Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று மன்னர்களின் சிலைகள் யாழ்.நகரில் திறந்து வைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மூன்று மன்னர்களின் சிலைகள் யாழ்.நகரில் திறந்து வைப்பு!
[sunday 2014-08-10 18:00]
யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நிறுவப்பட்ட மூன்று மன்னர்களின் சிலை இன்று மாலை திறந்த வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் 4 மணிக்கு சிலைகளைத் திறந்துவைத்தார். யானை மீதேறிய எல்லாளன், குதிரைகள் மீது அமர்ந்த பண்டாரவன்னியன், பரராசசேகரன் ஆகிய மன்னர்களது சிலைகளே மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி மூன்று திசைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்த சிலைகள் திறப்பு விழாவில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசீக பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா உட்பட பலர் கலந்து கொண்டு மன்னர்களின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
king-statue-jaffna-100814-seithy%20(1).j
 
king-statue-jaffna-100814-seithy%20(2).j
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மூன்று மன்னர்களும் மாற்றான் சதிகளுக்கு பலியானவர்கள்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

king-statue-jaffna-100814-seithy%20(2).j

 

 

எல்லாளனது போர் யானை ' ஐராவதம்' என நினைக்கிறேன்!

 

போர் யானையின் கொம்புகள் வெட்டப்பட்டுகின்றதை இப்போது தான் அறிந்துகொண்டேன்! :o

 

பாராண்ட தமிழனின் 'இந்தச் சிலை' அவன் வீரத்துக்கு ஒரு 'அவமானச் சின்னம்' என்றே நான் கருதுகின்றேன்!

 

வாரணம் பொருத மார்பும்....வரையினை எடுத்த தோளும் கொண்டவன் தமிழனெனக் 'கம்பன்' வியந்த தமிழனின் காலம் மலையேறி விட்டது போலும்! :o  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மன்னர்களை சிறீலங்காவுடன் இணைந்து அவமதித்த ஒட்டுக்குழு டக்ளஸ்
ஆக 13, 2014
 
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர சுற்றவட்டத்தில் ஓட்டுக்குழுத் தலைவனும் தமிழினத் துரோகியுமான டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைக்கப்பட்ட வீரத் தமிழ் மன்னர்களின் சிலைகள் குறித்து தமிழ் மக்களிடையே கடும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்களின் வீரத்தை மழுங்கடிக்கும் வகையில் இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
குறித்த சிலைகளில் வீரத்திற்குரிய முகபாவம் இல்லை. ஏதோ அவர்கள் குதிரைகளிலும் யானையிலும் அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. மாறாக அவர்களின் முகத்திலோ உடலிலோ எத்தகைய வீரத்தையும் காணவில்லை. மன்னர்கள் போன்று அவர்களின் உடற்கட்டமைப்பு அமைக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்காக நீண்ட காலம் போராடிய மன்னர்களின் வீரத்தை அவமதிப்பதற்காக சிறிலங்கா ஆளும் வர்க்கத்துடன் இணைந்தே இந்தச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
இதைவிட இங்கு அமைக்கப்பட்ட எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் பெயர் முற்றிலும் பிழையாக எழுதப்பட்டுள்ளது. எல்லாளன் என்பதற்கு பதிலான எள்ளாளன் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த தமிழ் உயிர்க்கொலை தொடர்பாகவும் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
அனுராதபுரத்தை 44 ஆண்டுகள் நீதிநெறி வழுவாது அரசாண்ட மாவீரன் எல்லாளனை துட்டச்சதியினால் வென்ற துட்டகாமினி மன்னன் 24 ஆண்டுகள் அரசாண்டான். வரலாற்றை எழுதிய மகாவம்சம் குறுகியகாலம் ஆண்ட துட்டகாமினியை 845 செய்யுட்களிலும் நீண்ட காலம் நீதி தவறாது ஆண்ட எல்லாளனை வெறுமனே 21 செய்யுட்களில் மட்டுமே பாடியது. சிங்கள இலக்கியங்களும் வரலாற்று ஏடுகளும் திட்டமிட்டு தமிழ் மன்னர்களின் வரலாற்று இருப்பை மறைத்தழித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

வீரமறவர்களின் சிலைகளை சிங்களத்திற்க்கு கூட்டி கொடுக்கும் காக்கை வன்னியன் கூட்டம் திறந்துவைத்து கூத்தாடுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மன்னர்களுக்கு சிலை நிறுவுவதே பெரியவிடயம்......அதை ஈழத்து எம்.ஜி ஆர் செய்துபோட்டார்.... :D பூணூல் போடாமல் சிலை வைத்ததை நினைத்து சந்தோசப்படுவோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான  வீரர்களையும்

தியாகிகளையும்  நாம் எம்  வாழ்வில்நேரில் பார்த்திருக்கின்றோம்

அவர்களை  நாம் என்றும் நேசிக்கின்றோம்

 

ஆனால்  அதை ஏற்காதவர்கள்

அதை அவமதித்தவர்கள்

அவசரப்பட்டு  வேறு ஒன்றை  எமக்குள் புகுத்துகின்றார்கள் என்றால்...

