Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடு விற்றல் / வாங்குதல்: என் அனுபவம்

Featured Replies

அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். 

கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை.  ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது.  இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்றேன்.

இவ் அனுபவம் முற்றிலும் 'என்னை' சார்ந்தது. என் முடிவுகள் சில எனக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும், எனதும் என் குடும்பத்தினதும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அமைந்தவை. வாசிக்கும் உங்களுக்கு என் முடிவுகளில், நம்பிக்கைகளில் முரண்பாடுகள் எழலாம்  என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே நேரத்தில் நான் எழுதுவதில் ஏதேனும் தரவுக் குறைகள் (Factual mistakes) இருப்பின் அர்ஜுன் போன்று இத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் அத் தவறினைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் இக் குறிப்பினை மேலும் செலுமையாக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்தது, இரண்டு சின்ன அறைகளையும் இரண்டு முழு குளியலறைகளையும் (Full washrooms), ஒரு சிறு பகுதியையும் (Den) கொண்ட 850 சதுர அடி பரப்பளவில் அமைந்த Condominium இல் ஆகும். அத்துடன் ஒரு சிறு Balcony யையும் இரண்டு வாகன தரிப்பிடங்களையும் (Parking slots) கொண்டு அமைந்து இருந்தடு.  சுற்றி வரக் கடைகள், கோவில்கள், அங்காடிகள் (Shopping malls), மற்றும் பாடசாலைகள் என்பனவற்றை மிக நெருக்கமாகக் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதி.

பிள்ளைகள் மிகவும் சின்னவர்களாக இருக்கும் போது வாங்கிய வீடு அது. ஆனால் அவர்கள் வளர வளர ஓரளவுக்கேனும் வசதியான ஒரு வீட்டின் தேவை எமக்குள் உணரப்பட்டது. அத்துடன் வீட்டின் சமையலறை மிகவும் சிறிதானதாக இருந்ததால் அடிக்கடி மனிசியின் முணுமுணுப்பு வேறு. பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்கும் தமக்கென்று அறைகளைக் கொண்டு வளர்வதற்கும் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தது.  இந்த வீட்டினை வாங்கும் போது ஸ்கார்புரோவில் 3 வருடங்கள் மட்டும் தான் வாழ்வது, பிறகு மாறுவது என்ற திட்டத்துடன் தான் வாங்கியிருந்தோம். மூன்று வருடங்களும் முடிந்து நான்கான் வருடத்தினையும் அரைவாசிக்கும் மேலாக நிறைவு செய்த பின்னர் இதனை விற்பதற்கு முடிவு செய்தோம்.

கனடாவில் முக்கியமாக Toronto வில் தற்போதைய நிலவரத்தின் படி Condominium ஒரு சிறந்த முதலீடு அல்ல. (இது எதிர்காலத்தில் மாறலாம்). 4 வருடங்களுக்கு முன் ஒரு தனி வீடு வாங்கி அதனை இப்ப விற்க நினைத்து இருந்தால் வாங்கிய விலையை விட இரண்டு லட்சமாவது (அல்லது 40 வீதமாவது) அதிகமாக விற்க முடியும். அந்தளவுக்கு தனி வீடுகளின் விலை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. ஆனால் இந்த நிலை Condominium இற்கு இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, அந்த குடியிருப்பில் விற்கப்பட்ட வீடுகளின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.

முக முக்கியமாக இருக்கும் வீட்டை விற்று அதன் முடிவுத் திகதிக்கும் முன் (Final closing date) நாம் வேறு தனி வீடு ஒன்றை வாங்கி சென்று விட வேண்டும்.

இப்படியான தீர்மானங்களை எடுத்து விட்டு இவற்றை சரியாக முடிப்பதற்கு உதவக் கூடிய ஒரு விற்பனை முகவரை தெரிவு செய்ய வேண்டும். என் நண்பர் குழாமிலேயே பல வீட்டு விற்பனை முகவர்கள் (Real estate agents) இருந்தார்கள். ஆனால் அதில் பலர் பகுதி நேர முகவர்களாக இருந்தார்கள். மிகுதிப் பேர் இந்த விற்பனையில் கடும் தேர்ச்சி உடைய பிரபலமானவர்களாக இருந்தனர்.

இவர்களில் எனக்கு ஏற்ற ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். நான் விற்பனை முகவரை தெரிவு செய்யும் போது ஐந்து விடயங்களை முக்கியமாக எடுத்துக் கொண்டேன்.

1. விற்பனை முகவர் பகுதி நேர முகவராக இருக்கக் கூடாது. அதனையே பிரதான தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.

2. தன் முடிவுகளை / தெரிவுகளை எம் மீது திணிக்காமல் இருக்க வேண்டும்.

