Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் குடிநீர் பவுசர் அன்பளிப்பு

Featured Replies

a1(2363).jpg
-எஸ்.ஜெகநாதன் 

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்துக்கு  குடிநீர் பவுசர் ஒன்று நேற்று புதன்கிழமை (30) வழங்கப்பட்டது.  

வட இலங்கை சர்வோதய அறங்காவலர் பொ.ஜமுனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  மேற்படி சர்வோதயத்துக்கு சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொருளாளர் ச.ரமணதாஸ்  இந்த குடிநீர்  பவுசரை வழங்கிவைத்தார். 

புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு வெள்ளோட்டமாக குடிநீர் இந்த பவுசர் மூலம் விநியோகிக்கப்பட்டது. 
 
 a2(1883).jpg

a3(1052).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/120170-2014-07-31-05-48-53.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சி

அதை நிறைவேற்றிய  சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கும்

அதன் உறுப்பினர்களுக்கும்

அதற்காக உழைத்த உறவுகளுக்கும்

அதை ஒப்படைத்த பொருளாளர் ரமணனுக்கும் நன்றிகள்

 எமது ஊரை 

வரம்புயர  செய்வதற்கான முயற்சிகளில்

எமது ஊரவர்கள் மிக மிக  அக்கறையாக  இருப்பதும்

அதற்கான  செயல்களை அதிகரித்திருப்பதும் மகிழ்வைத்தருகிறது

இப்பணிகள் தொடரணும்

தொடரும்.....

வேறு வழிகள் யாவும் அடைக்கப்பட்டுள்ள  இன்றையநிலையில்

எமது ஊர்களை  நாமே அபிவிருத்தி  செய்வதும்

அங்குள்ள  மக்களை  அப்பிரதேசங்களை  விட்டு  அகலாதவாறு தடுப்பதும் மிகமிக  முக்கியமானதாகும்

அதற்கமைய

அங்கு குடியிருக்கும் மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு

நிவர்த்தி  செய்யப்பட்டு

வேலை வாய்ப்புக்கள்

மற்றும் கல்வி  சுகாதார  வசதிகள்   மேம்படுத்தப்படணும்

இந்த வகையில் பிரான்சிலுள்ள  புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் தனது  இந்த வருட சேவையாக

கல்வி  மற்றும் சுகாதார  சேவைக்காக  ஒரு கோடி ரூபாவுக்கான வேலைத்திட்டத்தை

புங்குடுதீவில் ஆரம்பித்துள்ளது

வேலைகள் தொடங்கி  நடைபெற்று வருகிறது.

பின்னர் அது சம்பந்தமாக இங்கும் அறியத்தரப்படும்

இப்பணிகள் தொடரணும்

தொடரும்..

Edited by விசுகு

  • தொடங்கியவர்
நல்ல விடயம் விசுகு, புலம் பெயர் தேசங்களில் உள்ள புங்குடுதீவு  மக்கள் ஒன்றியங்கள்  மிகச் சிறப்பான சேவைகளை தாயகத்தில் செய்வதுடன், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.
 
நாம் சற்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து அவர்களின் நீண்ட கால வழமான வாழ்வை கருத்தில் கொண்டு சில திட்டங்களை முன்னெடுக்கலாம். எம்மால் தொடர்ந்து அவர்களுக்கு உதவமுடியாது  ஏனெனில் எமக்கும் வயதுகள் கூடிக் கொண்டு செல்கின்றன, எமது காலத்தின் பின் எமது பிள்ளைகள் தாயகத்திற்கு உதவி செய்வார்களா என்பது கேள்விக்குறியே, அப்படியே செய்தாலும் எம்மைப் போல் பெருமெடுப்பில் செய்வார்களா ............? இல்லை என்பது தான் எனது கருத்து .
 
அப்படியாயின் இதற்குத் தீர்வு ?
 
நாம் பட்டதாரி மாணவர்களை பெருமளவில் உருவாக்க வேண்டும் , 
 
க.பொ.த உயர்தரம் கற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்கத் தவறிய மாணவர்களை வெளிநாடிலுள்ள‌ (குறிப்பாக இந்தியாவிற்கு) பல்கலைக்கழகங்களிற்கு  அனுப்பி அவர்களை 
பட்டதாரியாக்குங்கள்.இவ்வாறு பொறியியலாளர்கள், வைத்தியர்கள், விவசாய நீர் முகாமைத்துவ விஞ்ஞானிகள், விமானப் பராமரிப்பு  பொறியியலாளர்கள் என பலவகையான பட்டதாரிகளை உருவாக்கி விடுங்கள். பின்னர் அவர்கள் நாம் சற்றும் எதிர் பாராத வகையில் எமது தாயகத்தை மிக உன்னத நிலைக்கு முன்னேற்றுவார்கள். உலகமே எம்மைத் திரும்பி பார்க்கும் வகையில் அசத்துவார்கள். இப்படியொரு இனத்தை அழிப்பதற்கா நாம் துணை போனோம் என முழு உலகமுமே வருந்துவார்கள்.
 
