Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த விழுமியங்களை பாதுகாக்கும் காலம் வந்துவிட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
 
galagoda.jpg
 
மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைநிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தேரர் தெரிவித்தார்.
 
இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று கொழும்பு விவேகானந்தா மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமானது. 
இவ்வூர்வலம் ஜிந்துப்பிட்டி, செட்டியார் தெரு, மெயின் வீதி, ரெக்லமேஸன் வீதி ஊடாக கொட்டாஞ்சேனை வந்தடைந்தது. 
இதில் ஜனாதிபதியின்  இந்து மத ஆலோசகர் பாபுசர்மா, ஐயப்பதாச குருக்கள் உட்பட பல குருமாரும் சுமார் 500க்கு மேற்பட்ட இந்து பக்தர்களும் கலந்துகொண்டனர்.
 
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மேலும் பல தேரர்களும் இதில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய கலகொட அத்தே ஞானசார தேரர், நாட்டில் கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் 400 க்கும் மேலதிகமானவை இயங்குகின்றன. இவ்வமைப்புகள் பிரார்த்தனை கூடங்களை அமைத்துக் கொண்டு விசேடமாக தொட்டலங்க, கிராண்ட்பாஸ், வத்தளை போன்ற நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இயற்கைக்கு மாறான கருத்துகளை பரப்புகின்றனர். விசேடமாக கொழும்பில் வாழும் இந்து, பௌத்த மக்களை இலக்கு வைத்து மாயையான உலகை அவர்களுக்குக் காண்பித்து பணம், பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுகின்றனர். இன்னொரு புறம் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இதேபோன்று இந்துக்களையும் பௌத்தர்களையும் மதம் மாற்றுகின்றனர்.
 
அன்றாடம் தமிழ் பத்திரிகைகளை பார்க்கும்போது இந்துக்கள் குடும்பம் குடும்பமாக மதம் மாறுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதற்கான விளம்பரங்கள் நாளுக்கு நாள் பத்திரிகைகளில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது எமக்கு மட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபைக்கும் சம்பிரதாயமாக அமைதியாக வாழும் முஸ்லிம்களுக்கும் வரும் பிரச்சினையாக அமைந்துள்ளது.
 
இந்த மதமாற்றத்திற்கு தடை போட வேண்டும். நிறுத்த வேண்டும். இன்று தெனியாயவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடரவிட்டால் இலங்கையில் இந்து மதமும் பௌத்த மதமும் அழிந்து விடும். எமக்கிடையில் மத, பண்பாடு, கலாசார ரீதியில் ஒருமைப்பாடுகள் உள்ளன. எனவே, எமது மதங்களை அழிக்க இடமளிக்க முடியாது. எனவே, ஒன்றுபடுவோம். போராடுவோம். இந்து, பௌத்த நல்லுறறு ஓங்கட்டும். 
 
இந்தப் போராட்டம் ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ எதிரானதல்ல. இங்கு கூடியுள்ள இந்த அப்பாவி தமிழ் இந்துக்கள் தமது மதத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே வீதிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு பௌத்தர்களான எமது ஆதரவு தொடரும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார். 
 
இவ்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்வதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு சுலோகங்களும் ஏந்தியிருந்தனர்.
 

குடுமபம் குடுமபமாக மத மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று கூறுபவர்கள் அதற்கு உரிய ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும், சும்மா மேடையில் ஏறி கதைப்பதால் எடுவும் நடக்க போவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுமபம் குடுமபமாக மத மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று கூறுபவர்கள் அதற்கு உரிய ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும், சும்மா மேடையில் ஏறி கதைப்பதால் எடுவும் நடக்க போவதில்லை

 

 

 

இவர் சொல்வது சுத்தப் பொய்.
 
மதம் மாறுவது அவனவன் விருப்பம்.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருப்பது இனப் பிச்சனையே தவிர மதப் பிரச்சனை அல்ல. அதுவும் தவிர தமிழன் இந்துசமயத்தைப் பின்பற்றுகிறானே தவிர அவன் இந்து அல்ல. இயற்கையே தமிழனின் கடவுள். அவனுக்கு எல்லாச் சமயமும் சம்மதமே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனும் தமிழனும் ஒற்றுமையாக இந்த விடயத்தில் இருக்கிறார்கள்

கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் பௌத்த பேரினவாதம் மிகவும் தந்திரமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறது. தமிழர்களையும் தனது மத அடிப்படைவாதப் போக்கினுள் இழுத்து விடப் பிரயத்தனம் செய்கிறது. இதன் மூலம் எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதுடன் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கேற்ப இந்து/பௌத்த மத வாதக் குழுக்களை உருவாக்கித் தனது ஒடுக்குமுறை அரச இயந்திரத்தைப் பாதுகாக்கவும் திட்டமிடுகிறது.