3. மிகவும் பிரபலமானவராக இருக்காமல், தொழில் தொடங்கி வளர்ச்சி கண்டு வரும் ஒருவராக இருக்க வேண்டும். அவ்வாறானவரால் தான் நான் கூப்பிடும் நேரத்துக்கு அழைத்துக் கொண்டு சென்று வீடுகளை காட்ட முடியும் என்று நம்பினேன்.

4. தமிழ் கதைக்க வேண்டும் (தமிழராக இருக்க வேண்டும் என்பது அல்ல - மிகவும் சரளமாக எம் எண்ணங்களை சொல்லி உரையாட தமிழ் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும்)

5. வீட்டு விற்பனை தொடர்பான விளம்பரங்களை சிறப்பாக செய்பவராக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல, எம் எண்ணப் போக்கிற்கு ஒத்திசையக் கூடிய ஒரு முகவர் கிடைத்து விட்டால் அரை வாசிப் பிரச்சனைகள தீர்ந்து விடும்.

இவ் அடிப்படைகளை வைத்துக் கொண்டு எனக்கு ஏற்ற, என் நண்பரின் மூலம் அறிமுகமான ஒரு விற்பனை முகவரை இனம் கண்டு அவரையே என் முகவராக அமைத்துக் கொண்டேன். கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இளம் விற்பனை முகவர். 

இருக்கும் வீட்டினை விற்க திகதி குறித்த பின் வீட்டிற்கு Paint எல்லாம் அடித்து, சின்ன சின்ன திருத்தங்கள் எல்லாம் செய்து விற்பனை முகவரை மீண்டும் அழைத்துக் காட்டினோம். அவர் மேலும் சின்ன சின்ன விடயங்களை செய்யச் சொன்னார்.

அவர் சொன்ன விடயங்கள் சில அனுபவத்தின் மூலம் அவர் கற்றுக் கொண்டது. அவற்றில் சில.

1. வீட்டை வாங்குகின்றவர்கள் பார்வையில் படும் விதத்தில் மணிக்கூட்டை (Wall clock) மாட்ட வேண்டாம். வருபவர்கள். சுவர் மணிக்கூட்டினை வருபவர் பார்த்தால், அவருக்கு வேறு அலுவல்களும் இருப்பின் உடனே அவருக்கு நேரம் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டு அவசர அவசரமாகப் பார்க்க முனைவார். இது அவர் வாங்கும் முடிவை பாதிக்கும்.

2. கூடிய வரைக்கும் சாமிப் படங்களை வரவேற்பறையில் வைக்க வேண்டாம். வைத்தால்மற்ற மதத்தினரின் எண்ணங்களில் செல்வாக்கு செலுத்தும்.

3. கூடிய வரைக்கும் அறைகளின் கதவுகளை நன்கு திறந்து வைத்தல்.

4. வீட்டினை பார்வையிட ஆட்கள் வரும் போது கூடிய வரைக்கும் வீட்டில் நாம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

அவர் கூறிய விடயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றினை செய்து விற்கவும் போட்டோம். முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 19 பேர் வந்து பார்த்துச் சென்றனர்.

அதில் இரண்டாவதாக வந்தவர் வீட்டினை வாங்க முடிவு செய்து விட்டதாக 2 தினங்கள் கழித்து தன் முடிவினைச் சொன்னார். Condo என்பதால் விற்க அதிக நாட்கள் எடுக்கும் என்று நினைத்து இருந்தோம். மாறாக இரண்டு நாட்களில் சரி வந்தது, சந்தோசத்தினைக் கொடுத்தது.

அதே குடியிருப்பில் எமக்கு முன் வீடு விற்பனைக்கு போட்டவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக விற்க முடியாமல் காத்துக் கொண்டு இருக்க எம் வீடு 2 நாட்களில் விலை போனது. இதற்கு முக்கிய காரணங்கள் என்று நான் நினைப்பது.

1. சிவரில் இருந்து கதவுகள் வரைக்கும்  தேர்ச்சி பெற்றவர்களின் மூலம் வர்ணம் எல்லாம் பூசி அழகுபடுத்தியது.

2. அதிக விலை போடாது, ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையை நிர்ணயித்தது (எமக்கு மேல் மாடியில் இருந்தவர்கள் நான் போட்ட விலையை விட 10,000 அதிகமாகப் போட்டு இன்னும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்)

3. சிறந்த விளம்பரம்.

இனி, எமக்கான வீட்டினை பார்த்து தெரிவு செய்ய வேண்டும். இது தான் சவாலானது. வீட்டு விலைகள் எல்லாம் கடும் உச்சத்தில் இருக்கும் போது - நடுத்தர வகுப்பினைச் சேர்ந்த எமக்கு வீட்டினை இனம் கண்டு, விலையும் சரியாக இருந்து வாங்குவது என்பது இலகுவானதாக இருக்கவில்லை.

