Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ அவர்களை பா ஜ க ராஜிய சபா ஂMP ஆக்கி அமைச்சர் ஆக்க வேண்டும்....

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 22 000 வாக்குகளால் தஞ்சாவூரில்  கருணாநிதியின் இடது கை டி.ஆர். பாலு தோல்வி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பது நாம் தமிழர் என்ற கட்சியையா? இல்லை, நாங்களெல்லாம் ஓரளவாவது "உணர்வுள்ள தமிழர்கள்" என இத்தேர்தலில் நிரூபித்த மக்களையா?

 

 

இருவரையும். நாம் தமிழர் என்ற உணர்வேந்திய தமிழ் மக்களையும்.. அந்த உணர்வு அலையை ஏற்படுத்திய நாம் தமிழர் தோழர்களையும். :)

  • கருத்துக்கள உறவுகள்

அ தி மு க வும் , திரிமுனால் காங்கிரசும் சேர்ந்து பலமான எதிர்க்கட்சி அமைக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ தோற்றாலும் கெளரவமாகத் தோற்பார். தி மு கவுவை வீழ்த்திவிட்டார்.

 

வை.கோ தொகுதி நிலவரம்
 
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 97,844 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 57,837 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
திமுக வேட்பாளர் ரத்தினவேலு 56,905 வாக்குகள் வித்தியாசத்தில் 3வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 8,243 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
 
நன்றி நக்கீரன்.
 
----------------------------------

இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை  தமிழகத்தில் மட்டும் ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் அறிவு காரணம் : சீமான்

 

மக்களைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் இது குறித்து, ’’தமிழகத்தில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத் துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த ஜெயலலிதா அவர்களுக்கு அபரிமிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

 

மதவாத சக்திகளுக்கும் இன துரோகிகளுக்கும் மரண அடி கொடுத்த தமிழ் வாக்காளர்கள் தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க உரியபடி போராடவும் அதிமுகவே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாக தீர்மானித்திருக்கிறார்கள்.

 

ஈழ கோரங்களுக்கு துணை போனவர்கள் மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப் பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

 

ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின் வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திரு க்கிறார்கள்.
 

மோடி அலையை ஊதித் தள்ளிய தமிழகம் பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சி தளிர்விட முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

 

பல கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை என மூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெற முடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும் ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம்.

 

முதல்வருக்கு வாழ்த்துகள் - எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள். இலையை ஆதரித்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தபோதே அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என நான் அழுத்தமாக முழங்கி வந்தேன். மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

தமிழகத்தின் நலன் பேணும் நடவடிக்கைகளை முதல்வர் எந்நாளும் தொடர்வார் என்றும், நாடாளு மன்றத்திலும் மிகுந்த பலத்தோடு தமிழகத்துக்கான‌ உரிமைகளை முழங்க வைப்பார் என்றும் நாம் தமிழர் கட்சி நம்புகிறது’’என்று கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=121856

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி :திரு.

நாம் தமிழர் கட்சியின் கொளகையில் விருப்பம் கொண்டு மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சியை வளர்த்தார் மருத்துவர் பாரதிசெல்வன் அவர் சொந்த காசு பல லட்சங்களை செலவு செய்து கட்சியை மிக சிறப்பாக வளர்த்தார் அதை பாராட்டி சீமான் அவர்கள் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார்

அவர் மணல் கொள்ளை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்

மணல் கொள்ளையர்கள் சீமானிடம் பணம் கொடுத்து சரி கட்டிவிட்டனர் சீமான் போராட்டத்தை நிறுத்த சொன்னார்

கட்டளையிட்டார் ஆனால்

அவர் பதவியை உதறிவிட்டு தன் சொந்த காசு செலவு செய்து இன்றும் மீத்தேன் திட்டத்தையும் மணல் கொள்ளையும் எதிர்த்து போராடி கொண்டுதான் உள்ளார். சீமான் ஒரு சிறந்த அரசியல் வியபாரி என்பதை என்னால் ஆதாரத்துடன் நிருபிக்க முடியும்

குறிப்பு:இப்போது மருத்துவர் பாரதிசெல்வன் சீமான் கட்சியில் இல்லை நானே அவரிடம் சென்று விசாரித்தேன் அவர் சொன்ன தகவல் சீமான் மிக மோசமான சுயநல பேர்வழி என்பதை ஆதாரத்துடன் விளக்கினார்.

  • கருத்துக்கள உறவுகள்

சில தனிநபர்கள் அவரவர் தேவையை தலைவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்றவுடன் அவதூறு பரப்புவதற்கு இப்போ முகநூலைப் பயன்படுத்தி வருகின்றனர். சீமானின் வளர்ச்சியை பொறுக்க முடியாத கட்சிகளும் இதனை ஊக்குவிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும்.. இப்படி எத்தனையோ.. வக்கிர கட்டுக்கதைகள். அதை எல்லாம் தாண்டி.. ஒரு மக்களை இன உணர்வூட்டுவது என்பது அவ்வளவு இலகு அல்ல. சீமான் அதனைச் செய்துள்ளார். நாம் தமிழர்களாக தமிழக மக்கள் உணர்ந்திருப்பது உண்மையில்.. வரவேற்கப்பட வேண்டிய நல்ல அரசியல் மாற்றம். தமிழர்களுக்கு அவசியமான ஒன்றும் கூட. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்படுகொலையின் போது.. விஜய் காந்த் நரித்தனமாக நடுநிலை வகித்தார்.

