Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.க. ஸ்டாலின் ராஜினாமா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18-stalin55-600.jpg

 

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மு.க. ஸ்டாலின் ராஜினாமா...?

 

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் விலக முன்வருவதாகவும், அவர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபோது தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை.

 

இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

 

சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, இத்தேர்தலில் திமுக தோல்விக்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில் ஸ்டாலின் விலகல் குறித்த தகவல் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

 

இதனால், மீண்டும் கட்சிக்குள் அழகிரி அழைக்கப்படுவாரா என்ற கருத்தும் பரபரப்பாகியுள்ளது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் இன்னும் முடியவில்லை , இடைவேளை...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் இன்னும் முடியவில்லை , இடைவேளை...!

 

தலைவர், மதுரைக்கு ஒரு போன் போட்டு அழகிரியை... கூப்பிடுவாரா?

அல்லது... கட்சியில், வேறு யாரையும்... தலைவராக நியமிப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர், மதுரைக்கு ஒரு போன் போட்டு அழகிரியை... கூப்பிடுவாரா?

அல்லது... கட்சியில், வேறு யாரையும்... தலைவராக நியமிப்பாரா?

 

தலைவர் அழகிரிக்கு தந்தி அடிச்சிருப்பார் :D

  • கருத்துக்கள உறவுகள்
தி மு க வின், முக்கியமாக, கருணாநிதியின், கடந்த நூறாண்டு பழைய விளையாட்டுக்கள்,  திருகுதாளங்கள், 21ம் நூறாண்டுஅரசியலுக்கு சரிப் பட்டு வராது. மனைவி, துணைவி, அவர்களது பிள்ளைகளுக்கு கட்சிப் பதவிகள் சரி வரப் போவதில்லை.
 
ஆனானப் பட்ட, நேரு தலைமுறையின் ராகுல் காந்தியே, வாரிசு அரசியல் சரிவாரது என உணர்த்தப் பட்டுள்ளார். அவரது திறமை, தகுதி கேள்விக்கு உள்ளாக்கப் பட்டு உள்ளது. 
 
மக்கள் படிப்பறிவுடன், பல ஊடகங்கள் மூலம் அரசியல் தெளிவு மிகவும் கொண்டவாராக உள்ளனர். ஈழத் தமிழருக்காக உண்ணாவிரத, சுத்து மாத்து போல இன்னுமோர் ராஜினாமா சுத்துமாத்து நடிப்பினை ரசிக்கும் நிலையில் மக்கள் இல்லை.
 
ஸ்டாலின், இல்லாவிடில் அழகிரி, அதுவும் இல்லாவிடில் கனிமொழி என கருணாநிதி செல்லம் விளையாடினால், மக்கள் முட்டை தான் விளையாடக் கொடுப்பார்கள்.
 
தி மு க, வைகோ போன்ற பழைய தலைவர்களை மீண்டும் கொண்டு வந்து, கட்சியை, இதய சுத்தியுடன் ஒப்படைத்து நேர்மையாக சரிப் படுத்தினால் அன்றி, கருணாநிதி வாழும் காலத்திலேயே, கண் முன்னே கதை முடியும் என உணர்த்தப்பட்டு உள்ளது.
 
முக்கியமாக, கருணாநிதி, ராஜினாமா செய்து, ஓய்வு எடுக்க முன் வரவேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலின் ராஜினாமா என்பதெல்லாம் வெறும் நாடகம்: மு.க.அழகிரி கருத்து Posted Date : 15:23 (18/05/2014)Last updated : 15:23 (18/05/2014) மதுரை: மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வது என்பதெல்லாம் வெறும் நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் அனைத்து பொறுப்பக்களில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறும்போது, அவர் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ள தகவலே நிருபர்கள் சொல்லி தான் எனக்கு தெரியும். இது எல்லாமே வெறும் நாடகம். அவர் ராஜினாமா கடிதம் கொடுப்பது போல் கொடுப்பார், சிலர் வேண்டாம் என்று தடுப்பார்கள். உடனே, தி.மு.க. தலைவரும் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறுவார். இது எல்லாம் நாடகம் தான். இந்த நாடகம் எவ்வளவு நாள் தான் போகும் என்று பொறுத்திருந்து பாருங்கள். தேவையற்ற செய்திகளை நான் பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மு.க.ஸ்டாலின் ராஜினாமா ஒரு நாடகம் எனவும், வெறும் கண்துடைப்பு என்றும் அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

thanks-vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் தோல்விக்கு தான் பொறுப்பேற்று, ஸ்டாலின் தந்தை பதவியிலிருந்து தலீவர் ராஜினாமா

 

10390184_756870534334848_452403483196108


அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் நாடகத்தை பத்தி தெரிஞ்சுருக்கு

 

10351528_756848651003703_520968498677877


1609956_756819741006594_1532729178516198

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன நாடகம்... இது தான் என் கடைசித் தேர்தலாக இருக்கும் என்று கலைஞர் விட்ட கண்ணீரைக் கூட மக்கள் கண்டுகொள்ளவில்லை எனும்போது, இதையா கவனிக்கப் போகின்றார்களார்கள்....

