Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காற்புள்ளியும் , முற்றுப் புள்ளியும்தான் அதிகம் பயன்படுத்துவது . :)

  • Replies 128
  • Views 75.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பறையை எட்டிப்பார்த்த அனைவருக்கும் வாத்தியாரின் வந்தனங்கள். இப்போது விடுமுறை நாட்கள் ....விடுமுறை முடியப் பலரும் வருவார்கள்

பலருக்கும்.... "இடம்விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்" சரிவரத் தெரியாமல்.. பிரச்சினை உள்ளது.

 

அத்துடன்.... ஆச்சரியக்குறி, கொமா, (......) அடைப்புக் குறிக்குள் உள்ள நீண்ட புள்ளி எங்கு போடவேண்டும் என்ற பாடத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன் வாத்தியார். :)

என் பிரச்சினையும்  அதுதான் சிறி அண்ணே வாத்தியார் அவைகள் பற்றி பாடங்களை எடுக்கவும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் வேற்றுமை

ஆல், ஆன் ,ஒடு, ஓடு  என்ற நான்கு உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகளாகும்.

போராட்டத்தினால் வெற்றி கிடைத்தது.
அறத்தான் வருவதே இன்பம்.
பெட்டியொடு பொருளும் வந்தது
மன்னனோடு  மகாராணியும் வந்தாள்    

மேலுள்ள நன்கு வாக்கியங்களிலும் பெயர்ச்சொல் ஒன்றுடன் உருபு ஒன்று  சேர்ந்து அந்தச்சொல்லை வேறுபடுத்துகின்றது.
போராட்டம் என்பது ஆல் எனும் உருபை ஏற்று போராட்டத்தால் எனப் பொருளை வேறுபடுத்துகின்றது.
இதே போல அறம் + ஆன்  அறத்தான் எனவும் வருகின்றது.

முதலாவது வாக்கியத்தில் வெற்றிக்குக் காரணம் அல்லது கருவி போராட்டம் ஆகும்.
அதேபோல இரண்டாவது வாக்கியத்தில் வாழ்க்கையில் இன்பத்தை அடைவதற்கு  அறம் செய்தல் வேண்டும் எனப்பொருள்படுகின்றது. அதாவது இன்பத்தை அடையக் கருவியாக அறம் இருக்கின்றது.

ஆகவே இந்த ஆல்,ஆன் என்ற உருபுகளுடன் வரும் மூன்றாம் வேற்றுமைகளைக் கருவிப்பொருளில் அமைந்த மூன்றாம் வேற்றுமை என்பர்.

வணிகனால் வீடு கட்டப்பட்டது . இங்கே வணிகன் எனும் பெயர்ச்சொல்லுடன்  ஆல் உருபு சேர்ந்துள்ளது.
இது மூன்றாம் வேற்றுமை. ஆனால் வாக்கியத்தின் உண்மைப் பொருள் என்ன ?? வணிகன் தானாக அந்த வீட்டைக் கட்டினானா என்றால் இல்லை என்பதே பதில் . ஆனால் வணிகன் வேலையாட்களை ஏவி அந்த வீட்டைக் கட்டும்படி செய்தான்.வீட்டை உருவாக்க  கர்த்தாவாகி     மற்றவர்களை ஏவியதால் வணிகனை ஏவற்கர்த்தா என்பர்.
வணிகன் எனும் சொல்லுடன் ஆல் என்ற உருபு சேர்ந்து  
ஏவற் கர்த்தாப்பொருளை உணர்த்தி நிற்கின்றது.
பாலனால் பட்டம் கட்டப்பட்டது. இங்கே பாலன் என்பவன் தானாகவே ஒரு பட்டத்தைக் கட்டினான் என்பதால் இயற்றுதற்கர்த்தா என்ற பொருளை உணர்த்தி நிற்கின்றது.

பெட்டியொடு பொருளும் வந்தது
பெட்டி + ஒடு    பெட்டியொடு ..பொருளும் வந்தது
இங்கே,  வந்த பெட்டி,  அதனுள் பொருளும் வைக்கப்பட்ட நிலையில் வந்திருந்தது எனப் பொருள்படும்.

