Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

இப்படியே போனா சீமான் ஈழத்தில் அல்லவா நின்று போராடவேண்டும் எதுக்கு தமிழ்நாட்டில் நிக்கிறார் எங்க பிரச்சினையோ அங்க போராடு என்றால் ..

இதை சொன்னா நம்ம துரோகி என்பங்க சேர் :D:D

சீமான் ஈழம் சென்று போராடவேண்டியதில்லை. ஏனென்றால் அவர் ஶ்ரீலங்கா அரசை எதிர்த்து போராடவில்லை. தான் பிறந்த மண்ணில் நின்று நீதி மறுக்கப்பட்ட ஈழ மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குமாறு தனது நாட்டு அரசையும் தனது மக்கள்ளிடமும் வேண்டுகிறார். புரிந்ததா அஞ்சரன்.

  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாரு சீமானை போராடு என்று கேட்டது உங்களுக்கு பிடிப்பு இல்லை என்றால் ஒதுங்கி இருங்கோ ..அதை விடுத்து போராடும் மாணவரை பார்த்து அவர்கள் இரண்டுநாளில் கலைத்து போய்விடுவார்கள் என்பதும் உலக தமிழர் பிரச்சினை எல்லாம் தான் ஒருவனே பார்ப்பது போலவும் எங்க என்ன நடந்தாலும் தனக்குத்தான் முதல் அறிவித்தல் வருவதாகவும் தனக்கு ஆயிரம் பிரச்சினை என்பது போலவும் எதுக்கு பிள்டாப்பு ...

 

சரி பிழை என்பதை முடிவு எடுக்க சீமான் யார் என்பதுதான் கேள்வி .

 

 உலகத்தில் வாழும்  ஜீவராசிகளுக்கும் இன்னல்கள் வரும் போது அந்த ஜீவராசிகளுக்குத் துணையாகக் குரல் கொடுக்கும் உரிமை இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தையே அழித்திடுவோம்  என்றான் பாரதி.

யார் கேட்டார்கள் பாரதியைப் பெண்களுக்காகப் போராடு என்று.

யார் சொன்னார்கள் பார்ப்பனியத்தைப் பந்தாடு என.. உணர்வுள்ள மனிதர்கள் சரி பிழையைத் தட்டிக் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். :D

இன மான உணர்வுள்ள சீமான் தமிழருக்கு தீங்கு வந்தால் தானாகக் குரல் கொடுக்கின்றார். கேட்டுக் கிடைப்பதல்ல நட்பு. அது தானாக வந்து சேரும். அதுபோலவே ஆதரவும் கேட்டு வந்தால் ஆதரவாக இருக்காது. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழம் சென்று போராடவேண்டியதில்லை. ஏனென்றால் அவர் ஶ்ரீலங்கா அரசை எதிர்த்து போராடவில்லை. தான் பிறந்த மண்ணில் நின்று நீதி மறுக்கப்பட்ட ஈழ மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குமாறு தனது நாட்டு அரசையும் தனது மக்கள்ளிடமும் வேண்டுகிறார். புரிந்ததா அஞ்சரன்.

 

இது புரிந்தால்

ஈழத்தை அடைந்திருப்போமே... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழம் சென்று போராடவேண்டியதில்லை. ஏனென்றால் அவர் ஶ்ரீலங்கா அரசை எதிர்த்து போராடவில்லை. தான் பிறந்த மண்ணில் நின்று நீதி மறுக்கப்பட்ட ஈழ மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குமாறு தனது நாட்டு அரசையும் தனது மக்கள்ளிடமும் வேண்டுகிறார். புரிந்ததா அஞ்சரன்.

நன்றி உறவே , நீங்கள் ஆவது நல்ல புரிதல் ஓடு இருக்கிறிங்கள்.......
யாழில் பொழுது போக்குக்கு கிறுக்கி தள்ளுபவர்கள் , அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி கொஞ்சமும் யோசிப்பது இல்லை , அடுத்தவர்களை கேலி செய்வதிலும் குழப்பத்தை உண்டாக்குவதிலும் தான் அவர்கள் மினைக்கெடினம் , அடிமை பட்டு போய் இருந்த இனத்துக்கு நாலு இளைஞர திரட்டி போராட்டத்தை முன் எடுத்துட்டுப் போக்கும் ஒருதர இப்படி கேவலமாக்க கேலி செய்து கிண்டல் அடிக்க இவர்களால் எப்படி தான் முடியுதோ தெரியல...............2009ம் ஆண்டுக்குப் பிறக்கு புலத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் படு கம்பி......யாழில் வெட்டிக் கதை கதைப்பவர்களால் பல நூறு மக்களை திரட்டி ஒரு ஆர்பட்டம் கூட செய்ய முடியாதவர்கள் எல்லாம் மற்றவர்களை கிண்டல் அடிப்பதை பார்க்க வேதனை தான் வருது......

