Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகரில் புலிச் சீருடை அணிந்தவரே சிறுமியை தூக்கிச் சென்றாராம்! - நாடாளுமன்றத்தில் கதைவிட்ட பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
காரைநகரில் புலிச் சீருடை அணிந்தவரே சிறுமியை தூக்கிச் சென்றாராம்! - நாடாளுமன்றத்தில் கதைவிட்ட பிரதமர் 
[saturday 2014-07-26 09:00]
D.M.Jayaratne-150.jpg

காரைநகர் முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர், சிறுமியை அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று காரைநகர் சம்பவத்துடன் புலிகளைத் தொடர்புபடுத்தி நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார் பிரதமர் டி.எம். ஜயரட்ண. நாடாளுமன்றத்தில் நேற்று காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்தி விசேட உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது.

  

"கடந்த 15ஆம் திகதி காலை 7 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமியொருவரை காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மகள் நேரகாலத்துடன் பாடசாலை விட்டு வந்தமை தொடர்பாக அதிபரிடம் தாயார் வினவியுள்ளார். தினமும் மகள் இவ்வாறு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி அக்காலப்பகுதியில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். வைத்தியசாலைப் பொலிஸார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 9 கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இரண்டுபேர் விடுமுறை எடுத்திருந்ததால் 7 பேரே அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் எவரையும் சம்பந்தப்பட்டவர் அடையாளம் காட்டவில்லை. அதன்பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை, இதுபோல் பல சம்பவங்கள் இந்தியா உட்பட உலகெங்கும் தினமும் இடம்பெறுகின்றன. ஆனால், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவத்தை பெரிதுபடுத்தி சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது'' என்று பிரதமர் ஜயரட்ண தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113812&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் பிரதமர்

நடந்திருப்பது மிகவும் நாகரீகமற்ற பாராதூரமான

இதைவிட கொடுமை ஏதுமில்லை  என்றளவான குற்றம்

 

எப்படி பொய் பேசுகின்றார் 

எவ்வாறு கதையை  மாற்றுகின்றார்

 

என்ன  படிப்பு படித்தென்ன?

என்ன  பதவியில் இருந்தென்ன?

அவன் சிங்களவன்

தனதினத்தைக்காப்பாற்ற  எதையும் செய்வான்

அது தான் முதலில்..

 

ஆனால் எம்மவர்

இதைக்கூட கண்டிக்கார்?

எமக்காக போராடுபவர்கள் மட்டும் புனிதராக  கடவுளாக இருக்கணும் என

சூனியம் வைப்பார்

நாசமாப்போகாதா  இவ்வினம்??? :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை முற்றாக இல்லாது அழித்து விட்டதாக 2009 இல் இருந்து சொல்லிவந்தவர்களுக்கு மீண்டும் புலிகள் தேவைப் படுகிறார்கள் தமது படையினர் செய்யும் குற்றங்களை மறைக்க கடந்தகாலங்களிலும் தமது படையினர் செய்த பயங்கரவாத செயல்களை புலிகள்தான் செய்தார்கள் என்று சொல்லி வந்ததை இப்போதாவது உணரட்டும் சர்வதேச சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அடுத்த பிரதமர் நீங்களில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஜன நா (அராஜ) யகம் கொடிகட்டிப் பறக்கும் நாட்டின் பிரதமரிடம் இருந்து
இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியதில் மகிழ்ச்சியடையும் சிலர் இந்த மிருகங்களைப்பற்றி பேசுவதேயில்லை. 

இங்கு புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியதில் மகிழ்ச்சியடையும் சிலர் இந்த மிருகங்களைப்பற்றி பேசுவதேயில்லை. 

அண்ணை அருவரியை தாண்டும் பிளான் இல்லை போலிருக்கு ?

 

அவர்கள் மிருகம் என்று தெரிந்ததால் தான் 1983 இல் பத்தாயிரம் பேர் போராட போனார்கள் .

ஆனால் சில மிருகங்களுக்கு  யார் மிருகம் என்று தெரியாமல் போனதால் தான் உந்த மிருகத்தின் பேச்சை கேட்க வேண்டியிருக்கு  :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அருவரியை தாண்டும் பிளான் இல்லை போலிருக்கு ?

 

அவர்கள் மிருகம் என்று தெரிந்ததால் தான் 1983 இல் பத்தாயிரம் பேர் போராட போனார்கள் .

ஆனால் சில மிருகங்களுக்கு  யார் மிருகம் என்று தெரியாமல் போனதால் தான் உந்த மிருகத்தின் பேச்சை கேட்க வேண்டியிருக்கு  :(

 

ஜனநாயக மிருகங்களுக்கும் போராட்டமிருகங்களுக்கும் வித்தியாசமிருக்கு......போராட்டமிருகங்களை அழித்துவிடுவார்கள் இந்த ஜனநாயகமிருகங்கள் உலகத்தை ஆட்டிப்படைக்கும் கெடுகெட்ட மிருகங்கள்......

அண்ணை அருவரியை தாண்டும் பிளான் இல்லை போலிருக்கு ?

அவர்கள் மிருகம் என்று தெரிந்ததால் தான் 1983 இல் பத்தாயிரம் பேர் போராட போனார்கள் .

ஆனால் சில மிருகங்களுக்கு யார் மிருகம் என்று தெரியாமல் போனதால் தான் உந்த மிருகத்தின் பேச்சை கேட்க வேண்டியிருக்கு :(

S Lanka troops 'abused Haitians'

The UN is sending home more than 100 of the 950 Sri Lankan peacekeepers in Haiti, accusing them of sexual abuse, including with underage girls.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7075866.stm

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அருவரியை தாண்டும் பிளான் இல்லை போலிருக்கு ?

 

அவர்கள் மிருகம் என்று தெரிந்ததால் தான் 1983 இல் பத்தாயிரம் பேர் போராட போனார்கள் .

ஆனால் சில மிருகங்களுக்கு  யார் மிருகம் என்று தெரியாமல் போனதால் தான் உந்த மிருகத்தின் பேச்சை கேட்க வேண்டியிருக்கு  :(

 

 

மிருகங்களோடு  இருந்ததால் ( எல்லோரும் அல்ல. குணம் தெரிந்து விலகி விட்டார்கள்) அண்ணைக்கு இன்றும்  அந்த குணம் உள்ளவர்களை சொல்ல கோபம் வருகிறது. இல்லாவிட்டால் சிறிலங்கா அரசு, இந்த அரசுகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை வதைக்க எப்படி மனம் வரும்?. இதற்கு ஒருக்கால்  இதய சுத்தியுடன் பதில் தர முடியுமா??  :huh:  :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.