--மிச்சம் பிறகு..

புது condo அடுக்குமாடி வீடுகள்..பார்க்க அழகாக/வசதிகள் உடையதாக  இருந்தாலும்... வருடம் செல்ல செல்ல அவர்களின் பராமரிப்பு செலவு அதிகாரிக்கும்....ஆகவே அவை எப்போதுமே ஒரு risk

இப்போது நிறைய நிறுவனங்கள் கட்டுகின்றன..ஆனால் வெகு சில நிறுவனங்களே தரத்தை (அதுவும் தாங்கள் நிர்ணயித்த) கடைப்பிடிக்க முயல்வன.....ஒரு தரமில்லாத அடுக்குமாடி வீடு வாங்கினால்...வாங்குபவர்கள்...அம்போ..அந்த பிரச்சனைகளை தீர்க்க வீட்டு உரிமையாளர்களே நிதியளிக்க வேண்டும்....

இன்றைய நிலையில் toronto க்கு அருகில் வீடு வாங்க வேண்டும் என்றால்... $600000 - 700000 வேண்டும்

சிட்னியில் வீடுகள் நினைச்சு பார்க்க முடியாத விலை போகின்றன. நான் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய வீடு ஆகக் குறைந்தது 10 - 11 லட்சம். கொண்டோவை இங்கே யுனிட் என்போம். 2 அறை யுனிட் 4.5 லட்சம் ஆகக் குறைந்தது. பள‌ம் யுனிட் 3 லட்சம் ஆகக் குறைந்தது.
 
தள்ளி மேற்குப் பக்கம் போனால் 3 அறை வீடு 6 லட்சம் குறைந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

----

இவர்களில் எனக்கு ஏற்ற ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். நான் விற்பனை முகவரை தெரிவு செய்யும் போது ஐந்து விடயங்களை முக்கியமாக எடுத்துக் கொண்டேன்.

1. விற்பனை முகவர் பகுதி நேர முகவராக இருக்கக் கூடாது. அதனையே பிரதான தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.

2. தன் முடிவுகளை / தெரிவுகளை எம் மீது திணிக்காமல் இருக்க வேண்டும்.

3. மிகவும் பிரபலமானவராக இருக்காமல், தொழில் தொடங்கி வளர்ச்சி கண்டு வரும் ஒருவராக இருக்க வேண்டும். அவ்வாறானவரால் தான் நான் கூப்பிடும் நேரத்துக்கு அழைத்துக் கொண்டு சென்று வீடுகளை காட்ட முடியும் என்று நம்பினேன்.

4. தமிழ் கதைக்க வேண்டும் (தமிழராக இருக்க வேண்டும் என்பது அல்ல - மிகவும் சரளமாக எம் எண்ணங்களை சொல்லி உரையாட தமிழ் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும்)

5. வீட்டு விற்பனை தொடர்பான விளம்பரங்களை சிறப்பாக செய்பவராக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல, எம் எண்ணப் போக்கிற்கு ஒத்திசையக் கூடிய ஒரு முகவர் கிடைத்து விட்டால் அரை வாசிப் பிரச்சனைகள தீர்ந்து விடும்.

இவ் அடிப்படைகளை வைத்துக் கொண்டு எனக்கு ஏற்ற, என் நண்பரின் மூலம் அறிமுகமான ஒரு விற்பனை முகவரை இனம் கண்டு அவரையே என் முகவராக அமைத்துக் கொண்டேன். கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இளம் விற்பனை முகவர். 

-----

1. வீட்டை வாங்குகின்றவர்கள் பார்வையில் படும் விதத்தில் மணிக்கூட்டை (Wall clock) மாட்ட வேண்டாம். வருபவர்கள். சுவர் மணிக்கூட்டினை வருபவர் பார்த்தால், அவருக்கு வேறு அலுவல்களும் இருப்பின் உடனே அவருக்கு நேரம் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டு அவசர அவசரமாகப் பார்க்க முனைவார். இது அவர் வாங்கும் முடிவை பாதிக்கும்.

2. கூடிய வரைக்கும் சாமிப் படங்களை வரவேற்பறையில் வைக்க வேண்டாம். வைத்தால்மற்ற மதத்தினரின் எண்ணங்களில் செல்வாக்கு செலுத்தும்.

3. கூடிய வரைக்கும் அறைகளின் கதவுகளை நன்கு திறந்து வைத்தல்.

4. வீட்டினை பார்வையிட ஆட்கள் வரும் போது கூடிய வரைக்கும் வீட்டில் நாம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

அவர் கூறிய விடயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றினை செய்து விற்கவும் போட்டோம். முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 19 பேர் வந்து பார்த்துச் சென்றனர்.

