Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாம்பழங்களைத் தொடர்ந்து, வெற்றிலை இறக்குமதிக்கும் ஆப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15-30-1380546253-beetel-leaves.jpg

மாம்பழங்களைத் தொடர்ந்து வெற்றிலை இறக்குமதிக்கும் ஆப்பு – ஐரோப்பிய யூனியன் உத்தரவு.

லண்டன்: ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா யூனியன்.தற்போது புதியதாக இந்திய வெற்றிலை இறக்குமதியையும் தடை செய்துள்ளது.

இந்தத் தடை குறித்து ஐரோப்பிய யூனியன், ''இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் "சால்மொலினா" என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் இருக்கிறது.

இந்த ரசாயனம் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே, இந்த வெற்றிலைகளை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படுகிறது'' என்று கூறியுள்ளது.

மேலும் மற்ற நாடுகளான வங்காளம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலின் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

கோவில் அர்ச்சனை தட்டில் வைக்கவும்,
கலியாண வீட்டு சாப்பாட்டுக்கு பிறகு, பீடா சாப்பிடவும் முடியாது போலுள்ளதே... 

  • கருத்துக்கள உறவுகள்

Brick Lane  (East London) இனிமேல் வடிவா இருக்கும்...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Brick Lane  (East London) இனிமேல் வடிவா இருக்கும்...! :D

betelchewing.jpg?w=248

வெற்றிலை இறக்குமதி தடையால்.... எமது தலைமுறை தான் வெகுவாக பாதிக்கப்படும். :icon_idea: 

இதனை எதிர்த்து... ஐரோப்பிய யூனியன் முன் அணி திரள, அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம். :lol: 

-பாக்கு, வெத்திலை சாப்பிடுவோர் சங்கம்.-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊடகக்காரர்களுக்கு அறிவியல் அறிவு அதிகம்.

சல்மொலினா.. (salmonella).. இரசாயனம் கிடையாது. அது ஒரு வகை உணவு நஞ்சாதலை ஊக்குவிக்கும் பக்ரீரியா உயிரி. நுண்ணங்கி.

வெற்றிலை.. பீடா.. பான்பராக் இவை எல்லாம் தடைசெய்யப்படனும்.

இவற்றோடு சாமத்தியவீட்டை தடை செய்யனும். மேலும்.. வீடுகுடிபூரல்.. கழிப்புக் கழிப்பு.. என்றெல்லாம் சொல்லி.. பூசணிக்காய் வெட்டி ரெலிபோன் பூத்துக்கு பக்கத்தில போடுறது.. தேசிக்காய்க்கு குங்குமம் பூசி.. சந்தி மூலைல போடுறது.. இவற்றிற்கு கவுன்சில்கள் கடும்.. அபராதம் விதிப்பதோடு.. போடுபவர்களை நன்னடத்தை அகங்களில் (probation centre).. ஒரு மாதம் கட்டாய நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.

இங்கிலாந்தில்.... இந்திய பூசாரிகளும்.. நம்மவரின் மூட நம்பிக்கைகளும்.. சேர்ந்து செய்யுற அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. எம்மவர் ஊடகங்களும்.. இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம். விளம்பரக் காசுக்காக எந்த வித சமூக அக்கறையும் இன்றி செயற்படும் இந்த ஊடகங்களை தடை செய்தாலும் பறுவாயில்லை என்று தோன்றுகிறது. :icon_idea:

இவற்றோடு சாமத்தியவீட்டை தடை செய்யனும். மேலும்.. வீடுகுடிபூரல்.. கழிப்புக் கழிப்பு.. என்றெல்லாம் சொல்லி.. பூசணிக்காய் வெட்டி ரெலிபோன் பூத்துக்கு பக்கத்தில போடுறது.. தேசிக்காய்க்கு குங்குமம் பூசி.. சந்தி மூலைல போடுறது..  

இதெல்லாம் இங்கே நடக்குதா? கேள்விப்படவே இல்லை.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜரோப்பிய யூனியன் முடிஞ்சால் சோமாலிகள் சாப்பிடும் மிரா குழையை நிற்பாட்டட்டுக்கும் பார்ப்பம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இங்கே நடக்குதா? கேள்விப்படவே இல்லை.  :D

என்ன தெரியாத மாதிரிக் கேட்கிறீங்க. இதை விடக் கொடுமை.. வாங்கிற செக்ண்ட் காண்ட் காருக்கு.. கோயில்ல பூசையும் செய்விச்சு.... எலுமிச்சம் பழம் கட்டியும் விட்டு.. நாலு சில்லுக்கும் எலுமிச்சம் பழம் வைச்சு நசுக்கவும் விடுறாங்கல்ல.