சீமான் ஈழம் சென்று போராடவேண்டியதில்லை. ஏனென்றால் அவர் ஶ்ரீலங்கா அரசை எதிர்த்து போராடவில்லை. தான் பிறந்த மண்ணில் நின்று நீதி மறுக்கப்பட்ட ஈழ மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குமாறு தனது நாட்டு அரசையும் தனது மக்கள்ளிடமும் வேண்டுகிறார். புரிந்ததா அஞ்சரன்.

அண்ணே சீமானே சொல்லுறார் தான் இந்தியன் இல்லை தமிழன் என்று அப்புறம் அவர் யாரிடம் நீதி கேட்கிறார் ..அவங்களுக்கான நீதியே கிடைக்க வில்லை எழுகோடியை மதிக்காத இந்தியா ஈழத்தை மதிக்கும் எங்களுக்கு நட்பு அரசியல் முக்கியம் பகை அரசியல் செய்து விளைவு எப்படி என்று அனுபவித்த பின்னும் உணர்வு இருக்கு என்று உணர்ச்சி வசபடுவது அழகல்ல ..

 

நாய் காணாமல் போனாலும் சீமானுக்கு கடிதம் வருதாம் தேடி தரச்சொல்லி அப்ப பாருங்கோ அவரை ஒரு அரசியல் தலைவரா மக்கள் இன்னும் பார்க்க வில்லை அண்ணே இதுக்கு பவர் ஸ்டார் பருவாயில்லை . :D

 உலகத்தில் வாழும்  ஜீவராசிகளுக்கும் இன்னல்கள் வரும் போது அந்த ஜீவராசிகளுக்குத் துணையாகக் குரல் கொடுக்கும் உரிமை இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தையே அழித்திடுவோம்  என்றான் பாரதி.

யார் கேட்டார்கள் பாரதியைப் பெண்களுக்காகப் போராடு என்று.

யார் சொன்னார்கள் பார்ப்பனியத்தைப் பந்தாடு என.. உணர்வுள்ள மனிதர்கள் சரி பிழையைத் தட்டிக் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். :D

இன மான உணர்வுள்ள சீமான் தமிழருக்கு தீங்கு வந்தால் தானாகக் குரல் கொடுக்கின்றார். கேட்டுக் கிடைப்பதல்ல நட்பு. அது தானாக வந்து சேரும். அதுபோலவே ஆதரவும் கேட்டு வந்தால் ஆதரவாக இருக்காது. :)

 

இவ்வாறு சொன்ன பாரதி சிங்களத்தீவுக்கு தான் பாலம் கட்டினான் ஈழத்துக்கு அல்லது ஆகவே பாரதி தமிழன் அல்ல வந்தேறி ...

 

இதுவும் சீமானின் தம்பிகள் சொல்லித்தான் எனக்கே தெரியும் ..

 

பார்ப்பனியம் என்பது திராவிட அரசியலும் உள்நுழைவு புத்தி ஒன்றை எதிர்க்க கையில் எடுத்த ஆயுதம் பார்ப்பனியம் அவ்வளவுதான் .