அதற்குள் இருக்கும் சதியை  புரியாதவர்களா  நாம்........??? :(  :(  :(

அவர்கள் என்ன அரசியல் சுய இலாப நோக்கோடு இந்த சிலைகளை வைத்தாலும் எமது தமிழ் மக்களது வரலாற்று பெருமையை கூறும் தமிழ் மன்னர்களின் சிலைகள் நிறுவப்பட்ட நிகழ்வை வரவேற்போம். அதனை. தற்போது பாதுகாப்பபோம்.

தமிழர் அரசியல் பலம் அதிகரிக்கும் வேளையில் தமிழ் மக்கள் விரும்பும் வகையில் தமிழரின் வரலாற்று பெருமையை பிரதிபலிக்கும் விதமாக இந்த மன்னர்களின் சிலைகளை மீள புதிதாக நிறுவிக் கொள்ளலாம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் என்ன அரசியல் சுய இலாப நோக்கோடு இந்த சிலைகளை வைத்தாலும் எமது தமிழ் மக்களது வரலாற்று பெருமையை கூறும் தமிழ் மன்னர்களின் சிலைகள் நிறுவப்பட்ட நிகழ்வை வரவேற்போம். அதனை பாதுகாப்பபோம்.

 

 

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

ஆனால் தமிழர்களது கலாச்சாரம்  மீது சிங்களவனுக்கு அவசர பாசம் வர

நிச்சயம் காரணமிருக்கும்

அது நிச்சயமாக மிகவும் ஆபத்தானதாக  இருக்கும்..

இது வரலாறு தரும் படிப்பினை

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

ஆனால் தமிழர்களது கலாச்சாரம் மீது சிங்களவனுக்கு அவசர பாசம் வர

நிச்சயம் காரணமிருக்கும்

அது நிச்சயமாக மிகவும் ஆபத்தானதாக இருக்கும்..

இது வரலாறு தரும் படிப்பினை.

மன்னிக்கவும் எனது திருத்தத்தை வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனது திருத்தத்தை வாசிக்கவும்.

 

புரிதலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாரும் வெள்ளையர்களோடு போராடி வீழ்ந்தவை (எல்லாளன் தவிர). வெள்ளைகளின் ஆக்கிரமிப்பு முடிஞ்சு போன கதை. எங்களை இப்பவும் ஆக்கிரமித்துள்ள சிங்களவனோடு போராடி வீழ்ந்த மன்னர்களுக்கு.. உவர் குத்தியர் ஒரு நடுகல் நட்டு வைக்கட்டும் பார்க்கலாம்..????!  :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாரும் வெள்ளையர்களோடு போராடி வீழ்ந்தவை (எல்லாளன் தவிர). வெள்ளைகளின் ஆக்கிரமிப்பு முடிஞ்சு போன கதை. எங்களை இப்பவும் ஆக்கிரமித்துள்ள சிங்களவனோடு போராடி வீழ்ந்த மன்னர்களுக்கு.. உவர் குத்தியர் ஒரு நடுகல் நட்டு வைக்கட்டும் பார்க்கலாம்..????!  :icon_idea::rolleyes:

 

நீங்கள் புலத்திலிருந்து சிம்பிளா சொல்லிப்போட்டியள் ....அவர் மகிந்தாவீட்டு செல்லபிள்ளை ....அவர் புலிக்கு நடுகல் வைக்க போய் சிங்கங்கள் அவருக்கு நடுகல் வைச்சிட்டா...:D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் புலத்திலிருந்து சிம்பிளா சொல்லிப்போட்டியள் ....அவர் மகிந்தாவீட்டு செல்லபிள்ளை ....அவர் புலிக்கு நடுகல் வைக்க போய் சிங்கங்கள் அவருக்கு நடுகல் வைச்சிட்டா... :D

அந்த பயம் இருக்கும் கோழை பயல் வீரதமிழ்மன்னர்களின் சிலையை தொடுவதற்க்கே அருகதையற்றவர்கள்.

பேசாமல் எப்பவும் போல தண்ணியை போட்டு பைலா ஆடுபவர்களுக்கு ஏன் வேண்டா பிழைப்பு .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.