மன்னரோடு மகாராணியும் வந்தாள்
மன்னனும் அவனுடன் சேர்ந்து மகாராணியும் வந்தனர் என்பதைக் குறிக்கும் இந்த வாக்கியத்தில் மன்னன் என்ற சொல்லுடன் ஓடு எனும் உருபு சேர்ந்து இருவரும் சேர்ந்து வந்தனர் எனும் பொருளைத் தருகின்றது.

அதாவது கடைசி இரு வாக்கியங்களிலும் ஒடு ஓடு என்ற உருபுகள் பொருளை மாற்றி   ஒன்றுடன் இன்னொன்று  சேர்ந்து நிகழ்வதைக் குறித்து   நிற்கின்றது. அதாவது உடனிகழ்ச்சிப்  பொருளைக் குறித்து நிற்கின்றன  என்பர் இலக்கணத்தார்.
 
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல்,ஆன்,ஒடு,ஒடு என்பனவே.
ஆனாலும் கொண்டு, உடன் என்ற உறுப்புகளையும் பின்னர் மூன்றாம் வேற்றுமை உருபுகளாகச் சேர்த்துக் கொண்டனர்  இலக்கணத்தார்.
தடிகொண்டு(ஆல்) அடித்தான்
பெருங்காற்றுடன்(ஒடு) புயல் வீசியது.
 

மீண்டும் சந்திப்போம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்காம் வேற்றுமை

நான்காம் வேற்றுமையின் உருபு கு என்பதாகும்.
ஒரு பெயர்ச்சொல் கு எனும் உருபை ஏற்றுப் பொருள் மாறுவது நான்காம் வேற்றுமையிலாகும்.
இந்த நான்காம் வேற்றுமையில் வரும் கு என்ற உறுப்பு கோடற்பொருளை உணர்த்தி நிற்கின்றது. கோடல் என்பது கொடுப்பதை ஏற்றுக்கொள்வதாகும்.

 

கோடற்பொருளானது ஏழு வகைப்படும்
அவையாவன
கொடை, பகை, நட்பு , தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என்பனவாகும்.

அரசன் புலவனுக்குப் பரிசளித்தான் (கொடை)
குடி மனிதனுக்குக் கேடு ( பகை )
இராமனுக்கு நண்பன் குகன் ( நட்பு )
முகத்திற்கு அழகு கண்கள் ( தகுதி)
தயிருக்குப் பால் வாங்கினான் ( அதுவாதல் )
மக்களின் விழிப்புணர்விற்குப் பாடுபட்டனர் (பொருட்டு )
இராவணனுக்குத் தங்கை சூர்ப்பனகை (முறை)

சில வாக்கியங்களில் கு என்ற உருபிற்குப் பதிலாகப் பொருட்டு எனவும் ஆக எனவும் பயன்படுத்துவர்.

ஆக , பொருட்டு என்பனவும் நான்காம் வேற்றுமை உருபுகளே.

 

உதாரணம்
பணத்திற்காக கெடுதல் செய்யாதீர்கள்.
தகப்பன்பொருட்டு மகன் வேலை செய்தான்.

மீண்டும் சந்திப்போம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் இல் , இன் என்பனவாகும்.
ஒரு பெயர்ச்சொல்லுடன் இல் அல்லது இன் என்ற உருபுகள் சேர்ந்து அந்தப் பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ஐந்தாம் வேற்றுமையிலாகும்.

கொடையில் சிறந்தவன் கர்ணன்
 பண்பின் அடைவர் மேன்மை
என்பன உதாரணங்காளாகும்
 
இவை நீங்கல், ஒப்பு, எல்லை, காரணம் என்ற பொருட்களை உணர்த்தி நிற்கும்.

மரத்தின் வீழ்ந்த இலைகள் ( நீங்கல்)
மலையின் உயர்ந்த புகழுடையவர் (ஒப்பு)
கவிதை வடிப்பதில் வல்லவன் ( காரணம்)
யாழ்ப்பாணத்தின் வடக்கே தீவகம் ( எல்லை )

இப்படி ஐந்தாம் வேற்றுமை நான்கு விதமான பொருளை உணர்த்தி நிற்கும்.