 

நன்றி உறவே , நீங்கள் ஆவது நல்ல புரிதல் ஓடு இருக்கிறிங்கள்.......
யாழில் பொழுது போக்குக்கு கிறுக்கி தள்ளுபவர்கள் , அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி கொஞ்சமும் யோசிப்பது இல்லை , அடுத்தவர்களை கேலி செய்வதிலும் குழப்பத்தை உண்டாக்குவதிலும் தான் அவர்கள் மினைக்கெடினம் , அடிமை பட்டு போய் இருந்த இனத்துக்கு நாலு இளைஞர திரட்டி போராட்டத்தை முன் எடுத்துட்டுப் போக்கும் ஒருதர இப்படி கேவலமாக்க கேலி செய்து கிண்டல் அடிக்க இவர்களால் எப்படி தான் முடியுதோ தெரியல...............2009ம் ஆண்டுக்குப் பிறக்கு புலத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் படு கம்பி......யாழில் வெட்டிக் கதை கதைப்பவர்களால் பல நூறு மக்களை திரட்டி ஒரு ஆர்பட்டம் கூட செய்ய முடியாதவர்கள் எல்லாம் மற்றவர்களை கிண்டல் அடிப்பதை பார்க்க வேதனை தான் வருது......

 

நாங்க எல்லாம் பேசிட்டு சீன் போட்டு அடுத்தகட்டம் செய்ய சீமான் தம்பிகள் அல்ல சொல்லுக்கு முன் செயல் கொடுக்கும் அண்ணனின் தம்பிகள் ..

 

எதாவது கையை முறுக்கி கத்தி ஒரு விடியோ வரும் பார்த்து வந்து அடுத்த கருத்தை பதியுங்க பையா .

  • கருத்துக்கள உறவுகள்
அரஞ்சன் அண்ணா பொய்யை சொல்லும் போது பொருந்த சொல்லுங்கோ........... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
ஒரு பேட்டியுலும் அண்ணன் சீமான் சொன்னது இல்லை நாயை காணட்டியும் தனக்கு தான் கடிதம் போடினம் என்று...............ஆதாரம் இருக்கா அண்ணா , இருந்தா தாங்கோ நானும் கேட்டு தெரிந்து கொள்ளுறேன்....பெரும்பாலும் இதுக்கு அரஞ்சன் அண்ணா எதிர் கருத்து வைக்க மாட்டார் , ஏன் என்றால் இது அவரின் கற்பனை கதை :D ..........................

 

அரஞ்சன் அண்ணா பொய்யை சொல்லும் போது பொருந்த சொல்லுங்கோ........... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
ஒரு பேட்டியுலும் அண்ணன் சீமான் சொன்னது இல்லை நாயை காணட்டியும் தனக்கு தான் கடிதம் போடினம் என்று...............ஆதாரம் இருக்கா அண்ணா , இருந்தா தாங்கோ நானும் கேட்டு தெரிந்து கொள்ளுறேன்....பெரும்பாலும் இதுக்கு அரஞ்சன் அண்ணா எதிர் கருத்து வைக்க மாட்டார் , ஏன் என்றால் இது அவரின் கற்பனை கதை :D ..........................

சீமானின் கற்பனையை விடவா இது சிரிப்பு வருது தலைவர் வீரப்பன் முதல் விஜலட்சுமி வரை இவரிட்ட கதை கேட்டவர் எல்லே ..

 

இந்தாங்கோ உங்களுக்குத்தான் ஆள் இல்லா கடையில் எப்படி டீ ஆத்துவது பாருங்கோ .

 

15211_887265901302379_681967381393050910

மாணவரை எதிர்த்தால் இப்படித்தான் ஒன்னு ஒன்னா பல்பு வாங்கும் .

 

 

1535755_718111648226821_3891892900658377

 

"எனக்கு "லைக்காவை" எதிர்ப்பது ஒன்று தான் வேலையா??எனக்கு லட்சம் பிரச்சினை இருக்கு..தமிழ்நாட்டில் யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் என்னிடம் தான் வருவாங்க...சொன்னா நம்ப மாட்டீங்க...போலிஸ் நிலையத்திற்கு வர வேண்டிய கடிதம் எனக்கு வருது..."என் கணவனை 10 நாளாக காணவில்லை என்று ஒரு பெண் எனக்கு கடிதம் எழுதுது"..எனக்கு லட்சம் பிரச்சினை இருக்கு..-- சீமான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » செய்திகள் தம்பி விஜய், பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது! - இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

 

 

 