அதில் இரண்டாவதாக வந்தவர் வீட்டினை வாங்க முடிவு செய்து விட்டதாக 2 தினங்கள் கழித்து தன் முடிவினைச் சொன்னார். Condo என்பதால் விற்க அதிக நாட்கள் எடுக்கும் என்று நினைத்து இருந்தோம். மாறாக இரண்டு நாட்களில் சரி வந்தது, சந்தோசத்தினைக் கொடுத்தது.

அதே குடியிருப்பில் எமக்கு முன் வீடு விற்பனைக்கு போட்டவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக விற்க முடியாமல் காத்துக் கொண்டு இருக்க எம் வீடு 2 நாட்களில் விலை போனது. இதற்கு முக்கிய காரணங்கள் என்று நான் நினைப்பது.

1. சிவரில் இருந்து கதவுகள் வரைக்கும்  தேர்ச்சி பெற்றவர்களின் மூலம் வர்ணம் எல்லாம் பூசி அழகுபடுத்தியது.

2. அதிக விலை போடாது, ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையை நிர்ணயித்தது (எமக்கு மேல் மாடியில் இருந்தவர்கள் நான் போட்ட விலையை விட 10,000 அதிகமாகப் போட்டு இன்னும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்)

3. சிறந்த விளம்பரம்.

நீங்கள் வீடு விற்க முதல், போட்ட திட்டங்கள் தான்... வீட்டை விரைவில் விற்கக் கூடியதாக இருந்தது.

அதிலும்... வளர்ந்து வரும் இளம் முகவரை தெரிவு செய்தமை,  புத்திசாலித்தனம்.

மற்றைய நாடுகளில்... வீட்டின் விலை அதிகரிப்பது போல், ஜேர்மனியில் அதிகரிக்கவில்லை.

வாங்கிய விலைக்கு, விற்பதே கடினம்.

ஐரோ வந்த பின்... பொதுமக்களிடம் பணப் புழக்கம் மிகவும் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த திட்டமிடலே நீங்கள் வீடு விரைவில் விற்க முடிந்ததற்கு காரணம். 

எனக்கு தெரிந்து சுவிசில் வீடு வாங்கியவர்கள் சந்தோசமாக இருந்ததாக கேள்விப்படவில்லை. தவறான திட்டமிடலே முழுவதும் காரணம். அத்துடன் "கௌரவம்" என்ற வியாதி.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் வீடு வாங்கினால் முதல் ஐந்தாறு வருடங்கள் வங்கி வட்டி மட்டுமே கழிந்து கொண்டிருக்கும்...!

நீங்கள் நன்றாகத் திட்டமிட்டு  செயலாற்றியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் வீட்டில் இருந்து ஒரு முகவரைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு வீட்டை தனிப்பட்ட முறையில் விற்றும் இன்னொன்றை தனிப்பட்ட முறையில் வாங்கியும் உள்ளேன். இப்படியான சில முடிவுகளுக்கு சூழ்நிலைகளே காரணம்.

ஆரம்பம் முதற்கொண்டு எந்த condominium உம் வாங்கவில்லை. முகவர் வேண்டாம் என சொல்லியிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த விசயத்திலும் விவரமாச் செயற்பட்டால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்தான்.  இருந்தாலும் ஏமாற்றப்படுவதற்கும் சந்தர்ப்பம் இருக்கு.  இப்பதானே வீடு வாங்கியிருக்கிறீங்கள்.  இனிப் போகப் போகத்தான் எப்பிடி ஏமாற்றப்பட்டீங்கள் எண்டும் தெரிய வரும்.  அவசரப்பட்டு வாய விட்டிடாதீங்க.

நிழலி இது உங்களுக்கான அனுபவ பகிர்வு.  அதை உங்கள் அனுபவத்தில் விடுவதே நல்லது .

இதுதான் சரி இது பிழை என்று இங்கு எதுவுமில்லை .அவரவர் தேவையும் வசதியும் தான் முதலிடம் .

Condo வாங்குதல் பற்றி   நான் முன்னர் எழுதியதாக ஞாபகம் . (எம்மவர் பலர் Downtown இல் பல Condo க்கள் வாங்கிவிட்டிருக்கின்றார்கள் அது அவர்கள் வசதியை பொறுத்தது)

.

குறிப்பு . நிழலியின் முதல் பதிவை வாசிக்க அன்பே சிவம் கமலும் மாதவனும் யூகி சேதுவும் வந்து போனார்கள் .(நிழலி மட்டும் அல்ல எம்மவர் பலரும் இதே நிலைதான் .)

உண்மையை விட விளம்பரத்தில் நம்பிக்கை வைக்கின்றாக்கள் .

