Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்களின் உரிமைப்போரில் அனைவரும் இணைந்து கொள்வோம்: புதிய திசைகள்

Featured Replies

newdirections.jpg
இலங்கையில் நாடுதழுவிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் இன்று கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுபல சேன, ஜாதி கெல உறுமய, ராவண பலய என்னும் அமைப்புகளில் சிலவற்றை இலங்கை அரசே உருவாக்கியும் மற்றவற்றிற்கு முழு ஆதரவளித்தும் முஸ்லீம் மக்கள் மீதான இவ்வொடுக்குமுறையை காவல் துறை மற்றும் இராணுவ பிரிவுகளின் நேரடி ஆதரவுடன் பகிரங்கமாக நிறைவேற்றி வருகிறது.

முஸ்லீம் மக்கள் இலங்கை தீவின் ஒரு மக்கள் அல்லர் என்னும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களது இன, மத கலாச்சார அடையாளங்களை இழிவுபடுத்துவது என்னும் வகையில் ஓர் சமூக, இன அழிப்பு நடவடிக்கைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. அவர்களது குடியிருப்பு, விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, பள்ளிவாசல்கள் மூடவைக்கப்படுகின்றன, தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இலங்கைத்தீவில் நீண்ட வரலாறு கொண்ட முஸ்லீம் மக்கள், இலங்கையில் வியாபாரத்தின் நிமித்தம் சமீபத்தில் வந்தேறிய குடிகள் என்று அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் அவர்களது வரலாறு திரிபு படுத்தப்படுகிறது. வியாபார நிலையங்கள் தாக்கப்படுகின்றன, வியாபாரிகளும் ஊழியர்களும் தாக்கப்படுகிறார்கள்.

முஸ்லீம்கள் விதேசிகள், சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், இனப்பெருக்க விகிதத்தின் படி இலங்கையில் பெரும்பான்மையினராகிவிடுவார்கள் என்னும் பலவகையான கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். முஸ்லீம் மக்களை இவ்வாறு முத்திரை குத்தியவர்கள் தான் இன்று அவர்கள் நேசிக்கும் அல்லது நேசிப்பதாகக் கூறிக்கொள்ளும் தேசியங்களுக்கு எதிராக அதே வேலையை எந்த வெட்கமும் இன்றி செய்து வருகின்றனர் என்பதை இங்கு கவனிக்கவேண்டும்.

சிங்கள பேரினவாதம் எவ்வாறு இலங்கைத்தீவை சிங்களமக்களின் தீவாக மட்டும் உருவாக்க முனைகிறதோ; பெளத்த ஆதிக்க வாதம் இலங்கை முழுவதையும் பெளத்த நாடாக்க முயற்சிக்கிறது. இதன் வெளிப்பாடுதான் ஈழத்தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் மீதான தேசிய, இன, மத ரீதியான வரலாறு தொட்டு நிகழ்ந்து வரும் ஒடுக்குமுறைகள்.

முஸ்லீம் மக்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளும் பெளத்த பிக்குகளின் தலைமையிலும், அவர்கள் மட்டுமே ஈடுபடும் நிகழ்வுகளாகவும் இருப்பதென்பது; இலங்கை எனப்படும் தேசியம் பெளத்த தேசியம் எனும் மதத்தேசியமாக பெரியளவில் உருவம் எடுத்து வருகிறது என்பதைக்காட்டுகின்றது. உலக அளவிலே முஸ்லீம் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் கருத்தாக்ககமும், பர்மாவிலே பெளத்த மதவெறியர்களால் முஸ்லீம்கள் இன அழிப்பிற்கு உள்ளாவதும் இலங்கையில் இன, மத வெறியர்களின் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட சில பிரிவினரிடம் ஆதரவை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையை பெளத்த, சிங்கள நாடாக்கும் வரை தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத்தமிழர் மீதான ஒடுக்குமுறைகள் தொடரும். இதுதான் இதுவரைகாலமும் தேசிய இன ஒடுக்குமுறையை சந்தித்து வரும் நம் அனைவரதும் வரலாற்றுப்பாடம். சிங்கள, தமிழ், முஸ்லீம்,மலையக தமிழர் ஆகிய இலங்கைவாழ் மக்களின் உள் முரண்பாடுகளில், ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாதத்தில், மதவெறியில், பிரதேச வெறியில் இன்று குளிர் காய்வது இலங்கையரசும் சந்தர்ப்பவாத தமிழ், முஸ்லீம், மலையக அரசியல் தலைமகளுமேயாகும்.

கடந்த கால வரலாறுகள் பல கசப்பான இனக் குரோத, சந்தர்ப்பவாத நடவடிக்கைகளைப் பதிவிட்ட படியே நகர்ந்திருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் அப்பட்டமான ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்கள் தமக்குள் மோதிக் கொண்டமை அல்லது பாராமுகமாக இருந்தமை இன ஒற்றுமைக்குப் பெருஞ்சவாலாகவே இன்று உள்ளன. சிங்கள தேசத்தில் இனவாதம் அதனது எல்லா அலகுகளிலும் கணிசமான அளவு புரையோடிப் போய் இருப்பதனால் அங்கிருந்து இனவாதத்தை எதிர்த்து வரும் குரல்கள் நலிந்தே ஒலித்து வந்திருக்கின்றன.

முஸ்லீம் மக்களின் தேசியம், தமிழ் தேசியம் என்பன முற்போக்கானதா பிற்போக்கானதா என்ற எங்கள் ஆய்வுகளை நாம் செய்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க முதலில் இலங்கை தேசிய இன மக்களின் தேசிய உணர்வை, உரிமையை அங்கீகரிக்கப்பதை நடைமுறையாகக் கொள்வோம். முஸ்லீம் மக்களின் தேசியத்தை பிற்போக்கான மதத்தேசியம் என வரையறுத்து புறக்கணிப்பு செய்யும் சில "முற்போக்காளர்களின்" நிலைப்பாடு, தமிழ் தேசியத்தை இனவாதம், குறுந்தேசியவாதம் என புறக்கணிப்பு செய்யும் நிலைப்பாட்டிற்கு ஒப்பானதாகும்.