தம்பி விஜய் பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: செஞ்சோலையில் அப்பாவி ஈழத் தமிழ்க் குழந்தைகள் 63 பேரை இலங்கைப் பே'ய'ரசு விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்ற ஆகஸ்ட் 14ம் நாளில் கனத்த மனத்துடன் இந்த செய்தி அறிக்கையை எழுதுகிறேன். ஆகஸ்ட் 14ம் நாள் உலகெங்குமுள்ள 10 கோடி தமிழர்களின் இதயம் அந்தக் குழந்தைகளின் ரத்தத்தால் நனைந்த நாள். இந்த நாளில், ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அந்த மழலைகளை நினைவு கூரும் விதத்தில், அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும், அவர்களின் நினைவாக வன்னி மண்ணில் விளக்கேற்றப்பட்ட நாளைய தினமும் ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றப்படவேண்டும் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பணிவோடு வேண்டுகிறேன். ஆண்டுகள் கடந்த பின்னும் இதயத்தை உறைய வைக்கும் அந்தச் சம்பவத்தை மறக்க இயலாமல் நாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.

 

 

இந்தக் கண்ணீரில் நம்முடன் இரண்டறக் கலக்க வேண்டிய நண்பர்கள் சிலர், மனிதமிருகம் ராஜபக்சேவின் நண்பர்கள் தயாரித்துள்ள ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்க்கலாமா - என்று கண்ணீர் மல்கக் கேட்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது. செஞ்சோலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே விமானத்தில் மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவின் விருந்தினர்களாக விண்ணில் உலா வந்த லைக்காமொபைல் நிறுவனத்தினர் தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது எம் இனிய நண்பர்களுக்குத் தெரியுமா தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் இருக்கிறார்களா? கத்தி - என்கிற இந்தப் படத்தை எடுத்தவர்கள் தரப்பிலிருந்து, 'தமிழர்களின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் நாங்கள் படமெடுப்போமா' என்றெல்லாம் தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் நண்பர்கள் - ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளிகள் - ராஜபக்சே குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர்கள் - எடுக்கிற படம்தான் இது என்பது அம்பலமான பிறகு, 'இந்தப்படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற அடுத்த கேள்வியோடு அரங்குக்கு வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது. எம் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேரடியாக தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க முடியாது என்பதால்தான், லைக்கா மொபைல் - என்கிற தனக்கு நெருக்கமான சிநேகிதனின் முகமூடியுடன் தமிழ் சினிமாவில் கால் வைக்க முயல்கிறது ராஜபக்சே குடும்பம். இதைக் கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை? இன்று நீங்கள் லைக்கா மொபைலை அனுமதித்தால், நாளை - மகிந்த ராஜபக்சேவும் கோதபாய ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நமல் ராஜபக்சேவும் தமிழ்த் திரையுலகில் தங்களுக்கு நம்பகமான நண்பர்களை வெவ்வேறு முகமூடிகளுடன் திணிப்பதை உங்களால் எப்படித் தடுக்க முடியும்? 'இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற உங்களது கேள்வி, உங்களிடமே அப்போது எழுப்பப்படாதா? உங்கள் வார்த்தைகளாலேயே உங்கள் வாய் அடைக்கப்படாதா? என் இனிய நண்பர்களே, எச்சரிக்கையாயிருங்கள். கத்தி - திரைப்படத்தின் கதை என்ன என்பதைக் குறித்து இங்கே எவரும் கேள்வி எழுப்பவேயில்லை. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வதைப் போல், இந்தியாவுக்கு வரும் ஆபத்தை தம்பி விஜய் எப்படித் தடுக்கிறார் - என்பதே கூட கதையாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவாலும் இலங்கையாலும் எம் ஈழ உறவுகளுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம். கத்தி திரைப்படத்தின் கதை என்ன? அதில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய குத்தாட்டம் இருக்கிறதா இல்லையா - என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி எழுப்பாமல், அது எவருடைய முதலீட்டில் எடுக்கப் படுகிறது என்றுதான் கேட்கிறார்கள் தமிழகத்தின் மாணவக் கண்மணிகள். கத்தி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அவர்களது கேள்வி. அந்த நியாயமான கேள்வியை எழுப்பும் எங்கள் மாணவத் தம்பிகளை மிரட்ட முயற்சிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம். ராஜபக்சேவின் பினாமிகளோ - என்கிற சந்தேகம் எழுகிற அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எடுக்கும் ஒரு படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் அந்த மாணவத் தம்பிகள் மீது ஒரு துரும்பு பட்டால்கூட கத்தி படத்துடன் தொடர்புடைய தம்பி விஜய் உள்பட அத்தனைப் பேரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று பணிவன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஒரு தெருப் பாடகன். எம் மக்களுக்காகத் திரைப்படம் எடுக்கிற எளிய கலைஞன். என்னுடைய அடுத்த திரைப்படம் முடிவடையும் நிலையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், என்னுடைய பட வெளியீட்டின் போது நான் இடைஞ்சல்களைச் சந்திக்க நேரலாம். அதற்காக அஞ்சி இதைப் பேசாதிருப்பது கோழைத்தனம் என்பதாலேயே இதைப் பேசுகிறேன். இப்போது பேசாமல் வேறெப்போது நான் இதைப் பேசமுடியும்? என் இனிய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான்... செஞ்சோலையில் கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடியுங்கள். அவர்கள் மீது குண்டு வீசிய விமானத்தில் உல்லாசப் பயணம் சென்றவர்களுக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்! தம்பி விஜய்க்கும் ஒரு வேண்டுகோள்.... பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய இருப்பும் நம் இதயத்தில் ஏந்தியிருக்கிற நெருப்பும்தான் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும் நாளைய தினமும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்காக அன்புத் தம்பி விஜய் உணர்வோடும் உணர்ச்சியோடும் தன் இல்லத்தில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/pugazhendi-thangaraj-s-appeal-vijay-208669.html

