Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு

Featured Replies

மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201
140520112309_narendra_modi_bjp_304x171_a

நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.

 

அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்வாரா என்று இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை.

 

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்

நரந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கிறது.

தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.

இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி இராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் இராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.

 

எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, இராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை, இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என வைகோ கூறியுள்ளார்

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6033971.ece?homepage=true

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்,நாம் தமிழர்,வைகோ போன்றவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து மகிந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவரை இந்தியாவிற்கு வர விடாமல் பண்ண வேண்டும்/இந்தியாவில் இருந்து துரத்துவதோடு இல்லாமல் தங்களது ஒற்றுமையையும் காட்ட வேண்டும்

மகிந்த கட்டாயம் போவார்...ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் பிரதமரையும் அழைத்துள்ளது...

வைகோ தான் போவாரா மாட்டாரா என்று தெரியாது...

 

மகிந்தவையும் வைகோவையும் பக்கத்து பக்கத்துக்கு இருக்கையில் இருத்தினால் எப்படி இருக்கும்...

  • தொடங்கியவர்

சீமான்,நாம் தமிழர்,வைகோ போன்றவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து மகிந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவரை இந்தியாவிற்கு வர விடாமல் பண்ண வேண்டும்/இந்தியாவில் இருந்து துரத்துவதோடு இல்லாமல் தங்களது ஒற்றுமையையும் காட்ட வேண்டும்

சும்மா பழைய வழக்கத்திற்கு எல்லோரையும் அழைப்பார்கள் .மகிந்தா வந்தார் போனார் என்று விட்டுவிட்டு ஆக வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கு அதை முதலில் கவனிக்க வேண்டும் .

அதைவிட்டு கொடி பிடிப்பம் கூட்டம் போடுவம் என்று பரம்பரை தொழிலை கையில் எடுக்க கூடாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா பழைய வழக்கத்திற்கு எல்லோரையும் அழைப்பார்கள் .மகிந்தா வந்தார் போனார் என்று விட்டுவிட்டு ஆக வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கு அதை முதலில் கவனிக்க வேண்டும் .

அதைவிட்டு கொடி பிடிப்பம் கூட்டம் போடுவம் என்று பரம்பரை தொழிலை கையில் எடுக்க கூடாது .

 

15-ltte2-300.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பழைய வழக்கத்திற்கு எல்லோரையும் அழைப்பார்கள் .மகிந்தா வந்தார் போனார் என்று விட்டுவிட்டு ஆக வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கு அதை முதலில் கவனிக்க வேண்டும் .

அதைவிட்டு கொடி பிடிப்பம் கூட்டம் போடுவம் என்று பரம்பரை தொழிலை கையில் எடுக்க கூடாது .

 

:D

i2efcb9c.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வாராரோ இல்லையோ.. உலகத் தமிழர்கள்.. குறிப்பாக தமிழக மக்கள் மகிந்தவின் இந்திய வரவுக்கு எதிராக மோடி உணரும் படியான வலுவான ஒற்றுமையுடன் எதிர்ப்பை பதிவு செய்வது.. மோடி அரசுக்கும்.. தமிழக பா ஜ கவுக்கும் காத்திர செய்தியை சொல்லும்..!

 

மோடி நினைச்சதை செய்யலாம். அதற்கான வலு மத்தியில் அவருக்குள்ளது. ஆனால் மாநிலத்தில் தமிழர்கள் நினைப்பதைத் தான் செய்வார்கள் என்பதை மோடிக்கு உணர்த்துவதும் அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

‪#‎ஒரே_கல்_பல_மாங்காய்கள்‬

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் படு பாதகன் மகிந்த ராஜபக்ஷே திட்டமிட்டே தனது இந்தியப் பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ராஜபக்ஷ வின் இந்தியப் பயணம் சம்பிரதாயமானது அல்ல. அவனது நோக்கம் பரந்து பட்டதாக திட்டமிடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்கள் கசிகின்றன்..