தமிழ் மக்களின் உரிமைக் குரல் தமிழ் மண்ணில் நெரிக்கப் பட்டு அதனது போராடும் வலிமையை அது மீண்டும் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இப்போதைக்கு இல்லையென்ற கணிப்பில் தனது அடுத்த குறியாக முஸ்லீம்களை இலக்கு வைக்கிறது இலங்கை இனவாத அரசு. இலங்கை சுதந்திரம் அடையுமுன்பே தோற்றுவாய் பெற்ற சிங்கள பௌத்த பேரினவாதம், இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் மீது ஒவ்வொரு காலகட்டங்களிலும் திட்டமிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட கால வரம்பில் ஒரு குறிப்பிட்ட இனத்தினை நோக்கி தனது அடக்குமுறை இயந்திரத்தை முடுக்கி விட்டு வருகிறது. இதற்கு மற்றைய இனங்கள் துணை போவதும் அமைதியாக இருந்து மறைமுக ஆதரவு வழங்குவதும் இனவாதிகளின் இராஜதந்திர வெற்றியாகவே பார்க்கப் படுகிறது. இந்தக் கபடத் தனமான ஒடுக்குமுறை இயந்திரத்தின் தற்போதைய நிகழ்ச்சி நிரலை மற்றைய தேசிய இனங்கள் விளங்கிக் கொள்ளாது தள்ளி நின்று வேடிக்கை பார்க்க முயல்வது மிகவும் ஆபத்தான நடைமுறையாகும்.

http://www.kural.co.uk/news/2014/muslims

  • Replies 84
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புலம்பெயர் முஸ்லீம் மக்களால் மே 5 லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலையத்திற்கு முன் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது

May 5th 12pm

Richmond Terrace, London

SW1A 2JL

  • கருத்துக்கள உறவுகள்

நாம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் முஸ்லீம் மக்கள் தங்களுக்கான போராட்டங்களைத் தாமே முன்னெடுக்கவேண்டும். இதற்கான ஆதரவை அரபு நாடுகளிடமும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமும் இருந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும். இராக், லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நேட்டோ படைகள் தாக்குதல் நடந்தியபோது இலங்கை முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். எனவே நிச்சயம் இந்த நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் விதேசிகள், சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், இனப்பெருக்க விகிதத்தின் படி இலங்கையில் பெரும்பான்மையினராகிவிடுவார்கள் என்னும் பலவகையான கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

............................................

தமிழ் மக்களின் உரிமைக் குரல் தமிழ் மண்ணில் நெரிக்கப் பட்டு அதனது போராடும் வலிமையை அது மீண்டும் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இப்போதைக்கு இல்லையென்ற கணிப்பில் தனது அடுத்த குறியாக முஸ்லீம்களை இலக்கு வைக்கிறது இலங்கை இனவாத அரசு.

தமிழர் தரப்பு சிங்களவருடன் போரிடும் அல்லது சமநிலையில் இருக்கும்வரை சிங்களம் முஸ்லிம்களைக் கைவைக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அந்த இறுக்கமான சூழலில் தமிழ் மொழியைப் பெரும்பான்மையாகப் பேசிக்கொண்டு தமிழர்களைக் காட்டிக்கொடுத்து சிங்களத்திடம் பல சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இப்போது சிங்களத்துக்கு எதிராகப் பேசுவதும், முன்னர் தங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட தமிழர்களைத் துணைக்கழைப்பதும் துரோகம் இல்லையா?

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் தலைமைகள் அரசு சார்பு நிலையெடுத்திருந்தார்கள் என்பதும் இன்று வரை அவர்களில் பெரும்பான்மையினர் அரசுடன் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. முஸ்லிம் மக்களும் தமிழர்களும் ஒன்றாக இணைந்து கொள்ளத் தடையாக இருந்த இருபக்கத் தவறுகளையும் உணர்ந்து திருத்திக் கொள்வதே இன்றைய எமது கடமையாக இருக்கும். இதில் எமது பக்கத் தவறுகளை நியாயமாக ஏற்றுக் கொள்ள நாம் தயாரா?

https://www.youtube.com/watch?v=m1RFE19crjc

Edited by எம்குரல்

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களத்தின் பிரித்தாளும் கொள்கையினால், தமிழர்களை, இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர் என பிரித்து, இஸ்லாமியர் அல்லாதோரை தோற்கடித்த பின்னர், இப்போது, இஸ்லாமியர் மீது நேரடி யுத்தம், மறைமுக யுத்தம் தொடங்கி உள்ளனர்.
 
தந்தை செல்வா, கிறிஸ்தவர் ஆக இருந்த காரணத்தினால் இஸ்லாமியர் அல்லாதோரை இந்து, கிறிஸ்தவர் என பிரிக்க முடியவில்லை.
 
இப்போது இஸ்லாமியர் நிலைமையில், உறுதியான தலைமை தேவை. ஹிக்கீம் உறுதி இல்லாத பரிதாபத்துக்கு உரிய தலைவர். 
  • கருத்துக்கள உறவுகள்

எமது பக்கத் தவறுகள் என நீங்கள் யாழ் வெ ளியேற்றத்தைக் குறிப்பிட்டிருந்தால் அதற்கு புலிகள் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து முஸ்லீம்களை வரவேற்றிருந்தார்கள். இதற்கு மேலும் என்னத்தை ஏற்றுக் கொள்வது??

ஆனால் கிழக்கில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளுக்கு முஸ்லீம் தரப்பு இன்னும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இதை யாராவது கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

புலம்பெயர் முஸ்லீம் மக்களால் மே 5 லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலையத்திற்கு முன் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது

May 5th 12pm

Richmond Terrace, London

SW1A 2JL

மிகவும் அருமையான திட்டம்.

தமிழ் அமைப்புகள் முழு ஆதரவும், உதவியும் செய்யவேண்டும்.

மற்றைய நாட்டு இஸ்லாமிய அமைப்புகளின் உதவியை நாடவேண்டும்.