நேற்று மாலை 7.30 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் புலிபார்வை திரைப்படம் தமிழ் அமைப்புகளுக்காக பிரத்தியேக காட்சி திரையிட்டு காட்டப்பட்டது.

நான் நண்பர் நல்லு லிங்கம் அவர்கள், தம்பி சசிகுமார், மகேந்திரன் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படத்தை பார்த்தோம்.

இந்த படத்தில் தமிழீழ போராட்டத்திற்கு எதிரான முரண்பாடான தவறான பல காட்சிகள் வைக்க பட்டுள்ளன.

ராமர் பாலம் கட்டினார் என்று அண்ணன் பிரபாகரன் கதாபாத்திரம் மூலமாக வசனம் சொல்ல பட்டிருகிறது.

இறந்த போராளியின் தகனத்திற்கு முன்னரே காதல் பாடல் மிக்கவும் வக்கிரமாக இருக்கிறது.

பெண்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதே காசுக்காக தான் என்று காட்சியும் , வசனமும் வைக்க பட்டுள்ளது.

படம் முழுக்க பாலச்சந்திரன் மற்றும் அணைத்து சிறுவர்களுக்கும் போராளிகள் உடை அணியபடிருகிறது.

ஒரு பாட்டில் பிரபாகரன் கதாபாத்திரம் சிறுவன் பாலச்சந்திரனுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுப்பது.

பார்பனிய கொள்கையை ஆதரித்து கருத்துக்கள் இடம் பெறுவது.

விடுதலை புலிகளின் ஆயுத போராட்டம் கௌரவ போராட்டத்திற்கானது என்று வசனம் இருப்பது.

சிங்களவர்கள் தங்கள் மண்ணை மீட்பது என்பதற்காகவே இந்த போரை நடத்தினார்கள் என்று காட்சி அமைப்பது.

இந்தியா இந்த போரை ஆதரிக்கவில்லை என்று சொல்வது.

ஒரு காதல் பாடலில் புலி ஆடை அணிந்து வருகின்ற வீரர்களை அந்த பாடலில் வரும் போராளியே ஒரு கையில் தன் காதலியை வைத்து கொண்டு மறு கையில் துப்பாக்கி ஏந்தி அவர்களை

சுடுவது அபத்தத்தின் உச்சம்.

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

மொத்தத்தில் “புலிபார்வை” – “இந்திய சிங்கள பார்வை.”

10359912_4463411439022_90283851075086916

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இந்த திரி நீள்கின்றது?

