Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை முஸ்லிம்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி
புதன்கிழமை, 18 ஜூன் 2014 13:52
இலங்கையில் தாக்குதலுக்கு ஆளாகும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் வகையில்இந்திய மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இது தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 
 
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். 
 
இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிய சிங்களவர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லிம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார்கள். 
 
2012-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அளுத்கமை பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென வன்முறை மூண்டு, முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். 
 
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக்குக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வேறு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். 
 
இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்திலே போராட்டம் நடத்திப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன. 
 
இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடத்தி முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப்படுகின்ற நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்திய மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும்' என்று கருணாநிதி கூறியுள்ளார்.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/114776-2014-06-18-08-23-32.html
  • கருத்துக்கள உறவுகள்

என்ன உங்களை தந்தி அடிச்சு உண்ணாவிரதம் இருக்க வேணுமோ?....ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

 

 
இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்திலே போராட்டம் நடத்திப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன. 
 

 

இவருக்கு ஞாபக மறதி அதிகம். உள்ளே தூக்கிப் போட்டவரே இவர்தான். :D

அதெல்லாம் பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கும் ( இலங்கை முஸ்லிம்களுக்கு) வேணும் எண்டால் இலங்கையில் உள்ள தமிழ்

இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இந்தியா குரல் கொடுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒருமணித்தியாலம்  உண்ணாவிரதம் இருங்கய்யா....

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு, விசர் பிடிச்சுட்டுதா?
ஜெயலலிதா தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில், இலங்கை போர்குற்ற விசாரணைக்கு ஐ,நா. விசாரணை தேவை என்று, தீர்மானம் நிறைவேற்றியதற்கு... சிங்களவனை முந்திக் கொண்டு, முஸ்லீம்கள் தான் கொழும்பில், ஜெயா அம்மையாரின் கொடும்பாவியை எரித்தவர்கள்.
 

கருணாநிதி இலங்கை விடயத்தில்... செய்து கிழித்தது காணும்.
இனி வாயை திறக்காமல் இருப்பதே... உத்தமம்,
 

  • கருத்துக்கள உறவுகள்

 இவருக்கு இப்போதும் சோனியாவின் ஹிந்தி காங்கிரஸ் தான் ஆட்சி
செய்கின்றது என்ற நினைப்பு.

பாபர்  மசூதி நிகழ்வுகளையும் மறந்துவிட்டார் போல் இருக்கின்றது.

 

மோடி அரசு இது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் எனக் கூறினாலும் ஆச்சரியம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி ஏலுமெண்டால் ஒரு கிராமத்துக்கு சமமான தன்ரை மனுசி பிள்ளை குடும்பங்களை ரோட்டிலை இறங்கி குரல் குடுக்கட்டும் பாப்பம்.....

 

கடிதம் முடிஞ்சுது.....தந்தி முடிஞ்சுது.....இப்ப குரல். எப்ப ஈ மெயில் வருதெண்டு பாப்பம்.

ஈ மொய்க்காத குறைதான் இவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் நமது உறவுகள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது அதை எதிர்த்து போராட்டம் நடத்திய சீமான் போன்றவர்களை தேர்தல் முடீயும்வரை உள்ளே தூக்கிப் போட்டது மறந்து போச்சா நைனா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.