‪#‎நோக்கம்‬-1

மோடியின் அரசு தனக்கும் இலங்கைக்கும் எந்த மாதிரியான அனுசரனையில் இருக்கும் என ஆழம் பார்ப்பது.மோடியை எப்படியாவது தனது கைக்குள் போட்டுக் கொள்வது

#நோக்கம்-2

இலங்கைக்கும் இந்தியாவிற்குமான இணக்கம் எந்த அரசு மாறினாலும் மாறாது என்பதை தமிழக கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் சூசகமாக தெரிவிப்பது.

#நோக்கம்-3

தனிப்பெரும்பான்மையில் பாஜக அரசு அமைக்க இருப்பதால் தமிழகக் கட்சி தலைவர்களிடமிருந்து அழுத்தமோ எதிர்ப்போ குறைய வாய்ப்புள்ளதா ? குறிப்பாக ஜெயலலிதா, வைகோ போன்றோர் தங்களது எதிர்ப்பு நிலையை குறைக்கிறார்களா? என்பதை நோட்டம் விடுவது.

#நோக்கம்-4

தான் வருவதால் நிச்சயம் ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பார். அதன் மூலம் மோடிக்கும் ஜெ. வுக்குமான நட்பை சீர் குழைப்பது. என்னதான் நண்பராக இருந்தாலும் மோடி ஜெயலலிதாவை விட ஒரு நட்டின் அதிபர் என்ற வகையில் தனக்குதான் முன்னுரிமை கொடுப்பார். ஜெயலலிதாவுக்கு ஒரு மாநில முதல்வர் என்ற அளவிலேயே மரியாதை கிடைக்கும் என்பதை ஜெயலலிதாவுக்கு புரிய வைப்பது.

#நோக்கம்-5

தமிழகக் கட்சிகளிடம் நிலவும் ஒத்துழைப்பின்மையை பயன்படுத்திக் கொள்வது. மோடி அரசுக்கும் தமிழகக் கட்சிகளிடமும் பகைமை உணர்வை வளர்ப்பது. தமிழகக் கட்சிகளிடம் குழப்பம் விளைவிப்பது. குறிப்பாக தமிழக அரசு இலங்கைக்கு இந்தியா மூலம் நிச்சயம் குடைச்சல் குடைச்சல் கொடுக்கும் என நம்பும் ராஜபக்ஷே ஜெ.வை மோடியை வைத்தே சமாளிப்பது.

#நோக்கம்-6

தனது முதல் இந்தியப் பயணத்திலேயே இந்தியா தனது பேச்சை கேட்குமா? இல்லை தமிழகக் கட்சிகள் சொல்வதை கேட்டுமா? என்பதில் “இரண்டில் ஒன்று” பார்த்து விடுவது.

இத்தனை வஞ்சனை எண்ணங்களோடு வரும் 26 ம் தேதி இந்திய மண்ணில் காலடி வைக்கிறது இலங்கையின் இனப்படுகொலை தலைமை. வரவேற்கக் காத்திருக்கிறது நாடாளப்போகும் வெளியுறவுக் கொள்கை மாறாத பாஜக தலைமை.

வெறுமையுடன் தலைமையில்லாத் தமிழன்......

-காங்கிரஸால் தடை செய்யப்பட்டோர் சங்கம்-

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு அவரின் இடத்துக்கே சென்று... அலரிமாளிகையில் பொன்னாடை போர்த்திய திமுக இன்று.. மகிந்தவின் இந்திய விஜயத்தை வலுவாகக் கண்டிக்கிறதாம்.

காங்கிரஸ் அரசு அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளித்து விருந்தும் வைச்சதை ஐயாக்கள் மறந்திட்டார்கள் போலும்..!

காங்கிரஸுக்கு திமுகவுக்கு போட்டியாக.. அன்றைய பா ஜ கவும்.. சுஷ்மாவை அனுப்பி மகிந்தவுக்கு வாழ்த்துச் சொன்னது. இந்தியாவுக்கு அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பும்.. திருப்பதியில் பாவ புண்ணிய பூசையும் செய்து அனுப்பியது..!

ஆக.. ஹிந்திய ஆளும் வர்க்கமும்.. திராவிடமும்.. சு.சுவாமி போன்ற மாமாக்களும் மகிந்தவை கைவிடமாட்டார்கள்.

