஊரைச் சுரண்ட,
ஆரம்பித்து விட்டான்!

உலகத்தின்,
இரகசிய வங்கி கணக்குகளின்,
வைப்புக்களில்,
உனது அரசியல் வாதிகள்,
அள்ளிச் சுரண்டிய சேமிப்பு,
உனது தேசம் பட்ட கடனை விட,
பன்னிரண்டு மடங்காம்!

இந்தத் தாயின் பங்கும்,
அந்தச் சேமிப்புக்களுக்குள்,
நிச்சயம் புதைந்திருக்கும்!
 
மேலே இசை வடிவாக விளங்கப்படுத்தியுள்ளார்!
 
தமிழனின் பலம் மத்தியில் எதிரொலிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்! :D 
 
ஜெயலலிதாவுக்கும், சுவிஸ் பாங்கில கணக்கு இருக்குதோ எண்டு எனக்குத் தெரியாது!  :o 
 
  • கருத்துக்கள உறவுகள்

dayanidhi_maran_20050530.jpg

40 தொகுதியும்.... இரட்டை இலைக்கே, என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அம்மா 30 தொகுதியில் வென்றால் போதும், மிகுதி இடத்துக்கு வைகோ,

முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த வேலு போன்றோர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

மத்திய சென்னையில் போட்டியிடும்.... தயாநிதி மாறன், கட்டுக் காசு கிடைக்காமல்... செய்ய வேண்டும்.

எனக்கு அவனின் மூஞ்சையை பார்த்தாலே.... பிரசர் எகிறிக் கொண்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ் நாட்டில் பிறந்தவனாக இருந்தால் என் வாக்கு அ தி மு க விற்கே

இந்தியக் குடும்ப அரசியலை ஒழிப்பதற்கு முன்னோடியாகக் காங்கிரசையும் தி மு க வையும் நாட்டை ஆள  அனுமதிக்கக் கூடாது
 
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில் , வை கோ இருக்கும் பக்கம் வாக்குச் சேர்வதே எமக்கு கொஞ்சமாவது  நன்மை பயக்கும். அவர் நாகரீகமான அரசியல்வாதி, டில்லிவரை மரியாதையுண்டு. இந்தத் திருட்டு  முன்னேற்றக்  கழகங்கள் எல்லாம் வெறும் காகிதக் கப்பல்கள். ஏற்கனவே 40 பெற்ற  ஒண்டு  உதவாக் கரையாய்ப் போட்டுது. மற்றதும் அதைத்தான் செய்யப் போகுது.

எமக்காகக் குரல் கொடுக்கும் வை கோவை கொஞ்சம் தூக்கி விட்டால் " ஜி . ஜி" போல கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது நூலை விட்டு விட்டுக் கொடுத்து பட்டத்தைப் பிடியில் வைத்திருப்பது போல் ஏதாவது செய்வார்.செய்யாவிட்டாலும் பாதகமில்லை. எமாறுவதும் எமக்குப் புதிதல்ல , அவரும் கொஞ்சம் பிழைத்துப் போகட்டும்...! :)

  • தொடங்கியவர்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க ஆதரவை விலக்கிக் கொண்டால் அ.தி.மு.க காங்கிரஸிற்கு ஆதரவு தர தயாராக உள்ளது என ஜெ சொன்னதை மறந்துவிட்டீர்களா இசையண்ணா. அவர்களுக்கு தேவை என்னவோ மத்தியில் அதிகாரம் மிக்க ஒரு துறை. அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள். ஆயிரம் தீர்மானங்கள் நிறைவேற்றி என்ன பலன். இலங்கைக்கு எதிராக எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் நாட்டின் வெளியுறவுத்துறை கொள்கைகள் சார்ந்தது. இந்த தீர்மானங்கள் எல்லாம் மத்திய அரசால் கொண்டு வர பட்டால் ஒழிய தீர்வில்லை, அப்படியிருக்க மத்தியில் அமையக் கூடிய அரசில் முக்கியத்துவம் மிக்க கூட்டணி அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்பதை இவர் அறியாதவரா? நாற்பது தொகுதிகளில் நிற்பவர் நானூறு தொகுதிகளில் நிற்பவரின் தலைமையை ஏற்று அதில் அங்கம் வகிப்பதில் என்ன தவறு ? அதிக தொகுதிகளை பெற்று கிங் மேக்கராக வர நினைக்கிறார் பார்ப்போம்..