எல்லாருக்கும் எல்லாத்துக்கும் இப்ப விளம்பரம்தானே முக்கியமாப் படுது.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டோவை நீங்கள் விற்றது அதியசம் தான். நண்பர் ஒருவர் பல காலம் வைத்திருந்து(ஒருவரும் வராமல்) கடைசியாக நட்டத்தில் தான் விற்றார். அப்போ தான் கற்ற பாடம் கொண்டோ வாங்குவதில்லை என சொன்னார்.அது அவரின் அனுபவம் மட்டுமே. ஆனால் தனி வீடுகளை போல் கொண்டோக்களின் பெறுமதி அதிகம் அதிகரிப்பதில்லை. நகரமத்தியில் உள்ள கொண்டோக்களில் வேலை செய்யும் தனியானவர்கள் முதலிடுகிறார்கள். தனி வீட்டில் ரொரண்டோ எனில் சினோ அள்ளி களைத்து விடுவீர்கள் என ஆட்கள் நக்கல் அடிப்பதும் உண்டு. நன்மை/தீமை எதில் தான் இல்லை?? :)  :)

  • தொடங்கியவர்

பகுதி: 02

வீடு வாங்குதற்காக கட்ட திட்டமிட்டு இருந்த Down payment இனை பெறக் கூடிய அளவில் இருக்கும் வீட்டினை விற்றால் போதும் என்று திட்டமிட்டடு இருந்தோம். கையிருப்பில் உள்ள சேமிப்புடன் கொண்டோ விற்பனையினூடாகக் கிடைக்கக் கூடிய பணத்தினையும் சேர்த்து நாம் திட்டமிட்டு இருந்த பணத்தினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஒரு வீடு / கொண்டோ விற்றால் வரும் பணத்தில் கழிக்கப்படக் கூடிய செலவினங்களில் சில:

1. முகவர் கட்டணம்:

வீட்டினை விற்றுத் தாரவருக்கும், வீட்டினை வாங்குகின்றவர்களின் முகவருக்கும் கட்டணம் (Commission) கொடுக்க வேண்டும். பொதுவாக ரொரன்டோவில் வீட்டினை விற்கும் முகவருக்கு 1 அல்லது 1.5 வீதம் கொடுக்க வேண்டும். அதே போன்று வீட்டை வாங்குகிறவர்களின் முகவருக்கு ஆகக் குறைந்தது 2.5% ஆவது கொடுக்க வேண்டும். என் முகவர் தனக்கு 1% தந்தால் போதும் என்றதால் மொத்தமாக 3.5% வீதம் விற்ற விலையில் இருந்து கொடுத்தோம்.

வீட்டினை விற்கின்ற முகவரே அடுத்த வீட்டினையும் வாங்குவதற்கு துணை புரிவதால் பொதுவாக 1% தான் கேட்பார்கள். ஏனென்றால், புது வீடு வாங்கும் போது அந்த வீட்டினை விற்பவர்களின் மூலம் 2.5% கொமிசன் பெறுவார்கள்.

2. வக்கீல் செலவு மற்றும் legal fees

3. நான் மேலதிகமாக Mortgage Penalty யும் கட்ட வேண்டி வந்தது. ஏனெனில் என் கொண்டோ விற்கான முதல் தவணைக் காலமா 5 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை 4 ஆம் வருடத்தில் முறித்துக் கொள்வதால் கிட்டத்தட்ட 4000 டொலர்கள் தண்டமாக அறவிட்டு குறிப்பிட்ட வங்கி சந்தோசப் பட்டுக் கொண்டது. எனினும், அவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று முற்கூட்டியே தெரிந்து வைத்திருந்தமையால் பட்ஜெட் இல் உதைக்கவில்லை.

4. Property tax, Utility fees போன்றவற்றில் மிச்சம் கட்ட வேண்டி இருந்தால் கட்ட வேண்டும். நான் ஒவ்வொரு மாதமும் வங்கி மூலமாக தானாகவே கட்டும் முறையினைச் (Pre-Authorized Payment  method) செய்து இருந்தமையால் கட்ட வேண்டி இருக்கவில்லை.

வீடு ஒன்றை விற்க முனையும் போது ஏற்படக் கூடிய செலவுகள் பற்றி இங்கே விபரமாகப் போட்டுள்ளார்கள்:

http://www.styleathome.com/homes/real-estate/the-hidden-costs-of-buying-and-selling-a-house/a/1897/3

வீடு தேடுதல்

கொண்டோவினை வாங்கியவருக்கு அது சொந்தமாகும் இறுதித் திகதிக்கு முன்பாக வீடு தேடி கண்டு பிடித்து வாங்கி குடியேற வேண்டும். இதற்காக எமக்கு இருந்த கால அவகாசம் 50 நாட்கள்.