ஆனால்.. தமிழக மக்கள் அவரை தமிழகத்துக்குள் நுழைய விடமாட்டார்கள். இதனை மேற்படி தரப்புக்கள் விளங்கிக் கொண்டால் சரி. மகிந்த டெல்லிக்கோ.. தமிழகம் அல்லாத இந்தியாவுக்கோ.. வந்து போகலாம்.. அதன் விளைவை ஏற்க வேண்டியது மேற்படி ஆட்களே...!

முன்னர் போல.. மகிந்தவின் இந்திய விஜயத்தை தமிழக மக்கள் ஒற்றுமையோடு இம்முறையும் மோடி உணர்ந்து கொள்ளும் வகையில் வலுவாக எதிர்க்க வேண்டும்.!!!!!

 

10336650_10152090903162944_4836366703113

 

10396306_10152090903327944_7959799860238

 

10366119_10152090903552944_4806715309939

 

10312681_10152090903772944_4029848365343

 

10363643_10152090903952944_9008382071676

 

10371723_10152090905087944_5887680314408

 

10342471_10152090905157944_4744384558908

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரசாமியின் படத்துக்கு அடுத்த படத்தில் இருக்கிறவர் யார் நெடுக்ஸ்?

  • தொடங்கியவர்

 

‪#‎ஒரே_கல்_பல_மாங்காய்கள்‬

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் படு பாதகன் மகிந்த ராஜபக்ஷே திட்டமிட்டே தனது இந்தியப் பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ராஜபக்ஷ வின் இந்தியப் பயணம் சம்பிரதாயமானது அல்ல. அவனது நோக்கம் பரந்து பட்டதாக திட்டமிடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்கள் கசிகின்றன்..

‪#‎நோக்கம்‬-1

மோடியின் அரசு தனக்கும் இலங்கைக்கும் எந்த மாதிரியான அனுசரனையில் இருக்கும் என ஆழம் பார்ப்பது.மோடியை எப்படியாவது தனது கைக்குள் போட்டுக் கொள்வது

#நோக்கம்-2

இலங்கைக்கும் இந்தியாவிற்குமான இணக்கம் எந்த அரசு மாறினாலும் மாறாது என்பதை தமிழக கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் சூசகமாக தெரிவிப்பது.

#நோக்கம்-3

தனிப்பெரும்பான்மையில் பாஜக அரசு அமைக்க இருப்பதால் தமிழகக் கட்சி தலைவர்களிடமிருந்து அழுத்தமோ எதிர்ப்போ குறைய வாய்ப்புள்ளதா ? குறிப்பாக ஜெயலலிதா, வைகோ போன்றோர் தங்களது எதிர்ப்பு நிலையை குறைக்கிறார்களா? என்பதை நோட்டம் விடுவது.

#நோக்கம்-4

தான் வருவதால் நிச்சயம் ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பார். அதன் மூலம் மோடிக்கும் ஜெ. வுக்குமான நட்பை சீர் குழைப்பது. என்னதான் நண்பராக இருந்தாலும் மோடி ஜெயலலிதாவை விட ஒரு நட்டின் அதிபர் என்ற வகையில் தனக்குதான் முன்னுரிமை கொடுப்பார். ஜெயலலிதாவுக்கு ஒரு மாநில முதல்வர் என்ற அளவிலேயே மரியாதை கிடைக்கும் என்பதை ஜெயலலிதாவுக்கு புரிய வைப்பது.

#நோக்கம்-5

தமிழகக் கட்சிகளிடம் நிலவும் ஒத்துழைப்பின்மையை பயன்படுத்திக் கொள்வது. மோடி அரசுக்கும் தமிழகக் கட்சிகளிடமும் பகைமை உணர்வை வளர்ப்பது. தமிழகக் கட்சிகளிடம் குழப்பம் விளைவிப்பது. குறிப்பாக தமிழக அரசு இலங்கைக்கு இந்தியா மூலம் நிச்சயம் குடைச்சல் குடைச்சல் கொடுக்கும் என நம்பும் ராஜபக்ஷே ஜெ.வை மோடியை வைத்தே சமாளிப்பது.

#நோக்கம்-6

தனது முதல் இந்தியப் பயணத்திலேயே இந்தியா தனது பேச்சை கேட்குமா? இல்லை தமிழகக் கட்சிகள் சொல்வதை கேட்டுமா? என்பதில் “இரண்டில் ஒன்று” பார்த்து விடுவது.

