Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு விஜயம்

Featured Replies

1(6040).jpgபாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, மீனவர் பிரச்சினைகள் இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/118930-2014-07-21-07-17-17.html

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே க்குப் பின் இவர் ஏன் அடிக்கடி ராஜபக்ச குடும்பத்தை சந்திக்க வாறார். இது குறித்து இந்திய மத்திய உளவுத்துறை பகிரங்க ஒளிப்பு மறைப்பற்ற விசாரணை நடத்தி குறிப்பிட்ட அமைச்சகம் ஊடாக.. மக்களவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழக எம்பிக்கள் இதற்கான குரலை மக்களவையில் எழுப்புதல் வேண்டும்.

இவர் எப்ப சிரேஷ்ட தலைவர் ஆனவர் ?? தமிழ் மிரர் தமிழ் மக்களை நல்லா தான் மிரட்டி பார்க்குது!!!!

கடந்த வாரம் புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பதவி நீக்கம் செய்யப்பட்டார். சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரின் விடுதலைக்கு எதிராக அப்பீல் பண்ணும் வழக்கில் அரச தரப்பில் இருந்து கையொப்பம் இட்டது தான் இவர் செய்த குற்றம். கையெழுத்து வைத்த அடுத்த நாளே பதவி நீக்கம் செய்யப்பட்டார். மோடியிடம் நேரடியாக இப் பிரச்சனையை கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தது, ஜெயேந்திரருக்கு மிகவும் வெளிப்படையாக ஆதரவு கொடுத்து வரும் சுப்பிரமணிய சுவாமி தான்.

 

மோடி அரசில் சுப்ரமணிய சுவாமி தேவையானளவுக்கு செல்வாக்குடன்தான் இருக்கின்றார்.  அண்மையில் மோடி அரசு இலங்கை தொடர்பாக எடுத்த அனைத்து முடிவுகளும் (மீனவர் மீதான தாக்குதலை/ கைதை தடுக்காமை, இந்திய விமானப்படை தளபதியின் இலங்கை விஜயம், முஸ்லிம் மீதான தாக்குதலை கண்டிக்காமை) இலங்கைக்கு சார்ப்பான முடிவுகளாகத்தான் இருக்கின்றது. இதுக்கு முக்கிய காரணமாக சுப்பிரமணிய சுவாமி அமையலாம்.

 

ஒருவரின் பலத்தை சரியாக எடை போடுவதுதான் அவர் பற்றிய எதிர்வினைகளை காத்திரமாக ஆற்ற உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் பிராந்திய மாநாடு பண்டாரநாயக்கா மண்டபத்தில் 
 
நரேந்திர மோடியின் ஆலோசனைக்கு அமைவான  இந்தியாவின், பிராந்திய மற்றும் சர்வதேச செயல்பாடுகள்” என்ற தலைப்பின் கீழான  குழு கலந்துரையாடல்  பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
இலங்கை வந்துள்ள ஆளும் இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று இக்கலந்துரையாடலில் கலந்துகொள்கின்றது.
 
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியம் சுவாமி உட்பட முக்கிய இந்தியப் பிரமுகர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=403503246821461484#sthash.TpWkxCFy.dpuf

 

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
சுப்பிரமணிய சுவாமி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 
 
01%20(1).jpg
 
பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட குழுவினர் இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இலங்கையுடனான சிறந்த உறவுகளைப் பேணவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என சுப்பிரமணிய சுவாமி குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட குழுவில் டாக்டர் சுரேஸ் பிரபாகர் பிரபு, டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன், டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மாதவ் நளபட் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை சார்பில் ஜனாதிபதியுடன் வெள்ளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் ஆலோசகர் டாக்டர் சுனிமல் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
02.jpg
 
04.jpg
 
 
 
 
 

 

அட என்னடா உலகமிது  :icon_mrgreen:

அட என்னடா உலகமிது  :icon_mrgreen:

 

சரி சரி விடுங்கோ...இலங்கையை சீனா "டேக் ஓவர்" பண்ணுது எண்டு சந்தோசப்படுவோம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாண்புமிகு சுப்ரமண்ய சுவாமிகள் பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லுறவுப்பயணம் செய்து அரசியல் பேச்சுவாரத்தைகள் நடாத்த மாட்டாரா?  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு சுப்ரமண்ய சுவாமிகள் பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லுறவுப்பயணம் செய்து அரசியல் பேச்சுவாரத்தைகள் நடாத்த மாட்டாரா?  :icon_mrgreen:

 

நியாயமான.... கேள்வி.

அப்படியே.... சீனாவுக்கும், ஒரு விசிட் அடிச்சிட்டு வரணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு சுப்ரமண்ய சுவாமிகள் பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லுறவுப்பயணம் செய்து அரசியல் பேச்சுவாரத்தைகள் நடாத்த மாட்டாரா?  :icon_mrgreen:

 

 

அங்கு அவரது இனத்தவர் இல்லையே

அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க....... :(

இதுவும் ஒருவித சொறி  வருத்தம்

சொறிந்து கொண்டே   இருக்கணும் :(

பாவம் அவருக்கு அதிலொரு சந்தோசம் :(

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.