எல்லா அரசியல் போராட்ட வீரர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் முஸ்லீம் மக்கள் தங்களுக்கான போராட்டங்களைத் தாமே முன்னெடுக்கவேண்டும். இதற்கான ஆதரவை அரபு நாடுகளிடமும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமும் இருந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும். இராக், லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நேட்டோ படைகள் தாக்குதல் நடந்தியபோது இலங்கை முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். எனவே நிச்சயம் இந்த நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை!!

உண்மை

அதேநேரம் தமிழரது  போராட்டத்தை  முஸ்லீம்கள் சிதைக்க உதவியது போல்

தமிழரது போராட்டத்துக்குள் புகுந்து சிங்களவனுக்கு காட்டிக்கொடுத்து 

எதிரியுடன் துணைநின்றது போல்

தமிழர் ஒரு போதும் செய்யமாட்டார்கள்

சிங்களத்தலைமைகள் 1940கள் 1950 களில் செய்தவற்றை முஸ்லீம் தலைமைகள் 1990 களில் 2000 களில் தமிழருக்கு செய்தார்கள். இதனால் மொழி- மத  அடிப்படையில் இந்துக்குகள்-கிறிஸ்தவர்கள்  ஒதுக்கப்பட்டார்கள். அரசுடன் இணைப்பில் இருக்கும் முஸ்லீம் தலைமைகளால் மத அடிப்படையில்  இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.  

சிங்களத் தலைமைகள் செய்தவற்றால் தமிழர்கள் ஒதுக்கப்பட்டர்கள். முஸ்லீம் தலைமைகள் செய்தவற்றால் தமிழர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.  1949 இல் இந்திய பாகிஸ்தானிய வாக்குரிமை சட்டம் வந்த போது அது "இந்தியர்களுக்கு தானே" என்று செல்வா இருந்துவிடவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் பதவி விலகி வந்து புதிய கட்சி ஆரம்பித்தார். அவர் தேர்தலில் தோற்றார். மேடைகளில் வைத்து அவரின் கட்சியின் அங்கத்தவர்கள் வேட்டி உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்கள். கட்சி இரண்டு அங்கத்தவர்களை பாராளுமன்ற அனுப்ப சிரமப்பட்டது. அவமானத்தை வேதனைகளையும் தமிழருக்காக ஏற்றார் செல்வா. செல்வா 1949 ல் பதவியை விட்டு விலகி வந்து தனது உடமைகளை விற்று, தனது முது சொம்மான மலேசிய தனது ரப்பர் தோட்டங்களை விற்று தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்து தமிழரசுக்கட்சியை கட்டி எழுப்பினார். . 

செல்வா, இந்திய பாகிஸ்தானிய சட்டத்தை கொண்டுவந்த UNP விட்டு விலக மறுத்த "இலங்கை (கவனிக்கவும்- "இலங்கை" மட்டுமே அந்த கட்சியின் கொள்கை-  இந்திய அல்ல) தமிழ் காங்கிரசை" விட்டு வந்து தமிழ் அரசு கட்சி ஆரம்பித்தார். (கவனிக்கவும் இந்து-கிறிஸ்தவ அரசுக்கட்சி அல்ல). கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு முஸ்லீமையும் தமிழர் என் உணரவைக்க முயன்றார். முடிவு பதியுதின் தமிழருக்கு தரப்படுதலை கொண்டுவந்தார். பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, விடுதலை இயக்கங்கள் தோன்றின.  இதில் யாரிடம் தமிழர் எதற்கு மன்னிப்பு கேடக வேண்டும். பதியுதினின் நடவடிக்கையால் தோன்றிய இயக்கங்கள் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டி வருகிறது? 

செல்வாவை விட்டு பிரிந்து போன முஸ்லீகள் தங்கள் நிலைமையினை உணர்ந்து நிபந்தனை இல்லாமல்திரும்பி வந்து தங்களின் அடையாளம் தமிழர் விடுதலை கூட்டமைப்பு என்று மாற்றிக்கொள்ளட்டும். கறையான் புற்று எடுத்திருக்குதானே நாமும் அங்கே சுகமாக தூஙகுவோம் என்ற திருட்டு தனத்துடன் யாழில் வந்து எழுத வேண்டாம். இனியும் கிழக்கு மாகாணத்தேர்தலின் பின்னர் செய்தது மாதிரி "கூட்டமைப்பு  கூடத்தந்தால் கூட்ட்டமைப்பு, அரசு கூடத்தந்தால் அரசுடன் போவோம். ஆனால் இந்த முறை கூட்டமைப்பு நாங்கள் கேட்டதை தரவில்லை ஆகையால் அரசுடன் போகிறோம்" என்ற ஏமாற்றுக்களை நிறுத்துங்கள். உங்களுக்கு போராடத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்கா இல்லையா?, நீங்கள் தமிழரா இல்லையா என்றதை வெளிப்படையாக கூறுங்கள். 

முஸ்லீம்கள் சகலரும் பராளுமன்றத்தில் பதவிகளில் இருந்து உல்லாசம் பண்ணிக்கொள்ளும் போது அவர்களுக்குப் படிப்பிக்க முயலாத ஒற்றுமையை எதற்கு யாழில் வந்து தமிழருக்கு எழுதுவான்? எதற்கு வந்து தமிழரிடம் ஏமாற்று ஒற்றுமை பேசுகிறீர்கள். பதியுதின் தனது தரப்படுத்தல் நேரம்தான் பதவி விலகவில்லை, கக்கீம் ஜெனிவாவுக்கு போன நேரமாவது செல்வா மாதிரி "அரசு எனது சகோதர இனத்துக்கு இன்னல் செய்ததால் நான் பதவி விலகுகிறேன்" என்று விலகியிருக்க வேண்டாம்? முஸ்லீம் மக்கள் "தமிழர்" என்ற ஒரு குடைக்கு கீழ் இணைய விரும்பினால் கூட்டமைப்பில் வந்து இணைய வேண்டும். அதுதான் தமிழர் சகலருக்கும் தனது சொத்துப்பத்துக்களை விற்று கட்சி ஆரம்பிக்கும் போது செல்வா சொன்ன செய்தி. அதை தவறி வேறு ஏதாவது முஸ்லீம் தலைமைகள் சொத்து சேர்க்கும் ஏமாற்றுக்களுக்கு கூட்டமைப்பு சோரம் போனால், கூட்டமைப்பை புலம் பெயர் மக்கள் திருத்துவார்கள். அப்படியான திருத்தம் ஒன்றை கூட்டமைப்புக்கு செய்ய தாயக மக்களால் இன்று முடியாது என்பதால் அதை புலம் பெயர் மக்கள் செய்ய தயங்கவும் கூடாது. கூட்டமைப்பு செல்வா காட்டிய பாதையில் போகாவிட்டால் அதை தண்டிக்க புலம் பெயர் மக்கள் தயங்க கூடாது.