எனது அனுபவத்தில் சொல்கிறேன் தாயகத்தில் பல திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பணம் தான் பிரச்சனை, அதனை நிவர்த்தி செய்யக்கூடிய பலம் புலம் பெயர் மக்களிடம் உள்ளது.
 
புங்குடுதீவு  மக்கள் ஒன்றியங்களின் மூலம் இப்படியான திட்டங்களை முன்னெடுத்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கலாம் என்பது எனது அவா விசுகு அண்ணா , ஏனெனில் புங்குடுதீவு  மக்களிடம் அதற்குரிய பணமும் மனமும் இருக்கிறது.

நாம் பட்டதாரி மாணவர்களை பெருமளவில் உருவாக்க வேண்டும்
 
நல்ல விடையம்....உதவி தேவைப்படும் மாணவர்களது விபரங்களைப் பெற்று வெளிப்படுத்திக் கொண்டு இருந்தால் விருப்பப்பட்டவர்கள் தங்களால் முடிந்ததை செய்வதற்கு முன் வருவார்கள் தானே..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் விசுகு, புலம் பெயர் தேசங்களில் உள்ள புங்குடுதீவு  மக்கள் ஒன்றியங்கள்  மிகச் சிறப்பான சேவைகளை தாயகத்தில் செய்வதுடன், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.
 
நாம் சற்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து அவர்களின் நீண்ட கால வழமான வாழ்வை கருத்தில் கொண்டு சில திட்டங்களை முன்னெடுக்கலாம். எம்மால் தொடர்ந்து அவர்களுக்கு உதவமுடியாது  ஏனெனில் எமக்கும் வயதுகள் கூடிக் கொண்டு செல்கின்றன, எமது காலத்தின் பின் எமது பிள்ளைகள் தாயகத்திற்கு உதவி செய்வார்களா என்பது கேள்விக்குறியே, அப்படியே செய்தாலும் எம்மைப் போல் பெருமெடுப்பில் செய்வார்களா ............? இல்லை என்பது தான் எனது கருத்து .
 
அப்படியாயின் இதற்குத் தீர்வு ?
 
நாம் பட்டதாரி மாணவர்களை பெருமளவில் உருவாக்க வேண்டும் , 
 
க.பொ.த உயர்தரம் கற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்கத் தவறிய மாணவர்களை வெளிநாடிலுள்ள‌ (குறிப்பாக இந்தியாவிற்கு) பல்கலைக்கழகங்களிற்கு  அனுப்பி அவர்களை 
பட்டதாரியாக்குங்கள்.இவ்வாறு பொறியியலாளர்கள், வைத்தியர்கள், விவசாய நீர் முகாமைத்துவ விஞ்ஞானிகள், விமானப் பராமரிப்பு  பொறியியலாளர்கள் என பலவகையான பட்டதாரிகளை உருவாக்கி விடுங்கள். பின்னர் அவர்கள் நாம் சற்றும் எதிர் பாராத வகையில் எமது தாயகத்தை மிக உன்னத நிலைக்கு முன்னேற்றுவார்கள். உலகமே எம்மைத் திரும்பி பார்க்கும் வகையில் அசத்துவார்கள். இப்படியொரு இனத்தை அழிப்பதற்கா நாம் துணை போனோம் என முழு உலகமுமே வருந்துவார்கள்.
 
எனது அனுபவத்தில் சொல்கிறேன் தாயகத்தில் பல திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பணம் தான் பிரச்சனை, அதனை நிவர்த்தி செய்யக்கூடிய பலம் புலம் பெயர் மக்களிடம் உள்ளது.
 
புங்குடுதீவு  மக்கள் ஒன்றியங்களின் மூலம் இப்படியான திட்டங்களை முன்னெடுத்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கலாம் என்பது எனது அவா விசுகு அண்ணா , ஏனெனில் புங்குடுதீவு  மக்களிடம் அதற்குரிய பணமும் மனமும் இருக்கிறது.

