Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு ராஜபக்சே வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு! 2mains.gif

 

மோடி ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவாரோ.. என்று பயப்பிடுறார் போல. அதுதான் சீனாவுடன் 3 பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்தாகி இருக்கில்ல. அப்புறம் என்ன பயம். சுஷ்மா வேற வெல்லுறா.. சிவப்பு காப்பெட்டுக்கு குறை இருக்காது. கலங்காதேங்க.. இலங்கையின் அசோகச்சக்கரவர்த்தியே..!!! :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்
கூட்டணி    முடிவு
பா ஜ க                  40
காங்கிரஸ்           11
மாற்று அணி       06
மற்ற கட்சிகள்     05
ஆம் ஆத்மி          00
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் அனைத்துத் தர மக்களும் தாங்கள் வெறுத்தோரை அடித்து, துவம்சம் செய்துவிட்டார்கள்.. யாரும் இந்தளவிற்கு முடிவுகளை எதிர்பார்க்கவில்லை..

 

நான் அதிமுக 36 இடங்களாவது பெறும் என விரும்பினேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நீலகிரியில்.. NOTA க்கு வாக்களித்த மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்ததை விடப் பல மடங்காம்.

 

கணிசமான அளவு தமிழக மக்கள்.. NOTA க்கு வாக்களித்துள்ளனர்.

 

NOTA என்றால் என்ன என்று ராஜவன்னியன் அண்ணா நீட்டிச் சொல்லி விடுங்களேன். :)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ராஜபக்சவுக்கு சொம்பு தூக்க நினைத்தால் அம்மாவின் சத்தம் ஜாஸ்தியா இருக்கும்.

ஆனாலும், அதிமுக மத்தியில் செல்வாக்குடன் இருக்கும். மோடியும் நல்ல அரசியல் செய்ய தெரிந்தவர். ஆனானப்பட்ட அத்வானியையே ஓரங்கட்டி முன்னுக்கு வந்தவர். அகில உலக பெரியண்ணர் அமெரிக்காவையே தனது விடயத்தில் சறுக்க வைத்துவிட்டார்..

அப்படிப்பட்டவர் தமிழகத்தில் அம்மாவுடன் ஒரு working relationship உடன் நகரவே விரும்புவார். அம்மா ராஜபக்சவின் எதிரி.. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலகிரியில்.. NOTA க்கு வாக்களித்த மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்ததை விடப் பல மடங்காம்.

 

கணிசமான அளவு தமிழக மக்கள்.. NOTA க்கு வாக்களித்துள்ளனர்.

 

NOTA என்றால் என்ன என்று ராஜவன்னியன் அண்ணா நீட்டிச் சொல்லி விடுங்களேன். :)

 

30-09-13-pg-10a.jpg

 

 

இந்தியாவில் இரகசியக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக, நோட்டா (None Of The Above - NATO) அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற 'நோட்டா' பட்டன் அழுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது..இந்த முறைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 2014 பாராளுமன்றத்தேர்தலில் இந்தியா முழுவதும் அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது..

மக்கள் சட்டம்1951 பிரிவு 128ன் படி வாக்களிக்க இரகசிய பராமரிப்பு என்று ஒரு தனிப்பிரிவு உள்ளது.அதன்படி முந்தைய காலங்களில் தமிழக மாநில தேர்தல் துறை 49 - (O) விதியின்படி வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அதற்கான படிவம் (எண் 17-A ) கேட்டு வாங்கி பூர்த்தி செய்து அதில் கைவிரல் ரேகை அல்லது கையெழுத்து போட்டு பிறகு ''வாக்களிக்க மறுத்துவிட்டனர்'' என்ற பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். ஆனால் இதில் ரகசியமுறை காப்பாற்றப்படுவதில்லை.

 

ஆனால் தற்போது ''நோட்டா'' பட்டன் முறை வாக்களிக்கும் இயந்திரத்தில் அமல்படுத்தியதால்தான் வாக்களிப்பதற்கான இரகசியக்கொள்கை முழுமையாக காப்பாற்றப்பட்டு உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

NOTA என்றால் None of the above.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் எவருக்கும் எனது வாக்கு கிடையாது என வாக்களிப்பது.

எனக்கு அ.ராசா தோற்றதில்தான் மிகுந்த மகிழ்ச்சி.. :unsure: ஒருவேளை வென்றிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டை தமிழகம் நிராகரித்துவிட்டது என்று உடன்பிறப்புகள் பிரச்சாரம் செய்திருப்பார்கள்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலகிரி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

இங்கு பதிவான 48,570 நோட்டா (NOTA) வாக்குகளால் ஆ.ராசா வெற்றி வாய்ப்பை இழந்தார். :)

  • கருத்துக்கள உறவுகள்

Don't worry be happy ஸ்டான்லின்.........தோல்வி தான் வெற்றியின் முதல்ப்படி.....முதலில் உங்களுக்கு தவறான ஆலோசனை வழங்கும் துதி பாடிகளை தூக்கி எரிந்து பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பதவி கொடுக்காமல் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு கட்சி பதவிகளை கொடுங்கள்.....கட்ச்சியின் அனைத்து மட்டத்திலும் மாற்றம் அவசியம்.....

  • கருத்துக்கள உறவுகள்

அத்வானி பிரதமர் வேட்பாளராக நின்றிருந்தால் கோவையும், கன்யாகுமரியும் பாஜகவுக்கு கிடைத்திருக்குமா?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் மோடியுடன் மீண்டும் சேர 40 வருடமாக  அரிசி உணவை சாப்பிடாத ஜசோதா பென்! (ஏன் இந்த அம்மாவுக்கு அரிசின்னா அலேர்ஜியா..?! )
 
பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் எம்பிக்கான வேட்பு மனு தாக்கல் செய்த போது, தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். அதன் பிறகுதான் அவர் திருமணம் ஆனவர் என்பது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் கணவரை பிரிந்திருக்கும் ஜசோதா தனது சகோதரர்களுடனே வாழ்ந்து வருகிறார்.