எப்பவும் எந்த திட்டத்திற்கும் இன்னொரு மாற்றுத் திட்டமும் வைத்துக் கொள்வது நல்ல விடயம் என்று நம்புகின்றேன். ஒரு வேளை 30 நாட்களுக்குள் எம்மால் வீட்டினை வாங்க முடியாமல் போனால் என்ன செய்வது என்பதற்கு Plan B என்று ஒரு திட்டத்தினையும் வைத்து இருந்தோம். மிச்சம் இருக்கும் 20 நாட்களில், ஒரு அறை கொண்ட வீடொன்றை வாடகைக்கு எடுத்துக் கொள்வது. அதில் ஒரு வருடம் இருந்து கொண்டு  அதற்குள்  அவசரமாக இல்லாமல் நிதானமாக வீடு பார்ப்பது. என் மனைவி, அப்படி ஒரு நிலை வந்தால் Basement எடுத்து இருந்தால் கூட தனக்கு போதும் என்று கூறி இருந்தார்.

ஆனாலும் Plan B செயற்படுத்த வேண்டிய தேவை வரவில்லை எமக்கு.

மிச்சம் பிறகு..............

  • தொடங்கியவர்

புது condo அடுக்குமாடி வீடுகள்..பார்க்க அழகாக/வசதிகள் உடையதாக  இருந்தாலும்... வருடம் செல்ல செல்ல அவர்களின் பராமரிப்பு செலவு அதிகாரிக்கும்....ஆகவே அவை எப்போதுமே ஒரு risk

இப்போது நிறைய நிறுவனங்கள் கட்டுகின்றன..ஆனால் வெகு சில நிறுவனங்களே தரத்தை (அதுவும் தாங்கள் நிர்ணயித்த) கடைப்பிடிக்க முயல்வன.....ஒரு தரமில்லாத அடுக்குமாடி வீடு வாங்கினால்...வாங்குபவர்கள்...அம்போ..அந்த பிரச்சனைகளை தீர்க்க வீட்டு உரிமையாளர்களே நிதியளிக்க வேண்டும்....

இன்றைய நிலையில் toronto க்கு அருகில் வீடு வாங்க வேண்டும் என்றால்... $600000 - 700000 வேண்டும்

நான் கொண்டோவை வாங்கும் போது அது கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் தான் ஆகியிருந்தமையால் பராமரிப்புச் செலவு (Maintenance Fee) குறைவாக இருந்தது. இன்னும் அது பெரியளவில் ஏறவில்லை.  கட்டிடத்தின் தரத்தின் படி என் கொண்டோ பெரிய தரத்தில் அமைந்து இருக்கவில்லை. முக்கியமாக Sound Proof என்பது அறவே இல்லை.

விலை கூட என்பதால் தான் நான் Toronto விலோ அதன் அருகில் அமைந்த மார்க்கம் போன்ற பகுதிகளிலோ வீடு வாங்கவில்லை. 

சிட்னியில் வீடுகள் நினைச்சு பார்க்க முடியாத விலை போகின்றன. நான் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய வீடு ஆகக் குறைந்தது 10 - 11 லட்சம். கொண்டோவை இங்கே யுனிட் என்போம். 2 அறை யுனிட் 4.5 லட்சம் ஆகக் குறைந்தது. பள‌ம் யுனிட் 3 லட்சம் ஆகக் குறைந்தது.
 
தள்ளி மேற்குப் பக்கம் போனால் 3 அறை வீடு 6 லட்சம் குறைந்தது.

என் பல நண்பர்கள் அவுசில் மிக அழகான வீடுகளை வாங்கி வைத்திருக்கின்றார்கள். அநேகம் பேர் IT தான். ஒரு வேளை கொஞ்சம் தள்ளிப் போய் மேற்குப் பக்கம் வாங்கியுள்ளார்கள் போலும்.

நீங்கள் வீடு விற்க முதல், போட்ட திட்டங்கள் தான்... வீட்டை விரைவில் விற்கக் கூடியதாக இருந்தது.

அதிலும்... வளர்ந்து வரும் இளம் முகவரை தெரிவு செய்தமை,  புத்திசாலித்தனம்.

நன்றி தமிழ் சிறி. வாழ்க்கையில் நான் திட்டம் போட்டு செய்த உருப்படியான ஒரு வேலை என்றால் அது இதுதான். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு, திட்டமிடாமல் பெரிய வீடு வாங்கி ஈற்றில் அப்படி வாங்கிய வீட்டில் 6 மணி நேரம் கூட செலவழிக்க முடியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் நண்பர்கள் உறவினர்களின் நிலையைப் பார்த்து கற்றுக் கொண்ட விடயம் இது.