Edited by Alternative

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனும் தமிழனும் ஒற்றுமையாக இந்த விடயத்தில் இருக்கிறார்கள்

 

 

அங்கதான்

சிங்களவனின் ராயதந்திரமும் இருக்கு

அவனது வெற்றிக்கு காரணமே இந்த ஓணான் நிலையெடுப்புத்தான்

அங்கதான்

சிங்களவனின் ராயதந்திரமும் இருக்கு

அவனது வெற்றிக்கு காரணமே இந்த ஓணான் நிலையெடுப்புத்தான்

ஈழ தமிழ் ஆதரவாளர் கெட்டபொல் நிலையெடுக்க வேண்டியது தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் மோடிக்கு ஒரு செய்தி சொல்லுகினமாம்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோடியை கண்டு சிங்களம் நல்லாய் பயந்து போச்சுது போலை தான் கிடக்கு. :lol: .......சிங்களம் பயப்பிடுற அளவுக்கு ஒண்டும் நடக்காது எண்டதுக்கு நான் கரண்டி பண்ணுறன்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமதத்தை அழித்தவர்கள் பெளத்த காடையர்கள். ஆகவே அவர்கள் இந்துக்களுடன் சேர்ந்து மத விழுமியங்களப் பாதுகாக்கவென்று கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமனானது.

 

தமிழரைப் போலவே சிங்களப் பெளத்த பயங்கரவாதத்தால் இப்போது அல்லற்படுவது முஸ்லீம் மக்கள். ஆகவே எக்காரணம் கொண்டு பெளத்த பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து நாம் இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயற்படக் கூடாது. 

 

இங்கே பெளத்தர்களும் இந்துக்களும் ஒன்றாக நிற்கினம் என்று புளகாங்கிதம் அடைபவர்களைப் பார்க்கும்போது எந்தளவு தூரத்திற்கு இவர்கள் எமக்கு நடந்த அநியாயத்தையும், வன் கொடுமைகளையும் அறிந்துவைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.

சிங்களமக்கள் தம்மை ஒரு பேருந்தேசீய இனமாக கட்டியமைக்க பௌத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். அவர்கள் இனத்தையும் இனத்தேசீயத்தையும் பலமாக்கும் பெருட்டு நேற்று இஸ்லாமியர்களுடன் நெருக்கமானார்கள் இன்று இந்துக்களுடன் நெருக்கமாவார்கள் நாளை கிறிஸ்தவர்களுடன் நெருக்கமாகலாம். அடிப்படை நோக்கம் இனத்தை பலப்படுத்துவதே.

 

இந்திய இந்துத்துவம் என்பது இனங்களையும் இனங்களின் தேசீயத்தையும் பலவீனப்படுத்தும் பொருட்டு கையாளப்படுவது. சாதீய வருணாசிரம தர்ம பாகுபாடுகள் ஏற்றதாழ்வுகளை நிறுவி இனங்களின் ஒற்றுமையை நிரந்தரமாக பிரித்து ஒரு தரப்பு ஒரு பெரும் தேசத்தை ஆழும் சுட்சுமமே இந்துத்துவம்.

 

இலங்கையில் தமிழர்கள் ஒரு தனித்த தேசீய இனமாக உருவாகின்றது என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை விட இந்துத்துவத்துக்கே முதலில் பிரச்சனையானது. ஏனெனில் அதன் தாக்கம் தமிழகத்திலும் அண்டய மாநிலங்களிலும் எதிரொலிக்க வாயப்புள்ளது. ஒரு பேச்சுக்கு சிங்களம் தமிழர்களுக்கான தனித்துவமான சுய ராச்சியத்தை அனுமதித்தால் கூட அதை இந்துத்துவம் தடுக்கும்.

 

கடந்த காலங்களில் இந்திய ஆழும் வர்க்கம் பல்வேறு இயக்கங்களாக பிரித்து மேதல்களை ஊக்குவித்து இனத்தையும் இனத் தேசீய ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்தது. அதனால் எல்லாத்துக்கும் இந்தியாவே பெறுப்பு என்ற கற்பிதம் இல்லை. அவர்கள் பிரித்த்து சிதைக்கின்றார்கள் என்றால் இலங்கைத்தமிழனுக்கு புத்தி எங்கே போனது? பிரிவினைக்குரிய தளமும் வளமும் குணமும் இலங்கைத்தமிழர்களிடம் தாராளமாக இருந்தது அதை இந்தியா பயன்படுத்திக்கொண்டது. அவ்வாறன தளமும் வளமும் கூட இந்துத்துவத்தின் எச்சங்கள் தான்.

 

பௌத்தமாகட்டும் இந்துத்துவமாகட்டும் தமிழினம் தமிழ்த்தேசீயம் என்ற உருவாக்கத்துக்கு அவை எப்போதும் சத்துரு.

 

சிலரின் கனவு என்னவெனில் மோடியும் இந்து விக்கியும் இந்து அதனால் எதாவது நடக்கும் என்பதாகும். ஆனால் விக்கி இந்துவாக இருப்பதுவரை ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் இனம் இனத்தேசீயம் என்னும்போது மோடிதான் முதலில் விக்கியை மிதிப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.