நன்றி  ஐயா

உங்களது கருத்தும் அதன் வேகமும் தூர  நோக்கும் மிக  நன்று

பலவற்றை  செய்திருக்கின்றோம்

செய்து வருகின்றோம்

போன  வருடம் கூட

கிளிநொச்சி இந்து மகாசங்கம்? இருளில் மூழ்கிய  போது 5 லட்சம் ரூபாக்களைக்கட்டி

அங்கு பராமரிக்கப்படும்

கல்வி பயலும் 350 க்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளின் வாழ்வுக்கு உதவினோம்..

அதே நேரம் எமது ஊரில் 12 ஆரம்பப்பள்ளிகளை  தொடர்ந்து 6 வருடங்களாக நடாத்திவருகின்றோம்

ஆசிரியைகளுக்கான கொடுப்பனவுகள்

பிள்ளைகளுக்கான உணவுகள்

உடுப்புக்கள்.....  என  தொடர்ந்து செய்து வருகின்றோம்

இதற்காக  வருடத்துக்கு 10 லட்சம் ஒதுக்குகின்றோம்...

மீதியை  இங்கு சென்று பாருங்கள்...

http://fr.pungudutivu.info/

அதேநேரம்

யாழினூடாக பலவற்றை  செய்திருக்கின்றோம்

நேசக்கரமூடாகவும் செய்திருக்கின்றோம்

பதிவுகளைப்பாருங்கள்

(யாழில் நான் செய்தவை

எனது தனிப்பட்ட விளம்பரத்துக்காக  என  வைக்கப்பட்ட விமர்சனங்களைத்தொடர்ந்து இங்கு செய்வதை நிறுத்தியுள்ளேன்)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சி

  • கருத்துக்கள உறவுகள்

" தாகத்தில் தவித்த  வாய்க்கு, ஒரு மிடறு தண்ணீர் கொடுப்பவர்," என்றுமே... போற்றுதலுக்கு உரியவர்கள்.
நல்லதொரு செயலைச் செய்த,  சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கு... பாரட்டுக்கள்.47.gif

  • கருத்துக்கள உறவுகள்

போற்றுதலுக்குரிய விடயம். பாராட்டுகள்.

போன மாதம் புங்குடுதீவு போயிருந்தேன். கோகுலம் எனும் பெயரில் பொட்டல் தரைகளில் கால்நடைகள் நீர்நிலைகள் அமைத்திருந்தார்கள்.

மிகவும் நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பலவருடங்களாக தேவைப்பட்டு

புங்குடுதீவு  பொது  வைத்தியசாலையில்

மக்களை  வேறு இடங்களுக்கு ஓடவைத்த

மதப்பேறு காலங்களில் வயிற்றிலிருக்கும் பிள்ளையை கவனிக்கும்

Scanner (Echographie)  மெசினை (19  லட்சம் ரூபாக்கள்)

இன்று   சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் வைத்தியசாலையிடம் கையளித்துள்ளதாக  தகவல் வந்துள்ளது

போற்றுதலுக்கு உரியவர்கள்.

நல்லதொரு செயலைச் செய்த,  சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கு... பாராட்டுக்களும்  நன்றிகளும்

சேவைகள் தொடரணும்

தொடரும்.......

குறிப்பு - திருத்துக்கான  காரணம்

செலவுத்தொகையின்  உண்மைநிலை அறியத்தரப்பட்டுள்ளது.

நன்றி 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனின்ம முயற்ச்சி நல்லது தான்.அதே நேரம் சிறு சுய தொழில் முயற்ச்சிகைளையும் ஊக்குவிக்க வேணும்.

Edited by சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கோடை காலத்தில் குடி நீருக்காக மைல் கணக்கில் நடந்த அனுபவங்கள்
பலருக்கும் இருக்கும்.
இந்த அரிய சேவையைச் செய்த  சுவிஸ் மக்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

  • தொடங்கியவர்
நன்றி விசுகு அண்ணா, நீங்கள் செய்யும் உதவிகளைப் பார்த்தேன் அருமையான பணிகள், இவற்றைச் செய்யும் உங்களுக்கும், மற்றய உறவுகளுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
 
ஆயினும்   "பட்டதாரி மாணவர்களை  உருவாக்குதல் " எனும் விடயத்தினுள் புங்குடுதீவு  மக்கள் ஒன்றியங்கள்  இதுவரை நேரடியாக ஈடுபடவில்லை என்றே நான்  நினைக்கிறேன். நான் கூறுவது தனித்து ஒரு மாணவனுக்கு 25 , 30 லட்சங்கள் உதவிசெய்வது பற்றி......
 