டிஸ்கி: வீட்டில் அம்மாவும் அப்பாவும் அ.தி.மு.க அபிமானிகள். அவர்களின் ஓட்டு பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், பாரத ரத்னா, ஏழைகளின் இதயக்கனி எம்.ஜி.ஆர் தந்த சின்னமாம் இரட்டையிலைக்கே :)

புங்கையண்ணா,

இந்திய மக்கள் வாழ்வோடு இயைந்த ஒன்று சுரண்டலும், ஊழலும். இதில் அரசியல்வாதியை மட்டும் சொல்லிப் பிழையில்லை. மக்களும் எதாவதொரு வகையில் அதற்கு முகம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்.

நான் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்கு இன்று இரண்டு போல்ட் வாங்க வேண்டியிருந்தது. கடைக்கு சென்று விலையை கேட்டபின் மயக்கம் தான் வந்தது. இரண்டின் விலை 40 ரூபாய் என்றார் கடைக்காரர். இரும்பு போல்ட் கிலோ விலை 85 ரூபாய் டவுனில். நான் வாங்கிய கடையில் கிலோ 125 என்றார். டவுனில் 85 ரூபாய் என்பது கடைக்காரரின் லாபம் போக எனக்கு தர கூடிய விலை. மேற்கூறிய கடைக்காரார் மொத்தமாக சில கிலோ வாங்கும் போது அதன் கொள்முதல் விலை இன்னும் குறையக்கூடும். நான் கடைக்காரனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட துவங்கினேன். ஒரு கிலோ 125 அரை கிலோ 70 கால் கிலோ 40. இது தான் விலை வேண்டுமென்டா வாங்கு இல்லையென்டா வேறு கடைக்கு போ என்றான். சரி நான் வாங்கும் இரண்டு போல்டையும் எடை நிறுத்துக் கொடு என்றேன். ஒன்று இரண்டு எல்லாம் எடை போட முடியாது உருப்படி விலை தான் என்றான். சரி வேறு வழியில்லை என்று வாங்கி விட்டேன். ஆனால் எனக்கு எடை நிறுத்தி சொல்லியே ஆக வேண்டுமென்று நின்று எடை பார்த்தேன் 150 கிராம். ஆக அவன் வாங்கிய அடிப்படை விலையில் பார்த்தால் அதன் மதிப்பு 16 ரூபாய் வாங்கியதோ 40 ரூபாய். அண்ணளவாக ஒரு 13 போல்ட் ஒரு கிலோவில் நிற்கும். இப்படி உருப்படி விலையில் விற்றால் கிலோ 260 க்கு அவன் விற்க முடியும்.

இதான் சார் இந்தியா : D

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் அலசல் ரொம்ப  சரி

வை.கோ அண்ணா வரணும் என்பது எல்லோரது விருப்பமும்  தான்

ஆனால் அவருக்கு  இருக்கும் மரியாதை அவரது சொல்லுக்கு இல்லை  என்பது வரலாறு

இதுவரை பலமுறை  சென்றும் 

அவரது   கூட்டாளிகள்  மதிப்புக்குரியோர் முக்கிய  பதவிகளிலிருந்தும்  எந்த மாற்றமும் இல்லை

இந்தமுறை  எதிரிக்கு எதிரி  நண்பன் என்ற வகையில்  எடுத்தப்பார்ப்பதே ஒரேவழி........

  • தொடங்கியவர்

dayanidhi_maran_20050530.jpg

40 தொகுதியும்.... இரட்டை இலைக்கே, என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அம்மா 30 தொகுதியில் வென்றால் போதும், மிகுதி இடத்துக்கு வைகோ,

முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த வேலு போன்றோர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

மத்திய சென்னையில் போட்டியிடும்.... தயாநிதி மாறன், கட்டுக் காசு கிடைக்காமல்... செய்ய வேண்டும்.

எனக்கு அவனின் மூஞ்சையை பார்த்தாலே.... பிரசர் எகிறிக் கொண்டு வரும்.