நின்று, இருந்து, விட, காட்டிலும் என்ற உருபுகளும் ஐந்தாம் வேற்றுமைக்குரியவையே.
மரத்திலிருந்து வீழ்ந்த இலைகள்
நிலா மேகத்தினின்று வெளிப்பட்டது
தமிழைக்காட்டிலும் இனிய மொழி எதுவோ
செல்வந்தரைவிடக் கற்றோரே சிறந்தவர்
என்பன உதாரணங்களாகும்

 

மீண்டும் சந்திப்போம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாத்தி..... பொல்லாத வாத்தியாய் இருக்குது.
ஸ்கூல் கொலிடேக்குள்ளையும், ஸ்பெசல் கிளாஸ் வைக்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

...இதனை நிச்சயம் நேரம் ஒதுக்கி.... ஆறுதலாக படிக்கப் போறன்.

 

தமிழ்சிறி அவர்களே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்! :icon_idea:

 

பெரும்பாலான திரிகளில் ஆறுதலாய் படிக்கப் போறேன்.. ஆறுதலாய் படிக்கப் போறேன்னு சொல்றீங்களே..இது பதிந்தவரை ஆறுதல் படுத்தும் வார்த்தைகளா..? இல்லை உண்மையாகவே பின்னர் படிப்பதுண்டா? :(:o:)

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்! :icon_idea:

 

பெரும்பாலான திரிகளில் ஆறுதலாய் படிக்கப் போறேன்.. ஆறுதலாய் படிக்கப் போறேன்னு சொல்றீங்களே..இது பதிந்தவரை ஆறுதல் படுத்தும் வார்த்தைகளா..? இல்லை உண்மையாகவே பின்னர் படிப்பதுண்டா? :(:o:)

 

 

அய்யய்யோ... இப்பிடி, மாட்டி விடுறாங்களே...... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யோ... இப்பிடி, மாட்டி விடுறாங்களே...... :D  :lol:

 

 

அது தானே... :D

(எனக்கும் இடிக்குது) :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமைக்குரிய உருபு அது ஆகும்

 

இதனைக் கிழமை வேற்றுமை அல்லது உடமை வேற்றுமை எனவும் அழைப்பர்.

அதாவது உரிமையுடையது எனப்பொருள்படும். ஆறாம் வேற்றுமையை கொண்ட சொல்லுக்குப் பின்னர்

வினைச்சொல் வராது. ஒரு பெயர்ச்சொல்லே அதனைத் தொடர்ந்து வரும்.

இதுவே இந்த ஆறாம் வேற்றுமையின் தனிச் சிறப்பு.

 

பழைய காலத்தில் அது என்ற உருபுடன் ஆது என்ற உருபும் ஆறாம் வேற்றுமைக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் ஆது என்ற உருபும் ஆறாம் வேற்றுமைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது
உதாரணம் எனாது கைகள்

இன்றைய காலத்தில் இன், அது, உடைய, எனும் உருபுகள் ஆறாம் வேற்றுமை உருபுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

என்னுடைய வீடு
எனது வீடு
அவனின் வீடு என்பன உதாரணங்களாகும்

சில சமயங்களில் ஆறாம் வேற்றுமை உருபுகளை ஏற்காமல் வருவதும் உண்டு.
அவன் வீடு
அரசன் மாளிகை
முருகன் கோயில்
என்பன உருபை ஏற்காமல் வந்த ஆறாம் வேற்றுமைக்கு உதாரணங்களாகும்.

 

மீண்டும் சந்திப்போம் :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமையின் உருபுகள்  இல், கண், இடம், உள், மேல் என்பனவாகும். ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்தி நிற்பனவாகும்.

காட்டில் மிருகங்கள் வாழ்கின்றன.
மலைக்கண் மூலிகை
மற்றவரிடம்  பகை கொள்ளாதே
உயிரினக்களுள் மனிதர்கள் ஆறறிவு படைத்தவர்
தலைமேலுள்ள சுமை

மேலே சுட்டிக்காட்டப்பட்ட  இல்,கண்,இடம்,உள்,மேல் என்பன அந்தந்த பெயர்ச் சொற்களுடன் சேர்ந்து பொருளில் வேற்றுமையை ஏற்படுத்துகின்றன.