ஒரு உதாரணம்.
 
இப்போது புங்குடுதீவில் தண்ணீர் பிரச்சனை.
 
நாம்  ஒரு  பவுசர்  கொடுக்கிறோம், முடிந்த்தால் அடுத்த வருடம் இரண்டு பவுச்ர்கள்......, ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எம்மால் இங்கிருந்து பவுசர் தான் கொடுக்க முடியும் , தண்ணீர் கொடுக்க முடியாது, பவுசர்களுக்குக் கூட எங்கோ ஒரு இடத்தில் தண்ணீர் இருந்தால் தான் வேலை , நீர் இல்லாவிடில் பவுசர்களுக்கும் வேலை இல்லை
 நான் கூறுவது புங்குடுதீவில் நீர் வளத்தினைப் பெருக்குவது தொடர்பாக‌
 
ஏன் குடி நீர்வளம் குறைகிறது?
 
மழை வீழ்ச்சி குறைவா?
 
அளவுக்கதிகமான பயண்பாடா? 
 
நிலத்தடி நீர் தொடர்பான புங்குடுதீவின் சட்டலைட் படங்கள் உள்ளனவா , அவை என்ன சொல்கின்றன?
 
புங்குடுதீவில் நிலத்தடி நீரிழப்பை ஏற்படுத்தக் கூடிய தாவர இனங்கள் உள்ளனவா?அவற்றை அகற்றல், நீர் வளத்தினைப் பாதுகாக்கக் கூடிய தாவர இனங்கள் உள்ளனவா? அவற்றப் பெருக்குதல் அல்லது வேறிடங்களில் இருந்து கொண்டுவரல்
 
நீர் எவ்வாறு மாசு படுகிறது? 
 
விவசாயிகள் எவ்வகையான உரங்கள், கிருமிநாசினிகளை பயண்படுத்துகிறார்கள். அவற்றுக்கு கொண்டுவரக்கூடிய கட்டுப்பாடுகள். 
 
இயற்கை விவசாயத்தினை ஊக்கப்ப்டுத்தல்
 
 நீர் முகாமைத்துவம் என்றால் என்ன ? அதை நிர்வகிப்பது எப்படி?.
 
(அண்மையில் வாசித்தேன் , இஸ்ரேலில் (பாலைவனப் பூமி) மிகச் சிறப்பாக விவசாயம் செய்கிறார்களாம், நாம் பாவிக்கும் நீரில் 1/8 பங்கு நீரை மாத்திரம் பாவித்து நாம் பெறும் அதே விளைவைப் பெறுகிரார்களாம். இவற்றை எல்லாம் நாம் கற்க வேண்டும் ஒருவரை உருவாக்கி இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டும்....)
 
etc.... 
etc.... 
 
இப்படி பல படி முறைகள் உள்ளன  விசுகு அண்ணா, இவற்றை நானோ நீங்களோ செய்யமுடியாது அண்ணா, ஆனால் இவற்றைச் செய்யக்கூடிய துறை சார் நிபுண‌ர் ஒருவரை நாம் உருவாக்கலாம். 
 
எப்படிச் செய்யலாம்!
 
ஒவ்வொரு வருடமும் தாயகத்திலுள்ள பல்கலைக் கழகங்களிலிருந்து சூழலியல், விவசாய விஞ்ஞானம் போன்ற துறைகளில் பட்டப்படிப்பை முடித்த் மாணவர்கள் வெளிவருவார்கள். அவர்களை வெளிநாடுகளிலுள்ள மேற்கூறிய துறைகளில் சிறந்து விளங்கும்  பல்கலைக் கழகங்களிற்கு அனுப்பி பட்டமேற்படிப்பை படிக்க வைத்து நாம் சிறந்த பயனைப் பெறலாம்.
 
 புலத்திலிருந்து பலர் இப்போது விடுமுறையில் தாயகம் செல்கிறார்கள் அவர்கள் , மேற்குறிப்பிட்ட மாணவர்களுடனோ, பல்கலைக் கழக பேராசிரியர்களுடனோ சந்திப்பை ஏற்படுத்தி மேலதிக விபரங்களையும், அவர்களது ஆர்வங்களையும் அறிய முடியும்.
 
தூர நோக்கோடு சிந்தித்து செயற்பட்டால். புங்குடுதீவிலிருந்து பவுசர் மூலம் நீரெடுத்து மற்றய ஊர்களுக்கு கொடுக்கலாம்.
 