ஊர் போல.. இங்கையும் வீட்டு வாசல்களில்.. எலுமிச்சை மிளகாய் கோர்த்துக் கட்டி.. கண்ணூறு கழிக்கினமாம் கண்ணூறு. இவை இருக்கிற அகதி இருப்புக்கு.. இவையில கண்ணூறு வேற..! தமிழர்கள் மிகப் பெரிய அளவில்.. பகற் கனவு காண்பதில் வல்லவர்கள்.  :D:icon_idea:

அந்தக் கடைசி வசனத்தை வாசித்து... சிரித்து வயிறு நோகுது. :D  :lol:

"ஊர் போல.. இங்கையும் வீட்டு வாசல்களில்.. எலுமிச்சை மிளகாய் கோர்த்துக் கட்டி.. கண்ணூறு கழிக்கினமாம்"

அண்ணா,

இதற்கு காரணம் உண்டு. இவை வாசலை சுத்த படுத்தவே(natural cleanser). வருவோர் போவோர் நோய் காவியாகி வீட்டில் யாருக்காவது வருத்தம் வந்தால் அது கண்ணூறு.

இங்க்குள்ள மில்லியன் டொலர் டெர்கி கோழி கூண்டு வாசலில் தேசிக்காய் இரசாயன கால் மிதி இருக்கும். குளித்து முழு அங்கி அணிந்து பின் கால் மிதியில் தேய்த்து தான் உள்ளே போகலாம். இல்லையென்றால் ஒரு இலட்சம் கோழிக்கு கண்ணூறு தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே  கலியாணவீடுகளில  வரிசையாய் நிண்டு சாம்பெயின் உடைக்கிறதையும் நிறுத்தனும். அநியாயமாய்  கமராக் கண்ணாடிகளும், கூறைச் சீலைகள், கோட்டு சூட்டுகள் எல்லாம் தோஞ்சு போகுது...! :)

கப்பலை லாஞ் பண்ணேக்க போத்தல் உடைக்கிற மூடப் பழக்கத்தை இன்னும் எத்தனை தலைமுறைவரையும் கொண்டாடுவாங்களோ ...! ம்...ம்... பார்ப்போம்...!! :)

வெள்ளையள் சம்பெயின் போத்தல் உடைக்கிறது எங்கட சனத்திற்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க ஒரு சம்பெயினை உடைச்சாலும் டீசன்ரா உடைக்கிறாங்க. எங்கடையளப் போல.. வெறிக்கு குடிக்கிறதுக்கு என்று உடைக்குதுங்களா இல்லையே. அதுங்க சும்மா நாக்கில வைச்சுப் பார்க்குங்கள். அது டீசண்ட். எங்கடையள்.. பியரைக் குடிச்சிட்டு.. தமிழ் கடை பிரவுன் பாக்கோட சுத்திட்டு வீதில வீசுதுங்க. கோர்னர் வழிய.. வீதியில் நிற்கும்.. மரங்கள் வழிய வழிய மூத்திரமும் பெய்யுதுங்க. வெத்திலையையும் சப்பிப் துப்புதுங்க. ஐயோ.. சில கவுன்சில்கள் நம்மவரால் நாசமாகுது. பொறுப்பில்லாத இந்திய உபகண்டத்தவரின் செயலால்.. அநியாயச் செலவுகள்..!

அகதிகளுக்கு.. குந்த இடம் கொடுத்து... உபத்திரபம் அனுபவிக்க முடியாமல்.. அகதிகளாக ஓடும் நிலையில் லண்டனில் வெள்ளைகளின் நிலை. பாவம் பரிதாபம் அதுங்களுக்கு. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலையைக் கண்டிப்பாக தடை செய்யத் தான் வேணும்.எனக்கும் வெற்றிலையைக் கண்டால் ஒருக்கா போட்டால் என்ன என்று மனசுக்குள் தோணும்..வெற்றிலை வைத்திருப்பவர்களைக் கண்டால் மிகவும் தெரிந்தர்களாக இருந்தால் வாங்கிப் போட்டுட்டுவேன்.இப்பொழுதும் அண்ணா ஒருவர் பல்லைப் பார்த்துட்டு நல்லா வெத்திலையில வாங்கி போடு என்று திட்டுறவர்..அண்மைய காலங்கில் வெத்திலை போடுவதே இல்லை ரொம்ப குறைச்சுட்டன்..ஐக்கி கெட்ட பழக்கம். :)