முன்பு ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் வேலு அல்ல டி.ஆர். பாலு. அவர் ஒப்புதல் வழங்கிய மீத்தேன் வாயு எரிபொருள் எடுக்கும் திட்டமானது நிறைவேற்றப்பட போவது தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை விளை நிலங்களில். மீத்தேன் வாயு எடுக்க பூமியில் சில கிலோமீற்றர்கள் ஆழ்துளை கிணறு போடுவார்கள். அப்போது அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீலத்தடி நீர் ஆழத்திற்கு சென்று நெல் விளையும் அப்பிரதேசம் விரைவிலேயே தரிசு நிலமாக மாறிவிடும். இத்தகைய நல்ல திட்டத்தை அமல்படுத்தியவர் திரு.பாலு.

கருதுக்கணிப்பின் முடிவில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் தான் ஜெயிப்பாராம். அண்ணனுக்கு பிரசர் கூடிடுச்சு. சிறியண்ணாவை பார்க்க நாளைக்கு எல்லோரும் ஹார்லிக்ஸிம், தோடம் பழமும் வாங்கிட்டு வாங்கப்பு :D

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க ஆதரவை விலக்கிக் கொண்டால் அ.தி.மு.க காங்கிரஸிற்கு ஆதரவு தர தயாராக உள்ளது என ஜெ சொன்னதை மறந்துவிட்டீர்களா இசையண்ணா. அவர்களுக்கு தேவை என்னவோ மத்தியில் அதிகாரம் மிக்க ஒரு துறை. அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள். ஆயிரம் தீர்மானங்கள் நிறைவேற்றி என்ன பலன். இலங்கைக்கு எதிராக எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் நாட்டின் வெளியுறவுத்துறை கொள்கைகள் சார்ந்தது. இந்த தீர்மானங்கள் எல்லாம் மத்திய அரசால் கொண்டு வர பட்டால் ஒழிய தீர்வில்லை, அப்படியிருக்க மத்தியில் அமையக் கூடிய அரசில் முக்கியத்துவம் மிக்க கூட்டணி அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்பதை இவர் அறியாதவரா? நாற்பது தொகுதிகளில் நிற்பவர் நானூறு தொகுதிகளில் நிற்பவரின் தலைமையை ஏற்று அதில் அங்கம் வகிப்பதில் என்ன தவறு ? அதிக தொகுதிகளை பெற்று கிங் மேக்கராக வர நினைக்கிறார் பார்ப்போம்..

டிஸ்கி: வீட்டில் அம்மாவும் அப்பாவும் அ.தி.மு.க அபிமானிகள். அவர்களின் ஓட்டு பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், பாரத ரத்னா, ஏழைகளின் இதயக்கனி எம்.ஜி.ஆர் தந்த சின்னமாம் இரட்டையிலைக்கே :)

எமது அணுகுமுறையில் மாற்றம் வரவேண்டும் என நினைக்கிறேன். இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல். நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் தகமை கொண்ட வேட்பாளர்களையே நாம் அங்கு அனுப்பவேண்டும்.

அந்த வகையில், வெறும் மந்திரிப் பதவிகளை எதிர்பார்த்துச் செல்பவர்களையும், நாடாளுமன்றத்தில் "பொருள்பட" இரண்டு வார்த்தைகள் பேசத் தெரியாதவர்களையும் அனுப்பி ஒரு புண்ணியமும் இல்லை.

இன்றுள்ள நிலையில் பேசத்தெரிந்தவர் ஜெயலலிதா மட்டுமே. ஒருவேளை மோடிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதுபோனால் என்ன நிலை? அவர் கண்டிப்பாக, அதிமுகவின் ஆதரவை வேண்டி வருவார். இங்குதான் பேரம் பேசும் வலு கிடைக்கிறது.

ஆனால், இதே பேரம்பேசும் வலு திமுகவுக்கு கிடைக்கவே கிடைக்காது. "நீ ஆதரவு குடுக்கிறியா.. இல்லை சிபிஐகாரன்களை வீட்டுக்கு அனுப்பவா?" என்பதுதான் பேரமாக இருக்கும்.." :D இவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பயனும் இல்லை.