முஸ்லீம் தலைவர்கள் ஏமாற்றுக்களை விட்டு விட்டு அதிரடியாக கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்புக்கு தங்கள் ஆதரவை வழங்கி கூட்டமைப்பின் அரசை நிறுவ வேண்டும்.  பாராளுமன்றத்தில் அரசை விட்டு விலகி வந்து கூட்டமைப்பின் கீழ் இணைய வேண்டும். இதை ஒவ்வொரு முஸ்லீம் பத்தி எழுத்தாளரும் தூய்மையான மனச்சம்மத்துடன் தங்கள் பத்திரிகைகளில் எழுத வேண்டும். இன்னொரு தடவை கிழக்கு மாகணத்தில் ஏமாற்றிய மாதிரி தமிழர்களை அழைத்து நிபந்தனை போட்டு பேரம் பேசி விட்டு அதைக்காட்டி அரசிடம் போய் அவிப்பாகம் கேட்டு வாங்கும் தந்திரத்தை இங்கு வந்து மானம் மதிப்பென்ற சொல் இல்லாமல் செய்து காட்ட வேண்டாம்.

திருட்டு பேரம் பேசும் அரசியலை விட்டுவிட்டு.இனி தன்னும் தமிழரின் அரசியல் முதிர்ச்சிக்கு மதிப்பளியுங்கள்.  இல்லையேல் நீங்கள் அரசுடன் பேசும் திருட்டு பேர பாட்டை பார்த்துக்கொள்ளூங்கள். தமிழர் தங்கள் பாதையில் போவார்கள். 
 
முதலில் உங்கள் உண்மையை வெளிகாட்ட விரும்பினால், சென்னைக் குண்டு வெடிப்பில் ஆரம்பியுங்கள்.  சென்னை தமிழ் மக்களிடம், இலங்கை முஸ்லீம்கள் சிங்கள் அரசின் ஆயுதமாக இருந்து  அங்கேயேயும் இந்து- முஸ்லீம் பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக வைக்கப்பட்ட குண்டுக்கு பகிரங்க மன்னிப்பு எழுதி பிரசுரியுங்கள். பின்னர் அதை கொண்டுவந்து யாழிலிலும் பதியுங்கள். 

உங்களுக்கு தமிழருடன் ஒற்றுமை வேண்டுமா? ஏமாற்று பேரங்கள் இனியும் பேசாதீர்கள். இனியும் நீங்கள் செய்த காட்டிக்கொடுப்புகளுக்கு தமிழர் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிறு பிள்ளைத்தனமாக வாதாடாதீர்கள். தமிழர் மனத்தில் நம்பிக்கை வரத்தக்க ஏதாவது செய்யுங்கள். உடனடியாக நிபந்தனை இல்லாமல் அரசை விட்டு விலகி வந்து கூட்டமைப்பின் கீழ் இணையுங்கள். இதை தொடர் பிரச்சாரமாக எல்லா முஸ்லீம் பத்திரிகைகளிலும் பிரசுரியுங்கள். 

Edited by மல்லையூரன்

--------

முஸ்லீம் தலைமைகள்... இனியும் நோகாமல் நொங்கு தின்ன ஆசைப்படப் படாது.

முதலில் தம்மை தூயமையானவர்களாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அத் தலைமைகளுக்கும், மக்களுக்கும் உள்ளது. முதலில் அதனைச் செய்யுங்கள்... பின் அவர்கள் போராட்டத்தில் இணைவது பற்றி... தமிழர்கள் யோசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை முஸ்லிம் மக்கள் யதார்த்தம் உணரும் நிலைமை வந்து இருக்கிறது.
 
அவர்களுக்கு, இயல்பாகவே மேற்கு, இந்திய உதவி கிடைக்கப் போவதில்லை. அதற்கான உலக நிலைமை இல்லை. பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், இந்தியா தாண்டி பெரிய அளவில் உதவ முடியாது.
 
தமிழர்களுடன் சேர்ந்து தம்மை தமிழ் பேசும் மக்களாக அடையாளப் படுத்தினால் அன்றி விரைவில் மிகவும் கடின நிலைக்கு தள்ளப் படுவர்.
 
தமிழர்களைப் பொறுத்த வரையில், இழப்பதற்கு எதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு தான் இழப்பதற்க்கு அதிகம் இப்போது உண்டு.
 
அவர்கள் சரியான நிலைப்பாடு எடுக்காவிடில் இருபக்கமும் நட்பு இல்லா நிலைமை தான் உண்டாகும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லிம் மக்கள் யதார்த்தம் உணரும் நிலைமை வந்து இருக்கிறது.
 
அவர்களுக்கு, இயல்பாகவே மேற்கு, இந்திய உதவி கிடைக்கப் போவதில்லை. பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், இந்தியா தாண்டி பெரிய அளவில் உதவ முடியாது.
 
தமிழர்களுடன் சேர்ந்து தம்மை தமிழ் பேசும் மக்களாக அடையாளப் படுத்தினால் அன்றி விரைவில் மிகவும் கடின நிலைக்கு தள்ளப் படுவர்.
 
தமிழர்களைப் பொறுத்த வரையில், இழப்பதற்கு எதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு தான் இழப்பதற்க்கு அதிகம் இப்போது உண்டு.

உண்மைதான்....

1983´லிருந்து... ஒவ்வொரு இனக் கலவரத்திலும் தமிழரிடம் அடித்ததை...