:D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18-stalin3434-1600.jpg

 

"விலகுகிறேன்".. பரபரப்பேற்படுத்திய ஸ்டாலின்.. தலைவர்கள் கோரிக்கையால் முடிவு வாபஸ்!

 

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது.

 

நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை.

 

இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்ததாகவும், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள கருணாநிதி மறுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

 

இதற்கிடையே சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, இத்தேர்தலில் திமுக தோல்விக்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில் ஸ்டாலின் விலகல் குறித்த வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கூட்டியது. இதனால், மீண்டும் கட்சிக்குள் அழகிரி அழைக்கப்படுவாரா என்ற கருத்தும் நிலவியது.

 

இதனால் ஸ்டாலின் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் ஸ்டாலினின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக கட்சி துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

என்ன பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்?

 

திமுக இளைஞர் அணி ஸ்டாலின் வசம்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கட்சியின் பொருளாளராகவும் அவர் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார். இந்த இரு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாகத்தான் தனது கடிதத்தில் கூறியிருந்தாராம் ஸ்டாலின்.

 

இந்தத் தேர்தலில் ஸ்டாலின் பொறுப்பு என்று பார்த்தால் கூட்டணி குறித்த திட்டமிடல், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், பிரசாரம் என அனைத்திலுமே ஸ்டாலின்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திமுக தலைவரின் அறிவுறுத்தலையும், கட்சித் தொண்டர்களின் கோரிக்கையையும் தொடர்ந்து ராஜினாமா முடிவை கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப் போவதில்லை என ஸ்டாலின் தீர்மானித்துள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் தோல்விக்கு ஊடகங்கள்தான் காரணம். - கருணாநிதி

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திமுகவின் தோல்விக்கு ஊடகங்கள்தான் காரணம். - கருணாநிதி

 

திமுகவின் தோல்விக்கு ஊழல்கள்தான் காரணம். - கருணாநிதி :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏதாவது புரியுதா ?

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி கூறியபோது,ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரை ஏற்று தனது முடிவை மாற்றி கொண்டார்.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் பொய்யானது.

 

 

ராஜினாமாவை ஸ்டாலின் வாபஸ் பெற்றார் - துரைமுருகன்

ஸ்டாலின் ராஜினாமாவே செய்யவில்லை - கருணாநிதி

ஒரு தோல்வியிலயே மொத்த பேரும் லூஸாயிட்டிங்களாடா ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நிருபர் : மக்களவை தேர்தலில் திமுக

தோல்விக்கு காரணம் என்ன?

கலைஞர் : வாக்குகள் குறைந்தது தான்....!!!!!

// திருட்டு ரயில் விஞ்ஞானி என அன்போடு அழைக்கப்படுவாய்

கருணாநிதி பிறந்தநாள் விழா

பட்டிமன்றம்.

கலைஞரின் 4 மணி நேர உண்ணாவிரதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதா ?

தளபதியின் 3 மணி நேர ராஜினாமா அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதா ?

நடுவர் திண்டுக்கல் லியோனி

 

  • கருத்துக்கள உறவுகள்

அழகிரி என்ற பிள்ளை இருப்பதாக்க கருத வில்லை

:P

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியை பற்றி தெரிஞ்சவையளுக்கு உதெல்லாம் சிம்பிள் நியூஸ் .....பச்சை மலைவிழுங்கி கருணாநிதி.........எல்லாம் ரீல்....

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை பற்றி தெரிஞ்சவையளுக்கு உதெல்லாம் சிம்பிள் நியூஸ் .....பச்சை மலைவிழுங்கி கருணாநிதி.........எல்லாம் ரீல்....

 

தாத்தா 2009ம் ஆண்டை ஒருக்கா நினைத்து பாருங்கோ...மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் மானில அரசின் முடிவு என்று எல்லாம் சொனாரே மறந்து போனிங்களா...சோனியாவுக்கு காவடி எடுத்த இந்த எட்டப்பன்ட அரசியல் வாழ்க்கை கிட்ட தட்ட முடிந்து போய் விட்டது...அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லும்....ஒரு வார்த்தையில் சொல்லப் போனால் கருணாநிதி அநாதை இப்போது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.