Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் புதிய மதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் வானத்தில இருந்து சூலத்தோட கழுத்தில பாம்போட நெத்தியில பிறையோட இல்லாட்டி வேலோட மயில் வாகனத்தில இல்லாட்டி எலி வாகனத்தில எண்டு ஏதோ ஒரு விதமா ஏகப்பட்ட தலையோடையும் காலோடையும் கையளோடையும் தான் கடவுள் வருவார் எண்டு எண்ணிக்கொண்டிருக்கிறாங்க.

அதாலதான் ஆராவது தன்னைக் கடவுளெண்டால் சீ சீ இவர் கடவுளில்ல எண்டுறாங்க.

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

ஒரு நாளைக்கு எப்பிடியும் கடவுள் வரத்தானே வேணும். வராம விடவா போறார்.

செவ்வாய்க் கிரகத்திலயும் தண்ணி இருக்குதாம். சிலவேளை அங்க இருந்து திடீரெண்டு ஒருநாளைக்கு இறங்கினாலும் இறங்குவார்.

  • Replies 118
  • Views 17.6k
  • Created
  • Last Reply

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

:(

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

வாயிருக்குது எண்டதால கடவுளாகலாமோ தெரியாது. வாயில்லாம என்ன இருக்குது? எல்லாத்துக்கும் வாயிருக்குது. என்னென்னமோவெல்லாம் கக்குப்படுகுது.

முதற் தமிழ்ச்சங்க காலத்தில் தமிழின் முதன் நிலைப் புலவர்களாக சிவபெருமான் முருகப்பெருமான் போன்றோர் இருந்ததாக கடைச்சங்கத்தில் எஞ்சிய அவணங்களை ஆதாரம் காட்டி சொல்லப்படுகின்றது. முதற்சங்கம் ஈழத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட இடம் எனவும் கடல் கோளால் அடித்து செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இது ஒரு பக்கம்.

சிவன் முருகன் என்ற பதங்களுக்கு தமிழ்ச் சித்தர்கள் கொண்ட விளக்கமும் குறிப்புகளும் மருத்தவத்துடனும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறை சார்ந்த தாக இருப்பினும் தமிழ் மொழியுடன் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் முரண்படவில்லை.

அடுத்து வரும் காலங்களில் வைணவம் சமஸ்கிருதத்துடனும் வடநாட்டு ஆரிய கடவுள்களுடனும,; சைவம் தமிழுடனும் தென்னாட்டு கடவுள்களுடனும் நீண்ட காலம் முரண்பட்டு நகர்ந்துள்ளது. வரலாற்று குறிப்புகள் ஆவணங்களின் படி தென்னாட்டு கோயில்களில் வடநாட்டு விக்கிரகங்கள் வன்முறையுடன் நிறுவப்பட்ட சான்றுகளும் உண்டு. பெயர் மாற்றங்கள். (திரு என்பது சிறி ஆக மாறியதும். வள்ளி இருக்க தெய்வானை செருகப்பட்டதும். கந்தன் ஸ்கந்தன் சோமஸ்கந்தன் என்றும். பல நூறு வகைகளும். தமிழ் சார்ந்த குட முழுக்கு எல்லாம் மாறி கும்பாபிசேகமாகியதும் என்று பல நுழைவுகள்)

இவ்வாறு வைணவம் பெரிது சைவம் பெரிது என்று பின் இரண்டும் சமம் என்றும் பிறகு இரண்டும் ஒன்று என்றும் நகர்ந்து பின்பு இரண்டும் இந்து என்ற ஒன்றாகி நிற்கின்றது.

இந்த நிலையில் சாமியார்கள் பாபாக்கள்என்று தற்போதைய காலம் உள்ளது.

எங்கோ நாம் தொலைத்த அரும் பொருட்களை, எம் அடிக்கொடிகள் மூதாதையரின் அரும்பெரும் பொருட்களை எல்லம் பறிகொடுத்து இன்றளவில் அது பற்றிய சிந்தனை இன்றி மதத்தில் மதம் பிடித்தும் குறளிவித்தை காட்டுபவனை எல்லாம் கடவுள் என்று ஏற்கும் அளவுக்கு வந்து விட்டோம்.

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

அருமையான கருத்து. முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

சிவனும் முருகனும் தென் லெமூரியாவில் வாழ்ந்த சங்கப் புலவர்களென்ற கூற்றை இன்று யார் கருத்திலெடுக்கிறார்கள். இருக்கு வேதகாலத்து அல்லது அதற்கும் முந்திய ஆரிய மன்னர்களில் பலபேரை அந்த வேதமே கடவுளர்களாக்கி விட்டது. இன்றுவரை பகுத்தறிவோடு சிந்தித்து மக்கள் அந்தச் சமயப் பிடியிலிருந்து விடுபடவில்லை. இராமன் போன்ற ஆரிய மன்னர்கள் இதிகாச நாயகர்களாக்கப்பட்டுப் பின்னர் கடவுளர்களாக்பட்டனர். வடநாட்டில் ராம நாம ஜெபம் செய்துகொண்டே முஸ்லீம்களுக்கெதிராக அநியாயங்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாகத் தொடரும் இந்த மூட நம்பிக்கைகளை உடைத்தெறிவதற்கு முடியவில்லை. நாம் புதிதாக ஆய்வு செய்வதற்கு இந்த விடயத்தில் எதுவுமில்லை. மக்களின் மனது ஒருவகைச் சரணாகதிக் கோட்பாட்டில் ஊறிப்போய்விட்டது. சமயம்- குறிப்பாக இந்துக்கள் காலம் காலமாகத் தங்கள் நிம்மதியை இந்த வழியிலேயே பெற்று இன்று அதுவே உண்மை வழி என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