சிங்களவனிடம் பறி கொடுக்கும் நேரம், முஸ்லீம்களுக்கு வந்து விட்டது.

  • தொடங்கியவர்

சிங்களத்தலைமைகள் 1940கள் 1950 களில் செய்தவற்றை முஸ்லீம் தலைமைகள் 1990 களில் 2000 களில் தமிழருக்கு செய்தார்கள். இதனால் மொழி- மத  அடிப்படையில் இந்துக்குகள்-கிறிஸ்தவர்கள்  ஒதுக்கப்பட்டார்கள். அரசுடன் இணைப்பில் இருக்கும் முஸ்லீம் தலைமைகளால் மத அடிப்படையில்  இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.  

சிங்களத் தலைமைகள் செய்தவற்றால் தமிழர்கள் ஒதுக்கப்பட்டர்கள். முஸ்லீம் தலைமைகள் செய்தவற்றால் தமிழர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.  1949 இல் இந்திய பாகிஸ்தானிய வாக்குரிமை சட்டம் வந்த போது அது "இந்தியர்களுக்கு தானே" என்று செல்வா இருந்துவிடவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் பதவி விலகி வந்து புதிய கட்சி ஆரம்பித்தார். அவர் தேர்தலில் தோற்றார். மேடைகளில் வைத்து அவரின் கட்சியின் அங்கத்தவர்கள் வேட்டி உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்கள். கட்சி இரண்டு அங்கத்தவர்களை பாராளுமன்ற அனுப்ப சிரமப்பட்டது. அவமானத்தை வேதனைகளையும் தமிழருக்காக ஏற்றார் செல்வா. செல்வா 1949 ல் பதவியை விட்டு விலகி வந்து தனது உடமைகளை விற்று, தனது முது சொம்மான மலேசிய தனது ரப்பர் தோட்டங்களை விற்று தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்து தமிழரசுக்கட்சியை கட்டி எழுப்பினார். . 

செல்வா, இந்திய பாகிஸ்தானிய சட்டத்தை கொண்டுவந்த UNP விட்டு விலக மறுத்த "இலங்கை (கவனிக்கவும்- "இலங்கை" மட்டுமே அந்த கட்சியின் கொள்கை-  இந்திய அல்ல) தமிழ் காங்கிரசை" விட்டு வந்து தமிழ் அரசு கட்சி ஆரம்பித்தார். (கவனிக்கவும் இந்து-கிறிஸ்தவ அரசுக்கட்சி அல்ல). கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு முஸ்லீமையும் தமிழர் என் உணரவைக்க முயன்றார். முடிவு பதியுதின் தமிழருக்கு தரப்படுதலை கொண்டுவந்தார். பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, விடுதலை இயக்கங்கள் தோன்றின.  இதில் யாரிடம் தமிழர் எதற்கு மன்னிப்பு கேடக வேண்டும். பதியுதினின் நடவடிக்கையால் தோன்றிய இயக்கங்கள் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டி வருகிறது? 

செல்வாவை விட்டு பிரிந்து போன முஸ்லீகள் தங்கள் நிலைமையினை உணர்ந்து நிபந்தனை இல்லாமல்திரும்பி வந்து தங்களின் அடையாளம் தமிழர் விடுதலை கூட்டமைப்பு என்று மாற்றிக்கொள்ளட்டும். கறையான் புற்று எடுத்திருக்குதானே நாமும் அங்கே சுகமாக தூஙகுவோம் என்ற திருட்டு தனத்துடன் யாழில் வந்து எழுத வேண்டாம். இனியும் கிழக்கு மாகாணத்தேர்தலின் பின்னர் செய்தது மாதிரி "கூட்டமைப்பு  கூடத்தந்தால் கூட்ட்டமைப்பு, அரசு கூடத்தந்தால் அரசுடன் போவோம். ஆனால் இந்த முறை கூட்டமைப்பு நாங்கள் கேட்டதை தரவில்லை ஆகையால் அரசுடன் போகிறோம்" என்ற ஏமாற்றுக்களை நிறுத்துங்கள். உங்களுக்கு போராடத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்கா இல்லையா?, நீங்கள் தமிழரா இல்லையா என்றதை வெளிப்படையாக கூறுங்கள். 

முஸ்லீம்கள் சகலரும் பராளுமன்றத்தில் பதவிகளில் இருந்து உல்லாசம் பண்ணிக்கொள்ளும் போது அவர்களுக்குப் படிப்பிக்க முயலாத ஒற்றுமையை எதற்கு யாழில் வந்து தமிழருக்கு எழுதுவான்? எதற்கு வந்து தமிழரிடம் ஏமாற்று ஒற்றுமை பேசுகிறீர்கள். பதியுதின் தனது தரப்படுத்தல் நேரம்தான் பதவி விலகவில்லை, கக்கீம் ஜெனிவாவுக்கு போன நேரமாவது செல்வா மாதிரி "அரசு எனது சகோதர இனத்துக்கு இன்னல் செய்ததால் நான் பதவி விலகுகிறேன்" என்று விலகியிருக்க வேண்டாம்? முஸ்லீம் மக்கள் "தமிழர்" என்ற ஒரு குடைக்கு கீழ் இணைய விரும்பினால் கூட்டமைப்பில் வந்து இணைய வேண்டும். அதுதான் தமிழர் சகலருக்கும் தனது சொத்துப்பத்துக்களை விற்று கட்சி ஆரம்பிக்கும் போது செல்வா சொன்ன செய்தி. அதை தவறி வேறு ஏதாவது முஸ்லீம் தலைமைகள் சொத்து சேர்க்கும் ஏமாற்றுக்களுக்கு கூட்டமைப்பு சோரம் போனால், கூட்டமைப்பை புலம் பெயர் மக்கள் திருத்துவார்கள். அப்படியான திருத்தம் ஒன்றை கூட்டமைப்புக்கு செய்ய தாயக மக்களால் இன்று முடியாது என்பதால் அதை புலம் பெயர் மக்கள் செய்ய தயங்கவும் கூடாது. கூட்டமைப்பு செல்வா காட்டிய பாதையில் போகாவிட்டால் அதை தண்டிக்க புலம் பெயர் மக்கள் தயங்க கூடாது.