சிறந்த திட்டமிடலே நீங்கள் வீடு விரைவில் விற்க முடிந்ததற்கு காரணம். 

எனக்கு தெரிந்து சுவிசில் வீடு வாங்கியவர்கள் சந்தோசமாக இருந்ததாக கேள்விப்படவில்லை. தவறான திட்டமிடலே முழுவதும் காரணம். அத்துடன் "கௌரவம்" என்ற வியாதி.

சுவிசில் அரசும் உதவி செய்யும் அல்லவா?

பிரான்ஸில் வீடு வாங்கினால் முதல் ஐந்தாறு வருடங்கள் வங்கி வட்டி மட்டுமே கழிந்து கொண்டிருக்கும்...!

நீங்கள் நன்றாகத் திட்டமிட்டு  செயலாற்றியுள்ளீர்கள்.

இங்கு அப்படித்தான். சரியாக கணக்குப் பார்த்தால் முதல் 5 வருடங்களுக்கு நாம் கட்டுவது வட்டி மட்டுமாகத்தான் இருக்கும்.

எனது முதல் வீட்டில் இருந்து ஒரு முகவரைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு வீட்டை தனிப்பட்ட முறையில் விற்றும் இன்னொன்றை தனிப்பட்ட முறையில் வாங்கியும் உள்ளேன். இப்படியான சில முடிவுகளுக்கு சூழ்நிலைகளே காரணம்.

ஆரம்பம் முதற்கொண்டு எந்த condominium உம் வாங்கவில்லை. முகவர் வேண்டாம் என சொல்லியிருந்தார்.

தனிப்பட்டு விற்று தனிப்பட்ட முறையில் வாங்குவதுதான் உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமான விடயம். ஆனால் அதுக்கு நிறைய விடயங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அத்துடன் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு சரிவராது.

நிழலி இது உங்களுக்கான அனுபவ பகிர்வு.  அதை உங்கள் அனுபவத்தில் விடுவதே நல்லது .

இதுதான் சரி இது பிழை என்று இங்கு எதுவுமில்லை .அவரவர் தேவையும் வசதியும் தான் முதலிடம் .

Condo வாங்குதல் பற்றி   நான் முன்னர் எழுதியதாக ஞாபகம் . (எம்மவர் பலர் Downtown இல் பல Condo க்கள் வாங்கிவிட்டிருக்கின்றார்கள் அது அவர்கள் வசதியை பொறுத்தது)

.

குறிப்பு . நிழலியின் முதல் பதிவை வாசிக்க அன்பே சிவம் கமலும் மாதவனும் யூகி சேதுவும் வந்து போனார்கள் .(நிழலி மட்டும் அல்ல எம்மவர் பலரும் இதே நிலைதான் .)

உண்மையை விட விளம்பரத்தில் நம்பிக்கை வைக்கின்றாக்கள் .

இன்றைய அளவில் என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் நடுத்தர வர்க்கம் முதலீடு என்ற நோக்கில் கொண்டோ வாங்குவது நல்ல முடிவாகப் படவில்லை.  அதன் பலனை அடைய பல வருடங்கள் காத்திருக்க வேண்டி வரலாம். ஆனால் செல்வந்தர்கள் ஒன்றுக்கு மூன்று என்று கொண்டோக்களை வாங்கி எதிர்கால சந்தைக்காக இன்றே காத்திருப்பது சரியானதாக இருக்கும்.

இன்றைய இந்த நிமிடத்தில் டொரன்டோவில் கேள்விக்கு அதிகமாக சந்தையில் கொண்டோக்களின் எண்ணிக்கை இருக்கின்றது. எப்ப Demand இனை விட supply குறைவாக அல்லது ஏற்றதாக மாறுகின்றதோ அன்று  கொண்டோக்கள் நல்ல முதலீடாக மாறும்.

விளம்பரம் என்று எதைச் சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை. முகவரை தெரிந்தெடுத்தது விளம்பரத்தின் மூலம் கண்டு என்று புரிந்து கொண்டிருந்தால் அது தவறு. ஏனென்றால் என் முகவர் சமூக வலைத்தளங்களினூடாகவும் தன் இணையத் தளத்தின் மூலமாகவும் மட்டும் தான் அறிந்து கொள்ளப்பட்டவர். வீட்டினை விளம்பரப் படுத்தியது பற்றி எழுதியிருந்தால், வல்லாரைக்கே விளம்பரம் தேவையான காலத்தில் வீட்டிற்கு விளமபரம் பல மடங்கு தேவை என்பதை மறக்க வேண்டாம்.