ஆக குற்றம் செய்யலாம் ஒரளவு நல்லது செய்து கொண்டு என்று சொல்லுறீங்களா??அவ்வாறாயின் உலகத்தில இருகிற எல்லாரும் குற்றம் செய்ய தொடங்கிவிடூவீனம்.........இதனால் சர்வமதம் வளர்கிறது என்று ஏற்று கொள்ள முடியாத வாதம்..................இதனால் ஒரு புதிய மதம் உருவாகிறது பிற்காலத்தில் இது பாரிய பிரசினைகளுக்கு இட்டு செல்லும்.......இன்றைய காலத்தில் மதம் என்று ஒன்று தேவையா????அவன் அவன் தங்களின் வேலையில் கவனமா ஈடுபட்டால் மதம் என்று வார்த்தை கூட தேவையில்லை..........மதம் என்று வரும் போது தான் பல பிரச்சினைகள் உருவாகிறது............

மக்கள் ஒன்றில் மூழ்கிவிடார்கள் என்றால் அதில் இருந்து மீள வருகிறது ஏலாத காரியம் பிரேன்வோஸ் நல்லா நடைபெற்றிருக்கும் அவர்கள் அவரின் பின்னாலே செல்வார்கள் இதை யாரும் தடுக்க முடியாது அது தான் இவர்களின் வெற்றியே தங்கியுள்ளது

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DELETE IT BY NITHARSAN

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

Edited by குமாரசாமி

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

நானும் ஜோதியில் ஒன்று சேருவோ!!!!!!!!

:)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா............!!! பன்னி தான் கூட்டமா வரும் டைகர்(ஜம்மு) எப்பவும் சிங்கிளா தான் வரும்!!! சும்மா அதிருதில்லலல..........ஊழழடு

அப்ப ஏன் டபிளா வருகுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) <_<

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

உண்மையில நான் சொல்ல வந்த பதிலையே கரு சார் சொல்லிவிட்டார். சைவ சமையதிலை இருந்து சாதிக முடியாததை வேதத்தில் போய் சாதிக்கலாம் என்ற்ரு வடிவேல் சார் நீங்கள் கண்டால் போய் ஆசைப்பட்டதுகளை சாதிக வேண்டியது தானே

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

மதம் என்ற ஒரு மூடதனம் அவசியம் என்று நினைகிறீங்களா..............இப்படியான ஒரு விஞ்ஞான யுகத்தில மதம் என்ற வீணற்ற செயல் தேவை என்று நினைகிறீங்களா???இதனால் நாங்கள் சாதித்தது என்ன சாதிக்க போவது தான் என்ன?

:(

  • கருத்துக்கள உறவுகள்

திரு வடிவேல்:

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

கரு: தயவு செய்து மதத்தைப் பெற்றதாயாக்காதீர்கள். அது கீப். மொழி எமது தாய்க்குச் சமன். மண் எமது தாய். ஆனால் மதம் அப்படியில்லை. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் பற்றிய வெறித்தனமான கோட்பாடுகள் சிலருக்கு வேண்டுமானால் பிரிய முடியாதவையாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் நம்மைப் போன்றே இருப்பார்களென்றில்லை. மதத்தை மாகஸ் அபின் என்றார். நான் கீப் என்கிறேன் - நீங்கள் தாயோடு ஒப்பிடப் புகுந்ததால். மதம் வேண்டுவதெல்லாம் எம்மிடமிருந்து பணம் பணம் பணம்தான். கீப்பும் அப்படித்தான். யார் எந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டால் நமக்கென்ன! அவர்கள் சமூகத்துக்கும் இனத்திற்கும் மண்ணிற்கும் எதுவித தீங்கும் செய்யாதவரை அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடலாம்தானே. ஒவ்வொருவருக்கும் அவரது நம்பிக்கை பெரியது அதனால் வரும் சாந்தியும் சமாதானமும் அவசியமானது. அதைப்போய் நாம் கெடுப்பானேன். அதாவது பன்முகத் தன்மை கொண்ட சமயக் கோட்பாடுகளை நாம் எதிர்க்காதிருப்பது எமது சமுதாயத்தின் எதிர்காலச் சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் இயற்கை நியதி. சமுதாயம் ஏற்கவேண்டியதை ஏற்கட்டும் தேவையற்றதை விட்டுவிட்டும். இதிலே வீணான தலையீட்டைச் செய்யவேண்டிய அவசியம் என்ன இப்போது ஏற்பட்டிருக்கிறது. யாருக்கு என்ன கெடுதல் இப்போது ஏற்பட்டுவிட்டது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.