முஸ்லீம் தலைவர்கள் ஏமாற்றுக்களை விட்டு விட்டு அதிரடியாக கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்புக்கு தங்கள் ஆதரவை வழங்கி கூட்டமைப்பின் அரசை நிறுவ வேண்டும்.  பாராளுமன்றத்தில் அரசை விட்டு விலகி வந்து கூட்டமைப்பின் கீழ் இணைய வேண்டும். இதை ஒவ்வொரு முஸ்லீம் பத்தி எழுத்தாளரும் தூய்மையான மனச்சம்மத்துடன் தங்கள் பத்திரிகைகளில் எழுத வேண்டும். இன்னொரு தடவை கிழக்கு மாகணத்தில் ஏமாற்றிய மாதிரி தமிழர்களை அழைத்து நிபந்தனை போட்டு பேரம் பேசி விட்டு அதைக்காட்டி அரசிடம் போய் அவிப்பாகம் கேட்டு வாங்கும் தந்திரத்தை இங்கு வந்து மானம் மதிப்பென்ற சொல் இல்லாமல் செய்து காட்ட வேண்டாம்.

திருட்டு பேரம் பேசும் அரசியலை விட்டுவிட்டு.இனி தன்னும் தமிழரின் அரசியல் முதிர்ச்சிக்கு மதிப்பளியுங்கள்.  இல்லையேல் நீங்கள் அரசுடன் பேசும் திருட்டு பேர பாட்டை பார்த்துக்கொள்ளூங்கள். தமிழர் தங்கள் பாதையில் போவார்கள். 

முதலில் உங்கள் உண்மையை வெளிகாட்ட விரும்பினால், சென்னைக் குண்டு வெடிப்பில் ஆரம்பியுங்கள்.  சென்னை தமிழ் மக்களிடம், இலங்கை முஸ்லீம்கள் சிங்கள் அரசின் ஆயுதமாக இருந்து  அங்கேயேயும் இந்து- முஸ்லீம் பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக வைக்கப்பட்ட குண்டுக்கு பகிரங்க மன்னிப்பு எழுதி பிரசுரியுங்கள். பின்னர் அதை கொண்டுவந்து யாழிலிலும் பதியுங்கள். 

உங்களுக்கு தமிழருடன் ஒற்றுமை வேண்டுமா? ஏமாற்று பேரங்கள் இனியும் பேசாதீர்கள். இனியும் நீங்கள் செய்த காட்டிக்கொடுப்புகளுக்கு தமிழர் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிறு பிள்ளைத்தனமாக வாதாடாதீர்கள். தமிழர் மனத்தில் நம்பிக்கை வரத்தக்க ஏதாவது செய்யுங்கள். உடனடியாக நிபந்தனை இல்லாமல் அரசை விட்டு விலகி வந்து கூட்டமைப்பின் கீழ் இணையுங்கள். இதை தொடர் பிரச்சாரமாக எல்லா முஸ்லீம் பத்திரிகைகளிலும் பிரசுரியுங்கள்.

தந்தை செல்வா போன்ற ஒரு தலைவர் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல இன்று தமிழர்கள் மத்தியில் இருக்கிறாரா என்ற ஆதங்கமே எழுகிறது.

நீங்கள் முஸ்லிம்களை தமிழர்கள் என்ற அடையாளத்தில் பார்க்க முனைவது தவறானது. அவர்களது தாய்மொழி தமிழாயிருந்தாலும் தம்மை முஸ்லிம்கள் என்ற அடையாளத்திலேயே ஒரு இனமாக அவர்கள் உணரும் நிலையில் அவர்களைக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணையக் கோருவது எந்த வகையில் சாத்தியம் என்று தெரியவில்லை.

சிறீமா காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட தமிழருக்குப் பாதகமான தரப்படுத்தல் முறை இலங்கையரசின் தொடர்ச்சியான இனவொடுக்குமுறையின் ஒரு வடிவமாகப் பார்க்கப் படாமல் அந்தக் காலத்தில் கல்வியமைச்சராகவிருந்த பதியுதீனின் திட்டமிட்ட செயல் என்று விளங்கிக் கொள்வது தவறான புரிதல்.

எம்மைப் போல் இலங்கையில் ஒடுக்கப் படும் இன்னொரு இனமாக இருக்கும் முஸ்லிம்களின் போராட்டங்களிற்கு நாம் ஆதரவு வழங்கப் போகிறோமா அல்லது வேடிக்கை பார்க்கப் போகிறோமா என்பதை முடிவெடுக்கும் காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

முதலில் உதவி கோரவேண்டியது அவர்கள்.. நாமாகப் போய் விழ வேண்டியதில்லை.. அதனால் வேடிக்கைதான் பார்க்கப் போகிறோம்.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது தமிழரின் உதவிகள், முஸ்லிம்களுக்கு தேவைப்படாது என்றுதான் நினைக்க வேண்டும்.
 
முஸ்லிம்கள் இன்றுவரை, தமிழர்களிடம் உதவி கோரவில்லை.
 
அவர்கள் உதவி கேட்டால், உதவி செய்வது தமிழர்களின் பண்பு.

தந்தை செல்வா போன்ற ஒரு தலைவர் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல இன்று தமிழர்கள் மத்தியில் இருக்கிறாரா என்ற ஆதங்கமே எழுகிறது.

"இன்று செல்வா இல்லை. இனி ஒரு செல்வாவுக்கு தமிழர் ஏங்க வேண்டியதில்லை.  தேசியத் தலைவன் பிரபாகரன் இன்று தமிழரின் போராட்டதை முன்னின்று நடத்தவில்லை.  தமிழர் இன்னொரு தலைவனை தேட  போவதில்லை. அவர்கள் ஏற்படுத்திய பாதைகளும் கொள்கைகளும் இன்னமும் இருக்கு. அழியவில்லை. அவை அழியாத தைதேனியத்தில் உருக்கி வார்க்கப்பட்டவை.. அவை இந்துக்களுக்கு  வேதம்; கிறிஸ்தவர்களுக்கு பைபிள். அவற்றில் உங்களுக்கு இன்று சந்தேகம்? அது உங்கள் பாடு.  "கெட்டாலும் செட்டி, கிளிஞ்சாலும் பட்டு"  அவற்றை பின்பற்றுவோரை குறை சொல்ல மாட்டுச்சாணகத்துக்கு உரிமை கிடையாது.

