Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார்: என்கிறது இலங்கைப் பொலிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார்: என்கிறது இலங்கைப் பொலிஸ்:-

Mahi%20lufe_CI.png

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும்.

விஜித்த தேரர், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தேரருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அவதானிக்கும் போது அவை அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இக்காயங்கள் பாரதூரமற்றவை என்றும் தேசிய வைத்தியசாலையின் வைத்திய பிரிவு தெரிவிக்கின்றது.

பேசாமல் இருப்பதற்கோ அல்லது பேச முடியாத அளவுக்கோ அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள வைத்திய பிரிவு, அவரின் மௌனம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து வீடு செல்லக்கூடிய நிலைமையில் அவர் இருந்த போதிலும் தான் இன்னும் குணமடையவில்லை என்று கூறிக்கொண்டு வைத்தியசாலையிலேயே தங்கியிருக்க முற்படுகின்றார் என்றும் வைத்தியசாலை தகவல்கள் கூறுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/108468/Default.aspx

என்னப்பா நடக்குது இங்க?

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'

140619083112_wataraka_vijitha_304x171_bb

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'

இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டாத கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேர்ரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தகவலை பிபிசியிடம் கூறியுள்ளார்.

ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள்.

அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.

தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/06/140622_vijithathero.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சேனைக்காரர் என்ன சொல்கீனம் எண்டா,

விஜித எப்பவோ மதம் மாறி சுன்னத்தும் செய்து விட்டாராம்.

இவர் காவி உடையில் திரியும் ஒரு சோனகராம். இப்போ மதம் மாறியதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடினாராம்!

முன்பே சேனைக்காரர் இவரை மொகமட் விஜித என்பார்கள். இனி இவர் என்ன சொன்னாலும் எடுபடாது.

சேனைக்காரர் வலு சுட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'

140619083112_wataraka_vijitha_304x171_bb

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'

வட்டரேக்க தேரர், வலியால் பொத்திக் கொண்டிருப்பதை  பார்க்க...

அண்மையில்.. தான், சுன்னத் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

ரொம்ப.... ஆழமாக வெட்டி விட்டார்களோ, முகத்தில் பயம் அப்பிக் கிடக்கு. :D  :lol:

இலங்கை தமிழரின் பாரிய அழிவுக்கு காரணங்களாக அமைந்தவற்றில் ஒன்று தமது நேச சக்திகளை தாமே இழிவு படுத்தி  ஒதுக்கி வைத்துவிட்டு தம்மை அழிவுக்கு உள்ளாக்க கூடிய சக்திகளை அரவணைத்ததும் ஆகும். மேலே உள்ள கருத்து அந்த வகையிலானது. இந்த மனிதரும் (இவர் ஒரு பேராசிரியர்) மற்ற பிக்குகளை போல கொன்று அழிக்கப்படும் ஏனைய சமுகங்கள் பற்றி அக்கறை அற்று இருந்தால் இவருக்கு இந்த துன்பங்கள் வந்திருக்காது.

இவ்வளவு வக்கிர இனவெறி கொண்ட தமிழர்கள் அழிவதை பற்றி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏன் அக்கறை பட வேண்டும்? இது அவர்கள் பிரச்சினை, அவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று விட வேண்டியது தானே?

இந்த அளவுக்கு வக்கிர இனவெறி கொண்ட தமிழர்கள் பற்றி எனது அமரிக்க மக்கள் மன்ற பிரதிநிதியிடமும் செனேட் பிரதிநிதியிடமும் எந்த ஆதரவையும் கேட்பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை மாற்ற வேண்டும் என்று எவராவது விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குங்கள்.

அடேங்கப்பா, 150,000 தமிழரை அழித்த போது இல்லாத குரூரம், 57,77,83 என தமிழரை உயிருடன் எரித்த போது வந்த குரூரம், இந்த ஒரு கருத்தில் வந்து விட்டதா? என்ன எல்லாறையும் இழிச்சவாயன், மடையன் என்று நினக்கிறீர்களா??

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா, 150,000 தமிழரை அழித்த போது இல்லாத குரூரம், 57,77,83 என தமிழரை உயிருடன் எரித்த போது வந்த குரூரம், இந்த ஒரு கருத்தில் வந்து விட்டதா?

எனது குடும்ப உறவும் அந்த குரூரத்துள் அழிந்து போனவர்களுள் அடங்கும். அங்கெ குரூரம் இருந்தது. அது எனது குடும்பத்தையும் அழித்தது. அந்த குரூரம் இனியும் தொடராது தடுக்க இந்த தேரர் முயன்றார். அவருக்கும் குரூரம்  நடந்தது. நீங்கள் அதை இரசிக்கிறீர்கள். ஏன்? இனவெறியும் வக்கிரமமும் உங்களுக்கும் அந்த அளவுக்கு நிறைந்து இருக்கிறது.