கொண்டோவை நீங்கள் விற்றது அதியசம் தான். நண்பர் ஒருவர் பல காலம் வைத்திருந்து(ஒருவரும் வராமல்) கடைசியாக நட்டத்தில் தான் விற்றார். அப்போ தான் கற்ற பாடம் கொண்டோ வாங்குவதில்லை என சொன்னார்.அது அவரின் அனுபவம் மட்டுமே. ஆனால் தனி வீடுகளை போல் கொண்டோக்களின் பெறுமதி அதிகம் அதிகரிப்பதில்லை. நகரமத்தியில் உள்ள கொண்டோக்களில் வேலை செய்யும் தனியானவர்கள் முதலிடுகிறார்கள். தனி வீட்டில் ரொரண்டோ எனில் சினோ அள்ளி களைத்து விடுவீர்கள் என ஆட்கள் நக்கல் அடிப்பதும் உண்டு. நன்மை/தீமை எதில் தான் இல்லை?? :)  :)

நான் கொண்டோ வாங்கியதை அறிந்த பல நண்பர்கள் என் தலையில் குட்டாததுதான் குறை. அப்படி பேசினார்கள் என்னை. :)

பனி அள்ளுவதை பற்றி நினைக்க உண்மையாக பயமாகத்தான் இருக்கு. எதுக்கும் பனி அள்ளும் அந்த இயந்திரத்தினை வாங்கிக் கொள்வது என் உடம்பை காக்கும் என்று நம்புறன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டோ என்டால் பிளட்டோ[flat]? :)

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்குவதில்... முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயங்கள்.

1) அந்த வீட்டை... விற்பவர், அந்த வீட்டைக் காட்டி.. வங்கியில் அடைமானம் வைத்து, வேறு வழிகளில் கடன் பெற்று இருப்பார்.
ஒவ்வொரு.... எழுத்துப் பதிவிலிவும், நல்ல ஒரு நொத்தாரிஸ் அல்லது சட்டத்தரணியுடன் கலந்து ஆலோசிப்பது சிறந்தது.

2) தனி வீடு வாங்கும் போது...  கூரையில், ஒழுகும் வீடுகளை (வன்னியன், இசை போன்ற கட்டிடக் கலைஞர்கள்) கட்டியிருப்பார்கள். அந்த வீட்டை... கோடை காலத்தில் மலிவு விலையில், விற்பார்கள்.
சரியான கவனமாக... பார்த்து, அறிந்து கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்

கொண்டோ என்டால் பிளட்டோ[flat]? :)

கிட்டத்தட்ட ஒன்றுதான். தொழில்நுட்ப ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம்.

இங்கு விலைக்கு வாங்க முடியாது; ஆனால் வாடகைக்கு மட்டுமே இருக்கக் கூடிய கட்டிடங்களை Apartments என்பார்கள். உரிமையாளராக கட்டிடத்தின் உரிமையாளர்கள் தான் இருப்பர். கொண்டோ என்றால் அதன் உரிமை வாங்கியவரையே சாரும்.  ownership கட்டிட உரிமையாளரின் பெயரில் இருக்காது. அதே நேரத்தில் கட்டிடத்தின் பராமரிப்பு மற்றும் மிச்ச விடயங்கள் Property Management company யிடம் இருக்கும்.

அர்ஜுன் போன்றவர்கள் மேலதிகமாக விளக்கினால் நல்லது.

வீடு வாங்குவதில்... முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயங்கள்.

1) அந்த வீட்டை... விற்பவர், அந்த வீட்டைக் காட்டி.. வங்கியில் அடைமானம் வைத்து, வேறு வழிகளில் கடன் பெற்று இருப்பார்.

ஒவ்வொரு.... எழுத்துப் பதிவிலிவும், நல்ல ஒரு நொத்தாரிஸ் அல்லது சட்டத்தரணியுடன் கலந்து ஆலோசிப்பது சிறந்தது.

இங்கு இதனை Lawyer இவற்றை உரிய முறையில் கண்டறிந்து சொல்வார். Mortgage தரும் வங்கி இது தொடர்பாக மிகுந்த அவதானமாக இருக்கும். வங்கிக்கு Law office இருந்து எல்லாம் சரியாக இருக்கு என்று உறுதிப்படுத்தினால் தான் அவர்கள் எம் விண்ணப்பத்தினை அங்கீகரிப்பார்கள்.

2) தனி வீடு வாங்கும் போது...  கூரையில், ஒழுகும் வீடுகளை (வன்னியன், இசை போன்ற கட்டிடக் கலைஞர்கள்) கட்டியிருப்பார்கள். அந்த வீட்டை... கோடை காலத்தில் மலிவு விலையில், விற்பார்கள்.

சரியான கவனமாக... பார்த்து, அறிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றி தொடர்ந்து எழுதும் போது குறிப்பிடுவேன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.