நீங்கள் முஸ்லிம்களை தமிழர்கள் என்ற அடையாளத்தில் பார்க்க முனைவது தவறானது. அவர்களது தாய்மொழி தமிழாயிருந்தாலும் தம்மை முஸ்லிம்கள் என்ற அடையாளத்திலேயே ஒரு இனமாக அவர்கள் உணரும் நிலையில் அவர்களைக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணையக் கோருவது எந்த வகையில் சாத்தியம் என்று தெரியவில்லை.

நீங்கள் முஸ்லீம்கள் அரசுடன் இணைந்து வசதிகள் பெற என்று அந்த அடையாளத்தை ஏற்படுத்தி வெற்றி கண்டவர்கள். கருணாவும் பிள்ளையானும் கிழக்கு நாட்டார் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி வெற்றி கண்டு வசதி பெற்று வாழ்பவர்கள். பிள்ளையானும், கருணாவும் வருடத்தில் ஒருதடவை தாம் தான் 13ம் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள். கூட்டமைப்பு அதை கெடுக்கிறது என்று அறிக்கை விடுகிறார்கள். சுயநலத்துக்காக உங்களுக்கு நீங்கள் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டால் அதில் நமக்கு என்ன? சிறுபான்மை இனத்துக்கான, தமிழருக்கான போராட்டத்தில் இணைய உங்களுக்கு வசதில்லையாயின் அதில் நமக்கொன்றும் இல்லை. கருணாவும் பிள்ளையானும் பிரிந்து போனது இயக்கத்துக்கு சில தடுமாற்றத்தை தந்தது. ஆனால் சுய நலமிகள் உள்ளே இருந்த்து கொள்கைகளை பழுதாக்காமல் இயக்கம் தூய்மையானதால் கொள்கை இன்றும் அழியவில்லை. சுயநல நல முஸ்லீம் மந்திரிகளான பதியுதின், கக்கீம் இல்லாததால் கூட்டப்பு நிர்மலமான தெளிவுடன் இருக்கு. தங்களைப்போலவே ஒன்றிணைய சாத்தியமில்லாதவர்களை கூட்டமைப்பு இணைக்க கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடும்.  

சிறீமா காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட தமிழருக்குப் பாதகமான தரப்படுத்தல் முறை இலங்கையரசின் தொடர்ச்சியான இனவொடுக்குமுறையின் ஒரு வடிவமாகப் பார்க்கப் படாமல் அந்தக் காலத்தில் கல்வியமைச்சராகவிருந்த பதியுதீனின் திட்டமிட்ட செயல் என்று விளங்கிக் கொள்வது தவறான புரிதல்.

நாம் கேட்கவில்லையே. நீங்கள்தானே UK போராட்டத்திற்கு ஆள்பிடிக்க பேரத்துடன் வந்து இறங்கினீர்கள். சென்ற வருடம் மசூதிகள் உடைக்கப்பட்ட போது TGTE சர்வதேச நாடுகளில் சர்வமத வழிபாடுகள் நிகழ்த்தினார்கள். போனீர்களா? நீங்கள் தானே மன்னிப்பு கேடக வேண்டும் என்று நிபந்தனை போட்டுகொண்டு வந்து இறங்குகிறீர்கள். பதியுதின் சிறிமா சொன்னத்தற்காக செய்தார். அதை தமிழர் கேட்கக் கூடாது. கக்கீம் அரசர் கேட்டதற்க்காக ஜெனீவா போனார். அதை தமிழர் கேட்கக் கூடாது. முஸ்லீம்கள் கோத்த கேட்டதற்காக இராணுவத்தின் ஒற்றர் பிரிவில் இணந்து காட்டிக்கொடுத்தார்கள் அதை பற்றி தமிழர் பேசக்கூடாது. ஆனால் அவற்றை தடுக்க, தண்டிக்க தமிழர்கள் முயன்றார்கள். அதற்காக தமிழர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேரத்துடன் எங்கிருந்து ஐயா நீர் வந்திறங்கியிருக்கிறீர். நான் மேலே எழுதியிருக்கிறதை படியுமையா. இந்திய பாகிஸ்தானியர் சட்டத்தில், UNP இந்தியர்களின் வாக்கைத்தானே பறிக்கிறது என்ற வாத்தை ஏற்காமல்தான் செல்வா பதவி விலகினார் என்றுதானே எழுதினேன். உங்களில் யாரும் பதவி விலக கூடாது. உங்களுக்கு இராணுவ புலனாய்வில் வேலை வேண்டும். UK இல் உங்கள் போராட்டத்திற்கு, வேலை பறிக்கப்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டு, அகதிகளாக துரத்தப்பட்ட தமிழன் வந்து ஆள்காட்ட வேண்டும் என்கிறீர்களா?  

எம்மைப் போல் இலங்கையில் ஒடுக்கப் படும் இன்னொரு இனமாக இருக்கும் முஸ்லிம்களின் போராட்டங்களிற்கு நாம் ஆதரவு வழங்கப் போகிறோமா அல்லது வேடிக்கை பார்க்கப் போகிறோமா என்பதை முடிவெடுக்கும் காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

நாம் எந்த காலகட்டதிலும் இன்று புதிதாக புகவில்லை. நாம் 1948 ஆண்டு இரண்டு நன்றிகெட்ட துரோகிகளுடன் இணைத்து சுதந்திரம் என்று ஏமாற்றப்படுவிட்டோம். முள்ளில் விழுந்த சேலையையா இது. அவ்வளவுதான். 1915ல் ஒருவரை ஒருவர் கொல்லுங்கடா என்று விடாமல் முதுகுகொடுக்க போனதால் இன்று தமிழனுக்கு வந்த வினை இது. 1915 ல் இனக்கலவரத்தை அடக்கியது வெள்ளைகாரன் இல்லை, தமிழன்தான் என்று, புடுங்குப்பட்ட இனத்தில் எது தமிழனுக்கு நன்றியாக இருக்கிறது? இனி ஏன் ஐயா திரும்ப முஸ்லீம்களுக்கு சிங்களவருக்குமிடையில் புடுங்குப்பாடு என்றால் தமிழன் திரும்பவும் முதுகுகொடுப்பான். 1915ல் பட்டதால் மட்டும் திருந்த தக்க கேணைகள் அல்ல இந்த தமிழ் ச்சனம் என்பதாலா? 