இத்தனை வஞ்சனை எண்ணங்களோடு வரும் 26 ம் தேதி இந்திய மண்ணில் காலடி வைக்கிறது இலங்கையின் இனப்படுகொலை தலைமை. வரவேற்கக் காத்திருக்கிறது நாடாளப்போகும் வெளியுறவுக் கொள்கை மாறாத பாஜக தலைமை.

வெறுமையுடன் தலைமையில்லாத் தமிழன்......

-காங்கிரஸால் தடை செய்யப்பட்டோர் சங்கம்-

 

 

இப்படி எல்லாம் இருக்கா எங்களுக்கு தெரியாதே . :icon_mrgreen: . கூட்டமாய் போய் கொடி பிடிக்க என்றால் வாறம். :icon_idea: (அதற்குள்ளும் தள்ளு முள்ளு படுவம் கண்டுக்க கூடாது )

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் இருக்கா எங்களுக்கு தெரியாதே . :icon_mrgreen: . கூட்டமாய் போய் கொடி பிடிக்க என்றால் வாறம். :icon_idea: (அதற்குள்ளும் தள்ளு முள்ளு படுவம் கண்டுக்க கூடாது )

y6ltj8b6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவுக்கு அழைப்பு: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளது: ஜெயலலிதா கண்டனம்.

 

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

புதிய பாரதப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

 

இலங்கைத் தமிழர் பிரச்சனையில், தமிழ்நாட்டு மக்கள், மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மனஎழுச்சி மற்றும் கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே. நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்று, ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும், இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் இன  அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.

 

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

 

ஆனால், முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி, தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது. புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம்.

 

ஆனால், புதிய பிரதமரும், புதிய  மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது.  இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

 

புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள்  சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122226

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பதவி ஏற்பு வைபவத்தை ராஜபக்சவின் வரவை காட்டி ஜெ புறக்கணிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனிக் கருணாநிதிக்கு.. மோடி பதவி ஏற்பு அன்று.. காய்ச்சல் வரும். ஆஸ்பத்திரிக்கு போயிடுவார். !!!


சுப்பிரசாமியின் படத்துக்கு அடுத்த படத்தில் இருக்கிறவர் யார் நெடுக்ஸ்?

 

பா ஜ க பிரமுகர். சுஷ்மாவின் கூட்டாளி. :)

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன்:

 

rajapakse-and-thirumavalavan.jpg

 

தஞ்சையில் தோற்ற பாலு.. :D

 

3.jpg


வில்லன் நம்பியாருடன்.. :D

 

BaluMP-UNDCPA66-SnapsIndia.jpg

மோடி விழாவில் ராஜபக்சே- வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்!
 
 
சென்னை: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதுடன் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: மோடி விழாவில் ராஜபக்சே- வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்! புதிய பாரதப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மன எழுச்சி, கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே. நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்று ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும் இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது. புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும் தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால் புதிய பிரதமரும் புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முனன்ரே, இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்பாக்கியமான செயல், தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்த செயல் வெந்த புண்ணில்வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. புதியதாக மத்தியில் அமைய உள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்த செயல் தவிர்க்கப்பட்டிருந்தால் புதிதாக அமையவுள்ள அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக இருந்திருக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

இப்படி எல்லாம் இருக்கா எங்களுக்கு தெரியாதே . :icon_mrgreen: . கூட்டமாய் போய் கொடி பிடிக்க என்றால் வாறம். :icon_idea: (அதற்குள்ளும் தள்ளு முள்ளு படுவம் கண்டுக்க கூடாது )

கள்ள காதல் சகோதரத்துவ கொலைகள், சமத்துவ கூட்டத்தில் கேள்வி கேட்போரை அடித்து நொறுக்குவது போன்ற உங்கள் சனநாயக செயல்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை.

அது தான் பிரச்சினையே. கூட்டத்தில் அடித்து நொறுக்கிய உங்கள் ரவுடி நண்பர் உள்ளுக்கு போயிருந்தால் பொத்தியிருப்பீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.