ஐந்தாம் வேற்றுமையிலும்  இல் என்ற உருபு  இருக்கின்றது. அது ஒப்புப் பொருளிலும் எதுப் பொருளிலும் வரும். ஏழாம் வேற்றுமையில் இடப் பொருளில் மட்டுமே வரும். "பொருள் அறிந்து வேற்றுமை காண்" என்று எனது ஆசிரியர் முன்பு கூறுவார். வேற்றுமையில் சந்தேகம் வரும் போது அந்த வேற்றுமை உருபு என்ன பொருளை உணர்த்தி நிற்கின்றது என்பதை அறிந்தால் அது எத்தனையாம் வேற்றுமை என்பதைக் கண்டு பிடித்து விடலாம்.

பொருட்கள் அறையில் இருக்கின்றது. இடப்பொருள், ஏழாம் வேற்றுமை.
பொருட்களை அறையிலிருந்து எடுத்தனர். நீங்கற் பொருள், ஐந்தாம் வேற்றுமை.

மீண்டும் சந்திப்போம் :D
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டாம் வேற்றுமை

எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை எனவும்  அழைப்பர்.
அதாவது ஒருவரை விளித்து அழைப்பது எட்டாம் வேற்றுமையின் பண்பாகும்.
தன்மை முன்னிலை படர்க்கை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் நீ அவன் என்பன அவற்றின் உதாரணங்கள்.

 

இவ்வாறு படர்க்கையில் உள்ள  பொருளை முன்னிலைப் பொருளாக்கி

விளிப்பதை எட்டாம் வேற்றுமை என்பர்.
அவ்வாறு படர்க்கைப் பொருளை முன்னிலைப் பொருளாக்கும் போது
படர்க்கையின் இறுதி எழுத்து இல்லாமற் போய் அல்லது திரிபடைந்து

நீண்ட ஒலியைக் கொண்டு நிற்கும்.

சங்கர்  என்ற சொல் படர்க்கைப் பொருளை உணர்த்துகின்றது.
சங்கர் என்பவரை  விளித்து அழைக்கும்போது சங்கரா என நீண்ட ஒலியுடன்

அவர் முன்னிலையில் நிற்பதைப் போன்று  ஒலிக்கின்றது.

உதாரணங்கள் சில :
மகன்   மகனே
கண்ணன் கண்ணா
குமரன் குமரா
சிவன் சிவனே
கடவுள் கடவுளே
மன்னன் மன்னா

இதுவரை  வேற்றுமையும் அதன் உருபுகளும் பற்றி  நாங்கள் படித்தோம்
அடுத்த வகுப்பில் மீண்டும் சந்திப்போம் :D

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஐயா,

ஒன்பதாம் வேற்றுமை எப்போ 'ரிலீஸ்' ஆகுமென என் ஏழாம் அறிவிற்கு சொல்ல இயலுமா? :o

வகுப்பில் பழைய மாணாக்கர்கள் பறந்துவிட்டனரோ இல்லை மறந்துவிட்டனரோ என தெரியவில்லை!

 

ம்.. (மக்கள் முதல்வரம்மா) ஆத்தா வையும்,  தமிழகம் போகணும்.. நீ.. சீக்கிரம் க்ளாசை எடு! :)

நன்றி வாத்தியார், இதனை நிச்சயம் நேரம் ஒதுக்கி.... ஆறுதலாக படிக்கப் போறன்.

 

சரி ஆறு புள்ளிகள் எடுக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாத்தியார் எண்டால் நான் திரும்பப்[ படிப்பிக்கப் போறன் எண்டு தனி மடல்லயாவது சொல்லியிருப்பார். வேணுமெண்டே எனக்குத் தெரியாமல் வகுப்பு நடத்திறார் வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியை விடுவம். உந்தக் கள்ளி சகாரா கூட எனக்குச் சொல்லேல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியை விடுவம். உந்தக் கள்ளி சகாரா கூட எனக்குச் சொல்லேல்லை :D

 