 

தேசியத்துக்கான சேவை நீளத்தான் செய்யும்  :rolleyes:

சதம் செலவில்லாமல்  லைக்காவும் கத்தி படக்குழுவும்  சீமானும் இலவசமாக இந்தியாவிலையும் பிற நாடுகளிலையும்  விளம்பரம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் ... !!  அதுக்காக பாடுபட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்  வாழ்த்துக்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

ஏப்பா வந்தேறி மாணவர் படைக்கும் நாம் தமிழர் அம்மா சேவை அணிக்கும் எதோ கைகலப்பாம் உண்மையா அடிபட்ட மாணவர்கள் சிங்களவர்கள் தானே .. :D  :D

இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் சேராத நான் இன்று பச்சமுத்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் சேரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்..ஏழை மாணவர்களை அழைத்து சென்றால் படிக்கவைப்பவர்..புலிப் பார்வை திரைப்படத்தை எடுத்து பாலச்சந்திரன் படுகொலையை உலகத்துக்கு உணர்த்தியவர்.தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தலைவர்.இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க அங்கேயும் பல்கலைக் கழகம் நடத்துகிறார்..எதிர்த்துக் கேள்வி கேட்பவரை ஆள் வைத்து துவம்சம் செய்துவிடுகிறார்..

எல்லாவற்றையும் விட அண்ணன் சீமான் தன்னை விடப் பெரிய தலைவராக அய்யா பச்சமுத்து அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்..

ஐ சப்போர்ட் பச்சமுத்து பாரிவேந்தர் !

 

மாணவர்களை நேரில் சந்தித்தோம். மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்கள். திரையரங்கில் இருந்த இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கி இருக்கிறார்கள். காவல்துறையினர் தடுத்திருக்காவிட்டால் காயங்கள் மோசமான விளைவினை ஏற்படுத்தி இருக்கும் என்றனர் தோழர்கள்.

தடுத்த காவலர் ஒருவரும் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதை பார்த்தோம். தந்தை பெரியார் திராவிடர் கழ்க தோழர்கள் , இயக்குனர் கீரா, இயக்குனர் வ.கெளதமன், செல்வராஜ் முருகையன் உள்ளிட்ட பலரும் தோழர்களை சந்தித்து பேசினோம். கைது செய்து சிறையில் அடைப்பதாக இருந்த முடிவை மாற்றி இறுதியில் , மாலை 6 மணியளவில் விடுவித்தனர். பெரும்பாலான தோழர்களுக்கு கழுத்தில், தலையில் பலத்த அடிவிழுந்திருக்கிறது. சிலர் உடல்முழுவதும் தாக்கப்பட்டிருக்கின்றனர். மிக மோசமான வசவு சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். காவல்துறையினரையும் தள்ளிவிட்டு தாக்கி இருக்கின்றனர்.

ஒரு மூன்றாம்தர திரைப்படத்தின் மீதான விமர்சனத்தினை, ஜனநாயக எதிர்ப்பினை பதிவு செய்ததற்காக இவர்கள் தமிழகத்திலேயே தாக்கப்படுகிறார்கள் என்றால், தமிழக தமிழர்களின் மீது தாக்குதல் நடத்துமளவு எதிரிகள் பலமடைந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். புலிப்பார்வை என்கிற திரைப்படத்தின் அரசியலை அதன் திரையிடல் மூலமாகத்தான் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அவசியத்தினை இந்த தாக்குதல் ஏற்படுத்தவில்லை.

இத்திரைப்படம் தமிழர்களின் வலியை பேசுகிறது, வீரத்தினை பேசுகிறது என்றால் எதற்காக தமிழினத் தோழர்கள் தாக்கப்பட வேண்டும். இப்படத்தினை எதிர்த்தவர்கள் இன எதிரிகள் அல்லவே...

ஜனநாயகமாக விவாதத்தினை முன்வைக்காமல் ரவுடி கலாச்சாரத்தினை முன்வைப்பவர்கள் எவ்வாறு விடுதலை அரசியலுக்கு ஆதரவானவர்களாக இருப்பார்கள்? .. இந்து ராமும், சோவும், சு.சாமியும் செய்யும் அரசியலை செய்பவர்கள் எவ்வாறு தமிழர்களின் ஆதரவு ஆற்றலாக இருக்க முடியும்?...

இதனாலேயே ”புலிப்பார்வை” கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய திரைப்படமாக பார்க்கிறேன்...

 

பையா என்ன நடக்கு இங்க .

 

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி படம் வெளி வந்தாலும் இந்தப் பிரச்சனை  முடியாது  :D

10563031_529478773851411_958333529751733

  • கருத்துக்கள உறவுகள்

6e0d88e17d40254ae2de1784d91c0f16

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.