 

இன்று....

 

16-dmdk-office-chennai-600.jpg

 

தோல்வி எதிரொலி: தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட அலுவலகர்கள்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/dmdk-headquarter-chennai-wears-deserted-look-lse-201156.html
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா செம காமடி சீமானின் பிரச்சாரத்தால் தான் அம்மா வெற்றி அடைந்தவா போல , அம்மா கேட்டா சீமான தூக்கி உள்ள போட்டிடுவா கவனம்

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரமா இவங்களும் காலி பண்ண வேண்டி வரும்.

1557626_755734597781775_1926859082651657

  • கருத்துக்கள உறவுகள்

உடனடி செய்திகளை வழங்கிய ராஜவன்னியர் தலைமையிலான யாழ் கூட்டணிக்கு நன்றிகள்..! :D

அம்மா அலை அடிக்கும் என்று நினைத்ததுதான். ஆனால் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

வைகோ அவர்களுக்குத் தோல்விதான் என்பதை ஏற்கனவே ஊகிக்க முடிந்தது. இன்னுமொரு முறை தவறான கணக்கைப் போட்டுவிட்டார். தமிழ் உணர்வுக் கட்சிகளை ஒன்று சேர்த்து போட்டியிட்டிருந்தாலும் கொள்கையுடன் தோற்றிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

வைகோ கருத்து

அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும்

திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்.

‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

16.05.2014 மறுமலர்ச்சி தி.மு.க

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கிருமிகள்.. ஐ பி எல் பார்க்கிற கணக்கா பார்க்கிறார்கள்...

 

_74896265_40b56bfb-ebbc-4cb7-84f7-18b0f5
 
Narendra Modi celebrated his victory with a visit to his mother in Gujarat
 
_74899077_702f3bf7-fb6e-4da8-8e02-3730c4
 
Supporters of the BJP began celebrating outside the party's headquarters even before the Congress party admitted defeat
 
_74899256_5b64628c-7434-46ff-952a-5bd100
 
The mood was sombre at the Congress party headquarters as the extent of their defeat became clear
 
_74899073_f7fef0a4-fe6f-4f60-87cd-2e3f21
 
More than 500 million votes are being counted, with the official results expected later on Friday
 
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அரசியல் கணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. :D ஜெயா இந்த ஆட்சியில் மூவர் விடுதலை, ஈழ விவகாரம் போன்றவற்றில் நிறைவேற்றிய தீர்மானங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். நல்லது செய்தால் ஆதரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ் ஏற்கனவே செத்துவிட்டது.. ஆனால் திமுகவும், தேமுதிகவும் ஒரு தொகுதியில்கூட வெல்லக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார்கள் நாம் தமிழர் கட்சியினர். சென்றஇடமெல்லாம் புலிக்கொடியுடன் பிரச்சாரம் செய்தார்கள். வாழ்த்துக்கள் நாம் தமிழருக்கு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ வெற்றிவாகை சூடியிருந்தால் மகிழ்ச்சி முழுமை பெற்றிருக்கும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ வெற்றிவாகை சூடியிருந்தால் மகிழ்ச்சி முழுமை பெற்றிருக்கும்.. :o

மறுபடியும் கூட்டணிக் கணக்கில் தவறு இழைத்துவிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 31,674 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

 

மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியின் விளிம்பில் உள்ளார். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்
கூட்டணி    முடிவு
பா ஜ க                  38
காங்கிரஸ்           11
மாற்று அணி       06
மற்ற கட்சிகள்     02
ஆம் ஆத்மி          00





 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல்தான் தமிழீழ அரசியல் உண்மையில் சூடு பிடிக்கப் போகுது. :rolleyes: எல்லோரும் தயாரா இருங்கோ.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 31,674 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

 

மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியின் விளிம்பில் உள்ளார். :rolleyes::lol:

10329279_10152026465196104_1711965210231

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முடிவு மிகவும் சந்தோசம்  தருகிறது

முள்ளிவாய்க்காலுக்கு துணைபோன

கண்டும் பேசாதிருந்த

தமிழருக்கு துரோகமிழைத்த  கட்சிகள்  எல்லாம் கட்டிய  பணத்தையும் இழந்து

தமிழரால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன

 

வை கோ  அவர்களின் முடிவும்

தமிழரது இந்த சாதனை  மோடிக்கு தேவைப்படாதது மட்டுமே  வேதனை  தருகிறது

மதத்தை  விரும்பாத  அவர் தனியே  நின்றிருக்கலாம்

ஆனாலும் மோடி  வென்றிருப்பதால்

இதுவும் தமிழருக்க நன்மை  தரலாம்

 

இதனைச்சாதித்த

தமிழக மக்கள்

மற்றும் நாம் தமிழர் கட்சியினர்

மே 18 இயக்கம் போன்ற  அனைத்து உணர்வுசார் அமைப்புக்களுக்கும்  நன்றிகள்

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு ராஜபக்சே வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு! 2mains.gif

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கிருமியுமான... நக்மா.. படுதோல்வி.

 

இன்னொரு நடிகையான விஜயசாந்தியும் தோல்வி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கிருமியுமான... நக்மா.. படுதோல்வி.

 

இன்னொரு நடிகையான விஜயசாந்தியும் தோல்வி. :lol:

 

ஜெயிச்சா மக்கள் பணி; தோத்தா நடிப்பு- குத்து ரம்யா

 

இவங்கள பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதா? :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.