சகல துறைகளிலும் துறை சார் நிபுணர்களையும், கல்விமான்களையும் நாம் உருவாக்கி அவர்களிடம் தாயகத்தினை ஒப்படைக்க வேண்டும். புலம் பெயர் உறவுகள் இதனைத்தான் செய்ய வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள  வகையானவற்றை  சொல்கின்றீர்கள்

நாமும்  தண்ணீர் திட்டங்கள்   தொடர்பாக தொடர்ந்து பேசியே  வருகின்றோம்

எமது செயலாளர் கூட இது சம்பந்தமாக படித்து பட்டம் பெற்றவரே......

அவர் மூலமாக  சில  பேச்சுக்களை  நடாத்தியிருக்கின்றோம்

பேராசிரியர் குகநேசன் ஊடாகவும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாகவும் சில ஆராய்ச்சி  முயற்சிகளை  மேற்கொண்டோம்

ஏதாவது ஒரு தடை  வந்தவண்ணமே உள்ளது

இறுதியாக 

இரணைமடுவிலிருந்து தண்ணீர் தருகின்றோம்

பின்னர் எதற்கு நீங்கள் என தட்டிவிட்டார்கள்

மற்றும் மாணவர்களை  படிப்பிப்பது பற்றி

எம்மால் முடிந்தவரை

படிப்பு சார்ந்தும்

படித்து வேலையற்றோர் சார்ந்தும் 

அதிலும் பெண் பிள்ளைகள் சார்ந்தும் செய்து வருகின்றோம்

இந்த  வருடம் 

புங்குடுதீவு  மகாவித்தியாலயத்தை புணருத்தாருணம் செய்து

பாடசாலையையும்  அதனைச்சுற்றியுள்ள பகுதியையும் 

தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்...

அது பற்றிய  அறிவித்தல் பின்னர் வரும்..

நீங்கள் கூறிய பல்கலைக்கழகங்களில்  மாணவர்களைப்படிப்பிக்கும் திட்டம்  என்பது

ஒரு சங்கத்தால் செய்யக்கூடியது அல்ல

சங்கம் என்பது  அங்கத்துவ  சந்தா

மற்றும் வாக்கெடுப்பு நடைமுறைகளில் இயங்குவது...

எனவே 

தொடர் கொடுப்பனவுகளை

மற்றும் நீண்ட திட்டங்களை

ஒரு சிலரைக்குறி  வைத்து

நம்பி  செய்வது என்பது கடினமானது

அதற்கான ஆதரவுகளைப்பெறுவது கடினமானது....

ஏற்கனவே

யாழின் ஊடாக

2650  ஈரோக்களை

இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்புக்காக

லண்டனில் தவித்த ஒருவருக்கு கொடுத்திருந்தோம்.

அது சில விரும்பத்தகாத அனுபவங்களை  விட்டுச்சென்று விட்டது :(  :(  :(

அதற்கு

என்னுடன் சேர்ந்து உதவியர்களை நான் மீண்டும் நம்பிக்கை  வைக்கும்படி எப்படி கேட்பது....?

ஆனாலும் எமது பணிகளை  நாம் முடக்கவில்லை

எம்மாலானவற்றை  தொடர்ந்து  செய்ய  விளைகின்றோம்

செய்வோம்

நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

பிறந்த மண்,படித்த பாடசாலை ,வைத்தியசாலைகள் இவற்றிற்கு புலம்பெயர்ந்த்வர்களின் உதவி காட்டாயம் தேவை .கனடாவிலும் புங்குடுதீவு ஒன்றியம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது .

உதவிகள் தொடர வாழ்த்துக்கள் .

நல்லதை யார் செய்தாலும் நல்லதை யார் சொன்னாலும் யார் ஊக்குவித்தாலும் அதை பாராட்ட வேணும் நன்றி சொல்ல வேணும்.இது எங்கள் பண்பாடு.நாங்கள் தான் அடுத்த தலை முறைக்கு இவற்றை எல்லாம் காவிச் செல்ல வேணும்.ஒரு பண்பாடு இல்லாத நன்றி இல்லாத சமுகத்தை எங்கள் தனிப்பட்ட அரசியல் எதிர் நிலமைக்காக காவு கொடுக்க முனைய கூடாது.இது எனது தனிப்பட்ட ஆதங்கம் இதை விசுகர் விழங்கிக் கொள்வார் என நினைக்கிறேன்.நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.