மதிமுக, பாமக போன்ற கட்சிகளை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் அவர்களால் தகுந்த மாற்றங்களை மத்தியில் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்தானே. அவர்களது ஆதரவு ஏற்கனவே பாஜகவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மந்திரிப் பதவியைக் கூட கெஞ்சித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகையால், தொங்கு நாடாளுமன்றம் அமையும் என எதிர்பார்க்கப்படும் இத்தேர்தலுக்கு மம்மிதான் லாயக்கு.. :D

  • தொடங்கியவர்

நான் தமிழ் நாட்டில் பிறந்தவனாக இருந்தால் என் வாக்கு அ தி மு க விற்கே

இந்தியக் குடும்ப அரசியலை ஒழிப்பதற்கு முன்னோடியாகக் காங்கிரசையும் தி மு க வையும் நாட்டை ஆள அனுமதிக்கக் கூடாது

தி.மு.க ஒருபோதும் நாட்டை ஆளப் போவதில்லை. மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்பதே தி.மு.கவின் தாரக மந்திரம். இன்றுவரை அதை செவ்வனே செய்கிறார்கள். அ.தி.மு.க தான் நாடாளும் ஆசையில் பாதை மாறி வந்துள்ளனர்.

காங்கிரஸ் இந்த முறை தோற்றால் இன்னும் பத்து வருடங்களுக்கு ஆட்சியமைக்க முடியாது. ஒருவேளை பாஜக தோற்றால் என்றைக்கும் இனி அவர்கள் ஆட்சியமைக்க மாட்டார்கள்.

நானும் அதிமுக விற்கு ஒட்டளிப்பது பற்றி தான் பரிசிலிக்கிறேன் வாத்தியாரே :)

  • தொடங்கியவர்

என்னைப் பொறுத்த வரையில் , வை கோ இருக்கும் பக்கம் வாக்குச் சேர்வதே எமக்கு கொஞ்சமாவது நன்மை பயக்கும். அவர் நாகரீகமான அரசியல்வாதி, டில்லிவரை மரியாதையுண்டு. இந்தத் திருட்டு முன்னேற்றக் கழகங்கள் எல்லாம் வெறும் காகிதக் கப்பல்கள். ஏற்கனவே 40 பெற்ற ஒண்டு உதவாக் கரையாய்ப் போட்டுது. மற்றதும் அதைத்தான் செய்யப் போகுது.

எமக்காகக் குரல் கொடுக்கும் வை கோவை கொஞ்சம் தூக்கி விட்டால் " ஜி . ஜி" போல கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது நூலை விட்டு விட்டுக் கொடுத்து பட்டத்தைப் பிடியில் வைத்திருப்பது போல் ஏதாவது செய்வார்.செய்யாவிட்டாலும் பாதகமில்லை. எமாறுவதும் எமக்குப் புதிதல்ல , அவரும் கொஞ்சம் பிழைத்துப் போகட்டும்...! :)

அவர் பக்கம் காற்று வீச துவங்கிவிட்டது சுவியண்ணை. பாஜக தலைவரே அண்மையில் தமிழக பிரச்சாரத்தில் வைகோ விற்கு நிறைவேற்று அதிகாரம் மிக்கதொரு மந்திரி பதவி வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார் :)
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வாவும் இரட்டை இலைக்கே குத்தியிருப்பார் என நினைக்கிறேன்.. :D

  • தொடங்கியவர்

ஒம்.... ஆனால் காசு வாங்கி கொண்டு குத்தலையண்ணை.... திமுக வை விட அதிகம் இந்த முறை அதிகம் பண பட்டுவாடா அதிமுகவினர் தான் அதிதிதிதிகம் :D

காமராஜரையே தோற்கடித்த பயலுகள் வைகோவையும்  தோற்கடித்து விட்டார்களே :( உருப்பட்ட மாதிரி தான்....

இவ்வளவு பெரிய வெற்றிக்கு அ.தி.மு.க தகுதியில்லாதது அவ்வளவு தான் எனக்கு தெரிந்தது.... 37 அம்மா அருவடிகள் பாராளுமன்றம் செல்வதை விட வைகோ போனால் தமிழர்களுக்கு அதிக பயன் கிடைத்திருக்கும்... ஒண்டும் செய்வதற்கில்லை.... பார்போம் என்ன செய்ய போகுதெண்டு மம்மி..... :D

  • தொடங்கியவர்

ராஜன் விஷ்வாவும் இரட்டை இலைக்கே குத்தியிருப்பார் என நினைக்கிறேன்.. :D

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை :lol::D  :rolleyes:                        :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கே ஒரு சுழல்காற்று இந்த விருதுநகர். " யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியாது ". வை கோ இந்த வெற்று நகரைத் தவிர்த்திருக்கலாம்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.