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் எனது அம்மம்மாவை  பல் வைத்தியரிடம் கூட்டிப் போகும் போது, அந்த மருத்துவர் அம்மம்மாவின் கீழ் தாடைப் பக்க பல்லின் அடியில் அடைஞ்சு போய் இருந்த ஒன்றை எடுத்துக் காட்டி என்ன என்று கேட்ட போது எனக்கு  பதில் சொல்ல கஸ்ரமாக இருந்தது..பல் முழுக்க படிந்திருந்தது வெற்றிலைக் காவியும்,பாக்கு,புகையிலை போன்றவன்றின் அடித் தூள்களுமே..ஆகவே வெள்ளையினத்தவர்களிடம் போகும் போது எங்கள் நாட்டுப் பழக்க,வழக்கங்களை எடுத்துக் சொல்வது மிகவும் கடினம்..தண்ணி பாவிப்பவர்கள் என்றால் அல்ககோலிக் பாவிப்பவர் என்று விட்டு போய் விடலாம்..இந்தப் பழக்கத்தை betelchewing.jpg?w=248 எப்படிச் சொல்வது...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ஊடகக்காரர்களுக்கு அறிவியல் அறிவு அதிகம்.

சல்மொலினா.. (salmonella).. இரசாயனம் கிடையாது. அது ஒரு வகை உணவு நஞ்சாதலை ஊக்குவிக்கும் பக்ரீரியா உயிரி. நுண்ணங்கி.

வெற்றிலை.. பீடா.. பான்பராக் இவை எல்லாம் தடைசெய்யப்படனும்.

இவற்றோடு சாமத்தியவீட்டை தடை செய்யனும். மேலும்.. வீடுகுடிபூரல்.. கழிப்புக் கழிப்பு.. என்றெல்லாம் சொல்லி.. பூசணிக்காய் வெட்டி ரெலிபோன் பூத்துக்கு பக்கத்தில போடுறது.. தேசிக்காய்க்கு குங்குமம் பூசி.. சந்தி மூலைல போடுறது.. இவற்றிற்கு கவுன்சில்கள் கடும்.. அபராதம் விதிப்பதோடு.. போடுபவர்களை நன்னடத்தை அகங்களில் (probation centre).. ஒரு மாதம் கட்டாய நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.

இங்கிலாந்தில்.... இந்திய பூசாரிகளும்.. நம்மவரின் மூட நம்பிக்கைகளும்.. சேர்ந்து செய்யுற அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. எம்மவர் ஊடகங்களும்.. இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம். விளம்பரக் காசுக்காக எந்த வித சமூக அக்கறையும் இன்றி செயற்படும் இந்த ஊடகங்களை தடை செய்தாலும் பறுவாயில்லை என்று தோன்றுகிறது. :icon_idea:

அவனவன் நீர்வேலியிலையிருந்து வாழைமரத்தை குலையோடை  லண்டனுக்கு கொண்டுவந்து வீட்டுவாசல்லை கட்டி சோடிச்சு கலியாணவீடு கச்சேரியெண்டு முன்னேறிக்கொண்டு போறாங்கள்....இவர் இப்பவும் சாமத்தியவீட்டை கட் பண்ணோணுமெண்டு ஒற்ரை காலிலை நிக்கிறார்......அவ்வளவும் நஞ்சு....எரிச்சல்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கு.சாண்ணா.. நீங்கள் உங்க பொண்ணுங்க சந்திர மண்டலத்தில.. சாமத்தியவீடு செய்யும் பிளானில் இருக்கிறீங்களோ. இல்ல.. சாமத்திய வீடு என்ற உடன சந்நிதி ஆடுற எங்க ஆக்களோடவே கூட நிற்கிறீங்க..! :lol::D

நஞ்சு என்று தானே வெத்திலைக்கே தடை போட்டிட்டாங்களே. எனி எந்த இலையை வைச்சு... சாமத்திய வீடு செய்யுறது..! கைவிசேசம் கொடுக்கிறது. சப்பித் துப்புறது..???! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.