உங்களுக்கு நடக்கும் குரூரம் பற்றி இனியும் நாம் அமெரிக்கர்கள் அக்கறைப்பட வேண்டியதில்லை.

என்ன எல்லாறையும் இழிச்சவாயன், மடையன் என்று நினக்கிறீர்களா??

ஆம், நீங்கள் இழிச்சவாயர்களும் , மடையர்களும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் அழிவே அதற்கு ஆதாரம். நீங்கள் மேலும் அழிந்து போவதை தடுக்க முய்ல்பவர்களியே வக்கிர இனவெறியுடன் எதிர்க்கும் நீங்கள் தொடர்ந்து அழிந்து போவதை நாம் விரும்பினாலும் தடுக்க முடியாது. அதற்கு காரணம் நீங்கள் உங்களுக்கு உதவுபவர்களியே எதிர்ப்பவர்கள். உங்கள் அழிவை நீங்களே தேடிக் கொள்பவர்கள். அந்த அளவுக்கு இழிச்சவாயர்களும் , மடையர்களும் நீங்கள். இது கவலைக்குரிய ஒரு உண்மை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் சொல்வது சரிதான்.

வேண்டுமென்றே 2005 இல் இனவாதிகளை வெல்ல வைத்து நாம் பட்டது போலத்தான் இதுவும்.

நாம் வேணும் எண்டே விஜத போன்றவர்களை ஒதுக்கி ஞானசாரர்கள் முன்னுக்கு வரவேண்டுகிறோம்.

நாம் எதிர்பார்ப்பது ஞானசாரர்கள் செய்யும் அட்டூழியம் உலகை நம்பக்கம் திருப்பும் என்று.

ஆனால் முடிவில் நாம் தான் வாங்கி கட்டுவோம்.

2005இல் பொல்லுக் கொடுத்து 2009இல் வாங்கியது போல.

எனது குடும்ப உறவும் அந்த குரூரத்துள் அழிந்து போனவர்களுள் அடங்கும். அங்கெ குரூரம் இருந்தது. அது எனது குடும்பத்தையும் அழித்தது. அந்த குரூரம் இனியும் தொடராது தடுக்க இந்த தேரர் முயன்றார். அவருக்கும் குரூரம்  நடந்தது. நீங்கள் அதை இரசிக்கிறீர்கள். ஏன்? இனவெறியும் வக்கிரமமும் உங்களுக்கும் அந்த அளவுக்கு நிறைந்து இருக்கிறது.

உங்களுக்கு நடக்கும் குரூரம் பற்றி இனியும் நாம் அமெரிக்கர்கள் அக்கறைப்பட வேண்டியதில்லை.

ஆம், நீங்கள் இழிச்சவாயர்களும் , மடையர்களும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் அழிவே அதற்கு ஆதாரம். நீங்கள் மேலும் அழிந்து போவதை தடுக்க முய்ல்பவர்களியே வக்கிர இனவெறியுடன் எதிர்க்கும் நீங்கள் தொடர்ந்து அழிந்து போவதை நாம் விரும்பினாலும் தடுக்க முடியாது. அதற்கு காரணம் நீங்கள் உங்களுக்கு உதவுபவர்களியே எதிர்ப்பவர்கள். உங்கள் அழிவை நீங்களே தேடிக் கொள்பவர்கள். அந்த அளவுக்கு இழிச்சவாயர்களும் , மடையர்களும் நீங்கள். இது கவலைக்குரிய ஒரு உண்மை.

ஓரிருவரின் கருத்தை வைத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் எடைபோடும் அமெரிக்கர்களை என்னவென்று சொல்வது.  

அமெரிக்காவின் குரூரத்தைவிடவா தமிழர்களின் குரூரம் அதிகமாக இருக்கிறது?   வல்லரசு என்ற பெயரில் சூட் போட்டுக் கொண்டு முறைமுகமாக அவர்கள் செய்யும் அநியாயத்தைவிட நாம் என்ன அநியாயம் செய்தோம்?  நீங்கள் அமைதியாக இருங்கள் நாம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம் என எமது கையைக் கட்டிவிட்டுக் கொத்துக் கொத்தாக அழித்ததைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்?  அவர்களால்தானே எமது இனம் அழிந்து போனது?  நம்ப வைத்து ஏமாற்றிய அமெரிக்கர்களை விட நாம் எவ்வளவோ மேல்.  அவர்கள் தலையிடாவிட்டால் எமது இன்று சுதந்திர இனமாக இருந்திருப்பார்கள்.  குறுக்கே வந்து எம் அழிவுக்குக் காரணமாக இருந்தவர்கள் அவர்களேதான்.

நேற்று நாரதர் இண்டைக்கு ஜூட்டர்.. எங்கட தேசியவாதிகளுக்கு திடீர் என என்ன நடந்தது? வழக்கம் போல தமிழர்களை கொண்டு போய் பிரச்சினையில் மாட்டி விடப்பாக்கிறார்களோ

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.