வாத்தியும் ஸ்பெசல் வகுப்பு எடுக்கப்போறன் வா பிள்ள வந்து இனியாவது ஒழுங்காப்படிச்சு இலக்கணப்பிழைகளை கவனிச்சு கவிதை கட்டுரை எழுதென்று தனிமடல் போட்டவர் சுமே நாமதான் கட்டடிக்கிற கூட்டமாச்சே அதான் சொல்லேல்லை..... இந்தப் பாஞ்ச் எங்கட வீட்டுக்குப் பக்கத்து வீட்டில வேலியால பாஞ்சு பக்கத்துவீட்டு அக்காவுக்கு கடிதம் கொடுத்திட்டாராம் தெரியுமோ? இந்த பாஞ்ச் எங்களுடைய கிளாஸ்மெட் என்று தெரிஞ்சு வீட்டில கண்காணிப்பு கூடிப்போச்சு...வழியில்லை இனி ஒழுங்கா தமிழ்வகுப்புக்கு வந்து மட்டம் போடாம இருக்கோணும் சுமே நீர் குழப்பிறதாக இருந்தா இப்பவே சொல்லிப்போடும் நான் உம்மோட வகுப்புக்கு வரேல்லை... :lol: :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கம்மா நடக்குது இங்கே.. ?

 

ஆம்பிளைங்க நாங்க தான், அங்கே இங்கே 'பராக்கு' பார்த்து வகுப்பை கட்டடிக்கிறதெண்டால், பொம்பிள்ளை பசங்க நீங்களுமா..? :o:(

 

 

 

2a5jiol.jpg

 

 

ஒழுங்கா படித்து, தேர்வில் சித்தியடைந்து  "ஆத்தா... நான் பாசாயிட்டேன்னு" மயிலு கணக்கா கூவுவீர்களென்னு பார்த்தா 'டக்'காயிடுவீங்க போலிருக்கே..? :icon_idea:

 

கடைசி வாங்கியில இருக்கும் பாஞ்ச், கு.சா வரிசைதான் இனி உங்களுக்கும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கம்மா நடக்குது இங்கே.. ?

 

ஆம்பிளைங்க நாங்க தான், அங்கே இங்கே 'பராக்கு' பார்த்து வகுப்பை கட்டடிக்கிறதெண்டால், பொம்பிள்ளை பசங்க நீங்களுமா..? :o:(

 

 

 

2a5jiol.jpg

 

 

ஒழுங்கா படித்து, தேர்வில் சித்தியடைந்து  "ஆத்தா... நான் பாசாயிட்டேன்னு" மயிலு கணக்கா கூவுவீர்களென்னு பார்த்தா 'டக்'காயிடுவீங்க போலிருக்கே..? :icon_idea:

 

கடைசி வாங்கியில இருக்கும் பாஞ்ச், கு.சா வரிசைதான் இனி உங்களுக்கும்..! :lol::D

 

ராசவன்னியன் டக் என்று சொன்னது சுமேயைத்தானே... :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் டக் என்று சொன்னது சுமேயைத்தானே... :D :D :lol:

 

Tamil_News_220222115517.jpg

 

 

"சுமே அக்கா இருக்காக.. சகாரா அக்காக இருக்காக..!  யாரு "டக்"குன்னு கரீக்டா சொல்லு...ராசா..!"  :)

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Tamil_News_220222115517.jpg

 

 

"சுமே அக்கா இருக்காக.. சகாரா அக்காக இருக்காக..!  யாரு "டக்"குன்னு கரீக்டா சொல்லு...ராசா..!"  :)

 

 

 

சுமே சுமே கிளி யோசியர் வந்திருக்கார் எங்களுடைய பலனைப் பார்ப்பமா?

 

வாத்தியார் வந்தால் ஆறாம் வேற்றுமை உருபு பற்றி கதைக்கிறோம் என்று சொல்லித் தப்பலாம்.

 

என்னை , உன்னை, கண்ணை இப்பிடி ஐயோடு ஐயமுறுவதையும் கேட்டுப்பார்க்கலாம் :lol::icon_mrgreen:

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

 

Tamil_News_220222115517.jpg

 

 

"சுமே அக்கா இருக்காக.. சகாரா அக்காக இருக்காக..!  யாரு "டக்"குன்னு கரீக்டா சொல்லு...ராசா..!"  :)

 

 

 

நான் உதுக்கு வரேல்ல. கிளி எக்குத்தப்பாச் சொல்லி நான் மாட்டுப்பட்டா ??????

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

 

35dam9g.jpg

 

 

இவர் ஏன் இப்பிடி ரெட்டைப்பல்லைநீட்டிக்கொண்டு முழிக்கிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.