இதுபற்றி அவரது சகோதரர் அசோக் மோடி கூறும்போது, ‘நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தார் ஜசோதா. குஜராத்தில் பனஸ்கந்தா பகுதியில் உள்ள அம்பாஜி அம்மன் கோயிலுக்கு கணவருடன் வந்து பிரார்த்தனை செய்ய விரும்புகிறார்.

 

இதுகூட மோடி வர சம்மதித்தால் மட்டுமே ஜசோதா நிறைவேற்றுவார். இதற்காக மோடியை அவர் வற்புறுத்த மாட்டார். கணவர் மோடியுடன் மீண்டும் சேர வேண்டும் என்பதற்காக கடந்த 40 வருடமாக அரிசி மற்றும் அரிசியால் செய்யப்பட்ட எந்த உணவையும் ஜசோதா சாப்பிடுவதில்லை. இந்த ஜென்மத்தில் இது நடக்காவிட்டால் அடுத்த ஜென்மத்தில் நடக்கும் என்றார்.

 

மோடிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களையோ, மீடியாக்களையோ சந்திக்காமல் விலகி இருக்கும் ஜசோதா, வாக்கு எண்ணும் தினமான இன்று திருப்பதிக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=121866

  • கருத்துக்கள உறவுகள்

ரௌல் கான் (ராகுல் காந்தி) தோல்விக்கு தான் பொறுப்பேற்கிறாராம்.. :wub: (ஆனால் பதவியை விட்டு விலகமாட்டார்..) :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என் செல்லம் மன்டியா தொகுதியில சறுக்கிருச்சிய்யா.... :(

 

div.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தூக்கு தண்டனை கைதிகளின் விடுதலையை முக்கியமாக எதிர்த்தவர் இவர்....

  • கருத்துக்கள உறவுகள்

என் செல்லம் மன்டியா தொகுதியில சறுக்கிருச்சிய்யா.... :(

 

div.jpeg

 

கலைச்சேவை செய்து.. தேற்றிக்கலாம் விடுங்க. :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் திமுக படுதோல்வியடையும் என சரியாக கணித்து சொன்ன எங்கள் அணுகுண்டு விஞ்ஞானி அழகிரி...

10305431_10203418506837897_3586654621655

  • கருத்துக்கள உறவுகள்

ஹய்யோ ரம்யா குட்டி நீ தோத்திட்டியாமே...நான் என்ன செய்வேன்......கல் நெஞ்சம் கொண்ட மண்டியா தொகுதி மக்களை என்ன செய்வேன்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி, எங்கேயிருந்து இப்படி படங்களை கொண்டுவந்து போடுகிறீர்கள்?

 

ஒரே கலக்கல்!  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஹய்யோ ரம்யா குட்டி நீ தோத்திட்டியாமே...நான் என்ன செய்வேன்......கல் நெஞ்சம் கொண்ட மண்டியா தொகுதி மக்களை என்ன செய்வேன்........

 

கண்ணகி மதுரைய எரிச்ச மாதிரி இவங்க மன்டியாவை எரிச்சிட போறாங்க... :D

  • கருத்துக்கள உறவுகள்
 
73 தொகுதிகளுக்கான முடிவு அறிவிப்பு
 
73 தொகுதிகளுக்கான முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அதில் பாஜக 51 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், நேசனல் காங்கிரஸ் பார்ட்டி 2 இடத்திலும், அதிமுக 1 இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் 4 இடத்திலும், இந்தியன் நேசனல் லோக் தளம் 1 இடத்திலும், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி 1 இடத்திலும், ஜனதா தளம் 1 இடத்திலும், சிரோமணி அகாலி தளம் 1 இடத்திலும், சிவசேனா 3 இடங்களிலும், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் 4.18 மணி அளவில் அறிவித்துள்ளது. 
  • கருத்துக்கள உறவுகள்

2014 ஆம் ஆண்டின் சிறந்த ஜோகியக்காரர் அண்ணன் அழகிரி.. இவர் குறி சொன்னார்ப்போல் திமுக 1 சீட் கூட ஜெய்க்க வில்லை...  இவரைப்போல் ஒரு பிள்ளையை பெற்றதற்கு கருணாநிதி பெருமைப்பட வேண்டும்.. 

 

10339697_725486604156101_885987365011848

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்
கூட்டணி    முடிவு
பா ஜ க                  62
காங்கிரஸ்           11
மாற்று அணி       11
மற்ற கட்சிகள்     06
ஆம் ஆத்மி          01

  • கருத்துக்கள உறவுகள்

இராசபட்சேவுக்கு உடல் வியர்த்திருக்கும்?

தமிழ்நாட்டில் தமிழீழத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சி பெருவாரியான வெற்றி பெற்றதைக் கண்டு!

  • கருத்துக்கள உறவுகள்

என் செல்லம் மன்டியா தொகுதியில சறுக்கிருச்சிய்யா.... :(

div.jpeg

கலைச்சேவைக்கு நான் ரெடி நீ ரெடியா ரம்மு
  • கருத்துக்கள உறவுகள்

தங்க தட்டில வச்சு தாங்கிறேன்னு சொன்னேனே... இப்படி பண்ணீட்டீங்களே... மக்கழே!!!

10257995_714812388576234_613724679289358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.