Edited by மல்லையூரன்

  • தொடங்கியவர்

நீங்கள் முஸ்லீம்கள் அரசுடன் இணைந்து வசதிகள் பெற என்று அந்த அடையாளத்தை ஏற்படுத்தி வெற்றி கண்டவர்கள்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்பவர்கள் முஸ்லிம் சகோதரர்கள். இந்தத் தகவலை யாழ் களத்தில் இணைத்து ஆதரவுக் கரம் கோரியதற்காக என்னையும் ஒரு இஸ்லாமியராக கருதி பதில் வைக்கிறீர்கள். இவ்வாறான பேரணிகளிற்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது விலகி நிற்பதா என்பதை இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து உரையாடுவோம்.

நன்றி.

மல்லையின் பின்னூட்டத்திற்கு பச்சை புள்ளி குத்தியவர்கள் அவர் என்ன எழுதியிருக்கின்றார் என்று சொன்னால் எங்கள் பலருக்கு உதவியாக இருக்கும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இதில் இருந்து விலத்தி இருப்பது தான் நல்லது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் இதில் இருந்து விலத்தி இருப்பது தான் நல்லது.....

இப்போது எல்லாத் தமிழர்களும் முஸ்லிம்களோடு சங்கமித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்பவர்கள் முஸ்லிம் சகோதரர்கள். இந்தத் தகவலை யாழ் களத்தில் இணைத்து ஆதரவுக் கரம் கோரியதற்காக என்னையும் ஒரு இஸ்லாமியராக கருதி பதில் வைக்கிறீர்கள். இவ்வாறான பேரணிகளிற்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது விலகி நிற்பதா என்பதை இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து உரையாடுவோம்.

நன்றி.

சேர்ந்து போராட வேண்டுமென்பது என் கருத்து.

வரும் வாய்ப்பை தவறவிடகூடாது.

இதில் பாதிக்கப்பட்ட சிங்கள ஊடகதினரையும் உள்வாங்கி போராடினால் இன்னும் நல்லா இருக்கும். சிங்கள மக்களையும் செய்திகள் தணிப்பை தாண்டியும் சென்றடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட் ரா சக்கை, அட் றா சக்கை, சனம் இப்பதான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடுகிது. பளை வரைக்கும் வரும் ரெயினையும் ஏசி பெட்டியையும் ஆவலோடு பார்க்காவாவது முடியுது. இதுக்கை யாரோ ரெண்டு பேரிண்டை சண்டேக்கை நாம் மூக்கை நுழைத்து தேவையில்லாமல் பேயடி வாங்க வேணுமாக்கும்.

என்ன செய்தாவது சனத்தின் இயல்பு வாழ்க்கையை குலைக்க வேணும் என்பதில் புலம்பெயர்ஸ் நல்ல தெளிவா இருக்கினம். இப்போ நானாமாரையும் நாசம் பண்ணுற ஐடியாவோ?

நானாமார் ஒண்ட புரிஞ்சிகுங்க, நாம இப்பதான் செமத்தியா வாங்கி கட்டி இரிக்கம். உங்களுக்கும் பிக்குக்களுக்கும் வர சண்டைல சைடு எடுக்க நம்மாள ஏலா. லூசுதனமா புலம்பெயர்ஸ் பேச்ச கேட்டு போனீங்கன்ன அப்புறம் அல்லாவாலயும் உங்களிய காப்பாத்த முடியா. சொல்லிதேன்.

மல்லையின் பின்னூட்டத்திற்கு பச்சை புள்ளி குத்தியவர்கள் அவர் என்ன எழுதியிருக்கின்றார் என்று சொன்னால் எங்கள் பலருக்கு உதவியாக இருக்கும் . :icon_mrgreen:

சொல்லாமல்த்தான் இந்த முறை விளங்கேலை எங்களின் வில்வித்தையாளனுக்கு. யராவது சொல்லிவிட்டீர்களானால்......சொல்லி இதுவரையில் எதோ விளங்கின மாதிரி.  அதில் பலருக்கு வக்காலாத்தும். கறுமம்தான்!

வளர்க்க முதலில்.

பின்னர் வாழ்க.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்பவர்கள் முஸ்லிம் சகோதரர்கள். இந்தத் தகவலை யாழ் களத்தில் இணைத்து ஆதரவுக் கரம் கோரியதற்காக என்னையும் ஒரு இஸ்லாமியராக கருதி பதில் வைக்கிறீர்கள். இவ்வாறான பேரணிகளிற்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது விலகி நிற்பதா என்பதை இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து உரையாடுவோம்.

நன்றி.

எந்த அணி நடந்தாலும் இதை நடத்துபவர்களை பிரித்தானிய தமிழர் அடையாளம் கண்ட பின்னர். கக்கீமுக்கு குடை பிடித்து ஜெனிவாவில் போராட்டம் நடத்தாதவர்களாயின். தாயகத்தில் கூட்டமைப்புடன் இணங்கி நடப்பவர்களாயின்.

நீங்கள் எப்படி தொடந்து உரையாட்டபோகிறீர்கள்? நீங்கள் முஸ்லீம் இல்லையென்றால், நாங்கள் அங்கே போய் நிற்கும் போது எங்களை அவர்கள் சந்தேகித்தால் என்ன பண்ணா? ஏனையா உங்களுக்கு இந்த தேவையில்லாத துளாவரம்?

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

விலகி இருப்பதே தமிழனுக்கு நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.